Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு! உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஜன்னலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் உக்ரேன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல எனவும், முன்னதாக உக்ரேன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷ்ய நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ், கடந்த நவம்பரில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420408
  2. மெக்சிகோவில் பேருந்து-லொறி மோதிவிபத்து: 41 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம் 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் விபத்தில் 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த மேயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1420442
  3. சீனாவில் பாரிய நிலச்சரிவு: 30 பேர் மாயம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து,தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிகாரிகள் உடனடியாக மாயமானவர்கள் மீட்குமாறு உத்தரவிட்டார். மேலும், அந்நாட்டு பிரதமர் லி கியாங் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் புவியியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு மற்றொரு பேரிடர் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1420429
  4. மகாவம்சத்தையே.... பலமுறை திருத்தி எழுதும் இனத்திடம், உண்மை சொல்வார்கள் என... எதிர் பார்ப்பதும் வீண் வேலை தான். 🙂
  5. கிரிஷ்’ கட்டிடம் தீப்பரவலுக்கான காரணம் வெளியானது. கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ‘கிரிஷ்’ கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டிடத்தின் இரும்பு பாகங்களை பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு கட்டர் (gas cutter) மூலம் வெட்டியதே தீ விபத்துக்கான முக்கிய காரணம் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மீண்டும் இரும்பை வெட்டி அகற்ற எரிவாயு கட்டர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீயணைப்புத் திணைக்களம் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. ‘கிரிஷ்’ கட்டிடத்தின் 35வது மாடியில் நேற்று முன்தினம் (6) தீ விபத்து ஏற்பட்டதுடன், பின்னர் நேற்று (7) 24வது மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, தீயை அணைக்க தீயணைப்புத் திணைக்களம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தலா 3 தீயணைப்பு வாகனங்கள் என 6 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது. இதற்கிடையில், ‘கிரிஷ்’ கட்டிடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக 20 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1420376
  6. சட்டமா அதிபரின் தீர்மானம் – சட்டத்தரணிகள் சங்கம் கவலை. லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, விடுவிப்பது தொடர்பான சட்டமா அதிபரின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான சட்ட மா அதிபரின் தீர்மானத்தை அமைச்சரவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற செய்திகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிவித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ளது. இதில், சட்ட மா அதிபர் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்றாலும், அவர் ஒரு நீதித்துறை சார்ந்த பதவியை வகிக்கிறார் என்றும், கிடைக்கக்கூடிய சான்றுகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதியின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியது. வழக்குத் தொடரும் தீர்மானங்களில் அரசியல் தலையீடு சட்ட மா அதிபரின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது. சட்ட மா அதிபரின் தீர்மானங்களை ரிட் அல்லது அடிப்படை உரிமைகள், உட்பட நீதித்துறை செயல்முறைகள் மூலம் மதிப்பாய்வு செய்ய முடியும் என்று உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நீதித்துறை மற்றும் நீதித்துறை தீர்மானங்கள் எப்போதும் பொதுக் கருத்துடன் ஒத்துப்போகாது என்று தெரிவித்துள்ள குறித்த சங்கம், சட்டத்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதியை வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1420369
  7. 1. "ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது.... எடை குறைவாக...!" 2. "வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை.... இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்...!" 3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” 4. " புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை...." - நா. முத்துக்குமார். 5. " பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன? மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! " 6. “சர்க்கரை இல்லை... கொழுப்பு இல்லை... எஜமானரோடு வாக்கிங் போகுது ஜிம்மி...!” 7. "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே...! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்...?" -- மு. மேத்தா. 8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம் திரும்பவும் அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது ஹோட்டல் சாம்பார்!" --S. செல்வகுமார் 9. "பேருந்தில் சிதறுகிறது நாணயங்கள்.... தேடலுக்குப்பிறகு கிடைத்தன.... சில நாணயங்கள் தொலைந்தன... சிலர் நாணயங்கள்...!" -ப. உமாமஹெஶ்வரி. 10. "பேற்றின் வலியோடு அலறும் குரலில் இணைந்தே ஒலிக்கிறது என் நிர்வாணத்துக்கான அழுகையும்...!" -- அ. வெண்ணிலா. 11. "கோழித்திருடனை ஜெயில்ல போட்டாங்க... ஜெயில்ல அவனுக்கு கோழிக்கறி போட்டாங்க..!" -- ஒப்பிலான். 12. "மாங்கல்யத்தின் மகிமையை மனைவி அறிவாள் … மணவாளன் அறிவான் … அவர்கள் இருவரையும் விட மார்வாடியே அதிகம் அறிவான்...!' -- கவிஞர் தமிழன்பன். 13. "காற்றில் பறந்து பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை !" - நா. முத்துக்குமார். 14. "உடைந்த பொம்மை அழாத குழந்தை கவலையோடு அப்பா..!" -- சிவா. 15. பிள்ளையார் சுழி "ஆற்றங்கரைப் பிள்ளையாருக்கு கிராமத்துப் பெண்டுகள் மீது கோபமோ கோபம். ஆண்டவனாய் என்னை வணங்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு ஆண் பிள்ளையாய் நடத்தக்கூடாதா? குளித்துவிட்டு வந்து ஈரப்புடவையை என் பக்கம் திரும்பி நின்றா மாற்றிக் கொள்வார்கள். சீச்சீ!" Pavithra
  8. இது என்ன... புது புரளியாய் இருக்கு. மேற்குலக நாடுகள்தானே... ஸ்ரீலங்காவிற்கு ஆயுதங்களும், போர்ப் பயிற்சிகளும், ஏன் பலமுறை நேரடியாகவே களத்தில் நின்று இராணுவத்திற்கு உதவி புரிந்தன. மகிந்தவால்... இந்திய, மேற்குலக நாடுகளின் உதவி இல்லாவிடில், புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியுமா? அரசியல்வாதிகள் எப்போதும் பொய், பிரட்டுக்களை அவிழ்த்து விட்டு, சுய இன்பம் காண்பதில் கில்லாடிகள்.
