Everything posted by island
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. கொலைகளை யார் செய்தாலும் அது குற்றம் தான். தமிழ் தேசிய சூழலில் உள்ள அரசியல்வாதிகள், சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள் நினைத்திருந்தால் யுத்தம் ஆரம்பித்த 1980 களின் ஆரம்பத்தில் இருந்து கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் ஆக்ககப்படவர்கள் பெயர் ஶ்ரீலங்கா இராணுவத்தால் அல்லது எந்த இயக்கங்களால் அந்த கொலை நடத்தப்பட்டது யார் மீது அதிக சந்தேகம. உள்ளது போன்ற விபரங்களுடன் திகதி வாரியாக ஒரு பட்டியலை தயாரித்திருக்க முடியும்.அதை சர்வதேச கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கலாம். அவை இந்த புதை குழுகளில் உள்ளனவா என்பதை டிஎன் ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கலாம்.மாவட்டங்களின் 1980 ம் ஆண்டுல் இருந்தான குடிசன மதிப்பு புள்ளிவிபரங்களின் துணையுடன் அதை செய்திருக்கலாம். அப்படி செய்வதன் மூலம் அந்த கொலைகளை யார் யார் செய்தார்கள் என்பதை விசாரணை உதவியாக அமையும். அத்தோடு அந்த கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் உலகில் எங்கு வசித்தாலும் அந்த பட்டியலை சரி பார்க்கவும் மேலதிக தகவல்களை வழங்கவும் நீதி விசாரணை சாட்சிகாக மாறவும் முடியும். இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. ஏனெனில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒரு சிலரவது தற்போது உயிருடன் ஏதோ ஒரு நாட்டில் வாழக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால், அதை செய்ய இவர்கள் எவருக்கும் அக்கறை இல்லை. அந்த கொலைகளை செய்தவர்களில் சிலர் தற்போது அரசியல்வாதிகளாக சிவில் சமூகத்தினராக, ஊடகவியலாளராகவோ அல்லது புலம் பெயர்ந்தோ மக்களுக்குள் பரவி இருக்கலாமென்பதால் அதை செய்ய இவர்களுக்கும் சற்று பயமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை மூலம் நிச்சயமாக இலங்கை இராணுவத்தினர் செய்த கொலைகளை இனம் காண முடியும்.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
கொலைகளை செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கும் நோக்குடன் ஏதோ ஒரு காரணத்தை கூறிக்கொண்டே இருப்பர். இந்த விடயத்தில் இலங்கை அரசு இயக்கங்கள் எல்லோருமே ஒரே நேர்கோட்டிலேயே ஒரே கொள்கையிலேயே பயணித்தார்கள். அவரவுக்கு சார்பானவர்கள் அவர்களின் கொலைகளை மட்டும் நியாயப்படுத்துவார்கள். ஏதோ யுத்தம் முடிந்தது மக்களைப் பொறுத்தவரை மகிழ்சசியே. தமிழர்களின் ஜனத்தொகை யுத்தத்திற்கு முன்னர் இருந்த காலத்தில் வளர்சசியடைந்த வேகத்தில் மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதே போல யுத்தத்திற்கு முன்பு இருந்த கலவி, வேலைவாய்புகள், சுய பொருளாதாரம் ஆகியவை கிடைத்தாலே தற்போதைய நிலையில் போதைமர என்ற நிலையே காணப்படுகிறது. 1970 களில் யாழ்பாணத்தில் சொந்த உழைப்பில் வீடுகளைக் கட்டிய எம்மவரால் இன்று ஊர் உழைப்பில் அதை செய்ய முடியாதுள்ளது. வெளிநாட்டு வருமானத்தில் தங்கி வாழும் பொருளாதார நிலையையும் சோம்பேறித்தனத்தையும் யுத்தமே ஏற்படுத்தியது.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
ஏதோ டக்லஸ் மட்டும் தான் படு கொலைகளை புரிந்தது போலவும் மற்றைய இயக்கங்கள் புனிதர்கள் போலவும் கூறப்படுகிறது. இலங்கையில் போரடிய அனைத்து இயக்கங்களும் பல ஆயிரம் படுகொலைகளை நிகழ்ததியவர்கள் தான். இதில் யாரும் சுத்தமானவர்கள் கிடையாது. ஶ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்ய சூழ்நிலையை அமைத்து கொடுத்ததில் தமிழ் க்கங்களுக்கு பங்கு உள்ளது.
-
இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர்
பத்து வருசமா வெளிநாட்டு அமைசரா இருந்தும் இப்ப தான் இதை பற்றி கேள்விப்படுகிறார் பாவம்.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
லூசு கூட்டங்கள் இப்படி எப்போதும் காடைத்தனங்கள் செய்வது இயல்பானது தானே. தமிழரிடையே அரசியல் கட்சிகள் இல்லை. வெறும் வன்முறை காடைக்குழுக்கள் மட்டுமே உள்ளன. அந்த காடைக்குழுக்களுக்குள் இப்படியான வன்முறை அடிபாடுகள் நடப்பது வழமை. முன்பு கையில் ஆயுதங்கள் இருந்ததால் ஆளையாள் சுட்டு கொலை செய்தன. இப்போது அவர்களின் வால்கள் இப்படி காடைத்தனம் புரிகின்றன. இதை தமிழ் ஊடகங்கள் ஊதி பெருப்பித்து காடையர்கள் செயலுக்கு மக்கள் மீது பழி போடுகின்றன.
