Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நம்மூரில்… அம்மிக் கல்லை தலையில் போட்டு, கணவனின் கதையை முடித்த சம்பவமும் நடந்து இருக்கு. 😁
  2. இறந்தவர்களுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை அறிவிக்கப் படவில்லை. உத்தரப் பிரதேசம் என்ற படியால்… சில ஆயிரங்களுடன் முடித்து விடுவார்கள். அத்துடன் அந்தச் சம்பவத்தை மக்களும் மறந்து விடுவார்கள். காத்திரமான நடவடிக்கை எடுக்காத வரை இந்தச் சம்பவங்கள் சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்துகள் போல் தொடர்கதை.
  3. ஆஹா… எதுகை, மோனையுடன் இதற்கும் ஒரு கவிதை. 😂 கவுன்சிலர் படும் வேதனையை எவரும் கண்டு கொள்ளவில்லை. 🤣
  4. அட... ஆமா. 😂 ஆர்வக் கோளாறில், பாய்ஞ்சு பாய்ஞ்சு வாசித்ததில் ஏற்பட்ட தப்பு. 🤣
  5. வெட்டு வாங்கியவர்... பயிற்சி மருத்துவராம். வெட்டு விழும் மட்டும்... எங்கை பிராக்கு பாத்துக் கொண்டு நிண்டாரோ. 🤣
  6. அந்தரங்க உறுப்பை வெட்டியவர், மருத்துவர் என்பதால்.... பக்குவமாகத்தான் வெட்டியிருப்பார். 😂 🤣
  7. திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் காதலன் மதுரா தொகுதியில் உள்ள கவுன்சிலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையில் , கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குறித்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார். எனினும், பின்னர் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் திருமணத்திற்கு வரவில்லை. அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதற்கமைய , கைதானவர் ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390656
  8. முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி! முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக பயிரிடப்பட்டு வருகின்றது. இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும், இதன்மூலம் கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொக்கோவில் அதிகளவு இலிப்பிட்டு, புரதம், மாப்பொருள், நார்பொருள் மற்றும் அத்தியவசியமான அமினோ அமிலங்கள் என்பன காணப்படுவதால் கொக்கோ பயிர் செய்கையை வடமாகாணத்தில் விஸ்தரிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390569
  9. பிரான்ஸில் வெடித்தது கலவரம்! பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்.என்.கட்சியின் மரைன் லெ பென் (Marine Le Pen) தெரிவித்துள்ள அதேநேரம், பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான் அனைத்து பிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்.என். கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இதற்கு எதிராக தீவிர இடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரிசில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதால், அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டுள்ள சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பரீசின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390487
  10. முள்ளிவாய்க்காலில் சிங்களம் கொன்று குவித்த தமிழர்களின் இரத்தம் காய முதல், தமிழ் மக்களின் சுயகௌரவத்திற்கு இழுக்கு தேடும் வகையில்... சம்பந்தன், சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்த காட்சி.
  11. அம்பாறையில்…. பியசேன என்ற சிங்களவனை தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வைத்ததும் சம்பந்தர்தான். அந்தச் சிங்களவன் வெற்றி பெற்ற பின்… சிங்களக் கட்சிக்கு தாவிப் போன கூத்தும் இவர் கண்முன்னேதான் நடந்தது.
  12. இவ்வளவிற்கும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும்… தனது சொந்த ஆசையை… மட்டும், நிறைவேற்றிக் கொண்டார். அடுத்த தீபாவளிக்குள் தீர்வு, அடுத்த பொங்கலுக்குள் தீர்வு என்று சொல்லிச் சொல்லி... தமிழ் மக்களை நம்ப வைத்த அரசியல்வாதி மறைந்தார்.
  13. 91 வயது வரை அரசியலில் இருந்தும்…. தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத தோல்வியுற்ற அரசியல்வாதியாக காலமாகிவிட்டார்.
  14. உயிரிழந்த தங்காலை மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு! கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மீனவர்களும் சிங்கப்பூர் வணிகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டெவோன் 5 என்ற மீன்பிடிப் படகின் மீனவர்களே இந்த அவலநிலையை எதிர்கொண்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அவசர முதலுதவிக்கான வழிமுறைகளை மருத்துவக் குழுக்கள் வழங்கியுள்ளதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ளதால் அவர்களை மீட்க மற்றொரு கப்பலை கடலுக்கு அனுப்ப போதிய கால அவகாசம் இல்லை என்றும் அவர் கூறினார். அவர்களை அருகில் உள்ள கப்பலில் ஏற்றி கரைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். படகு இலங்கை கடற்கரையில் இருந்து 320 கடல் மைல் தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1390359
  15. மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்.
