Everything posted by தமிழ் சிறி
-
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்! இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை. 2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் இந்த அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை UAPA தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 ஆம் ஆண்டு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை ஒத்திவைக்கக் கோரினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய வைகோ பின்வருமாறு கூறினார், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நானே நேரில் முன்னிலையாகி இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தேன். மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு: “புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பது. இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன். தலைவர் பிரபாகரனின் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை. ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம். மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது. ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன். ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது. மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது. ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide). அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது – என்றார். https://athavannews.com/2026/1463517
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை. பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”. ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன? பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது முதல், அமெரிக்காவின் முன்னாள், இன்னாள் அதிபர்கள் வரை பலரது பெயர்களைப் பதற வைத்துக் கொண்டிருக்கும் அந்த 30 லட்சம் பக்கங்கள் சொல்லும் ரகசியங்கள் என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திப் பிஞ்சுயிர்களைச் சிதைத்த அந்தப் ‘பீடோபைல் தீவு’ (Pedophile Island) கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்த அநீதிகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது ஆதவன் செய்திப் பிரிவின் இந்தச் சிறப்புப் பதிவு தவறு யார் செய்தாலும் தண்டிக்கும் பிரித்தானியா! நூற்றாண்டு காலப் பாரம்பரியமும், கண்ணியமும் கொண்ட பிரித்தானிய அரச குடும்பத்தில், ஒரு தனி நபர் செய்த தவறால் இன்று அந்தப் பெயருக்கே ஒரு கறை படிந்திருக்கிறது! அந்த வம்சத்தின் ஒரு வாரிசு, ஒரு தகாத ஒருவரோடு நட்பு வைத்ததால், இன்று அந்தப் பரம்பரையின் கௌரவமான பொறுப்புகளில் இருந்தே அவர் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இதற்கு ஒரே ஒரு பெயர்தான் காரணம்… அது ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் சர்ச்சைக்குரிய நபர்! டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் இந்த கொடூரன் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உலகையே அதிர வைத்தது. 2019-ல் பிபிசி நேர்காணலில், ‘அந்த நட்பை முறிக்கத்தான் நான் அங்கு சென்றேன்’ என்று ஆண்ட்ரூ தெரிவித்த போதிலும், 2011-ன் ரகசிய மின்னஞ்சல்கள் அவர் சொன்னது பொய் என்பதை நிரூபித்தன! விளைவு? தவறு செய்தவர் இளவரசராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்தது! 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் கிரீடத்தையே குழிதோண்டிப் புதைத்தது இந்த எப்ஸ்டீன் சிஸ்டம்!” ஆசிரியர் முதல் கோடீஸ்வரன் வரை: அந்த மர்ம வளர்ச்சி “இன்று நாம் பார்க்கப்போவது ஒரு தனிமனிதனைப் பற்றிய கதையல்ல… அதிகாரத்தின் இருண்ட பக்கம், செல்வம் இருந்தால் எதையும் மறைக்கலாம் என்று நினைத்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்த ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ பற்றிய ஒரு அலசல்! 1970-களில் ஒரு சாதாரணக் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், தனது தந்திரத்தால் வால் ஸ்ட்ரீட் வங்கியாளர்களை வளைத்துப் போட்டார். ஒரு மாணவனின் தந்தை மூலம் ‘பியர் ஸ்டியர்ன்ஸ்’ வங்கிக்குள் நுழைந்த எப்ஸ்டீன், நான்கே ஆண்டுகளில் பங்குதாரராக உயர்ந்தான்! 