Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. கொழும்பு, கம்பஹா மக்கள் தொகை அனிப்படையில் பெரிய மாவட்டங்கள். கொழும்பு Metropolis city . அவற்றுக்கு முறையே 24,18 என்றுவர சிறிய மாவட்டமான கிளிநொச்சிக்கு மூன்றாவது இடத்தில் 16 அனுமதிகள். கிளிநொச்சி றெக்கோட் இந்த விஷயத்தில்.
  2. இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலமைப்பு அறிஞராகவும் சர்வதேச அளவில் பல நாட்டு ராஜதந்திரிகளிடையே மதிக்கப்படுபவராகவும் இருந்து, “இலங்கை பிரிக்கப்பட முடியாத இரு அலகுகளை கொண்ட ஒன்றியம்”என்ற அரசியலமைப்பு தீர்வு வரைவை எழுதிய நீலன் திருச்செலவம் 1997ல் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்படும் போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வில்லைத் தானே! ( இதை தான் சொல்வது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று. அப்படியான ஒரு தீர்வு வரைவை பற்றி பேசுவதை கூட தமிழ் மக்களால் இன்று நினைத்து பார்க்க கூட முடியாது.13 ஐ ஆவமு நீக்காமல் விடப்பா என்று அநுராவை பார்த்து கெஞ்சவேண்டிய நிலை)
  3. கஜேந்திரகுமார் அவருடன் சுற்றி இருக்கும் குதிரை கஜேந்திரன் போன்ற களிமண் மண்டைகளின் பேச்சை கேட்காமல் ஜதார்த்தவாதியாக மாறி அரசியல் தீர்வு விடயத்தில் செயற்பட்டால் அது வரவேற்கப்பட வேண்டியதே.
  4. கோசான், எனக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட கோபதாபமும் இல்லை. அவர்களின் மோசமான அரசியலையே விமர்சிதேன். அவர்கள் மனம் புண்படும் என்பதற்காக அவர்களின் தவறுகளை விமர்சிக்கக கூடாது என்பது உங்கள் வேண்டுகோள். ஒற்றுமை என்பது neutral ஆக தமிழ் மக்களுக்காக அறிவுசார் அரசியல் செய்யும் போதே சாத்தியம். இவர்களது பழைய கறள்கட்டிய கிணற்றுத்தவளை உதவாக்கரை அரசியலுக்கு சிஞ்சா போட்டு தான் ஒற்றுமை வரும் என்றால் அப்படியான மக்களுக்கு எந்த பிரயோசனமும் அற்ற ஒற்றுமைநால் எந்த பயனும் இல்லை. என்பிபி க்கு தமிழர் வாக்களித்ததும் அதனால் தான். வேறு ஒரு திரியில் நான் கூற வந்த அதே கருத்தையே நீங்களும் உங்கள் பாணியில் கூறியுள்ளதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
  5. அருமையான கருத்து. எனது பாணியில் நான் கூறுவதற்கும் இதற்கும் கருதியலில் வேறுபாடு இல்லை. நன்றி.
  6. நீங்கள் கூறிய இந்த Supporters கள் போற்றிப் புகழுவது போல் பாசாங்கு செய்து தமது சுயநல அரசியலை வளர்தது கொள்கிறார்களே தவிர நீங்கள் கூறியதைப் போல் அரசியல் தீர்வு முயற்சியில் கிஞ்சித்தும் முன் நகரவில்லை. அதை செய்யும் திறமையும் இவர்களுக்கு இல்லை. இந்த Supports தங்களது அரசியல் கொள்கைகளுடனும், அவர்கள் தற்போது செய்துவரும் அரசியல் மூலமோ இவர்களால் இலங்கையில் எந்த அரசியல் தீர்வையும் காணமுடியாது மட்டுமல்ல அதை நெருங்கக் கூட முடியாது. அரசியலமைப்பு மூலமான எந்த தீர்வும் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியம். உலக நாடுகள் கூட அதையே வலியுறுத்தும். புலிகள் பலமாக இருக்கும் போதே உலக நாடுகள் அதையே வலியுறுத்தின என்பது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இன்றைய