Everything posted by தமிழ் சிறி
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி!
தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி! கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார். கார்கில் போரில் வெற்றி பெற்று இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவில் ஏற்படுகின்ற பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான முழுத் தகுதியுடன் இராணுவ வீரர்கள் உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இந்திய பிரதமர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா மீதான தாக்குதல்கள் இன்றும் தொடர்வதாகவும், கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை என்றும் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியிருந்தார். இதேவேளை, கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் தலை வணங்குவதாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கார்கில் போரில் கிடைத்துள்ள வெற்றி என்பது, இந்திய வீரர்களின் துணிச்சலிலும் அசாதாரண வீரத்திலும் தங்கியுள்ளதாகவும், எனவே முழுதேசம் அவர்களுக்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நுழைந்ததையடுத்து, இடம்பெற்ற போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை தனதாக்கியிருந்தது. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393707- அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகள் சேதம்-ஒலிம்பிக் விழாவிற்கு பாதிப்பா?
அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகள் சேதம்-ஒலிம்பிக் விழாவிற்கு பாதிப்பா? பிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர் தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் புகையிர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவங்களுக்கு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது ஒலிம்பிக் விழாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1393721 ############ ################# #################### #############- புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
சில தொழில்கள் எமது கையை விட்டு அந்நியரிடம் போய் விட்டது என்றால்... அதன் தொழில் நுணுக்கங்களையும், நெளிவு சுழிவுகளையும், சந்தைப் படுத்தலையும் எமது சமுதாயம் மட்டுமல்ல அடுத்த தலைமுறை கூட மீண்டும் கைப்பற்றுவது முடியாத காரியமாக இருக்கும். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அந்த மக்களுக்கு யார் ஏற்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. கட்டிடத் தொழில், தச்சு வேலை போன்ற நுணுக்கமான வேலைகளை சிங்களவர் எடுக்கின்றார்கள். வியாபார ஆக்கிரமிப்பை முஸ்லீம்கள் செய்வதாக அறிய முடிகின்றது.- புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
காசி தீர்த்தம் என்பது.... சிலரின் உணர்வு, மதத்துடன் சம்பந்தப் பட்டது. அது ஒரு அடையாளம்.. அதில் உள்ள சுகாதாரத்தைப் பற்றி, நீங்கள் கதைப்பது விசித்திரமானது. அதை சுகாதார திணைக்களம் பார்த்துக் கொள்ளும். உங்களுக்கு ஏன் வீண் கவலை. 😂 🤣- புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
உண்மைதான் நிழலி. முன்பு இருந்த சமூக அக்கறையும், உழைக்க வேண்டும் என்ற பிரயாசையும் பலரிடம் இல்லையாம். காரணம் வெளிநாட்டு பணமும், தாமும் எப்படியாவது வெளிநாட்டுக்கு போய்விட வேண்டும் என்ற ஆசையினால்... எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பதால்.. சிங்கள / முஸ்லீம்கள் தமிழ் பகுதியில் உள்ள அந்த வெற்றிடத்தை பிடித்து வியாபாரம், சிறுதொழில் போன்றவற்றில் முன்னேறிக் கொண்டு போகின்றார்களாம். இது நமது நிலத்தையும், அடையாளத்தையும் நாமே... இழப்பதற்கு சமமானது.- இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
ஓகோ... சுமந்திரன், அவருக்கே உரிய பாணியில்... தனி "டிராக்கில்" போய், அமைச்சுப் பதவிக்கு இப்பவே... துண்டு போட்டு வைக்கிறார். 😂- புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
அட... நம்ம ஆட்கள் அவ்வளவு புத்திசாலிகளா. 😂 இவ்வளவு நாளும் எனக்கு தெரியாமல் போச்சே. 🤣- மலிபன் பிஸ்கட்