1982-ல் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, 1 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அதன் பிறகு அவர் சேர்த்த செல்வம், அவனது காமவெறிக்கும் அதிகார ஆட்டத்திற்கும் எரிபொருளானது! 30 லட்சம் பக்கங்கள்… நடுங்கும் உலகத் தலைவர்கள்! “ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆவணங்கள் உலகையே உலுக்கி வருகின்றன. சுமார் 30 லட்சம் பக்கங்கள், 2,000 வீடியோக்கள், 1.8 லட்சம் படங்கள்! இதில் பில் கிளிண்டன் முதல் டொனால்ட் டிரம்ப் வரை, பில் கேட்ஸ் முதல் எலான் மஸ்க் வரை எனப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகின்றன. எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் டிரம்ப் பெயர் இருப்பதைப் பதிவிட்டு விட்டு பின் அதை நீக்கியது பெரும் சர்ச்சையானது. 2002-லேயே டிரம்ப், ‘ஜெப் ஒரு அருமையான மனிதர், என்னைப் போலவே அவருக்கும் இளம் பெண்களைப் பிடிக்கும்’ என்று புகழ்ந்து தள்ளினார். ஆனால், விவகாரம் முற்றியவுடன், ‘அவர் என் கிளப் பெண்களிடம் தவறாக நடந்ததால் விரட்டிவிட்டேன்’ என்று மாற்றி பேசினார். இதற்கிடையே, இந்தியப் பிரதமர் மோடி, அம்பானி போன்றோரின் பெயர்களும் மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கசிந்த செய்தியை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எது எப்படியோ, இந்த ஆவணங்கள் அதிகார வர்க்கத்தின் உறக்கத்தைக் கலைத்துள்ளன என்பதுதான் நிதர்சனம்!” இதனிடையே, ‘இலங்கை’ என்ற பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. அதிகாரத்தின் பலமும்… ‘வசதியான’ சிறைவாசமும் “2003-லேயே பத்திரிகையாளர் விக்கி வார்டு இவனது மர்மங்களைக் கண்டுபிடித்தார். 1996-ல் மரியா ஃபார்மர் என்ற பெண்ணும் அவரது 14 வயது தங்கையும் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், எப்ஸ்டீன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் செய்தியையே நசுக்கியுள்ளார்! 2005-ல் 14 வயது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்தும், ‘நூற்றாண்டின் மிகப்பெரிய ரகசிய ஒப்பந்தம்’ மூலம் இவருக்கு வெறும் 13 மாதங்கள் மட்டும் சிறைத் தண்டனை கிடைத்தது. அதுவும் எப்படி? வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர ‘பணி நிமித்தமான விடுப்பு’ வழங்கப்பட்டது! இதுதான் அதிகாரத்தின் பலம்! இதுதான் அநீதியின் உச்சம் மர்மமான மரணம்: தற்கொலையா? கொலையா? “பாதிக்கப்பட்ட வர்ஜீனியா ஜூஃப்ரேயின் நீண்ட சட்டப் போராட்டத்தால், நீதிபதி லோரெட்டா பிரெஸ்கா இந்த ரகசியங்களை வெளியிட உத்தரவிட்டார். ஆனால், 2019-ல் மீண்டும் கைதான எப்ஸ்டீன், உண்மைகளைச் சொல்லப்போகும் நேரத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். கேமராக்கள் திடீரென வேலை செய்யவில்லை! காவலர்கள் தூங்கிவிட்டார்கள்! இது தற்கொலையா? இல்லை உண்மைகளைத் மறைக்க பெரிய இடத்து ஆட்கள் செய்த கொலையா? இன்றும் மர்மம் நீடிக்கிறது. அதனால்தான், இந்த வழக்கின் விசாரணையும் ஆதாரங்களும் இப்போது வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருகின்றன!” கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல்: கொடுரனின் ஏஜென்ட்! “இந்தக் காமப் கொடுரனின் வலது கையாக இருந்தவள் அவனது காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல். உலகத் தலைவர்களையும் கோடீஸ்வரர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காகக் கடத்திய குற்றத்திற்காக இன்று இவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். 17 வயதில் இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய வர்ஜீனியா ஜூஃப்ரேயுடன், ஆண்ட்ரூ பல மில்லியன் டாலர்கள் கொடுத்து சமரசம் செய்து கொண்டது எதை உணர்த்துகிறது? இறுதி எச்சரிக்கை: சிஸ்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது! இவர்களெல்லாம் அந்த ‘பீடோபைல் தீவுக்கு’ (Pedophile Island) ஏன் சென்றார்கள்? அங்கு நடந்த அசிங்கங்களில் இவர்களுக்குப் பங்கு என்ன? அதிகாரம் என்பது ஏழை மக்களைக் காக்கவா? அல்லது இதுபோல பிஞ்சுயிர்களைச் சிதைக்கும் காமவெறிக்குக் கேடயமாக இருக்கவா? எப்ஸ்டீன் செத்துவிட்டார். ஆனால் அவர் உருவாக்கிய அந்த ‘எப்ஸ்டீன் சிஸ்டம்’ இன்றும் உயிரோடுதான் இருக்கிறது. அதிகாரமும் பணமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற அந்தத் தைரியத்தை இந்த சிஸ்டம் இன்னும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இது ஏதோ அமெரிக்காவில் நடந்த கதை என்று கடந்து போகாதீர்கள். நமது சமூகத்திலும் அதிகார மிரட்டலுக்குப் பயந்து எத்தனை பிஞ்சுயிர்கள் மௌனமாக அழுகின்றனவோ? ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ வெறும் காகிதங்கள் அல்ல; அவை அதிகார வர்க்கத்தின் முகத்தில் பூசப்பட்ட கரி! நீதியைத் தற்காலிகமாகப் புதைக்கலாம், ஆனால் அது ஒருநாள் எரிமலையாக வெடிக்கும் என்பதற்கு எப்ஸ்டீன் கோப்புகளே சாட்சி! எப்ஸ்டீன் செத்துட்டார்… ஆனா எப்ஸ்டீன் சிஸ்டம் இன்னும் உயிரோட இருக்கு. அதை வேரோடு அழிக்க நாம் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!” – D. Rasmila https://athavannews.com/2026/1463499
-
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்றைய (வெள்ளிக்கிழமை ) தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஷியா வழிபாட்டாளர்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்குக் காரணமான பாகிஸ்தான் தலிபான் அல்லது ஐஎஸ் போன்ற தீவிரவாதக் குழுக்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இஸ்லாமாபாத்தில் இவ்வாறான தாக்குதல்கள் அரிதாகவே இடம்பெறுகின்றன என்றாலும், சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தானில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதேவேளை, இவை முக்கியமாக பலூச் பிரிவினைவாதக் குழுக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பினால் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. அத்துடன் ஐஎஸ் அமைப்பின் பிராந்தியக் கிளையொன்றும் நாட்டில் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1463557
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக மின்னஞ்சல்கள் தெரிவிப்பு. மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும் ஒரு பெண்ணை இளவரசர் ஆண்ட்ரூ இரவு உணவிற்கு அழைக்கலாம் என ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இடைத்தரகராக அரச குடும்பத்துடன் தொடர்புடைய டேவிட் ஸ்டெர்ன் செயற்பட்டதாக கூறப்படுகிறது. இளவரசர் ஆண்ட்ரூ, 2010 ஆம் ஆண்டிலேயே ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தாம் உறவை துண்டித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய மின்னஞ்சல்கள் அதன் பின்னரும் எப்ஸ்டீன், அரச குடும்ப வட்டாரத்துடன் தொடர்பில் இருந்ததை வெளிப்படுத்துகின்றன. மேலும், 2017 ஆம் ஆண்டு விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற இரவு உணவு விருந்துபசாரமொன்றுக்கு, இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய உதவியாளரான டேவிட் ஸ்டெர்ன், ஜெஃப்ரி எப்ஸ்டீனை அழைக்க முயற்சி செய்ததாக மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்கள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தை பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இளவரசர் ஆண்ட்ரூ எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் எப்ஸ்டீனின் அழகான நண்பருடனான ஆண்ட்ரூவின் சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த புதிய தகவல்கள், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1463589
-
நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
அரசியல் கட்சிகளுக்கு பின்னால் திரிந்து, அவர்களின் சிபாரிசில்… ஆசிரியர் வேலை, தாதியர் வேலை, மற்றும் அரச வேலைகளை பெறுபவர்களிடம்… அந்தப் பதவிக்கு உரிய நற்பண்பும், கண்ணியமும், பொறுப்புணர்வும் அறவே இருக்காது. தமது காவாலித்தனத்தை காட்டவே செய்வார்கள். இப்படி.. டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் போன்றவர்களின் சிபாரிசில் வந்தவர்களால் வடமாகாணத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளது.
-
ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.
ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.
