Everything posted by vasee
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
https://www.youtube.com/shorts/_1rFA7fCOTE அமெரிக்க இரண்டு வகை வரி விதிப்பு பற்றிய தனது கருததினை முன்வைக்கும் சிங்கப்பூர் பிரதமர். இலங்கையின் பொருள்களின் மீதான வரி 44% ஆக அதிகரிக்கும் 100 பொருளின் விலை 144 இருக்கும் ஒப்பீட்டளவில் அதிக விலை என்பதால் அந்த பொருளிற்கு மாற்றீடான பொருள்கள் இந்தியாவிலிருந்து அதே 100 ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் விலை இந்தியாவின் வரியான் 27% அதிகரிப்புடன் (27% கருதுகிறேன்) 127 ஆக இருக்கும். ஒரே பொருள் 144 மற்றும் 127 இல் இருக்கும் போது வாடிக்கையாளர் விலை குறைந்த இந்திய பொருளை வாங்குவார்கள். இலங்கை பொருள் விற்பனையாகாது. அமெரிக்க அரசு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் மேல் வரி விதிப்பதால் உள்ளூர் பொருள் ஒப்பீட்டளவில் விலை மலிவாக இருப்பதால் மக்கள் உள்ளூர் உற்பத்திகளை நாடுவதன் மூலம் அமெரிக்க உற்பத்திதுறையினை முன்னேற்ற ட்ரம்ப் எடுக்கும் முயற்சிதான் மற்ற நாடுகளின் பொருள்களின் மீது இறக்குமதி வரி விதிப்பு அதன் வரி வருமானம் அமெரிக்க அரசிற்கு செல்லும் மற்ற நாடுகளுக்கல்ல.
-
நானும் ஊர்க் காணியும்
இயல்பியல் விதியின்படி எல்லாம் ஒரு சமனிலைப்படுத்தும் இயல்பாகவே, எந்த வினைக்கும் சமனும் எதிரான வினை இருக்காவிட்டால் நிலமை மோசமாகிவிடும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கோசான் அடுத்து நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணி வெல்வதன் மூலம் உங்கள் நிலை மாறப்போகின்றது.
-
நானும் ஊர்க் காணியும்
எனக்கு தெரியும் உங்களுக்கு இவற்றை பார்க்க இரத்த கொதிப்பு ஏற்படும் என🤣, ஆனால் இப்படியான விளம்பர உலகில் வாழ்கிறோம், விளம்பரத்திற்காக அந்த மக்களுக்கு உதவி என செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களுக்குள்ளே இருக்கும் வக்கிரங்களை அம்மக்களை மோசமாக நடத்தவதன் மூலம் வெளிப்படுத்தும் போலிகள் ஆக பெரும்பாலான புலம்பெயர்ஸ் இருக்கிறார்கள் ஆனால் அதனை அறிய முடியாதவர்களாக இருப்பது அதனை விட கொடுமை.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது பழைய செய்தி, ஆனால் அந்த ஊகங்கள் வந்த பின்னர் ருத்துராஜ் விளையாடியிருந்தார், அல்லது இது பரீட்சைக்கு முதலே பேப்பரை லீக்காக்கி விட்டார்களோ?🤣 2 மாதகால போட்டியில் ஆடுகளம் மெதுவாகிவிடும் அது இயல்பாக சென்னை அணிக்கு சாதகம், மெதுவான ஆடுகளத்திற்கு ஏற்ப அணியினை சென்னை கொண்டுள்ளதால் சென்னை அணியினை புறந்தள்ள முடியாது அவர்கள் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது.
-
நானும் ஊர்க் காணியும்
புலம்பெயர் தமிழர்கள் தமது பண மேலாதிக்கத்தில் அங்குள்ள மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தும் மோசமான நிலை கானப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு குடியேறினால் அங்கு இவர்களின் பணபலம் மூலம் மேலும் அங்குள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு தள்ளப்படுவர் அதனால் புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள மக்களுக்கு செய்யும் உபகாரமாக அங்கு போய் குடியேறாமால் இங்கு வெளிநாட்டில் இருப்பது நல்லது.
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
தகவலுக்கு நன்றி.