எங்களது காலத்தில்... வேலையில் ஓய்வூதியம் பெறும் வரைக்கும் பலருக்கும் சர்க்கரை வியாதி வந்ததில்லை. அப்படி இருந்தாலும் வெகு அரிதாகவே இருக்கும். காரணம்... கடின உழைப்பு, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என நினைக்கின்றேன். ஆனால் இப்போதெல்லாம்.... பாடசாலை மாணவர்களுக்கே சர்க்கரை வியாதி உள்ளது எனும் போது அதிர்ச்சியாக உள்ளது. அவர்களின் Fast Food உணவுகள், கொக்கோ கோலா போன்ற குளிர்பானங்கள், ஒரே இடத்தில் இருந்து கைத் தோலை பேசியை நோண்டுவதாக இருக்கலாம்.- மலிபன் பிஸ்கட்
நல்ல விடயம் சுவியர். ஒரு வயதுக்கு மேல்... கட்டாயம் நீங்கள் செய்வது போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வைத்தியரின் நேரடி பார்வைக்கு சென்று வருவது சிறப்பு. 👍 🙂- இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
மற்றப் பக்கம்... தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஸ்ரீதரன் போன்றவர்கள் வேறு முடிவில் உள்ளார்கள் போலுள்ளது. எப்படியோ... நல்ல புடுங்குப்பாடு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.- இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
இது இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழு முடிவா... அல்லது தான் தோன்றித்தனமாக அறிக்கை விடும் சுமந்திரனின் முடிவா என்பதை அறிய ஆவலாக உள்ளது. எப்படியோ தமிழரசுக் கட்சிக்கு, கடைசி ஆணி அடித்து... புதைகுழியில் மூட ஒரு ஆள் கிடைத்துள்ளது. அது விரைவில் நடக்கும் போலுள்ளது. 😂- புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
உப்பு வயலில், காசி தீர்த்தம் கலப்பதற்கு... இராணுவம், பௌத்த மதகுருக்கள் எல்லாருக்கும் ஏன் அழைப்பு கொடுத்தவர்கள். அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்? ஊரில் உள்ள சிறு கிராமங்களில் கூட வலிய இராணுவத்தையும், பௌத்த மதகுருமாரையும் அழைத்து விட்டு... அவன் விகாரை கட்டுகிறான் என்று புலம்பி என்ன பிரயோசனம். இவர்களே... அவர்களுக்கு வழி காட்டிக் கொடுக்கின்ற செயல் மாதிரி அல்லவா உள்ளது.- 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்
புதிய சாதனை நிகழ்த்திய அருந்தவராசா புவிதரனுக்கு, வாழ்த்துக்களும் பாரட்டுக்களும் உரித்தாகுக.- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
- மலிபன் பிஸ்கட்
உங்கள் கேள்வி... பக்கத்து இலைக்கு பாயாசம் போலுள்ளது.- மருந்தகத்தில் மரணசடங்கு
தொழில் முறை போட்டியில்.. அந்த மருந்தகத்தை பழிவாங்குகின்றார்கள் போலுள்ளது.- கோட்டபாய ராஜபக்ச ஒரு முட்டாள் – பெருமை பிடித்த மனிதன் – அதனால் தான் இறைவன் அவருக்கு யாருக்கும் கொடுக்காத நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலையை கொடுத்தான்
இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல.... இங்குள்ள துருக்கி, பாகிஸ்தான் எல்லாரிடமும் இந்தக் குணம் உள்ளது. வேலை இடத்தில் முதலாளியை பந்தம் பிடித்துக் கொண்டு காரியம் சாதிப்பார்கள். அவர் வேறு இடத்துக்குச் சென்றவுடன் கீழ்த்தரமாக கதைப்பார்கள். இதுகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். 😂- யாழ்.கொள்ளைக்காரி கைது
பின்னை என்ன செய்யிறது விசுகர். வசிப்பது அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர நாடு. பலரும் மதிக்கும் கௌரவமான பதவி, அதுகும் கோவிலில்... இப்படியான பெருமைகளை கொண்ட ஒருவன் செய்யும் வேலையா இது. உண்மையிலேயே ஆத்திரம் வருகின்றது. இவனால்... அந்தக் கோவிலுக்கும், கனடாவில் வசிக்கும் மக்களுக்கும்... 3000 டொலருக்காக கொள்ளையடிக்க முயன்றவன் என்ற கெட்ட பெயர். இவனை கோவில் தலைவராக தெரிவு செய்த மக்கள் முகத்தில் சேறை அள்ளி பூசிவிட்டு நிறைகிறான் இந்தப் பர * சி. எங்களது மக்கள் எவ்வளவு கேவலமான முன்னுதாரணங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்க வேதனையாக உள்ளது.- யாழ்.கொள்ளைக்காரி கைது
சென்ற வருடம் கனடாவில் வசிக்கும் ஒருவர்... அங்கிருந்து 50 கிலோ போதைப் பொருளை, ஒரு மரப் பெட்டியில் அடைத்து யாழ்ப்பாணத்துக்கு விற்க அனுப்பும் போது பிடிபட்டு விட்டது. நன்றாக உழைத்து சம்பாதிக்கக் கூடிய நாட்டில் இருந்து கொண்டு... ஊருக்கு போதை பொருளை அனுப்பி, அந்தக் காசில் வாழ நினைக்கின்ற கீழ்த்தரமான் மனிதர்களை கொண்டது எமது இனம். நினைக்கவே... அருவருப்பாக உள்ளது.- கோட்டபாய ராஜபக்ச ஒரு முட்டாள் – பெருமை பிடித்த மனிதன் – அதனால் தான் இறைவன் அவருக்கு யாருக்கும் கொடுக்காத நாட்டை விட்டு ஓடி ஒளிகின்ற கேவலமான நிலையை கொடுத்தான்
