Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பலவித வேலைகளுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியின் கேள்விக் கொத்தை தயாரித்து, உடனுக்குடன் புள்ளிகளை வழங்கிய @கிருபன் ஜீக்கும், போட்டியில் முன்னிலையில் வந்த @பிரபா, @ஈழப்பிரியன், @கந்தப்பு விற்கும்… போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றைய உறவுகளிற்கும்… போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன், @suvy ஆகியோருக்கும்… 1700 பதிவுகளுக்கு மேல், 70 பக்கம் தாண்டி பார்வையிட்ட 55,000 பார்வையாளர்களுக்கும், யாழ் களத்திற்கும் நன்றிகள். 🙂
  2. வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம். தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட டெவோன் என்ற மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை வெளிநாட்டு மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளனர். இதன்போது, குறித்த 06 மீனவர்களும் சுகயீனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அவர்கள் அறிவித்ததாகவும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1390244
  3. ட்றம்புடன் நேரடி விவாதத்துக்குப் போகாமல்… பைடன் காய் வெட்டி திரிந்திருக்கலாம். இப்ப முழு மானமும் கப்பல்லை இல்லை ராக்கெட்டிலை ஏறி பறக்குது. 🤣
  4. இலங்கையில்... சிங்களவருக்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம் நடைமுறைறையில் உள்ளது என்பதே உண்மை. முழுப் பூசணிக்காயை சோத்துக்குக்குள் மறைக்காதீர்கள். 😂🤣
  5. பி.பி.சி. யே... பைடனுக்கு, அறளை பேர்ந்து விட்டது என கூறியுள்ளது.
  6. மருதர்... எப்படியும் அமெரிக்க வக்கீலை கொண்டு அப்பீல் பண்ணி, ஹிருணிகாவை வெளியே எடுத்து விடுவார். 😂
  7. ஜோ பைடனுக்கும் – டொனால்ட் ட்ரம்புக்கும் இடையேயான முதல்நாள் விவாதம் நிறைவு! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையேயான முதல்நாள் விவாதம் நிறைவடைந்துள்ளது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர். இந்த விவாதத்தில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் கருக்கலைப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக கொண்டு இந்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கமளித்தனர். இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கை பதிவுக்காக ஜோ பைடனை பலமுறை தாக்கி விவாதித்துள்ளார். மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1390102
  8. அவர்… காஜலிசத்தில் மூழ்கி இருக்க, அவற்றை செல்லத்துக்கு… மூன்று வருட கடூழிய சிறை கொடுத்து விட்டார்கள் பாவிகள். 😂
  9. @Maruthankerny யை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂
  10. ஆனால் ஒன்று… ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கொத்து ரொட்டி சமைக்காத கலியாண வீடாக இருக்க வேணும். 😂 🤣 நல்ல கற்பனையுடன் வரைந்த படம். நன்றி கவி அருணாசலம். 🙏
  11. தெருப் பூனைகள்... தங்களை அண்டி வாழும் மனிதர்களுக்கு மாமிசத்தை அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கத்தை இப்போதுதான் கேள்விப் படுகின்றேன். எங்கள் வீட்டு பல்கனியின் கீழுள்ள நிலத்தின் சிறு பகுதி மணல் பாங்கானது. அந்த இடத்தில் ஒரு பூனை வந்து.. அந்த மணலை கிளறி "உச்சா" போய், மூடி விட்டு போகும். அது எங்களுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. அது கள்ளப் பூனை என்றபடியால்.... அது வரும், போகும் நேரம் எங்களுக்கு தெரியாமல் இருந்தது. அதனை எப்படி நிற்பாட்டுவது என்று அயலவரிடம் கேட்ட போது அதற்கு ஒரு மருந்து குளிசை கடையில் விற்பதாகவும், அதனை வாங்கி மண்ணில் தாட்டு விட்டால் அந்த மணத்திற்கு கிட்ட வராது என்றார். அதன் படியே மருந்தை வாங்கி மணலில் தாட்ட போது.. மூன்று மாதத்திற்கு பூனை வரவில்லை.🙂 பிறகு மெல்ல மெல்ல வரத் தொடங்கி விட்டது. மருந்தின் வீரியம் குறைந்தவுடன் பூனை வந்திருக்கலாம் என நினைக்கின்றேன். மருந்தும் கொஞ்சம் விலை அதிகம் என்ற படியால்... வேறு வழியால் இதனை கட்டுப் படுத்த வேண்டும் என்று எனது தமிழ் மூளையை கசக்கிப் பிழிந்தபோது ... அந்த மணலில் நெருக்கமான கண் உள்ள கம்பி வலையை தாட்டுப் பார்க்கலாம் என்ற யோசனை கிடைத்தது. அப்படியே செய்து பார்த்தால்... பூனை நிரந்தரமாக, "டாட்டா" காட்டி விட்டுப் போய் விட்டது. 😂
  12. நாய், பூனைகளின் மயிர் கொட்டும் பிரச்சினை உள்ளதால் அவற்ரை வீட்டில் வளர்க்க விருப்பம் இல்லை. பிள்ளைகள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். சம்மதிக்கவில்லை. தெரிவில் போகும் நாய்களை பார்த்து ரசிப்பதோடு எனது நாய்ப் பாசம் முடிந்துவிடும்.
  13. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய... ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂🍰 நோய் நொடியின்றி நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வளமுடன். 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.