Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரமானது, சமகால அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டமா அதிபரின் இந்த நடவடிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள் சண்டே லீடர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அந்தவகையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை இந்த வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கவே சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விடயமானது சமகால அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ” 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும். இதற்கான மக்கள் ஆணையும் எமக்கு உள்ளது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின்போதும் மக்கள் இவற்றுக்காகத்தான் எமக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். இதனை நாம் நன்றாக உணர்வோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் கடத்தல், கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். படுகொலையாளிகளுக்கு எதிராக சட்டம் நிச்சமயாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இந்த நிலையில், இந்த சட்டமா அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான இந்த விடயம் தொடர்பாக நாம் விரைவிலேயே அறிவிப்போம். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வழங்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த படுகொலையை மூடி மறைக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. இந்த விசாரணையில் சில தாமதங்கள் இருப்பதற்கு காரணம் தொழில்நுட்ப விடயங்களினாலேயே ஒழிய அரசாங்கத்தினால் அல்ல. நாம் இந்த விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த தரப்பினராகும். ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பாக குரல் எழுப்பியுள்ளார்கள். எனவே, இந்த விடயத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மக்களை ஆணைக்கு எதிராக ஒருபோதும் செயற்பட அரசாங்கம் தயார் இல்லை” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1420005
  2. நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன் பஞ்சாப்பில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்! சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுமார் 100 இந்திய பிரஜைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க நாடு கடத்தல் விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) பிற்பகுதியில் டெக்சாஸிலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம், சற்று முன்னர் அமிர்தசரஸ் நகரில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தின் மூலமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 13 குழந்தைகள் உட்பட 104 இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஜனவரி 20 அன்று ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக தொடங்கிய பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவ்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்திய சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது இதுவே முதல் முறை. டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து புறப்பட்ட சி-17 அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 1.59 மணிக்கு ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. 79 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கிய 104 நபர்களை வரவேற்க காவல்துறை மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதியும் விமான நிலையத்தில் இருந்தார். ஆதாரங்களின்படி, நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்டவர்கள் இந்தியாவில் குற்றவாளிகள் அல்ல, ஏனெனில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற சட்டப்பூர்வ வழியைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இந்திய சட்டங்களை மீறவில்லை என்பதால் அவர்களை கைது செய்வதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. https://athavannews.com/2025/1419967
  3. கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே கடந்த திங்கட் கிழமை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பகவான்பூரியா என்பவர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இசைத்துறையில் பஞ்சாப் பாடகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Boot Cut, Old Skool மற்றும் Majha Block உள்ளிட்ட உள்ளிட்ட பாடல்களால் கவனம் ஈர்த்தவர் தில்லான் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419925 ########### ############ ####################### Boot Cut : Prem Dhillon | Sidhu Moose Wala (Full Video) | Tdot Films | SanB Latest Punjabi Song 2019 OLD SKOOL (Full Video) Prem Dhillon ft Sidhu Moose Wala | The Kidd | Nseeb | Rahul Chahal |GoldMedia Majha Block (Full Video) Prem Dhillon | Roopi Gill | Sanb | Sukh Sanghera | New Punjabi Songs 2020
