Everything posted by தமிழ் சிறி
-
வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும்; மார்ச் 12 இயக்கம்
தகவலுக்கு நன்றி ஏராளன்.
-
வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும்; மார்ச் 12 இயக்கம்
மார்ச் 12 இயக்கமா? ஏன்... அந்தப் பெயராய் வைத்தார்கள் என்ற தகவல் தெரியுமா.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
தமிழரசு கட்சிக்கு, சுமந்திரன்.... இறுதிக் கிரியை நடத்துகின்றார். 😂 டணக்கு.... டணக்கு... டாங்கு டக்கு..... 🤣- உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி அறிக்கை ஒன்று காணாமல் போய் விட்டதாம்.- பார் பெர்மிற் – நிலாந்தன்
- தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
சுமந்திரனும் வெளியே போனால் தான், தமிழரசு கட்சிக்கு நல்ல காலம். அதுவரை... வாய்ப்பில்லை ராஜா. 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவ்வளவு கொஞ்ச சனத்தொகைய வச்சிகிட்டு முதலிடம் வாறது ஒரு தனீ ரகம் தான். Sahad Rismy 😂 🤣- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
இந்திய விமான சாகச நிகழ்வு சோகம்: ஸ்டாலின் அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்! சென்னையில் நேற்று (06) நடைபெற்ற இந்திய விமானப்படையின் (IAF) விமான கண்காட்சியின் போது 5 பார்வையாளர்கள் இறந்ததுடன் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்திய விமானப் படையின் 92 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலட்சக்கணக்கான மக்கள் நெரிசல், அடிப்படை வசதிகள் மற்றும் கடுமையான வெப்பத்தில் போராடியமையினால் இந்த நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிகழ்வினை காண்பதற்கு சுமார் 16 இலட்சம் பேர் வருகை தந்திருந்தாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்சமயம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி விமானப் படை சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் திமுக அரசு தவறியுள்ளது. இதற்கு நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்தின் மீது அவர் நேரடியாக பழியை சுமத்தி கண்டனம் வெளியிட்டிருந்தார். அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் சம்பவத்தில் அரசு அலட்சியமாக செயற்பட்டதாக குற்றம் சாட்டியதுடன், சரியான வசதிகள் இருந்திருந்தால், இறப்புகள் மற்றும் காயங்களை தடுத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். மேலும், முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து பேசிய அண்ணாமலை, இந்த சம்பவம் தி.மு.க. நிர்வாகத்தின் முழுமையான தோல்வி என்றும் குற்றம் சாட்டினார். ஷெசாத் பூனவல்லா சென்னை விமான கண்காட்சியில் 5 பேர் உயிரிழந்தது மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது சோகம் அல்ல, இது ஒரு அரசு நடத்திய கொலை மற்றும் பேரழிவுக்கு திமுக அரசும், முதல்வரும் (மு.க.ஸ்டாலினும்) நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். மேலும் அரசின் வம்சம் மற்றும் ஊழலை உயர்த்துவதே இந்த சம்பவத்திற்கு காரணம். எனவே, இதற்கு திமுக அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பதுடன், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார். கனிமொழி சென்னையில் நடைபெற்ற விமானப்படை விமான கண்காட்சியில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் உயிரிழந்தது வருத்தமும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்.பி கனிமொழி திங்கள்கிழமை கூறியதுடன், கட்டுப்பாடற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் தான். ஆனால் அதை யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள். மா.சுப்பிரமணியன் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. சாகச நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். https://athavannews.com/2024/1402863- நாளையும் தீர்மானம் எடுக்க போவதில்லை – பெண்கள் கிடைக்கவில்லை – சுமந்திரன்
தமிழரசு கட்சிக்கு, சுமந்திரன்.... இறுதிக் கிரியை நடத்துகின்றார். 😂 டணக்கு.... டணக்கு... டாங்கு டக்கு..... 🤣- தலைவர் பிரபாகரனோடு அனுரவை ஒப்பிட வேண்டாம் 😡 | Thalaivar Prabhakaran - Anura | Pavaneesan
