Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சரத்குமாருக்கு… ஒரு கட்டத்தில் தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஓரத்தில் இருந்தது என்றால் பாருங்கோவன். 😂
  2. டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு அமோக வெற்றி வாய்ப்பு! டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்லியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அத்துடன், பா.ஜ.க பல சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை பெற்று நிலையில், பா.ஜ.க வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385894
  3. ஜனாதிபதி செயலகத்தில் மோதல்: ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி! ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்த நிலையில், இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, கண்டி மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக் கூட்டமும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, கூட்டம் நடைபெற்ற அறையிலிருந்து வெளியேறிய போது நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமவுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் வலுப் பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவினால் குணதிலக்க ராஜபக்ஷ தள்ளப்பட்ட நிலையில், அவர தவறி படியிலிருந்து கீழே விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் கால் எலும்பில் முறிவொன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால், தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், தான் அவரை தள்ளிவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றதை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்து செல்ல முற்பட்ட போது, அவர் தவறி வீழ்ந்துள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1385859 ################# ################## ############ ஆதவன் போட்ட தலைப்பை பார்க்க... மகிந்த ராஜபக்சவுக்கு, செம அடி விழுந்தது போலை இருக்கு.
  4. கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவு! இன்று காலை 10 மணி நிலவரப்படி, கர்நாடகத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் ஐக்கிய ஜனதா தளம் 3 இடங்களிலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 17 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (04) காலை 8 மணி முதல் இடம்பெற்று வருகிறது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385865
  5. வட இந்தியாவில் எத்தினை பஸ் எரியப் போகுதோ…. 💥 எப்பிடியும் மோடி ஜீ…. கடைசி நேரத்தில் Entry ஆகி விடுவார். 🙂
  6. தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு ஒரு இடமும் கிடைக்காது போலிருக்கே. பன்னீர் செல்வமும், எடப்பாடியும், தினகரனும், சசிகலாவும் பிரிந்து நின்று அ.தி.மு.க. வை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். ஈழத்தமிழருக்கு செய்த சாபம்தான்…. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறாமல் தடுக்குது.
  7. படத்தில் நீங்கள் பார்க்கும் மரங்கள் நடமாடும் மரங்கள் என்றால் நம்புவீர்களா? ஆம், பனை இனத்தைச் சேர்ந்த (Socratia exorrhiza,) எனப்படும் இந்த மரங்களை நடமாடும் மரங்கள் என தாவரவியல் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். தென் அமெரிக்காவில் ஈரப்பதமான வெப்பமண்டல காடுகளில் நிலத்தில் மிதந்து வளரும் இம்மரங்களானது, கால்களைப் போன்ற அதிசய வேர்களை பெற்றிருக்கும். வளமான மண்ணையும் சூரிய வெளிச்சத்தையும் தேடி நாளந்தம் 2-3 சென்டிமீட்டர் வீதம் வருடாந்தம் 20 மீட்டர் வரை நகர்ந்து செல்ல வல்லவை. அவைகள் நகரும் திசையில் புதிய வேர்கள் வளர்ந்து வேர்பதிக்கும். பின் வேர்கள் அப்படியே இறந்து போகும். இந்த வளர்ச்சி அங்குலம் அங்குலமாகவே தொடரும். ✍ தமிழாக்கம் / imran farook
  8. கிழக்கில் மேய்ச்சல் தரையில் உள்ள ஆயிரக் கணக்கான மாடுகளை… சிங்களவன் வெட்டியும், சுட்டும் கொன்று இருக்கின்றான். இதனால் பல தமிழ் ஏழை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். இந்த மறை கழண்டதுகளை, அவர்களுக்காக போராடச் சொல்லுங்கள்.
  9. ரஷ்யாவிற்கு போன 350 ஶ்ரீலங்கா இராணுவத்தை காணவில்லையாம். செத்துப் போனார்களோ… அல்லது அங்கிருந்து வேறு நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார்களோ…. ஆண்டனுக்குத்தான் வெளிச்சம்.
  10. ஒருக்கால்…. அரபு நாடுகள் பக்கம் போய் வாறது. 😂 🤣
  11. அண்ணை, நீங்கள்தான்... உங்கடை ஊர் மழையை கூட்டிக் கொண்டு வந்து, இங்கை விட்டுட்டு போயிருக்கிறீர்கள் போலை கிடக்கு. 😂 இங்கு கடந்த சிலநாட்களாக தொடர் மழை. ஆறுகள் எல்லாம் நிரம்பி அலை புரண்டு ஓடுது. நாங்கள் இருக்கும் பகுதியில் வெள்ள ஆபத்து இல்லை. ஆனாலும்... இந்த மழை கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு தேவைதான்.
