Everything posted by தமிழ் சிறி
-
சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
தமிழ்நாட்டு மீனவனை சிங்களவன் சுட்டு கொன்ற போது ரத்தம் கொதிக்கல... இப்ப குஜராத்திக்காக... இரத்தம் கொதிக்குதாம். குகன் அருமைநாட்டார்- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
'உருக்கமான கண்டனம்' 😂- சட்ட விரோத குடியேற்றவாசிகளை நாடு கடத்திய அமேரிக்கா.
கதற வைக்கும் கனவு தேசம். ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக நடக்கிற விஷயம்தான். பல நூற்றாண்டுகள் வரலாறுகள் கொண்ட மன்னர் ஆட்சி காலத்திலும் இவையெல்லாம் நடக்காமல் இல்லை. பொதுவாக நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குள ஒரு குடிமகன் நுழைகிறான் என்றால் அதற்கான காரணங்களை சுலபத்தில் பட்டியலிடலாம். உள்நாட்டு குற்ற தண்டனையிலிருந்து தப்பிக்க, உள்நாட்டு அரசியல் பிரச்சினையால் வாழ முடியாமல் வாழ்வாதாரத்தை தேட, அதிக அளவில் பொருள் சம்பாதிக்க எனக் காரணங்கள் பல உண்டு. இப்படிப்பட்ட நிலையில் எந்த ஒரு நாடும் சட்ட விரோதமான குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளாது..அப்படி ஏற்றுக் கொள்வது உள்நாட்டு மக்களுக்கு எதிரான செயல். ஒரு நாட்டு அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கால் உயிருக்கு அஞ்சி அகதிகளாய் தஞ்சம் புகும் மக்களை மனிதாபிமானம் என்று வரும்போது அவர்களை அடித்து விரட்ட முடியாது, அதே நேரத்தில் வாருங்கள் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று வாரி அணைத்து விடவும் முடியாது. அப்படி அணைக்கத் தொடங்கினால் அகதிகள் பெருகி உள்நாட்டு மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே பெரும் பிரச்சனை மூளு ம். இதைப் பற்றி பேசினால் விரிவாக விரிவாக போய்க் கொண்டே இருக்கும். ஆனால் அதிக பொருளீட்டும் ஆசையால் திட்டமிட்டே கள்ளத்தனமாய் இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவும் நபர்கள் விவகாரம் என்பது மிகவும் வில்லங்கமானது. வேலை தருகிறேன் என்று சொல்லி அழைத்து போய் ஏமாற்றி கைவிடப்படும் அப்பாவிகளிலிருந்து இந்த திட்டமிட்ட ஊடுருவல்காரர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். துரதிஷ்டவசமாக, சட்டவிரோத குடியேற்றம் என்று வரும்போது பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் இந்த பேதங்களை எல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் சட்டவிரோத குடியேறிகளை கையாளும் விவகாரத்தில் அடுத்த எடுப்பிலேயே காட்டத்தை காட்டாமல் உண்மையான போக்கில் ஆரம்பிப்பார்கள். எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து பராமரிப்பு என்பது பெரும் பொருட் செலவு பிடிக்கும் என்பது மட்டுமல்லாமல் தேவையற்றதும் கூட என்று கருதுவார்கள். அதனால்தான் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் போது, ஒட்டுமொத்த வகையில் பொது மன்னிப்பு கொடுத்து, நாட்டை விட்டு சுயமாக வெளியேற கால அவகாசம் தருவார்கள். இன்னொரு பக்கம் உங்கள் நாட்டில் இருந்து வந்துள்ள சட்டவிரோத குடியேறிகளை, குடிமகன்களை நீங்களே உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அழைப்பு விடுவார்கள். இந்த வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் அலட்சியப்படும் பட்சத்தில்தான் வலுக்கட்டாய வெளியேற்றத்தை நிகழ்த்துவார்கள். அப்போது கூட மனிதர்களை கால்நடைகளைப்போலவோ பொருட்களை போலவோ கருதாமல் அடிப்படை வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வழியாகத்தான் வெளியேற்றம் செய்வார்கள். நம்ம ஊரிலேயே எடுத்துக் கொள்வோமே.. தேடுதல் வேட்டையின் போது தொலைதூரத்தில் கைது செய்யப்படும் கூடிய குற்றவாளிகளை க்கூட, ஒன்று காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்வார்கள். அல்லது பயணிகள் பயணிக்கும் பேருந்து ரயில் போன்ற பொது போக்குவரத்தில் கொண்டு செல்வார்கள். ஆடு மாடுகளைப் போல அடைத்து சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள். ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு இப்படிப்பட்ட கொடுஞ்செயலைத்தான் செய்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டே தீருவார்கள் என்று சொன்னதோடு, மின்னல் வேகத்தில் 104 இந்தியர்களை பயணிகள் விமானத்தை தவிர்த்து ராணுவ விமானத்தில் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளது. அதுவும் எப்படி? கைவிலங்கிட்டு. சொற்பமான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு சுமார் 20 மணி நேர பயணம். 104 பேர் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. அனைவரும் ஹரியானா, குஜராத் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இத்தனைக்கும் பயணிகள் விமானத்தில் அனுப்புவதை விட ராணுவ விமானத்தை பயன்படுத்துவது ஐந்து மடங்கு செலவு பிடிக்கும் என்கிறது கார்டியன் பத்திரிகை. ஆகையால் இது வெளியேற்ற நடவடிக்கை என்பதைவிட, இந்தியர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையாகவே அமெரிக்கா நிர்மாணிக்கிறது. பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், மேலும் சில ராணுவ விமானங்கள் இதுபோல இந்தியர்களை அள்ளி வந்து கொட்டி விட்டு போகும் என்பதை மறுக்க இயலாது என்றும் சொல்கிறார்கள். கடந்த மாதம் இதே போன்று ராணுவ விமானங்களில் சட்டவிராத குடியேறிகள் என்று அள்ளிக் கொண்டு போன இரண்டு ராணுவ 2 அமெரிக்க ராணுவ விமானங்களை இறங்க அனுமதி மறுத்து விட்டது கொலம்பியா. ஆயிரம் இருந்தாலும் தங்கள் நாட்டு குடிமக்களை கண்ணியமற்ற முறையில் கை விலங்கிடப்பட்டு கால்நடைகள் போல் அடைக்கப்பட்டு கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று சீறினார் கொலம்பியா அதிபரான கஸ்ட்ராவோ பெட்ரோ. பின்னர் தங்கள் நாட்டு விமானங்களை அனுப்பி அமெரிக்காவிலிருந்து கௌரவமாக அழைத்து வரச் செய்தார் அந்த அதிபர். நாம்தான் நமது அரசாங்க விமானங்களை விற்பனை பிரியர்கள் கையில் எப்போதோ தாரை வார்த்து விட்டு விட்டோமே. Ezhumalai Venkatesan- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
கதற வைக்கும் கனவு தேசம். ஒரு நாட்டு குடிமக்கள் இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக குடியேறுவது என்பது காலம் காலமாக நடக்கிற விஷயம்தான். பல நூற்றாண்டுகள் வரலாறுகள் கொண்ட மன்னர் ஆட்சி காலத்திலும் இவையெல்லாம் நடக்காமல் இல்லை. பொதுவாக நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குள ஒரு குடிமகன் நுழைகிறான் என்றால் அதற்கான காரணங்களை சுலபத்தில் பட்டியலிடலாம். உள்நாட்டு குற்ற தண்டனையிலிருந்து தப்பிக்க, உள்நாட்டு அரசியல் பிரச்சினையால் வாழ முடியாமல் வாழ்வாதாரத்தை தேட, அதிக அளவில் பொருள் சம்பாதிக்க எனக் காரணங்கள் பல உண்டு. இப்படிப்பட்ட நிலையில் எந்த ஒரு நாடும் சட்ட விரோதமான குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளாது..அப்படி ஏற்றுக் கொள்வது உள்நாட்டு மக்களுக்கு எதிரான செயல். ஒரு நாட்டு அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கால் உயிருக்கு அஞ்சி அகதிகளாய் தஞ்சம் புகும் மக்களை மனிதாபிமானம் என்று வரும்போது அவர்களை அடித்து விரட்ட முடியாது, அதே நேரத்தில் வாருங்கள் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று வாரி அணைத்து விடவும் முடியாது. அப்படி அணைக்கத் தொடங்கினால் அகதிகள் பெருகி உள்நாட்டு மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே பெரும் பிரச்சனை மூளு ம். இதைப் பற்றி பேசினால் விரிவாக விரிவாக போய்க் கொண்டே இருக்கும். ஆனால் அதிக பொருளீட்டும் ஆசையால் திட்டமிட்டே கள்ளத்தனமாய் இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவும் நபர்கள் விவகாரம் என்பது