Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என்றால், ரஷ்யாவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அமெரிக்காவின் secondary sanctions அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக மார்க் ருட்டே, அமெரிக்க செனட் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் கூறியதாவது: ‘பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால், இந்த நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, ரஷ்ய ஜனாதிபதி புதினை அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை இந்நாடுகளும் சந்திக்க நேரிடும்‘ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439560
  2. கோசான்... நான், பகிடிக்கு சொல்ல வில்லை. நீங்கள் வக்கீல் சம்பந்தமாக படித்திருக்கின்றீர்கள் எனது நீண்ட நாள் சந்தேகம். நீங்கள் சொல்லாட்டிலும்... குடுமி காட்டிக் கொடுத்து விடும். 😂
  3. சும்மா கிடக்குது என்றால்... காவி உடுப்பை கடாசி எறிந்து விட்டு, கலியாணம் கட்ட வேண்டியதுதானே. காவியும் வேணும், காமமும் வேணும் என்று... இரு தோணியில் கால் வைக்கப் படாது கண்டியளோ.... 😂
  4. இலங்கையரின் குடியேற்ற சர்ச்சை; பொது பாதுகாப்பு அமைச்சர் மீது நம்பிக்கையுள்ளதாக கனேடிய பிரதமர் தெரிவிப்பு! கனடாவில் தற்சமயம் சர்ச்சைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)க்கான ஆதரவினை அந் நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி வெளிப்படையாக கூறியுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அமைச்சராக வருவதற்கு முன்பு, கனடாவிற்குள் நுழைவதற்கு கூட்டாட்சி அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை அவர் ஆதரித்தார் என்ற அறிக்கை வெளியானதும் சர்ச்சைகள் எழுந்தது. இந் நிலையிலேயே பிரதமர் மார்க் கார்னி, கேரி ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நீதி அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராக ஆனந்தசங்கரி இருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமாரனை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை ஆதரித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். கனேடிய குடிவரவு அதிகாரிகள் செல்வகுமாரன், தமிழ்ப் புலிகள் என்று அழைக்கப்படும் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று தீர்மானித்த பின்னர் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செவ்வாயன்று (15) குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையில் நீண்ட காலமாக சுதந்திரப் போரை நடத்தினர். மேலும் 2006 முதல் கனடாவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளனர். கனடா எல்லை சேவைகள் நிறுவனம் செல்வகுமாரனை அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்ததன் அடிப்படையில் குடியேறியவராக நிராகரித்திருந்தாலும், ஆனந்தசங்கரி அவர்களின் முடிவை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், டொராண்டோவிற்கு குடிபெயர்வதற்கான அந்த நபரின் முயற்சியை ஆதரித்து ஆனந்தசங்கரி கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துக்கு கடிதங்களை எழுதினார். அதில் மிகவும் அண்மைய கடிதம் நீதித்துறை நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி இருந்தபோது எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில், இது குறித்து புதன்கிழமை (16) எஃகுத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தனது திட்டங்களை வெளியிட்டதன் பின்னர் உரையாற்றிய கனடப் பிரதமர் கார்னி, “பொது பாதுகாப்பு அமைச்சர் அந்த சூழ்நிலையின் விவரங்கள் குறித்து வெளிப்படையாக இருந்தார், மேலும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார். கடந்த மே 13 அன்று கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக ஆனந்தசங்கரியை கார்னி நியமித்திருந்தார். வெள்ளை மாளிகை வர்த்தகப் போரைத் தவிர்க்க, போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிராக கனடா தனது எல்லையை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நம்ப வைக்கும் பொறுப்பு ஆனந்தசங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் உலகத் தமிழ் இயக்கம் தொடர்பான முடிவுகளில் இருந்து ஆனந்தசங்கரி தன்னை விலக்கிக் கொண்டபோது அவர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439541
  5. பணம் பறிக்கிறது ஒரு பக்கம் இருக்க... புத்த துறவிகள் என்றால்.... காமலீலை விளையாட்டு காட்டுவதில் ஸ்ரீலங்காவும், தாய்லாந்தும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். 😂
  6. //தனது வாக்காளர் ஒருவருக்கு பா.உ. இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம். அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான்.// முன்னணி வக்கீலுக்கு உரிய தரமானதும், அசைக்க முடியாததுமான கருத்து. ✔️
  7. இவர்கள் எல்லாம் உயிருடன் இருப்பதே இப்பதான் தெரியும். குட்டையை குழப்ப இந்தியா அனுப்பி வைத்திருக்கும். 10 வாக்கு எடுக்க வக்கு இல்லாததுகள் எல்லாம் அரசியல் செய்ய வெளிக்கிடுவது கேவலம்.