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
அமைச்சர் சந்திரசேகரத்தின் சப்பாத்தை கூட போடவிடாமல் அவரை துரத்தியடித்து அந்த சப்பாத்துகளை போட்டோ எடுத்து முகநூலில் அதை கொண்டாடி மகிழ்ந்த வீரம் போதும் இனி செம்மணி படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டாலும் இனி பரவாயில்லை. 2004 இறுதியில் அல்லது 2005 ஆரம்பத்தில் மகிந்த பிரதமராக பதவியேற்று யாழ்பாணம் சென்ற போதும் இப்படி தான் ஒரு சிலரால் துரத்தி துரத்தி விரட்டப்பட்டார். புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் அதை கொண்டாடி மகிழ்ந்தன.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நம்ம தமிழ் ஆயுத இயக்கங்களிடம் அணுவாயுதம் இருந்திருந்தால் தமிழர் பிரச்சனை ஒட்டுமொத்தமாக இருந்த இடம் தெரியாத அளவுக்கு தீர்ந்திருக்கும். 😂
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மத அடிப்படைவாதம் உலகில் எங்கு இருந்தாலும் அது ஒழிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற நாடுகளில் நேரடியாகவும் மேலும் பல இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாகவும் உள்ள அடிப்படைவாதத்தை எதிர்தது மாற்றங்களை கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கப்படவேண்டதே. ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் பொஸ்னியா மற்றும் துருக்கிக்குள் நுளைந்தவுடனேயே மத அடிப்படைவாதத்தின் வாசனை மெல்ல மெல்ல ஆரம்பித்துவிடும். நாடுகளின் வளங்களை ஒரு குறிப்பிட்ட வர்ககம் தம்வசப்படுத்தி அனுபவிப்பதற்கே இப்படியான அடிப்படை வாதங்கள் மக்களிடையே தூண்டப்படுகின்றன. இலங்கையில் பௌத்த மேலாண்மை புத்த மதத்துக்கான முன்னுரிமை எந்தளவுக்கு தவறானதோ அதேயளவுக்கு ஈழம் சிவபூமி என்ற கூக்குரலும் தவறானதே. அண்மைக்காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை அழைப்பவர்களிடமும் இவ்வாறான மத அடிப்படைவாதங்களை ஆதரிக்கும் போக்கை காணலாம்.
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
நீங்கள் நிதானமாகவோ மரியாதையாகவோ கருதெழுதுபவர் அல்ல. இங்கு கூட சக மனிதர்களை ஓநாய்கள் என்று எழுதியது நீங்கள் தான். மற்றய பலதிரிகளில் கூட தரக்குறைவான வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள். தமிழர் அரசியலை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதை எதிர்தது உணர்ச்சி வசப்படுத்தும் அழிவு அரசியலை ஊக்குவிப்போரை அப்படித்தான் அழைக்க முடியும்.
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
மண்குதிரைக்காக அல்ல, மண்குதிரையை காட்டி மக்களை ஏமாற்றும் அற்ப பதர்களை இனம்காட்டவும் அரசியல் என்பது அறிவு ரீதியனதேயொழிய பக்தி ரீதியானது அல்ல என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே எனது கருத்துக்கள்.
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
வாழ்ககை முழுவதும் மண்குதிரைகளை நம்புவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. 😂
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
அந்த தடியை பத்துவருடங்களாக யூஸ் பண்ணியும் கட்டுப்பணம் கூட எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு இடத்திலாவது கட்டுப்பணம் கிடைக்கும் போது சீமான் என்ற தடியை யூஸ் பண்ணவேண்டிய காலம் வந்துவிடும். ஆனால் அந்த தடி இத்துப்போன தடியாதலால் தற்குறித்தம்பிகள்ளே அந்த தடியை தூக்கி வீதிவிடுவர். 😂😂😂
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
இல்லை. அரசியலோ, அரசியல் உரிமை போராட்டமோ என்பது என்றுமே பக்திக்குரியது அல்ல. அதீத தலைமை பக்தி வைப்பவர்கள் அல்லது அவ்வாறு பக்தி வைப்பது போல் நடித்து அந்த தலைவனை அவரது தகுதிக்கு மேல் பப்பாவில் ஏற்றுபவர்கள் மக்களதும் அந்த தலைவனதும் அழிவுக்கு முதன்மை காரணியாவார். ஆகவே அப்படியன பக் தியை நான் ஊக்குவிப்பதில்லை. பக்திக்கு அப்பால் ஒரு சிறந்த ஆயுத விடுதலைப் போராளியாக இருந்த பிரபாகரனை வைத்து தமமு பிழைப்பை நடத்துபவர்கள் யாராயினும் அவர்கள் மக்கள் விரோதிகளாகவே இருப்பர்.
