Everything posted by island
- IMG_7899.jpeg
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
போக்குவரத்து வசதிகளை இலங்கை முழுவதும் மேம்படுத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் சரியாக இருக்கும். ஆனால், நூறுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்து தினமும் அலுவலகங்களுக்கு வந்து அமைச்சர்கள் பணியாற்ற முடியுமா? அமைச்சர்களின் கடமைகளை சரியாக நிறைவேற்ற முடியுமா? தேவையற்ற செலவுகளும் துஷ்பிரயோகங்களும் தடுக்கப்பட வேண்டியது அவசியம் தான், அதற்காக இது கொஞ்சம் ஒவர். ஜனாதிபதி தம்புத்தேகமவில் இருந்து தினமும் அலுவலகம் வரமுடியுமா?
-
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்
இது பற்றியெல்லம் இந்த புலம்பெயர் தேசிக்காய்கள் பேசமாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை அடுத்த தமிழ்தலைமுறையையும் அழிக்க எடுக்கும் தங்கள் முயற்சிக்கு ஒத்தாசை புரிபவர்கள் யாராயினும் அவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் ஆதரிப்பார்கள்.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
தமிழர்கள் மீது தீரா பகை கொண்ட பிரேமதாச, தீரா பகை கொண்ட சந்திரிகா, தீரா பகை கொண்ட ரணில் இப்படியே சொல்லி சொல்லிக் கொண்டு வந்து இப்ப தீரா பகை கொண்ட ஜேவிபி என்று வந்து நிற்கிறது. ஏற்கனவே தம்மால் இவ்வாறு எடுக்கப்பட்ட முன்முடிவுகளை தமிழர் மீது திணித்த அரசியலே தமிழ் தலைமைகள் இன்றுவரை செய்து வந்துள்ளன. அதை விடுத்து அந்த பகைமையை தீர்கக தாம் எடுத்த அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன என்றால் அது பூஜ்ஜியமே! ஐங்கரனேசன் என்ற அதி புத்திசாலியிடம் நான் கேட்பது தீரா பகை என்றால் அவ்வாறான தீரா பகை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும் நாட்டில் இருக்காமல் நாட்டை காலி செய்து விட்டு போய்விடுங்கள் என்ற செய்தியை இளைஞர்களிடம் கடத்துகிறரா?
-
இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய ஒரு தாக்கம் ஏற்படும் என தமிழ் அரசறிவியலாளர்கள் குறிப்பிட்டு அதனைக் கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய உபாயங்களை தெரிவித்திருந்தும் கூட அரசியல்வாதிகள் எனப்படுவோர் அதனை சாட்டை செய்யாது , இதனை ஒரு கருத்தியலாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழரில் அரசறிவியலாளர் என்று யாரேனும் உள்ளனரா? அப்படி தம்மை அழைத்துக்கொள்வோர் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த ஆலோசனைகள் எவை? புலம் பெயர் தேசிக்காய்கள் ஆளுக்கொரு பக்கம் பங்கு பிரிப்பு சண்டையில் ஈடுபட்ட போது இந்த அரசறிவியலாளர்கள் அவர்களுடன் நெருக்கமாக இருந்தும் அவர்களுக்கு என்ன ஆலோசனைகளை கூறினார்கள்? 2015 வரை ஊர்பக்கமே போக பயந்த விழ தொடைநடுங்கி புலம்பெயர் அரசியலாளர்கள் 2015 ன் பின்னர் அங்கு ஜாலியாக போய்வர கூடிய நிலைமையை ஏற்படுத்திய அரசியல் ஆலோசனைகளை கொடுத்ததது இந்த அரசறிவியலாளர்களா?
