Everything posted by தமிழ் சிறி
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவை சேனாதிராஜா மரணம்: இரங்கல் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச. மறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தெரிவித்துள்ளார். இதேவேளை அன்னாரின் மறைவிற்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்களது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1418924
-
திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம்
திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில்(Mrs. world) இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளதுடன் தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூட்டப்பட்டதுடன் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419150
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு வடமாகாண ஆளுநர் இரங்கல்! தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் ‘தமிழ் மக்களை நீண்டகாலம் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான சோ.சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தமிழ் மக்களுக்கான தியாகம் என்பன அரசியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன. யாழ். மாவட்டச் செயலராக நான் முன்னர் பணியாற்றிய காலத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், தமிழ் சமூகத்துக்காக ஆற்றிய பணிகள் அளப்பரியன. வலி. வடக்கின் மீள்குடியமர்வு மற்றும் அந்தப் பிரதேசத்தின் உயர்வுக்காக அவர் செய்த சேவைகளை அருகிலிருந்து பார்த்திருக்கின்றேன். காலம் முழுவதையும் இந்த மக்களுக்காகவே செலவிட்ட ஒருவரை இன்று இழந்து நிற்கின்றோம். வடக்கு மாகாண மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1419117
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - ஜனாதிபதி பங்கேற்பு
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்! யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர் இதேவேளை இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளார் மேலும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலும், பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் இரு சிநேகபூர்வ சந்திப்புகளிலிலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419128
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விபத்து; விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டி.சி.க்கு அருகே இராணுவ ஹெலிகொப்டருடன் மோதி, பொடோமாக் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழன் (30) மாலை நிலவரப்படி, பொடோமேக் ஆற்றில் இருந்து குறைந்தது 40 உடல்கள் மீட்கப்பட்டதாக சட்ட அமலாக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, விபத்தில் சிக்கிய எவரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று வொஷிங்டன் டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 உடல்கள் மீட்கப்பட்டதாக சட்ட அமலாக்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திகள் தெரிவித்தன. அதேநேரம், விபத்துக்குள்ளான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து கருப்பு பெட்டிகள் எனப்படும் விமான தரவு பதிவுகள் மற்றும் காக்பிட் குரல் பதிவுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று ஆதாரங்களை மேற்கொள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கருப்பு பெட்டிகள் விமானத்தில் என்ன தவறு நடந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களை வழங்க உதவும். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய ஆய்வகத்தில் கருப்பு பெட்டி ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்படும். புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து விமானம் குளிர்ச்சியான பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. விபத்து குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான பணியமர்த்தலின் தரம் குறைக்கப்பட்டது பேரழிவிற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர் கூட்டத்தில் வியாழக்கிழமை (30) உரையாற்றும் போதே ட்ரம்ப் இந்த கருத்தினை முன்வைத்தார். https://athavannews.com/2025/1419110
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - ஜனாதிபதி பங்கேற்பு
இன்றைய இந்தக் கூட்டத்தில், அர்ச்சுனா இராமநாதன் கலந்து கொள்ளவில்லையா. 😎
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
அழகிய குறுங்கவிதைக்கு நன்றி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?
நீண்ட காலத்திற்கு அரசியலில் இருக்க மாட்டேன்! -இராமநாதன் அர்ச்சுனா. போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் மிகவிரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கருதி எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.சி. உள்ளிட்ட பட்டங்களை கற்கவில்லை. எனக்கு உண்மையில் அரசியல் விரும்பமும் கிடையாது. 38 வருடங்களில் நான் ஒருதடவையேனும் வாக்களித்தது கூட இல்லை. நான் மக்களுக்காகத்தான் அரசியலில் களமிறங்கினேன். ஆனால், இதில் நீண்ட காலத்திற்கு இருக்க மாட்டேன். இருக்கும் காலம் வரை நேர்மையாக இருப்பேன்” இவ்வாறு அர்ச்சுனா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419039- 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!
