Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. எப்ப சீனி வாங்கியிருக்கு என று பார்ததால் தெரியும் தானே எப்ப கந்தையர் கையில் கிடைச்சதென்று. 😂
  2. இலங்கையில் எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் இந்த முடிவை தான் எடுப்பார். இதே நிலைப்பாட்டில் தான் அவரால் இருக்க முடியும். தலைவர் பிரபாகரன் அநுர குமாரவின் இடத்தில் இருந்திருந்தாலும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பார். தனது போராளிகளை அனைத்துலக நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார். ராஜீவ் கொலை தொடர்பாக இன்ரபோல் உங்களை தேடுகிறதே, அது தொடர்பாக உங்கள் நிலை என்ன என்று ஒரு நிருபர் கேட்ட போது, “நடக்கிற காரியங்களை கதைப்போம்” என்று கொடுப்புக்குள் சிரித்தவறே கூறிக் கடந்து சென்றவர் அவர். தர்ம நியாயங்களுக்கு அப்பால், இது தான் உலக நியதி. உலக நாடுகளும் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க தமக்கான துரும்பு சீட்டாக மட்டுமே இதை பயன்படுத்துமேயொழிய எந்த விசாரணையையும் நடத்த போவதில்லை. ஆகவே தலைவர் பிரபாகரன் கூறியபடி, நடக்கிற காரியங்களை கதைத்து தமிழரின் இருப்பை வட கிழக்கில் பாதுகாப்பதே உடனடித்தேவை.
  3. தமிழீழம் எக்காலத்திலும் சாத்தியமாக இருக்க வில்லை. அதை சாத்தியப்படுத்துவதற்கான உலக அரசியலை எமது அரசியல்வாதிகளும் செய்யவில்லை, ஆயுதப்போராளிகளும் செய்யவில்லை. வெற்று கோஷங்களுடனும் மக்களின் பேரழிவுடனும் அது முடிந்து போனது. அப்படி ஒரு மாயையை அன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இளைஞர்களை நம்ப வைத்ததாலேயே தமிழ் மக்ககளுக்கு பேரழிவுகள் ஏற்பட்டது. சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகரக்கூடிய பல சந்தர்ங்கள் தவறி போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஓரளவுக்கு சாத்தியமாக இருந்த சமஸ்டியும் ஆயுத போராட்ட அழிவுடன் சாத்தியமற்று போனது. இப்போதைய நிலையில் பிராந்தியங்களுக்கு அதிகாரபகிர்வு என்ற கோட்பாட்டை இலங்கையில் உள்ள சகல இனமக்களும் இணைந்து வலியுறுத்த கூடிய அரசியலை செய்வதே தற்போதைய சாத்தியமான வழி. பிராந்தியங்களுக்கான அதிகார பகிர்வானது வளர்சசியடைந்த நாடுகளின் வளர்சிக்கு எப்படி காரணமாக இருந்தது, என்பது போன்ற அறிவூட்டல் விழிப்புணர்வு இலங்கை முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும். அரகலய மக்கள் போராட்ட குழு அப்படியான வேலைகளையே செய்து வருகிறது. நாடாளாவிய ரீதியில் அதற்கான விழிப்புணர்வும் ஆதரவும் அதிகரிக்கும் போது அனுர அரசாலோ அல்லது இதற்கு பின்னர் வரப்போகும் அரசாங்கங்களாலோ அதை புறந்தள்ள முடியாது. வரும் அரசாங்கங்களை எல்லாம் பகைத்து குறுகிய கண்ணோட்டத்துடனான குண்டு சட்டி அரசியலை மேற்கொண்டால் விளைவுகளை அனுபவிப்பவர்கள் எதிர்கால தமிழ் மக்களே. தமிழ் மக்களின் அரசியல் பலம் கடந்த 75 ஆண்டுகால தவறான அரசியலின் விளைவுகளால் எப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பானதோ அது இன்னும் தொடரவே வழிவகுக்கும். தவறான அரசியலை செய்வது, பின்னர் அதன் விளைவுகளை வைத்து புலம்பி அரசியல் செய்வது, அதன் பின்னர் அதே தவறுகளை மீண்டும் செய்வது, இதுவே ஈழத்தமிழர் அரசியல் வரலாறு.