மிகவும் வில்லங்கமானது. வேலை தருகிறேன் என்று சொல்லி அழைத்து போய் ஏமாற்றி கைவிடப்படும் அப்பாவிகளிலிருந்து இந்த திட்டமிட்ட ஊடுருவல்காரர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். துரதிஷ்டவசமாக, சட்டவிரோத குடியேற்றம் என்று வரும்போது பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் இந்த பேதங்களை எல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் சட்டவிரோத குடியேறிகளை கையாளும் விவகாரத்தில் அடுத்த எடுப்பிலேயே காட்டத்தை காட்டாமல் உண்மையான போக்கில் ஆரம்பிப்பார்கள். எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து பராமரிப்பு என்பது பெரும் பொருட் செலவு பிடிக்கும் என்பது மட்டுமல்லாமல் தேவையற்றதும் கூட என்று கருதுவார்கள். அதனால்தான் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் போது, ஒட்டுமொத்த வகையில் பொது மன்னிப்பு கொடுத்து, நாட்டை விட்டு சுயமாக வெளியேற கால அவகாசம் தருவார்கள். இன்னொரு பக்கம் உங்கள் நாட்டில் இருந்து வந்துள்ள சட்டவிரோத குடியேறிகளை, குடிமகன்களை நீங்களே உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அழைப்பு விடுவார்கள். இந்த வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் அலட்சியப்படும் பட்சத்தில்தான் வலுக்கட்டாய வெளியேற்றத்தை நிகழ்த்துவார்கள். அப்போது கூட மனிதர்களை கால்நடைகளைப்போலவோ பொருட்களை போலவோ கருதாமல் அடிப்படை வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வழியாகத்தான் வெளியேற்றம் செய்வார்கள். நம்ம ஊரிலேயே எடுத்துக் கொள்வோமே.. தேடுதல் வேட்டையின் போது தொலைதூரத்தில் கைது செய்யப்படும் கூடிய குற்றவாளிகளை க்கூட, ஒன்று காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்வார்கள். அல்லது பயணிகள் பயணிக்கும் பேருந்து ரயில் போன்ற பொது போக்குவரத்தில் கொண்டு செல்வார்கள். ஆடு மாடுகளைப் போல அடைத்து சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள். ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு இப்படிப்பட்ட கொடுஞ்செயலைத்தான் செய்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டே தீருவார்கள் என்று சொன்னதோடு, மின்னல் வேகத்தில் 104 இந்தியர்களை பயணிகள் விமானத்தை தவிர்த்து ராணுவ விமானத்தில் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளது. அதுவும் எப்படி? கைவிலங்கிட்டு. சொற்பமான கழிவறைகள் கொண்ட விமானத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு சுமார் 20 மணி நேர பயணம். 104 பேர் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. அனைவரும் ஹரியானா, குஜராத் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இத்தனைக்கும் பயணிகள் விமானத்தில் அனுப்புவதை விட ராணுவ விமானத்தை பயன்படுத்துவது ஐந்து மடங்கு செலவு பிடிக்கும் என்கிறது கார்டியன் பத்திரிகை. ஆகையால் இது வெளியேற்ற நடவடிக்கை என்பதைவிட, இந்தியர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையாகவே அமெரிக்கா நிர்மாணிக்கிறது. பிரதமர் மோடி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், மேலும் சில ராணுவ விமானங்கள் இதுபோல இந்தியர்களை அள்ளி வந்து கொட்டி விட்டு போகும் என்பதை மறுக்க இயலாது என்றும் சொல்கிறார்கள். கடந்த மாதம் இதே போன்று ராணுவ விமானங்களில் சட்டவிராத குடியேறிகள் என்று அள்ளிக் கொண்டு போன இரண்டு ராணுவ 2 அமெரிக்க ராணுவ விமானங்களை இறங்க அனுமதி மறுத்து விட்டது கொலம்பியா.. ஆயிரம் இருந்தாலும் தங்கள் நாட்டு குடிமக்களை கண்ணியமற்ற முறையில் கை விலங்கிடப்பட்டு கால்நடைகள் போல் அடைக்கப்பட்டு கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று சீறினார் கொலம்பியா அதிபரான கஸ்ட்ராவோ பெட்ரோ. பின்னர் தங்கள் நாட்டு விமானங்களை அனுப்பி அமெரிக்காவிலிருந்து கௌரவமாக அழைத்து வரச் செய்தார் அந்த அதிபர். நாம்தான் நமது அரசாங்க விமானங்களை விற்பனை பிரியர்கள் கையில் எப்போதோ தாரை வார்த்து விட்டு விட்டோமே. Ezhumalai Venkatesan- சிரிக்கலாம் வாங்க
