Everything posted by vasee
-
கற்க கசறும்
முன்னெச்சரிக்கை! அவுஸ்ரேலியர்கள் மட்டுமல்ல இங்குள்ள எம்மவர்களும் கிட்டதட்ட அவுஸ்ரேலியர்கள் போலவே நடந்து கொள்வார்கள், ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும், சிலருக்கு பழகிவிடும், சிலருக்கு சரிப்பட்டு வராது அப்படியானவர்கள் கொஞ்சம் அவர்களுடன் இடைவெளியுடன் இருந்தால் சேதம் இருக்காது🤣.
-
கற்க கசறும்
நன்றி! என்றும் பெற்றோரால் தமது குழந்தைகளை சரியாக புரிந்து கொள்ளமுடிவதில்லை, ஒரு முறை இதே போல ஒரு சம்பவம் 3 வயது குழந்தையிடம் அதன் பெற்றோர் இது கூடவா விளங்கவில்லை என கடிந்து கொண்டார்! குழந்தையின் பெற்றோருக்கு 30 வயது அவர் 3 வயதில் அந்த குழந்தையின் புரிதல் கூட இல்லாமல் இருந்திருக்ககூடும். இதே மாதிரியான நிலை வேலைகளிலும் காணப்படும், புதிதாக வேலைக்கு வருபவருக்கு பயிற்றுவிப்பர் வெறுப்பாக இது கூடவா விளங்கவில்லை என கூறுவார் (குறிப்பாக ஆசிய பின்புலத்தவர்கள்), அதே நபர் வேலையினை ஆரம்பிக்கும் போது அதனை விட மோசமாக இருந்திருப்பார், ஒரு புதிய விடயங்களை முதன் முதலில் அணுகும் போது உள்ள நிலைக்கும் அதே ஒரு கைவந்த கலையாக வந்தபின்னராக இருக்கும் போது மன நிலை வேறுபடும். இதனை சம்பந்தப்பட்டவர்களிடம் அவர்கள் அதனை தப்பாக எடுக்காதவாறு கூறுவது மிகவும் கடினமாக இருக்கும், அவர்கள் ஆலோசனைகளை தமது கருத்து தவறானது என நிறுவ முனைவதாக நினைத்து, தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவார்கள் இதற்கு காரணம் கல்வியாக இருக்குமோ என நினைப்பதுண்டு, அதிக பட்ச புள்ளிகளை பெறுவது ஒரு சரியான விடயமாக நீண்டகாலமாக உருவகித்து அதில் ஏற்படும் ஒவ்வொரு புள்ளி இழப்பு தவறும் ஒரு கொலைக்குற்றமாக உருவகித்து கொண்டிருப்பவர்களிடம் அவர்கள் பார்க்காத பக்கத்தினை பற்றி பேசும் போது தம்மை தவறானவர்களாக சித்தரிப்பதாக நினைத்து அதற்கெதிராக போராடுவார்கள். Perception எனும் புரிதல் எமது சூழலும் அதனூடான அனுபவவுமாக இருக்கிறது, பெரும்பாலான வாழ்க்கையில் இறுதிவரை எம்மை பற்றிய சரியான புரிதலே எமக்கு கிடைப்பதில்லை, இதில் மற்றவர்களை புரிந்து கொள்வதென்பது மிகவும் சவாலாகவே இருக்கும்.
-
யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இது யாழ்ப்பாணத்தினை பொருளாதார ரீதியாக வளர்ச்சிக்குள்ளாக்கும், இதனை வரவேற்கவேண்டும் அத்துடன் காங்கேசந்துறை துறைமுகத்தினையும் விரிவாக்கம் செய்து திட்டமிட்ட சாலை ஒருங்கிணைப்பு செய்தால் ஒரு கைத்தொழில் நகரமாக யாழ்ப்பாணத்தினை மாற்றமுடியும். இதனை ஆங்கிலத்தில் Business plan என கூறுவார்கள், இரண்டுவகையான ஆய்வறிக்கைகள் முதாலந்தர ஆய்வறிக்கை (நேரடி ஆய்வறிக்கை), இரண்டாந்தர ஆய்வறிக்கையினை (நிறுவனங்களின் ஆய்வறிக்கை) மூலம் 2 வருட cash flow எதிர்வு கூறலை உருவாக்குதல் உள்ளடங்கலாக இத்திட்டம் உருவாக்கப்படும். இது சாதார வர்த்தக நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்காக நடைமுறையில் உள்ள விடயம், சில வருடங்களின் முன்னர் ஒரு வர்த்தக விடயமாக ஒரு நிறுவனத்தின் முகவரை அணுகிய போது அவர் தனது நிறுவனத்தினூடாக ஒரு கிளையினை குறித்த நகரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக கூறினார், ஒரு ஆர்வகோளாறில் வர்த்தக திட்டம் வைத்திருக்கிறீர்களா என கேட்டேன் அது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கே வர்த்தக திட்டம் பற்றி தெரிந்திருப்பதில்லை, ஆனால் இணையத்தில் மாதிரி வர்த்தக திட்டம் மற்றும் வழிகாட்டிகளும் உள்ளது, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் முயற்சிக்கலாம்.
-
கற்க கசறும்
வடதுருவ நாடுகளில் தற்போது கோடைகாலம் என கருதுகிறேன், பல உறவுகளை யாழில் காணமுடிவதில்லை, திடீரென உங்களது பதிவுகளும் குறைந்து விட்டது. குழந்தைகளின் திறமை அதன் சூழலில் மட்டுமல்ல அவர்களின் விருப்புகளிலும் தங்கியுள்ளது, அதனை திறமை என கூறமுடியாது எனகருதுகிறேன், ஆர்வம் என கூறலாம் அது தொடர்ந்து ஒரு கலை வடிவம் பெறாமலும் போகலாம் (கலை என்பது கலா எனும் சொற்பதத்திலிருந்து உருவாகியதாகவும் கலா என்றால் தொடர்ந்து வளர்ச்சியடையும் எனும் பொருளாம்). எனது முதலாவது குழந்தை பேச ஆரம்பிக்கும் போது ஒரு மொழியில் பேசினார், அது தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை. எனது மனைவிக்கு ஒரு சந்தேகம் அது முற்பிறவி பற்றியதாக இருந்தது, ஆனால் எனக்கு அந்த மொழி எங்கோ கேட்ட மொழி போன்ற உணர்வு இருந்தது ஆனால் அது என்ன மொழி என புரியவில்லை. அது ஒரு எண்ணிக்கை போல இருந்தது, இணையத்தில் 1, 2, 3 ஸ்பானிஸ் மொழியில் கூறுவது எப்படி என தேடிய போதுதான் புரிந்தது அவர் பேசிய மொழி ஸ்பானிஸ், அவர் ஸ்பானிஸ் பேசுவதற்கு சூத்திரதாரி டோரா எனும் கார்டூன் என கண்டுபிடித்து அந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவைத்தேன்🤣.