நமது ஆட்களுக்கு... எதை, எதனுடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தையே இல்லை. மைக் கிடைத்தவுடன்... கண்டதையும் உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கும் அறிவிலிகள். காணொளி இணைப்பிற்கு நன்றி நொச்சி.- தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
இருபத்தைந்து வருடத்துக்கு முன்னம் ஓய்வுக்கு போயிருக்க வேண்டி ஆள், இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தனது இனத்துக்கு செய்த சேவை பூச்சியம். ஆனால்.... தனக்கும் குடும்பத்திற்கும் அளப்பரிய சேவை ஆற்றியுள்ளார். 😂- கருத்து படங்கள்
- ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்! ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானமாகவும் தமிழ் ஊடகத்துறையில் மற்றுமொரு புதிய வருகையாக ஒருவன் பத்திரிகையின் முதல் பிரதி இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சு ஊடகத்துறையில் வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒருவன் பத்திரிகை தனது முதலாவது பிரதியுடன் இன்று வெளிவந்துள்ளது. பத்திரிகையின் முதற்பிரதி நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் விநியோகப்பணிகளும் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. அச்சு ஊடகத்துறையில் பல தசாப்த ஊடக அநுபவத்தினை கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் ஒருவன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்படுகின்றமை விசேட அம்சமாகும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செய்திகளின் மர்மங்களை ஆராயுந்து சரியான தகவல்களை தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒருவன் பத்திரிகை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பிரதி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வாசிப்பு பழக்கத்திற்கு ஆர்வம் காட்டுகின்ற தமிழ் மக்களுக்கு ஒருவன் பத்திரிகையின் வரவு மிகவும் மகிழ்ச்சியை தரும் என்பதில் எந்த ஜயமும் இல்லை என்பதை மிகவும் திடமாக கூறமுடியும். குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு செயற்படுகின்ற சில ஊடக நிறுவனங்களுக்கு மத்தியில் மிகவும் உண்மைத்தன்மையுடன் கூடிய தகவல்களுடன் ஒருவன் பத்திரிகை வாரந்தோறும் உங்கள் கைகளில் கிடைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் திறம்பட முன்னெடுத்துள்ளது. அத்துடன் அதிகாலையில் அனைத்து மாவட்டங்கிளிலும் தடையின்றி கிடைப்பதற்கும் ஒருவன் ஊடக வலை அமைப்பு பல திட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. https://athavannews.com/2024/1402684- நாளையும் தீர்மானம் எடுக்க போவதில்லை – பெண்கள் கிடைக்கவில்லை – சுமந்திரன்
நாளையும் தீர்மானம் எடுக்க போவதில்லை – பெண்கள் கிடைக்கவில்லை – சுமந்திரன் பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று(05) வவுனியாவில் கூடிய நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் நியமன குழுவானது இன்று வவுனியாவில் கூடி மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்து இருக்கின்றோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் எந்தெந்த இடங்களில் இருந்து வேட்பாளர்கள் வரவேண்டும் குறிப்பாக இன்றைய நிலையில் மாற்றத்தை இளைஞர் யுவதிகள், படித்தவர்கள் வரவேண்டும் என பெருவாரியான எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து எந்த விதமாக இந்த வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் பல சிந்தனைகள் இன்று பரிமாறப்பட்டன. எனினும் நாங்கள் இன்றைய தினம் எந்த மாவட்டம் தொடர்பிலும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை. நாங்கள் கடந்த முறை மத்திய செயற்குழுவிற்கு பின்னர் அறிவித்ததை போல திருகோணமலை மாவட்டம் அம்பாறை தேர்தல் மாவட்டம் சம்பந்தமாக விசேட கரிசனை ஒன்று இருக்கின்றது. இந்த இரு மாவட்டங்களிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையே பெற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ் கட்சிகள் எதிர் எதிராக போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதைப் போல