- யாழ், கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
காற்று மாசுபாட்டால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! காற்று மாசுபாட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுவாச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் ” காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் இறப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. காற்று மாசுபாடு முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது பொருளாதார ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். சுமார் 70,000 அறிவியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், காற்று மாசுபாட்டால் 7 மில்லியன் மக்கள் அகால மரணம் அடைவதை நிரூபித்துள்ளன. குறிப்பாக காற்றில் உள்ள சில கூறுகள் நுரையீரலுக்குள் நுழையும் போது, புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. புகைப்பிடிப்பவர்களில் இந்த நிலை காணப்பட்டாலும், புகைபிடிக்காதவர்கள் மற்றும் பெண்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக இறப்புகளும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது” இவ்வாறு மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1420150- கருத்து படங்கள்
- அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா விரைவான பதிலடி!
- லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்
- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
அனுர குமார.... சவூதிக்கு போகும் போது பச்சை சேர்ட், இந்தியாவுக்கு மஞ்சள் சேர்ட், சீனாவுக்கு சிவப்பு சேர்ட், அமெரிக்காவுக்கு நீல சேர்ட் போட என்று... அவரின் அலுமாரி நிறைய கலர் சேர்ட்டுகள் வைத்திருக்கின்றாராம். 😂- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1420036- எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!
எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதில் நம்பிக்கை இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது. ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வருடம் வாகன இறக்குமதிக்காக 1000 முதல் 1200 மில்லியன் ரூபா வரை வெளிநாட்டு கையிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி. ஒருவருக்கு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் ஊடாக வாகனம் வழங்கப்படும். அந்த வாகனம் கையிருப்பில் உள்ள வாகனம் எனவும், எம்.பி.யின் பதவிக்காலம் ஐந்து வருடங்களில் முடிவடைந்த பின்னர் குறித்த வாகனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார். https://athavannews.com/2025/1420048- பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் திட்டம் தொடர்பில் அறிவிப்பு!
பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் திட்டம் தொடர்பில் அறிவிப்பு! 35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 30000 அல்லது 35000 என்று கூறமுடியாது என்றும் வழமை போன்று அங்கு பட்டதாரிகள் குழுவிருப்பதால் ஒரு பகுதிக்கான ஆட்சேர்ப்பு உள்ள வெற்றிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் அத்துடன், அரச சேவையில் பயன்படுத்தப்படாத பட்டதாரிகள் குழுவொன்று இருப்பதாகவும், அதனைக் கையாள்வதற்காக மற்றுமொரு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கமைவாக அளவை நிர்ணயித்து தேவையான ஆட்சேர்ப்புகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1420055- மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு!
மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ தனது வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்த மனுவில், முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1420107- காசாவில் இன அழிப்புக்கு எதிராக ட்ரம்புக்கு ஐ.நா.தலைவர் எச்சரிக்கை!
காசாவில் இன அழிப்புக்கு எதிராக ட்ரம்புக்கு ஐ.நா.தலைவர் எச்சரிக்கை! காசாவில் இனச் சுத்திகரிப்புகளை மேற்கொள்ளும் திட்டங்களை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்தார். பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி செவ்வாயன்று (04) வெள்ளை மாளிகையில் முன்மொழிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீர்வுக்கான தேடலில், நாம் பிரச்சினையை மோசமாக்கக் கூடாது. சர்வதேச சட்டத்தின் அடிப்பகுதிக்கு உண்மையாக இருப்பது இன்றியமையாதது. இனச் சுத்திகரிப்பு எந்த வகையிலும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் வலியுறுத்தினார். முன்னதாக புதன்கிழமை குடெரெஸ் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பேசினார், டுஜாரிக் கூறினார். பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதியில் 1967 முதல் இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஒரு அரசை விரும்புகிறார்கள். இஸ்ரேல் 2005 இல் காசாவில் இருந்து படைவீரர்கள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெற்றது. 2007 ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் இப்பகுதி ஆளப்பட்டு வருகிறது, ஆனால் இன்னும் ஐக்கிய நாடுகள் சபையால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருப்பதாக கருதப்படுகிறது. இஸ்ரேலும் எகிப்தும் அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன. https://athavannews.com/2025/1420060- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்
அமெரிக்காவை தொடர்ந்து ஐ.நாவில் இருந்து விலகும் இஸ்ரேல். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது,” என குறிப்பிட்டுள்ளார். “மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், UNHRC மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை மோசமாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது”. “எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. UNHRC-யில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது!” என்று அவர் மேலும் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1420081- ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்!
ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்! இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருந்தது. இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். அத்துடன் 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். இருப்பினும் 2021-ம் ஆண்டு அந்த நாட்டை மீண்டும் இராணுவம் ஆட்சிக்குள் கொண்வரப்பட்டது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டின் இராணுவம் கோர முகத்தை காட்டி அடக்கி வருகிறது. மியன்மாரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும்நிலையில் ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை இராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது. இராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது. மேலும் அதனை ஏலம் விட இராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவு சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யங்கூனில் உள்ள இனியே ஏரிக்கரையில் கட்டப்பட்டது. சூகியின் தந்தையும், அந்த நாட்டின் விடுதலை போராட்ட வீரரான இராணுவ தளபதி ஆங் சாங்கும் வசித்து வந்த பூர்வீக வீடாக அது உள்ளது. அந்த வீடுதான் ஆங் சான் சூகி 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது. மேலும் நோபல் பரிசையும் பெற்று தந்தது. அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட மூன்றாவது முறையாக இராணுவ அரசு முயற்சித்த போதும் மியன்மார் இராணுவத்தினரின் ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420063- ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்!
ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்! பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தனர். கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அவரை வெளியேற்றியதில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஹசீனா இந்தியாவில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் நாட்டிற்கு உரையாற்றுவார் என்ற செய்தியால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது. 20 ஆண்டுகளாக பங்களாதேஷின் பொறுப்பில் இருந்த 77 வயதான ஹசீனா, ஒரு சர்வாதிகாரியாகக் முத்திரை குத்தப்பட்டார். இந்த நிலையில் புதன்கிழமை (06) மாலை எதிர்ப்பாளர்கள் டாக்காவில் அமைந்துள்ள ஹசீனாவின் மறைந்த தந்தையும் பங்களாதேஷின் ஸ்தாபயத் தலைவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை தீயிட்டு எரிந்ததுடன், ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து நொறுக்கியுள்ளனர். ஹசீனாவின் தந்தை ஒரு சுதந்திர நாயகனாக பரவலாகப் பார்க்கப்படுகிறார், ஆனால் அவரது மகள் மீதான கோபம் ஹசீனாவின் விமர்சகர்களிடையே அவரது பாரம்பரியத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தியது. ஒரு காலத்தில் ஜனநாயக சார்பு சின்னமாகப் போற்றப்பட்ட ஹசீனா, பதவியேற்ற பின்னர் தனது நற்பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டார். அவர் தேர்தல்களில் முறைகேடு செய்ததாகவும், அவரை விமர்சிப்பவர்களை சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார், மேலும் அவரது நிர்வாகம் ஊழல் நிறைந்ததாக பரவலாகக் காணப்பட்டது. கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மாணவர்களின் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியதற்காக அவர் பிடியாணை உத்தரவினை எதிர்கொள்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றாலும், அவர் மீதும் அவரது அவாமி லீக் கட்சியினர் மீதும் கோபம் தணியவில்லை. இதனால், புதன்கிழமை (05) எதிர்ப்பாளர்கள் மூத்த அவாமி லீக் தலைவர்களின் வீடுகளையும் வணிகங்களையும் சேதப்படுத்தி எரித்தனர். https://athavannews.com/2025/1420109- ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி
சுவீடன் வெகுஜன துப்பாக்கி சூடு தொடர்பான அப்டேட்! சுவீடனின் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஸ்வீடிஷ் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட 35 வயதான நபர் ஸ்வீடிஷ் பிரஜை என்றும், அவரின் பெயர் ரிக்கார்ட் ஆண்டர்சன் (Rickard Andersson) என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. செவ்வாயன்று (04) தாக்குதல் நடந்த ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 157 கிமீ (98 மைல்) தெலைவு நகரமான ஓரேபோவில் அமைந்துள்ள கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்தியவர் உட்பட 11 பேர் இறந்தனர், குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மற்றொரு பெண் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபராக ஆண்டர்சன் பெயரிடப்பட்ட ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்த பொலிஸார் மறுத்துவிட்டனர். ஓரேபோ பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் ஆனால் “விசாரணையின் காரணமாக அவரது பெயரை இன்னும் வெளியிடவில்லை” என்றும் கூறினார். அவர் எப்படி இறந்தார் என்றும் அவர்கள் கூறவில்லை, ஆனால் அவர் காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்றும் ஊடக அறிக்கைள் தெரிவிக்கின்றன. ரிஸ்பெர்க்ஸ்கா கல்வி நிலையத்தை தாக்க துப்பாக்கிதாரி எதற்காகத் தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து தாங்கள் இன்னும் விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்வீடிஷ் செய்தித்தாள் Aftonbladet சந்தேக நபர் முன்பு கல்வி நிலையத்தில் இணைந்தார், ஆனால் 2021 முதல் வகுப்புகளுக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டது. சந்தேக நபருக்கு தீவிரவாத கும்பல்களுடன் வெளிப்படையான தொடர்பு இல்லை என்றும், ஏனைய சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். சந்தேகநபருக்கு எதிராக முந்தைய சிறைத் தண்டனைகள் மற்றும் வழக்குகள் எதுவும் இல்லை மற்றும் அவர் சட்டப்பூர்வமாக ஆயுதம் பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண கைரேகைகள், பல் பதிவுகள் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர். புலம்பெயர்ந்தோருக்கான ஸ்வீடிஷ் மொழி வகுப்புகளை கல்வி நிலையம் வழங்குவதோடு, ஆரம்ப அல்லது இடைநிலைப் பள்ளியை முடிக்காத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வயது வந்தோருக்கான கல்வி நடவடிக்கையினை ரிஸ்பெர்க்ஸ்கா மையம் முன்னெடுத்து வந்தது. துப்பாக்கிச் சூட்டின் பின்னர், ஓரேப்ரோ குடியிருப்பாளர்கள் கல்வி நிலையத்துக்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஓரேப்ரோவைச் சுற்றியுள்ள கொடிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசாங்க கட்டிடங்கள், நாடாளுமன்ற மற்றும் அரச மாளிகைகளிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420121- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்! எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். 2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1420033- 70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை
70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது . ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது . சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நிதி விசாரணைப் பிரிவு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்களைச் சமர்ப்பித்திருந்தது . அந்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1420016Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.