-
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
இலங்கையிலும் குளவிக்கூடு கொழுத்துவது தண்டனைக்கு உரிய குற்றம் என வாசித்தேன். பாடசாலை நிர்வாகம் ஏற்கெனவே சில காலத்திற்கு முன் கல்வித் திணைக்களத்திற்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து இருந்தும்.. அரச உத்தியோகத்தரின் அசமந்த போக்கினால்… பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
-
தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ
தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாங்கள் துறைமுகங்களை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்தவர்கள் இப்போது அது நல்ல விடயம், அதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கூறுவது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம். இதேவேளை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும், போதைப்பொருள் இருந்த கொள்கலன்களும் வெளியில் அனுப்பப்பட்டுள்ளன. அவை தொடர்பில் உங்களிடம் விசாரணை இல்லை. எங்களைத் தான் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைக்கின்றீர்கள். நீங்கள் பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தை இணைத்து அரசியல் வழிவாங்கல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்தால் அதிகாரிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம். சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை இனவாதம் என்றாலும் அது அவ்வாறு இல்லை. நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் செய்தோம். இராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்லை. அத்துடன் மதத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர். இது தவறாகும். தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதத் தலைவர்களுக்கு செவி சாய்க்க அரசாங்கம் பழக வேண்டும். மகா சங்கத்தினரை சிறைகளில் போடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சியாளர்கள் அதனை காணாதது பேன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்டமாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர். பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களையும், வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது. சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப்களை வாங்க முடியும். எமது தேசிய பாதுகாப்பு பலத்தை உலகத்துக்கு காட்டுவதில் வெட்கப்படுகின்றனர் என்றார். https://athavannews.com/2026/1463495
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? சிறுவர் பாலியற் குற்றவாளி எப்ஸ்ரெயின்(Epstein) கோப்புகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்த கூல் சகோதரர்களும் எப்ஸ்ரெயினின் ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் முதியவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் மூலம் பெறப்படுவதாக நம்பப்படும் அமானுஸ்ய சக்திகள் குறித்த ஆராய்ச்சியின் பகுதிகளுக்கும் தான் இவர்களது அறிவு பயன்பட்டதா என்பதனை கூல் சகோதரர்கள் தான் ஊடகத்தின் முன்னே வந்து பேச வேண்டும். இதே கூல் குடும்பம் தான் மேற்குலகின் வழிகாட்டலில் போதிய அளவு நிதியைப் பெற்று இலங்கையில் University teachers human rights (UTHR) என்ற ஓர் நிறுவனத்தை உருவாக்கி இன அழிப்புக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் குறித்தும் நபர்கள் குறித்தும் தகவல் சேகரித்து அந்த ஆவணத்தில் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அந்த நாளில் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அத்தனை இளைஞர்கள் பற்றிய தகவலகளையும் சேகரித்து அதனை அவர்களுக்கு எதிரான அரசின், மேற்குலகின் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பயன்படுமாறு உருவாக்கியவர்கள். உலகின் மிக மோசமான குரூரமான சிறுவர் பாலியல் குற்றமாகச் சொல்லப்படும் எப்ஸ்ரெயின் ஆராய்ச்சிக்கு உடந்தையாக இருந்த இந்த உத்தமர்கள் தான் , நேற்றுவரை UTHR என்ற அமைப்பை வைத்து எமது விடுதலைப் போராட்டதிற்கு எதிராக உலகெங்கும் எம்மையும் எமது போராட்டத்தையும், பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள், இதே கூட்டம் தான் முறிந்தபனை என்ற நூலையும் எழுதியது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். உலகில் நடைபெறும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒருவர் தான் ரஜினி திரணகம, உலகில் எந்தவொரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடினாலும் அதனை மோசமாகச் சித்தரித்து அழித்துவிட மேற்குலகின் சக்திகள் இவர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது, சர்வதேச பல்கலைக் கழகங்களில் புலமைப்பரிசில் வழங்குகிறது, கற்பிக்க வாய்ப்பு வழங்குகிறது. ஆனால் காலம் ஒரு கட்டத்தில் இவர்களை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தி இருக்கிறது. இது ஒரு சாதாரணமாக கடந்து போகும் சம்பவம் அல்ல, 1. UTHR 2. கூல் சகோதரர்கள் 3. அங்கிலிக்கன் திருச்சபை - இதற்கு பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //அத்துடன் முக்கியமாக - முறையாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்த ஆவணத் தொகுப்பைப் பார்த்தபோது எப்ஸ்ரெயினின் குரூர வக்கிரத்திற்கு அங்குள்ள நம்மவர்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது. பரமேஸ்வரா பள்ளி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்…// நன்றி: Thiru Thirukumaran SANGU-சங்கு
-
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