  12. ஜெர்மனியில் அவசர நிலை அறிவிப்பு! ஜெர்மனியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஜெர்மனியின் பவேரியா, பாடன் வுர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதுடன் இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385564
  13. சீச்சீ.... இப்பிடி வாற ஆட்களுக்கு என்றே, எக்ஸ்ராவாக வடை சுட்டு வைக்கிறவை. 😎
  14. இந்த சடங்கில் சாப்பிட முதல், இரண்டு கிழமைக்கு முன்னமும் வடை சாப்பிட்டனான். அப்படியிருந்தும்... நாக்கு விடுகுதில்லை, வயிறு கேக்குதில்லை. 😂 சாப்பாட்டு விசயத்திலை கணக்கு பார்க்கக் கூடாது. என்றாலும்.... குத்து மதிப்பாக 75 வடை போயிருக்கும் போலை கிடக்கு. 🤣
  15. வடை... சின்னன் இல்லை. உள்ளங்கையளவு பெரிய வடைதான். 😂 "காய்ஞ்ச்ச மாடு" தியரிப்படி 9 வடை எப்பிடி வயித்துக்குள்ளை போனதென்றே தெரியவில்லை. 🤣
  16. யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து உரையாடியிருந்தபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதனை அவதானித்த அயலவர்கள் தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1385509
  17. கேட்க இனிமையான நல்ல பழைய பாடல்களை இணைக்கும் சுவியருக்கு நன்றி. 🙂
  18. வடை... வயித்துக்கு பிரச்சினையான சாமான் என்ற படியால், ஒன்பது உளுந்து வடைக்கு மேலை நான் சாப்பிடவில்லை. அதாலை... என்ரை வயிறு தப்பீட்டுது.
  19. கஞ்சி – கார்த்திகைப் பூ – செருப்பு – நிலாந்தன்! இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது. ஆரியகுளம் சந்தியிலும் முத்த வெள்ளியிலும் வெசாக் பந்தல்கள் அதிகமாக அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால் இம்முறை ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ஜனங்களே ஆரியகுளம் சந்தியில் காணப்பட்டார்கள். ஒரு ஊடகவியலாளர் கேட்டார், முள்ளிவாய்க்காலில் திரண்ட ஜனங்களை விடவும் ஆரிய குளத்தடியில் திரண்ட சனங்களின் தொகை அதிகமா? என்று. இல்லை. அது குறைவு தான். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களில் வழங்கப்பட்ட சாப்பாட்டை,சிற்றுண்டிகளை, குடிபானங்களை ,ஐஸ்கிரீமை தமிழ் இளையோர் விரும்பி வாங்கினார்கள். அவ்வாறு குடிபானங்களை வாங்கிய ஒரு இளைஞரிடம் ஒரு ஊடகவியலாளர் பின்வருமாறு கேட்டிருக்கிறார்…..”தமிழ் மக்கள் திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைத்த பொழுது அதை ஒரு குற்றமாகக் கருதி, போலீசார் நான்கு பேர்களை கைது செய்து பின் விடுதலை செய்தார்கள். அதுபோலவே கிழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்துக் கொண்டிருந்தபொழுது போலீசார் அதைத் தடுத்து கஞ்சிப் பானையைத் தூக்கி கொண்டு போனார்கள். மேலும் அடுப்பை சப்பாத்து கால்களால் தள்ளி நகர்த்தினார்கள். கிழக்கில் கஞ்சி காய்ச்சியதை ஒரு குற்றமாகக் கூறிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகிய படையினர் வெசாக் பந்தல்களில் வைத்து வழங்கிய குடிபானங்களை நீங்கள் ஏன் வாங்கிக் குடிக்கிறீர்கள்?” என்று. ஆனால் அதை வாங்கி குடிக்கும் இளையோருக்கு அந்த உணவில் இருக்கும் அரசியல் விளங்குவதாக தெரியவில்லை. முள்ளிவாய்க்கால் கஞ்சி நோய் தொற்று உடையது என்று திருகோண மலையில் போலீசார் குற்றம் சாட்டினார்கள். ஆனால் நாடு முழுவதும் தானமாகக் கொடுக்கப்பட்ட வெசாக் உணவுகள்,குடிபானங்களை போலீசார் நோய்த் தொற்று உடையது என்று குற்றம் சாட்டவில்லை. வழக்குப் போடவில்லை. ஒரே நாடு இரண்டு நீதி? இந்த உணவு அரசியலை தமிழ் இளையோரில் ஒரு பகுதியினர் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை? ஆனால் இதே இளையவர்களில் ஒரு பகுதியினர் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கார்த்திகைப் பூவை போன்ற ஒரு வடிவத்தை உருவாக்கினார்கள். அது பின்னர் போலீசாரின் விசாரணைக்குள் வந்தது.