Everything posted by island
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
அப்ப ஆட்டாதேங்கோ. அங்க போகாதேங்கோ. சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் போக பேராசை படுபவர் இதை கூறியது தான் நகைச்சுவை. 😂 சிங்க கொடி பறக்கும் நாடாளுமன்றம் செல்ல நாக்கை தொங்க விட்டு அலைபவர் இதை கூறலாமா?
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
என்ன உருட்டப்பா! சிங்க கொடி இருக்கிற இடத்துக்கு போகமாட்டாராம். சிங்க கொடி பறக்கும் ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் செல்ல பேராசையாம். இப்படி ஒரு பம்மாத்து கும்பலும் இந்த தேர்தலில் வேட்பாளராம். 😂 ரொம்ப தான் சுட்டுப்போட்டுதோ. 😂 என்ன செய்வது கள்ளர்களை தூக்கி சுமக்கும் உங்கள் மனநிலை எனக்குல்லையே?
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
கஜே - குதிரை கஜே கும்பல் தாங்கள் தினமும் தமிழர் மத்தியில் பிதற்றும் இரு தேசம் கோரிக்கைக்காக போராடி கைது செய்யப்படவில்லை. ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மீது தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான தமது தேர்தல் போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இலங்கை அரசில் கஜேக்கு இருக்கும் உள்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி முடிந்து விடும். எனவே உசுப்பேத்து புலம் பெயர் கோஷடிகளே கவலை வேண்டாம் உங்கள் தலைவர் அடுத்த பாராளுமன்றம் கூடும் போதும் இலங்கை ஒற்றையாட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்யத்தான் போகிறார். அவரசு இரு தேசத்தில் ஒரு தேசமான ஶ்ரீலங்கா தேசத்தில் தான் செய்துள்ள பாரிய முதலீடுகளை கண்காணிக்கவும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள தொடர்பாடல்களை வளர்ககவும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளவும் அவர் பாராளுமன்றம் செல்வது அவசியம் தானே!
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
காணமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் என்ற அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற விடயத்தில் தீவிரமாக ஈடுபடும் போதும் அதனை திறம்பட உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது மட்டுமே அது சர்வதேச மட்டத்தில் தாக்கங்களை உண்டு பண்ணி இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொண்டுவர வாய்புள்ளது. அதை விடுத்து காணாமல் போன உறவுகளை தேடும் அமைப்புகள் தன்னாட்சி சுயநிர்ணயம், தமிழரின் இறையாண்மையை மீட்டல் போன்ற அவர்களுடைய அமைப்புக்கு பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை நடத்தும் போது அவர்களின் கோரிக்கை உலக மட்டதில் அனுதாபத்துடன் பார்க்கப்படமாட்டாது. மாறாக அவர்கள் அரசியல் கட்சிகளின் கையாட்களாக செயர்படுகிறார்கள் என்ற பார்வையையே உலக மட்டத்தில் ஏற்படுத்தும். (இதில் உண்மையும் இருக்கிறது) ஆகவே காணாமல் போனோரின் உறவினர்கள் அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற நியாயமான கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்து உறுதியுடன் தன்னிச்சையாக போராடவேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சிகளினதும் புலம்பெயர்ந்த அமைப்புகளினதும் தேவைகளுக்காக அவர்களது கைப்பாவையாக செயற்பட்டு இவ்வாறான பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்தால் அவர்கள் நகைச்சுவையாளர்களாகவே பார்ககப்படுவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட உலகின் கவனத்தை பெறாது.
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
வவுனியாவில் இவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக வழமையாக குடியரசுகட்சி பலமாக உள்ள ரெக்ராஸ், புளோறிடா, அலபாமா, மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் ரம்ப்ஃ செல்வாக்கு பாரியளவில் சரிந்து கமலா ஹரிஸுக்கான ஆதரவு அலை வீசிவருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
ஒரு சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டு, “ சிறை மீண்ட செம்மலாக” வாக்கு கேட்டு வருவார். 😂
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
இலங்கையில் வாழும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த இனத்திராக இருருந்தாலும் இவை மகிழ்ச்சியான செய்தி அல்ல. ஏற்கனவே இவ்வாறான யுத்தத்தினதும் தாக்குதல்களதும் விளைவுகளை அனுபவிப்பர்கள் அவர்கள். புலம் பெயர் தேசிக்காய்களுக்கு இது மனமகிழ்வூட்டும் நகைச்சுவை செய்தியாக இருப்பதில் வியப்பு இல்லை.