  16. தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்! நேற்று 29 ஆம் திகதி வவுனியா விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைக்கப்படும் மக்கள் அமைப்பு சந்திப்பை ஒழுங்குபடுத்தியது. இதில் தமிழ் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்ளும் தமிழ் தேசிய கட்சிகள் 7 வருகை தந்தன. கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையில் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை எழுதுவது மேற்படி சந்திப்பின் நோக்கம். காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நடந்த சந்திப்பின் முடிவில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை இருதரப்பாலும் எழுதப்பட்டு,ஏற்றுக் கொள்ளப்பட்டது.அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொதுக் கட்டமைப்பை தமிழ்த் தேசியப் பேரவை என்ற பெயரில் அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.கொள்கைளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைத்தாத்திடும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு அடுத்த மாதம் 6 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்துக்குள் மூன்று கட்டமைப்புப் பெயர்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. முதலில் வவுனியாவில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி கூடிய பொழுது அது சிவில் சமூகங்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்டது.அதே கூட்டிணைவு பின்னர் அதிகளவு குடிமக்கள் சமூகங்களை இணைத்துக் கொண்டு தன்னை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புகளின் மூலம்,பலப்படுத்திக் கொண்டு,தன் பெயரை தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அழைத்துக் கொண்டது. அந்தப் பொதுச்சபையானது தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இறங்கி சிறிய மற்றும் பெரிய சந்திப்புகளை நடத்தி வருகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தறிவதும் கருத்துக்களைப் பரப்புவதும் சந்திப்புகளின் நோக்கம் ஆகும். மேற்படி தமிழ் மக்கள் பொதுச்சபையானது நேற்று கட்சிகளோடு இணைந்து ஏற்படுத்திக் கொண்ட பொதுக் கட்டமைப்புக்கு தமிழ்த் தேசியப் பேரவை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்பேரவையானது எதிர்காலத்தை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தத் தேவையான உப கட்டமைப்புகளை உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவையில் மக்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சம அளவில் இருப்பார்கள். அதுபோலவே அப்பொதுக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படும் உபகட்டமைப்புகளும் சம அளவுக்கு மக்கள் அமைப்பை சேர்ந்தவர்களையும் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டிருக்கும். இந்த உபகட்டமைப்புகளில் ஒன்றுதான் யார் பொது வேட்பாளர் என்பதனைத் தீர்மானிக்கும். மற்றொரு கட்டமைப்பு பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும். மற்றொரு கட்டமைப்பு பிரச்சாரப் பணிகளைத் திட்டமிடும், முன்னெடுக்கும். மற்றொரு கட்டமைப்பு தேர்தல் நிதியை நிர்வகிக்கும். இவ்வாறு கட்டமைப்புகளை உருவாக்கி அக்கட்டமைப்புகளுக்கு ஊடாக ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவை என்று அழைக்கப்படும் புதிய கட்டமைப்பானது ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையில் அது பரிசோதிக்கப்பட்டிருக்கின்றது. 2014க்குப் பின் தமிழ் மக்கள் பேரவையானது கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் கொண்ட ஒரு ஹைபிரிட் வடிவத்தில் உருவாக்கப்பட்டது.அதன் இணைத் தலைமைகளாக மக்கள் பிரதிநிதிகளும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத சிவில் சமூகத்தில் இருந்து வந்தவர்களும் காணப்பட்டார்கள். அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு அந்த காலகட்டத்தில் ஒரு தேவை இருந்தது. அக்கட்டமைப்பு ,அதாவது தமிழ் மக்கள் பேரவையானது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு தமிழ் அரசியலில் அதிகரித்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இரண்டு எழுக தமிழ்களை நடாத்தியது. அது மட்டுமல்ல, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்குத் தேவையான முன்மொழிவையும் முன் வைத்தது. அம் முன்மொழிவானது கடந்த 15 ஆண்டுகளிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் முக்கியமானது.