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பிரபா, மபொசி இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான மபொசி எப்போதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தையே கொண்டிருந்தார். அவரது பத்திரிகையான செங்கோல் இதழில் “ஈழத்தமிழரும் நானும்” என்ற தொடரில் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்து அவர் எழுதியுள்ளார். அந்த தொடர் பின்பு நூலாக வெளிவந்து இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. 1992 ல் வெளிவந்த செங்கோல் இதழில் மபோசி எழுதிய பத்திரிகை முன்பக்கத்தை இங்கு இணைத்துள்ளேன். தமிழ் தேசியவாதி என்று சீமானால் சிலாகிக்கப்படும் மபொசி இதை எழுதிய நேரத்தில் திமுக உட்பட திராவிட இயக்கங்களின் தொண்டர்கள் பொடா சட்டதின் கீழ் பாரிய நெருக்குவரங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல திராவிட இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். பெரியார் திடல் புலனாய்வுப்பிரிவின் முழுமையான கண்காணிப்பில் இருந்தது. மபொசியின் கருத்தில் நான் தலையிடவில்லை. அவரின் கருத்தை தனது பத்திரிகையில் வெளியிடும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால், தமது சுயநல அரசியலுக்காக வரலாறு எவ்வாறு திரிக்கப்பட்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்த அமைப்புக்கள் எதிரிகளாகவும், உண்மையிலே ஈழத்தமிழருக்கு எதிரிகளாக இருந்தவர்கள் நல்லவர்கள் போலவும் காட்டப்படுகிறார்கள் என்பதை கீழ் இணைக்கப்பட்ட பத்திரிகையில் பார்தது அறிந்து கொள்ளுங்கள்.
- Sengol ma po si.jpeg
-
5 வயது பேரனின் கேள்வி
Vacation ல் அழகான கடற்கரைகள், நல்ல வெதுவெதுப்பான காலநிலையில் அங்குள்ள சம வயதுப் பிள்ளைகளுடன் விளையாடும் இனிமையான தருணம் போன்றவற்றை அனுபவித்த 5 வயது பிள்ளை விடுமுறை முடிந்து திரும்பி வந்ததும் இப்படியான கேள்வியை கேட்பது வழமை தான். விடுமுறை முடிந்துவிட்டது அடுத்த விடுமுறைக்கு செல்வோம் என்று சமாதானம் சொல்வதே சரியாக இருக்கும்.
-
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
இவர் கூறுவது என்ன வென்றால், வட்டுக்கோட்டை தீர்மானமான தமிழீழம் எப்படி நிறைவேறாதோ அது போல் என்னை கட்சியில் இருந்து நீக்குவதும் நிறைவேறாதாம்.
-
மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம்
இணைப்புக்கு நன்றி @சுப.சோமசுந்தரம் அவர்களே.
-
இவங்க இப்படிதான்
நன்றி, மேலே இந்தியர்களின் நடத்தைகள் பற்றிய விமர்சனங்களை பார்தத போது நான் நினைத்ததை நீங்கள் இன்னும் விலாவாரியாக எழுதி உள்ளீர்கள். மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை எஆலத்தின் பின்னர் சற்றே முன்னேற்றகரமாக இருந்தாலும் அது இன்னும் முழுமை அடையவில்லை என்பது தான் உண்மை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நான் யாரையும் கொச்சைப்படுத்தவில்லை. உண்மையையே எழுதினேன். நான் என்ன எழுத வேண்டுமென எனக்கு கட்டளையிட உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அரசியலில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. பொது மக்களை பாதித்த அரசியலை செய்யும் எவரது தவறுகளும் பொது வெளியில் விமர்சிக்கப்படலாம். சுட்டிக்காட்டப்படலாம் . எவரும் இதற்கு விதி விலக்கு இல்லை. இதுவே உலக வழமை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கருத்து களம் என்றால் அரசியல் கருத்தை தான் எழுத முடியும். நீங்கள் வேண்டுமானால் பஜனை பாடுங்கள். என்னை பஜனை பாட சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. உலகில் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அரசியல் கருத்துக்களுக்கு நேர்மையான பதில் கருத்து எழுத முடியாத நேர்மையற்றவர்கள் தான் மரணித்த மாவீரர் பின்னால் ஒழிந்து கொள்வர். எனக்கு அந்த தேவை இல்லை.