Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. குத்துச் சண்டை போட்டியின் முடிவில் டைசன் இவ்வாறாக சொன்னார், நேற்றைய இரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், கடைசியாக ஒரு முறை இந்த வளையத்துக்கு வந்ததற்காக எனக்கு எந்த வருத்தமுமில்லை. நான் கிட்ட தட்ட ஜீன் மாதமே இறந்து விட்டேன். அந்த மாதத்தில் மட்டும் எனக்கு எட்டு முறை ரத்தம் ஏற்றப்பட்டது, 25 பவுண்ட்கள் எடையும் குறைந்தேன், அதனால் தான் நான் ரிங்கில் போராட வேண்டியிருந்தது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த டல்லாஸ் ஸ்டேடியத்தில் எனது வயதில் பாதி வயதுடையை ஒரு திறமையான போராளியுடன் நான் போராடினேன். இந்த வயதிலும் எட்டு ரவுண்ட்கள் தாக்கு பிடித்து நின்றதை என் பிள்ளைகள் பார்த்தால் போதும், வேறு எவருக்கும் இதை விமர்சிக்க உரிமை இல்லை..!!💜 M Jency Stefana
  2. பெண்ணாக மாறிய, பிரபல கிரிக்கெட் வீரரின் மகன். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தான் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை எடுத்துக்கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவருடைய மகன், ஆர்யன். இவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார். தவிர, தனது பெயரையும் அனயா என மாற்றிக்கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்மூலமே இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அந்தப் பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலை களத்துக்குச் சென்று பலரது சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஆனால், இந்த ஆட்டத்தைத் தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்குச் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. இது அத்தனை எளிதாக இல்லை. இன்று இந்த விளையாட்டில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால், எனது சுயத்தை நான் கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி” என அதில் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான், ஆர்யன் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து அவர் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி இல்லை என கூறி இருந்தது. அதனால் தற்போது அனயாவாக மாறியுள்ள ஆர்யனுக்கும் இனி கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சக்திவேல் வடலூர் நகராட்சி நகராட்சி
  3. எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் "மொமென்ட்". 😂
  4. நீங்கள் மூக்கு சாத்திரம் பார்த்து... ஊகத்தின் அடிப்படையில் எழுதும் கருத்துக்களை நான், சீரியஸாக எடுப்பதில்லை. 😂 🤣 ஒரு, ஹ... ஹா... ஹா... தான். வாய் விட்டு சிரிங்க... நோய் விட்டுப் போகும்.
  5. இது முகநூலில் இருந்தது. உண்மை / பொய் உறுதிப்படுத்த முடியவில்லை.
  6. சபாஷ்... பலே... அனுரவுக்கும், டிரம்புக்கும் சரியான போட்டி. 😂 ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣
  7. நெடுக்ஸ்... அன்றும், இன்றும்... அமைச்சரவை. அன்று.... அரைவாசி பாராளுமன்றமுமே அமைச்சர்கள். இன்று.. 21 பேர் மட்டுமே அமைச்சர்கள். பிற்குறிப்பு: என்னை ஜே.வி.பி. காரன் என்று முத்திரை குத்திப் போடாதீங்கப்பு. 😂
  8. சசி.. இரண்டு தமிழ் அமைச்சர்கள் உள்ளார்கள். அதில் ராமலிங்கம் சந்திரசேகர் தமிழிலேயே சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள முஸ்லீம்களும்.... அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப் படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.