200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி! மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேங்காய்ப் பால், தேற்காய் பால்மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை விரைவில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரால் நியமிக்கப்படுகின்ற குழுவின் ஊடாக, ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அவசியமான தேங்காய்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் விரைவில் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1419049- யாழ் பொலிஸாரால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது யாழ் நீதவான் நீதிமன்றம்!
யாழ் பொலிஸாரால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது யாழ் நீதவான் நீதிமன்றம்! யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை ஜனாதிபதி மேற்கொள்ளும் போது முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்ளை தடுத்து நிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை யாழ். நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல், அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் கவனயீர்ப்பை முன்னெப்பதற்கான உரிமை, சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்யதுடன் பொலிஸாரின் மனுவையும் தள்ளுபடி செய்தது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419078- செயற்கை கோள்களின் கல்லறையை அடைந்த இந்திய கடற்படை அதிகாரிகள்!
செயற்கை கோள்களின் கல்லறையை அடைந்த இந்திய கடற்படை அதிகாரிகள்! இந்திய கடற்படை பாய்மரக் கப்பலான (INSV) தாரிணியில் பாயிண்ட் நெமோவைக் (Point Nemo) கடந்து இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் புதிய மைல்கல்லைத் தொட்டனர். கடற்படைக் கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் “Navika Sagar Parikrama II” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உலகளாவிய கடல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். (“நவிகா சாகர பரிக்ரமா II” என்பது இந்திய கடலோர பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதி செய்யும் ஒரு கடல் ஆராய்ச்சி திட்டம் ஆகும்.) இரு பெண் கடற்படை பணியாளர்களுடன் தாரிணி கப்பல் தனது பயணத்தை 2024 ஒக்டோபர் 2 ஆம் திகதி கோவாவிலிருந்து ஆரம்பித்தது. அது கடந்த டிசம்பர் 22 அன்று நியூசிலாந்தில் உள்ள லிட்டல்டன் துறைமுகத்தை அடைந்தது, பயணத்தின் இரண்டாம் கட்டத்தை முடித்தது. குழுவினர் இந்த மாத தொடக்கத்தில் லிட்டல்டனில் இருந்து நீண்ட பயணத்திற்கு புறப்பட்டு, பால்க்லாந்து தீவுகளில் உள்ள போர்ட் ஸ்டான்லிக்கு சென்றனர். இந்தப் பகுதி சுமார் 5,600 கடல் மைல் நீளம் கொண்டது. அணுக முடியாத கடல் துருவம் என குறிப்பிடப்படும், பாயிண்ட் நெமோ பூமியின் மிக தொலைதூர இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு குடியிருப்பு மற்றும் நிலப்பரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பசுபிக் பெருங்கடலில் உள்ள இந்த சிறிய இடம் செயற்கைக்கோள் கல்லறை என்று அறியப்படுகிறது. இது 48°52.6′s 123°23.6′w என்ற கோணத்தில் அமைந்துள்ளது. இது உண்மையில் பிரான்சை விட 34 மடங்கு பெரிய தென் பசுபிக் பெருங்கடலின் பகுதியாகும். பாயிண்ட் நெமோவைச் சுற்றியுள்ள கடல், அதன் ஊட்டச்சத்து-மோசமான நீர் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் இல்லாமல் உள்ளது. இது மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு விருந்தளிக்க முடியாத சூழலாக அமைகிறது. முதல் மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த சிறிது நேரத்துக்குப் பிறகு, பாயிண்ட் நெமோ போன்ற மிகத் தொலைதூர இடம், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு பாதுகாப்பான “ஸ்கட்லிங்” இடமாக இருப்பதை விண்வெளி நிறுவனங்கள் கண்டறிந்தன, விண்கலங்கள் காலாவதியாகும் போது செயலிழக்கச் செய்யப்படுகின்றன. விண்வெளி நிறுவனங்கள் இறுதியில் மனிதர்கள் அல்லது கடல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காமல் கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கத்தைப் பயன்படுத்தி செயலிழந்த விண்கலங்கள் மற்றும் விண்வெளி நிலையங்களை இந்த தொலைதூர பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர். ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஸ்கைலேப் உட்பட 260 க்கும் மேற்பட்ட விண்வெளி குப்பைகள் வேண்டுமென்றே மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுவதைத் தடுக்க அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1419032- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி! மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி செலுத்தியுள்ளார் அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர் இதேவேளை மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் நேற்று இரவு (29) உயிரிழந்துள்ளார். மேலும் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது. https://athavannews.com/2025/1419060- DeepSeek க்குப் போட்டியாக Qwen2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா!