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
@பகிடி இன்றைய தொழில்நுட்பத்தில் ஓருவர் தனது பூர்வீகம் பற்றிய DNA test செய்யும் வசதி உள்ளது. அதன்படி எச்சில் பரிசோதனை மூலம் தனது பூர்விகத்தை அறிய எச்சில் மாதிரியை மட்டும் அனுப்பிய ஐரோப்பாவில் பிறந்த ஈழத் தமிழ் பிள்ளைக்கு Result ஆக ஆசிய கண்ட வரைபடத்தில் இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட மும்பாய் வரைக்குமான பிரதேசங்கள் நிறமிடப்பட்டு அதுவே உங்கள் பூர்வீகம் என்று அனுப்பப்பட்டது.
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
அறிவியல்ரீதியாக நிலத்தொடர்ச்சியுடன் இவ்வாறான மொழிக்குடும்பங்கள் உலகம் முழுவதும் உள்ளது. ஐரோப்பிய மொழிகளில் லத்தீன் மொழிக்குடும்பமாக பிரெஞ்ச், இத்தாலி, ஸபானிஸ் , போத்துக்கல் ஆகிய மொழிகளும் ஜேர்மானிக் மொழிக்குடும்பத்தில் ஆங்கிலம், ஜேர்மன், சுவீடிஷ், நோர்வேஜியன் முதலிய மொழிகளும் ஸ்லாவிய மொழிகளாக ரஷ்யன், செக், ஸ்லவாக்கியன், குரோசியன், சேர்பியன், ஸ்லவேனியன் இன்னும் பல மொழிகள் உள்ளன. இந்தியாவில் இந்தோ ஆரியன் மொழிகளாக ஹிந்தி, குஜராத்தி, மராட்டி, உருது போன்ற மொழிகளையும் திராவிட மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துலு ஆகிய மொழிகளையும் கூறலாம். உலகின் எல்லாப் பல்கலை கழகத்தின் மொழியியல் துறையிலும் தமிழ் திராவிட மொழிக்குடும்பம் என்றே கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் அறிவியல் ரீதியில் அது திராவிட மொழிக்குடும்பம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
நாம் இங்கு பேசியது உங்கள் கற்பனைகள், சீமான் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்கள் பற்றியதல்ல. மனோன்மணியம் சுந்தரனார் தமிழர் திருநாடு என்று எழுதியதாக நீங்கள் உண்மைக்கு புறம்பாக இங்கு கூறிய கூற்று தொடர்பானது மட்டுமே. மற்றப்படி இது தொடர்பான உண்மை வரலாறு தெளிவாக தமிழ் நாடு அரச குறிப்புகளில் உத்தியோகபூர்வமாக உள்ளது. சமஸ்கிரதத்தில் இருந்து தமிழ் தோன்றியதாக பொய்யான வரலாற்றை தமிழருக்குள் வட இந்தியாவில் இருந்து திணித்ததை தனது துல்லியமான ஆய்வுகள் மூலம் முறியடித்து இந்திய வடபிரதேசங்களின் இந்தோ ஆரிய குடும்ப மொழிக்கும் தென்னிந்திய திராவிட மொழிக்குடும்பத்திற்கும் இடையிலான வேறுபாட்டை ஆதாரங்களுடன் நிறுவி திராவிட மொழிக்குடும்ப மொழிகளின் தனித்துவம் குறித்தும் அவை பிறந்தது தமிழ் மொழியில் இருந்து தான் என்பது பற்றியும் தமிழ் சமஸ்கிரத்தில் இருந்து பிறந்த மொழி அல்ல என்பதையும் நிறுவிய கார்டுவேல் மீதான கோபத்தில் ஆர் எஸ் எஸ் சங்கிகளும் அவர்களின் கைக்கூலிகளும் மேற்கொள்ளும் பொய்பிரச்சாரங்களை நாமறிவோம்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மாணவர்கள் பட்டு வேட்டி கட்டி சால்வை கட்டி வந்து கொண்டு இதை கேட்டால் நியாயம்.
