Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு) தமிழ்த் திரைப்படமொன்றில் தன்னை ஊரில் ரவுடியாகப் ‘பில்ட்டப்’ பண்ணும் நோக்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடிதான். என்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு போங்கள்” என்று கெஞ்சுவதை சிலர் பார்த்திருப்பீர்கள். அந்தக்காட்சிதான் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதனை சாவகச்சேரியில் வைத்து அனுராதபுர காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நடந்தகொண்டவிதம் நினைவுபடுத்தியது. காவல்துறையினர் அவரைக் கைவிலங்கின்றி அழைத்துச்செல்ல முற்பட்டபோது அர்ச்சுனா தனக்கு விலங்கிட்டுக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே வலிந்து கேட்டு விலங்கு கையில் மாட்டப்பட்டதைப் பார்த்தோம். அர்ச்சுனாவின் அரசியலை விளங்கிக் கொள்ள இதுவொன்றே போதும். வடிவேலுவின் நடிப்பை இரசிகர்கள் எவ்வாறு கைதட்டி ரசித்தார்களோ அதேபோல அர்ச்சுனாவின் இது போன்ற நடிப்புகளை இரசிப்பதற்கென்றும் நம்மத்தியில் ஒரு ரசிகர் வட்டம் இருக்கவே செய்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்களே அவரது ஆதரவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆனால் அரச்சுனாவின் இதுபோன்ற நடிப்புகளுக்கான அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலையில் அந்த வட்டத்தினர் இல்லாமலிருப்பதே அர்ச்சுனாவுக்கான பலம். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்யட்சகராக அர்ச்சுனா பதவியேற்றது தொடக்கம் நேற்றுவரை அவரது நடத்தைகளை அவதானித்து வந்தால் அவரது குணச்சித்திரத்தைப் (மனப்பாங்கு+ நடத்தை) புரிந்து கொள்வது கடினமானதொன்றல்ல. சிலர் அவரை நகைச்சுவைத் துண்டாக( comedy piece)க் கடந்து செல்கின்றர். சிலர் அவரை மனநலம் குன்றியவராகப் பார்க்க முனைகின்றனர். அதேவேளை அரச்சுனாவின் இரசிகர்கள் அவரைக் கதாநாயகனாவே பார்க்கின்றனர். இவற்றுள் அர்ச்சுனா யார்? நகைச்சுவையாளரா? மனநலம் குன்றியவரா? அல்லது கதாநாயகனா? இவை எல்லாமாகவுமன்றி இதற்கப்பால் வில்லனாகவுங்கூட அவரைப் பார்க்க முடியும். கிராமத்தவர்களின் ‘காரிய விசரன்’ என்ற பேச்சுமொழி இவ்வாறான குணச்சித்திரம் கொண்டவர்களைத்தான் குறிப்பதாக இருக்கிறது போலும். தொடக்கத்தில் சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்பட்டதாக அவரால் சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்போது அவரை ஒரு ‘குறை அறைவோன்’(Whistleblower) ஆகச் சிலர் பார்த்தார்கள். ஆனால் அவரது அடுத்தடுத்த செயற்பாடுகள் குறைகளைக் களைவதற்கான உண்மையான வெளிப்படுத்தல்களாக அல்லாமல் தன்னையொரு மீட்பராகக் காட்டுவதற்காகப் பொய்கள், புனைவுகள், ஊதிப்பெருப்பித்தல் போன்ற நடவடிக்கைகளாக மாறியதால் அவர் குறை அறைவோனல்லன் என்றும் குறிக்கோளோடு நகர்வோன் என்றும் மக்கள் இனங்காணத் தொடங்கியதால் அவரைச் சுற்றியேற்படுத்தப்பட்ட ஒளிவிம்பம் மெல்ல மெல்ல அகலத்தொடக்கியது. நிறுவனமொன்றின் தவறுகளைத் திருத்த விரும்பும் ஒருவன் முதலில் அதனை உரியவழிகளில் தீர்க்கவே முயற்சிப்பான். அவை வெற்றிபெறாதவிடத்து மட்டுமே அதற்காகப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டப் பொதுவெளிக்கு அவற்றைக் கொண்டு வருவான். இவையாவற்றுக்குமுன் அக்குறைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதுடன் அதற்கான ஆதாரங்களையும் இயன்றவரை சேகரிக்கத்திருப்பான். இவை எதுவும் இல்லாத அர்ச்சுனாவின் செயற்பாடுகள் அவர் உண்மையில் குறைகளைக் களைவதற்காகவன்றி வேறு தேவைகளுக்காக முயற்சிக்கிறார் என்பதை மக்கள் படிப்படியாக விளங்கிக் கொள்ளத் தலைப்பட்டனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடங்கிய அவரது குற்றச்சாட்டுகள் மாவட்டம், மாகாணம், போதனா வைத்தியசாலை என வைத்தியத்துறை முழுவதுமே சாக்கடை தான்மட்டும் சந்தனம் என்ற நிலைக்கு உயர்ந்தபோதே அவர்தொடர்பான விம்பமும் சரியத் தொடங்கிவிட்டது. அவரது குற்றச்சாட்டுகள் எவற்றுக்குமே ஆதாரங்களை முன்வைக்காமையினால் வழக்குகளுக்குமேல் வழக்குகளாக நாளாந்தம் ஒவ்வொரு நீதிமன்றிலும் முன்னிலையாகவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.