  4. நல்ல விடயம். இதன் மூலம் தமிழசுக்கட்சியையும் கஜே கஜே கும்பலையும் சங்கு கோஷடியையும் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும். பதிலாக ஆற்றல் மிக்க சுயேட்சை வேட்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும்.
  5. தமிழ் நெற் நடுநிலையானது என்பதை நிரூபிக்க ரஞ்சித் நான் சொன்ன படியான கட்டுரைகளை இணைத்திருக்கலாம். அந்த இலகுவான வழி இருக்க அதை விடுத்து வீணாக கஷரப்பட்டு நீண்ட கதை வசனம் எழுதி முழக்கி……… பின்னர் அதை நீக்கி ரொம்ப தான் அறுத்தாலும் கூட தமிழ் நெற் ஒரு தலைப் பட்டமற்றது என்பதை நிரூபிக்க முடியவில்லை. 😂😂 அறிவுடை சமூகம் அறிவியல் ரீதியான நிருபணத்தையே ஏற்றுக்கொள்ளும். கதைகளையும் புராணங்களையும் வைத்து அனுதாபங்களை தேடிக்கொள்வது பலவீனமான அணுகுமுறை . புலிகளுக்கு பெறுமதியான தொலைதொடர்பு சாதனங்களை வழங்கியதை அன்றைய ஜேவிபி எதித்தது என்று புலம்பும் இவர்கள் நோர்வேயை கண்டாலும் எரிக் சோல்ஹைமை கண்டாலும் எரிந்து விழுவார்கள் என்பது வேடிக்கை. இதே ஆக்கோஷத்துடன் நோர்வேயும் திட்டுவார்கள். சமாதானத்துக்கு அனுசரணை வழங்க வந்த நோர்வே இரு தரப்பையும் சமாளித்து சமாதானத்துக்கான சூழ்நிலையை உருவாக்க பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற் கொண்ட வேளையில் யுத்த சூழ் நிலைக்கான வேலைகளை அதாவது அன்றைய ஜேவிபி விரும்பிய வேலைகளை இனவாதிகளுடன் இணைத்து கன கச்சிதமாக செய்து முடித்ததில் இவ்வாறான தமிழ் தேசியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இப்படி அன்றைய ஜேவிபி இனவாதிகள் என்ன விரும்பினார்களோ அதை தமே செய்து முடித்துவிட்டு இன்று அன்றைய ஜேவிபியின் செயல்களை வைத்து புலம்பி இனவாதித்தை தூண்டி தமிழ் மக்களை மீண்டும் தமது பழைய அழிவுப் பதையை நோக்கி திருப்புவதே இவர்களின் நோக்கம். தமது தவறுகளை மூடி மறைக்க அடுத்தவர்கள் மீது முழு பழியையும் சுமத்தி திட்டித் தீர்ப்பதும் காலா காலமாக பகைமை உணர்வை உருவாக்குவது தான் இவர்களது அரசியல் தந்திரமாம். அரசியல் தந்திரமல்ல அது இவர்களின் வியாபார தந்திரம். தமது வியாபாரத்துக்காக தமிழ் மக்களின் இருப்பு வடகிழக்கில் அழிந்தாலும் பரவாயில்லை என்பது இவர்களின் அணுகுமுறை.