  9. 24 மணி நேரமும் கடவுச்சீட்டு விநியோகம் – 10 நாட்களில் ஆரம்பம். 24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அந்த சேவையை செயல்படுத்த தேவையான பயிற்சி பெற்ற அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டியல், பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் 24 மணி நேரமும் செயல்படும் கடவுச்சீட்டு வழங்கும் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நேற்று (7) கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக, நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் காவலரன் ஒன்றை நிறுவவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1420366
  10. மனைவி , மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் – மனைவி உயிரிழப்பு. புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1420347
  11. கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தொடர்பில் அறிவிப்பு! வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் இன்று இடம்பெற்றதுள்ளது அதன்படி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4000 இலங்கை பக்தர்களையும், 4000 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள், உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 1000 நபர்களும் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிசார், ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1420297
  12. மனைவியை கொலை செய்த கணவன் கைது. வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார். உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் , 3 வயது மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக அவரது 37 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1420321
  13. ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழப்பு. கடந்த ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார். எனினும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதின்,ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார். இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுக்கொண்டார். மேலும் ரஷ்ய இராணுவத்தில் உள்ளவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்குரிய வாய்ப்பு உள்ளதா எனவும் வினவியிருந்தார். இதற்குப் பதிலளித்த விஜித்த ஹேரத் ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் அவர்களது உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். https://athavannews.com/2025/1420324
  14. மீண்டும் கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து! கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றைய தினம் குறித்த கட்டிடத்தின் 35 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420328
  15. தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு. தாய்லாந்து உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர் உபோன் பிராகா வஜ்ஜிரகூன் தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினர் கடந்த 05 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதிஹினிதும சுனில் செனெவி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர, நாடாளுமன்ற சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர். தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவை தெரணியகல வேரப்பல்ல ஸ்ரீ அபிநவாராம புராண விகாரையின் விஹாராதிபதி அவிஸ்ஸாவேல்லே வக ஸ்ரீ வஜ்ஜிரவங்ஷ தேரர் இங்கு முன்வைத்தார். அதற்கமைய, இலங்கையில் 25 பிக்கு மாணவர்களுக்கு 125 இலட்சம் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில் வழங்குதல், உலக பௌத்த நிலையத்தை இலங்கையில் அமைத்தல், இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு தாய்லாந்துப் பிரஜைகளை இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள வைத்தல், இராஜதந்திர ரீதியாக இந்நாட்டு அரசங்கத்தின் தலையீட்டில் தாய்லாந்தில் இவ்வாண்டில் வெசாக் பண்டிகையை நடத்துதல் ஆகிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், பௌத்தத்தின் உண்மையான அர்த்தத்தை உலகறியச்செய்ய எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், புத்தரின் போதனைகளின் மதிப்புகளைச் சுட்டிக்காட்டிய கௌரவ சபாநாயகர், முன்வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கும் அறிவுறுத்தி அவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் கலாநிதிஹினிதும சுனில் செனெவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்ததுடன், பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு வழங்கும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தேவையான இராஜதந்திர ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் கட்டமைக்கப்பட்டுள்ள பௌத்த மத உறவுகள் மூலம் இரு நாட்டு மக்களும் அடையக்கூடிய சிறந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். இதன்போது உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடாளுமன்றத்தையும் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் தாய்லாந்து பௌத்த கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்ரீ சோபித் வட்டய எம் ஃபா திருகான்பாக் போங் தேரர் உள்ளிட்ட தேரர்களும், அந்நாட்டில் தற்காலிக துறவறத்தில் இணைந்த பெண்கள் மற்றும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பொது சேவைகள் பிரிவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1420315
  16. மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி. எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன. இதன்படி, எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும். எனவே, அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1420335
  17. அலஸ்காவில் மாயமான விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழப்பு. அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு சென்ற செஸ்னா 208 பி என்ற விமானம் மாயமாகியிருந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானி உள்பட 10 போ் பயணித்திருந்தனர். நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியதன் காரணமாக விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயல்வதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனையடுத்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்தனர். பின்னர் மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு படையினருடன் இணைந்து விமானத்தை தேடும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர். இந்நிலையில், மீட்புப்பணியாளர்கல் ஹெலிகாப்டர் மூலம் விமானத்தின் கடைசியாக சிக்னல் வந்த இடத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அலாஸ்கா கடல் பனியில் விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டனர். இதனால் அவர்கள் இரண்டு மீட்பு நீச்சல் வீரர்களை கீழே இறக்கி விசாரணை நடத்தினர். அந்த விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420354
  18. தமிழ் அரசியல்வாதியின்... phd. பட்டத்தின் விளக்கம் அருமை. 😂
  19. சி.வி.கே. க்கு…. கொம்பிளைண்ட் கொடுக்கச் சொல்லி, “கீ” கொடுத்து விட்டவர் மகா கிறுக்கர். 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.