Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மேற்கு ஊடகங்களின் பார்வையில், இது மட்டும்.. பொய் செய்தி. 🤣
  2. தினேஷ் ஷாப்டர் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம்? பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பொரளை பொலிஸார் நேற்று (செவ்வாய்கிழமை) விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட தினேஸ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இதேவேளை, பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2022/1316460
  3. நடமாடும் சுடுகாடு. உங்கள் வீட்டிற்கே வந்து, பிணத்தை எரித்து... ஒரு மணி நேரத்தில் சாம்பலையும் தந்து விடுவார்களாம்.
  4. சிலர் சும்மா பகிடிக்கு, சில கூத்துக்களை செய்கிறார்கள் என நினைத்தேன். ஆனால்… நிலைமை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கின்றது. அதே… காணொளியில், ஒரு தகப்பன் இரண்டு பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளையும் கூட்டி வந்து கோசம் போடுகின்றார். 😂
  5. 👉 https://www.facebook.com/watch?v=808110850288721 👈 ரசனிகாந்து வீட்டிலை இல்லை என்று சொன்ன உடனே... தேம்பி அழுத பெண். 😂 🤣
  6. ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத் திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’ என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Sreenivasan T
  7. பிக்குவும், அரசியல்வாதியும்... ஆடம்பர வாகனத்தில் போதைப் பொருளை கடத்த... மாணவர்களின்... புத்தகப் பையில், போதைப் பொருள் உள்ளதா என சோதனையிடும் காவல்துறை.
  8. என்ஜினுக்கும், எஞ்சினியருக்கும்... என்ன வித்தியாசம்? 🤣
  9. பல அருமையான 👍 பாடல்களை தேடி எடுத்து இணைக்கும் சுவியருக்கு நன்றிகள். 🙏
  10. 👉 https://www.facebook.com/manoharan.ashok.3/videos/459493616333158 👈 கடும் குளிரில்... இப்படி குளித்தால், குளிராது. 🤣
  11. ஐயாவுக்கு, பொய் சொல்லவும் பக்குவம் காணாது. இந்த அறிவை வைத்துக் கொண்டு 50 வருசம், தமிழனை ஏமாத்திக் கொண்டு திரிஞ்சிருக்கு.
  12. கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்! கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வர்த்தகரை கடத்தி, பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்திருந்ததாக பொரளை பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர். நபரொருவருக்கு பல கோடி ரூபா கடன் தொகையொன்றை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம்- ப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று பிற்பகல் மனைவியிடம் விடயம் தொடர்பில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. சிறிது நேரத்தில் அவரது மனைவி அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாகவும், ஆனால் அவரது தொலைபேசி இயங்காமல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர் பொரளை மயானத்தில் இருப்பது தொடர்பில் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு GPS தொழில்நுட்ப சமிக்ஞைகள் இதன்போது கிடைத்துள்ளது. இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட அவரது மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்போது குறித்த அதிகாரி அங்கு சென்று தேடிப்பார்த்தபோது தினேஷ் ஷாப்டர் பயணித்த காரின் சாரதியின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் காருக்குள் இருந்துள்ளார். மேலும், தினேஷ் ஷாப்டரும் அங்கு கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக குறித்த நிறைவேற்று அதிகாரி மனைவிக்கு அறிவித்துள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மீட்கப்பட்டுள்ள சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1315746

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.