வந்த பின் காக்கும் சிஸ்டம் ************************************ அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஒரு சமூகம் அல்லது முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சமூகம் அல்லது நிர்வாக கட்டமைப்பு அல்லது அரசு ஒரு சம்பவம் நடந்த பின் என்ன செய்தீர்கள் என்று விசாரணை செய்யாது. மாறாக அச் சம்பவம் நடக்கும் முன் அதனை தடுத்து நிறுத்தவே முயற்சிக்கும் வருமுன் காப்பதனையே விரும்பும். சிறந்த திட்டமிடல் என்பது வரமுன் காப்பதே. வந்த பின் காப்பது தோல்வியின் அடையாளம். இன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியத்தில் 50 க்கு மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 39 மாணவர்கள் வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர் பிரதி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தின் போது மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளனர். பதற்றமடைந்துள்ளனர் தங்களது கற்றல் உபகரணங்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு குலைகளை முறித்தும் கையில் அகப்பட்ட பொருட்களை கொண்டும் குளவிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போராடியிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் விமானத்தாக்குதலின் பின் அச்சூழல் எப்படியிருக்குமோ அதையொத்த நிலைமை அங்கு காணப்பட்டது. பாடசாலையில் குளவி கூடு காணப்படுகிறது. இது மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம் எனவே இதனை உடனடியாக அகற்றி தருமாறு பாடசாலை நிர்வாகம் சம்மந்தப்பட்ட தரப்பினர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். ஆதாவது வருமுன் காப்பதற்கு பாடசாலை முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இன்று சம்பவம் இடம்பெறும் வரை சம்மந்தப்பட்டவர்கள் இக் கோரிக்கை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. சம்பவம் நடைப்பெற்ற பின்னரே விழுந்தடித்து ஒடிவந்து குளவி கூட்டை அகற்றுவது பற்றி ஆலோசிக்கின்றனர். இது கவலைக்குரியது. அதிஸ்டவசமாக ஆபத்தான நிகழ்வுகள் எதுவும் இன்று நடந்தேறியிருக்கவில்லை. ஏதேனும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக் கூறுவது? ஏன் இயலுமான விடயங்களில் வர முன் தடுக்க கூடிய திட்டமிடல்கள் இல்லை? போன்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உண்டு. சம்பவத்தின் பின் வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பாதுகாப்பு படையினர், கல்வி அதிகாரிகள், என பலர் வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர். குளவி கூட்டை அகற்றுவது பற்றி திட்டமிட்டனர். நோய் வந்த பின் மருத்துவமனை. பேரழிவு வந்த பின் நிவாரணம். அநியாயம் நடந்த பின் விசாரணை. என்பதனை விட இவற்றை வருமுன் தடுப்பதே புத்திசாலித்தனம். Murukaiya Thamilselvan
-
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்! ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஆப்கானியர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தியுள்ளது. இது நடைமுறைச் சிக்கல்களையும், ஐநா அகதிகள் முகமையின் கவலையையும் தூண்டியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடமிருந்து வரும் அழுத்தத்தினால், பிரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம்) காபூலில் உள்ள தாலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைத் தொடங்கியுள்ளது. இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இதுவரை இரண்டு “தொழில்நுட்பப் பயணங்களை” (Technical missions) மேற்கொண்டுள்ளனர். இதில் மிகச் சமீபத்திய பயணம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. “மீண்டும் அனுமதிப்பது (Readmission) மற்றும் திரும்புதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பது குறித்த பணிகளை ஆராய்வதற்காக” இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கஸ் லாம்மெர்ட் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தகைய நாடு கடத்தல் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இது சட்ட மற்றும் தார்மீக ரீதியான பல கவலைகளை எழுப்புகிறது. தாலிபான் அதிகாரிகள் கடந்த ஆண்டில் “தங்கள் ஒடுக்குமுறையை அதிகரித்துள்ளதாக” மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இந்த வாரம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஊடக சுதந்திரத்திற்கு எதிரான புதிய விதிகள் மற்றும் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை அது சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், ஐரோப்பாவின் 27 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை இப்போது இந்த நாடு கடத்தலை வலியுறுத்துகின்றன. குடியேற்றத்திற்கு எதிரான பொதுமக்களின் கருத்து மாற்றம் மற்றும் ஐரோப்பா முழுவதும் வலதுசாரி கட்சிகளின் தேர்தல் வெற்றி போன்றவை இதற்கு முக்கியக் காரணமாகின்றன. https://athavannews.com/2026/1463547
-
கருத்து படங்கள்
- யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!
யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://athavannews.com/2026/1463439- எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது. இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது அதை நிறைவேற்றுவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனவரியில் வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு அனுமதிக்கும் தற்போதைய சட்ட விதிகளை நீக்குவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது. நீண்டகாலமாக பொதுமக்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்த இந்த சலுகையை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது. இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் முன்னாள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1463455- சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழி மறித்த போது, பொலிசாரின் கட்டளையை மீறி சாரதி டிப்பர் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியுள்ளார். அதனை அடுத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்ற நிலையில் , சாரதி டிப்பர் வாகனத்தை மணலுடன் வீதியில் நிறுத்தி விட்டு , வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். தப்பியோடிய சாரதியை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்தனர். கைது செய்த சாரதியை பொலிஸார் விசாரித்த வேளை , குறித்த நபர் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, மேலதிக விசாரணைகளில் , பொலிஸ் உத்தியோகத்தில் இருந்த வேளை பொலிசருடன் இருந்த நெருக்கத்தினை பயன்படுத்தி , சட்டவிரோத மணல் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது. குறித்த நபரை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1463445- அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை!
அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை! பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன. இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஓமான் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்பார்கள். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவாத்தையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன. எனினும், பின்னர் பேச்சுவார்த்தைகளை ஓமானுக்கு நகர்த்தவும், அணுசக்தி பிரச்சினைகளுக்கு நிகழ்ச்சி நிரலை சுருக்கவும் ஈரான் வலியுறுத்தியது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் இறையாட்சி இப்போது அதன் பலவீனமான கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ போன்ற அதிகாரிகள் நம்புகின்றனர். கடந்த மாதம் நாடு தழுவிய போராட்டங்கள் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தன. கமேனியின் படைகள் இரத்தக்களரியான ஒடுக்குமுறையுடன் பதிலளித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டை குறிவைத்து புதிய இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைத்தார். 1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர். ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது. பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463433- பிட்கொயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி!
பிட்கொயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரிப்டோகரன்சிக்கு (டிஜிட்டல் நாணயம்) தனிப்பட்ட மற்றும் பொது ஆதரவை அளித்த போதிலும், பிட்கொயினின் விலை 15 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு பிட்கொயினின் பெறுமதி இப்போது 66,000 அமெரிக்க டொலர்களாக (£48,700) உள்ளது. இது 2024 ஒக்டோபருக்குப் பின்னர் அதன் மிகக் குறைந்த அளவாகும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து முன்னணி டிஜிட்டல் நாணயத்தின் விலையானது 24% குறைந்துள்ளது. பல மாதங்களாக உயர்ந்து வந்த பிட்கொயின் விலைகளைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக 2025 ஒக்டோபரில் கிரிப்டோகரன்சி எப்போதும் இல்லாத அளவுக்கு 122,200 அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது. இந்தத் துறையில் ட்ரம்பின் ஈடுபாடும், கிரிப்டோகரன்சிகளுக்கு அவர் அளித்த வெளிப்படையான ஆதரவும், இந்தத் துறையில் பரிமாற்றத்தை எளிதாக்குவதாக அளித்த வாக்குறுதிகளும் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தின. 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையில் மீண்டும் நுழைந்த ட்ரம்ப் எடுத்த முதல் நடவடிக்கைகளில், அமெரிக்காவை ” உலகின் கிரிப்டோ தலைநகராக” மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிர்வாக உத்தரவும் அடங்கும். இந்த நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட சரிவுடன், கடந்த 12 மாதங்களில் பிட்கொயின் விலைகள் 32% குறைந்துள்ளன. மேலும் 2024 மற்றும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட விலைகளை நோக்கிச் செல்கின்றன. பிட்கொயின் என்பது உலகின் முதல் மற்றும் மிகவும் பிரபலமான டிஜிட்டல் நாணயமாகும். இது 2009-ஆம் ஆண்டு சதோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வங்கி, அரசு அல்லது மத்திய அமைப்புகள் இல்லாமல், ப்ளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது. https://athavannews.com/2026/1463427- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
பொருத்தமான சொற்பதம். சரியாகச் சொன்னீர்கள்.- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
- உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