சாவகச்சேரியில் போற்றியும் தூக்கியும் கொண்டாடாடிய கூட்டத்தினர் படிப்படியாக உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர். அவருக்காகப் பிணை நின்றவர்களும் தாமாகவே அதிலிருந்து விலகிக் கொண்டனர். ஆனாலும் அதற்கிடையில் அவர் தனது மூலதனத்திற்கான பயனை அறுவடை செய்து கொண்டார். தொடர்ந்து அதனைத் தக்கவைப்பதற்கான செயற்பாடுகளிலேயே அவர் தற்போது ஈடுபட்டுவருகிறார். ஒருவர் தன்னை மற்றவர் கவனிக்க வேண்டும், தன்னைப்பற்றி பேசவேண்டும், புகழவேண்டும் என்று எண்ணுவது இயல்பானதே. அதற்காகப் பலர் நேர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். சிலர் எதிர்மறையான நடத்தைகளை வெளிப்படுத்துவர். ஒப்பீட்டு ரீதியில் எதிர்மறையான நடத்தைகள் அதிகவனத்தைப் பெறுவதுடன் அதன் பரவல் வேகமும் கூடுதலாக இருக்கும். அத்துடன் அவர்கள் அவ்வாறான நடத்தைகளை அடிக்கடி மேற்கொள்ளவும் விரும்புவர். இவர்கள் தமது நடத்தையின் நேரடி விளைவின்மீது கவனத்தைக் குவிப்பார்களேயன்றி அதன் தொடர்விளைவுகளின்மீது கவனம் செலுத்தமட்டார்கள். பிறர் நலனுக்காகச் செய்வதாகக் கூறும் இவர்கள் தமது நடத்தைகளால் பிறருக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகள் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை. இவ்வாறான நடத்தைகளுக்கு சிறுவயதில் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள், தாழ்வு மனப்பாங்கு போன்ற பல காரணங்கள் இருக்கலாம் என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மக்களைத் தன்பால் ஈர்க்க இந்த முறையையே அர்ச்சுனா அதிகம் கையாள விரும்புகிறார். தான் வைத்தியத்துறையில் சாதனை செய்து பெயரெடுப்பதற்குப் பதிலாக மற்ற வைத்தியர்கள் பிழை என்று கூறி நக்கீரராக பெயரெடுக்க அர்ச்சுனா விரும்புகிறார்.அடிக்கடி செய்திகளில் தான் வரவேண்டும் எனக் கணக்குப் பண்ணுகிறார். ஒழுக்கத்தையும் அற, விழுமிய பண்புகளையும் அதிகம் மதிக்கும் சமூகமொன்றில் ஒருவரின் இவ்வாறான எதிர்மறை நடத்தைகள் அவர்மீதான வெறுப்பையே அதிகம் உருவாக்கும். ஆனால் அப்பண்புகள் குறைந்துவரும் ஒருசமூகத்தில் இதனை வரவேற்கும் போக்கு வளரும். இவ்வடிப்படையில் நோக்கும்போது அரச்சுனா எமது சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சியின் குறியீடா? சிலர் கூறுவதுபோன்று அர்ச்சுனா தெரியாமல் எதையும் செய்யவில்லை. அவர் அவ்வாறான பேர்வளியுமல்லர். தெரிந்தகொண்டே தேவைக்காகவே அனைத்தையும் செய்கிறார். அதனாற்றான் தான் செய்வதையெல்லாம் தானே ஊடகங்களில் நேரலையாக வெளிப்படுத்துகிறார். தனது செயல்களைக் கண்டு முகஞ்சுழிக்கும் பெருங் கூட்டத்தைவிட அதனை ரசித்து வரவேற்கும் சிறுகூட்டமே அவரது தற்போதைய இலக்கு. தரக்கரீதியாக சிந்திக்காத அக்கூட்டத்தைக் கெத்து காட்டுவதன்மூலம் அவர் கவரவிரும்புகிறார். பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவரின் கதிரை என்பது, அதிகாரிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து கலாட்ட செய்வது, கௌசல்யாவின் காதலனை இழிவுபடுத்துவது, கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், அவற்றையெல்லாம் நேரலையில் சமூக ஊடகங்களில் வெளிவிடுவது போன்ற விடயங்கள் தவறானவை என்பது எம்.பி.பி எஸ் படித்தவருக்கு தெரியாததல்ல. இதன்மூலம் தனது வாக்கிலும் கணக்கிலும் வரவு கூடுமென அவர் எண்ணுகிறார். அவர் இவ்வாறு எண்ணுவது சரியென இங்கும் அங்கும் சிலர் இருப்பதுதான் கவலை. இது தமிழ்ச் சினிமாவின் தாக்கமாகவும் இருக்கலாம். அதில்தான் ரஜனி,விஜய் போன்ற கதாநாயகர்கள் செய்யும் சட்டரீதியற்ற மோசமான செயல்கள் யாவும் நியாயமானவை என நிறுவப்படுகின்றன. மக்களைக் கனவுலகில் மிதக்கவைத்து அவர்கள் பெட்டியை நிரப்புவது போல்தான் இதுவும். அடிக்கடி தான் எம்.பி.பி.