Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நீங்கள் சொல்வது சரி போல் உள்ளது. மில்க் வைற் சவர்க்கார தொழிற்சாலை யாழ். கே.கே.எஸ். வீதியிலும், அண்ணா கோப்பி தொழிற்சாலை இணுவிலிலும் இருந்தது என நினைவு.
  2. நாங்கள் இங்கு வந்த புதிதில் ஜேர்மன் கடைகளில்… கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு, இஞ்சி, உள்ளி போன்றவற்றை காண முடியாது. இப்போ எல்லா இடமும் வாங்கலாம். அதே போல் பன்றி இறைச்சியும் நம்மூருக்கு வந்திருக்கு. அத்துடன் கணிசமான உல்லாசப் பிரயாணிகளின் வருகையால்… உல்லாச விடுதிகளுக்கு பன்றி இறைச்சியின் தேவை அதிகரித்து இருக்கும். அத்துடன் நவீன சமூக ஊடகங்கள் மூலம்… ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளும் மிக வேகமாக சென்று அடைந்துள்ளதால்…. மக்களும் வெவ்வேறு நாட்டு உணவுகளை உண்ண பழகி வருகின்றார்கள். உதாரணம்: பிட்சா, மெக்சிக்கன், சீன, ஐரோப்பிய உணவுகளை சொல்லலாம்.
  3. @ஈழப்பிரியன் ரம்பின் வேலை ஆட்களை குறைக்கும் நடவடிக்கையால்... அமெரிக்காவில் பலர் கலக்கத்தில் உள்ளார்களாம். இந்த விமான விபத்து நடந்த போது... விமான கட்டுப் பாட்டு கோபுரத்தில்... இருவர் செய்யும் வேலையை, ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். விமான கட்டுப்பாட்டு அறை... பலரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளது. அங்கு பணத்தை சேமிக்கும் வேலையை செய்யலாமா?
  4. உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மகிந்த வசிப்பிடத்தை காலி செய்யத் தயார் – SLPP அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்கினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நல்லாட்சி அரசாங்கத்தினால் உத்தியோகப்பூர்வ இல்லம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமாயின் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்குமாறும் தெரிவித்தார். அவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ அங்கு சில கணங்கள் தங்கமாட்டார் எனவும், அது தொடர்பில் கருத்து வெளியிடுவதில் அர்த்தமில்லை. அதேநேரம், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை கையளித்ததன் பின்னர் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் தற்போதைய அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1419549
  5. இந்துக்களின் சமர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பம்! இந்துக்களின் சமர் என வர்ணிக்கப்படுகின்ற பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ்.இந்து கல்லூரிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டியை யாழில் நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அண்மையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த ‘இந்துக்களின் சமர்’ யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419557
  6. நான்... முதல் வெடி விழ முதல் வெளிக்கிட்ட ஆள். 😎 இன்னும்... என் காதால், ஒரு துப்பாக்கி சூட்டுச் சத்தத்தையும் "லைவ்" ஆக நேரில் கேட்கவில்லை. எனக்குத் தெரிந்த தொழில் அதிபர் எல்லாம்... மில்க் வைற் சோப்.... அமரர் கனகராஜா, அண்ணா கோப்பி முதலாளி, யானை மார்க் சோடா முதலாளி, மலிபன் பிஸ்கட் முதலாளி, கன்டோஸ் சொக்லேட் முதலாளி மட்டுமே. 😂 பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும். பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை. படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣
  7. தகவலுக்கு நன்றி. ஆனாலும் இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்ட நினைவு வரவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல், தொழில் செய்துள்ளார் போலுள்ளது.
  8. கடந்த வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில்... தமிழரசு கட்சியை சேர்ந்த சிறிதரன், சி.வி.கே.சிவஞானம் போன்றோரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்காததால்... தையிட்டி விகாரையை தமிழரசு கட்சி வரவேற்கின்றதா? இவ்வளவு தூரம் கட்டிய விகாரையை, இடிக்க மாட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் கஜேந்திரமாருக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி, தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு முன் பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு. தமிழனின் பொது விடயத்தில் ஒன்றாக நிற்க முடியாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழனின் சாபக்கேடுகள்.
  9. கடந்த வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில்... தமிழரசு கட்சியை சேர்ந்த சிறிதரன், சி.வி.கே.சிவஞானம் போன்றோரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்காததால்... தையிட்டி விகாரையை தமிழரசு கட்சி வரவேற்கின்றதா? இவ்வளவு தூரம் கட்டிய விகாரையை, இடிக்க மாட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் கஜேந்திரமாருக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி, தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு முன் பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு. தமிழனின் பொது விடயத்தில் ஒன்றாக நிற்க முடியாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழனின் சாபக்கேடுகள்.