-
போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது
உக்கிரேன் இரஸ்சிய போர் சமாதானமாக தீர்க்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் குறைவடைந்து வருவது போல காணப்படுகிறது, அமெரிக்க அதிபரின் அண்மைய கூற்று இதனை பிரதிபலிப்பதாக இருக்கிறது, உக்கிரேன் தற்காப்பு நடவடிக்கை தாக்குதலின் மூலம் எதிராளியினை தோற்கடிக்க முடியாது என கூறிய அவரது கருத்து, எதிர்வரும் காலங்களில் இரஸ்சியாவிற்குள் உக்கிரேன் இராணுவத்தாக்குதலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. இது அமெரிக்காவின் பலத்தின் மூலமான சமாதானம் எனும் நியோகொன்னின் அடிப்படையாகும். ஆனால் எங்கோ நிம்மதியாக இருந்த ஒரு தேசத்தினை பாதுகாப்பற்றதாக்கிவிட்டு, அதன் பாதுகாப்பிற்கு போராடுவதாக பிரமையினை உருவாக்கி மற்றவர்கள் அழிவில் குளிர்காய்பவர்கள் சமாதானம் பற்றியும், அதற்கேற்ப சூழ்நிலை பற்றியும் பேசுவது வேடிக்கை. உக்கிரேன் சுதந்திரத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட எக்காலத்திலும் நடுநிலையான ஒரு தேசமாகவும், அணுஆயுதமற்ற தேசம் எனும் கோட்பாடும், பின்னர் உக்கிரேனில் இருந்த அணு ஆயுதங்களை ஒப்படைக்கும் போது அதற்கு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டிருந்தது, அந்த பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்ப்பட்ட அணியில் அமெரிக்கா, இங்கிலாந்து இரஸ்சியா என்பன இருந்தன, அதே இரஸ்சியாவினால் உக்கிரேனிற்கு பாதுகாப்பிற்கு அச்சுறத்தல் 2014 இல் நடுநிலையான உக்கிரேன் அரசினை மேற்கின் ஆதரவுடன் மேடான் சதிப்புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் கருங்கடல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரிமியாவில் இருந்த இரஸ்சிய கடற்படை நிலத்திற்கான குத்தகையினை மேற்கு சார்பு உக்கிரேன் புதிய அரசு இரத்து செய்துவிடலாம் எனும் அச்சத்தில் கிரிமியாவினை கைப்பற்றியதுடன் ஆரம்பமானது. 2014 பின்னர் வெளிப்படையாக இரஸ்சியாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்; உக்கிரேன் படை பல அதிகரிப்பு என ஒரு தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலவிய நிலையில் இரஸ்சியா 2021 இறுதிப்பகுதியிலிருந்து உக்கிரேன் போர் தொடங்குவதற்கு முன்னர் வரை இரஸ்சியாவிற்கு நேட்டோவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் கோரி வந்தது அது நேட்டோவினால் மறுக்கப்பட்டது, உக்கிரேன் மீதான போருக்கு காரணமாக இருந்தது. போரின் ஆரம்பத்தில் ஏற்படுத்த முயன்ற சமாதான முயற்சிகள் கூட மேற்கினால் திட்டமிட்டு குழப்பப்பட்டு போர் தீவிரப்பட்டது. இந்த போருக்கு அடிப்படைக்காரணம் மேற்கின் இரஸ்சியாவின் இருப்பு தொடர்பான கொள்கை வகுப்பு. உக்கிரேன், இரஸ்சியர்களின் அழிவுகளுக்காக அழுவதெல்லாம் ஆடு நனைகிறதே என அழும் ஒரு ஒநாயின் அழுகுரல். இரஸ்சிய இணைய ஊடுருவிகளால், உக்கிரேன் பாதுகாப்பு துறையில் இருந்த ஆவணங்கள் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது அதன் விபரங்களை பார்க்கவில்லை ஆனால் அந்த எண்ணிக்கை பார்க்கும் போது தமது சுயநலத்திற்காக மற்றவர்களை கோர்த்துவிட்டு பின்னர் சமாதானம் என தம்மை விளம்பரப்படுத்துவது பின்னர் மீண்டும் பலமாக மோதுங்கள் என கூறும் இந்த மனிதரை நம்பி தொடர்ந்தும் முட்டாள்தனமாக இரஸ்சியாவும் உக்கிரேனும் மோதினால் முட்டாள்களுக்குத்தான் நட்டம். இந்த போர் அழிவிகளின் பின்னராவது குரங்கினை அப்பம் பிரிக்க அழைக்காமல் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்விற்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் இந்த போரினால் பாதிக்கப்படவில்லை, உலகெங்கும் இதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டுள்ளது உலக மக்கள் அனைவரும் விரும்பும் அமைதிக்கு குறுக்கே நிற்கும் அரசுகளை அங்கு வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும்.
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை
ஆரம்பத்தில் பிறிக்ஸ் பொது நாணய உருவாக்கத்தில் முட்டுக்கட்டை போட்ட இந்தியா, சீனாவின் வகிபாகம் அதிகரிக்கும் என கருதினார்கள், அதே சமயம் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்குபெருமளவில் முதலீடுகளை செய்தார்கள், மறுபுறம் மலிவு விலை எரிபொருளை இரஸ்சியாவிடம் வாங்கிய வண்ணம், ஆனால் அமெரிக்கா பாகிஸ்தான் சார்பு நிலையினை தெளிவாக எடுத்த பின் தற்போது சீனாவுடன் நல்லுறவினை ஏற்படுத்த முனைகிறார்கள். பிறிக்ஸ் நாணய உருவாக்கத்தில் பின்னடிப்பு செய்யாமல் விட்டிருந்தால் தற்போது இடம்பெறப்போகும் பொருளாதார தடையினை எதிர்கொள்வதில் ஓரளவு சிரமம் இல்லாமல் இருந்திருக்கலாம். எவ்வாறு இரஸ்சியா இந்த பொருளாதார தடையினை எதிர்கொள்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் முயற்சியில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறையின் தோல்வியாக கருதப்படுகிறது. இரண்டு பெரும் தொழிலதிபர்களுக்காக ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்க செய்கிறார்கள் எனும் அமெரிக்க குற்றசாட்டிற்கு இந்திய எதிர்கட்சி வலுச்சேர்க்கிறது. பொருளாதார தடை சாமானிய மக்களின் மேலே போடப்படு ஒரு அழுத்தம், இந்த உத்தியினை போரை ஏவும் சக்திகள் பயன்படுத்தி வருவதன் நோக்கம் குறித்த நாட்டின் ஆட்சி பீடத்திற்கு ஏற்படுத்தும் அழுத்தம் அதன் மூலம் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியாக மட்டுமே. இது இந்திய ஆளும் கட்சிக்கும் தெரியும், அமெரிக்கா இந்திய ஆளும் கட்சிக்கெதிரான ஆட்சி மாற்றத்திற்கு தாயாராகி வருகிறது போல தெரிகிறது, தற்போதய அமெரிக்க இந்திய வேறுபாடு ஏதோ ஒரு வகையில் இலங்கையிலும், இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகத்தின் தீர்விலும் ஆதிக்கம் செலுத்தலாம் என கருதுகிறேன்.