எஸ் என்று கூறி மற்றவரை கல்வித் தரத்தின் மூலம் இழிவு படுத்துவதும் தெரிந்துகொண்டே செய்யும் ஒருவகை உளவியல் ரீதியான தாக்குதல்தான். ஒருவனை மட்டந்தட்ட, அடக்க இவ்வாறான முறைகள் எமது சமூகத்தில் நீண்ட காலமாகவே கையாளப்பட்டு வருகின்றன. சாதி,படிப்பு அல்லது பட்டங்கள், ஆங்கில மொழியறிவு அதற்கப்பால் தாய்,தந்தை, உறவுகளின் தவறான நடத்தைகள் என்பவை சிலர் கையாளும் அங்குசங்கள். அர்ச்சுனா எமது சமூகத்திற்கு அதிலும் குறிப்பாக இளையோருக்கு தவறானதொரு முன்மாதிரி. அவரை ஊக்குவிப்பது என்பது நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது. பணத்துக்காக தவறாகப் புனையும் யு ரியூப்பினரும், உண்மைநிலை அறியாது உதவும் புலம்பெயர் உறவுகளும் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய நேரமிது. தவறுகள் திருத்தப்பட வேண்டும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு)
  2. மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று! மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று (02) இடம்பெறவுள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் அன்னாரது உடல் பி.ப 3 மணியளவில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சகலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார். உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419299
  3. நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது – ஜனாதிபதி! நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் – கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல வருடங்களின் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது, வாகனங்களின் விலை அதிகரித்தாலும், சில நாட்கள் செல்லும்போது அதனைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளனர் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419302 😂
  4. புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகின்றது! -நீதிபதி இளஞ்செழியன் தெரிவிப்பு. புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில்இ வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன் போது ” தான் வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகளும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகளும் கடமை புரிந்துள்ளதாகவும், 2012 – 2014இல் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராகவும், 2018-2022 மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் 8 ஆண்டுகள் திருகோணமலையில் கடமை புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாகவும், ஒன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் என 3 ஆண்டுகள் கல்முனையில் கடமையாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாது தான் பிறந்த யாழ்ப்பாணத்தில் 2015-2018 வரை மூன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியதாகத் தெரிவித்த அவர் மட்டக்களப்பில் சிவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஒராண்டு கடமை புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை தனது 28 ஆண்டுகள் நீதித்துறை வாழ்க்கை புரியாத புதிராக முடிவுறுவதாகத் தெரிவித்த அவர் இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419310
  5. மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜீவன் இறுதி அஞ்சலி! இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார். https://athavannews.com/2025/1419326