  6. லாசப்பல் படையணியின் இறுதி எச்சரிக்கையா? அப்ப இனி மண்டையில தான். 😂
  7. மேற்கண்ட தமிழ் கார்டியனின் கட்டுரையை இணைத்த ரஞ்சித், கந்தன் கருணை மேற்கொள்ளப்பட்ட படுகொலையை செய்த அருணாவுக்கு எதிராக அவரது பதவி குறைப்பை தவிர வேறு சட்ட நடவடிக்கைகள் தமிழர் தரப்பால் எடுக்கபாடாமையை கண்டித்து தமிழ் கார்டியன் எழுதிய கட்டுரையையும், 1990 ல் இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த 600 பொலிசாரை சுட்டு படுகொலை செய்த யுத்த குற்றத் தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடாமை குறித்த தமிழ் கார்டியனின் கண்டன பதிவை, அல்லது அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி எழுதிய கட்டுரையையும் இணைப்பார் என எதிர் பார்ககிறேன். (இவை இரண்டும் சிறிய உதாரணங்கள் மட்டுமே) அவ்வாறு இணைக்கப்பட்டால் தமிழ் கார்டியன் சாதாரண செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பித்து எழுதி ஒரு தலைப்பட்ட அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடாத நடுநிலை ஏடு என்பதும் அதில் வரும் செய்திகள் ஒருதலை சார்பற்ற வரலாறு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். தாயகத்தில் தமிழ் தேசியம் காக்கவென தமது பிள்ளைகள் முதல் அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி தாயகத்தில் தமது இருப்பை காப்பாறுவதற்கான அரசியலை செய்ய முற்படுகையில் வெளி நாடுகளில் தமது வெற்று கோஷ அரசியலாளர்களால் அதை குழப்பி தாயக அரசியலை மீண்டும் கொதி நிலையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அங்குள்ள பல்கலைகழக மாணவர்களை போராட தூண்டும் இவர்கள், தமது பிள்ளைகளை வெளி நாடுகளில் மிக சிறந்த பலகலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்கள். இவர்களது அரசியல் மூலம் தாயகத்தில் மக்களின் பலம் குறைந்து வருவதையிட்டோ தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருபது குறித்தோ முன்பு 11 உறுப்பினரை கொண்ட யாழ் தேர்தல் மாவட்டம் மக்கள் தொகை இழப்பால் 6 ஆக குறைக்கப்பட்டு இருபது குறித்தோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மக்கள் இல்லாமல் தேசியம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாதா? அல்லது நாம் வாழும்வரை எமது தேசிய வியாபாரம் நடந்தால் போதும் அதன் பின்னர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?
  8. சமஸ்டி வேண்டாம் என்று தானே அன்று பேச்சுவார்ததை காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு இறுதி போரில் தமிழீழத்தை எடுப்போம் என்று உசுப்பேற்றப்பட்டது. தாயகத்தில் இருந்து புலம் பெயர் நாடுகளுக்கு வந்த பரப்புரையாளர்கள் எல்லோருமே சமதானத்தை ஊக்குவிக்கும் பிரச்ரசாங்களை மேற் கொள்ளாமல் யுத்தத்தை ஊக்குவிக்கும் பரப்புரைகளை செய்தது வெளிப்படையாக நடைபெற்ற விடயம். நானே பல கூட்டங்கள் சந்திப்புக்கள் என று சென்றிருக்கிறேன். எவரும் சமாதானம் சரிவராது அடித்தால் தான் சிங்களவன் வழிக்கு வருவான் இனி அடி தான் என்றே கூறினர். அதை உள்வாங்கி கொண்டு புலம் பெயர் தமிழ் தேசிய வீரர்களும் எப்போது யுத்தம் ஆரம்பிக்கும் என்றே ஆவலுடன் எதிர் பார்ததனர். இப்போது ஜேவிபி சமாதானத்தை எதிர்ததது என்று நீலிக்கண்ணீர் வடிப்பதில் அர்த்தமே இல்லை.
  9. வழமையான கஜே கோஷ்டியின் ஆதரவாளர்கள் கூட இந்த திரிப்பக்கமே வரவில்லை. அவ்வளவுக்கு அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளனர் கஜே கோஷ்டி. எல்லா கஜே கோஷ்டி ஆதரவாளர்களும் ( அவர்கள் மொழியில் சொம்புகளும்) சுமந்திரனுக்கு பின்னால் பிஸி.