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை
இதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கின் முரண்நகைக்கிடமான முயற்சி, ஒரு புறம் போருக்கு மஸ்தியஸ்தம் செய்யும் நடுநிலை என காட்டிக்கொண்டு, மறு புறம் ஒரு தரப்பிற்கெதிராக பாதகமான முறையில் பக்கசார்பாக இயங்குவது. ஒரு தரப்புக்கு ஆயுத உளவு தகவல்களை வழங்கிக்கொண்டு மறுப்புறத்திற்கு பொருளாதார தடை விதிக்கும் நடுநிலை இது. ஐரோப்பிய நாடுகள் இரஸ்சியாவின் ஆக்கிரமிப்பு தவறு என்பதனை எதிர்ப்பதற்காக போரிடுவதாக காட்டிக்கொள்ளும் நாடுகள் இரஸ்சியா 2021 பிற்பகுதியில் இருந்து 2022 உக்கிரேன் மீது அதன் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் வரையில் நேட்டோவிடமிருந்து தமக்கு பாதுகாப்ப்பு உறுதி வேண்டும் என கேட்ட போது அதனை மறுத்தவர்களின் உள்நோக்கம் இரஸ்சியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்வதே எனும் நிலைப்பாடாகும். இந்த நிலை இருக்கும் வரை இரஸ்சியாவின் அழிவு உறுதிப்படுத்தப்படும் வரை போர் தொடரும். இவ்வளவு அழிவின் பின்னராவது ஐரோப்பிய தலைவர்கள் நேட்டோவின் பிரசன்னம் ஏதோ ஒரு வகையில் இரஸ்சிய எல்லைக்கு நீடிக்க வேண்டும் எனும் முயற்சியில் உலகினை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லாமல் இருக்க முயற்சிக்கவேண்டும். இந்த போருக்கும் அழிவிற்கும் காரணம் மேற்கும்தான்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய சிந்தனை அடிப்படையில் சிறப்பான ஒன்று, நாடுகளுக்கிடையே தங்குதடையற்ற வர்த்தகம், ஒரே பரிமாற்று நாணயம் என பொருளாதார ரீதியிலமைந்த அதன் பங்கு மெல்ல மெல்ல ஆட்சி அதிகாரம் நோக்கி மெல்ல்ல நகரத்தொடங்கியிள்ளது. அத்துடன் ஒரு நாட்டினை போல பாதுகாப்பு விடயங்களிலும் தமது ஆதிக்கத்தினை செலுத்துகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படாத தலைவர்களாக இருக்கிறார்கள், அதனால் அவர்கள் மக்களின் விருப்பிலிருந்து விலகி செல்கிறார்களோ என கருதுகிறேன். ருமேனியா, போலன்ட், செக் குடியரது, கங்கேரி என உள்நாட்டு தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் அந்த நாட்டு சட்டத்துறையால் மறுக்கப்பட்ட நிகழ்வின் பின்னணியில் இந்த ஐரோப்பிய ஒன்றியம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரத்தினை பேணுவதற்கான முயற்சியில் சில பல தவறான முடிவுகளை இந்த அமைப்பு எடுக்கிறதாக கருதுகிறேன், ஐரோப்பிய ஒன்றியம் அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் நாடுகளுக்கே சவாலாக மாறிவருகிறதாக கருதுகிறேன். ஆரம்பத்தில் புட்டின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பாதுகாப்பு உத்தரவாதம் (தற்போது கூறப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பாதுகாப்பு உத்தரவாதத்தினை முன்னரே புட்டின் கூறியுள்ளார்) மற்றும் இரஸ்சியா நேட்டோவில் இணைவதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார், அப்படி இரஸ்சியா அப்போதே நேட்டோவில் இணைந்தால் தற்போதய பிரச்சினை வந்திருக்காது என கருதுகிறேன். இரஸ்சிய இரும்பு அதிகாரத்தின் மூலம் இரஸ்சியாவின் வளங்கல் தேசியமயப்பட்டமையால் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என கருதுகிறேன். இது தற்போது ஐரோப்பா இரண்டுபட்டுள்ள நிலமைக்கு இட்டு சென்றுள்ளது, இரஸ்சியாவில் நிலவும் இத்தகைய ஆட்சி பொறிமுறைமை ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறைக்கு நேர் எதிராக இருப்பதனால் ஒரு உறையில் இரண்டு வால் இருக்கமுடியாது எனும் நிலையில் தற்போதய உக்கிரேன் திட்டம் தோல்வியில் முடிந்தாலும் வேறு ஒரு வகையில் இரஸ்சியாவிற்கிடையே வேறு வகையான வடிவத்தில் மறைமுக போர் இடம்பெறலாம் என கருதுகிறேன். தற்போது இரஸ்சியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்கிரேனிற்கும் தம்மால் ஆபத்து ஏற்படாது எனும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க உள்ளதாக கூறுகிறார்கள், அதற்கு தற்போதுள்ள அடிப்படை பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டும் என கூறப்படுவதாக கூறப்படுகிறது, அடிப்படையில் இரஸ்சியா ஒன்றும் பெரிய பலமான சக்தி இல்லை என கருதுகிறேன், ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் மக்களை இரஸ்சியா பற்றிய பயத்தினை உருவாக்கி தமது தேவைகளை நிறைவேற்றுகிறார்களோ என கருதுகிறேன். ருமேனியா, கிறீஸ் போல ஒரு பொருளாதார வங்குரோத்து நோக்கி நகர்வதாக கூறுகிறார்கள், பல்நாட்டு நிறுவனங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கைதரத்தினை பொருளாதார ரீதியாக மோசமாக்குவதாக கருதுகிறேன், அதற்கு ஏற்ப ஐரோப்பிய ஒன்றிய சட்டதிட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் சாமானியர்களுக்கு எதிராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐரோப்பாவிற்கு ஆபத்து இரஸ்சியாவினால் வரும் என கருதவில்லை ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வரலாம் என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம். 90 பில்லியனுக்கு ஆயுதங்களை செலன்ஸ்கி எதிர்பார்க்கிறார், அதற்கான பணத்தினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கவேண்டும், அமெரிக்க கருவூல செயலாளர் உக்கிரேனுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினூடாக வழங்கப்படும் ஆயுதங்கள் 10% விலை அதிகரிப்பு காணப்படலாம் என கூறியுள்ளாராம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இரு தரப்பும் சரிநிகர் சம பங்காளிகளாகக்கருதப்பட வேண்டும், இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஈடுபடும் அமெரிக்கா தாம் போருக்கான ஆயுத உதவி வழங்கவில்லை, ஆயுதங்களை விற்கிறோம் என கூறி ஒரு நடுவுநிலைமையினை வலிந்து உருவாக்க முயலுகின்றனர், ஆனால் அவர்களது பொருளாதார தடை இன்னமும் அமுலில் உள்ளநிலையில் எவ்வாறு ஒரு நடுவு நிலையான மஸ்தியஸ்தராக இருக்கமுடியும்? இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பின்லாந்து