  6. இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு! இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும். இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள்இ வீட்டு வசதிஇ வீதிகள்இ பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு இந்தியாவின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 1032 கோடியாகும். இலங்கை, பொருளாதார மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதால்இ அதற்கான ஒதுக்கீடு 245 கோடியிலிருந்து 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய வரவு செலவு திட்டத்தில் வௌிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளில் பூடான் நாட்டுக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுக்காக 2025-26ம் ஆண்டுக்காக 2,150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419315
  7. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா! அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இன்று முதல் அழுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரி விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி வரி இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419324
  8. நீங்கள்… ஏனப்பா, எலும்பை கடிக்கின்றீர்கள். 😂 🦴 🤣
  9. ராமசாமி ஒருநாள் பல்வலி தாங்காமல் பல்லை பிடுங்க பல் டாக்டர்கிட்ட போனாரு... டாக்டர் சார் என் பல்லைப் பிடுங்கணும்னா எவ்வளவு ஆகும்" டாக்டர்: 1200 ரூபாய் ஆகும்.. ராமசாமி கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு பல் டாக்டர்கிட்ட "சார் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?" டாக்டரும் "ஒரே ஒரு வழி இருக்கு... மயக்க மருந்து இல்லாம வேணும்னா செய்யலாம். அதற்கு நீங்க 500 ரூபாய் கொடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும் பரவாயில்லையா?" " பரவாயில்லை டாக்டர் மயக்க மருந்து இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்" என்று ராமசாமி சோகமாக கூற... பல் மருத்துவரும் அவரோட பல்லை பிடுங்கிய போது அவர் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது மருத்துவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.. பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற ராமசாமியிடம் பல் டாக்டர் "இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையும் கொண்ட ஒரு நோயாளியை இதுவரை நான் பார்த்ததே இல்லை.. எனக்கு நீங்க ஒரு "கேஸ் ஸ்டடி" மாதிரி. எனவே நீங்கள் எனக்கு பணம் தர வேண்டாம். இந்த 5000 ரூபாயை எனது அன்பளிப்பாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார். ராமசாமியும் ரொம்ப மகிழ்ச்சியுடன் மருத்துவருக்கு ஒரு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு நடையை கட்டினார்.. டாக்டரும் மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கிற்கு வந்த ராமசாமி பற்றியும் தனக்கு ஏற்பட்ட சுவராஸ்யமான அனுபவத்தை பற்றியும் மிகுந்த ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார். "நீங்கள் சொன்ன ராமசாமி காலையில் முதலில் என்னிடம் தான் வந்தார். அவருக்கு உணர்ச்சி மருத்துப்போக மருந்து கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவர் சீட்டில் இல்லை ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தார். காணாமல் போனவரு நேராக உங்களிடம் வந்திருக்கிறார் போலிருக்கு " என்று புலம்பித் தீர்த்து விட்டார்... 😂 🤣 Paranji Sankar
  10. 👇 அர்ஜுனாவின் ஒரு நிமிட காணொளியை கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும். 👉 https://www.facebook.com/krishnanandhtk/videos/472190945960503 👈 இந்த வைத்தியரை இயக்குவது NPP தான் என்று ஏற்கனவே கூறி உள்ளேன். NPP-யின் பின்னால் இருந்து தான் வைத்தியர் இயக்குகின்றார். அதில் இனியும் சந்தேகம் வேண்டுமா? தமிழண்டா, அதடா இதடா என்று அடிக்கடி வெடி கொழுத்தி போடும் வைத்தியர் 100 கருணாவிற்கு சமமான ஒருவர் தான். ஆகவே வைத்தியர் ஓர் அப்பட்டமான தமிழின துரோகி. பாராளுமன்ற முதல் அமர்விலும் கஜேந்திரகுமார் அவர்கள் தையிட்டி விகாரை தொடர்பாக பேசிய போது சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் வைத்தியர் "நாங்கள் யாழ்பாணத்தில் இன ஒற்றுமையாக உள்ளோம்...." என்று பேரினவாத சிங்கள பெளத்த அடிப்படைவாததிற்கு