  10. 2001, 2002 காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த தமிழ், சிங்கள மக்கள் பெரும்பாலும் சமாதானத்தில் ஆர்வம் உடையவர்களாக இருந்தனர். சமாதானத்துக்கு ஆதரவான பல தென்னிலங்கை அமைப்புகள் தமிழ் பிரதேசங்களுக்கு முக்கியமாக புலிகளின் பிரதேசங்களுக்கு வந்திருந்தனர். பெருமளவிலான சாமான்ய மக்கள் சமாதானத்துக்கு ஆதரவாக இருந்தனர். ரணில் வெற்றி பெறக்கூடிய அரசியல் சூழ்நிலை தென்னிலங்கையில் ஏற்பட்டதற்கு காரணம் அவர் சமாதான பேச்சுவார்ததைகளை சிறப்பாக கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பிலேயே. புலிகள் மீதான தடை விலக்கப்பட்டதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை. இவ்வாறாக பல நேர்மறையான விடயங்கள் இருக்க அன்று சிங்கள மக்கள் மத்தியில் மிக குறைந்த ஆதரவு இருந்த ஜேவிபி யின் செயற்பாடுகளை இவ்வாறு பூதாகரப்படுத்தி எழுதியதில் இருந்து சமாதானத்துக்கு எதிரான தமிழ் நெற்றின் உண்மை முகம் தெரிகிறது. ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜேவிபி எதிர்ததது, என்று அன்று நீலிக்கணீர் வடித்த தமிழ் நெற், ரணிலை தோற்கடித்து அந்த ஒப்பந்தத்துக்கே வேட்டு வைத்த தமிழர் தரப்பின் செயல்களை ஆதரித்தது. சமாதான பேச்சுவார்ததைகள் யுத்த சூழலை நோக்கி மெல்ல மெல்ல இரண்டு தரப்பாலும் இழுத்து செல்லப்பட்டதை எதிர்தது ஒரு கட்டுரை கூட தமிழ் நெற் எழுதவில்லை. பொதுவாகவே சமாதான காலங்களில் நேர்மறையான விடயங்களை பெரிது படுத்தாமல் அஒற்றை அமுக்கி விட்டு சிங்கள தரப்பில் மக்கள் ஆதரவு அற்ற இனவாதிகளின் செயல்களை, பேச்சுக்களை தமிழர் மத்தியில் பிரபலப்படுத்தி உசுப்பேற்றுவது தீவிர தமிழ்தேசியர்களின் வழமையான செயல்கள். அந்த வகையிலேயே தமிழ்நெற் தனது சமாதானத்துக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டு அஜன்டவை அன்று செய்தது. வருகின்ற ஜனாதிபதிகளை எல்லாம் விரோதிகளாக்கி அவர்களை தீவிர நிலைப்பாடு எடுக்கும் அரசியல் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு உலக நாடுகளையும் பகைத்து அரசியல் செய்து தமிழ் மக்களை இன்றைய சூழ் நிலைக்கு தள்ளியதில் இவ்வாறான ஊடகங்களுக்கும் அதை பரப்பும் இனவாதிகளுக்கும் பங்கு உள்ளது.
  11. படு மோசமான ஒடுக்குமுறையாளன் கோட்டபாயவை கூட ஆதரித்த இவர் நிச்சயமாக ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் நேர்மையாளன் இல்ல. தனது சமூகத்துக்கு யாழ்ப்பாண வெள்ளாளிய ஆதிக்க வாதிகள் மேற்கொண்ட சமூக அடக்குமுறைகள் குறித்த இவரது கருத்துகளில் பல நியாயங்கள் உண்டு. அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக பழிவாங்கும் அரசியலாக மகிந்த, கோட்டபாய போன்ற பல இனவாதிகளுடன் இணைந்து வேலை செய்தது, அவர்களின் இனவாத செயற்பாடுகளை ஆதரித்தது இவர் நேர்மையற்ற நபர் என்பதை பறை சாற்றுகிறது.
  12. அந்த இரண்டு ஆசனங்களும் இருவரும் தற்போது இருந்து பேட்டியளிக்கும் அந்த இரு ஆசனங்களாகும். 😂
  13. தன்னை ஜனாதிபதியாகி அழகு பார்க்க செய்து பேருதவி புரிந்தவர்களையும் தனது வாழ் நாள்முழுவதும் மகிந்த மறக்கக்கூடாது. 😂
  14. வீரப்பையன், உலகம், அதாவது பூமி தோன்றி 450 கோடி வருடங்கள். ஹோமோ சேப்பியன் மனித இனம் உருவாகி 2 லட்சம் வருடங்கள்.
  15. ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் நடைபெறும் பாரளுமன்ற தேர்தலை இவர்கள் பகிஷ்கரிக்கவில்லையா?