இந்த லூசு முபாறக் அப்துல் மஜித்... கோத்தபாயா பதவியில் இருக்கும் போது, அவரை இனி இலலை என்று புகழ்ந்து காக்கா பிடித்துக் கொண்டிருந்த ஆள். இப்ப பதவி இல்லை என்றவுடன் இகழ்ந்து பேசுது. எல்லா... முஸ்லீம்களும் ஏன் இப்படி இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்று நிலையான கொள்கை இல்லையா... இந்தப் பிழைப்புக்கு....- யாழ்.கொள்ளைக்காரி கைது
பயங்கர மாஃபியாக்கள் போல் 3000 டொலரை கொள்ளை அடித்திருக்கிறார்கள். 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவரிடமிருந்து கொள்ளை அடிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது. 2) கிளிநொச்சியை சேர்ந்த... ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட பெண்மணி... மூன்று அடியாட்களை அமர்த்துகின்றார். 3) அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு மீள பிரத்தியேக படகில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள். 4) யாழ்.கொள்ளைக்காரி... ஒன்றரை வருடமாக பிடிபடாமல் பொலீசுக்கு தண்ணி காட்டியுள்ளார். கேள்வி: 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவருக்கு இவர்கள் ஊருக்குப் போகும் விடயம் எப்படி தெரிந்தது. 2) இவர்கள் ஐயப்பன் கோவிலுக்குப் போன இடத்தில், இலங்கைக்கு செல்வதாக அவரிடம் தெரிவித்தார்களா... அல்லது வேறு ஆட்களுக்கு சொல்ல... அவர்கள் மூலம் இந்தச் செய்தி பரவி அவரின் காதுக்கு எட்டியதா? 3) அவர் கனடாவில் வசித்துக் கொண்டு, ஒரு பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு... 3000 டொலருக்கு ஏன் ஆசைப் பட்டார். ஊரில் கொள்ளையடித்தவர்களை சிங்கள போலீஸ் எப்படி கையாளப் போகின்றது என்று தெரியவில்லை. சிலவேளை இரண்டு பக்கமும் காசை வாங்கிக் கொண்டு வழக்கை இழுத்தடித்து காலப் போக்கில் மக்கள் அந்தச் சம்பவத்தை மறந்திருக்கும் நிலையில்... எல்லோரையும் விடுதலை செய்ய சந்தர்ப்பமும் உள்ளது. ஆனால்... முதலில் இந்த கனடா ஐயப்பன் கோவில் தலைவர் மீது கொலை முயற்சி, கொள்ளை போன்றவற்றை தூண்டியதாக கனடா பொலிசில் ஒரு முறைப்பாடு செய்து 50 வருசமாவது மறியலில் போட வேண்டும். ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ... உலகில் வெளியில் நடமாடவே அருகதை அற்றவன்.- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மேலும் ஜனாதிபதித் தேர்தல், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கயன மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் வஹாராதிபதி தம்மரதன தேரர் ஆகியோரும் களமிறங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இதேவேளை வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்கள் சார்பாக பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் திகதி இன்றையதினம் வெளியாகிய பின்னர் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1393680- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
கட்டுப்பணம் செலுத்தும் காலம் குறித்து வெளியான அறிவிப்பு! ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பணத்தை செலுத்துவது தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விபரங்களை வெளியிட்டுள்ளது. இன்று காலை 8.30 மணி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், 50 ஆயிரம் ரூபாவும் வேறு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தால், 75 ஆயிரம் ரூபாவாகவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்னநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1393683- யாழில் ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு
பல போராளிகள் மெல்ல, மெல்ல இறப்பதை கடந்த காலங்களில் காணக் கூடியதாக உள்ளது. இவர்களுக்கு மெல்லக் கொல்லும் நஞ்சு ஊட்டப் பட்டுள்ளதா என சந்தேகம் வலுக்கின்றது. சேகுவேராவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. - தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.