  9. கோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... எனக்குத் தெரிந்து ராமலிங்கம் சந்திரசேகர் அனுராவின் கட்சியில் 30 - 35 வருடங்களுக்கு மேல் இருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்கள் மிகக் குறுகிய காலத்தில் அனுர கட்சியில் இணைக்கப் பட்டவர்களே ஆகும். அதிலும் வைத்தியர் எஸ். சிறி பவானந்தராஜா ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்... இரண்டு மாதத்திற்குள் கட்சியில் இணைக்கப் பட்டவர். (இவருடன்... திருமலை நீதிபதி இளஞ்செழியனையும் இணைத்து வடக்கில் போட்டியிட அனுர கட்சியில் முயற்சிக்கப் பட்டது. நீதிபதி இளஞ்செழியன் ஏனோ பின்வாங்கி விட்டார்.) தேர்தலுக்காக இணைக்கப்பட்ட புதியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடனேயே அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். 🙃 நீங்கள் ஏதோ... எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது போலுள்ளது. 😂 அதைவிட... இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள முஸ்லீம்களும் அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப் படவில்லையே. அவர்கள் இதுவரை கவலையை தெரிவிக்கா விட்டாலும், உள்ளுக்கு புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் இரண்டு கிடைத்தது என்று திருப்தி அடையுங்கள். 😃 "போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து." 💪 கிடைத்ததை வைத்து சந்தோசப் படுபவன்.. முழு மனிதன். 😂 கிடைத்ததும் காணாது என்று.. அடம் பிடிப்பவன்.. அரை மனிதன். 🤣
  10. முன்னாள் டக்ளசின் மீன்பிடி அமைச்சுப் பதவி... தற்போது ராமலிங்கம் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேரள கஞ்சா வாற வழியை பிடிக்க போட்ட பொறி போல் உள்ளது. டக்ளசின் வியாபாரம் எல்லாம் அம்பிடப் போகுது.
  11. ஜனாதிபதி அநுரவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள்! இலங்கையின் புதிய அமைச்சரவையில் இன்று இரண்டு தமிழ் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) மற்றும், சரோஜினி சாவித்திரி போல்ராஜ் ஆகியோரே இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜி சாவித்திரி போல்ராஜும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவான நிலையில் மொத்தமாக 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408957
  12. யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂
  13. பைடனை எச்சரிக்கும் புடின்! ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்கா இதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையின் முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்திருந்தார். ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய எல்லைகளுக்கு அப்பால் ஏவகணை பயன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408986
  14. கலி முத்திப் போச்சு. வரிக்குதிரையும்.... முதலை இறைச்சி சாப்பிட தொடங்கி விட்டது. 😂 🤣 பகவானே... இது என்ன சோதனை. 😂
  15. இரண்டு தமிழ் அமைச்சர்கள். முஸ்லீம்கள் அமைச்சரவையில் உள்வாங்கப் படவில்லை.
  16. இரண்டு தமிழ் அமைச்சர்கள். முஸ்லீம்கள் அமைச்சரவையில் உள்ளடக்கப் படவில்லைப் போலுள்ளது.
  17. இந்த முறை... சுத்துமாத்து சட்டத்தரணிகளை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் போலுள்ளது. 😂
  18. இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பாதைகள் திறக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்தோம் எனும் பொருள் பட இந்த கருத்தோவியம் உள்ளது.
  19. புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக ‘ராமலிங்கம் சந்திரசேகர்‘ பதவிப் பிரமாணம்! புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். https://athavannews.com/2024/1408907
  20. புலிக்குரல்… உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. திருகோணமலை மாவட்டத்தில் அனுர கட்சியில் கேட்ட அந்த இளையவரைப் பற்றி பலரும் நல்ல மாதிரி சொன்னார்கள். உங்கள் தெரிவு நியாயமானது. புரிந்து கொள்கின்றோம். 🙂 👍🏽
  21. அனுர அரசில்… டக்ளஸ், அங்கஜன், கருணா, பிள்ளையான் எல்லோரும் சேர்த்த பணத்தையும், வைத்திருக்கும் ஆயுதத்தையும் பாதுகாக்க போராட வேண்டி இருக்கும். எப்பவும்… தேடுதல் வேட்டை தொடங்கலாம். பிள்ளையான்… தலைமறைவு என்று பேசிக் கொள்கிறார்கள்.
  22. உண்மைதான்.... சுமந்திரனின் பஞ்சாயத்து பார்க்கிறதாலேயே பலரின் நேரங்கள், யாழில் பல பக்கங்கள் வீணாகி உள்ளது. 😂 சுமந்திரன் தோற்றதுடன், இனி... உந்த தொல்லை, புடுங்குப்பாடு ஒன்றும் இராது. 🤣 ஆபிரஹாம் சுமந்திரனை... தோல்வி அடையச் செய்த, யாழ்.மாவட்ட மக்களுக்கு நன்றி. 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.