அந்தச் சின்னத்தை உருவாக்கிய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் உட்பட முழுப் பாடசாலைச் சமூகமும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதன்மூலம் எதிர்காலத்தில் அதுபோன்ற சின்னங்களை பாடசாலைச் சமூகங்கள் உருவாக்க கூடாது என்ற அச்சுறுத்தல் மறைமுகமாக விடுக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டதும் தமிழ் இளையோர்தான்.இங்கு வெசாக் பந்தலில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடித்ததும் தமிழ் இளையோர்தான். இந்த இரண்டு விதமான இளையவர்களும் ஒரே சமூகத்துக்குள் இருந்துதான் வருகிறார்கள். எனவே இங்கு பிரச்சனை இளைய தலைமுறையில் இல்லை. அவர்களை வழிநடத்தும் பெற்றோர்,முதியோர்,ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூகத் தலைவர்களில்தான் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாமா? வெசாக் பந்தல்களில் அன்னதானம் வாங்கிய இளையோருக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு குற்றப்பொருள் ஆக்கப்பட்டதை யார் எடுத்துக் கூறியிருக்க வேண்டும்? 15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட யுத்த களத்தை நினைவு கூர்வதற்கு உணவையே ஒரு நினைவுப் பொருளாக தமிழ் மக்கள் மாற்றினார்கள். ஆனால் அரசாங்கம் அந்த உணவை ஒரு குற்றம் என்று கூறப்பார்க்கின்றது. 15 ஆண்டுகளின் பின்னரும் நிலைமைகள் மாறவில்லை என்பதனை அது காட்டுகின்றது. இதுதொடர்பாக இளையோருக்கு யார் எடுத்துக் கூறியிருந்திருக்க வேண்டும் ? ஒருபுறம் கார்த்திகை பூவை ஒரு பாடசாலையின்’மெய் வல்லுநர் போட்டியில் காட்சிப்படுத்தியதற்காக ஒரு பாடசாலை சமூகம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் அதே கார்த்திகைப் பூவை அண்மையில் டி எஸ் ஐ நிறுவனம் தன்னுடைய செருப்புக்களில் பதித்து விற்க முற்பட்டது. அது சமூக வலைத்தளங்களில் விவகாரமாகியது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் டிஎஸ்ஐ நிறுவனம் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். தமிழ் மக்கள் டிஎஸ்ஐ உற்பத்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறினார். கார்த்திகைப் பூ தமிழ் மக்களைப் பொறுத்தவரை மதிப்புக்குரியது. ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே அது பழந்தமிழ் இலக்கியங்களில் செங்காந்தள் என்று அழைக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் அந்த பூவுக்கு ஒரு அரசியல் முக்கியத்துவத்தை வழங்கியது. அந்த அரசியல் பரிமாணம் காரணமாகத்தான் அந்தப் பூவைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றது. அந்தப் பூவை ஒரு நினைவாக மாணவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவதை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கின்றது. 15 ஆண்டுகளின் பின்னரும் அரசாங்கம் கஞ்சிக்கும் பூவுக்கும் பயப்படுகின்றது. டி எஸ் ஐ நிறுவனம் கார்த்திகைப் பூவை செருப்பில் பதித்தமை தற்செயலானது அல்ல. அதை ஒரு விளம்பர உத்தியாக, வியாபார உத்தியாக அவர்கள் செய்திருக்கலாம். சர்ச்சைக்குரிய ஒரு பூவை காலில் போட்டு மிதிப்பது என்பது அவர்களுக்கு வருமானத்தைக் கூட்டும் ஒரு நடவடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் அங்கே மிதிக்கப்படுவது பூ மட்டுமல்ல,தமிழ் மக்களின் உணர்வுகளும்தான். சில ஆண்டுகளுக்கு முன் தனது சேலையில் பௌத்த சின்னங்களைப் பொறித்திருந்த காரணத்துக்காக ஒரு பெண்ணுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முற்பட்டது.