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
https://www.bbc.com/news/articles/c93gq72n7y1o அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான வரி கணிப்பு முறை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வந்துவிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது, ஓய்வின் பின்னர் அடுத்த போட்டியில் கலந்து கொள்ளவார் என கருதுகிறேன்.
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
இலங்கை வரி இல்லை, இது அமெரிக்ககாவின் இலங்கை மீதான வரி, ஏற்றுமதி இறக்குமதி நிலுவையினடிப்படையில். அமெரிக்க இரண்டு வகையான வரிக்கொள்கையினை தற்போதய ட்ரம் அரசு பின்பற்றுகிறது. அனைத்து இறக்குமதிகளின் மீதும் 10% வரி மற்றது அதிகமாக அமெரிகாவிற்கு ஏற்றுமதி செய்வோருக்கு பிரத்தியேகமான வரி. இலங்கையின் அமெரிக்க இறக்குமதி $368 மில்லியன். இலங்கையின் அமெரிக்க ஏற்றுமதி $3000 மில்லியன். அமெரிகாவிற்கு இலங்கையினுடனான வர்த்தகத்தில் ஏற்படும் நட்டம் $2632 மில்லியன். வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை மீது அமெரிக்கா நிர்ணயித்துள்ளது.
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
எனது புரிதல்களில் அமெரிக்கா இரண்டு வகையான வரி விதிப்புகளை மேற்கொள்கிறது. அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் 10% வரிவிதிப்பது முதலாவது வகை(Non trade deficit). இரண்டாவது வகை அமெரிக்க ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதனை விட இறக்குமதி அதிகமாக உள்ள நாடுகளின் மேல் விதிக்கப்படும் வரி இரண்டாவது வகைப்படும் (Trade deficit). அவுஸ்ரேலியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதனை விட பல மடங்கு இறக்குமதி செய்கின்றது, இருப்பினும் முதலாவது அடிப்படை வரி மூலம் அவுஸ்ரேலிய பொருள்களுக்கு 10% வரியினை அவுஸ்ரேலியா செலுத்துகிறது. இலஙையின் நிலவரம் வேறானது, இலங்கை அமெரிக்காவிற்கு $3000 மில்லியன் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் இறக்குமதி $368 மில்லியன் (கடந்த ஆண்டு) இந்த வர்த்தகத்தின் மூலம் அமெரிக்காவிற்கு $2632 மில்லியன் வர்த்தக நிலுவை ஏற்படுகிறது. வரி = (வர்த்தக நிலுவை 2632/ அமெரிக்காவின் மொத்த இறக்குமதி 3000)*100 இதன் பிரகாரம் 87.73% வரி, அதனுள் முறையற்ற நாணய கொள்கை என்பவற்றுடன் 88% வரியினை இலங்கை பெறுகிறது அதில் 50% தள்ளுபடியாக 44% வரியினை இலங்கை பெறுகிறது. இதில் இலங்கையினால் எதுவும் செய்ய முடியாது, இலங்கையின் பொருள்களின் ஏற்றுமதி பெருமளவிலான தாக்கம் ஏற்படும் ஆனால் அமெரிக்காவின் புதிய வரி கொள்கை அவர்கள் நாட்டில் நலிந்து போகும் உற்பத்தி துறையினை வளப்படுத்தும் முயற்சி என கூறுகின்ற நிலையில் இலங்கையின் பெருமளவான ஏற்றுமதி விவசாயதுறை ஏற்றுமதியாக இருக்கும் என கருதுகிறேன் அதனால் இந்த வரிகளால் உற்பத்தி துறைக்கு எந்த நலனும் இல்லை மறுவளமாக சாதாரண அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கை செலவு அதிகரிப்பே ஏற்படும், ஏனெனில் இந்த வகையான விவசாய பொருள்கள் பெருமளவான அத்தியாவசிய ஆனால் மாற்றீடற்ற பொருள்களாக இருக்கும். அத்தியாவசிய பொருள்களின் விலை மாற்றம் அதன் கேள்வியில் தாக்கம் செலுத்துவதில்லை (விலை நெகிழ்ச்சி தன்மை 1 குறைவாக இருக்கும்).