அதிபர் அலெக்ஸ்சான்டர் ஸ்டப் தான் இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன் என்பதற்கு அவர் கூறிய காரணம், சிறிய நாடான பின்லாந்து நீண்ட எல்லையினை இரஸ்சியாவுடன் கொண்ட நாடாக இருந்து நீண்ட காலமாக நிலவிய பிரச்சினையினை 8 ஆண்டுக்களுக்கு முன்னர் முடிவிற்கு கொண்டு வந்ததாக கூறியிருந்தார் அது ஒரு நடுவு நிலையான நாடாக பின்லாந்து மாறியதனை குறிப்பால் கூறியிருந்தார், ஆனால் அண்மையில் பின்லாந்து நேட்டோவில் இணைந்ததனை பற்றி கூறவிலை. உக்கிரேன் அவசரகால அதிபர் செலன்ஸ்கி, உக்கிரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தின் பின்னரே ஒரு தேர்தலை நடத்த முடியும் என கூறியுள்ளார். உக்கிரேனை தொடர்ந்து போர் பாதையில் கொண்டு செல்ல வைப்பதற்காக உக்கிரேனை மீண்டும் இராணுவரீதியாக கட்டியெழுப்ப வேண்டும் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பினையே செலன்ஸ்கியும் பிரதிபலிக்கின்றார். உக்கிரேன் தன்னை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பி இரஸ்சியாவிற்கு பொருளாதார ரீதியாக சவாலாக அமைய வேண்டும் மேலும் மேலும் போருக்கு தன்னை ஈடுபடுத்தினால் உக்கிரேன் தேசத்திற்கான எதிர்காலம் இல்லாமல் போய்விடும். பிரான்ஸ் அதிபர் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி குறிப்பிட்டுள்ளார், ஏற்கனவே நேட்டோ எனும் அமைப்பு இருக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எஜமானர்களின் பலத்தினை அதிகரிக்க எடுக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். மத்திய கிழக்கு போல ஒரு சிக்கலான நிலையினை நோக்கி ஐரோப்பாவினை இந்த ஐரோப்பிய ஒன்றியம் அழைத்து செல்கிறதோ என தோன்றுகிறது. நிலையான போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் மீண்டும் ஒரு மின்ஸ்க் உடன்படிக்கை போன்ற ஒன்றை உருவாக்கி இன்னுமொரு போரை தொடங்கும் சமாதானமாக இல்லாமல் இருக்கவேண்டும். உக்கிரேன் தன்னை பொருளாதார வளர்ச்சி நோக்கி முன்னகர்த்த சிறுபான்மை உக்கிரேனியர்களான போலிஸ், கங்கேரியன், ருமேனியன் சிறுபான்மை சமூகத்திற்கும் சேர்த்து ஒரு நல்ல தீர்வை இந்த தீர்வுத்திட்டத்துடன் சேர்த்து சமாந்தரமாக வழங்கப்படவேண்டும். இந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் 7 மந்திரகுள்ளர்கள் (seven dwarfs) 🤣என இணையத்தில் வர்ணிக்கிறார்கள். முடிவு எடுப்பதில் செலன்ஸ்கி தனது நாட்டினை பிரதிபலிக்கும் தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த வேண்டும், இப்படி ஒரு அணியினை அழைத்து சென்று ஒரு சேவகனாக காட்டிக்கொண்டுள்ளார்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
ரொய்டர்ஸ் ஊகத்தினடிப்படையில் இரஸ்சிய நிபந்தனைகள். டொனஸ்க்ட் பிராந்தியத்தில் உக்கிரேன் வெளியேற்றம். கேர்சன் சப்பரோசியா பகுதியில் நிலைகளில் மேலதிக முன்னேற்றம் மேற்கோள்ளப்படாது. சுமி, கார்கோவ் பகுதிகளை உக்கிரேனிடமே திரும்ப கொடுப்பது. நிலையான தீர்வு எட்டப்படும் வரை போர் நிறுத்தம் இல்லை. கிரிமியாவினை இரஸ்சிய பகுதியாக அங்கீகரித்தல். பகுதி பொருளாதார தடை விலக்கல். உக்கிரேன் எப்போதும் நேட்டோவில் இணையமுடியாது. ஆனால் அதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கல். உக்கிரேனில் இரஸ்சிய மொழிக்கு உத்தரவாதம் மற்றும் பழமையான கிறிஸ்தவ ஆலய பாதுகாப்பு (உக்கிரேனில் இரஸ்சிய மொழி பேசுபவர்கள் மீது கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்) மறுவளமாக செலன்ஸ்கி 1. உடனடி போர்நிறுத்தம் பின்னரே பேச்சுக்கள். 2. தற்போதுள்ள முன்னிலைகளின் அடிப்படையிலேயே பேச்சுக்களை ஆரம்பிக்கலாம். 3.டொனஸ்க்ட் இனை வழங்கமுடியாது. 4. பாதுகாப்பு உத்தரவாதம் அவர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புருமையினை தற்போது கோருகிறார் (நேட்டோ பற்றி குறிப்பிடப்படவில்லை)
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
https://x.com/AGPamBondi/status/1956829431831605620/photo/1 மெலனி ட்ரம்ப் புட்டினுக்கு அனுப்பிய கடிதத்தில் இரஸ்சியாவினால் கடத்தப்பட்ட உக்கிரேனிய குழந்தைகள் பற்றி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பலஸ்தீனம்: அங்கீகரித்தலின் அரசியல்
காசாவில் பல இஸ்ரேலிய குடியேற்றங்களை புதிதாக உருவாக்குகிறார்கள் என கூறபடுகிறது, இதன் மூலம் அவர்களது தாயக கோட்பாட்டை சிதைக்க முற்படுகிறார்கள் இஸ்ரேலியர்கள்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
திங்கள்கிழமை ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி சந்திப்பில் செலன்ஸ்கி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக உருசுலா வொன்டலைன் கலந்து கொள்வதாகவும் தன்னுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளார். உருசுலா அமெரிக்க எரிபொருளை சந்தை விலையினைவ்ட பலமடங்கு அதிகமாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அண்மையில் கைசாத்திட்டிருந்தார், ஜேர்மன் அதிபரும் திங்கள்கிழமை நடைபெறும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது. இரஸ்சியாவின் மீதான பொருளாதார தடையின் அவசியம் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என ஜேர்மன் தரப்பு கூறியுள்ளது, புட்டின் ட்ரம்ப் சந்திப்பின் பின்னர் ட்ரம்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் செலன்ஸ்கியுடன் ட்ரம்ப் தொலை தொடர்பு உரையாடலில் ஈடுபட்டிருந்தார் எனும் நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் ட்ரம்புடனான திங்கள்கிழமை சந்திப்பில் உக்கிரேன் சார்பான பார்வையினை ட்ரம்பிடம் வலியுறுத்த விரும்புவதாக கூறிய்ள்ளனர். கடந்த 3 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த கொள்கைகளே பல உயிரிழப்பு பொருளிழப்பு என்பவற்றிற்கு காரணமாக அமைந்து உக்கிரேன், இரஸ்சியா, ஐரோப்பா, ஒட்டு மொத்த உலகிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பழைய பாதையில் தொடர்ந்து பயணிக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்கள் நிலைப்பாடாக உள்ளது. இந்த