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
அப்ப இனியும் தொடர்ந்து பிரபாகரனை லோக்கல் கட்சி அரசியலுக்காக பாவிக்கலாம்.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
இங்கு உண்மையான பிரச்சனை கள் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது அல்ல. ஒரு வேளை தமிழ் நாடு அரசு கள் தவறணைகளை திறந்திருந்தால், பனை, தென்னையில் இருந்து எவ்வளவு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்கள. செய்யலாம். மக்களை குடிக்கப்பழக்க அரசு கள்ளை உற்பத்தி செய்கிறது. கள்ளிறக்கும் பனை தென்னை அதன் மற்றைய நல்ல பயன்பாடுகளை கெடுத்துவிடும் என்றறெல்லாம் செபஸ்ரியன் சைமன் புலம்ப தற்குறி தம்பிகளும் அதற்கு ஆமாம் சாமி போடுவார்கள். அத்தோடு ஏதாவது சிறிய எளிதில் வெளியே வரக்கூடிய போரா ட்டம் செய்து சில நாள் உள்ளே இருந்தால் நான் பெருய ஆளா வந்திடுவனில்ல என்ற அடி வாங்கி அவுந்த வேட்டியை கட்டும் வடிவேலு பாணியும் இந்த போராட்டதுக்கு காரணம். என்ன தான் இப்படி சர்க்கஸ் காட்டினாலும் அடுத்த தேர்தலில் டெபாசிற் கிடைக்கப்போவதில்லை. 😂
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
- IMG_0721.jpeg
- 'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
ஒட்டுக்காக மனுசன் இங்கே மரத்தில் ஏறுறான் பாரு! ஏறிக் குடிச்சுட்டு இறங்கி வந்தால் கட்டுப்பணம் கூட காலி. 😂😂😂😂😂😂- வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்
ஏன் என்னைக் கேட்கின்றீர்கள்? நான் எந்த கொலையையாவது சரியென்று நான் இங்கு கொண்டாடினேனா? அது சரி நீங்கள் ஏன் அர்சனாவின் இந்த கேடு கெட்ட கேவலமான செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்? இலங்கை அரசியலில் அரசியல் கொலைகளை செய்து விட்டு அதை மறைத்து நல்லவர்களாக நடிபவர்கள் பலர் எல்லா இனத்திலும் உள்ளார்கள். அதை உதாரணம் காட்டி குடும்பதகராறுக்காக மனைவியின் தலையை வெட்டிய கொலையும் அதுவும் ஒன்றென எனக்கு கல்வி கற்பித்த எந்த வாத்தியாரும் கற்பிக்காது எனது அதிஷரம்.- இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
துயரமான செய்தி. இறந்தவர்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.- வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்
தனது சமூத்தில் நடந்த ஒரு கொடூர குற்ற சம்பவத்தை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் அந்த கொலையை ஒரு திரைப்பட காட்சியை போல் funny யாக வர்ணித்து உரையாடுவதும், தனது நண்பியிடம், “நீங்களே வெட்டின சந்தோசத்துல் இருக்கினீர்கள் போல” என சிரிப்பை அடக்கமுடியாத மகிழ்சசியுடன் உரையாடுவதும் அதை சமூக வலைத்தளத்தில் பகிர்வதும் ஒரு civilised சமுதாயத்தில் இயல்பானது என்று நினைக்கின்றீர்களா?- வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்காலத்தில் மாகாணசபை முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு போட்டியிட இருக்கும் அர்சனா ஒரு கொலை நிகழ்வுக்கு ஆதரவாக அதை ஒரு funny யாக மகிழ்ச்சியாக எப்படி நனது நண்பியுடன் உரையாடுகிறார் பாருங்கள். மாகாணத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு பதவிக்கு வர விரும்பும் ஒருவரால் இப்படி உரையாட முடிகிறதென்றால் வன்முறையை, ஒரு குற்றச்செயலை வெளிப்படையாக ஆதரித்தாலும் தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம். https://youtu.be/RyiniZWcsAA?si=QCmSOFuqBStO9450- விரட்டியதால் வந்த விபரீதம்: குழியில் விழுந்த புலி..!
இருவருக்கும் ஆபத்து என்ற உணர்வு வந்தவுடன் நண்பர்களாகிவிட்டனர். இதுவே மனிதன் என்றால் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் உடல் வலு குறைந்தவனை போட்டு தள்ளியிருப்பான்.- “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
எங்கோ கோடிக்கணக்கான கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள செவ்வாய்கிரகமும், வியாழன் கிரகமும், சனிக்கிரகமும் எப்படி பூமிக்கு தேடிவந்து ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் தேடிப்பிடித்து அவர்கள் வாழ்வில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அது பூமியை நோக்கி பயணிக்கும் மீடியம் என்ன? குறிப்பிட்ட மக்களை தாக்கி முடிய அது எப்படி தான் தாக்க வேண்டிய அடுத்தவர்களை தேடி செல்கிறது என்பதை ஆதாரங்களுடன் எவரவது விளக்க முடியுமா?- 🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி / அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025)
நினைவாஞ்சலிகள். 🪔🪔🪔🪔🪔
Important Information
By using this site, you agree to our Terms of Use.