Everything posted by தமிழ் சிறி
-
நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
அண்ணே.... டிகிரியில, என் பெயர் அடிக்கணும்ணே... 😂
-
மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்
பாத்திமா... பெயரைப் பார்க்க, முஸ்லீம் பெண் மாதிரி உள்ளது. இப்ப, பாய்மார் எல்லாரும்... மொட்டாக்கு போடவில்லை என்று பொங்கி எழப் போகிறார்களே. இரண்டு கிழமைக்கு "என்ரரெயின்மென்ட்" இருக்கு. 😂 🤣
-
இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்
இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட் சென்னை: 'யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில், தன் புகைப் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'என்னை அடையாளப்படுத்தும் வகையில், என் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என, எதையும் பயன்படுத்தக் கூடாது. 'சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்தியதன் வாயிலாக கிடைத்த வருமான விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். https://www.dinamalar.comஇளையராஜா புகைப்படம் சமூக வலைதளங்களில் பயன்படுத்த ஐகோர்ட் தடைசென்னை: யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா
-
கருத்து படங்கள்
- திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்!
திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்! வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அட்டை கட்டண முறை நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது. இதன்படி, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து கட்டணங்களுக்கான வங்கி அட்டைகள் மூலமாக பயணிகள் செலுத்தலாம். அரசு, தனியார் உட்பட மொத்தம் 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு மேலும் கூறியுள்ளது. https://athavannews.com/2025/1453456- இங்கிலாந்தில் பூப்பெய்தலை தடுக்கும் மருந்துகள் குறித்த சோதனைக்கு அனுமதி!
இங்கிலாந்தில் பூப்பெய்தலை தடுக்கும் மருந்துகள் குறித்த சோதனைக்கு அனுமதி! இங்கிலாந்தில் சமீபத்தில் பாலின மருத்துவமனைகளில் பூப்பெய்தலைத் தடுக்கும் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர்களில் இந்த மருந்துகளின் பயன்பாடு குறித்த முதல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கிங்ஸ் கல்லூரி லண்டன் (KCL) தலைமையிலான இந்தப் புதிய சோதனைகள், இந்த மருந்துகளின் ஆபத்துகள் மற்றும் நன்மைகள் இரண்டையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக வைத்தியர் Hilary Cass) ஹிலாரி காஸ் தலைமையிலான முந்தைய ஆய்வு, ஹார்மோன் சிகிச்சைகளுக்கான ஆதாரங்கள் பலவீனமாக இருப்பதாகக் கண்டறிந்த பின்னர் இந்த சோதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதேவேளை, சுமார் 250 குழந்தைகளை சேர்த்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ள “பாத்வேஸ்” எனப்படும் இந்த சோதனையானது, மருந்து மற்றும் மருத்துவமற்ற கவனிப்பைப் பெறும் குழுவுடன், மருத்துவமற்ற கவனிப்பை மட்டும் பெறும் குழுவை ஒப்பிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களைப் பின்தொடரும். இந்த மருந்துகள் குறித்து சில மருத்துவர் குழுக்கள் கவலைகள் தெரிவித்திருந்தாலும், பாலின மாற்று அறுவை சிகிச்சை ஆதரவு குழுக்கள், பாலின உறுதிப்படுத்தல் சிகிச்சையின் நன்மைகளை மருத்துவ அமைப்பு குறைத்து மதிப்பிடுவதாக வாதிடுகின்றன. மேலும் இந்த ஆய்வு முடிவுகளைப் பெற நான்கு ஆண்டுகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1453546- இந்தியாவுடனான மோதலில் சீன உதவியால் பாகிஸ்தான் வென்றதா? அமெரிக்க அறிக்கை கூறுவது என்ன?
பாகிஸ்தானுக்கு சீன உதவி இல்லாவிடினும், பாகிஸ்தான் வென்றுதான் இருக்கும். இந்தியாவுக்கு…. பெரிய வாய். வடை சுடத்தான் லாயக்கு.- அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
புதிய மொந்தையில் பழைய கள். 😂 தாத்தா காலத்திலிருந்து… வட்டமான போத்தலில் சாராயம் விற்றால், வாங்குறவனுக்கும் அலுப்பு அடிக்கும் என்ற படியால்…. “ஜொனி வாக்கர்” மாதிரியான போத்தலில் சாராயம் விற்கிறார்கள் என்பது எனது ஊகம். 🤣- சிரிக்கலாம் வாங்க
¼ kg சிறு பயறு ¾ kg அச்சு வெல்லம் 150 ஜவ்வரிசி 20 திராட்சை 10 முந்திரி ¼ kg ரவை ½ kg சீனி 50 g நெய்.- அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணியின் கூட்டம் இன்று!
நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்ட பாண், பருப்புக் கறி, சாராய போத்தல்கள். ஒரு படத்தில்.. பெரிய வாளும் உள்ளது.- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
"கண்ணியத்தை இழப்பதா? அல்லது கூட்டாளியை இழப்பதா?" அமெரிக்காவின் திட்டங்களால் கடும் வேதனையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி! Sun News Tamil- திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை
இந்தப் படத்தில்... வைத்தியசாலையில் உள்ள பொலிசாருடன் மல்லுக்கட்டிய, துவேச பிக்குகளுடன், துலார குணதிலக்க... பச்சை சேர்ட்டுடன் காணப்படுகின்றார். இந்தப் பட ஆதாரங்களே... இவனை கைது செய்ய போதுமானது.- போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச-
தெற்கில் தொடரும் போதை படகுகள்: சிக்கிய சஜித் கட்சி உறுப்பினர்! தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு செயல்பாட்டின்போது இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. படகிலிருந்து போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. யாழ்ப்பாணம்.com- போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச-
போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச- தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் எக்ஸில் பதவிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நேற்று போதைப்பொருள் தொடர்பான கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்க தனி விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பன்னாலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்தக் கப்பலில் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ அடங்கிய 376 கிலோ விற்கும் அதிகமான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. https://athavannews.com/2025/1453436- இரசித்த.... புகைப்படங்கள்.
- திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
New York போஸ்ட் இலிருந்து.... சர்வதேசம் எங்கும் பேசு பொருளாகி உள்ள, அந்தத் பெடியனின... அந்தரங்க உறுப்பு. 😂 ஒரு நாள், சில வினாடிகள் செய்த வேலையால்... சர்வதேசப் பத்திரிகைகளில் இடம் பிடித்த... தற்குறி. 🤣- ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
சுத்துமாத்து சுமந்திரனின் தமிழரசு கட்சி, திருகோணமலையில்... புத்தர் சிலை போராட்டம் நடக்கும் போது, பொந்துக்குள் ஒளித்து இருந்து விட்டு, ஜனாதிபதியை சந்திக்க அடுத்த நாள், எல்லோரும் தவறாமல் வரிசை கட்டி போயிருக்கின்றார்கள்.- பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் : துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள்திணைக்களத்தினர் - களத்திற்கு விரைந்த தவிசாளர்கள்
சிறப்பான செயல். கிழக்கு இலங்கை தமிழருக்கு பாராட்டுக்கள். வடக்கில்.... விகாரை கட்டும் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, விகாரை திறந்த பின் போராடுவார்கள்.- முஸ்லிம் பெண் தாதியர் தமது கலாசாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
முஸ்லீம் உடையுடன்தான்.... தாதி வேலை செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கப் படாது. அப்படி என்றால்... வேலையை ராஜினாமா பண்ணி விட்டு, வேறு தொழில் செய்யப் போகலாம். சோனகருக்குத்தான்.... எல்லாத்திலும் நொட்டை பிடித்துக் கொண்டு இருக்கின்ற கண்டறியாத கிலிசு கெட்ட பழக்கம்.- யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
கட்டுநாயக்க விமான நிலையத்தில்... யாழ்ப்பாண தொழில் அதிபரை ஏமாற்றியவன் சிங்களவனாகத்தான் இருக்கும் என்று யநினைத்து வாசித்துக் கொண்டு போக கடைசியில்... அவன் தமிழன் என்று இருந்தது.- நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!