நிகழ்வில் புகழ்பெற்ற ஓவல் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதியும் (ஜெ டி வான்ஸ்) கலந்து கொள்ளவுள்ளார், கடந்த ஐரோப்பிய ஒன்றிய மானாட்டில் அவர் பேசிய மக்கள் விருப்பிற்கெதிராக மக்களால் தெரிவு செய்யப்படும் ஐரோப்பியநாடுகளின் தலைவர்கள் நீக்கப்படுவது ஜனநாயக விரோத போக்கு என கூறியிருந்தார். ஐரோப்பாவில் பலவீனமான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சிகளின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக கருதுகிறேன், அதன் மூலம் தனது அதிகாரத்தினை பேண முயற்சிக்கும் ஒரு முயற்சியாக இதனை பார்க்கமுடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த போரை தொடர விரும்புவது கூட அதன் ஒரு தொடர்ச்சியாக இருக்கலாம், இந்த சந்திப்பில் பின்லன்ட் அதிபர் அலெக்சான்டர் ஸ்டப் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது, ருமேனிய அதிபர் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போரை தொடர முயற்சிக்க இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரஸ்சியாவினை பலவீனப்படுத்துவதன் மூலம் போரை வெல்லலாம் எனும் அடிப்படையில் மேலதிக பொருளாதார தடை பற்றி விவாதிக்க விரும்புகின்றார்கள், அத்துடன் உக்கிரேனிற்கான பாதுகாப்பு உறுதியினை அமெரிக்காவிடம் கோரவும் முடிவு செய்துள்ளார்கள். இந்த முயற்சி ஒரு புறமிருக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோஸிங்டனில் புடின், ட்ரம்ப், செலன்ஸ்கி என ஒரு முத்தரப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருப்பது போல தெரிந்தாலும் திங்கள்கிழமை சந்திப்பின் பின்னரே போரா சமாதானமா என்பது தெரியவரும்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
விரிவாக்கப்பட்ட அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன 16.08.2025 05:43 அலாஸ்காவில் அமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையேயான விரிவாக்கப்பட்ட வடிவப் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன, இதனால் தலைவர்களின் உச்சிமாநாடு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. அது ஸ்கை நியூஸின் கூற்றுப்படி , உக்ரின்ஃபார்ம் நிருபர் ஒருவர் தெரிவிக்கிறார். "கிரெம்ளின் மற்றும் வெள்ளை மாளிகை இரண்டும் கடந்த சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் டிரம்ப்-புடின் உச்சிமாநாடு முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளன. அவர்கள் தங்கள் மூத்த அணிகளுடன் ஒரு வேலை மதிய உணவை உட்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் மூன்றுக்கு மூன்று பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்தன," என்று அந்த ஊடகம் எழுதியது. விளாடிமிர் புடின் ஏற்கனவே தனது விமானத்தில் ஏறி ரஷ்யாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாக ஸ்கை நியூஸ் மேலும் கூறியது. மேலும் படிக்க: புடினுடனான சந்திப்பை 'பயனுள்ள' என்று டிரம்ப் கூறுகிறார், ஜெலென்ஸ்கியை அழைக்க திட்டமிட்டுள்ளார் டிரம்ப் மற்றும் புதின் இடையே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, "பரஸ்பர புரிதல்" மட்டுமே விளைவாக அறிவிக்கப்பட்டது. புதினுடனான தனது சந்திப்பு குறித்து விவாதிக்க நேட்டோ உறுப்பினர்களையும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் விரைவில் தொடர்பு கொள்வதாக டிரம்ப் உறுதியளித்தார். ரஷ்ய சர்வாதிகாரி புடினுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் பயனுள்ளதாக" இருந்ததாக டிரம்ப் கூறினார். இதன் அர்த்தம் பேச்சுவார்த்தை சரியான உடன்பாடு எட்டப்படாததனால் அடுத்த கட்ட தீர்விற்கான அலுவலக ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை, இது ஒரு தோல்விகரமான பேச்சுவார்த்தை என கூறியுள்ளது உக்ரின்போர்ம் இணையம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
திங்கள்கிழமை ட்ரம்ப் செலன்ஸ்கி சந்திப்பில் புதிய திருப்பமாக ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உக்கிரேன் இராணுவநிலை உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்ந்லையினை அடிப்படையாக கொண்டு ஒரு போர் நிறுத்தம் மட்டும் எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முயலக்கூடும், அதன் மூலம் உக்கிரேன் படையினை வலுப்படுத்த தேவையான ஒரு கால அவகாசத்தினை பெறுவதனை நோக்கமாகக்கொண்டு பேச்சுவார்த்தையின் போக்கினை நிரந்தர தீர்வு நோக்கி நகர்வில்லாமல் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தினை ஏற்படுத்தல். இந்த விட்யத்திற்கு இரஸ்சியா உடன்படாது ஆனால் அமெரிக்க அரசிற்கு இரஸ்சியாவினை உடன்பட வைப்பதற்காக பொருளாதார அழுத்தம் ஏற்படுத்தலாம் எனும் விடயத்தினை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விற்க முனையலாம். ஆனால் ட்ரம்பின் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான அண்மைய ஒப்பந்தத்தில் தனது மேலாண்மையினை காட்டியுள்ளார், இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க எந்தளவிற்கு நலனை பெறும் என்பதனடிப்படையிலேயே பேச்சுவார்த்தையின் போக்கு அமைந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை பெருமளவில் அரிய மூலப்பொருளில் தங்கியுள்ள நிலையில், சீனாவுடனான வர்த்தக வரிப்போரில் பின்வாங்குவது போல இரஸ்சியாவிற்கு சாதகமான முடிவையே அமெரிக்கா எடுக்கும் என கருதுகிறேன். F-35 ஏறத்தாழ 900 பவுண்ட் அரிய கனிமங்களையும், வெர்ஜினியா தர நீர்மூழ்கிகள் ஏறத்தாழ 10000 பவுண்ட் அரிய கனிமங்களின் பங்களிப்பில் தங்கியுள்ள நிலையில் அமெரிக்கா இரஸ்சிய சார்பு நிலை எடுக்க வாய்ப்புக்கள் இருக்கலாம், ஆனால் இரஸ்சியாவிடம் சீனாவினை போல அரிய கனிமங்கள் இல்லை. போர் முடிவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, உக்கிரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும், செலன்ஸ்கியிற்கும் தனிப்பட்ட உத்தரவாதத்தினை மேற்கு நாடுகள் வழங்கவேண்டும். இறுதியாக பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை பலிகொண்ட போர் முடிவிற்கு வரவுள்ளது.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