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் அணி தொடராக சிறப்பாக செயல்படுவர், ராஜஸ்தான் அணி எப்படி இவர்களால் இப்படி சொதப்பமுடிகிறது என்பதனை கணிக்கவே முடியாத அணி, ராஜஸ்தான் அணி வெல்ல சுவியும், நந்தனும் நேரடியாக களத்தில் இறங்கினாலேயே வாய்ப்புள்ளது🤣 (நகைசுவகைக்காக கூறியது கோவிக்க வேண்டாம்).
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Pitch and conditions Ahmedabad offers a choice of surfaces - black soil, which makes the pitch slower and lower, and red soil, which offers pace and bounce. All that considered though, batters have scored runs at a rate of 9.76 per over, which puts this ground behind only Hyderabad (10.16) in terms of high-scoring venues this IPL. கிரிக் இன்போ தளத்தின் ஆடுகள கணிப்பின் படி இது ஒரு கறுப்பு மண் கொண்ட ஆடுகளம், அதனால் பவர் பிளேயில் அடித்தாடுவார்கள் என கருதப்படுகிறது, பந்து மென்மையான பந்து இலகுவாக மட்டைக்கு வராது. அதிக ஒட்டங்களை எடுக்க கூடிய ஆடுகளம் என கிரிகிபோவில் குறிப்பிடப்பட்டுள்ளது, முதலாவதாக துடுப்பாட்டம் சிறப்பாக இருக்கும், மைதான ஈரலிப்பு இருந்தால் இரண்டாவது துடுப்பாட்டத்தினை தெரிவு செய்வார்கள், மெதுவான ஆடுகளம் மேலும் மெதுவாகும் நேரம் செல்ல செல்ல. சுழல் ஆதிக்கம் காணப்படும். இன்றைய போட்டியில் ரபாடா இசாந்திற்கு பதிலாக விளையாட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உலக அளவில் ஒரு பந்து வீச்சாளரோ அல்லது துடுப்பாட்டக்காரரோ அல்லது அணிதலைமையோ சோபை இழந்து காணப்படும் போது இலங்கைஉடன் ஒரு போட்டித்தொடருக்கு போனால் அவர்களது ஆட்டம் வழமைக்கு திரும்பும், ஐ பி எல்லி சென்னை அணி தற்போது இலங்கை அணியின் கடினமான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது போல தெரிகிறது.🤣 ரியான் பராக் அணித்தலையில் குழறுபடிகளுடனிருந்தவர் சென்னையுடனான போட்டியின் பின் சிறப்பாக செயல்படுகிறார், ஆர்ச்சர், ரான, தீக்சனா, கசரங்க , ரானா என ஒரே அணியிலே பலர் தமது சோவை இழந்து கஸ்ரப்பட்டுக்கொண்டிருந்த ராஜஸ்தான் அணியுடன் ஒரே ஒரு போட்டியில் விளையாடி அனைவரையும் வளமைக்கு கொண்டு வந்த சென்னை அணியினர். 🤣 இன்றைய போட்டியில் ராயஸ்தான் அணி வென்றால் அந்த புகழ் சென்னைக்கே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணியின் திட்டமிடல் குறைபாடாக சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் அஸ்வினை பவர் பிளேயில் பயன்படுத்துவது, புதிய பந்து ஆடுகள்த்தில் அதிகமாக திரும்பாத வழுக்கி செல்லும் நிலை காணப்படும். பொதுவாக சுழல்பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பந்து வீசுவதனை விரும்புவதில்லை என கருதுகிறேன், பவர் பிளேயில் இலகுவாக எதிர்பார்க்க கூடியவாறாக வழமையாக பந்து வீசும் முறையினை பயன்படுத்தி களத்தடுப்பில் இருக்கும் கட்டுப்பாட்டினை பயன்படுத்தி அதிகமாக ஓட்டமெடுக்க அஸ்வினின் பந்து வீச்சு இலகுவாக இருக்கும். தீக்சனா, நரேன், வருண் போன்றவர்களின் மாயாலால பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு பவர் பிளேயில் துடுப்பாட்டக்காரர்கள் எதிர்பார்க்க