Everything posted by தமிழ் சிறி
-
சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு மீனை உண்ண.... பாம்புக்கும், கொக்குக்கும் போட்டி.- நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரை!
ஜனாதிபதி உரை ( தமிழில் ) ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறியது என்ன anura kumara thisanayakka- சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது!
சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது! சவுதி அரேபியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் (26)எண்ணெய் விலைகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் முதன்மையான மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் OPEC உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உற்பத்தியை உயர்த்த தீர்மானித்ததன் பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெ்ய் ஒரு பீப்பாய்க்கு $1.86 அல்லது 2.53% குறைந்து 71.60 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.02 அல்லது 2.90% குறைந்து 67.67 அமெரிக்க டொலர்களாக பதிவானது. சவுதி தனது அதிகாரப்பூர்வமற்ற எண்ணெய் விலை இலக்கான பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்கள் என்ற இலக்கை கைவிடத் தயாராக உள்ளது என்று இராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கொள்காட்டி தி பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது. இதன்படி, சவுதி அரேபிய அதிகாரிகள் டிசம்பரில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளனர், இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு எண்ணெய் விலை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. https://athavannews.com/2024/1401335- கருத்து படங்கள்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு கிடைத்த கெளரவம்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு கிடைத்த கெளரவம். 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய பயண விருதுகள் நிகழ்வில் (SATA) பயணிகள் தெரிவு விருதுகள் பிரிவின் கீழ் தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது” தெற்காசியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் விமான சேவை மற்றும் விருந்தோம்பலின் நிகரற்ற மரபு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் 85% சேவை செய்யும் விரிவான விமான அட்டவணையுடன், விமான சேவையின் அதிகார மையமாக விமானத்தின் நிலையை வலுப்படுத்துகிறது. SATA இன் வருடாந்திர நிகழ்வானது, தெற்காசியாவின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் பயணத் தொழில்களைக் கொண்டாடுகிறது மற்றும் 18 க்கும் மேற்பட்ட பிராந்திய சுற்றுலா நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியத்தின் மிகச் சிறந்த பயண விருதுகளில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. தொழில் வல்லுநர்கள் மற்றும் பயணிகள் இருவரின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகிறார்கள். இந்த விருதானது தொழில்துறையின் சிறப்பையும் வாடிக்கையாளர் திருப்தியையும் பிரதிபலிக்கின்றது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1401250- வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்.
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல். யாழ்., சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில், நீதிபதி ஜுட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வைத்தியர் அர்ச்சுனா தான், சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை மற்றும் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை போன்ற காரணத்தினால் வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டது. அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401274- பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு
பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு. கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401306- இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் விக்னேஸ்வரன் போட்டியிடமாட்டார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நவம்பர் 14 ம் திகதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடாத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் குறித்த தகவலை விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது. 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவான விக்னேஸ்வரன், 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாடா ளுமன்றுக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401319- பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழா -46 பேர் உயிரிழப்பு!
பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழா -46 பேர் உயிரிழப்பு! கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தனித்தனி நீரில் மூழ்கிய சம்பத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலத்தின் குறைந்தது 15 மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலனோர் சிறுவர்கள்/குழந்தைகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உயிரிழந்த சிறுவர்கள்/குழந்தைகள் எண்ணிக்கை 37 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உள்ளது. இதுகுறித்து மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தேடுதல் பணி நடந்து வருகிறது என்றும் இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1401300- கருணைக் கொலை "காப்ஸ்யூலில்" உயிரிழந்த பெண்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்!