பௌத்த மதச் சின்னங்களை அவ்வாறு ஆடைகளில் பதிப்பது பௌத்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்ற ஒரு விளக்கத்தை அரசாங்கம் கொடுத்தது. மேற்கத்திய பண்பாட்டில் இதுபோன்ற விடயங்கள் ஒரு விவகாரம் அல்ல. அங்கெல்லாம் தேசியக் கொடியை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அவமதிப்பார்கள். ஆனால் அதை மேற்கத்திய ஜனநாயகப் பண்பாடு சகித்துக் கொள்கின்றது. ஆனால் கீழேத்தேய உணர்வுகளைப் பொறுத்தவரை நிலைமை அப்படி அல்ல. இங்கு மதச் சின்னங்கள் அல்லது ஒரு சமூகத்தில் மதிக்கப்படும் சின்னங்கள், குறியீடுகள் போன்றன அவமதிக்கப்பட்டால் அது சில சமயங்களில் கலவரங்களாகவும் முடிவதுண்டு. மேற்கத்தியப் பண்பாட்டில் புனிதமானவைகள் அவமதிக்கப்படும் பொழுது அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு ஜனநாயக விரிவு உண்டு. ஆனால் கஞ்சியை அதாவது உணவை ஒரு குற்றமாகக் கருதும் இலங்கை அரசியல் பரப்பில்; ஒரு பூவைக் குற்றமாகக் கருதும் இலங்கை அரசியல் பரப்பில்; அது போன்ற ஜனநாயக விரிவை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் கஞ்சியும் பூவும் குற்றமாக கருதப்படலாம் என்றால், அங்கே ஜனநாயக இதயம் பலவீனமாக இருக்கிறது என்று பொருள். கஞ்சியை, பூவை புனிதமாக, மதிப்புக்குரியதாகக் கருதும் ஒரு கூட்டு மனோநிலை அந்த நாட்டில் உண்டு என்று பொருள். அதை வேறொரு பிரிவு சகித்துக் கொள்ளவில்லை என்று பொருள். இந்த விடயத்தில் இலங்கை தீவில் இரண்டு நீதிகள் உண்டு என்று பொருள். கார்த்திகைப் பூவை காட்சிப்படுத்தியதற்காக ஒரு பாடசாலை சமூகம் பொலிசாரால் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறது. அதே கார்த்திகைப் பூவை ஒரு பாதணி உற்பத்தி நிறுவனம் அவமதிக்கும் பொழுது அது ஒரு சட்டப் பிரச்சினையாக வரவில்லை.அது இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பாதிக்கும் ஒரு நடவடிக்கை என்பது அந்தப் பாதனி நிறுவனத்துக்கு தெரிந்திருக்கவில்லையா? தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் எதிர்ப்பு அறிக்கையையடுத்து டிஎஸ்ஐ நிறுவனம் அந்த அமைப்போடு தொடர்பு கொண்டதாக அறிய முடிகின்றது. இந்த விடயத்தில் கொழும்பை மையமாகக் கொண்டு இயக்கும் ஒரு ஊடகம் இடைத்தொடர்பாளராக செயல்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.டிஎஸ்ஐ நிறுவனம் இதுவிடயத்தில் தங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கின்றது.தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியமைக்காக அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஐங்கரநேசன் கூறியுள்ளார்.மேலும் டி.எஸ்.சி நிறுவனம் அதன் காட்சியறைகளில் வைக்கப்பட்டிருந்த செருப்புகள் மீளப்பெறப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் பரப்பில் காட்டப்பட்ட எதிர்ப்பை ஒரு கொழும்பு மையப் பெரு நிறுவனம் கவனத்தில் எடுத்தமை முக்கியமானது. அதே சமயம் இலங்கைத் தீவின் அரசியலானது உணவு, பூ போன்ற பொருட்களுக்கு எல்லாம் உணர்திறன் மிக்கதாக இருப்பது என்பது,அதுவும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் அவை உணர்திறன் மிக்கவைகளாகக் காணப்படுவது எதைக் காட்டுகின்றது? https://athavannews.com/2024/1385334
  20. சென்ற தலைமுறையினர் மாமிசத்தை கிழமைக்கு ஒரு முறைதான் உண்பார்கள். அதுகும் கோவில் கொடியேற்றங்கள் தொடங்கி விட்டால் மாதக் கணக்கில் மரக்கறி உணவுதான். இப்போதைய மரக்கறிகள் கூட... இரசாயனம் கலந்த விளைச்சலுடன் தான் கிடைக்கின்றது. இன்று கிழமையில் 6 நாளும் மாமிசம்தான். அந்த இறைச்சி தரும் மிருகங்களும், பறவைகளும் ஆரோக்கியமாகவும், சதைப்பிடிப்பாகவும் இருக்க அதிக ஊட்ட சத்துக்களையும், நோய் எதிர்ப்பு குளிசைகளான "அன்ரி பயோட்டிக்" போன்ற மருந்துகளை உணவில் அளவுக்கு அதிகமாகவே கலந்து கொடுக்கும் போது... அந்த இறைச்சியை உண்ணும் மனிதனும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து ஒரு கட்டத்ததில் நோயாளி ஆகி விடுகின்றான். எங்கும் எதிலும் வியாபாரம் முக்கியமாகி விட்ட நிலையில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.
  21. ட்றம்பின்ரை வசீகரத்துக்கு என்ன குறைச்சல். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.