கூடியவாறு இல்லாமல் இருக்கும் தன்மை மற்றும் கிடையாக வீசுவதால் (flat) அடித்தாட முடியாதநிலையும் காணப்படும் அதனால் விக்கெட் எடுப்பதுடன் ஓட்டங்களையும் கட்டுப்படுத்தலாம். ஜடேயாவின் பந்துவிசும் முறை பவர் பிளேயில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுக்காமல் வீசலாம் ஆனால் விக்கெட் எடுக்க முடியாது ஆனால் அவரது பந்து வீச்சில் எந்த எதிர்பாரா விடயமும் அஸ்வினின் பந்து வீச்சு போல இருக்காது ஆனால் அஸ்வினை தொடர்ந்து பயன்படுத்துவது அவரது பந்து வீச்சினால் ஓட்டங்கள் அதிகம் எடுக்கும் போது மட்டையாளர்கள் வலிந்து தவறு செய்யும் நிலை உருவாகி விக்கெட் எடுக்கலாம் எனும் நோக்கமாக இருக்கலாம். இரண்டு பந்து வீச்சாளரிகளின் பந்து வீச்சும் வேறுபட்டது ஜடேயாவின் பந்து வீச்சு கிடையாக தாழ்வாக புதிய பந்தில் வேகமாக வரும் ஆனால் அஸ்வின் பந்து வீச்சு மெதுவாக உயர்ந்து வரும் அது துடுப்பாட்டக்காரர்களுக்கு பந்தினை தூக்கி அடிக்க இலகுவாக இருக்கும். பத்திரானாவை பவர்பிளேயில் பாவிப்பதில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது, பத்திரனாவின் பந்து வீசும் முறையால் பந்து ஆரம்ப ஓவர்களில் காணப்படும் சுவிங் ஆகும் (no seam up) தன்மை குறைவாக இருப்பதால் அவரது பந்து வீச்சினை பவர் பிளேயிற்கு வெளியே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவரது பந்து வீச்சின் அளவுகளை கணிப்பது சிரமமாக இருப்பதால் பவர் பிளேயில் கூட அவரை சிறப்பாக பயன்படுத்தலாம், ஆனால் அவரது பந்து வீச்சு ஒரு போது கட்டுப்பாடாக இருப்பதில்லை எனும் குறைபாடு உள்ளது. ஆனால் தற்போது சென்னை அணி கொடைவள்ளல்களாக பவர்பிளேயில் இருப்பதால் அதுவும் ஒரு தோல்விக்கான காரணியாக உள்ள நிலையில் பத்திரானாவை பவர் பிளேயில் பயன்படுத்துவது ஒரு நல்ல மாற்று திட்டமாக இருக்கலாம். சென்னை அணி தனது சுழலை நம்பி களமிறங்கினாலும் சுழலை முழுமையாக பயன்படுத்துவதில்லை எனும் குற்றச்சாட்டு உள்ளது, பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் போது எழுந்தமானமாக பயன்படுத்தாமல் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப எதிரணி வீரர்களுக்கு ஏற்ப பயன்படுத்தினால் அவர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள். அணித்தலமையிடம் எப்போதும் ஒரு திட்டமிருக்கும் ஆனால் சென்னை அணியில் அவ்வாறான திட்டத்துடன் போட்டிக்கு செல்வதில்லை என முன்னால் சென்னை அணி வீரர் ராயுடு ஒரு பேட்டியில் தெரிவித்தார், அப்போது தோனி அணித்தலைவராக செயற்பட்டார், அவர் கள சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுவதால் வலிந்து ஒரு ஒரு திட்டமிடலுடன் சென்று களநிலை மாறுபாடு அணியினை குழப்பலாம் என நினைத்து அதனை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் தற்போதய சென்னை அணியிடம் எந்த தெரிவுமில்லாமல் ஒரு குழப்பகரமான நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதால் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு புதிய ஆட்டக்காரர்கள் எனும் நிலை காணப்படுகிறது, சென்னை அணியில் இப்படியான குழப்ப நிலை வீரர்களை பாதிக்க ஆரம்பித்து விட்டது, மிக சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் கூட