Everything posted by island
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை. அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன். இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை கிடைத்துவிடும் என்பது போன்ற மாயையைக் கட்டமைக்க இவர்களுக்கு சுமந்திரன் தேவை. முன்பென்றால் ஒரு வில்லன் போரடித்தவுடன் அவரைப் போட்டு தள்ளிவிட்டு அடுத்த வில்லனைக் கட்டமைக்கலாம். இப்போது அதை செய்யமுடியாது என்ற விரக்தி சுமந்திரன்போகுமிடமெல்லாம் பின்னால் திரிந்து திரிந்து குலைக்க வேண்டிய பரிதாப நிலை. 😂
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து என பல நாடுகளில் தமிழர்களிடையே இது போன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே. இவ்வாறான சம்பவங்கள் இனம், பால், வயது வேறுபாறுகளை கடந்தவை பெரும்பாலான சாதாரண மன நிலை உள்ள மக்கள் இதனைப் புரிந்து கொள்வர். இனவாதிகள் அவர்கள் எந்த இனத்தில் இருந்தாலும் தமக்குள் உள்ள இனவாத வக்கிரத்துடன் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பர்.
-
தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்
கல்வி என்பது உனக்கானதல்ல உனக்கு அது வராது என்று பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பெரும்பான்மையான மக்களை ஒதுக்கி அவர்களை தாழ்ததிய நிலையில் இருந்து இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களின் னுகூலங்களால் இன்று சற்றே முன்னேறிவருகின்றனர். அது போல் முயற்சியுடன் கல்வி கற்கும் போது எவராலும் முன்னேறிய நிலையை அடைய முடியும். இலங்கையை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களிடன் நல்லுறவை பேணி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய கல்வியை பெற்றுக் கொண்டதன் மூலம் தமது கல்வித்தரத்தை சற்று உயர்ததிக்கொண்டனர். அதை வைத்த தாம் மற்றய இனத்தை விட கல்வியில் சிறந்தவர்களாக தமக்குள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அது உண்மை அல்ல என்பதை கடந்த 70 ஆண்டுகளில் கண்டோம்.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
சென்ற மாதம் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே அளவான மக்கள் திரள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக யாழ்பாணத்தில் இருக்கும் யூருபர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த நிகழ்சசியில் தூஷன வார்ததைகளுடன் அநாகரிகமாக நடந்து நிகழ்வைக் குழப்பிய காவாலிகள் இந்த நிகழ்சசியில் வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். 😂
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்ற பல சம்பவங்கள் நமது தமிழர் சமூகத்திலும் புலம்பெயர் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. கணவனும் மனைவியும் வேலை செய்யும் உணவகத்தில் வைத்தே கணவன் தனது மனைவியை குத்து கொலை செய்த சம்பவமும் அண்மையில் நடைபெற்றது.
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
அரசியலைக் கடந்து அரசியலில் வெவ்வேறுகட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு விளையாட்டுப்போட்டியை இணைந்து பார்ப்பதும் ஒரு பொது நிகழ்சசியில் கைகுலுக்கிக் கொள்வதும் Zivilisation அடைந்த மக்கள் வாழும் மேற்கு நாட்டு அரசியல்வாதிகளின் பழக்கவழக்கம். அதை இலங்கை போன்ற நாடுகளில் ஐயோ அதுவும் தமிழ் அரசியல்வாதி செய்வது மன்னிக்கமுடியாத குற்றம்.
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தேசியத்துக்காக மக்கள் இல்லை. மக்களுக்காக தான் தேசியம். ஆகவே மக்களில் இருப்பு இருந்தால் தான் ஆரோக்கியமான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும். இல்லையெனில் நோய்வாய்ப்பட்ட வெறும் அடிப்படைவாதத்தை மட்டுமே தேசியம் என்ற பெயரில் வளர்ததுவிட்டு புலம பிக்கொண்டிருக்க மட்டுமே முடியும். எந்த பயனுமற்ற அழிவை நோக்கியதாக இருப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்துப்பார்த்தீர்களா? பாலஸ்தீன பிரச்சனை இப்போதும் இழுபடுவதற்கு ஹமாஸ் பயங்கரவாதம் முக்கிய காரணங்களில் ஒன்று. அரபாத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை குழப்பியது ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு தான்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
இந்த உசுபேற்றும் வெற்றுக் கோசங்களைக் கேட்டு ஒரு தலைமுறையே அழிந்து விட்டது. அடுத்த தலைமுறையாவது அறிவுத்திறன் என்ற ஆயுதத்தை உபயோகித்து தம்மை ஏய்த்து பிழைக்கும் சுயநலமிகளை இனங்கண்டு தம்மை காத்துக் கொள்ளட்டும். சாந்தன்களை உருவாக்கி பலி கொடுத்து வீரவணக்கம் செலுத்துவது தேசியம் அல்ல.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
இவ்வாறு தமிழ்த் தேசியத்தை “அங்கீகரிக்காத நாடுகள்” என்று பன்மையில் எழுதிய உங்களால் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கும் நாடு என்று ஒருமையில்க் கூட எழுத முடியவில்லை. அங்கு தான் தெரிகிறது இது பெருமையா என்பது தெரிகிறது. நீங்கள் கூறிய பெருமையை வைத்து அப்படி அங்கீகரிக்கும் நாடு, என்று ஒற்றை நாட்டை கூட அங்கீகரிக்க வைக்க முடியாது. உலக நாடுகள் அங்கீகரித்தால் தான் தேசியம் என்ற சொல் அர்ததம் பெறும். இல்லையெனில் பஜனைக் கோஷ்டிகள் போல் நமக்குள் மட்டும் சின் சின்சா போட்டுவிட்டு போகவேண்டியது தான்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
எனது முதற்பதிலிலே தெளிவாகவும் நேரடியாகவும் எழுதிய பின்னர் ஏன் இந்தக் கேள்வி. சும்மா ரைம் பாஸிற்காகவா?