  8. ஹரி ஆனந்தசங்கரி ஒருவருக்கு உதவி செய்யப் போய், சிக்கலில் மாட்டிக் கொண்டது தூரதிஷ்டவசமானது. என்றாலும்… கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் நம்ப்பிக்கை ஆறுதலான விடயம். 🙂 இப்படியான உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களை குறி வைத்து சிங்கள அரசே பின்னுக்கு இருந்து காய் நகர்த்திக் கொண்டிருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.
  9. ஐ.நா. இலங்கையில் உள்ள முஸ்லீம்களின் பிறப்பு விகிதத்தை கணக்கில் எடுக்கவில்லைப் போலுள்ளது. எடுத்திருந்தால்… ஐ.நா. தலையில் கை வைத்திருக்கும். 😂
  10. சாவகச்சேரி நகரசபையின் தீர்மானம் வரவேற்கத் தக்கது. இந்த முன் மாதிரியை பின்பற்றி மற்றைய நகர, கிராம சபைகளும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் காப்பகம் அமைக்க முன் வரவேண்டும். 🐕 🐕‍🦺 ஊரில்… நாய்த் தொல்லை, பெரும் தொல்லையப்பா. வீதியால் நடந்து போனால் குலைக்குது, சைக்கிளில் போனல் விட்டு திரத்துது… இதுகளுக்கு என்ன வேணுமென்றே தெரியவில்லை. போகவும் வரவும் பெரிய கொட்டன் பொல்லையும் கொண்டு திரிய வேண்டிக் கிடக்குது. 😂 👨🏾‍🦯
  11. முதல்வர் தமிழரசு கட்சி ✅. துணை முதல்வர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒட்டுக்குழு கட்சியா? அல்லது…. இருவரும் ஒரே கட்சியா.
  12. நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் - நடக்கக்கூடாது 🤲🤲🤲 - முதலில் என்ன செய்வீர்கள்? அது பற்றிய சில வழிகாட்டல்களையே இங்கு பார்க்கப் போகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது. ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள். ♦️நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும். ♦️ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும். ♦️உங்கள் வாகன இருக்கையில் காணப்படும் "ஹெட்ரெஸ்ட்டை" தலைத் தலையாணையை கழற்றி, அதிலுள்ள உலோக முனையை பயன்படுத்தி அல்லது வாகனத்தினுள் காணக்கிடைக்கும் ஏதாவது உடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் தப்பிக்க இலகுவான வழியாகும். ♦️ஏன் பின்புறக் கண்ணாடி? பெரும்பாலான வாகனங்கள் தணீணீரில் மூழ்கும் போது முதலில் பின்புறம் மிதக்கும் படியாகவே வடிவமைக்கப்படுகின்றன. ♦️ஆதலால் தீங்கள் பின்புற கண்ணாடியால் தப்பிக்க முயற்சிப்பதே மிகவும் எற்றமான மற்றும் பாதுகாப்பான வழியாகும். பாதுகாப்பான பயணம் அமைய வாழ்த்துக்கள். Imran Farook
  13. அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு! அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், பிற்பகல் பிற்பகல் 2:45 மணிக்கு சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1439478
  14. இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.
  15. ஈழத்தில் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கிய தங்க தாத்தா !!!