சாதாரண சுழல் பந்து வீச்சாளர்கள் கொண்ட எதிரணியினரை விட மோசமாக செயற்படுகிறார்கள், இதே நிலைதான் துடுப்பாட்டத்திலும் காணப்படுகிறது. உண்மையில் சென்னை அணி ஒன்றும் மோசமான வீரர்களை கொண்ட அணியல்ல. அஸ்வினும் சிறந்த பந்துவிச்சாளர்தான், ஆனால் நீங்கள் கூறிய பந்து வீச்சாளரகளை கையாழும் முறையாலேயே அவரரது பந்து வீச்சு சோபை இழந்து காணப்படுகிறது, அஸ்வினுக்கு போட்டி தொடர்பான புரிதல் அதிகம், அவர் அணித்தலைமைக்கு ஒரு தெரிவாக இருக்கலாம், ஆனால் இளம் வீரரான ருத்துராஜை நீண்ட கால நோக்கில் தயார்படுத்துகிறார்கள் என கருதுகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
DC 1-6 Overs 51/1 Chennai 1-6 Overs 46/3 DC 7-10 Overs 82/3 Chennai 7 -10 Overs 69/3 சென்னை ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட்டுக்களை இழந்தும் டெல்லியின் ஓட்டங்களவினையே பெற முடிந்தது, 7-10 ஓவர்களில் சென்னை விக்கெட்டுக்களை இழக்கவில்லை ஆனால் ஆட்டத்தின் பின் பகுதியான கடைசி 10 ஒவ்வர்களில் 100 ஓட்டங்கள் சராசரியான ஓட்டம் எனும் போது சென்னை மேலதிகமாக 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் சென்னை அணியில்நடுப்பகுதியில் விளையாடிய விஜய், ஜடேஜா, தோனியின் மேல் மேலதிக அழுத்தம் ஏற்பட்டது. ஆரம்ப ஓவர்களில் பொதுவாக அடித்தாட முற்பட்டே மற்ற அணிகள் தமது விக்கெட்டுக்களை இழப்பது வழமை ஆனால் சென்னை அணி மட்டும் தற்காப்பு ஆட்டத்திலேயே அதிக விக்கெட்டுக்களை கொடுக்கும் அணியாக இருப்பது அணிக்கு நெருக்கடியினை கொடுக்கிறது. அந்த 46 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி அல்லது 1 விக்கெட் இழப்புடன் அணியிருந்தால் டெல்லி அணி போல 7-10 ஓவர்களுக்கு 30 ஓடங்களுக்கு 1 விக்கெட்டுடன் 76/2 எனும் நிலையினை எட்டியிருக்கலாம். அதன் பின்னர் பிற்பகுதியில் 10-20 ஓவர்களில் மிகுதி 108 ஓட்டங்களை விரட்டியிருக்கலாம். சுழல் பந்து வீச்சிற்கு அதிக பணத்தினை செலவழித்த சென்னை அணி தனது சுழல் பந்து வீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்தவில்லை. சென்னை அணி தனது வளங்களை பயன்படுத்துவது தொடர்பான விடயத்தில் அதன் அணித்தலைவர் மேல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த இரு போட்டிகளிற்கும் இடையே MI vs RCB போட்டி ஒன்று வருகிறது என கருதுகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்ப்பதுண்டு, ஐ பி எல் பார்ப்பதில்லை, ஆனால் இந்த வருடம் யாழ்கல போட்டியில் இணைந்த பின்பு ஆர்வமாக பார்க்கத்தொடங்கியுள்ளேன். உங்களுக்கு விளையாட்டில் நல்ல ஆர்வமுள்ளது(Passion), அதனால் அதில் உள்ள குளறுபடிகள் உங்களை வெறுப்படைய செய்கிறது, அத்துடன் மிகவும் வெளிப்படையான்வர், அதுதான் உங்களை பலருக்கு பிடிக்கிறது, இந்த திரி பொழுது போக்கான திரி என்பதால் சும்மா நகைசுவைக்காக எழுதுவதுண்டு உங்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை. ஓவர்டன் விளையாடுவதனை பார்த்த நினைவுள்ளது, சென்னை அணியில் அடித்தாடுபவர்கள் இல்லை, அதனால் ஓவர்டன் அப்ப்டியான ஒரு வீரர் ஆனால் எங்காவது ஒரு நாள்தான் அவருக்கு மாட்டும். உங்களது ஆசை நிறைவேறிவிட்டது.