டுபாக்கூர் அமைப்புகளின் நிலை எப்படி இருக்கும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதுவே reality. இதற்கு தமிழர் சார்பில் Neutral ஆன தமிழ் அமைப்புகள் மூலம் மக்களின் அபிலாசைகள் நியாயப்பாடுகள், பாதிப்புக்கள் குறித்த தெளிவான பரப்புரைகளை பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் செய்து அவர்களின் ஆதரவுடனேயே நிரந்தரமான அரசியல் தீர்வை காண முடியும். இந்த Supporters களுக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் தங்கள் லூசுத்தனமான அரசியலை விடுத்து இப்படியான neutral அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்து மக்களின் நன்மைக்கான பங்களிப்பினை வழங்கலாம். மற்றப்படி Supports இன் சொந்த அரசியல் என்பது குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் பயன்றற அரசியலே. 2009 க்கு முன்னரான Supporters என்பது புலிகளை இராணுவரீதியில் பலப்படுத்துவதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்த்தி ஓரு நியாயமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அவாவின் அடிப்படையில் பரவலாக உருவானது. அது புலிகளுக்கு பலத்தை வழங்கியது. ஆனால், இன்றைய Supporters இன் நோக்கம், “ போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” என்ற ரேஞ்சில் மட்டுமே உள்ளதேயொழிய எந்த தெளிவான அறிவுசார் அரசியல் மயப்பட்டதல்ல. அவ்வாறான அறிவுசார் அரசியலில் அவர்களில் பெரும்பான்மையினர் வளர்தெடுக்கப்படவும் இல்லை. அவர்களும் என்ன செய்வார்கள் வச்சுக்கோண்டா வஞ்சகம் செய்கிறார்கள்.
  7. நீங்கள் கூறியது உண்மையானால், நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப் பற்றி பேசிய மென்போக்கு த்திழ் தேசியம் பேசிய அரசியல்வாதிகளை துரோகிகள் பட்டம் சூட்டி ஒதுக்கி விட்டு வரட்டு தேசியம் பேசிய சைக்கிள் தரப்பை புலம் பெயர் தேசியவாதிகள் ஆதரித்தது ஏன்? ஶ்ரீலங்காவில் கடும் போக்கு மகிந்த, கோட்டபாய போன்றோர் பதவிக்கு வருவதை விரும்பியது ஏன்? ஒப்பீட்டு ரீதியில் சற்றே மென்போக்கு கொண்ட, ஆனால் அநுரா போல் அல்லாமல் தமிழரின் அடையாளத்தை ஏற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா அரச தரப்புகளைக் கூட கடுமையாக எதிர்தத்துடன் கடும்போக்கு தரப்புகள் வந்து தமிழ் மக்களை அடக்குவதே தேசியத்துக்கு நல்லது என்று புலம் பெயர் தரப்புகள் விரும்பியது ஏன்? ( யாழில் கூட அது எழுதப்பட்டது ஞாபகம் உள்ளது.)
  8. நான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த கருத்தை கூறவில்லை கோஷான். இலங்கை அரசின் யுத்த குற்றங்களைப் பேசிக்கொண்டு தமிழரிடையே உசுப்பேற்றும் கருத்துக்களை பேசுவோரிடை மட்டுமே இதைக் கூறுகிறேன். “ஶ்ரீலங்கா அரசு மட்டுமே நேர்மையற்றது, நாம் மிக நேர்மையாக அறத்துடன் எமது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்”, என்று வரலாற்று உண்மைகளைத் திரித்து மக்களையும் அடுத்த தலைமுறையையும் உணர்சசிவசப்படுத்துபவர்களை நோக்கியே, அப்படியில்லை நம் பக்கமும் யுத்த நடவடிக்கையில் நேர்மை இருக்கவில்லை, அவர்களுக்கு இணையாக பல சம்பவங்களை எமது