Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை! வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தவகையில் கற்கை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கற்கை நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், கல்வியியலாளர்கள், மாநாடுகளுக்கான வளவாளர்கள் மற்றும் ஆர்வங்காட்டுகின்ற துறைசார் நிபுணர்கள் பரிமாற்றம், இருநாடுகளாலும் வழங்கப்படுகின்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்குதல் மற்றும் கொழும்பு மற்றும் மாலே போன்ற நகரங்களில் பாடநெறிகள் மற்றும் மாநாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைதீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440170
  2. என்ன ஒரு அன்பு கலந்த அக்கறை. 🙂👍🏽
  3. செம்மணி புதைகுழியில் இன்று.. குழந்தையின் பால் போச்சி, 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம்.com
  4. அல்வாயன் நீங்கள் கூறியது போல்... ஐரோப்பாவில் இயங்கும் சில திருமண சேவையின் இணையப் பக்கங்களை பார்த்த போது, முன்பு இல்லாத அளவிற்கு எல்லோரும் தமது சாதியிலேயே திருமண சம்பந்தங்களை எதிர்பார்ப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
  5. கொழும்பில் ஒரு தமிழர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் பேரில் வவுனியாவில் ஒரு வீட்டில் 5600 போதை மாத்திரைகள் , 10கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க பாதாள உலக கோஸ்டியினரின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மீண்டும் புலிகள் என்று வதந்தி பரப்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிள்ளையான் வழங்கிய தகவலின் பேரில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அடுத்து சுரேஸ்சாலே எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தமக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்த கோத்தபாயா கும்பல் அதில் இருந்து தப்புவதற்காக மீண்டும் புலிகள் என்ற வதந்தியைப் பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு தாக்குதலைக்கூட தென்னிலங்கையில் நிகழ்த்தலாம் என்பதால் அரசு இதற்கு இடங்கொடாது விரைந்து கோத்தபாயாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தோழர் பாலன்
  6. வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது! வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார். நேற்றைய தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகைதந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்ற தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வேல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440191
  7. செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்! யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் 8 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440171
  8. யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு. ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள். அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார். இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன. அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை. நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு. இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும். Sivachandran Sivagnanam ·
  9. இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு! கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் கடந்த 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440153
  10. இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல். இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் AI Singapore திட்டத்துடன், இலங்கையின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டு, இந்த ஒத்துழைப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இடையே MoU ஒன்றை கையெழுத்திட ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440134
  11. சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பா அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்இ ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள்இ கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி. மு.க. இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440105
  12. காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றார். காசா போர் 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும்,1,700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல உலக நாடுகள், இந்த மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. காசாவில் ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், பிராந்தியத்தில் அமைதி திரும்புவது கடினம் என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440098
  13. அடுத்த முதல்வர் யார்.... கனிமொழியா, உதயநிதியா. நாளைக்கு... பங்காளி சண்டை வரக்கூடாது என்பதற்காக, இப்பவே உயில் எழுதி வைப்பது நல்லது.
  14. தமிழக முதல்வர் ஏன், அரசு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கவில்லை. தமிழக முதல்வருக்கே... அரசு ஆஸ்பத்திரியில் நம்பிக்கை இல்லை என்றால்.. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.
  15. அதானியின் திட்டங்களை நிறுத்தியமைக்கு ரூ. 500 மில்லியனை இலங்கை செலுத்த வேண்டும்.
  16. அமெரிக்க மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்! இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கும் பிற வர்த்தக பங்காளிகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையின் அடிப்படையில் பரஸ்பர வரிகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதனால், இலங்கை உட்பட பல நாடுகள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இணைந்து கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44% வரி விகிதத்தை அறிவித்த போதிலும், அது எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போது 30% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கட்டண விகிதத்தை மேலும் குறைக்கும் முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் விவாதங்களை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எண்ணெய் கொள்முதல் செய்யும் போது டெண்டர் செயல்பாட்டில் அமெரிக்க WTI மசகு எண்ணெயை சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் டாக்டர் மயூரா நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார். தற்போது இலங்கை, வளைகுடா பிராந்தியத்திலிருந்து மசகு எண்ணெய் இருப்புக்களை கொள்முதல் செய்கிறது என்றும், இருப்பினும், WTI மசகு எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை எதிர்கால டெண்டர் செயல்பாட்டில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். இருப்பினும், விலைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு எந்த வகையான மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அமெரிக்கா தனது கட்டண விகிதங்களைக் குறைக்க முடிவு செய்தால், அது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். பரஸ்பர கட்டணங்களை மேலும் குறைப்பதற்கான தகுதியாக வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்காக அமெரிக்காவிலிருந்து (அமெரிக்கா) எண்ணெய் கொள்முதல் செய்வதை பரிசீலிக்க இலங்கை தயாராக உள்ளது என்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைப்பிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோவின் தகவலுக்கு அமைவாக, கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த எரிபொருள் இறக்குமதி 4.3 பில்லியன் டொலர்களாக இருந்தது. அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்கள் மீது 30 சதவீத வரிகளை விதித்துள்ளது. இருப்பினும், இந்த விகிதத்தை மேலும் குறைப்பதற்காக ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை இலங்கை பேச்சுவார்த்தை நடத்த கதவுகள் திறந்திருக்கும். 2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதி மொத்தம் 3 பில்லியன் டொலர்களாக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை 368.2 மில்லியன் டொலர்களாக இருந்தன. இதன் விளைவாக இலங்கைக்கு ஆதரவாக 2.6 பில்லியன் டொலர் வர்த்தக உபரி ஏற்பட்டது. அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும், இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 27% ஆகும். அமெரிக்காவிற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகளில் ஆடைகளும் அடங்கும். https://athavannews.com/2025/1440003

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.