  10. யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும்போது... அர்ச்சுனா, கேள்வி கேட்டு துவைத்து எடுக்கப்போறார். தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்று மக்கள் எதிர் பார்த்து இருக்க, அங்கே சென்று தமிழர்களுக்கு எதிராக கதைக்குறான் பைத்தியம் , தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்பட்ட விகாரை அதை இடிக்க கூடாது , சிங்கள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படுகிறார்கள் இனபாகுபாடு காட்டும் தமிழர்கள் என்கிறான் , பைத்தியம் இந்து கோவில் அடையாளங்களை அகற்றி குருந்தூர்மலையில் விகாரை கட்டும் பொழுது பைத்தியம் கோமாவில் இருந்தானா? வேம்பு மரங்கள் அழித்து அரசமரம் நடும் போது ஊசி அர்ச்சுனா சிங்களப் பெண்களுடன் உறவில் இருந்து விட்டு, இப்போ கூறுகிறான் தமிழர்கள் விகாரைகளை இடிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள் என்றும் முட்டாள் தமிழர்கள் என்றும் கூறுகிறான். இவன் தமிழர்களை ஏமாற்றி வோட்டை பெற்று வெளிநாட்டு தமிழர்களின் காசைப்பெற்று சிங்களனைக்கு வேலை செய்கிறான் தமிழர்கள் ஏமாளிகள். நவம் சின்னத்தம்பி.
  11. யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும்போது... அர்ச்சுனா, கேள்வி கேட்டு துவைத்து எடுக்கப்போறார். தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்று மக்கள் எதிர் பார்த்து இருக்க, அங்கே சென்று தமிழர்களுக்கு எதிராக கதைக்குறான் பைத்தியம் , தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்பட்ட விகாரை அதை இடிக்க கூடாது , சிங்கள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படுகிறார்கள் இனபாகுபாடு காட்டும் தமிழர்கள் என்கிறான் , பைத்தியம் இந்து கோவில் அடையாளங்களை அகற்றி குருந்தூர்மலையில் விகாரை கட்டும் பொழுது பைத்தியம் கோமாவில் இருந்தானா? வேம்பு மரங்கள் அழித்து அரசமரம் நடும் போது ஊசி அர்ச்சுனா சிங்களப் பெண்களுடன் உறவில் இருந்து விட்டு, இப்போ கூறுகிறான் தமிழர்கள் விகாரைகளை இடிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள் என்றும் முட்டாள் தமிழர்கள் என்றும் கூறுகிறான். இவன் தமிழர்களை ஏமாற்றி வோட்டை பெற்று வெளிநாட்டு தமிழர்களின் காசைப்பெற்று சிங்களனைக்கு வேலை செய்கிறான் தமிழர்கள் ஏமாளிகள். நவம் சின்னத்தம்பி.
  12. வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்களைப் பார்த்து சிறீ லங்கா சனாதிபதி கேட்கிறார், "நாங்கள் பிரிந்திருக்க வேண்டுமா?" அவருடைய எதிர்பார்ப்பு/விருப்பம்... "வேண்டாம் வேண்டாம் வேண்டாம்!" என மக்கள் கூட்டம் ஒரே தரத்தில் குரல் கொடுப்பார்கள், கொடுக்க வேண்டும் என்பது. ஆனால் ஆயிரக்கணக்கில் குவிதிருந்த மக்கள் வெள்ளம் மௌனம் காக்கிறது. சிலர் சோளம்பொரியோ, எதுவோ சாப்பிட்டபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சனாதிபதி மீண்டும் கேட்கிறார், "விலகி இருப்போமா?" ஓரிரு அல்லக் கைகள், வேண்டாம் என்கின்றனர். அவ்வளவுதான்! கூட்டத்தைச் சேர்த்த எடுபிடிகள் அந்தக் கூட்டத்தை ட்ரெயின் பண்ணிக் கொண்டு வரவில்லை. அதற்காக அவர்கள் நிட்சயம் வாங்கிக் கட்டியிருப்பார்கள். ஆனால், அடுத்த முறை அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். தேர்தல் பிரச்சரத்துக்கு வந்த போது தன் பேச்சில் அநுர ஒரு விடயம் சொன்னார், "இந்த நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அரசியல் தலைவர்கள்தான். நாங்கள் இனி அவர்களோடு பேசப் போறதில்லை. மக்களான உங்களோடுதான் நேரடியாகப் பேசப் போகிறோம்" அந்தக் கூற்றின் ஆபத்தை எமது அரசியல்வாதிகள் எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியாது. மக்களுடன் பேசுவதற்க்கு முன்னர், மக்களை முட்டாளாக்கி மடைமாற்றம் செய்யும் வேலைத் திட்டத்தைத்தான் இப்போது சிங்களம் மேற்கொண்டு வருகிறது. ரோகண விஜயவீர மீதான சிங்கள இளைஞர்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது பேச்சுத் திறன் ஆகும். ஜேவிபி சிங்களதேசத்தில் மேலே வருவதற்கு முக்கிய காரணம் ரோகண வழி அவர்கள் கற்றுக் கொண்ட பேச்சுத் திறன் ஆகும். அடுத்தது, மக்களோடு மக்களாகப் பழகும் அவர்களின் திறன்/உத்தி. Down to Earth. இடதுசாரிப் பண்பாட்டைப் (போலியாகக் கூட) பின்பற்றுவர்களுக்கு இந்த ஆற்றல் இலகுவாக வந்துவிடும். ஜேவிபியின் இந்த இரண்டு ஆற்றலையும் சாதகமாகப் பயன்படுத்தியே தமிழர்களை வீழ்த்த முடிவெடுத்திருக்கிறது சிங்களம். ஏதோ யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் கடற்றொழில் நடப்பது போல் கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணத்தின் மூலை முடக்கெல்லாம் போய் படுத்துக் கிடப்பதுவும் இந்த அடிப்படையில்தான். அர்ச்சுனா, தன்னை ஒரு சாதாரணன் போல் காட்டிக் கொண்டு "அடேய், பிடேய்" என்று கதைப்பதும் இந்த அடிப்படையில்தான். மொத்தமாக தமிழர்களின் மண்டையைக் கழுவி, தம் "தோழர்கள்" ஆக்கி பின்னர் போட்டுத்தள்ளுவது. Gnanadas Kasinathar