  4. பிரபல பாடகரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு! கனடாவில் சம்பவம். கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே கடந்த திங்கட் கிழமை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பகவான்பூரியா என்பவர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இசைத்துறையில் பஞ்சாப் பாடகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Boot Cut, Old Skool மற்றும் Majha Block உள்ளிட்ட உள்ளிட்ட பாடல்களால் கவனம் ஈர்த்தவர் தில்லான் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419925 ################# ################ ############ Boot Cut : Prem Dhillon | Sidhu Moose Wala (Full Video) | Tdot Films | SanB Latest Punjabi Song 2019 OLD SKOOL (Full Video) Prem Dhillon ft Sidhu Moose Wala | The Kidd | Nseeb | Rahul Chahal |GoldMedia Majha Block (Full Video) Prem Dhillon | Roopi Gill | Sanb | Sukh Sanghera | New Punjabi Songs 2020
  5. அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன? நாமல் ராஜபக்ச கேள்வி. ”இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID , மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கடந்த ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை பணமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க ருளுயுஐனு இன் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். USAID தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தெளிவான பதிவு எதுவும் இல்லை எனவும் ருளுயுஐனு இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். அத்தோடு, அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான விதிமுறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே வெளிப்படைத்தன்மையைப் பேண இந்த விதிமுறைகளைக் கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1419881
  6. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்! கடந்த அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் (Online Safety Act) பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தினை சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றில் இதனைத் தெரிவித்தார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்று மனுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1419890
  7. லசந்த விவகாரம்; சர்ச்சையை எழுப்பிய சந்தேக நபர்களை விடுவிக்கும் தீர்மானம்! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறித்த வழக்கின் மூன்று முக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடராது என ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளரிடம் அறிவித்தார். முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, முன்னாள் கல்கிசை குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்ஐ திஸ்ஸசிறி சுகதபால, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் விடுவிக்கப்படலாம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டமா அதிபர் ரணசிங்க பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டார் என உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், 2009 ஜனவரி 9 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான உத்தரவு தொடர்பில் வெளிப்படைத்தன்மையை கோருவதுடன் சட்டமா அதிபரை பதவி விலகுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1419876
  8. சீனா, ஹொங்கொங்கின் பொதிகள் சேவைக்கு தடைபோட்ட அமெரிக்கா! மறு அறிவிப்பு வரும் வரை சீனா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து பொதிகள் சேவையை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க தபால் சேவை (USPS) தெரிவித்துள்ளது. எனினும், இந்த இடைநீக்கத்தினால் கடிதங்கள் விநியோக சேவை பாதிக்கப்படாது என்று அமெரிக்க தபால் சேவையின் இணையத்தள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. USPS இந்த முடிவிற்கான காரணத்தை வெளியிடவில்லை. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் மேலதிகமாக 10% வரி விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனா சில அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது வரியை அமல்படுத்துவதாக செவ்வாய்க்கிழமை (04) கூறியது. அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு (LNG) 15% மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதியமைச்சு கூறியது. அமெரிக்க ஏற்றுமதிக்கான புதிய கட்டணங்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கும் என்றும் சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் (GOOGL.O)ஏகபோகத்திற்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதாகவும் சீனா கூறியது. இதனிடையே, தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காக டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம் மற்றும் மாலிப்டினம் மற்றும் ருத்தேனியம் ஆகிய தனிமப் பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சகமும் அதன் சுங்க நிர்வாகமும் தனித்தனியாக தெரிவித்தன. https://athavannews.com/2025/1419899