ஆதரவாக கதைக்க முற்பட்டார். ஆனால் Parliament Speaker தடுத்து விட்டார். பின்னர் 31.01.2025 நேற்றைய தினம் யாழ்பாணம் DCC கூட்டத்தில் தையிட்டி விகாரை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்கள் கதைக்கும் போது கரடி போல் இடையே புகுந்த வைத்தியர் "தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்கினால் போதும்..." என்றார். மக்களின் காணி என்பதை தாண்டி அவை தனியார் காணி ஆகும். ஆகவே இதுவரையில் தையிட்டி விடயதில் குறித்த மக்களுடன் வைத்தியர் கதைத்து உள்ளாரா? கதைத்து இருந்தால் அவரின் பாணியில் கேட்பதாக இருந்தால் facebook live வந்திருக்குமே? அல்லது வீடியோ பதிவு என்றாலும் வந்து இருக்குமே? எதுவும் இல்லாமல் பேரினவாத சிங்கள அரசின் பௌத்த பேரினவாத அடாவடி செயலுக்கு துணை போகும் செயலாக வைத்தியர் உள்ளார். இங்கே வைத்தியரை வைத்து முற்று முழுதாக இயக்குவது NPP தான் என்பதை மறுபடியும் கூறிக் கொள்கிறேன். த. கிருஷ்ணா
  11. 30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பௌத்த பிக்குகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் ஒரே இரவில் ஆலயம் முழுமையாக இடிக்கப்பட்டது. கோவிலை மூடுவதற்கு முன்னர் சில மதச் சடங்குகள் செய்ய முயற்சித்த ஆலய நிர்வாகம் அவகாசம் கேட்ட போதும் அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது. அதே நாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் என்கின்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் திருட்டுத்தனமாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள். அதாவது கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்ட 100 அடி உயரமான தூபி (Stupa) மற்றும் மைத்திரி-ரணில் காலத்தில் ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்ட விகாரை (Vihara) ஆகிய இரு சட்டவிரோத கட்டுமானங்களையும் நியாயம் செய்கின்றார்கள். குறிப்பாக சிங்கள நிலபரப்புகளில் நிறுவப்பட்டுள்ள ருவன்வெலிசாய (338 அடி), ஜெதவனாராமய (400 அடி) அபயகிரி (246 அடி), மிரிசவெட்டி (197 அடி), தூபாராமய (66 அடி) ஆகிவற்றுக்கு இணையாக தமிழ் நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு சின்னமாக 100 அடியில் தூபியை நிறுவி உரிமை கோருகின்றார்கள் இது போதாதென்று தனியாருக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள மேற்படி கட்டுமானங்களுக்கு பௌத்த சாசன அமைச்சு ஊடக நிதி உதவி பெற்று பெற்று இருக்கின்றார்கள் இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த விகாரை அமைந்துள்ள பகுதியில் 406 சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது என இராணுவத்தினர் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் நியாப்படுத்துகின்றார்கள் இது போதாதென்று பௌத்த சாசன அமைச்சு அந்த நிலம் முழுமையாக விகாரைக்குரியது என வாதிடுகின்றது. ஆனால் நியத்தில் எந்தக் காலத்திலும் அங்கு பௌத்த கட்டுமானங்கள் இருந்தற்குரிய எந்தவித ஆவணங்களும் கிடையாது. அதே நேரம் அந்த பகுதி தமிழ் மக்களின் நிலம் என உறுதிப்படுத்தி அதற்குரிய ஆதன உறுதிகளை கூட திரு கஜேந்திரகுமார் பாராளமன்றத்தில் முன்வைத்து இருக்கின்றார் இந்த நிலையில் தற்போது தமிழ் ஆளுநர் திரு வேதநாயகன் ஊடாக சட்டவிரோத ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள். சில வாரங்களுக்கு முன் சட்டபூர்வமற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு இருப்பதாக அறிவித்த திரு வேதநாயகன் தற்போது சட்டவிரோத விகாரையை நியாயம் செய்கின்றார். தனது அதிகாரத்தை தக்க வைக்க பௌத்த சிங்கள அதிகாரத்திற்கு துணை போகின்றார். சட்டவிரோதமான முறையில் ஒரு மதில் காட்டினாலே அகற்ற அப்பாவி பொது சனம் மீது சட்டங்களை ஏவி விடும் இவர்கள் சட்டவிரோத விகாரையை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள் என தெரியவில்லை. சட்டவிரோத கட்டுமானங்களை நியாயப்படுத்தி ஒருபோதும் இன நல்லிணக்கத்தையோ மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது. அதே நேரம் சட்டவிரோத விகாரையை ஏற்றுக்கொண்டால் தையிட்டியில் மற்றுமொரு சிங்கள குடியேற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்ட சட்டவிரோத விகாரையை தேச வீடமைப்பு அதிகார சபையூடாக சட்டபூர்வமாக்கி அந்த சூழலில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றத்தை காணி உரிமம் பெற்று கொடுத்து சட்டபூர்வமாக்கி இருப்பது போல தையிட்டியில் இராணுவம் வாதிடுவது போல சிங்களவர்களை குடியேற்றுவார்கள். அதாவது தையிட்டி ஒரு போதும் முடிவாக இருக்க போவதில்லை. தொல்லியல் திணைக்களம் பௌத்த ஆலயங்கள் இருப்பதாக உரிமை கோரும் காங்கேசன்துறை , பலாலி, நயினாதீவு, நாவற்குழி, நெடுந்தீவு, வல்லிபுரம் ஊர்காவத்துறை, வலிகாமம், மட்டுவில், நிலாவரை, சுன்னாகம்,உடுவில், புலோலி கந்தரோடை,உட்பட்ட பகுதிகள் தோறும் நிறுவ முயற்சிக்கும் பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கான ஆரம்பமாக தையிட்டி இருக்கும். Kunalan Karunagaran
  12. மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பலர் அஞ்சலி. மறைந்த மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பேராசிரியர் விமல் சுவாமிநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர், ஆளுநர் நா.வேதநாயகன், தமிழரசுக்கட்சி செயலாளர் (கொழும்பு கிளை) சி.கமலநாதன், டக்ளஸ் தேவானந்தா, பொ.ஐங்கரநேசன், ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1419289
  13. தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரை பற்றிய முழுமையான விடயங்களை கஜேந்திரகுமார் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதை பார்த்தேன். அது ஒரு தனியார் காணி எனவே அங்கு கட்டியிருக்கும் சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக அமைந்தது. இடையில் குறுக்கிட்ட ஆளுநர் அந்த காணி உரிமையாளர்கள் வேறு பகுதியில் இதற்கு பதிலாக காணியை எடுத்துக்கொள்ள்ச் இணங்குவதாக குறிப்பிட்டார். இது அடி முட்டாள்த்தனமான கருத்து, ஆளுநரின் காணிக்குள் போய் நான் வீடு கட்டிவிட்டு அவருக்கு வேறு காணி வழங்கினால் ஏற்பாரா? இது இப்படியிருக்கு இறுதியில் பேசிய அர்ச்சுனா கட்டிய விகாரையை இடிக்க முடியாது எமது இந்து சமயம் இதைத் தான் சொல்லுகிறதா என்றார். உண்மையில் இவனைப் போல ஒரு பைத்தியத்தை என் வாழ் நாளில் கண்டதில்லை. ஒரு ஆக்கிரமிப்பின் அடிப்படையே விளங்காமல் எல்லா விடயத்திலும் தனது அரைகுறைத் தனத்தை காட்டிக்கொண்டே இருக்கின்றார். Monisha Kokul ############### ################# ################# ##################
  14. ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல். ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இன்று (1) முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மெரென்சிகே இந்தக் கருத்தை வௌியிட்டார். அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இறுதியில் என்ன நடக்கும் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனால் வாகனத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும். “இது சுமார் 5 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ரூபாய்க்கு வாகனத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் அது இன்று இல்லாமல் போயுள்ளது” என்றார். உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளில் ஜப்பானிய வாகனங்களின் தற்போதைய ஏல விலை மற்றும் அது இந்நாட்டின் வரிகளுடன் சேர்க்கும் போது வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் விதம் பற்றி மெரென்சிகே விளக்கினார். அதன்படி, Toyota Raize 1200cc காரின் விலை சுமார் ஒரு கோடியோ 60 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும். அத்துடன் Toyota Yaris வாகனத்தின் விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும். இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1419267
