Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எம். கே. சிவாஜிலிங்கம், அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல. நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார். ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார். இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார். இதுதான் அவரது அடையாளம். ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!! சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்! Mathusuthan Kumarasamy
  2. மட்டக்களப்பில்... ஆற்றில், "ரிக் ரொக்" வீடியோ எடுக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி இறப்பு. 4 பேர் உயிருடன் மீட்பு.
  3. தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை இது வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவிலே கரையைக் கடக்கும் இலங்கையில் மழையுடனான காநிலை நீடிக்கும் கரையை கடக்கும் வரை இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 160km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 110km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 135km தூரத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து (பருத்தித்துறை) தென்கிழக்காக 210km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது. AB Amam
  4. அந்த மாணவர்களை பாடசாலையில் தங்க வைத்து, வெள்ளம் வடிந்த பின் அனுப்பி இருக்கலாம். நிலைமையின் தீவிரத்தை ஒருவரும் சரியாக கணிக்கவில்லைப் போலுள்ளது.
  5. இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், ராமன், துணைச் செயலர்கள் வழக்குரைஞர் பானுமதி, பொறியாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுபோல, பங்களாதேஷ் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய யூதர்களைப் படுகொலை செய்த ஹிட்லரின் தளபதியை அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும், அவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டுக் கொன்றனர். ஆனால், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷ கும்பலை எந்த நாடும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. ஐ.நா. சபையும் மௌனம் சாதிக்கிறது. ராஜபக்ச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை கூறியும் கூட, இந்தியா உள்பட எந்தவொரு நாடும் முன் வரவில்லை. தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை புலிகளின் தலைவர் விடிவெள்ளியாகத் திகழ்கிறார். அவர் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும். இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை டில்லியில் (மத்திய அரசு) உள்ளவர்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை டில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410186
  6. போகிற போக்கில்... அடுத்த தேர்தலிலும் யாழ். மாவட்ட ஆறு தொகுதிகளையும் அனுர கட்சி அள்ளும் போல் தெரிகின்றது. பாரம்பரிய தமிழ் கட்சித் தலைவர்கள், மழையில் நனைந்தால்... தடிமல், இருமல் பிடித்துவிடும் என்று யோசிக்காமல், தெருவில் இறங்கி... மக்களின் குறையை கேளுங்கப்பா.
  7. பாகிஸ்தானில் தொடரும் மோதல் – 76 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்தது. துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சமரசத்திற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். எனினும், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் வெடித்தது. கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, வன்முறை சம்பவத்தினால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. https://athavannews.com/2024/1410212
  8. உழவு இயந்திரத்தின் சாரதியின் உடல் இன்று காலை கண்டு எடுக்கப்பட்டதாக முகநூலில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
  9. அடாது மழை பெய்தாலும் விடாது அஞ்சலி செலுத்திய மக்கள். தமக்காக மரணித்த மாவீரர்களை மறக்காது நெஞ்சில் ஏந்தும் அதிசயம் இது எப்படி ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது? இது மாவீரர்கள் நிகழ்த்தும் அற்புதம் இன்றி வேறு என்னவாக இருக்கும்? தோழர் பாலன்
  10. இல்லை. சுட்ட தோசையை... அந்தக் கதிரையில் இருந்துதான் சாப்பிடுறது. 😂
  11. தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரித்துவிட்டார்கள் என்றவர்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட்டுள்ளது. இனியாவது இலங்கை இந்திய அரசுகள் இதனை புரிந்து கொள்ளுமா? தோழர் பாலன் அவர்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கவில்லை மாறாக தமிழ் தேசிய வியாபாரிகளை தோற்கடித்துள்ளனர். Suganthan Karalasingam
  12. வெட்கம் கெட்டவன், மானத்தை வாங்குகிறான். அக்கவுண்டனாக... கனடாவில் வேலை செய்து கொண்டு, இரட்டை குடியுரிமையும் வைத்துக் கொண்டு... பெண்ணின் கைப்பையை களவெடுக்க எவ்வளவு... பஞ்சப் பரதேசியாய் இருந்திருக்க வேண்டும். களவெடுத்த காசில்.. 9 விஸ்கிப் போத்திலும் வாங்கி இருக்குது இந்த எருமை. ஒரு ஆள்... சுங்கப் பகுதியால் இரண்டு போத்தில்தான் கொண்டு போகலாம் என்று நினைக்கின்றேன். இது 9 வாங்கி இருக்குது என்றால், இதன் நினைப்பு என்னவாக இருந்திருக்கும். நாயை... குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், நக்கித்தான் குடிக்குமாம். தரித்திரம் பிடித்தவனுக்கு, வெளிநாட்டு வாழ்க்கை ஒரு கேடு. த்தூ... 😡
  13. தாய்மண் மீட்புக்காக... விதையாகிய, வீர வேங்கைகளுக்கு வீர வணக்கம்.