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
இப்பாடல் குறித்த உண்மை வரலாற்றை ஏற்கனவே வாசித்தது உண்மைகளை அறிந்ததாலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய அசல் பாடலிலேயே “திராவிடர் நல் திருநாடும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ள உண்மை தெரிந்ததாலும் நீக்கப்பட்ட வரிகள் உத்தியோகபூர்வமாக காரணம் கூறப்பட்டு தமிழ் நாடு அரசிலால் நீக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்ததாலும் புலவர் இங்கு பகிர்ந்த யாரோ உண்மை தெரியாத ஒருவரின் உளரல் எழுத்தை வாசித்தபோது எனக்கு “புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே” என்ற ஆயிரம் பொய் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது. 😂 தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம்நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம்எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.[1] வரலாறு பாடல் வரிகள் “ நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. “ நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! கவிதைக்கு பொய்யழகு என்பார். அதனால் புலவர்க்கும் பொய்யழகோ?
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
கொல்லப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
இதில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் மீரா. தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடும் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்மக்களை மிக அதிகம் பாதிக்கும் ஒரு சட்டதிற்கெதிராக ஒரு போராட்டதை கூட்டுணைந்து செய்ய வந்த அழைப்பை தமது சுயநலத்திற்காக புறக்கணித்துள்ளனர். குறைந்த பட்சம் அதிகார பீடங்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பை செய்வதற்கான தொடர்சியான தொடர்பாடல்களை வளர்பதற்கான, தமது அரசியல் தலைமைத்துவ அறிவை வளர்பதற்கான வேலைத்திட்டங்களில் கூட பங்கேற்க மனமின்றி சுலநலமாக சிந்தித்துள்ளார்கள். ஆகவே இவர்களை போன்ற சுய நலவாதிகளின் அறிக்கைகளை விமர்சனமின்றி மக்கள் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சரி தானே!
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஜனநாயகரீதியிலான போராட்டங்களை இணைந்து முன்னெடுக்க ஆதரவு கோரி அரகலய அமைப்பின் சார்பில் வசந்த முதலிகே நேரில் வந்து கேட்ட போது உங்களுடன் இணைந்து எதுவும் செய்ய மாட்டோம் தனி தவில் தான் அடிப்போம் என்று அவரை அவமதித்து அனுப்பிய அளவுக்கு அரசியல் அறிவுள்ளவர்கள் இவர்கள். இத்தனைக்கும் இச்சட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே.
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
முதலில் அந்த முட்டாள் பயலுகள் நாடு மாதிரி கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரமர ஆகிய விடயங்களில் முன்னேறட்டும். பிறகு பார்க்கலாம். 😂
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
கடவுச்சீட்டில் ஆங்கிலம் முதலாவதாக இருப்பதே சரியானது. மற்றய இரண்டு மொழிகளும் நடைமுறையில் 90 வீதமான நாடுகளில் எவராலும் வாசிக்கப்படப்போவதில்லை.
-
‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
இனவாதத்தில் இருந்து சிவாஜிலிங்கமும் ஜேவிபியும் மீளவேண்டும். அதுவே மீட்சி.
-
ஈழத்தமிழர் அரசியல் குறித்த ஆரோக்கியமான ஒரு உரையாடல்
அறிவுள்ள மனிதர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் ஆரோக்கியமான உரையாடல் என்பதை குறிப்பிடத் தவறியதால் வந்த வினை.