  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டுள்ளதுடன், பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்தோடு, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்குள் “அமெரிக்க எதிர்ப்பு” இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருவதுடன், முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் வழங்குகிறது என நேதன்யாகு ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு அதனை திட்டவட்டமாக மறுத்ததைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியை தாற்காலிகமாக நிறுத்திய நிலையில் தற்போது டொனால்ட் ட்ரம்ப அந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 13 மாதகால போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 62 ஆயிரம் பேர் உயிரிழந்த காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளுக்குள் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி மீண்டும் திரும்பி வருகின்றனர். இலட்சக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளும் மனிதாபினான உதவிகளும் தேவைப்படும் சூழலில் பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதேவேளை, பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419893
  10. சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு; 11 பேர் உயிரிழப்பு! சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், குறைந்தது நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர். ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் உடனடியாக தெரியவில்லை. ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 200 கிமீ (125 மைல்) தொலைவில் உள்ள ஓரேப்ரோவில், முறையான கல்வியை முடிக்காத அல்லது உயர்கல்வியில் தொடர்ந்து மதிப்பெண் பெறத் தவறிய இளைஞர்களுக்காக நடத்தப்பட்டு வந்த கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சுவீடன் வரலாற்றில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு என்று பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் விவரித்துள்ளார். https://athavannews.com/2025/1419809
  11. ஶ்ரீலங்கா, பங்களாதேஷ், மாலதீவுக்குத்தான்…. இந்தியா சக்தி வாய்ந்த நாடு. உலகத்துக்கு அல்ல. 😂 உள்ளூர் பொலிஸ்காரனை… உலக பொலிஸ்காரன் ஆக்குவது கேவலம். 🤣
  12. மீண்டும் முகக் கவசங்களை அணியுமாறும் அறிவிப்பு! நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில் உள்ளது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும். இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அனைவரும் முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது https://athavannews.com/2025/1419728
  13. கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்! கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுதந்திர தின அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி நாலாம் தேதி தமிழ் தேசத்தின் கரி நாள் என நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். இத்தீவின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் தேசத்தை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர் தாம் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு மேலாதிக்கத்தை இத்தீவின் பெளத்த சிங்கள் தேசத்திடம் தாரைவார்த்த நாளே கரி நாளாகும். 1948ம் ஆண்டு முதல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொரு துறையிலும் இழக்கத் தொடங்கினர். 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமூலம் நமது மொழி. பண்பாட்டுப் படுகொலையின் தொடக்கமாகும். 1958ம் ஆண்டும் அதன் பின்னரும் நடைபெற்ற திட்டமிடப்பட்ட இனக் கலவரமும், இனப்படுகொலையும். 1970 லும் அதன் பின்பும் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக தரப்படுத்தலின் ஊடாக தமிழர்கள் பல்கலைக்கழக கல்வி பெறுவது தடுக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம் இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1981ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜேஆர் ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க ஸ்ரீல் மத்தியூ முதலியோர் தலைமையிலான குழுவினரும் அவர்களுடன் ராணுவமும் பொலீசும் முன்னின்று யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தமை இன்னொரு இன அழிப்பின் உச்சத்தை காட்டியது. இலங்கையை ஆண்டு வந்த பல்வேறு சிங்கள அதிபர்களால் தொடர்ந்து பல்வேறுபட்ட வழிகளில் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற இனப்படுகொலைகளில் நாகர்கோவில் விமான குண்டு தாக்குதல், நவாலி சென் பீட்டர் தேவாலய தாக்குதல், நூற்றுக்கணக்கான செம்மணி புதைகுழிகள் போன்ற இனப்படுகொலைகள், இனப்படுகொலைகளின் சாட்சி பகிரும். தொடர்ச்சியான அதேபோல் கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடாத்தப்பட்ட கொலை, பாலியல் வல்லுறவு, சித்திரவதை, வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவும் ஓர் சாதாரண நாளாந்த நிகழ்வுகளாயின. இப்படியே இன்னும் பட்டியல் நீண்டு சென்று 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை நிகழ்ந்தது. இன்று வரை எந்த நீதியும் இன்றி உள்நாட்டு பொறிமுறையால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் நாம் சர்வதேச நீதி பொறிமுறையை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறோம். இக் கரி நாளில் பின்வரும் விடயங்களை நாம் வலியுறுத்துகிறோம். 