DeepSeek க்குப் போட்டியாக Qwen2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா! DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது செயலியான Qwen2.5 Max ஐ அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “Qwen 2.5-Max செயற்கை நுண்ணறிவு செயலியானது DeepSeek, ChatGPT, Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச AI தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மொடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவுசெய்து பிரபலமடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் அலிபாபாவின் Qwen 2.5-Max தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419009- ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்!
ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்! ஜேர்மன் பொருளாதாரம் 2024 இன் இறுதிக் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியதுடன் மீண்டும் பொருளாதார மந்தநிலை அச்சத்தை தூண்டியது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நிச்சயமற்ற தன்மையுடன் போராடுகிறது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய மூன்று மாத காலத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.2% குறைந்துள்ளது என்று அந் நாட்டு புள்ளியியல் அலுவலகத்தின் ஆரம்ப தரவு வியாழக்கிழமை (30) வெளிக்காட்டியது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி எதிர்மறையாக இருந்தால், பொருளாதாரம் மீண்டும் மந்தநிலையில் விழும் – பொதுவாக இரண்டு தொடர்ச்சியான காலாண்டு சுருக்கம் என வரையறுக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து அதிகரித்து வரும் போட்டி, அதிக எரிசக்தி செலவுகள், உயர்ந்த வட்டி விகிதங்கள் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை ஜெர்மனியின் பொருளாதாரத்தை பாதித்துள்ளன. இது 2024 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தாக்கத்தை செலுத்தியது. அதன் வருடாந்த பொருளாதார அறிக்கையில், வர்த்தக பதட்டங்கள் மற்றும் வரவிருக்கும் தேர்தலில் வளர்ந்து வரும் உள்நாட்டு நிச்சயமற்ற தன்மை காரணமாக, முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 1.1% வளர்ச்சியில் இருந்து இந்த ஆண்டுக்கான அதன் கணிப்பை 0.3% என்று அரசாங்கம் குறைத்துள்ளது. சில வணிக சங்கங்கள் 2025 இல் மற்றொரு பொருளாதார சுருக்கத்தை முன்னறிவித்தன. இதனால், ஜெர்மனியை பொருளாதாரம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சரிவு பாதையில் உள்ளது. ஜேர்மனியின் நலிவடைந்த பொருளாதாரத்தை எவ்வாறு புத்துயிர் பெறுவது என்பது பற்றிய சர்ச்சை நவம்பரில் அரசாங்கத்தின் சரிவுக்கு பங்களித்தது, பெப்ரவரி 23 அன்று உடனடி தேர்தல்களுக்கு களம் அமைத்தது. இதில் பொருளாதாரம் வாக்காளர்களிடையே முக்கிய கவலையாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419040- குரானை எரித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நபர் சுவீடனில் சுட்டுக்கொலை
குரானை எரித்தவரை.... இரண்டு வருடங்கள் பொறுமையாக காத்திருந்து, கிடைத்த சந்தர்ப்பத்தில் பழிவாங்கியுள்ளார்கள்.- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
அமெரிக்க ஏர்லைன்ஸ் விபத்து; 30 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்! 64 பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய பயணிகள் ஜெட் விமானம், அமெரிக்க இராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகொப்டருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புதன்கிழமை (29) இரவு வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து விமானம் குளிர்ச்சியான பொடோமேக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. NBC யின் வொஷிங்டன் துணை நிறுவனமான NEWS 4 செய்திச் சேவை, ஆற்றில் இருந்து 30 க்கும் மேற்பட்ட உடல்களை மீட்கப்பட்டதாக தெரிவித்தது. கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 5342 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெட் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியது. அதேநேரம், ஹெலிகொப்டர் பயிற்சியின் போது மூன்று வீரர்களை ஏற்றிச் சென்றதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயணிகள் ஜெட் விமானம் ரீகனில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தபோது நடுவானில் மோதல் ஏற்பட்டது. இதேவேளை விமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்குவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1419069- கருத்து படங்கள்
- யாழ், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தியுள்ளார் அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் நேற்று இரவு (29) உயிரிழந்துள்ளார். மேலும் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது. https://athavannews.com/2025/1418982- 2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு?