  16. தமிழுக்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ( 25.05.1878 - 10.07.1953 ) யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் 1878 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதோடு ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். 'அட்டகிரி முருகன் பதிகம்', 'அட்டகிரி முருகன் திருஊஞ்சல்', 'சாவித்திரி கதை', 'பசுவின் கதை' உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை. வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கி அங்கு நாற்பது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி தமிழ், ஆங்கிலம் மற்றும் இதிகாசங்களைக் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமய பாடங்களைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தினார். பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள்ளார். 400 இற்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தமானது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. யாப்பிலக்கணங்களைக் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். 'சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910 இல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927 இல் ஈழத்துத் தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர். ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். குழந்தைகளுக்கான 'ஆடிப்பிறப்பு', 'கத்தரிவெருளி', 'புளுக்கொடியல்', 'பவளக்கொடி', 'இலவுகாத்த கிளி' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி "சிறுவர் இலக்கிய முன்னோடி" என்ற பெருமை பெற்றார். 'தாடி அறுந்த வேடன்', 'எலியும் சேவலும்' உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை. ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. தமிழி_அமைப்பு
  17. ஆடிக்கூழ். நாளை ஆடிப்பிறப்பு. (17.07.2025) ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம். ஆடிக்கூழ் செய்யும் முறை 👇 தேவையான பொருட்கள்: 750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி ½ கப் முழுப் பயறு ½ கப் வறுத்த உளுத்தம் மா ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு செய்முறை: அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும். அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். ஆடிக் கூழ் தயார்! குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும். Babu Babugi
  18. மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் உள்ளூராட்சி அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த பாதீட்டில் இருந்து 23 பில்லியன் ரூபாவும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1439452
  19. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை! அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெலிகெபொல ஹட்டங்கல பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகலவினால் குறித்த உத்தரவு இன்று (16) பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1439445
  20. 8ஆண்டுகள் குழந்தைகளுடன் குகையில் வாழ்ந்துவந்த பெண் வெளியிட அதிர்ச்சி தகவல்கள்! கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார் , மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருப்பதை அவதானித்துள்ளனர். அவரை விசாரித்தபோது, அவரது பெயர் நினா குடினா (40) எனவும், அவர் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து 3 பேரையும் பொலிஸார் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை மேற்கொண்ட கோகர்ணா பொலிஸாரிடம் உண்மைகளை கூறிய நினா , ”நான் ரஷ்யாவைச் சேர்ந்தவள். 2016ஆம் ஆண்டு சுற்றுலா பயணியாக கோவாவுக்கு வந்தேன். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து கோகர்ணாவில் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். இங்கிருந்து நேபாளத்துக்கு சென்று, 2017இல் மீண்டும் கோகர்ணாவுக்கு வந்தேன். இந்த குகையை எனக்கு கடந்த‌ 8 ஆண்டுகளாக தெரியும். ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால் உள்ளூர் சாமியார் ஒருவர் தியானம் செய்வதற்காக இந்த குகையை காட்டினார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் மூலம் 2 பெண் குழந்தைகளையும் பெர்றேடுத்துக்கொண்டேன். தற்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலையில், என்னுடன் மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) இருக்கிறார்கள். என் மகள்க‌ளுக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன், நாங்கள் தினமும் ஆற்றில் குளித்துவிட்டு 3 பேரும் தியானம் செய்வோம். 10 நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவேன். எனக்கு தேவையான பணத்தை உறவினர்கள் சிலரும், நண்பர்களும் அனுப்பி வைப்பார்கள். என்னிடம் தொலைபேசி இருந்தாலும், அதனை பெரிதாக பயன்படுத்த மாட்டேன். இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும். எனக் கூறியுள்ளார். குறித்த விசாரணையை அடுத்து பொலிஸார் ரஷ்ய பெண்ணையும், அவரது மகள்களையும் கோகர்ணா மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் கடவுச்சீட்டு , விசா போன்றவற்றை பரிசோதித்து, ரஷ்யாவுக்கு மீண்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1439472
  21. ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை அமுல் ! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஒன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமுலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து ஹலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கூறிய பதில்தான் அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மதுபாட்டில்களின் மூடிகளை தின்றுவிட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக கூறினர். இந்த பதிலை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஊழியர்கள் கூறியது பொய் என்பதை அறிந்த அதிகாரிகள் அந்த ஊழியர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து பொலிஸார் அதிகாரி ராம்லீலா ரவாணி தெரிவிக்கையில், மதுபோத்தல்களை எலிகள் குடித்ததா இல்லையா என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. அரசு உங்களிடம் கொடுத்தது முழு மதுபோத்தல்களை அதேபோல் நீங்களும் எங்களிடம் முழு மது பாட்டில்களையும் ஒப்படையுங்கள் என கூறினார். காலியான அந்த மதுபோத்தல்களுக்கும் சேர்த்து பணத்தை செலுத்துமாறு உத்தரவிட்டார். மதுபோத்தல்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439386
  22. ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தற்போது நிலவும் சூழ்நிலையை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ஈரானில் இருந்து வெளியேற கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் வெளியேற ஆர்வம் உள்ளவர்கள் வணிக விமானங்கள் மற்றும் படகுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1439405
  23. கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை. சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது. விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1439372

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.