இம்முறையும் அந்த மாவட்டத்திலும் திருகோணமலையிலும் இவ்வாறான ஒரு சாத்தியக்கூறு இருப்பதன் காரணத்தினால் அது குறித்து சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டி இருக்கின்றது. இந்த விடயத்தில் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் மிக முனைப்பாக பல கட்சிகளோடு பேசி சில நகர்வுகளை செய்திருக்கின்றார். அவரை சந்திப்பதற்காக நாங்கள் சிலர் செல்கின்றோம். அந்த விடயத்தை நாங்கள் வெற்றிகரமாக முடிப்போமாக இருந்தால் எங்களுடைய மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் அரசியல் குழு தீர்மானம் இன்றும் நாங்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தமிழரசு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் தான் நாங்கள் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம். ஆனால், திருகோணமலையிலும் அம்பாறையிலும் மற்ற கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒரு போட்டி இல்லாமல் தேர்தலை சந்திப்பதற்கான விடயங்கள் ஆராயப்படுகின்றன. அதனை நாங்கள் செய்து முடித்த பின்னர் நாளை மீண்டும் சந்தித்து வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் உடைய பெயர்களை ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்போம். எனினும் நாங்கள் நாளையும் இறுதி தீர்மானம் எடுப்போம் என்று கூற முடியாது. நாங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரியான வேட்பாளர்கள் சில இடங்களில் முன் வரவில்லை. இதேவேளை பெண்கள் பல இடங்களில் முன்வரவில்லை. பள்ளம் மேடு காடு எங்கு தேடியும் பெண்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் பல குறைபாடுகளை கூறுகின்றார்கள். அவர்களுக்கான நியமனங்களை நாங்கள் கொடுப்பதில்லை என்று. ஆனால் நாங்கள் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க தயாராக இருக்கின்ற போதிலும் வராத ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எனவே பெண்களுக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் ஒரு விசேட கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். தேர்தலில் வெல்லக்கூடிய எங்களோடு சேர்ந்து பயணிக்க கூடிய பெண்களை தயவு செய்து முன்மொழியுங்கள். அவர்களுக்கான இடங்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த தடவை அவ்வாறான ஒரு புதிய பரிமாணத்திலே மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வகையிலே பல புதிய ஆற்றல் உள்ள இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பளித்து நிச்சயமாக இடம் கொடுப்போம். அதற்கான தேடலையும் நாங்கள் செய்து வண்ணம் இருக்கிறோம். யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவனேசனுக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் பல கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றனவே என ஊடகவியலாளர் கேட்டபோது, எங்களுடைய மத்திய செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீளவும் இன்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்குப் பின்னர் தேர்தலிலே தோற்றவர்கள் இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள். ஆனால் சிறிதரணை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார்.எனினும் இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் அவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன். எனினும் ஸ்ரீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போட்டியிடுவார். என்னையும் அவரையும் யாழ் மாவட்டத்தில் கட்டாயமாக போட்டியிட வேண்டும் என சகல நியமன குழு உறுப்பினர்களும் கூறி இருந்தார்கள். அதற்கு அமைவாக நாங்கள் இருவரும் யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவோம். வெற்றியும் அடைவோம் என்று எதிர்பார்க்கின்றோம். எங்கள் இருவருக்கும் இது நான்காவது பாராளுமன்றம் எனினும் இன்னும் ஏழு பேரை நியமிக்க வேண்டும். மிகவும் ஆர்வமாக இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதற்கு நாங்கள் கருத்தாக கொண்டுள்ளோம் என தெரிவித்தார். https://athavannews.com/2024/1402737- மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்!