முன்பு கூறியது போல பலஸ்தீன மேற்கு கரை போன்ற இராணுவ மற்றும் பொருளாதார அதிகாரம் மட்டும் இரஸ்சியா கொண்ட ஆனால் கிரிமியா உள்ளடங்கலாக இரஸ்சியா ஆக்கிரமித்த பகுதிகள் உக்கிரேன் நிலப்பரப்பு போன்ற தீர்வு திட்டம் போல ஒரு அமைதி தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை என கருதுகிறேன். சில இடங்களை தற்போது ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு பதிலாக வழங்கப்படலாம் என கருதுகிறேன், சுமி உள்ளடங்கலாக வட போர் முனையில் கைப்ப்பற்றப்பட்ட பகுதிகள் அதற்காக பயன்படுத்தப்படாலாம் என கூறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்தும் அதிகளவில் உக்கிரேனிற்கு இராணுவ உதவி வழங்கவுள்ளதாக கூறியுள்ளன அத்துடன் இரஸ்சியாவின் மீது அதிக பொருளாதார தடையினை இடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, செலன்ஸ்கி அதிக பொருளாதார தடையினை வலியுறுத்தியுள்ளார். ட்ரம்ப் புட்டினுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், சில ஐரோப்பிய நாடுகளுடனும் பின்னர் செலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் உரையாடியதாக கூறியுள்ளார், திங்கள் கிழமை செலன்ஸ்கியுடன் சந்திப்பு நிகழ்த்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். ட்ரம்ப் அதிகார படிநிலையினை சுட்டிக்காட்டுகிறார் என மேற்குறித்த தொலை தொடர்பு உரையாடல் பற்றி பேசப்படுகிறது, இதனிடையே செலன்ஸ்கியின் உடல் நிலை தொடர்பில் இணையத்தில் தேவையற்ற வதந்திகள் வெளிவந்த வண்ணமுள்ள நிலையில் திங்கள் கிழமை சந்திப்பு நிகழவுள்ளது. இங்கிலாந்து தனது படையினை உக்கிரேனுக்கு அனுப்புவதாக தொடர்ச்சியாக கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறான எந்த நிகழ்வும் நிகழவில்லை, போர் நிறுத்தத்தினை உடைத்து தொடர் போரை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உயிரிழப்பிற்கு காரணமான இங்கிலாந்து தனது படையினை அனுப்புவதாக தொடர்ந்து பேச்சளவிலேயே கூறிவருகிறது.
-
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
அலாஸ்காவினை இரஸ்சியா பெற முயற்சிக்கவில்லை என கருதுகிறேன், அது முடிந்த ஒரு தீர்வு. அது பிரச்சினைக்கு தீர்வாகவும் இருக்க போவதில்லை என கருதுகிறேன், இரஸ்சியா நிலப்பரப்புக்களை பெறுவதற்காக முயற்சிக்கவில்லை மாறாக தமது பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள். பலஸ்தீன மேற்கு கரை போன்ற ஒரு தீர்வினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இரஸ்சியர்கள் வாழும் இந்த பகுதிகளின் பொருளாதார இராணுவ அதிகாரங்கள் மட்டும் இரஸ்சியாவிடம் இருக்கும் ஆனால் குறித்த பகுதிகள் உக்கிரேன் பகுதிகள்தான். இது கொங்க் கொங்கினை போன்ற தீர்வினை விட உக்கிரேனுக்கு அதிக ஆழுமை இருக்கும் எனகருதுகிறேன். இது ஒன்றும் பாதகமான தீர்வல்ல, பெரும்பான்மையான இரஸ்சியர்கள் வாழும் பகுதியில் அவர்கள் கடந்த காலங்களில் உக்கிரேனியர்களின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்ட நிலையில் இது ஒரு சிறந்த முடிவுதான். ஆனால் தனிய இரஸ்சியர்கள் வாழும் பகுதி மட்டும் இரஸ்சியாவினால் பாதுகாகப்படுவதுடன் நிற்காமல் மற்ற இன மக்களும் உக்கிரேனியர்களினால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் அவர்களது உரிமைகளையும் கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்களிற்கான அலகுகள் உருவாக்கப்பட வேண்டும், உதாரணமாக பொலிஸ், கங்கேரியன், ருமேனியன் மக்கள் உக்கிரேனால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள் அவர்களது உரிமைகளை பேண் அந்த மக்களுக்கும் ஏற்ற ஒரு பொதுவான தீர்விற்கு இந்த பேச்சுவார்த்தையில் முயற்சித்தால் சிறப்பாக இருக்கும்.
-
சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை
இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள், இலங்கையும் இந்தியாவும் கிட்டதட்ட ஒரே காலப்பகுதியில் (ஒராண்டு) சுதந்திரம் பெற்ற நாடுகள், ஆரம்பத்தில் இலங்கைவளர்ச்சிப்பாதையில் பயணித்தது, தற்போது இலங்கை மிக மோசமான 3 ஆம் உலக நாடாக மாறுகிறதோ எனும் ஒரு வருத்தம் உள்ளது, ஆரம்பத்தில் அரச சேவையில் இலஞ்சம் பெறுபவர்களை சிறைக்கனுப்பிய அரசு தற்போது பெருமளவில் ஊழல் செய்து நாட்டை திவாலாக்கியது. இலங்கை உள்நாட்டுப்போரின் பின்னர் மிக மோசமான நிலை நோக்கி அதன் பாதை வழியே தொடர்ந்தும் செல்கிறது, இலங்கையிலும் இந்தியாவிலும் ஊழல், சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறை என பொதுவான அம்சம் இருந்தாலும் ஒப்பீட்டலவில் இந்தியா இலங்கை இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இலங்கை சுதந்திரம் பெறாமல் இருந்திருந்தால் ஒரு அபிவிருத்தி அடைந்த நல்ல சிறந்த தேசமாக வந்திருக்கும், 77 வருடங்களின் பின்னர் இலங்கை வாழ்மக்களின் இந்த நிலையினை உருவாக்கிய இந்த சுதந்திரதினத்தினை வெக்கம் இல்லாமல் கொண்டாடுகிறார்கள்.
-
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
புட்டின் ட்ரம்ப் சந்திப்பு நேரலை.
-
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
குறிப்பாக ட்ரம்பிற்கு இந்த ப்பெச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்றாக இருக்கலாம், ட்ரம்பிற்கு மட்டுமல்ல அமெரிக்க அரசிற்கும் இந்த பேச்சுவார்த்தை ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கலாம், அமெரிக்க பாதுகாப்பு பெருமளவில் ஆசிய நாடுகளில் தங்கியுள்ள நிலையில் ஒரு புறம் திட்டமிடாத வரிப்போரின் தாக்கம் இருக்கும் நிலையில் இந்த போரை தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு நிலை கேள்விக்குள்ளாகலாம் அதனால் ஒரு புறம் ஐரோப்பிய நாடுகளை சமாதானப்படுத்திக்கொண்டு மறுபுறம் ஈழப்பிரியன் கூறுவது இரஸ்சியாவிற்கு சாதகமான தீர்வினை எட்டுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதனை மறுக்கமுடியாதுதான்.