  15. விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி பயணித்த வாகனம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1419264
  16. 2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம். 2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், பல்வேறு முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் அவர் அறிவித்தார். அதன்படி, (இந்திய மதிப்பின் படி) பாதுகாப்பு – ரூ. 4.91 லட்சம் கோடி ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி சுகாதாரம்- ரூ. 98.311 கோடி. சமூக நலன்- ரூ. 60052 கோடி. உள்துறை – ரூ.2.3 லட்சம் கோடி. தகவல் தொடர்பு- ரூ. 95298 கோடி. கல்வி- ரூ.1.28 லட்சம் கோடி. வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி. நகர்ப்புற வளர்ச்சி- ரூ. 96777 கோடி. வணிகம், தொழிற்துறை- ரூ. 65553 கோடி. அறிவியல்- ரூ. 55679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1419261
  17. பாம்பன் பாலத்தின் திறப்பு விழா குறித்து வெளியான தகவல். ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது. 545 கோடி ரூபாவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக புதிய பாலத்தின் மீது ரயில் என்ஞின்களை விட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கடலோர காவல்படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே விட்டு அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்ய உள்ளனர். புதிய பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படும் என மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தில் தைப்பூச நாளிலோ அல்லது அதற்கு முந்தைய தினமோ பாலம் திறக்கப்படலாம் என்றும், புதிய பாலத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2025/1419200
  18. வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு! இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக நீக்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில் இன்று (31) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, “இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) விதிமுறைகள் 2025 இன் 02” என்ற தலைப்பிலான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி பொது பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள், வணிக அல்லது சரக்கு போக்குவரத்து வாகனங்கள், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பிற மோட்டார் அல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை நீக்குகிறது. மோட்டார் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிமுறைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், உப பிரிவு 4(1) மற்றும் பிரிவு 14 ஆகியவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட பிரிவு 20 இன் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1419219
  19. இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு. இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன், 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது இல்லை. ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நாட்டில் கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களில் சுமார் 26 ஆயிரம் பேருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்ப பகுதியில் கரு கலைவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சுமை, கருத்தரித்தல் தொடர்பில் போதியளவான தெளிவின்மை, வாழ்க்கை சூழல் போன்றன இதற்கு காரணமாக உள்ளன. மேலும் இந்நாட்டின் சுகாதார சேவையின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்களின் வயதெல்லை 73 ஆகவும் பெண்களின் வயதெல்லை 80 ஆகவும் உயர்வடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1419227

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.