கருணைக் கொலை "காப்ஸ்யூலில்" உயிரிழந்த பெண்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்! கருணைக் கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சர்கோ பாட் எனும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 64 வயதுடைய அமெரிக்க பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து – ஜெர்மனி எல்லைக்கு அருகில் ஒரு வனப்பகுதியில் உள்ள தி லாஸ்ட் ரிசார்ட் என்ற பெயர் கொண்ட ரிசார்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காப்ஸ்யூல் வடிவில் இருக்கும் குறித்த சர்கோ பாட் இயந்திரத்துக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து நைட்ரஜன் வாயு வெளியாகும் எனவும் இதனால் ஆக்ஸிஜனைக் குறைத்து உள்ளே இருப்பவர் சில நிமிடங்களிலேயே உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கப் பெண் ஒருவர் தற்கொலைக் காப்ஸ்யூலில் உயிரிழந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் பலருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது. மிட்வெஸ்ட்டைச் சேர்ந்த குறித்த பெண் கடுமையான நோயெதிர்ப்பு பிரச்சினையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் தற்கொலை சாதனத்தில் பிறரின் உதவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் பின்னணியில், சுவிஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (24) நான்கு பேரை கைது செய்தனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஷாஃப்ஹவுசனில் உள்ள பொலிஸார் அறிக்கையில், ஷாஃப்ஹவுசன் மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் உதவி செய்ததற்காக பல நபர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் பல நபர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட ஒரு மணி நேரத்திற்குள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காப்ஸ்யூல் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் உடல் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான நபர்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிடவில்லை. https://athavannews.com/2024/1401246- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்… பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற மதுபான அனுமதி கொடுக்கப் பட்டதாம். அதனைத்தான் இப்போ ரத்து செய்திருக்கின்றார்கள். பழைய அனுமதியுடன் இயங்கிக் கொண்டிருந்த மதுபானக் கடைகளில் ஒரு மாற்றமும் இல்லை.- விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
சுகாதார அமைச்சில் நடந்த ஊழலுக்கும், செய்த குற்றத்துக்கும்… உடனேயே தண்டனை அனுபவித்தது கெஹலிய ரம்புக்வெலதான். ஆனால் ஜனாதிபதி தேர்தல் தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு பிணையில் விட்டு விட்டார்கள். மற்றவர்களுக்கும்… தேடித்தேடி தண்டனை கொடுக்க வேண்டும். ஓருத்தனையும் தப்ப விடக் கூடாது. கடினமான பணி என்றாலும்.. இனி, மற்றவர்கள்… ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காமல் இருக்க இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.- ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
@ரசோதரன், @நீர்வேலியான் புதிய அரசாங்கத்தில் உள்ள மேல் மட்ட செல்வாக்கை பயன்படுத்தி… எனக்கு ஒரு Bar Licence எடுத்துத் தர முடியுமா. 😂 🤣 பிற்குறிப்பு: ஒரு Bar Licence மூன்று தொடக்கம் நான்கு கோடி ரூபாய் வரை விலை போகின்றதாம். 😁- விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
முந்தைய அரசின் வெறுப்புக்கு…. விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதமும். அதனை இந்திய நிறுவனத்துக்கு கொடுத்ததையும் சிங்கள மக்கள் ரசிக்கவில்லை. ஓரிரு முறை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.- உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
சரி... அப்படியே ஆகட்டும் தலைவா. 😂 🤣- முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
அரச வாகனங்களின் மொத்த எண்ணிக்கை: அவுஸ்திரேலியா - 8,000 கனடா - 23,000 இலங்கை - 82,194 ( ரணில் ஆட்சியில் ) Kunalan Karunagaran- உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
எல்லோரும் தமிழராக இருந்து கொண்டு.... தமது தாய் மொழியில் "சயிஸ" வை சொல்லாமல், வேற்று மொழிகளில் சொல்லிக் கொண்டு இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. 😂 @ஏராளன் மனிதன் போடும் சாணத்தைத்தான்... சயிஸ Scheiße என்றும், Shit என்றும் சொல்வார்கள். @Kandiah57 அதை "சனியன்" என்று சொல்வது கொடுமை. 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு இரவில்... வீதிக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய தோற்றம். ஸ்ரீதர் தியேட்டர் எப்ப காலியாகும்?- ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக முன்கூட்டி கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் உறுப்பினர் ஒருவருக்கு அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. மேலும் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர். 1977 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நாடாளும்னறம் கலைக்கப்பட்டதன் காரணமாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401192- உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
அப்ப நான்... திரும்ப பியர் குடிக்க தொடங்கவா.... 😂- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
இதுகள் எல்லாம் நாலு சுவருக்குள் நடக்கும் விடயங்கள். இதற்கெல்லாம் ஆதாரம் வைத்துக் கொண்டு தங்களின் எதிர்காலத்தை பாழாக்க மாட்டார்கள். பல இணையங்களில் உலாவிய செய்திகளே இவை. ஜனாதிபதி நேரடி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கும் போது அவர்களின் முகம் வெளியே வரும். அங்கஜன் இராமநாதன்.. தனது தந்தைக்கு புதுப்பிக்கப் பட்ட மதுபான அனுமதி கிடைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அந்தச் செய்தி யாழ்களத்திலும் இணைக்கப் பட்டு இருந்தது. மற்றவர்கள் அமசடக்கி கள்வர் போல் இதனைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கின்றார்கள். விரைவில் அவர்களின் சுயரூபம் தெரியவரும்.- மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!
மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401211- பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்!
பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்! இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்னை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது எனினும் கொள்கலன்னில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல் முறையாக வெளியிடாத காரணத்தினால் அவற்றை பெறுப்பேடுப்பதற்கு ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சு மறுத்து விட்டது. இது குறித்து காசா சுகாதார அமைச்சின் ஊடக அதிகாரியான இயாத் கதீஹ் தெரிவிக்கையில் அடையாளம் தெரியாத சடலங்களுடன் ட்ரக் வண்டி காசாவுக்குள் வந்தமை இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும் என்றும் இனிமேல் சுகாதார அதிகாரிகள் எந்த ஒரு உடலையும் அடையாளம் காணாத நிலையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேலியப் படைகள் நூற்றுக்கணக்கான உடல்களை அசுத்தமான நிலையில் காசாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதுடன் அவற்றில் பல சிதைந்த மற்றும் அடையாளம் காண முடியாத சடலங்களும் அடங்கும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது https://athavannews.com/2024/1401176 - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.