-
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
அது உண்மையில் ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான், ஆனால் தற்போது உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும், பின்னர் பேச்சுவார்த்தை தொடரலாம் எனவும் உக்கிரேனின் இடங்கள் தொடர்பிலான விட்டுக்கொடுப்பினை உக்கிரேனே தீர்மானிக்க வேண்டும் என கூறப்படுகிறது, உக்கிரேன் சட்டத்திற்கு அமைவாக ஒரு வாக்கெடுப்பின் மூலமே அது தீர்மானிக்கப்படவேண்டும். பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படுவதனை செலன்ஸ்கி விரும்பவில்லை என தெரிகிறது, நிரந்தர தீர்வு ஏற்படும் பட்சத்தில் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையினை செலன்ஸ்கி விரும்பவில்லை போல தெரிகிறது, போரை தொடர்வதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டுகிறது. பிரான்ஸ் அதிபர், உக்கிரேன் நேட்டோவில் அங்கம் பெறாது ஆனால் பாதுகாப்பு உறுதி வழங்கப்படும் எனும் ஒரு கர்த்தினை முன்வைத்துள்ளார், இது அமெரிக்க பிரசன்னம் உக்கிரேனில் ஏற்படுவதற்கான ஐரோப்பிய நாடுகளின் விருப்பாக இருக்கலாம். இந்த பேச்சுவார்த்தையில் இரஸ்சியாவிற்கு இழப்பதற்கு எதுவுமில்லை, அலாஸ்கா கனிமங்களை வழங்குவது மற்றும் போயிங் உதிர்ப்பாகங்கலை இரஸ்சியா பெறுவது பற்றிய விடயங்கள் இரஸ்சியாவிற்கு இலாபகரமற்ற அமெரிக்காவிற்கு மட்டும் இலாபமான முயற்சி, இந்த பேச்சுவார்த்தை முறிந்தால் இரஸ்சியா விரும்பும் விடயங்கள் கிடைக்காவிட்டால் இரஸ்சியா இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிடும். அமெரிக்கா அதன் பின்னர் பொருளாதார தடையினை போடலாம் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கலாம் ஆனால் போரின் போக்கினை மாற்ற முடியாது. இது ஒன்றும் இரஸ்சியாவிற்கு புதிய விடயமல்ல, ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்தால் இரஸ்சியாவிற்கு இலாபம் உண்டு அதனால் இரஸ்சியாவிற்கு இந்த் பேச்சினால் இழப்பதற்கு எதுவுமில்லை ஆனால் அடையகூடிய இலாபம் உண்டு மறுதரப்பிற்கு இந்த பேச்சுவார்த்தையால் எந்த இலாபமும் இல்லை ஆனால் இழப்பு மட்டுமே உண்டு. ஆனால் ஒரு விதி விலக்கு செலன்ஸ்கி மட்டுமே.🤣
-
டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!
இந்த போரில் உக்கிரேன் வெறுமனே ஒரு இரு முக்கிய எதிரெதிர் தரப்புக்களிற்கிடையேயான போர்க்களமாக பயன்படுத்தப்படுகின்றது என்பதனை உறுதிப்படுத்தும் விதமாக சம்பதப்பட்ட தரப்புக்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன் தமக்கிடையே தீர்வுகளையும் எட்ட முனைகின்றனர். தெருத்தேங்காயை எடுத்து ஊர்ப்பிள்ளையாருக்கு உடைப்பதனை போல தமது சொந்த இடம் போல உக்கிரேனை கொடுக்க முனைகிறார்கள், ஆனால் போரினை நிறுத்தாவிட்டாலும் அந்த பகுதியினை அவர்கள் போர் மூலம் எடுத்து கொண்டுவிடுவார்கள்தான். இதனைதான் ஊரில் கூறுவார்கள் சும்மா பொல்லைக்கொடுத்து அடிவாங்குவது என, உக்கிரேனை உசுப்பேற்றி ஒரு பேரழிவிற்குள் தள்ளி தற்போது தாங்கள் நல்லவர்கள் போல உக்கிரேனே சமாதானத்திற்கு இடையூறாக நிற்கிறது என நிறுவ முயல்கிறார்கள், இதில் பாவப்பட்டவர்கள் சாதாரண உக்கிரேனிய மக்கள்தான், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நன்றாக சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.
-
போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது
இரஸ்சியாவின் போர் தேய்மான போர் முறை, அதற்கேற்ப இரஸ்சியாவிடம் படை பலம் உள்ளது, உக்கிரேன் நாட்டு படை ஒப்பீட்டளவில் சிறிய படை என கருதுகிறேன். இந்த போரை இப்படியே உக்கிரேன் தொடருமானால் பெரிய பேரழிவினை சந்தித்து மீள முடியாத தோல்விக்கு ஆளாகலாம் என கருதப்படுகிறது. உக்கிரேன் தனது நிலைகளை பின்னகர்த்தி குறைந்த இடத்தினை கண்காணிக்க கூடியவகையில் தற்காப்பு அரணை அமைத்து தடுப்பு போர் நிகழ்த்தாவிட்டால் உக்கிரேன் இராணுவ ரீதியாக மீள முடியாமல் தோற்கடிக்கப்படும் என கருதுகிறேன், ஒரு சிறிய நாட்டினால் அதன் வளத்திற்கேற்பவே போர் புரிய முயற்சிக்க வேண்டும், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஈகோவிற்காக போரிட முடியாது என கருதுகிறேன். கேர்க்ஸ் பிராந்தியத்தில் ஒரு களத்தினை திறந்து உக்கிரேனை இராணுவ ரீதியாக பலமிழக்க செய்தது உக்கிரேனிய அதிகார வர்க்கம், தற்போதும் ஒரே நேரத்தில் பல போர் முனைகளை வீம்பிற்காக பாதகமான சூழலிலும் போரிட வைத்து அழிவினை ஏற்படுத்துவது உக்கிரேனிய அதிகார வர்க்கமே. மேலும் உக்கிரேனிய படை நடவடிக்கை முறைமகளில் கூறப்படும் குறைபாடாக ஒரு முழுமையான படைப்பிரிவினை சிறு பகுதியாக்கி வேறு ஒரு குறைந்த அனுபவமும் பயிற்சி அற்ற பெரும் பகுதியில் இணைப்பதன் மூலம் அதன் தாக்கத்தினை இல்லாமல் செய்யப்படுவதாக கூறுகிறார்கள். இளநிலை அதிகாரிகளுக்கும், களநிலை அதிகாரிகளுக்கும் போர்திட்டம் பற்றிய சரியான புரிதல்கள் இருப்பதில்லை என கூறுகிறார்கள். அனுபவமும் சரியான பயிற்சியுமற்ற ஒரு இராணுவம் இதுவரையும் சிறப்பாக சண்டையிட்டு வந்துள்ளது (உக்கிரேன்), இரஸ்சிய படைகள் தம்மை சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொண்டுள்ளார்கள். நான் முன்பு கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று, 90 களில் புலிகள் ஒரு இராணுவ முகாமை தாக்க வெளி மாகாணத்தில் இருந்து போராளிகளை வரவழைத்து தாக்குதலில் ஈடுபட்டார்களாம், தாக்குதலுக்கு ஒரு நீரிணையினை கடந்து சென்று தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாம், தாக்குதல் வேவின் போது இருந்த நீர் மட்டம் தாக்குதல் தினத்தின் போது உயர்ந்திருந்ததாம், அதனூடாக அணியினரும் அவர்களது ஆயுதங்களையும் அந்த நீரிணையில் கால் நடையில் கடந்து செல்ல வேண்டியிருந்ததாம். குறிதத அணி ஒன்று வழங்கப்பட்ட இலக்கினை பலவீனப்படுத்த துப்பாக்கியிலிருந்து காற்றழுத்தத்தின் மூலம் ஏவப்படும் 10 எறிகணைகள் வழங்கப்பட்டிருந்தனவாம், அந்த அணியினது புரிதல் 10 எறிகனைகளையும் பாவிக்கலாம் என்பதாக இருந்தது. 10 எறிகனையில் 2 மட்டும் வெடித்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட தாக்கம் ஏற்படவில்லை பதில் தாக்குதல் பலமாக இருக்க என்ன செய்வது என தெரியாமல் அந்த நிலையிலேயே இருந்துவிட்டார்கள், தமது நிலை தொடர்பில் எந்த தகவல் தொடர்பிலும் ஈடுபடவில்லை காலை விடிந்தால் விமானப்படை மற்றும் துப்பரவு அணிகளை எதிர்கொள்ளவேண்டும் என்பதனை உணராமல். உக்கிரேன் படை அணி எதிர்கொள்ளும் பிரச்சினை இரண்டு வெவ்வேறு இராணுவ கட்டமைப்புகளாக இயங்குவதுதான், திட்டமிடல் நேட்டோ, அதனை நிறைவேற்றுவது உக்கிரேன்.
-
போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது
2023 காலப்பகுதியில் என கருதுகிறேன் முன்னர் உக்கிரேன் இரஸ்சிய திரியில் அல்லது வேறு ஒரு திரியில் முன்னர் குறிப்பிட்ட நினைவுள்ளது, உக்கிரேன் போர் வெற்றியின் பின்னர் உக்கிரேனை பொருளாதார ரீதியாக கட்டியமைக்க ஒரு Marshal Plan திட்டத்தினை இங்கிலாந்து வரைந்ததாக கூறப்பட்டது ஆனால் அது தொடர்பில் தற்போது எந்த ஆவணங்களும் இணையத்தில் இல்லை அது ஒரு தவறான கருத்தாக இருக்கலாம். 2022 பிற்பகுதியில் அல்லது 2023 முற்பகுதியில் இந்த வரைபு பற்றி பேசப்பட்டது என கருதுகிறேன், இரஸ்சியாவினை போரில் தோற்கடித்த பின்னர் உக்கிரேனை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப இரஸ்சிய நிதியத்தில் இந்த மார்சல் பிளான் திட்டமிடப்பட்டிருந்தது, அதற்கான அனைத்து நிதிப்பராமரிப்பினை பிரித்தானிய நிதி நிறுவனங்கள் கண்காணிக்கும் இதன் மூலம் பிரித்தானிய நிதி நிறுவனங்களும் பிரித்தானியாவும் பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கும் என கருதப்பட்டது, பிரித்தானியாவிற்கு போட்டியாக இன்னொரு ஐரோப்பிய நாடும் அதற்கு போட்டி போட்டதாக கூறப்பட்டது, பிரான்ஸ் என கருதுகிறேன் ஆனால் சரியாக நினைவில்லை. எனது அப்போதய கருத்து தவறாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன், ஏனெனில் அது தொடர்பில் தற்போது எந்த ஆதாரங்களும் இல்லை, ஆனால் இந்த போரில் உக்கிரேன் வென்றால் ஐரோப்பிய ஒன்றியம் அதிகார ரீதியாக மேலும் உறுதி பெறும், முன்பு குறிப்பிட்ட சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற 3 நாடுகளான ருமேனியா, போலந்து, இரஸ்சியா ஆகிய 3 நாடுகளிலும் இரஸ்சியாவினை தவிர மற்ற நாடுகளின் வளங்கள் தேசிய மயப்படுத்தப்படவில்லை, அதனால் அதன் வளங்கள் மீது மேற்கு பெரும் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது, அ அனால் இரஸ்சிய வளங்கள் முழு கட்டுப்பாடும் அரசிடமே உள்ளது, அதனால் மக்களுக்கு அந்த வளங்கள் மீது அதிகாரம் தொடர்ந்து இருக்கும். எனது கருத்து தவறாக இருக்கலாம் ஐரோப்பிய ஒன்றியத்தினை வலுப்படுத்துவதன் மூலம் குறித்த நாடுகளில் இந்த் நிதி நிறுவனங்கள் தமது செயற்பாட்டினை இலகுவாக செய்யமுடியும், முன்னர் கூறிய ருமேனிய உதாரணம் அந்த நாட்டு மக்களினை விவசாயத்திலிருந்து இந்த பெரு நிறுவனங்கள் துரத்திவிட்டன, தற்போது 5 பில்லியன் பெறுமதிக்கு காய்கறி இறக்குமதி செய்கிறது, அடுத்த கிறீஸ் என ருமேனியாவினை கூறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியமும், அங்கம் வகிக்கும் சில முக்கிய நாடுகளுக்கும் இந்த போரில் இரஸ்சியா தோற்கடிக்கபட வேண்டிய தேவை உள்ளதாக கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). எந்த இலாபமும் இல்லாமல் வெறுமனே உக்கிரேன் மக்களுக்கு ஜனநாயகத்தினை வளங்குவதற்காக தமது பணத்தினை இந்த நாடுகளும் அமைப்புக்களும் செயல்படும் என நீங்கள் நம்புவீர்கள் என நான் கருதவில்லை.
-
போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது
முன்னாள் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் மின்ஸ்க் உடன்படிக்கை ஒரு உக்கிரேனை போரிற்கு தயார்படுத்துவதற்கான கால அவகாசத்தினை பெறும் உடன்பாட்டு நாடகம் என கூறியிருந்தார். தற்போது உக்கிரென் இராணுவத்திற்கு உடனடியாக ஒரு போர் நிறுத்தம் தேவை இல்லாவிட்டால், உக்கிரேன் இராணுவம் முற்று முழுதாக செயலிழக்கும் நிலை உருவாகிறது அதனை தடுத்து நிறுத்த உடனடி போர் நிறுத்தம் அவசியம். நிரந்தர போர் நிறுத்தமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது என கருதுகிறேன்.