1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும். 2. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 3. பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும். 4. தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும். 5. தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 6. தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். உடனடியாக 7. தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் 8. சிவில் செயல்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும். 9. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். 10 எமது நிலம் எமக்கு வேண்டும். 11. தாயகம், தேசியம், அரசியல் சுயநிரணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும் 12. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். 13 சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும். 14 எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம். இப்போது பொறுப்பேற்று இருக்கின்ற அரசு கிளீன் ஸ்ரீலங்கா என கூறிக்கொண்டு எமது நிரந்தர அரசியல் தீர்வை தருவதில் எந்த அக்கறையும் காட்டாது இருந்து கொண்டு அடுத்தடுத்து வருகின்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசை மேலும் மேலும் பலப்படுத்துவதில் இலக்காக இருப்பதுடன் எமது நிரந்தர அரசியல் தீர்வை தராது இருந்து கொண்டு ஒற்றை ஆட்சியை பலப்படுத்துவதிலேயே கிளினாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களிடம் இருந்து எந்த நீதியும் நிரந்தர அரசியல் தீர்வும் கிடைக்காது. சர்வதேச தலையிட்டு மேற்குறிப்பிட்ட 14 விடயங்களையும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என இக் கரி நாளில் பிரகடனப்படுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டது. கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1419687
  14. வரலாறு வழங்கிய வாய்ப்பை நாம் தவறவிடுவதற்கு எந்த சட்டபூர்வமான உரிமையும் இல்லை-ஜனாதிபதி! நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒரு வளமான எதிர்கால அரசையும் நவீன இலங்கையரையும் கனவு காணும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமானததுடன் இதில் உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரிவித்தார் இந்த வருட சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் கடந்த காலத்தைப் பார்த்து இதுவரை கொண்டாடப்பட்டு வந்த சுதந்திரம், இன்று எதிர்காலத்தைப் பார்த்து கொண்டாடப்படுகிறது என்றும் ஜனாதிபதி கூறினார். “இந்த நாளை சாத்தியமாக்க ஆன்மீக தியாகங்களைச் செய்த அனைத்து துணிச்சலான மக்களுக்கும் இன்று அஞ்சலி செலுத்தும் நாள். மேலும், 1948 க்குப் பிறகு, பிற துணிச்சலான மக்கள் நமது சுதந்திரத்திற்காக அணிவகுத்துச் சென்றனர், நமது 77வது சுதந்திர தினம். இந்த தருணத்திற்கு நாம் நீண்ட தூரம் வந்துவிட்டோம். நமது சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையால் நாம் இவ்வளவு தூரம் வந்துள்ளோம். நமக்குத் தெரிந்த நாயகர்கள், நாயகிகள், தெரியாதவர்கள். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நாட்டில் நவீன குடிமக்களாக பெருமையுடன் வாழத் தேவையான சுதந்திரத்தை உருவாக்க, நமது பொருளாதார சுதந்திரத்திற்காக, நமது சமூக மற்றும் கலாச்சார சுதந்திரத்திற்காக நாம் ஒன்றாக ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் மட்டுமல்ல, நிறுவனத் தலைவர்கள் மற்றும் ஊழியர்களிடையேயும், அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில், இன, மத, மத மக்கள் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் வேரூன்றியிருக்கும் சாதி வேறுபாடுகளை நாம் இந்தச் சமூகத்திலிருந்து சுத்தப்படுத்த வேண்டும். நாட்டிற்கான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சுதந்திரத்தை முழுமையாக அடைவதற்கான பிரச்சாரத்தில், நீங்களும் நானும் ஒரே போர்க்களத்தில் போராளிகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த தாய்நாட்டிற்காக நாம் அனைவரும் இணைந்து தொடர்ந்து நடத்த வேண்டிய சுதந்திரப் போராட்டம் நம் அனைவருக்கும் உள்ளது. நமது தேசத்திற்காக உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் மீனவர்களாக, இந்த பணியில் உங்களுக்கு ஒரு பங்கு உண்டு. ஆசிரியர்களாக, நமது தேசத்திற்கான அறிவை உருவாக்கும் அறிவைக் கொண்டு எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதில் உங்களுக்கு ஒரு பங்கு உள்ளது. நமது நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சுகாதார