  13. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத் மௌலானா தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொய்யான பிரசாரம் தொடர்பாகவும் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று செனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இமாம் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம். அதில் பலவிடயங்களை தெரியப்படுத்தியிருந்தோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார். அவரை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது”இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419538
  14. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர். மேலும் பல தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419530
  15. மகனும்... தந்தையும். அலுக்காமல் பார்க்கக் கூடிய... அழகிய படம்.
  16. ஒரு பக்கம் கிளீன் ஸ்ரீலங்கா. மறு பக்கம் டிஜிட்டல் ஸ்ரீலங்கா.
  17. ட்ரம்பின் நிதியுதவி முடக்க அறிவிப்பால் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு! USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் தொழிலை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் பல நிறுவனங்கள் நிதியுதவி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் திட்டங்களைத் தக்கவைக்க போராடுகின்றன. மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் USAID ஆதரவுடன் இயங்குகின்றன. இந்த நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “அமெரிக்கா முதல்” கொள்கையின் கீழ் வெளிநாட்டு உதவியை குறைக்கும் உந்துதலுடன் ஒத்துப்போகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர், “இந்த முடிவு எங்களை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது, இதனால் நாங்கள் ஊழியர்களை விடுவித்தோம், முடக்கம் தொடர்ந்தால், பல திட்டங்கள் சரிந்துவிடும்” என்று கூறினார். அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்க ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட பில்லியனர் எலோன் மஸ்க் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் நிதியுதவி நிறுத்தப்பட்டது. 2023 இல் அமெரிக்கா கிட்டத்தட்ட 180 நாடுகளுக்கு விநியோகித்த 72 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியில் பாதிக்கு மேல் USAID நிர்வகிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வெளிநாட்டு உதவியை மொத்தமாக முடக்கிய ஒரு வாரத்திற்குப் பின்னர், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் எதிர்காலம் – வெளிநாடுகளில் அமெரிக்காவின் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளின் மையத்தில் உள்ள நிறுவனம் – நிச்சயமற்றதாகவே உள்ளது. ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் USAID ஐ வெளியுறவுத் துறையின் அதிகாரத்தின் கீழ் வைப்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர். கடந்த வாரத்தில், நூற்றுக்கணக்கான USAID ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், முகவர் நிலையத்தில் பணிபுரியும் 60 மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டுப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொடர்புடைய வேலைகள் வரவிருக்கும் நாட்களில் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. https://athavannews.com/2025/1419516
  18. புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் ஆரம்பம்! டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1419517

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.