  14. ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் வீதி ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர். கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரை பிடித்த பொலிஸார் விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என வலியுறுத்தி உடல்களை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களுடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். https://athavannews.com/2024/1410141
  15. உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்! உலகின் மிக வயதான மனிதர் ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) தனது 112 வயதில் உயிரிழந்தார் என்று கின்னஸ் உலக சாதனைகள் செவ்வாயன்று (26) தெரிவித்தன. இவர் இரண்டு உலகப் போர்கள் மற்றும் இரண்டு உலகளாவிய தொற்றுநோய்களிலிருந்து உயிர் தப்பியுள்ளார். புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கிய அதே ஆண்டில் பிறந்த டினிஸ்வுட், வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சவுத்போர்ட் நகரில் உள்ள தனது பராமரிப்பு இல்லத்தில் தனது கடைசி மூச்சை விடுத்தார். டின்னிஸ்வுட் ஆகஸ்ட் 1912 இல் லிவர்பூலில் பிறந்தார், 1942 இல் திருமணம் செய்து கொண்டார், இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் அவர் ரோயல் ஆர்மி பே கார்ப்ஸின் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர் அவர் எண்ணெய் துறையில் கணக்காளராக பணிபுரிந்து 60 வயதில் ஓய்வு பெற்றார். அவரது குடும்ப உறுப்பினர்களில் அவரது மகள், நான்கு பேரக்குழந்தைகள் மற்றும் மூன்று கொள்ளு பேரக்குழந்தைகள் இருந்தனர். இவரது மனைவி 1986 இல் காலமானார். மறைந்த ராணி எலிசபெத், அவருக்கு 100 வயதை எட்டியதிலிருந்து 2022 இல் இறக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் டினிஸ்வுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை அனுப்பி உள்ளார். https://athavannews.com/2024/1410118
  16. புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை! ”தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி, ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதை மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று நாம் முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும்” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409988
  17. உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை நினைவுக்கூர அரசாங்கம் அனுமதித்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளதாவது” 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கம் வெளியிட்டிருந்த வர்த்தமானியின் பிரகாரமே செயற்படுவோம். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெளிவாகக் கூறியுள்ளார். பயங்கரவாத அமைப்பையோ அல்லது அதன் உறுப்பினர்களை நினைவுக்கூரவோ இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறவில்லை. குறித்த வர்த்தமானியின் பிரகாரம் பயங்கரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளையோ அல்லது அதன் உறுப்பினர்களையோ நினைவுக்கூர முடியாது. அதேபோன்று குறித்த அமைப்புகளுக்காக நிதி சேகரித்தல், பிரச்சாரம் செய்தல், ஒருங்கிணைத்தல், கொடிகளை பயன்படுத்தல், சின்னங்களை பயன்படுத்தல், பாடல்களை பயன்படுத்தல் என அனைத்து விடயங்களும் இதன் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணிகளின் பிரகாரம்தான் அரசாங்கம் செயல்படும். இந்த விடயத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகவும் தெளிவாக ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால், உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு தடையை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியில்லை” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409984
  18. எச்சரிக்கை; இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்! தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (27) சூறாவளியாக மேலும் வலுவடையும். இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தீவின் ஏனைய இடங்களிலும் மழை பெய்யும். சில இடங்களில் 75 மி. மீக்கு மேல் பலத்த மழை பதிவாகலாம். வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காற்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர்களாக காணப்படும். மேலும், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். கடல் நிலை நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.5-3.0 மீ) உயரம் (இது நிலப்பரப்புக்கானது அல்ல) அதிகரிக்கலாம். மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அண்மித்த கடற்பரப்புகளில் அலைகள் சீற்றம் காரணமாக எழுச்சியுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். இதனால், கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரும் இதனால் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1410022
  19. ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது! யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஏ-9 பிரதான வீதியில் ஓமந்தை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். சாரதிகள் வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் வீதிகளின் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410045
  20. மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்ட ஆறு விமானங்கள்! மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று இரவு தரையிறங்கவிருந்த 06 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மூன்று விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. மீதமுள்ள மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. https://athavannews.com/2024/1410036

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.