Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஐக்கிய அமெரிக்கா பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டி உலகக் கிண்ணப் போட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
  2. இலங்கையில் கால் பதிக்கும் ‘ஸ்டார் லிங்க்‘ இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ‘ஸ்டார் லிங்க்‘ நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று முதல் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செய்மதி தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகளைப் பெற்று, தொழில்நுட்பத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறோம். இதுவரை கோபுரங்கள் ஊடாக வழங்கப்பட்ட குறைந்த அளவிலான இணைய வசதிகளுக்குப் பதிலாக, இந்த செய்மதி தொழில்நுட்ப இணைய வசதி மூலம் எங்கிருந்தும் இணைய வசதியைப் பெற முடியும். இதன் ஊடாக தொழில்நுட்பத் துறையில் மாற்றம் ஏற்படப் போகிறது. மாணவர்கள், ஆய்வாளர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு இந்த இணையதள சேவை பெரும் வசதியாக அமையும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணைய வசதியையும் பெற முடியும். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 22 ஆவது பிரிவின் கீழ், செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு இணைய வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள், மீனவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இணைய சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிவாரணப் பொதியை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டும்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 2000 “Starlink” வலையமைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386470
  3. கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி: விமான நிலையத்தில் பரபரப்பு. நடிகையும் அரசியல் வாதியுமான கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் டெல்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகார் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரியான குல்வீந்தர் கவுர் திடீரெ கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத கங்கனா அதிர்ச்சியில் உறைந்தார். இதனையடுத்து அவருடைய உதவியாளர்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் அந்த பெண் பொலிஸ் அதிகாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் கங்கனா சோதனையை முடித்து கொண்டு விமானம் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பெண் பொலிஸ் அதிகாரி குல்வீந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கங்கனாவை அறைந்தது ஏன்? என குல்வீந்தர் கவுர் கூறும் வீடியோவொன்று தற்போது சமூக வலைத் தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில் “ரூபாய் 100 அல்லது 200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக கங்கனா தெரிவித்திருந்தார் எனவும், டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் தனது அம்மாவும் ஒருவர்” எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த வீடியோவானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386517
  4. இணையத்திலை... பொண்ணு பார்க்கிறது தப்பில்லை. அதுக்கு முன்னாடி... 😂
  5. ரெலிபோனுக்கு பக்கத்திலைதான்... இருக்கிறன். 🤣 இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை. 😂
  6. நம்மளைப் போல்... அரைகுறையாக இருந்திட்டால் எப்பவும் பாதுகாப்புதான். 😂 🤣
  7. பெரும்பாலான ஜேர்மனியர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக விருப்பு உடையவர்கள். அவர்களிடம் இந்த சிரிய, ஆப்கானிய முஸ்லீம் குரங்குகள்... தகாத முறையில் நடப்பது மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விடயம். துருக்கியர் கூட... இதனை கண்டிக்காதது அவர்கள் இதனை ஆதரிக்கின்றார்கள் என்றே கருத வேண்டி உள்ளது.
  8. ஊருக்கு உபதேசம் சொல்லும் பல்லி, கூழ் பானைக்குள்ளை விழுந்த கதையாய் கிடக்கு. 😂
  9. இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
  10. யாழில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு! குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது ”இதுவரை காலமும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ”ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது குறித்தும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் பொதுச்சபை கூடி தேவையான முடிவுகளை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1386322
  11. பொது வேட்பாளர் குறித்த முக்கிய கலந்துரையாடல்! ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், இணை ஒருங்கிணைப்பாளர் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1386392
  12. போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்! இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக, உயர் ரக விண்கலமான “ஸ்டார்லைனரில்” விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, போயிங் நிறுவனத்தின், ‘ஸ்டார்லைனர்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட் நேற்று (05) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ‘அட்லஸ் 5’ விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், இன்றிரவு (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இதில், 58 வயதுடைய இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், மற்றும் நாசாவின் மூத்த விண்வெளி வீரரான 61 வயதுடைய புட்ச் வில்மோர் பயணித்துள்ளனர். போயிங் நிறுவனத்தின், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இதுவாகும். அதன்படி, போயிங் நிறுவனத்தால் ஏவப்பட்ட புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செய்யும், முதல் விண்வெளி வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். இவர்கள், 25 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1386395
  13. இந்திய தேர்தல் ஆணையத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை கண்டியளோ. 😂 வீரப் பையன் சொன்னால் சரியாக இருக்கும். நன்றி பையா.... 👍🙂
  14. ஒரே இடத்தில் இருந்தால்…. இடம் பிடிபட்டு, ஒளிக்க வசதியாய் போய்விடும் என்று போட்டி நடத்துபவர்களுக்கு தெரிந்து இருக்கு. சில காலத்துக்கு முன் அமெரிக்கா பாவித்த சிறிய போர்க் கப்பல் ஒன்றை ஶ்ரீலங்காவுக்கு அன்பளிப்பாக கொடுத்தது. அந்தக் கப்பலை அமெரிக்காவில் இருந்து ஶ்ரீலங்காவுக்கு கொண்டு வர அங்கிருந்து 32 கப்பல் படையினர் போனவர்கள். அதில் அரைவாசிக்கு மேல் அமெரிக்காவில் காணாமல் போய் விட்டார்கள். 😂🤣
  15. விளையாட்டுப் போட்டி முடிவதற்குள்… ஶ்ரீலங்கா வீரர்கள் ஊருக்கு திரும்பிப் போகாமல் அமெரிக்காவில் தங்க ஒளித்து திரிவார்கள். பார்த்துக் கொள்ளுங்கோ….
  16. இல்லயெண்டால்.... கப் ஸ்ரீலங்காவுக்குத்தான். 🤣
  17. இலங்கை போர் தொடர்பாக பிரித்தானியா விடுத்துள்ள வேண்டுகோள்! இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர் குற்ற சம்பவங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத தகவல்களை கொண்டிருப்பவர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர், தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொமாண்டர் டொமினிக் மர்பி (Commander Dominic Murphy) தெரிவித்துள்ளார். தமது விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த மிகக் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளின் முன்னேற்ற செயற்பாடுகளின் அடையாளமாக இது கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தகவலை வழங்க போர் குற்றங்கள் குழுவின் மின்னஞ்சல் முகவரியான SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. அனுப்பி வைக்க முடியும் எனவும் அல்லது +44 (0)800 789 321 என்ற இலக்கங்களின் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியன்று தெற்கு லண்டனில் உள்ள முகவரியில் 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1386255
  18. கூட்டணி ஆட்சியில் தங்கியுள்ள பாஜக – நிபந்தனை இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது. எனினும், இந்த தேர்தலில் பா.ஜ.க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜ.க ஆட்சியமைப்பதில் கூட்டணிகளின் ஆதரவையே தங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பா.ஜ.க விற்கு கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை விதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியில் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தின் சந்திரபாபு நாயுடுவின் சரத்பவார் தெலுங்குதேசம் மற்றும் பீகார் மாநிலத்தின் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகள் நிபந்தனைகள் விதிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக இந்த இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த கோரிக்கையை, தற்போது ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க நிபந்தனைகளாக விதித்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கானாவில் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. https://athavannews.com/2024/1386184

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.