நிபுணர்களாக, உங்களுக்கு ஒரு பங்கு உண்டு. பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினராக, எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. உங்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவமான பங்கு உண்டு. உலகப் பொருளாதார அமைப்பில் பலவீனமானவராக, ஒவ்வொரு அசைவிலும் நசுக்கப்படும் ஒரு நபராக இருப்பதற்குப் பதிலாக, பொருளாதார சுதந்திரத்தை அடைய, நாம் அனைவரும் இந்த தாய்நாட்டிற்கு நம்மை அர்ப்பணிக்க ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். பொருளாதார சுதந்திரத்திற்கான நமது போராட்டத்தில் நமது சமூக மற்றும் கலாச்சார சுதந்திரத்தைப் பற்றி இரண்டாவது சிந்தனை கொடுக்க நாம் தயாராக இல்லை. நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கும் நாடு வரலாற்றால் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நாடு அல்ல, மாறாக நீங்கள் வாழ விரும்பும் குடிமைப் பெருமையை மதிக்கும் வளர்ந்த கலாச்சார நாடு. மனித நாகரிகம் இதுவரை அடைந்துள்ள அறிவியல், தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் சாதனைகளை அனுபவிக்கும் இலங்கையர்களின் உரிமையை உறுதிப்படுத்திய நாடு இது என்பதை நான் உங்கள் முன் உறுதியாகக் கூறுகிறேன், ஏனெனில் வரலாறு வழங்கிய இந்த மகத்தான வாய்ப்பை நாம் தவறவிடுவதற்கு எந்த சட்டபூர்வமான உரிமையும் இல்லை. மேலும் இந்த சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம். அந்தக் கனவை ஒன்றாக நனவாக்குவோம். நீங்களும் நானும், நாம் அனைவரும் ஒன்றாக இந்தப் பயணத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்தப் பயணம் நமது தாய்நாடான இலங்கையை, நவீன அரசியல் உலகில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அழியாத எடுத்துக்காட்டாக மாற்றும். நாம் நிச்சயமாக உலகின் பணக்கார நாடாக மாற முடியாது. ஆனால் நாம் முயற்சித்தால், உலகின் பணக்கார தேசிய உணர்வைத் தழுவி, சமத்துவம் மற்றும் சுதந்திரம் கொண்ட ஒரு மாநிலமாக மாற முடியும். என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1419600
  15. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை வழங்குவதற்காக வரும் தரப்பினரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் முறைப்பாடுகள் நிராகரிக்கப்படுவதாகவும் எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் ஏனைய அதிகாரிகளும் பல்வேறு உண்மைகளை முன்வைத்து இவ்வாறு நிராகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தனது சுற்றறிக்கையில் குறிப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்படும் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பு. இதன்படி, இனிமேல் பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெறும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1419609
  16. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். https://athavannews.com/2025/1419686
  17. கனடா, மெக்ஸிகோ மீதான கடுமையான வரி விதிப்பை இடைநிறுத்தினார் ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (03) மெக்சிகோ மற்றும் கனடா மீதான தனது கடுமையான கட்டண அச்சுறுத்தலை இடைநிறுத்தினார். இரு அண்டை நாடுகளுடனான எல்லை மற்றும் குற்ற அமலாக்கத்திற்கான சலுகைகளுக்கு ஈடாக வரி விதிப்பினை 30 நாட்களுக்கு இடைநிறுத்துவதற்கு அவர் ஒப்புக்கொண்டார். எனினும், சீனா மீதான அமெரிக்க வரிகள் இன்னும் சில மணிநேரங்களில் அமலுக்கு வர உள்ளன. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இருவரும் குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ட்ரம்பின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எல்லை அமுலாக்க முயற்சிகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர். இதனால், செவ்வாய்கிழமை (பெப்ரவரி 04) முதல் நடைமுறைக்கு வரவிருந்த 25% வரி விதிப்பானது அடுத்த 30 நாட்களுக்கு ட்ரம்பின் உத்தரவுக்கு அமைவாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான அதன் எல்லையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களை நிலைநிறுத்தவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி ஆகியவற்றை எதிர்த்து கூட்டு முயற்சிகளைத் தொடங்கவும் கனடா ஒப்புக்கொண்டது. மெக்ஸிகோ தனது வடக்கு எல்லையை 10,000 தேசிய காவலர் உறுப்பினர்களுடன் வலுப்படுத்த ஒப்புக்கொண்டது, இது சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருள் ஓட்டத்தைத் தடுக்கிறது. எவ்வாறெனினும் செவ்வாய்க் கிழமை (04) அந் நாட்டு நேரப்படி 12:01 அதிகாலை ((0501 GMT) ) இல் தொடங்குவதற்கு தயாராக இருக்கும் 10% முழுவதுமான கட்டணங்களை எதிர்கொள்ளும் சீனாவிற்கு அத்தகைய சலுகைகள் எதனையும் அமெரிக்க அரசாங்கம் அறிவிக்கவில்லை. இந்த வாரம் வரை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ட்ரம்ப் பேசமாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம், பீஜிங் மீதான வரியை மேலும் அதிகரிக்கலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், வரி விதிப்பில் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் தனது அடுத்த இலக்காக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (02) கூறினார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் மீதான வரி விதிப்பு எப்போது என்று அவர் கூறவில்லை. 