2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு? புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் எதிர்வரும் 2032 டிசம்பரில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83 சதவீதத்தில் ஒன்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள் 196 அடி (60 மீட்டர்) அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது தற்போது 27 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறு கோள் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தைப் போல பாதி அகலம் கொண்டது. நாசாவின் NEO ஆய்வுகள் மையம் (CNEOS) தகவலின் படி, இது 2032 டிசம்பர் 22 அன்று சுமார் 66,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், சுற்றுப்பாதை நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த நெருக்கமான அணுகுமுறை நமது கிரகத்தில் நேரடி தாக்கமாக மாறும். அத்தகைய தாக்கம் வளிமண்டலத்தில் வெடிப்பை ஏற்படுத்தலாம். 2024 டிசம்பர் 27, சிலியின் ரியோ ஹர்டாடோவில் உள்ள Asteroid Terrestrial-Impact Last Alert System (ATLAS) தொலைநோக்கி இதனை கண்டுபிடித்தது. இப்போது 2024 YR4 என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் சுமார் 60 மீட்டர் அகலம் கொண்டது. 2024 YR4 2024 டிசம்பர் 25 அன்று பூமிக்கு நெருக்கமாக கடந்து சென்றபோது, அதன் நெருங்கிய அணுகுமுறை பூமியிலிருந்து 828,700 கிலோ மீற்றர் தூரமாக இருந்ததாக நாசாவின் NEO ஆய்வுகள் மையம் (CNEOS) தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும், சிறுகோள் 2032 டிசம்பர் 22 அன்று பூமிக்கு மிகவும் நெருக்கமான வகையில் மீண்டும் கடந்து செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1418961- இந்திய மாணவர்களைக் குறிவைக்கும் ட்ரம்ப்!
இந்திய மாணவர்களைக் குறிவைக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்ட அந்நாட்டு அரசு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றார். இதன் முதற்கட்டமாக கொலம்பியாவைச் சேர்ந்த பலரை இராணுவ விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் பக்கம் ட்ரம்பின் பார்வை திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்கள் படித்து முடித்த பின்னரும் அங்கு தங்கி இருப்பதாகவும், குறிப்பாக விசாவின் கால எல்லை முடிந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும், சிலர் கல்வி கற்பதற்காக வந்துவிட்டு பணிபுரிந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. https://athavannews.com/2025/1418938- அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
வொஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந் நாட்டு நேரப்பு புதன் கிழமை (29) இரவு 09.00 மணியளவில் (02:00 GMT) மணியளவில் ஓடுபாதையை நெருங்கிக் கொண்டிருந்த போது, 78 பேர் வரை அமரக்கூடிய விமானம் ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானதாக விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. மோதலின் போது விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்கன் ஏர்லைன்ஸின் 5342 விமானம், கன்சாஸின் விச்சிட்டாவிலிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மோதலை அடுத்து விமானம், ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய ஏறியில் விழுந்ததாக வொஷிங்டன், டி.சி.யில் அவசரகால பதிலைக் கையாளும் பிரிவினர் கூறியுள்ளனர். மீட்பு பணியாளர்கள் தற்சமயம் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1418886- அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா?
அர்ஜுனா தனக்கு அரசியல் பிடிக்காது என்றால், ஏன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். இவரின் செய்கைகளையும், உளறல்களையும் மக்கள் இனியும் ரசிக்கத் தயார் இல்லை என்றே நினைக்கின்றேன். - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.