அது மக்கள் பிரதிநிதிகளும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத சிவில் சமூகங்களும் இணைந்து தயாரித்த ஒரு முன்மொழிவு என்ற அடிப்படையில் அதற்கு ஒரு காலம் முக்கியத்துவம் உண்டு.உள்ளடக்க முக்கியத்துவம் உண்டு. அந்த முன்மொழிவு இப்பொழுதும் செல்லுபடியாகக்கூடியது. தமிழ் மக்கள் பேரவையானது பெருமளவுக்கு பிரமுகர் மைய அமைப்பாக இருந்தது. மேலிருந்து கீழ்நோக்கிக் கட்டப்பட்டது. அப்பிரமுகர்களில் ஒருவராக இருந்த விக்னேஸ்வரன் ஒரு கட்டத்தில் ஒரு புதிய கட்சியை அறிவித்ததோடு தமிழ் மக்கள் பேரவை அதன் மகிமையை இழக்கத் தொடங்கியது. மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி பேரவைக்குள் அங்கம் வகித்த கட்சிகள் ஒரு பொது உடன்பாட்டைக் காணத்தவறிய பின்னணியில், தமிழ் மக்கள் பேரவையானது படிப்படியாக இறந்து போய்விட்டது. எனினும் அது அதன் இறுதி காலகட்டத்தில் உருவாக்கிய ஒரு கட்டமைப்புத்தான் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு ஆகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு உபாயத்தை கையாள வேண்டும் என்பதைக் குறித்து ஆராய்வதற்காக அப்படி ஒரு சுயாதீனக் குழுவை தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியது. அச்சுயாதீனக் குழுவானது, ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை அக்குழு சந்தித்தது. சில கட்சிகள் அக்கோரிகையை ஏற்றுக் கொண்டன. சில கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஒரு கட்சி தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போவதாகக் கூறியது. அப்படிப்பட்டதோர் பின்னணியில், சுயாதீன குழுவானது ஒரு கட்டத்துக்கு மேல் முன்நகர முடியவில்லை.அது தனது அவதானிப்புகளையும் அனுபவங்களையும் ஓர் அறிக்கையாக வெளியிட்டதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எனினும் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற விடயத்தைப் பொறுத்தவரையிலும் அதை ஒப்பீட்டுளவில் செயல் பூர்வமாக முன்னெடுத்த ஒரு கட்டமைப்பு என்று பார்த்தால், அது மேற்சொன்ன சுயாதீனக்குழுதான். சிவாஜிலிங்கம் குமார் பொன்னம்பலம் போன்றவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் பொது வேட்பாளர்கள் அல்ல.அவர்களை ஒரு பொதுக் கட்டமைப்பு முன் நிறுத்தவும் இல்லை.ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவானது பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. அச்சுயாதீனக் குழு தொடங்கிய வேலையைத்தான் அண்மை மாதங்களாக குடிமக்கள் சமூகங்களும் சில கட்சிகளும் சில செயற்பாட்டாளர்களும் இணைந்து முன்னெடுத்து வருகிறார்கள். அந்த முயற்சியின் ஒரு கட்டமாக முதலில் சிவில் சமூகங்கள் தங்களுக்கு இடையே ஒரு கூட்டிணைவை ஏற்படுத்தின. அடுத்த கட்டமாக அவை தம்மை ஒரு மக்கள் அமைப்பாக பிரகடனப்படுத்தின. அடுத்த கட்டமாக அந்த மக்கள் அமைப்பானது கட்சிகளோடு ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றது.அந்த உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புக்கு இப்பொழுது தமிழ்த் தேசியப் பேரவை என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் அரசியலில் மூன்று பெயர்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இம்மூன்று பெயர்களும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் மக்கள் அமைப்புகள், தொடர்ச்சியாகவும் கட்டமைப்பு சார்ந்தும் திடசங்கற்பத்தோடும் முன்னேறி வருகின்றன என்பதுதான் அது. அவ்வாறு புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது மக்கள் அமைப்புக்கள் தீவிரமாக, விசுவாசமாக வினைபுரிகின்றன என்பதனைத் தான் காட்டுகின்றது. ஒரு கட்டமைப்பிலிருந்து மற்றொரு கட்டமைப்பு பிறப்பது என்பது ஓர் அரசியல் கூர்ப்பைக் காட்டுகின்றது. கட்டமைப்புக் கூர்ப்பைக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வாழ்வில் குறிப்பாக அரசியலில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கப்படுவது குறைவு என்ற விமர்சனம் உண்டு. அருவமாக சிந்திப்பது, கற்பனையில் திழைப்பது, இலட்சிய வாதமாகக் கதைப்பது போன்றவற்றுக்கும் அப்பால்,கட்டமைப்பு சார்ந்து செயல்படும் பண்பு மிகப் பலவீனமாகவே உள்ளது.கட்டமைப்புகளை உருவாக்கினால் தான் வேலை முன் நகரத் தொடங்கும்.