நாமல்.... இந்தப் பதட்டம் தான், உங்களின் பொய்களை, வெளிக் கொணர வைக்கிறது, நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விரிவான விசாரணையில் இருந்து இங்கிலாந்து மற்றும் இலங்கையில் இருந்து புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன, அவை நாமல் ராஜபக்ச வெறுமனே சட்டக் கல்லூரியில் சேர்க்கைக்குத் தகுதி பெறவில்லை என்பதைக் குறிக்கின்றன. @ExaminerLK மூலம் நிர்மலா கண்ணங்கர் மேற்கொண்ட விசாரணையின்படி, நாமல் ராஜபக்சவின் சட்டக் கல்வி தொடர்பான பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 🔍 வெளிவந்த முக்கிய தகவல்கள்: 1. அங்கீகரிக்கப்படாத பட்டம். நாமல் ராஜபக்சவின் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தில், அவரது பல்கலைக் கழகமான "சிட்டி யுனிவர்சிட்டி" சட்டக் கல்லூரியால் அங்கீகரிக்கப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் கிடைத்த தகவலின்படி, சட்டக் கல்லூரி "சிட்டி யுனிவர்சிட்டி" பட்டப் படிப்பை அங்கீகரித்தது 2009 அக்டோபர் 15 முதல் தான், இது ராஜபக்ச பதிவு செய்ததிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு ஆகும். 2. முழுமையற்ற விண்ணப்பம். சட்டப்பட்டப் படிப்பு வழியாக சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க, முழுமையான மதிப்பெண் பட்டியல் (டிரான்ஸ்கிரிப்ட்) மற்றும் பட்ட சான்றிதழ் (டிகிரி சர்ட்டிபிகேட்) ஆகிய இரண்டும் தேவை. ஆனால், சட்டக் கல்லூரியிடம் நாமல் ராஜபக்சவின் பட்ட சான்றிதழ் எப்போதும் கிடைத்ததில்லை, மதிப்பெண் பட்டியல் மட்டுமே கிடைத்துள்ளது. 2025 அக்டோபர் 3 ஆம் தேதி, நாமல் ராஜபக்ஷின் விண்ணப்பம் தொடர்பாக விடுக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) கோரிக்கைக்கு பதிலளித்த சட்டக் கல்லூரி, ராஜபக்சவின் கோப்பில் எந்தவொரு பட்ட சான்றிதழும் இல்லை என உறுதிப்படுத்தியது. அதற்கு பதிலாக, சட்டக் கல்லூரியிடம் 2009 இல் சிட்டி யுனிவர்சிட்டியால் ராஜபக்சக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் மட்டுமே உள்ளது. அக்கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருப்பது: “நீங்கள் பாடநெறியின் அனைத்து தேவைகளையும் மதிப்பீட்டு வாரியத்தில் நிறைவேற்றியுள்ளதால், பட்டம் in Law, Class Three (சட்டத்தில் இளங்கலைப் பட்டம், மூன்றாம் வகுப்பு) வழங்கப்படுகிறது என தெரிவித்து மகிழ்கிறேன்.” 1. ஒரு அசாதாரணமான பட்ட சான்றிதழ். நாமல் ராஜபக்ச இலங்கை சட்டக் கல்லூரியில் படித்த சான்றிதழை சமர்ப்பிக்காத போதிலும், அவர் அதை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (Master’s) விண்ணப்பத்திற்கு சமர்ப்பித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்த சான்றிதழில், ராஜபக்சக்கு சிட்டி யுனிவர்சிட்டியில் இருந்து "சட்டத்தில் கௌரவம் மற்றும் மூன்றாம் வகுப்பு (Honours in Law Class Three)" பட்டம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்ட சான்றிதழில் உள்ள கையொப்பத்தில் முரண்பாடு உள்ளது. •அது 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது. •ஆனால், கில்லீஸ் அவர்கள் அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இது தொடர்பாக கில்லீஸை கேட்டபோது அவர் கூறியதாவது: “நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பிறகு எனது கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட எந்த சான்றிதழையும் பற்றி நான் அறியேன்.” அந்த நேரத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர் கில்லீஸ் அல்ல, பேராசிரியர் ஜூலியஸ் வெய்ன்பெர்க் (Prof. Julius Weinberg) என்பதையும் சிட்டி யுனிவர்சிட்டி உறுதிப்படுத்தியது. (வலைத்தளச் செய்தி) Moorththy Dinu ################## ###################### சில பின்னுட்டங்கள்: Sinniah Selladurai கள்ளச் சான்றிதழ் ; கள்ள ஒப்பம்...? அடக் கேவலங் கெட்டவனே! நீயெல்லாம் ஒரு கட்சித் தலைவர்...? ஏன்டா!