தரப்பும் செய்தது என்ற உண்மையை சுட்டிக்காட்டவே அதைக் குறிப்பிட்டேன். இதை தமிழரிடையே சுட்டிக் காட்டுவதால் அது தமிழருக்கு தீர்வு கிடைப்பதில் இடைஞ்சலை உண்டாக்கும் என்ற உங்களது கருத்தை நான் ஏற்கவில்லை. நிற்க, புலிகள் செய்த குற்றங்களை தமிழ் மக்கள் செய்ததாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை, தமிழ் மக்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. புலிகளின் தவறுகளை தூக்கி சுமக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை என்ற உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன். உண்மையில் மிக சிறந்த உலக அரசியல் தெளிவு கொண்ட பாரவை அது. ஆனால், உங்களுடைய இந்த தெளிவு ஐநாவில் மனித உரிமை கூட்டங்களில் அரசு சார்பற்ற தமிழர் அமைப்புகள் சார்பாக யுத்தக்குற்றங்கள் பற்றி சர்வதேச ராஜதந்திரிகளுடன் கடந்த 15 வருடங்களாக பேசுவதாக கூறிவரும் தமிழர் அமைப்புகளுக்கு உள்ளதா? நான் பார்த்தளவில் ஐநாவில் தமிழர் சார்பாக செல்வோர் எல்லாம் நீங்கள் கூறியதைப் போல் தெளிவான சிந்தனையுடன் குறைந்தது வெளிப்பார்வைக்காவது தம்மை மக்களின் பிரதிநிதிகளாக நடந்து கொள்வதில்லை. கிட்டத்தட்ட புலிகளின் பேச்சாளர்கள் போலவே அவர்கள் நடந்து கொள்ளும் போது இங்கு நீங்கள் கூறியது எப்படி சாத்தியமாகும்? ஜநா மனித உரிமை அமர்வுகளிலோ அல்லது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கோ, சர்வதேச பத்தியாளருக்கோ சுமந்திரன் தன்னிச்சையாக இவ்வாறு கூறியிருந்தால் அது தவறான செயல். ஆனால், அப்படி தன்னிச்சையாக சர்வதேச அரங்கில் கூறியிருந்தாரா அல்லது பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அப்படி கூறியிருந்தாரோ, அல்லது தமிழர் அமைப்புகளுடன் பேசும் போது மட்டும் அதைக் கூறினாரோ என்பது குறித்த எந்த தெளிவான செய்தியோ ஆதாரங்களோ இல்லை. மக்களின் பணத்தை சுருட்டிய புலம் பெயர் திருட்டு தேசியவாதிகளினது கூற்றுகளை மட்டும் வைத்து இதை எடை போட முடியாது.
  9. ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பிரான்ஸில் இருக்கும் ஒரு கடும்போக்கு தமிழ் இனவாதி அநுரா வருவதை வரவேற்று தனது முகநூலில் எழுதியிருந்தார்.(முன்பு ஒரு பதிவில் அதைக் குறிப்பிட்டிருந்தேன்) அநுர ஐனதிபதியாக வந்தால் பாரிய அடக்குமுறைகளை தமிழ் மக்கள் மீது செய்வார். எமக்கும் அது தான் தேவை. தமிழீழம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தனது புதிய பாய்ச்சலைத் தொடங்கும் என்று அநுர தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளவார் என அக மகிழ்ந்திருந்தார். அதே ஆட்கள் இப்போது பதட்டப்படுகிறார்கள் முன்பு 2005 ல் ரணில் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் கிடைக்காது, மகிந்தவை கொண்டு வந்தால் அவருடன் யுத்தம் புரிந்து தமிழீழம் எடுக்கலாம் என்று மகிந்தவை கொண்டு வந்த பின்னர் பதட்டப்பட்டதைப் போலவே இப்போது இவர்கள்பதட்டப்படுகிறார்கள். (ஐயோ தெய்வக்குற்றம் புரிந்துவிட்டேனோ!😳 escape😂
  10. இந்தியாவுடன் இரண்டரை வருடங்கள் யுத்தம் புரிந்து இரத்தம் சிந்தியது மாகாணசபை முறையை எதிர்தது தானே!