2009-ஆம் ஆண்டு, மெக்சிகோவின் மாண்டெரி நகரில் 21 வயது மாடல் அழகி Gabriela Rico Jimenez ஒரு சொகுசு ஹோட்டலுக்கு வெளியே அரை நிர்வாண நிலையில் அலறிக் கொண்டிருந்தார். "அவர்கள் மனித மாமிசத்தைச் சாப்பிடுகிறார்கள்... அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள்... என்னை விட்டுவிடுங்கள்!" என்று அவர் கதறியது கேமராவில் பதிவானது. அதிகாரிகள் அவரை 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று முத்திரை குத்தி அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்ற விவரங்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளன. ஒரு மாபெரும் உண்மையைச் சொன்னதற்காக அவர் “மௌனமாக்கப்பட்டாரா” என்ற கேள்வி இன்றும் நீடிக்கிறது. பல ஆண்டுகள் கழித்து, அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டபோது, கேப்ரியலா சொன்ன வார்த்தைகளுக்கும் எப்ஸ்டீன் தீவில் நடந்தவைகளுக்கும் இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் ஒற்றுமை தென்பட்டது. எப்ஸ்டீனின் 'Little St James ' தீவில் ஒரு விசித்திரமான கோவில் போன்ற கட்டிடம் இருந்தது. அங்கு செல்வாக்கு மிக்க மனிதர்கள் ரகசிய வழிபாடுகளிலும், இருண்ட சடங்குகளிலும் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. எப்ஸ்டீன் மீதான FBI அறிக்கைகளில், சாட்சிகள் விவரித்த கொடுமைகள் , வன்முறை, நரமாமிசம் மற்றும் குழந்தைகளின் மீதான சித்திரவதை கேப்ரியலா 2009-ல் சொன்ன அதே வார்த்தைகளை எதிரொலித்தன. உலகை ஆளும் சில உயர்மட்ட அதிகார வர்க்கத்தினர், தங்களின் செல்வம், புகழ் மற்றும் அதிகாரம் அழியாமல் நிலைத்திருக்க, இத்தகைய இருண்ட சக்திகளை நாடுகிறார்களா? 'Ba’al' வழிபாட்டின் மூலம் குழந்தைகளை பலியிடுகையில் ஒருவித 'சக்தி மாற்றம்' (Energy Transfer) ஒன்றை இந்த ரகசியக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது. Ba’al' என்பது ஒரு குறிப்பிட்ட பெயரல்ல; பண்டைய செமிடிக் மொழிகளில் (Semitic languages) இதற்கு 'எஜமானன்', 'ஆளுபவர்' என்று பொருள். இது ஆரம்பத்தில் ஒரு கௌரவப் பெயராகவே இருந்தது. கி.மு. 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே, பண்டைய கானானியர்கள் (Canaanites) மற்றும் போனீசியர்கள் (Phoenicians) Ba’al-ஐ ஒரு முதன்மைத் தெய்வமாக வழிபட்டனர். Ba’al’ மழையின் கடவுளாகவும், இடி-மின்னல் மற்றும் விவசாயத்தின் தெய்வமாகவும் கருதப்பட்டார். நிலத்தின் செழிப்புக்கு அவரே காரணம் என நம்பப்பட்டது. Ba’al-ன் கோபத்தைத் தணிக்கவும், நிலம் செழிக்கவும் மக்கள் அவருக்குப் பல்வேறு சடங்குகளைச் செய்தனர். Ba’al-ன் வழிபாடு மிகவும் இருண்டதாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருந்த 'குழந்தை பலி' (Child Sacrifice) முறைதான். மர்மமான புராணங்களின்படி, ba’al-ன் ஆசீர்வாதத்தைப் பெறவும், பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவும் உயர்மட்டக் குடும்பத்தினர் தங்கள் முதல் குழந்தையை நெருப்பில் பலியிடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் (ப்ளூடார்க் போன்றவர்கள்) மற்றும் Bible குறிப்பிடுகின்றன. இதில் குழந்தைகள் எரியும் நெருப்பிற்குள் எறியப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. நவீன மர்மக் கோட்பாடுகளில், 'Baal' என்பது வெறும் பண்டைய தெய்வம் மட்டுமல்ல, அது இன்று உலகை மறைமுகமாக ஆளும் சில ரகசியக் குழுக்களின் (Secret Societies) அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் உலகின் பெரும் செல்வந்தர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள 'baal ' போன்ற இருண்ட சக்திகளுக்குப் பலி கொடுத்து வணங்குகின்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு உயிரைப் பலியிடுவதன் மூலம் ஒரு பெரும் சக்தியைப் பெற முடியும் என்ற ரகசியக் கோட்பாட்டை (Occultism) பின்பற்றுபவர்கள் தான் இன்று உலகை ஆளும் அதிகார வர்க்கம். எப்ஸ்டீன் வழக்குகளில் 'ba’al' என்ற பெயர் அடிபடுவதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் எப்ஸ்டீனின் நிதிப் பரிமாற்றங்களில் 'ba’al' என்ற குறியீட்டுப் பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது, அவர் ஒரு ரகசிய சாத்தானியக் குழுவின் (Cult) உறுப்பினராக இருந்திருக்கிறார் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. எப்ஸ்டீன் தீவில் இருந்த விசித்திரமான நீலக் கோடுகள் கொண்ட கோவில் போன்ற அமைப்பு, பண்டைய வழிபாட்டுத் தலங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அதிகாரப் பசி கொண்டவர்கள் குழந்தைகளை பலிகொடுத்து தங்களின் 'எஜமானனுக்கு' (Baal) செய்யும் அர்ப்பணிப்பாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள், தங்களைச் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளவும், தங்களின் ரகசியக் கூட்டமைப்பை (Elite Cult) வலுப்படுத்தவும் இத்தகைய 'Ba’al' காலத்து இருண்ட சடங்குகளை நடாத்துகின்றனர். பண்டைய