எல்லாவற்றிக்கும் ஒரு கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் இருக்க வேண்டும். ஒரு தமிழர் தனக்கு ஒரு வீட்டைக் கட்ட முற்பட்டால், முதலில் அவர் வாஸ்து சாஸ்திரம் பார்க்கும் ஒருவரிடம் போவார். அவருடைய ஆலோசனைப்படி வீட்டை எங்கே கட்ட வேண்டும்? எப்படி அறைகளை அமைக்க வேண்டும்? போன்ற விடையங்களைத் தெரிந்து கொள்வார். அதன்பின் அவர் எங்கே போக வேண்டும்? ஒரு கட்டிடப்படக் கலைஞரிடம் போக வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் அவ்வாறு கட்டிடப்பட கலைஞர்களிடம் போவது கிடையாது. அதற்குச் செலவு அதிகமாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். ஆனால் அதற்குரிய துறை சார் ஞானம் கட்டிடப்பட கலைஞரிடம் தான் இருக்கும். ஒரு வீட்டைக் கட்ட விரும்பும் நபர் எதைக் கற்பனை செய்கின்றாரோ, அல்லது எதை மனதில் படமாக வரைந்து வைத்திருக்கின்றாரோ, அதனை தூலமாக, அதற்கான தொழில் நுட்ப மொழியில் வரைவதற்கு துறை சார்ந்த நிபுணத்துவம் தேவை. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அவ்வாறான துறை சார்ந்த நிபுணத்துவத்தை அணுகுவதில்லை. செலவு மட்டும் ஒரு காரணம் அல்ல.அது தொடர்பான கட்டமைப்பு சார்ந்த சிந்தனை குறைவு என்பதும் ஒரு காரணம் தான். அதன்பின் வீட்டுக்குரிய கட்டுமானத் திட்டத்தை வரையும் பொழுதும் அங்கே துறை சார் நிபுணத்துவம் பெறப்படுவது குறைவு.வீட்டு உரிமையாளரும் மேசனும் இணைந்து திட்டங்களைப் போடுவார்கள். படங்களை வரைவார்கள். அவர்களுடைய கற்பனை தான் முடிவில் வீடாக மாறும். இந்த விடயத்தில் அதாவது ஒரு வீட்டைக் கட்டும் விடயத்தில் அதற்குரிய தொழில்சார் நிபுணத்துவத்தை பெறுபவர்கள் மிகக் குறைவு. குறிப்பாக பண வசதி படைத்தவர்கள்தான் அதைச் செய்வது உண்டு.ஆனால் வசதி குறைந்தவர்கள் வாஸ்து விவகாரத்துக்கு மட்டும் ஒரு துறை சார் ஆளைத் தேடி போவார்கள்.மற்றும்படி கட்டிடப்பட கலைஞராகவும் கட்டடத் துறைசார் பொறியியலாளராகவும் எல்லாமுமாகவும் மேசனும் வீட்டுக்காரருமே தொழிற்படுவார்கள். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் வீடு கட்டுகிறார்கள். இதே ஒழுக்கத்தை பொது வாழ்விலும் பல விடயங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.குறிப்பாக அரசியலில்,கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கின்ற, கட்டமைப்புகளுக்கு ஊடாக தொழில் புரிகின்ற போக்கு மிகப் பலவீனமாகவே இருந்து வருகின்றது. இந்த பலவீனமான ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முற்படும் தரப்புகள் எல்லாவற்றையும் கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திப்பது என்பது முன்னேற்றகரமானது.இக்கட்டமைப்புகளில் ஆரம்பகட்டப் பலவீனங்கள் இருக்கலாம்.ஆனால் அவை பெரும்பாலும் ஜனநாயக முறைக்கூடாகத் தெரிவு செய்யப்பட்டவை.பொறுப்புக்கூறும் பண்புமிக்கவை. நீண்டகால நோக்கில் திட்டமிடப்படுகின்றவை. இப்படிப்பட்ட கட்டமைப்புக்கள் வினைத்திறனோடு செயல்படுமாக இருந்தால், எதிர்காலத்தில் தமிழரசியலானது அறிவுபூர்வமான, கட்டமைப்பு சார்ந்த,ஒரு புதிய பண்பாட்டை வளர்த்துக் கொள்ளும் என்று நம்பலாம். https://athavannews.com/2024/1390292
  17. பலவித வேலைகளுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியின் கேள்விக் கொத்தை தயாரித்து, உடனுக்குடன் புள்ளிகளை வழங்கிய @கிருபன் ஜீக்கும், போட்டியில் முன்னிலையில் வந்த @பிரபா, @ஈழப்பிரியன், @கந்தப்பு விற்கும்… போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றைய உறவுகளிற்கும்… போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன், @suvy ஆகியோருக்கும்… 1700 பதிவுகளுக்கு மேல், 70 பக்கம் தாண்டி பார்வையிட்ட 55,000 பார்வையாளர்களுக்கும், யாழ் களத்திற்கும் நன்றிகள். 🙂
  18. வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம். தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட டெவோன் என்ற மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை வெளிநாட்டு மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளனர். இதன்போது, குறித்த 06 மீனவர்களும் சுகயீனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அவர்கள் அறிவித்ததாகவும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1390244

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.