  11. இந்த பத்தி எழுத்தாளர்களது கட்டுரைகள் எல்லாமே அரசியல் அலசல், ஆய்வு என்ற பெயரில் இருந்தாலும் வெறுமனேயே எதிர் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை சகட்டுமேனிக்கு அள்ளி வீசும் குற்ற அறிக்கைகளாகவே இருக்கிறதே தவிர அந்த சந்தர்பங்களில் எல்லாம் அதை சரிவர கையாள்வதில் தமிழர் தரப்பின் தவறுகள் என்ன என்பதையோ எவ்வாறான வழி முறையின் மூலம் தமிழ் மக்கள் படிப்படியாக தமது இலக்குகளை அடையலாம் என்பதை விபரிப்பனவாக இல்லை. அப்படி செய்வதாக இருந்தால் தமது காழ்புணர்ச்சை தீர்கக தமக்கு ஒவ்வாத அரசியல்வாதிகளை தேர்தெடுத்து ( Cherry pick) அவர்களை போட்டுத்தாக்குவர்கள். மற்றப்படி ஒட்டுமொத்தமான தமிழர் அரசியலில் எமது பக்க தவறுகளை கூறுவமோ விமர்சன கண்ணோட்டதுடன் அதை அணுகுவதோ ஏதோ தெய்வ குற்றம் என்பது போன்ற தோற்றத்தையே இவர்களது ஆய்வு என்ற பெயரில் வரும் குற்ற அறிக்கைகளில் காணலாம். பாரிய பலத்தைடன் இருக்கும் பேரின வாத அரசுடன் யுத்தம் புரியும் போதோ பின்னர் பேச்சு நடக்கும் போதோ எண்ணிக்கையில் குறைந்த அடக்கப்படும் இன தலைமைகளுக்கு அதிக பொறுப்பு இருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்வு எம் தரப்பில் இருந்ததா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். அப்படியே எவரவது அந்த பக்கத்தை சற்றே தொட்டாலே “ஐயோ கொச்சை படுத்தீட்டான்” என்று ஒப்பாரி வைத்து ஊரைக் கூப்பிடுவதும் பின்பு கைக்கூலி, துரோகி என்று தீட்டி தீர்பதுமே வழமை என்பதை உணர்ந்து நீங்களும் அதை பற்றி உரையாடுவதை தந்திரோபாய ரீதியில் தவிர்கக முனைவீர்கள். உங்களது அந்த அணுகுமுறையை நான் குறை கூறவில்லை. அது ஒரு கருத்தாளனின் உரிமை அதை நான் மதிக்கிறேன். தாயகம் தேசியம், சுயநிர்ணயம் என்ற கோசத்தை முன்வைத்து பொதுவேட்பாளர் வட கிழக்கு மாகாணங்களில் பெற்ற வாக்குகளின் சத வீதம் என்ன? யுத்த குற்றங்கள் பற்றி இங்கு கூறப்பட்டது. இதைப் பற்றி முன்னரே கூறியிருந்தேன். இருந்தாலும் திரும்ப அது பேசு பொருளாகி இருப்பதால் மீண்டும் எழுதுகிறேன். ஶ்ரீலங்காவில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் தனது படையினரை சர்வதேச விசாரணைக்கு அனுப்பாது. அதை நன் சரி என்று கூறவில்லை. அது தான் ஜதார்த்த நிலை. 1990 ல் ஆயுதமின்றி சரண்டைந்த இலங்கை பொலிசாரை சுட்டு கொன்ற போராளிகளை தம்மிடம் விசாரணைக்கு தருமாறு சர்வதேசம் தலைவர் பிரபாகரனிடம் கேட்டிருந்தால் அவரும் அநுர எடுக்கும் அதே நிலைப்பாட்டையே எடுத்திருப்பார். 2002 பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்களை ராஜீவ் கொலை விசாரணைக்காக இன்ரபோல் தேடுகிறதே, உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்க, “நடக்கிற விடயங்களைப் பேசுவோம்” என்று கேலியாகப் பதிலளித்தவர் அவர். இதை நான் கூறுவது யாரையும் குற்றம் சொல்ல அல்ல. உலக ஜதார்ததம் அது தான் என்பதை புரிய வைக்கவே.
  12. நீங்கள் அவ்வாறு கூறவும் இல்லை கூறப்போவதும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவ்வாறான நிலையை உருவாக்க இங்கு யாழுக்குள் மட்டுமல்ல வெளியிலும் பலரும் முயன்றுவருகின்றனர். அவர்களை நோக்கியே எனது எழுத்து இருந்தது.