அவனவன் காறித் துப்புறான். அசிங்கமா ; வெக்கமா இல்லையா? ######### Reborn Visu Ranjith Guna லண்டனில் பட்டம் வாங்குவது கடையில் பொத்து வாங்குவது போல🤪 ######### Abdul Gaffoor Shihaabdeen இலங்கைல அதுவும் நாம பொறந்த மண்ணுல எடமில்லாம லண்டனுக்கு போயிருக்காரு சாரு பட்டம் உட. உடாங்கணக்குட ########## Nm Kisho Kizzo அதானே இங்கதான் கேனபயலுக என்றாலும் லண்டன்காரன் அறிவாளிதானே .. அவன் கொடுப்பானா சம்மா பட்டம்.. மாத்தி யோசிங்க மக்கா... ################ Moorththy Dinu Nm Kisho Kizzo மாதங்களை வேற மாத்தி இருக்கிறார்கள். ############ Senthurselvan Thuseeththa Ithu London kku theriyuma🤭 ########## Thambu Ramanathan இந்தச்சட்டத்தரணி எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்று இருக்கிறார். ################ Krishna Kri அங்க பணம் குடுத்தாலே பட்டம் குடுத்திடுவான்கள் Moorththy Dinu Krishna Kri இதில வேடிக்கை என்னெண்டா 2009 செப்டம்பர் 15 ஆம் தேதி "துணை வேந்தர் மால்கம் கில்லீஸ் (Malcolm Gillies, Vice Chancellor)" என்பவரால் கையொப்பமிடப்பட்டது. ஆனால், கில்லீஸ் அவர்கள் அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து 2009 ஜூலையில் பணி நிறுத்தம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.- கருத்து படங்கள்
நாடு ஒன்று, பார்வை இரண்டு.- முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே அரச இயந்தியரத்தை இயக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற கருப்பொருளில் தேசிய செயற்பாடு, இன்று தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் கடந்தா ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி – “போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவான நிதி ஈட்டப்படுகின்றது. திட்டமிடப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக்குழுவினர்அரசியல் தலைவர்களின் அடைக்கலத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்??? போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக்குழுவினர் இந்த நாட்டில் அரசியல் அடைக்கலம் மூலமே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர்.அதுதான் உண்மை .ஒரு காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் மத்தியசெயற்குழுக்களின் அதிகாரம் பாதாள உலகக்குழுக்களின் வசம் காணப்பட்டது. அதேபோல் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் அடங்கியிருந்தனர். நாம் இந்த இடத்தில் உறுதிபட ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. எந்தவொரு போதைப்பொருள் குற்றவாளிக்கும் அரசியல்அடைக்கலம் வழங்கப்படமாட்டாது. மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.இதில் மக்களின் எதிர்ப்பார்ப்பு தங்கியுள்ளது எனவே தலைவர்கள் என்ற ரீதியில் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது அதனாலேயே நாம்போதைப்பொருள் தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். ஆனால் இன்று சிலர் அதனை முடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.அனைவரும் ஒரு இலக்கினை நோக்கிபயணிக்கும் போது அவர்கள் இந்த சமுதாயத்தினை திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த வலையில் நாட்டு மக்கள் சிக்கமாட்டார்கள். நாம் இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்துவோம். போதைப்பொருள் மோசடியை நாம் இந்த நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்போம். இந்த செயற்பாடுகளில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் நாம் பாதுகாப்போம். அவர்களுக்காக நாம் முன்னிற்போம். நேற்று இரவும் போதைப்பொருளுடன் மீன்பிடிபடகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அந்த மீன்பிடி படகு இன்றுஇரவு கரைக்குகொண்டுவரப்படும்.கடற்படையினர் நாட்டின் கடற்பிராந்தியங்களில் போதைப்பொருள் கடத்தலைமுறியடிப்பதற்கு பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். இதேவேளை போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிராக பலர் பல சூழ்ச்சிதிட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.அரசாங்கத்தின் இந்த இலக்கை முறியடிப்பதே அவர்களின் நோக்கமாக அதற்காக மக்கள் எதிர்ப்பு பேரணிகள் போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்படலாம். https://athavannews.com/2025/1453398- ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி!
ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி! தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவ.23ம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார் எனவும் இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை எனவும் இதனால் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இதேவேளை, ஏற்கனவே, ”தென் ஆப்ரிக்காவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 20 உச்சி மாநாட்டில் எந்த அமெரிக்க அதிகாரியும் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1453416 - திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.