  16. இது ஆச்சரியம் அளிக்கக்கூடிய விடயம் அல்ல. இதுவே உலக ஜதார்த்தம் தமிழீழம் உருவாகி இருந்தால் தமிழீழ ஜனாதிபதியும் இந்தியாவை அனுசரித்தே நடக்க முயற்சிப்பார். ஆரம்பத்தில் இந்தியாவை ஆக்ரோஷமாக எதிர்த்த புலிகள் கூட உலக அரசியல் சற்றே புரிய தொடங்கிய பின்னர் தமது தவறை உணர்ந்து இந்தியாவுடன் அனுசரித்து போக பல தடவைகள் முயன்றனர். துன்பியல் சம்பவம், அன்ரன் பாலசிங்கத்தின் இந்திய ஊடகத்திற்கான பேட்டி 2002 பேச்சுவவர்த்தையை முழுமையாக இந்தியாவில் நடத்த புலிகளின் முன்மொழிவு என்று பல தடவை இந்தியாவை அனுசரித்து போகவே விரும்பினர். ஆனால் புலிகளில் கடும் போபமுற்றிருந்த இந்தியாஅதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அனுராவினால் இந்தியாவை அனுசரித்து போவதை தவிர்கக முடியாது. ஆனால் இந்தி யாவை அனுசரிக்கும் அதே வேளை தனது நாட்டின் நலன்களை பேணிக் கொள்வதிலேயே அனுராவின் சாமர்த்தியமும் வெற்றியும் தங்கியுள்ளது.
  17. என்னை மண்டையன் குழு என ஒரு தேசியர் அவதூறு பொழிந்தார். மண்டையன் குழு தமிழர் என்பதால் அவருக்கு சார்பாக அவரை ஆதரித்து பேசுகிறார் இன்னொரு தேசியர். 😂
  18. நான் உங்களை பற்றி பேசவில்லை. தமிழர் அரசியலை பற்றி மட்டுமே பேசுகிறேன். டக்கியை பற்றியும் மண்டையனைப் பற்றியும் கூட என்னால் பேச முடியும். நேர்மையான அரசியலை பேசும் நேர்மையற்று உடனடியாகவே அவதூறை கையில் எடுத்த போதே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது தெரிகிறது. கண்ணை இறுக மூடிக்கொண்டு பாலை குடியுங்கள்.
  19. கொலைகளை செய்ததில் தமிழ் அரசியலில் ஈடுபட்டவர்கள் ஶ்ரீலங்கா அரசபீடத்தில் இருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதையே வரலாறு கூறுகிறது. எதிர் காலத்திலாவது இரு தரப்பும் திருந்த வேண்டும். பழைய தவறான அரசியல் பாரம்பரியத்தில் இருந்து விடுபட்டு இலங்கையில் புதிய வார்ப்புகளாக தமிழ் இளையோர் அரசியல் மிளிர வேண்டும்.
  20. இதிலே என்ன புலிக்காய்சல். தமிழர் அரசியலில் செய்தவர் விட்ட அரசியல் பிழைகளை பற்றி கதைத்தால் உங்களுக்கு புலிக்காய்சல் வருவதேன்? பேச்சுவார்தையை அனுரா அல்ல அன்றைய ஜேவிபி குழப்பியது என்று தமிழ் நெற் கூறினால் அதை குழப்பியடித்த மற்றவர்களை பற்றி பேசலாம் தானே. இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது.
  21. அதில் என்ன புலிக்காய்சல், கொண்டையை மறைப்பது என்று கீறு விழுந்த பழைய ரெக்கோட் போல எழுதுவது. அரசியலில் காய்தல் உவத்தல் இல்லாமல் வெளிப்படையாக எந்த அரசியல கட்சிக்கோ இயக்கத்துக்கோவிசுவாசம் இல்லாமல் உரையாட வேண்டும் என்பதையே நான் எப்போதும் கூறிவருகிறேன். அது உங்களால் முடியாது. உங்கள் தவறுகளை மூடி மறைக்கும் எவருக்கும் அடுத்தவர் தவறுகளை கூறும் அருகதை இல்லை. இங்கு ஒளித்து மறைத்து பேசுபவர் நீங்கள் தான். அரசியலை நேர்மையற்று பேசுபவர் நீங்கள் தான். நானல்ல.