  13. இனப்பிரச்சனை இலங்கையில் உருவாகி 75 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தமிழர் சார்பில் அரச அடக்குமுறைக்கு எதிராக தலைமை வகித்தோரால் எதையும் உருப்படியாக செய்ய முடியவில்லை. தலைமுறை தலைமுறையாக இளம் குருத்துக்களை அவர்கள் வாழவேண்டிய தில் பலி கொடுத்து, மக்களை கல்வி, பொருளாதார ரீதியிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பலவீனப்படுத்தியதை தவிர இந்த வரட்டு தேசியவாதிகளால் எதையும் சாதிக்க முடியவில்லை. பந்தி பந்தியாக வரட்டு தேசியவாதம் பேசி புலம்பும் பேர்வழிகளுக்கு நான் கூறிக்கொள்வது என்ன வென்றால், தாயகத்தில் தமிழ் மக்கள் பிள்ளைகளை பெறுவது போராடி அழிந்து போக அல்ல. உங்களுடைய பிள்ளைகளை எப்படி புலம் பெயர் நாடுகளில் படிப்பித்து சொகுசாக வளர்கக விரும்புகின்றீர்களோ அதே போன்ற ஆசை அவர்களுக்கும் உள்ளது. தாம் ஜாலியாக வாழ்ந்து கொண்டு தமது சந்திதியையும் அப்படி வாழ வைத்துக்கொண்டு மக்களை அறிவு ரீதியாக சிந்திக்க விடாது உணர்சசி வசப்படுத்தும் வரட்டு தேசிய கருத்துக்களை எழுதி தாம் இறப்பதற்குள் அடுத்த தலைமுறைக்கும் அள்ளி வைத்துவிட்டே செல்ல வேண்டும் என்ற முனைப்பில் பந்தி பத்தியாக விஷ கருத்துக்களை விதைக்கும் சுயநலமிகள் இதை சிந்திக்க வேண்டும். இல்லை இல்லை அவர்கள் சிந்திக்க போவதில்லை. தமது வாழ் நாள் முழுவதும் வெறுப்பையும் குரோதத்தையும் விதைக்கும் மன நோயாளர்களாகவே இவர்கள் இருப்பார்கள். எனவே இந்த மன நோயாளர்களின் பத்தி எழுத்துகளை முற்றாக புறக்கணித்து காலத்துக்கு ஏற்ப தம்மை தகவமைத்துகொண்டு அறிவுசார் ரீதியில் புதிய தந்திரோங்களின் அடிப்படையில் தாமாக சிந்தித்து செல்வதே புதிய தமிழ் தலைமுறையினருக்கு இப்போது உள்ள வழி. இதன் மூலமே புதிய தலைமுறை இலங்கையில் தமது இருப்பை பாதுகாத்து எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்.
  14. வசந்த முதலி மக்கள் போராட்ட முன்னணியை சேர்ந்தவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சி சார்பாக முதன்மை வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டிட்டவர். என்பிபி ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த ஆட்சி மீது விமர்சனங்களை அக்கட்சி செய்கிறது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கூட ஆளும் ஆட்சியை வலியுறுத்துகிறது. பல்வேறு வித்தியாசமான பார்வைகளை கொண்ட அமைப்புகள் issue basis ஆக இணைந்து செயற்படுவது உலகில் இயல்பானது. சற்று முரண்பட்டாலே துரோகி என்று போட்டு தள்ளிவிட்டு போகும் அரசியலுக்குள் ஊறி்த்திளைத்து இன்றும் அவ்வகையான அரசியலையே ஆதரிக்கும் வரட்டு தேசியவாத பேர்வழிகள் இவ்வாறு தமது வாழ்நாள் முழுவதும் பந்தி பந்தி புலம்புவதை பற்றி நாம் இங்கு அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
  15. அது சாராய சிறி நானும் ரவுடி தான் என்ற கோதாவின் அன்றைய உற்சாக பான உசாரில் பிலடப் கொடுத்தது. விடிந்தபின் அவரே அதை மறந்திருப்பார்.
  16. மாவீரர்கள் எனப்படுவோர் ஈழத்தமிழ் மக்களின் குடும்ப உறவுகள். அவர்களை நினைவுகூர மாவீரர்களின் உறவுகள் தேடி வருவது ஒன்றும் அதிசயமல்ல. மகிந்த, கோட்டா அரசுக் காலத்தில் கெடுபிடிகள் இருந்ததால் தமது உறவுகளை வீட்டில் இரகசியமாக நினைவு கூர்ந்தார்கள். பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவுடன் மைத்திரி/ ரணில் அரசு பதவிக்கு வந்ததும் கெடுபிடி தளர்ந்ததால் சற்று ஆறுதலாக துயிலுமிலங்களில் தமது உறவுகளை நினைவுகூரத் தொடங்கினார்கள். இருப்பினும் குறைந்த அளவில் அச்சுறுத்தல் இருந்தது. இப்போது அநுர அரசு உயிர் நீர்த்த உறவுகளுக்கு நினைவாஞ்சலி செய்ய தடை இல்லை என்ற அறிவிப்பு வந்ததால் மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செய்ய பெருமளவில் கூடினார்கள். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த முறையும் பெருமளவு மக்கள் தமது உறவுகளை கண்ணீருடன் நினைவு கூர்வார்கள். தமிழரின் உரிமை போருக்காக தமது உயிர்களை கொடுத்த அந்த உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கான கெளரவத்தை அளிப்பது அனைவருக்குமே நிம்மதியைத்தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை வைத்து உசுப்பேற்றி மக்கள் தமது பக்கத்தில் இருப்பதாக போக்கு காட்டி அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கும் நினைவேந்தல் செய்ய வைக்கும் முனைப்புகளில் தீவிர தேசியம் பேசி வாழும் சுயநலமிகள் ஈடுபட்டால் அவர்களின் கனவு பலிக்கப்போவதில்லை.
