Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம் கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் எடுத்து சென்று கையளிக்கப்பட்டன. இவ் நிகழ்வில் ஆலய பிரதம சிவாச்சாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394116
  2. பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகர கத்திக்குத்து தாக்குதலில், இரு சிறுவர்கள் பலி! பிரித்தானியாவின் சவுத்போர்ட் நகர கத்திக்குத்து தாக்குதலில் (Southport stabbing attack) 2 சிறுவர்கள் பலி யாகி உள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியுள்ளார். பிரித்தானியாவின் கடலோர பகுதியில் அமைந்துள்ள சவுத்போர்ட் நகர ஹார்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், சிறுவர்களுக்கான நடன பயிற்சிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் டெய்லர் ஸ்விஃப்ட்-கருப்பொருள் நடன நிகழ்வின் போது (Taylor Swift-themed dance event) கல்லூரிக்குள் புகுந்த சிறுவனால் இந்த தாக்குதல் நடத்த்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக, வேல்ஸின் கார்டிஃப் நகரில் பிறந்து லங்காஷையரில் உள்ள பேங்க்ஸ் கிராமத்தில் வசிக்கும் 17-வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலாக இதை கருதவில்லை என முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் பலியான சம்பவத்திற்கு பிரித்தானிய மன்னரும், ராணியும், பிரதமரும் ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1394053
  3. புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣
  4. குமாராசாமி அண்ணை இணைத்த முதல் படத்தில், காப்பு மட்டும்தான் தெரிந்தது புலவர். 😁 அதுதான்…. ஆரெண்டு அறிய வேணும் என்று ஆவல் வந்தது. 🤣
  5. @ரசோதரன் இது தான்… கட்டுப் பணத்தை விகாரையில் விட்டுட்டு வந்த தேரரின் செய்தி. 😂
  6. மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔, தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣 கட்சியில் தனி ஒரு ஆளாக நின்று, ஜனாதிபதி ஆகிய பெருமை… உலகத்தில் எவருக்குமே கிடைக்காது. ஶ்ரீலங்கா ஒரு விசித்திரமான நாடு. 😂
  7. ஒரு தேரரும்… ஜனாதிபதி வேட்பாளாராக போட்டி போடுவதற்கு, கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு சென்ற போதுதான் தெரிந்தது… அவர் கட்டுக்காசு பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டாராம். 😂 திங்கள்கிழமை (இன்று) கட்டுவதாக சொல்லிவிட்டு வந்து விட்டாரம். இன்று கட்டினாரோ தெரியவில்லை. 🤣
  8. ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣
  9. ஐரோப்பியன் வாள்வெட்டு கோஷ்டி. 😂 எதை விதைத்தாயோ… அதைத்தான் அறுவடை செய்வாய்.
  10. நிழல் தரும் மரத்தை வெட்டி விட்டு, இப்போ அந்த மரத்திலேயே குடை பிடிக்கின்றார்கள்.
  11. ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள். நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள். பதுங்குவதாக இருந்தால் பாய்வதற்காக பதுங்குங்கள். ஆனால் ஒருபோதும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்துவிடாதீர்கள். (இன்று சர்வதேச புலிகள் தினம்.) தோழர் பாலன்
  12. ஆதவன் போட்ட படம் என்ற படியால்... நீங்கள் சொன்ன மாதிரியும் இருக்கும். 😂
  13. ஈழப்பிரியன்... தமிழரசு கட்சியின் சுமந்திரன் பிரிவு நடத்திய கூட்டத்துக்கு இவ்வளவு ஆக்கள் வந்ததே பெரிய விஷயம். சம்பந்தர் அய்யாவின் மரணச் சடங்குக்கு வந்தவர்களை விட, இங்கு ஆட்கள் அதிகமாக நிற்கிறார்கள்.
  14. சிங்கத்துக்கு... மாடு மாதிரி, நாலு காம்பு இருக்கும் என இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன். 😂 "டவுட்"டை... கிளியர் பண்ணினத்துக்கு, நன்றி சுவியர். 🤣
  15. பையா... எனக்கும் சிங்களம் புரியவில்லைத்தான். ஆனால்... கேலிசித்திரத்துக்கு மொழி புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தைப் பார்த்தே... ஓரளவு ஊகிக்கலாம். 🙂 எனக்கு விளங்கியபடி... பல நோய்களால் பீடிக்கப் பட்டு, நடக்கவே... முடியாத ஸ்ரீலங்காவுக்கு... மகளிர் அணியினர் ஆசிய கிண்ணத்தை எடுத்துக் கொடுத்ததன் மூலம், மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளனர். 😂 உங்களுக்கு இன்னும் புரிய வேண்டும் என்றால்... @விசுகு, @புங்கையூரன், @ரஞ்சித் ஆகியோர் உதவுவார்கள். 😂
  16. மாவை, ஸ்ரீதரன் போன்றோரின் படங்களை காணவில்லை. தமிழரசு கட்சி இரண்டாக பிரிந்து விட்டது போல் தெரிகின்றது.
  17. அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு! மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின், அலுவலகத்திற்கு இன்று காலை 10.00மணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393930
  18. கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்! கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், 1983 ஆம் ஆண்டு ஜூலை படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393922
  19. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 31 ஆம் திகதி அறிவிக்கப்படும்! -மஹிந்த அமரவீர. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை இன்றையதினம் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ரஜபக்சவிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பு – விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்னரும் இவ்வாறான பல சந்திப்புகள் இடம்பெற்ற நிலையில் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தன. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393921

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.