கார்த்தேஜ் நகரில் செல்வந்தர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படி குழந்தைகளைப் பலி கொடுத்தார்களோ, அதையேதான் நவீன கால "நிழல் உலக மனிதர்களும்" (Shadow Elite) செய்கிறார்கள். Gabriela rico jimenez போன்றவர்கள் அலறியது இதைப் போன்ற ஒரு கொடூரமான சடங்கைக் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம் என்பதே பலரது வாதம். Gabriela rico jimenez ஒரு மனநோயாளி அல்ல, மாறாக ஒரு இருண்ட கதவைத் தவறுதலாகத் திறந்துவிட்ட சாட்சி என்பதை எப்ஸ்டீன் வழக்கு நமக்கு உணர்த்துகிறது. இந்த அதிகார வர்க்கத்தின் பின்னணியில் இருக்கும் சாத்தானிய சடங்குகளும், பண பலமும் எத்தனையோ உண்மைக் குரல்களை நசுக்கியுள்ளன. Gabriella rico jimenez இன்று எங்கே என்பது தெரியவில்லை, ஆனால் அவர் எழுப்பிய அந்த அலறல் சத்தம், இந்த உலகை ஆளும் நிழல் மனிதர்களின் முகத்திரையை ஒரு நாள் கிழித்து தொங்க விடும். Mukinthan Thurairajasingham- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
ஆபீசில் இருந்து, அறிக்கை விடுவதற்கு.... ஆதாரம் கேட்கப் படாது. கேட்டாலும்... அதை எல்லாம், கணக்கில் எடுக்க மாட்டார்கள். எல்லோரும்.... தங்கள் உத்தமன் என்று வேஷம் போட்டுக் கொண்டு திரிவார்கள். வாயாலை... ஜனநாயகம், அகிம்சை என்று சொந்த மக்களையே பேய்க்காட்டி வைத்துள்ளது இந்திய அரசியல்.- அந்த... நூறு பேர், யார்?
வாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம். இந்த நூறு பேர் யார்? நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம். நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது. கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா? அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்? காலச்சக்கரம் சுழலச் சுழல, ஒரு காலத்தில் மிகப் பெரியதாகத் தெரிந்த பல பிம்பங்கள் இன்று சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. இன்னும் ஒரு நூறு வருடங்கள் கழித்து நம்முடைய நிலையும் இதுதான். நாம் இன்று யாருக்காகப் பயந்து நம் சந்தோஷங்களைத் தொலைக்கிறோமோ, அன்று அந்த நூறு பேரும் இருக்க மாட்டார்கள் நாமும் இருக்க மாட்டோம். அப்படியிருக்க, இன்றைய பொழுதை மற்றவர்களின் திருப்திக்காகத் தியாகம் செய்வது எவ்வளவு பெரிய அறியாமை? வாழ்க்கை என்பது நமக்குக் கிடைத்த ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. இதில் நாம் எடுக்கும் முடிவுகளும், நாம் அடையும் வெற்றிகளும், ஏன் நாம் சந்திக்கும் தோல்விகளும் கூட நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும். மற்றவர்களின் கைதட்டலுக்காகவோ அல்லது விமர்சனங்களுக்காகவோ நாம் நம் பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் காயப்படுத்தாமல், எவரையும் ஏமாற்றாமல், நம் மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வதே ஒரு மனிதன் அடையும் ஆகச்சிறந்த வெற்றியாகும். நம்முடைய வாரிசுகள் என்றாவது ஒருநாள் நம் புகைப்படத்தைப் பார்க்கும்போது, “இவர் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து பயந்து வாழ்ந்தவர்” என்று சொல்லாமல், “இவர் தனக்குப் பிடித்த மாதிரி, யாருக்கும் அஞ்சாமல், மிக நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்” என்று சொல்ல வேண்டும். அதுதான் நாம் விட்டுச் செல்லும் உண்மையான சொத்து. எனவே அன்பானவர்களே, அந்த நூறு பேரின் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காமல், உங்கள் மனதின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள். உங்களது தனித்துவமான வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியோடு வாழுங்கள். ஏனெனில், உங்கள் கதையில் நீங்களே நாயகன். Balaji Srinivasan- ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
இந்தத் தலைப்புக்காகவே... 1000 பேர் இந்தப் பக்கத்தை பார்வையிட வருவார்கள். 😂- கருத்து படங்கள்
- யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 04.02.1957 அன்று சிறீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது. 1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் உயிரந்த திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர். https://athavannews.com/2026/1463307 - யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.