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வைத்த கருத்துக்கு தன் பதில் கருத்து வைக்கப்பட்டது. முதல் வைத்த கருத்தையும் அதற்கு பதிலாக நான் வைத்த கருத்தையும் வாசித்து விளங்கும் தமிழறிவு முதல் தேவை உங்களுக்கு. அதன் பின்னர் கருத்தியல் ரீதியாக பதில் தரலாம். அதென்னப்பா உங்க தோஸ்துகள் திருப்பி திருப்பி ஒரே விடயத்தை கூறும் போது silence mode போயிற்று, அந்த கருத்துக்கு நான் பதில் கருத்து வைத்தவுடன் ஓடி வந்து பொங்கிறீங்க! நான் சொன்ன உண்மை சுட்டுப்போட்டுதோ? 😂 நக்கி பிழைக்கும் கூட்டம் என்று நீங்கள் கையெழுத்திட அதன் க்கீழ் பையன் வந்து உங்களை நீண்ட நாள் காணவில்லை கண்டது மகிழ்சசி என்று எழுத……… 😂
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உலக வரலாற்றை வைத்து. பல மொழிகள் உருவானது ஒரு நாளில் அல்ல. ஒன்று பலவாகியது தான் வரலாறு
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தங்கள் தலையில் தாங்களே தொடர்ந்து மண் அள்ளி போட்டுவிட்டு அடுத்தவன் வந்து உதவில்லை என்று புலம்பல். எல்லா தீர்மானங்களையும் தாங்களே எடுப்பினமாம். சொதப்பின உடனே அடுத்தவன் எல்லாம் தனது வேலை எல்லாத்தையும் விட்டுட்டு வந்து ஹெல்ப் பண்ணணுமாம். அதுக்குள்ள 25 நாடு வந்து அழிசிட்டுன்று வேற புலம்பல். ஒருவர் எடுத்த தீர்மானத்தின் விளைவை அவர் அல்லது அவரின் தலைமுறை தான் அனுபவிக்க வேண்டும். அதிலிருந்து மீள வேண்டும். சும்மா அடுத்தவன் மீது பழி போட்டு தப்பிப்பது வீரம் இல்லை. பக்கா கோழைத்தனம். சரி இப்பவாவது தெரிஞ்சிட்டுது இல்ல. இனியாவது தலையில் தாமே மண் அள்ளி போடாமல் தலைக்குள்ள இருகிற களி மண்டை cleanup பண்டீட்டு கொஞ்சமாவது அறிவை ஊட்டவேண்டும். அதுவே உய்யுறத்துக்கு வழி.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
@goshan_che மீண்டும் தொடங்கும் மிடுக்கு. 👍மீள்வருகை நல்வரவாகுக. 🙏
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இந்த பிரிவு என்பது இயல்பானது. இன்னும் 500 ஆண்டுகளின் பின்னர் இன்னும் பல மொழிகள் உருவாகலாம். இதை எவராலும் தவிர்கக முடியாது. தமிழ் போராளி இயக்கங்கள் 80 களில் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு தீவிர பின் தள ஆதரவை கொடுத்தவர்கள. திராவிட இயக்கத்தினரே. சீமான் அடிக்கடி புகழும் தமிழ் தேசியவாதியான மபொசி போராளிகளை ஏறெடுத்தும் பார்ககவில்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து திரும்பியபோது மபொசி வலிந்து சென்னைத்துறைமுகம் சென்று அவர்களை வாஞ்சையுடன் வரவேற்றார்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திராவிடம் மரபினம். தமிழ் தேசிய இனம். மரபினத்தில் இருந்து பிரிந்து தேசிய இனங்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை உள்ளன. இவர்கள் பேசும் வெறுப்பு அரசியலானது, மனிதன் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து உருவாகி உலகம் முழுவதும் பரவியது என்ற உலகமே ஏற்றுக்கொண்ட அறிவியல் உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் மூடத்தனங்களை பரப்புபவர்கள். விஜய் தனது அரசியலில் வெற்றி பெற வாழ்ததுக்கள். அவரது கொள்கைகள் சரியானவை. அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதில் தான் அவரது வெற்றி தங்கியுள்ளது.
-
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்
தமிழ் மக்கள் முதலில் நிராகரிக்க வேண்டியது இந்த குதிரை கஜேந்தின், சுகாஸ் போன்ற பக்கா இனவாதிகளை தான். சிங்கள இனவாதிகளுக்கு சற்றும் சளைக்காமல் மக்களிடையே இனவாதத்தை விதைப்பவர்கள் இவர்கள் இருவரும். கஜேந்திர குமாரை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள் தான். இவர்கள் இல்லை என்றால் கஜேந்திரகுமார் ஜதார்ததத்தை உணர்ந்து அதற்கேற்ப முற்போக்கு அரசியல் செய்வார். கல்வியாளர் அவர்.