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாய்ச்சதும் சரியில்லை வந்ததும் சரியில்லை எனும் கவலையில் பையன் இருக்கிறார்🤣, இன்றைய போட்டியில் சென்னையும் ராஜஸ்தான் அணியும் வெல்வதன் பின்னர் இந்த பரம்பதத்தில் பையனுக்கு இனி ஏறுமுகம். இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெல்ல நிங்களும் சேர்ந்து இறைவனை பிராத்தியுங்கள் (எனது தேர்வும் இந்த இரண்டு அணிகள்).🤣 அந்த முடிவை பாண்டியா எடுக்கவில்லை மகேல எடுத்தார் என ஒரு கருத்தினை கூறுகிறார்கள். https://www.youtube.com/watch?v=eg2jwR3SLa4
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை தனது சொந்த ஆடுகளத்தில் 6/7 போட்டிகளை வென்று வெளியே 1 போட்டியினை வென்றலாலும் அரையிறுதிக்கு தேர்வாகிவிடலாம் எனும் நோக்கில் தமிழ்நாட்டு வீரர் அஸ்வினையும் நூரையும் கொண்ட சென்னை சுழல் மைதானத்திற்கு ஏற்ப அணியினை தயார் செய்திருக்கலாம் ஆனால் இதுவரை சென்னை எதிர்பார்த்த சொந்த மைதான நலனை சென்னை இது வரை பெறவில்லை. அனித்தலைமையில் சொதப்பும் ருத்துராஜ் இன்றைய போட்டியில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது, அவருக்கு பதிலாக தோனி அணித்தலமையினை ஏற்பார் என கூறப்படுகிறது. டேவன் கொன்வே அணிக்குள் மீண்டும் இடம் பெறுவார் எனவும் அன்சூல் சென்னைக்கு இன்று ஆடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, ஓவர்டன் நீக்கப்படலாம் எனும் கருத்தி நிலவுகிறது. Pitch and conditions The Chepauk track continues to be a mystery to an extent that Fleming has stated there is "no home advantage" for CSK. A hot and humid afternoon is in the offing in the only day game in Chennai this season.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
13 ஆவது ஓவரில் களத்தடுப்பினை wide yorker, back of length ஏற்படுத்தியிருந்தார்கள் பின்னர் சரியான மற்றும் அளவு கூடிய பந்துகளை வீசிவிட்டு எதிர்பார்த்த மெதுவான அளவு குறைந்த பந்தில் விக்கெட் எடுக்கும் முயற்சியில் பந்து வீச்னினார்கள் ஆனால் நிறைவேறவில்லை. 19 ஆவது ஓவரும் ஓட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பாக வீசினார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ அணி பவர் பிளேயில் 67/0 மும்பாய் அணி பவர் பிளேயில் 64/2 லக்னோ அணி 7-10 ஓவரில் 100/2 மும்பாய் அணி 7-10 ஓவரில் 101/3 இரண்டு அணிகளும் மிகவும் திட்டமிட்டு போட்டியினை கட்டமைத்திருந்தனர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவலைப்படாதீர்கள் விளையாட்டில் யாராவது ஒருவர் தோற்கத்தானே வேண்டும், அடுத்த போட்டியில் பார்த்துகலாம். ஆனால் சிறப்பாக அணியினை வழிநடத்தினார், தாக்கூரின் 13 ஓவரில் நன்றாக ஆட்டக்காரர்களை செட் பண்ணினார்கள் ஆனால் விக்கெட் விழவில்லை கவனித்தீர்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
no grip விரல் ஸ்பின்னர்ஸ் ஜடேயா போல வீசுபவர்களுக்கு சாதகம், மும்பயில் விக்னேஸ் ஒருவர்தான் மணிக்கட்டினால் சுழல் வீசுபவர் லக்னோவில் பெரும்பாலும் மணிக்கட்டு சுழல் வீசுபவர்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பாயை முடிச்சுவிட்டாங்கள்.