2020 இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பிரிட்டன், கட்டணங்களைத் தவிர்க்கலாம் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். திங்களன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், அமெரிக்கா கட்டணங்களை விதித்தால், ஐரோப்பா எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும் என்று கூறினர். எனினும், அவர்கள் ட்ரம்புடனான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காளியாக அமெரிக்கா உள்ளது. இதனிடையே ட்ரம்ப் வார இறுதியில் வெள்ளை மாளிகையில் ஆற்றி உரையில், தனது கட்டணங்கள் அமெரிக்க நுகர்வோருக்கு சில குறுகிய கால வலியை ஏற்படுத்தக்கூடும் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தவும் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்கவும் அவை தேவை என்றும் வலியுறுத்தினார். ஏனைய ஆய்வாளர்கள் இந்த கட்டணங்கள் கனடா மற்றும் மெக்சிகோவை மந்தநிலையில் தள்ளலாம் மற்றும் “தேக்கநிலையை” தூண்டலாம் – அதிக பணவீக்கம், தேக்கமான வளர்ச்சி மற்றும் உயர்ந்த வேலையின்மையை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்தும் உள்ளனர். https://athavannews.com/2025/1419623
  18. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா விரைவான பதிலடி! சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் செவ்வாயன்று (04) அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்தது. இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்தது. ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10% வரி அமெரிக்காவிற்குள் அனைத்து சீன இறக்குமதிகள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 (0501 GMT) மணிக்கு அமுலுக்கு வந்தது. இது அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் சீனாவின் நிதி அமைச்சகம், அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு (LNG) 15% மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று கூறியது. அமெரிக்க ஏற்றுமதிக்கான புதிய கட்டணங்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கும் என்றும் சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் (GOOGL.O)ஏகபோகத்திற்கு எதிரான விசாரணையைத் தொடங்குவதாகவும் சீனா கூறியது. இதனிடையே, தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காக டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம் மற்றும் மாலிப்டினம் மற்றும் ருத்தேனியம் ஆகிய தனிமப் பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சகமும் அதன் சுங்க நிர்வாகமும் தனித்தனியாக தெரிவித்தன. தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு முக்கியமான இத்தகைய அரிய தனிமங்களின் உலகளாவிய விநியோகத்தின் பெரும்பகுதியை சீனா கட்டுப்படுத்துகிறது. ட்ரம்ப் திங்களன்று மெக்சிகோ மற்றும் கனடா மீதான தனது அச்சுறுத்தலான 25% வரிகளை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைத்தார். இரு அண்டை நாடுகளுடனான எல்லை மற்றும் குற்ற அமலாக்கத்திற்கான சலுகைகளுக்கு ஈடாக 30 நாள் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் சீனாவிற்கு அத்தகைய வரி நிவாரணம் எதனையும் அவர் அறிவிக்கவில்லை. மேலும், இந்த வாரத்தின் பிற்பகுதி வரை ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச மாட்டார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1419681
  19. நீங்கள் சொல்வது சரி போல் உள்ளது. மில்க் வைற் சவர்க்கார தொழிற்சாலை யாழ். கே.கே.எஸ். வீதியிலும், அண்ணா கோப்பி தொழிற்சாலை இணுவிலிலும் இருந்தது என நினைவு.
  20. நாங்கள் இங்கு வந்த புதிதில் ஜேர்மன் கடைகளில்… கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு, இஞ்சி, உள்ளி போன்றவற்றை காண முடியாது. இப்போ எல்லா இடமும் வாங்கலாம். அதே போல் பன்றி இறைச்சியும் நம்மூருக்கு வந்திருக்கு. அத்துடன் கணிசமான உல்லாசப் பிரயாணிகளின் வருகையால்… உல்லாச விடுதிகளுக்கு பன்றி இறைச்சியின் தேவை அதிகரித்து இருக்கும். அத்துடன் நவீன சமூக ஊடகங்கள் மூலம்… ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளும் மிக வேகமாக சென்று அடைந்துள்ளதால்…. மக்களும் வெவ்வேறு நாட்டு உணவுகளை உண்ண பழகி வருகின்றார்கள். உதாரணம்: பிட்சா, மெக்சிக்கன், சீன, ஐரோப்பிய உணவுகளை சொல்லலாம்.
  21. @ஈழப்பிரியன் ரம்பின் வேலை ஆட்களை குறைக்கும் நடவடிக்கையால்... அமெரிக்காவில் பலர் கலக்கத்தில் உள்ளார்களாம். இந்த விமான விபத்து நடந்த போது... விமான கட்டுப் பாட்டு கோபுரத்தில்... இருவர் செய்யும் வேலையை, ஒருவர் மட்டுமே செய்து கொண்டு இருந்ததாக சொல்கிறார்கள். விமான கட்டுப்பாட்டு அறை... பலரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளது. அங்கு பணத்தை சேமிக்கும் வேலையை செய்யலாமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.