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
றஞ்சித் எழுதிய கருத்திற்கான எனது தர்க்கரீதியான பதிலுக்கு உங்களால் நேரடியாக பதிலளிக்க முடியாததால், வழமையான பாணியில் நான் சொல்லாத விடயத்தை உங்கள் கற்பனையில் கூறியுள்ளீர்கள். சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மிக அதிகமான நீண்ட தண்டனையை பெற்ற பரிதாபத்துக்குரியவர் என்ற ரீதியில் மக்களின் அனுதாபம் அவர் மீது எழுவது இயல்பானது. இறந்த ஒரு மனிதருக்கான மரியாதை என்ற அளவில் அது நியாயமானது. ஆனால் தமிழ் தேசியத்துடன் தமிழர் உரிமைப் போராட்டத்துடனும் இதனை இணைப்பது அபத்தமானது. தமிழ் தேசியத்திற்கும் தமிழர் போராட்டத்திற்கு இது அபகீர்த்தி கொடுக்கக்கூடியது என்பது எனது கருத்து.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
ராஜீவ் தன்பாவங்களுக்கு தண்டனை பெற்றார் என்ற உங்கள் கூற்று உண்மையானால் இளமைக்காலம் முழுவதையும் இழந்து இறுதியில் தாயை பார்ககாமலே மரணித்த சாந்தனுக்கும் இது பொருந்துமா? ராஜீவுக்காவது உலகம் முழுவதும் மரியாதை உள்ளது. ராஜீவ் கொலை போன்றவை புலிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க உதவுகின்றது என்பது உங்களுக்கு மகிழ்சசியை கொடுத்தாலும் பரந்த உலகின் முன்னால் இதில் எந்த பெருமையும் இல்லை. இவ்வாறான வெறும் சென்றி மென்ற் உசுபேற்றல்கள் தமிழரின் எதிர்காலத்திற்கு கிஞ்சித்தும் பிரயோசனப்படப் போவதில்லை.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
எந்த செய்தியையும் சொல்லப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் கிடைக்கப்போவதும் இல்லை. படிக்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று கூறிவிட்டு முகநூல்களில் வீரவணக்கம் செலுத்துவதும் தேசக கனவை சுமந்தவன் தேசமெங்கும் நடந்தவன் போராளி சாந்தன் என்று போஸ்ரர் அடிப்பதும் சரியான ஆளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உலகத்தை நினைக்க வைக்கும்.
-
சுந்தர் பிச்சை பதவி விலக நெருக்கடியா? கூகுள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது?
உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். Steven Hawking இறுதியாக எழுதிய நூலில், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றி ஒரு அத்தியாயம் முழுவதும் எழுதியுள்ளார். செயற்கை நுண்ணறிவைப் பற்றி விரிவாக கூறியதுடன் அதனால் மனிதன் எதிர்நோக்கப்போகும் ஆபத்துகளைப் பற்றி எச்சரித்ததுடன், அந்த ஆபத்துகளில் இருந்து மனிதன் தன்னை தற்காத்துக்கொள்ளும் பொறிமுறையின் முன்தயாரிப்பின் அவசியத்தையும் அப் பொறிமுறை செயற்கை நுண்ணறிவை சிறந்த முறையில் கண்காணிக்க கூடிய/ கட்டுப்படுத்தக் கூடிய வகையில் இருத்தல் அவசியம் என விளக்குகிறார். இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் வருகை என்பது தவிர்க்க முடியாதது அதைத் தடுத்து நிறுத்த முடியாதது என்ற ஜதார்ததத்தை அவர் ஏற்றுக்கொள்வதோடு அதை எவ்வாறு மனிதன் எதிர் கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விபரிக்கிறார்.
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
கொடிய யுத்தத்தின் தாக்கங்களால் தனது துடிப்பான இளமைக்காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதையும் முழுவதையும் வேதனையில் கழித்தவர். அவரின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தனின் சகோதரரின் முகநூல் பதிவு இவ்வாறு கூறுகிறது. நீதி என்பது நாதியற்றவர்க்கற்றது. யாரை எதிர்த்தோமோ அவர்களாலும் யாருக்காக எதிர்த்தோமோ அவர்களாலும் என் குடும்பம் அநாதையாக்கப்பட்டது. வேதனையான பதிவு
-
துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! … கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை!!