  22. 2002 ல் ரணிலைடனான பேச்சுவார்த்தைகளை அன்றைய ஜேவிபி எதிர்ததத்தை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ் தெற் செய்திகள் மட்டுமல்ல அந்த பேச்சுவார்ததைகள் குழம்பியதற்கும் அதிலிருந்து வெளியேறி யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு புலிகள் தரப்பும் மகிந்த தரப்பும் எப்படியெல்லாம் அன்று முனைப்பு கட்டியது என்பதையும் அன்று ஐரோப்பிய யூனியன் தொடக்கம் நோர்வே, இணைத்தலைமை நாடுகள் பேச்சுவார்ததையில் ஈடுபட்ட இருதரப்பினரையும் பற்றிய அறிக்கையிடலையும் அனைத்துலக மனித உரிமைகள் சபை இருபகுதி மனித உரிமை மீறல்களைப்பற்றி வெளியிட்ட அறிக்கைகளையும் இங்கு சேர்தது பதிந்தால் அதுவே உண்மையான வரலாறு. ஒரு பக்க தாம் சார்ந்த அமைப்பு செய்திகளை வெளியிடும் தமிழ் நெற்றிறின் செய்திகளையும் வியாக்கியானங்களையும் பரப்புரைகளையும் தருவது வரலாறு அல்ல என்பதை மக்கள் அறிவார்ரகள்.
  23. எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி அவர்களின் செவ்வி. 2009 வரை போராட்டத்திற்க்காக தன்னை முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
  24. ஒருதரப்பின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உணர்ச்சிகரமான செய்திகள் முழுமையான வரலாறு ஆக முடியாது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன: 1. ஒரு நிலைசார்ந்த பார்வை: மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பெரும்பாலும் ஒரு தரப்பின் பார்வையை மட்டுமே பிரதிபலிக்கின்றன. இதனால், பல்வேறு சம்பவங்கள் ஒருவகையான சாயலோடு விவரிக்கப்படுகின்றன, மற்ற தரப்புகளின் அனுபவங்கள் மற்றும் கருத்துகள் முழுமையாகப் பிரதிபலிக்கப்படுவதில்லை. 2. உண்மையின் சிக்கலான பரிமாணங்கள் மறைக்கப்படுகின்றன: உணர்ச்சிகரமான செய்திகளில் உண்மைகளை மிகைப்படுத்தியவாறு அல்லது ஒரு மையத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறப்படுவதால், வரலாற்றின் முழுமையான, சிக்கலான நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியாது. 3. மோசமான முன்னோக்குச் சித்திரம்: உணர்ச்சி சார்ந்த செய்திகளை முன்னிறுத்துவது நிகழ்வுகளை சரியான கோணத்தில் உணர வைக்காமல், பயம், கோபம் அல்லது துன்பம் போன்ற உணர்ச்சிகளை உண்டாக்கி, சமூகத்தில் தவறான புரிதல்களையும் பிரிவினையும் ஏற்படுத்தும். 4. முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை: மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் சில நேரங்களில் உண்மைகளையும் தவறாக வடிவமைக்கின்றன. இதனால் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு, புதிய தலைமுறைகள் அவை பற்றி தவறான எண்ணங்களுடன் வளர வாய்ப்பு அதிகரிக்கிறது. 5. நுணுக்கமான விவாதங்கள் இல்லாதது: உணர்ச்சிகரமான செய்திகளில் சரியான ஆராய்ச்சி, விவாதங்கள், மற்றும் பல்வேறு தரப்புகளின் குரல்கள் அரிதாக இடம் பெறுகின்றன. இது வரலாற்றின் முழுமையான புரிதலை இழக்கச் செய்யும். சமீப கால வரலாற்றை முழுமையாக உணர்வதற்கும் நியாயமாகப் புரிந்துகொள்வதற்கும், அனைவரின் குரல்களையும், உண்மையைச் சீரியமாயும் ஆழமாகவும் ஆய்வு செய்வது அவசியம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.