  17. எனக்கு பட்டம் கொடுக்க இந்த உலகில் எவனுக்கும் ஜோக்கிதை இல்லை. இனியும் எவனும் அந்த தகுதியுடன் பிறக்கப்போவதில்லை. எனவே எனக்கு நானே அரசியல் சுப்பர்ஸ்ரார் என்று பட்டத்தை சூட்டிக் கொண்டேன். புஹ்ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா😂😂😂😂😂😂😂😂😂 (தம்பிகளின் விசிலடி அரங்கம் அதிர்ந்தது )
  18. சர்வதேச சதுரங்க போட்டி என்றால் சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்களை பிரதம விருந்திரனீக அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கவில்வையா? எதிர்காலத்தில் சதுரங்க பயிற்சியை தமிழ் பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக வாய்ப்புகளை அதிகரிக்கவும் பயிற்சி நிலையங்களை அமைக்கவும் உலக சதுரங்க வீர்ர்களை அழைத்து அவர்களோடு தொடர்புகளை வளர்ப்பதே சிறந்ததாக இருக்கும். உள்ளூர் பூசாரிகளை அழைந்து என்ன பயன்?
  19. அறகலய போராட்டம் முடிந்து சில காலத்தில் பயங்கரவாத சட்டத்தை எதிர்த்து எதிர்காலத்தில் இணைந்த போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஒரு கோட்பாட்டு ரீதியான ஒருமைப்பாட்டையும் நட்புறவையும் வளர்பதற்காக தென்பகுதியில் இருந்து மக்கள் போராட்ட குழுவின் சார்பில் வசந்த முதலி வந்திருந்தார். அப்போது அனைத்து தமிழ் தேசியவாதிகளும் இதற்கு எதிராகவே கருத்து தெரிவித்திருந்தார்கள். உங்களை மாட்டிவிட்டு அவர்கள் தப்பிவிடுவார்கள். ஆகவே அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டாம் என்று பல புலம்பெயர் தேசியவாதிள் முகநூல் மூலம் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதில் ஈடுபட்டால் அரசு உங்களை கைது செய்யும், எனவே அதில் பங்கெடுக்காதீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். ( அறகலய போராட்டதின் போதும் இதையே கூறினர் என்பது வேறு விடயம்) எதிர்பார்தது போலவே யாழ் பல்கலை மாணவர்கள் வசந்த முதலியின் அழைப்பை நிராகரித்தனர். உங்கள் பிரச்சனை வேறு. எங்கள் பிரச்சனை வேறு, உங்களுடன் நாம் இணைந்து வேலை செய்ய முடியாது என்று யாழ் மாணவர்கள் கூறிவிட்டார்கள். வசத்த முதலி கேட்டது உடனடி போரட்டதிற்கான அழைப்பை அல்ல. எதிர்காலத்தில் பயங்கரவாத தடை சட்டதிற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளபட்டும் போது கோட்பாட்டு ரீதியில் அதில் இணைவதற்கான அழைப்பையே. இரு பகுதிக்கும பொதுவான பிரச்சனைகளில் கூட குறைந்த பட்ச ஒத்துழைப்புடன் செயற்பட முடியாத அளவுக்கு குறுகிய சிந்தனை கொண்டதாக சிந்திக்கும் சுயநலமிகளாகவே உலகமெங்கும் உள்ள தமிழ் தேசியவாதிகள் உள்ளனர். பயங்கரவாத தடை சட்டதை தானாக அரசு நீக்கினாலொழிய தீவிர தேசியம் பேசும் வெத்துவேட்டுகளால் எதையும் செய்ய முடியாது.