இந்திய பிரதமர்களில் அடிமுட்டாள்ப் பிரதமர் என்றால் இந்த மோடி தான்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நடந்தவைகள் எல்லாம் 100% சரியானவை என்று அதற்கு நியாயம் கற்பித்து அவை எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை எனப் புனிதப்படுத்தி அதை எமது பெருமையாக் கூறி காவியம் எழுதுவதும், அந்தப் புனிதமானவற்றில் நியாயமற்ற பாரிய படுகொலைகளும் உள்ளனவே எனச் சுட்டிக்காட்டும் போது, அந்த விவாதத்தில் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலையை அடையும் போது, பழசை இனி கிண்டி என்ன பிரயோசம், நீங்கள் என்ன பழசே கிண்டிக் கொண்டிருக்கின்றீர்கள், என்று எம்மைக் குற்றம் சாட்டுவதும், அதன் பின்னர் மீண்டும் தாம் அதே பழசை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு, தாம் பழசு என்று கூறிய அதே விடயங்களை பெருமையாக பேசி அதே தவறான அரசியலை தொடரவேண்டும் என்ற பொருள்பட பேசும் வரட்டுத் தத்துவத்துக்கு பெயர் தான் தேசியம் என்றாகி விட்டது கவலைக்குரியது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இருந்து பாருங்கள் கிருபன் இந்த கேள்விக்கான நேரடிப் பதில் வராது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
மிகச் சிறந்த கருத்து ஜஸ்ரின். இக்கொலைகளைச் செய்த புலிகள் இல்லாத போது இவற்றை பேசுவதால் என்ன பிரயோசனம் என்று ஒரு உறவு கேட்டார். இந்த அரசியல் கொலைகள் தேசியப் பெருமை என்று எதிர்காலத்தில் இதனை முன்மாதிரியாக கொண்டு நடத்தப்படலாம் என்பது மிக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே. எனவே தான் இவை அத்தனையும் எமது வரலாற்றின் தவறான பக்கங்கள் என்பதை எமது அடுத்த தலைமுறைக்கு கூறவேண்டிய அவசியம் உள்ளது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆயுதப் போராட்டம் எந்த நன்மைகளையும் தராது அழிவுகளை மட்டுமே தந்தது என்பதைக் கண்முன்னே பார்தத பிறகும் இனியும் அப்படி போராடுவோம் என்று சொல்பவன் புறப்படுபவன் ஒரு லூசனக தான் இருக்கமுடியும் கந்தையர். 😂
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
கந்தையர் இங்கு எம்மால் பேசப்பட்ட விடயங்கள் எல்லாம் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களே. இவை எல்லாம் ஏற்கனவே அனைத்துலக நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசு செய்த படுகொலைகளும் அவர்கள் விரும்பாவிட்டாலும் ஆவணப்படுத்தப்பட்டே உள்ளன. நீங்கள் வேண்டுமானால் இவற்றைப் பொய் என்று. நிரூபிக்கலாமேயொழிய இவற்றை பேசக்கூடாது என்று தடை போட உங்களுக்கு உரிமை இல்லை. இவை எல்லாம் நீங்கள் கூறியது போல் சிறிய தவறுகள் அல்ல. இங்கு பேசப்பட்டது நடந்தவற்றில் வெறும் 5% தான் இருக்கும். இதற்கே இப்படி கொந்தளிக்கின்றீர்கள் என்றால் 30 வருடங்களாக நடந்த அனைத்தையும. பேசினால் வெடித்து சிதறிவிடுவீர்கள் போல. 😂 நீங்கள் விரும்பினால் அவை ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் பேச நான் தயார். அப்போது கூறுங்கள் சிறிய பிழைகளா அல்லது எமது போராட்டத்தை தோற்கடிக்க காரணமான தவறுகளா என்பதை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை ஆதரிக்கும் நீங்கள் இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ற பதத்தை பாவித்ததன் மூலம் ஜனநாயக உலகின் சிவில் சட்டங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால், ஜஸ்ரின் கூறியது போல் இப்படியான சட்டங்கள் புலிகளுக்கு மட்டுமல்ல புலிகளால் படு கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தகவலுக்கு நன்றி விளங்க நினைப்பவன்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நல்ல புரட்சிகரமான வசனங்கள் வசி. 1983 ம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதியில் இப்படியான புரட்சிகரமான வசனங்களைக் கூறிப் பாடசாலைகளிலும் சன சமுக நிலையங்களிலும் இயக்கங்களுக்கு ஆள்ச் சேர்த்தார்கள். இப்படியான வசனங்களை நம்பி இயக்கங்களில் சேர்ந்த பல இளைஞர்களில் பலர் சக இயக்கங்களாலேயோ சொந்த இயக்கத்தாலேயோ வேட்டையாடப்பட இயக்கங்களில் சேராது தயக்கம் காட்டிய இளைஞர்களில் பலர் இன்று ஊரிலும் ஐரோப்பாவிலும் சுக போகமாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இனிதே வாழ்கிறார்கள் என்பதே ஜதார்த்தம்.