மாணவர்களின் பசி தீர்க்க உதயமாகும் லைக்கா ஞானத்தின் அல்லிராஜா நிறைவகம்! லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் செயற்றிட்டமான அல்லிராஜா நிறைவகம் செயற்றிட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவநர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதலில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவினை வழங்கும் சமுதாய சமையலறை திட்டம் “அல்லிராஜா நிறைவகம்” ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நாளாந்தன் பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் யா/ மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைகள் மாணவர்களுக்கான சத்துணவினை வழங்கும் வகையில் அல்லிராஜா நிறைவகம் கடந்த தினங்களில் நிறுவப்பட்டு உணவு வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்பாடுகள் பாடசாலை நாட்களில் தொடர்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மறவன்பிலவு சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு நிறை உணவு,பால் மற்றும் முட்டை வழங்கப்படுவதுடன், இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு மதிய உணவு வழங்கப்பட்டவுள்ளது. குறித்த செயற்பாட்டிற்காக சமயலறை லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக புனர்நிர்மானம் செய்யப்பட்டு பாடசாலை சமூகத்திம் 02.10.2024 செவ்வாய் அன்று கையளிக்கப்பட்டது. லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக மேற்கொள்ளப்படும் பணிகளில் அல்லிராஜா நிறைவகம் சிறப்பு மிக்கதொரு தனித்துவமான பணியாகக் கருதப்படுகின்றது, மேலும் பல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை ஊடாக “அல்லிராஜா நிறைவகம்” உருவாக்கம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும். https://athavannews.com/2024/1402778- உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை-ஜனாதிபதி! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார். அத்துடன் கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தியும் இருந்தார். ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் ஈஸ்டர் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தனர். இதேவேளை இந்நாட்டில் மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நம்புவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும் மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாதெனவும், வௌிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதாகவும், அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டுனெவும் தெரிவித்தார். இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்பு பட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு,ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1402795- ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
வீடு திரும்பினார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்காக ரஜினிகாந்த்துக்கு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், டிரான்ஸ்கேட்டர் முறையில் இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. ஒக்டோபர் 1 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நேற்றிரவு வைத்தியாசலையில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும், ரஜினிகாந்தை ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் நிலை முன்னேறியவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் பணியை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2024/1402581 ############# ############## ############## அப்பாடா.... ஆபரேஷன் சக்ஸஸ். 🙂- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
கவி அருணாசலம்..... நீங்கள் சங்கு கட்சியின் ஆதரவாளர் இல்லைத்தானே.... அவர்கள் சங்கை... யார் வைத்திருந்தால் உங்களுக்கு என்ன வந்தது. ஏன், முதலைக் கண்ணீர் வடிக்கின்றீர்கள். அது சிவில் சமூக செயல் பாட்டாளர்களுக்கும் அந்தக் கட்சியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்ட சில அரசியல் கட்சிகளுக்கும் உள்ள பிரச்சினை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள், உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாமே. தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், தமிழரசு கட்சியையும் துண்டு துண்டாக உடைத்துக் கொண்டிருக்கும் வக்கீல் சுமந்திரனை... விமர்சிக்க தெம்பு இல்லாத நீங்கள், சிறிதரனை விமர்சிக்கும் தார்மீக உரிமையையும் இழந்து விடுகின்றீர்கள். நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம். நித்திரை போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது என்பதற்கு இணங்க.... இது சம்பந்தமாக உங்களுடன் விவாதித்து எனது பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை முக்கிய பிற் குறிப்பு: தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில்.... சங்கு சின்னத்தில் நின்ற அரியநேத்திரனுக்கு கொடுத்த எனது ஆதரவானது வர ஜனாதிபதி தேர்தலின் போது.... இரண்டு லட்சத்து இருபத்தி ஆறாயிரம் வாக்குகள் பெற்ற திருப்தியுடன் நிறைவுக்கு வந்தது. எனது ஆதரவின் எல்லையை... புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன். நன்றி, வணக்கம். 🙏- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
சுமந்திரன் என்னும் கோடாலி காம்பு….. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, இப்போ… தமிழரசு கட்சியை சல்லி சல்லியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்.- கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது
சீனன் இலங்கைக்கு கடன் கொடுத்து தனது வித்தையை காட்டுகின்றான். வழக்கமாக இப்படியான வேலைகளை பாகிஸ்தான்காரனின் பெயரும் அடிபடும். இப்போ… அவர்கள் திருந்தி விட்டார்களா.- விண்ணைத் தொடும் தேங்காய் விலை
பதுக்கல் முதலாளிகள் பொருட்களின் விலைகளை உயர்த்தி, வரும் தேர்தலில் அனுரவின் கட்சிக்கு ஆப்படிக்கப் போகிறார்கள் போலுள்ளது.- உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி
- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.