-
ஈழத்தமிழர் அரசியல் குறித்த ஆரோக்கியமான ஒரு உரையாடல்
ஈழத்தமிழர் அரசியல் பற்றிய கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு ஆரோக்கியமான உரையாடல். உரையாடலில் சமுகம் இணையத்தள நெறியாளருடன் பங்கேற்பவர்கள் லண்டனில் இருக்கும் திரை இயக்குனரும் யூகே கிங்ரன் கல்லூரியின் முன்னாள் கணக்கீட்டுத்துறைத் தலைவரும் விரிவுரையாளருமான புதியவன் இராசையா, யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி விரிவுரையாளர் திருவரங்கன்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இந்த படம் 1983 காலப்பகுதியில் வெளிவந்திருந்தது. பின்னர் ஜேவிபி இலங்கையில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்திலோ 1987 ல் அவர்கள் பிரேமதாச காலத்தில் அரசுக்கெதிராக தீவிரமாக போராடிய காலத்திலோ தமிழர் தரப்புக்கும் ஶ்ரீலங்கா அதிகாரபீடத்துக்கும் நல்ல உறவு நிலவிய பிரேமதாச காலம் போன்றவற்றில் இதை நிரூபித்திருத்திருக்கும்வாய்பபு இருந்தது. (இந்த படம் உண்மையானால்) அப்போதெல்லாம் வாய்மூடி மைனமாக இருந்துவிட்டு அதை விடுத்து இப்போது இதை பிரபலப்படுத்துவது வெறும் உசுப்பேற்றல் வெறுப்பு அரசியலை தூண்டும் செயலேயன்றி வேறில்லை.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நீங்கள் இதை கூறுகின்றீர்கள். வரலாறு என்று கூறி இப்படியான கதாசிரியர்களின் எத்தனையோ கற்பனைகள் இங்கு பரப்பப்பட்டுள்ளன. சிறந்த கதாசிரியருக்கான விருதை யாழ் இணையம் கொடுக்க விரும்பினால் கஷரப்பட வேண்டிய தேவையே இல்லை. வரலாற்றை தமது புனைவுடன் சுவார்சியமாக தனது வாசகர்களை கவரும் விதத்தில் எழுதும் திறமை பாராட்டுக்குரியது. தமிழ் புனைகதை எழுத்தாளர் கல்கி விருது கொடுக்கலாம்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இதுவரை நடந்த உண்மையையே கூறினேன். பலகலைக்கழக மாணவர்கள்படித்த, முழுமை பெற்ற தலைமுறை அல்ல இப்போதும் படித்துக்கொண்டிருக்கும், இன்னும் நிறைய படிக்க வேண்டிய தலைமுறை. ஒரு நிறுவனத்தில் உயர் பதவிக்கு வரவே இவர்கள் பெறும் பட்டத்துடன் பயிற்சி, அனுபவம் தேவைப்படும் நிலையில் உள்ள இவர்களின் அறிவுரையை முழுமையாக சுய சித்தனை இன்றி அப்படியே ஏற்றுகொள்ளவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தாயகத்தில் வாழும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் விருப்புள்ள அதற்காக முயற்சி செய்யக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும் என்றே இப்போதும் கூறுகிறேன். அதற்கு காரணம் அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதானால் தாம் அதற்காக நேர்மையுடன் உழைக்க வேண்டும், மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். உரிமை அரசியல் என்றால் நாலு உணர்சசிவசப்பும் அறிக்கைகள், நன்கு தயாரிக்கப்பட்ட உசுப்பேற்றும் பேச்சுகள், ஆவேசமான பேட்டிகள் போதும். பிகுதி வாழ்வை மகிழ்சசியாக கழிக்கலாம்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
பலகலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை தமது துடிப்புள்ள இளம் வயதில் இவ்வாறான உணர்ரச்சியூட்டும் தேசிய அறிக்கைகளை வெளியிடுவதும் பின்னர் படிப்பு முடிந்து அரச சேவையில் தத்தமது துறைசார் வேலையில. சேர்ந்து வாழ்ககையில் செற்றிலாகிய பின்னர் தமது வாழ்விற்கோ, வேலைக்கோ, குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நோகாமல் மென் தேசியம் பேசுவதும் தேவைப்பட்டால் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவதுமே வரலாறு. ஆகவே, இவர்களின் இவ்விதமான அறிக்கைகளை முழுமையாக கணக்கெடுக்காமல், தாமாக யோசித்து தமது தேவைகளை கவனிக்க கூடியவர்களை தெரிவு செய்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் இன்று இவ்வாறு உணர்சசி அறிக்கை விடும் இவர்கள் படிப்பு முடிந்த பின்னர் தமது தேவைகளை மட்டும் தேடி தென்னிலங்கைக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று செற்றிலாகி தமது குடும்ப தேவைகளை கவனிப்பவர்களாக மாறிவிடுவர்.