-
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
ஆமாம் அதற்கு தான் நீலனை போட்டு தள்ளிவிட்டு விடுதலைக் கூட்டணியை அதற்கு எதிராக வாக்களித்து அந்த அரசியல் சட்டத்தை நிறைவேற விடாமல் செய்து விட்டு இன்று ஏன் அந்த தீர்வை நடைமுறைப்பட்டுத்தவில்லை என்று தினாவெட்டாக கேட்பார்கள்.
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
இணைப்புக்கு நன்றி பகிடி. சந்திரிகா காலத்தில் உருவாகிய தீர்வு திட்டத்துடன் கூடிய அரசியலமைப்பு மாற்றம் பாலாளுமன்றத்துக்கு வந்த போது 2/3 பெரும்பான்மைக்கு 7 வாக்குகளே தேவையான நிலையில் அந்த ஏழு வாக்குகள் இருந்தும் உயிர்ப்பயத்தில் தமிழர் விடுதலை கூட்டணி அதற்கு ஆதரவு கொடுக்காமல் விட்டது மாபெரும் தவறு. அந்த தீர்வை உருவாக்கிய நீலன் திருச்செல்வத்தையும் படுகொலை செய்து இன்று ஒன்று மில்லாமல் நிற்கிறது மோட்டு தமிழினம். வந்து மைனஸ் புள்ளியை இட்டு செல்ல விசுகுவை அன்பாக அழைக்கிறேன். வருக வருக.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
இதில் கதிர்காமர் இலங்கை அரசின் அமைச்சர். அவரின் செயற்பாடு இலங்கை அரசுக்கு சார்பாக தான் இருக்கும். அது இயல்பானதே. மற்றவர்களில் எவரும் துரோகிகள் இல்லை. இதில் சிலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களைப் படுகொலை செய்த பயங்கரவாதத்தால் தமிழர் போராட்டம் பின்னடைவையே சந்தித்தது.
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
என்னப்பா எல்லா திரியிலும் பார்ததாலும் சுமந்திரன், சுமந்திரன் என்று சுமந்தரனை பற்றியே பேச்சு. போதாக்குறைக்கு யுத்தகுற்றங்களை விசாரிக்க வந்த அமெரிக்காவே சுமந்திரனைக் கண்டு பயந்து பின்வாங்கி யுத்த குற்றங்களை விசாரிக்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு சுமந்திரன் மேற்குலக நாடுகளை விட பலம் நிறைந்தவரா? சுமந்திரனை விட கஜே நல்ல திடகாத்திரமாக தானே இருக்கிறார் சுமந்திரனிடமிருத்து கஜே அமெரிக்காவை காப்பாற்றலாமே!
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
நீங்கள் topic ஐ மாற்ற முனைகின்றீர்கள் சொல்ல வந்தது, சிங்க கொடி இருக்குமிடத்துக்கு செல்ல மாட்டேன் என்று பீலா விடும் ஒருவர் சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் செல்ல பேராவல் கொண்டிருப்பது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா? இது சம்பந்தர் சிங்ககொடி பிடித்ததை விட மோசமானதல்லவா? சம்பந்தர் கொடிபிடித்தது நீங்கள் கூறியது போல் 2009 அல்ல 2016 ல். மக்கள் அழிவுக்கு காரணம் சம்பந்தர் கொடி பிடித்தல்ல. 2009 முன்பு சிங்க கொடி பிடிக்காத போதே பேரழிவு வந்துவிட்டது. 40000 சவப்பெட்டிகளை சடலங்களுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றி யுத்த இறுதிக் காலத்தில் மக்களை பேரழிவுக்குள் தள்ளியதில் கஜே கட்சி உறுப்பினர் குதிரை கஜேக்கும் பங்குண்டு என்று அண்மையில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பசீர் காக்காவே கஜே மீது பகீரங்கமாக தொலைக்காட்சி உரையாடலில் குற்றம் சாட்டியதை தாங்கள் அறியவில்லையா?