  20. யாழ்பாண பலகலைக்கழகத்தின் வரலாற்றில் அது ஒரு Intellectual ஆன சமூகமாக என்றுமே இருந்ததில்லை. அதனால் நீண்டகால திட்டமிடலான அறிவுபூர்வ தமிழ் அரசியலை அது என்றுமே பேசவில்லை. அதை வளர்தெடுக்கவும் முயலவில்லை. தமக்குள்ளே தர்ககபூர்வமான விவாதங்களை நடத்துவதும் இல்லை. சகிப்புதன்மையற்ற one way typ சமூகமாகவே யாழ்பல்கலைக்கழக சமூகம் உள்ளது. குறுகிய வட்டத்தில் மாணவர்களை உணர்சசி வசப்படுத்துவதும் தூண்டுதல் செய்வதும் பின்னர் பின்னர் pass out பண்ணி வெளியே போனதும் எல்லாவற்றையும் மறந்து அரசாங்கத்தில் அல்லது வெளிநாடுகளில் வேலை தேடு செல்லுவதே இவர்களின் அரசியல் இவர்களின் ஆகவே இவர்களது அறிக்கைகளை பெரிசுபடுத்தவேண்டியதில்லை.
  21. ஆரியகுளத்தை மணிவண்ணன் அழகுபடுத்துய போது, நாகவிகாரைக்கு வரும் சிங்களவர்கள் வந்து ஓய்வெடுத்து மகிழ்வாக இருப்பதற்கே இது உதவப் போகிறது என்று பச்சை இனவாத கருத்தை வெளியிட்டு தான் ஒரு இனவாதி என்று நிரூபித்த கஜேந்திரகுமார் இதை கூறுவது வேடிக்கை.
  22. இந்த சேரமான் என்ற ரஞ்சித் 1999 ல் ஐபிசியின் பணிப்பாளராக கடமையேற்க வந்த போது ஐரோப்பிய தமிழ் ஊடகத்துறையை கட்டியெழுப்ப தலைவரால் அனுப்பட்ட ஜாம்பவான் என்று புகழப்பட்டார். ஒவ்வொரு வாரமும் நேயர் கேள்விக்கான பதிலில் மக்களுக்கு தேசபக்தி பாடம் எடுப்பார். ஆனால் உண்மையில் நடந்தது வேறு. உயர்தரத்தையும் நடுநிலைத் தன்மையையும பேணிய ஊடகமாக இருந்து போராட்டத்திற்கு பலம் சேர்தத ஐபிசியை வெறும் இயக்க பிரச்சார ஊடகமாக வெளித்தோற்றத்தை ஏற்படுத்தி ஐபிசி உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கத்தையே கெடுத்து ஐபிசியை குட்டிச்சுவர் ஆக்கியது இவர் தான். இப்போது காலங்கடந்த பின்னர் தான் தெரிகிறது, “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி” என்ற கூற்று எவ்வளவு உண்மையானது என்பது. இவர் ஒரு உதாரணம் மட்டுமே.
  23. இந்த தலைமைச் செயலகம் தமிழீழத்ததில் எந்த தெருவில் இருக்கிறது? யாராவது அங்கு செல்லும் போது இந்த தலைமைச் செயலகத்தின் முன்னால் நின்று செல்பி எடுத்திருக்கின்றீர்களா? @goshan_che யின. பயணக்கட்டுரையில் தன்னும் இதை பற்றி ஒரு வரி கூட வரவில்லையே!
  24. தமிழ் ஈழம் கடைசிவரைக்கும் கிடைத்திருக்காது. அதற்கான சாத்தியம் எந்த காலத்திலும் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் பலமாக இருந்த போது கூட புவிசார் உலக அரசியலில் தமிழீழம் சாத்தியமற்றதாகவே இருந்தது. ஆனால் ஒஸ்லோ இணக்கப்பாட்டின் படியான உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்சி தீர்வை பரிசீலிக்க இணங்கி பேச்சுவார்ததையை தொடர்ந்திருந்தால் என்ன வகையான மீர்வு கிடைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால், இன்றைய நிலையை விட பல மடங்கு சிறந்த நிலையில் தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதை கூற பெரிய அரசியல் ஆய்வாளனாக இருக்க தேவையில்லை. இயல்பான சாதாரண பொது அறிவு இருந்தாலே அதை விளங்கிக் கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.