Everything posted by தமிழ் சிறி
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பெரும் அரசியல் சாணக்கியர்கள் எல்லாரும் ஜேர்மனியில்தான் வசிக்கின்றார்கள். 😂 இன்னும்... கலந்து கொள்வார்கள். 🤣
-
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி! தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன். கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம். பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அநீதி,வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம். அவ்வறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும். தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றார். https://athavannews.com/2024/1406558
-
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரான சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், அங்குள்ள இலங்கையர் யாருக்காவது நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்தும் தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவுதம் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனானில் 7 ஆயிரம் பேர் வரையான இலங்கையர்கள் உள்ளார்கள் என்றும், இந்த வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதிவரை ஆயிரத்து 116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது அங்கு இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக லெபனானுக்கான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில் பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை சீராகும் வரை தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேநேரம், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் கடந்த காலங்களில் அறிமுகப்பட்டுள்ளதாகவும் அது, தொழில் அமைச்சுடன் இணைந்தே இது செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406575
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
சில சினிமாக்கள்… இடை வேளைக்குப் பிறகுதான் தூள் கிளப்பும். 🤣
-
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்.... தங்களுடைய ஆட்கள் இறந்ததற்கு அனுதாபமோ, கண்டனமோ தெரிவிக்க முடியாத... தொண்டையில்... முள்ளு சிக்கின மாதிரியான வலு இக்கட்டான நிலைமை. 😂 "ஊமை குத்து" என்று இதைத்தான் சொல்வார்கள். 🤣 ஜேர்மனியில் காணொளி தெரிகின்றது நுணா. ஒலி மட்டும் கேட்கவில்லை.
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
தெரியாத கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால்... கூச்சப் படாமல் கேளுங்கள். 😂 உங்களுக்கு விரிவான விளக்கம் தர காத்திருக்கின்றோம். 🤣
-
ரசிக்க... சில, ஹாலோவீன் (Halloween) சோடனைகள்.
- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
72 பேர் வேணும் என்றால், நோவை பார்க்க ஏலாதுதானே. 😃 நோவுக்கு... Pain relief குளிசைகள் போட்டு சமாளிக்க ஏலாதா. 😂 பத்து நாள் தானே... பக்கெண்டு போயிடும். 🤣- கருத்து படங்கள்
- ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நடத்தை தொடர்பில் விசாரணை
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நடத்தை தொடர்பில் விசாரணை. ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் கேள்விக்குரிய நடத்தை மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் அரசியல் நியமனங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். போகொல்லாகம தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், குறுகிய காலத்தில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு நபரையும் அரசாங்கம் பாதுகாக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406407- 2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!
2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1406438- சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு!
சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு! கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்து வந்த நிலையில் இந்தக் கருத்து வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் படி, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல் அச்சுறுத்தலின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் செவ்வாயன்று (29) நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் பெயரை சூளுரைத்தார் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சு இது குறித்து இன்னும் பதில் அறிக்கை வெளியிடவில்லை. சீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனப்படும் சுதந்திர தாயகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று கோருகின்றனர். இது தொடர்பில் 1980கள் மற்றும் 1990களில் இந்தியாவில் நடந்த கிளர்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2023 ஆம் ஆண்டு கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதர்களை கனடா ஒக்டோபர் நடுப்பகுதியில் வெளியேற்றியது. கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியாவும் உத்தரவிட்டது. ஜூன் 2023 இல் இந்தியாவால் காலிஸ்தானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட கனேடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில், இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா அக்டோபர் 13 அன்று கனடாவால் “ஆர்வமுள்ள நபர்” என்று அறிவிக்கப்பட்டார். https://athavannews.com/2024/1406465- ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு! வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது. பென்டகனின் அண்மைய மதிப்பீடு ரஷ்யாவில் 3,000 வட கொரிய பணியாளர்கள் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. உக்ரேனுடனான போரில் இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டலாம், இது ரஷ்ய படைகளை வலுப்படுத்தும் என்றும் பென்டகன் கூறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கையை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். இதேவேளை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ரஷ்யாவிற்கு வீரர்கள் அனுப்பப்படுவது பற்றிய ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பியோங்யாங் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், அது சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்று தான் நம்புவதாக கூறினார். https://athavannews.com/2024/1406382- சிரிக்கலாம் வாங்க
- தீபாவளி... சிரிப்புகள்.
- ரசிக்க... சில, ஹாலோவீன் (Halloween) சோடனைகள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
கண்ணும், கண்ணும்... நோக்கியா.- தீபாவளி... சிரிப்புகள்.
- ரசிக்க... சில, ஹாலோவீன் (Halloween) சோடனைகள்.
- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
இது, "வந்தால்.... சுல்தான், போனால்.... பக்கிரி" தியரி.- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
இனியும் காலம் கடந்து விடவில்லை. ”சுன்னத்து” செய்து விட்டு மதம் மாறலாம். 😂 நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை. உங்களுடைய பெயர்…. “காதர் 57” 🤣- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
மேலே... 72 இளம் கன்னிகள் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் கசக்கவா செய்யும். தாராளமாக உயிரை விடலாம்.- சிரிக்கலாம் வாங்க
- தீபாவளி... சிரிப்புகள்.
- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா! ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஈரானுடன் இணைந்த லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்புல்லா செவ்வாய்க்கிழமை (29) அதன் அடுத்த தலைவரை அறிவித்தது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நைம் காசிம் (Naim Qassem) ஹெஸ்புல்லாவின் புதிய தலைவராக இருப்பார். செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் நஸ்ரலே கொல்லப்பட்டார். லெபனான் மீதான இஸ்ரேலில் அண்மைய தாக்குதல்களில் பல மூத்த ஹெஸ்பொல்லா அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1406353Important Information
By using this site, you agree to our Terms of Use.
- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.