Everything posted by vasee
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் சந்திப்போம், இனிய பயணமாக அமையட்டும், வெய்யில் அதிகமாக தென்னிந்தியா இருக்கலாம். எனக்கும் இதே நிலைதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மழையினால் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது (சுழல் பந்து).
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Power play 4 overs PSL பாகிஸ்தான் T20 போட்டி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் இருவருக்குமிடையேதான் போட்டியே இருக்கு.🤣 காணொளி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த யாழ்கள போட்டியில் கலந்து கொண்டமையாலேயே நீங்கள் ஐ பி எல் பார்க்கிறீர்கள் என கருதுகிறேன், அடுத்த ஐ பி எல் போட்டியில் கலந்து கொள்ளும் போது அணிகளின் விபரம் உங்களுக்கு தெரியும் அதனால் இந்த முறையினை விட சிறப்பாக தெரிவு செய்வீர்கள், ஆனால் இந்த ஐ பி எல்லில் கூட ஐ பி எல்லினை வழமையாக பார்ப்பவர்களைவிட சிறப்பாக தேர்வு செய்துள்ளீர்கள் அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயற்படுவீர்கள் என கருதுகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Pitch and conditions The Chinnaswamy Stadium isn't the bowlers graveyard it used to be this season. The pitches used so far have been two-paced and RCB haven't been able to exceed 170 while batting first in both games. The curator attributes the slowness to high heat and low humidity, though recent rain and cooler evenings may change that a bit. பெங்களூர் அணியின் பந்துவீச்சு பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும் போது ஒரு சுழல் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது, பெங்களூர் ஆடுகளம் இரட்டைதன்மை கொண்டதாக இருந்தால் பெங்களூர் அணியினை விட பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு கூட இருக்கலாம். அடுத்த போட்டியில் பெங்களூர் அணிக்கு வாய்ப்பு இருக்கலாம், இரண்டு போட்டியிலும் ஒரே அணியினை தெரிவு செய்தால் இரண்டில் ஒன்று சரியாக வரும். 50:50 .
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் அணியினை மைக் மோகன் அணியென கடந்த போட்டியில் கூற கொல்கத்தா அணியினை தோற்கடித்தது, தற்போது கொல்கத்தா அணி அரோகரா குறூப்பில் நுழையும் அடுத்த அணி எனும் நிலையில் நிற்கின்றது. 3 அணிகள் கிழே இடத்தினை துண்டு போட்டு வைத்துள்ளார்கள், இன்றைய போட்டி ஒரு முக்கியமான போட்டியாக பஞ்சாப்பிற்குள்ளது. அட்லஸ் கேர்குலஸிடம் தற்காலிகமாக குடுத்த பதவி மாதிரி எனது பதவி வெகுவிரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறேன்.
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
2 கோடி பணமா அல்லது அதனைவிட அதிகமா என சரியாக தெரியவில்லை, அத்துடன் அந்த கொலிவூட் படமா என்பதும் சரியாக நினைவில்லை.
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
கமலின் விக்ரம் படம் வந்திருந்த போது தொடரூந்தொன்றில் என மனிவியுடன் பயணம் செய்தேன், அந்த தொடரூந்தில் இருந்த இந்திய தமிழ் பெண்கள் விக்ரம் படம் தாறுமாறாக இருந்தது என கூறிக்கொண்டு வந்தார்கள், நான் அந்த படத்திற்கு போகவில்லை, வழமையாக வேலையால் வந்து (நீண்ட இரவு நேர வேலை) அப்படியே படத்திற்கு போவதால் படம் நன்றாக இல்லாவிட்டால் நித்திரை கொள்வதுண்டு அதனால் தேவையற்ற மனஸ்தாபம் வந்துவிடும் என்பதால் அந்த படத்திற்கு 3 டிக்கெட் எடுத்து எனது மனைவியின் நண்பிகளுடன் போய் பார்க்கும்படி கூறிவிட்டேன். படம் பார்த்துவிட்டு வந்து இனிமேல் படமே வேண்டாம் என கூறிவிட்டார். inside man எனும் கொலிவூட் படம் ஒன்றில் ரகுமானின் பாடலை பயன்படுத்த அனுமதி கோரிய போது ரகுமான் அதனை இலவசமாக கொடுக்க முன்வந்ததாகவும் ஆனால் மணிரத்தினம் அதனை பயன்படுத்தி 2 கோடி வசூலித்ததாக எங்கோ கேள்விப்பட்ட நினிவுள்ளது. காணொளி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் கைதராபாத்தும் குரூப்பில் இணைந்துவிட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
RCB தனது மைதானத்தில் இதுவரை இந்த ஆண்டில் போட்டியினை வெல்லவில்லை இன்றைய போட்டியிலும் அது தொடருமா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்க வேற, நான் மேல போறத பத்தி நினைக்கவில்லை, 2 புள்ளி வித்தியாசத்தில் ஒரு பேரணி வருகிறது அந்த ஜோதியில் கலக்க போகிறேன் எனும் மகிழ்ச்சிதான்.🤣 டெல்லி அணியின் பயிற்சியாளரன தமிழ்நாட்டை சேர்ந்த (பிறந்து வளர்ந்த இடம்) கேமந்த் பதானி கூறிய துடுப்பாட்டக்காரர்கள் ஒரு போட்டியினை வெல்வார்கள், பந்து வீச்சாளர்கள் தொடரை வெல்வார்கள் என்பதற்கு ஏற்ப நல்ல பந்துவீச்சில்லாத கைதராபாத் அணியினால் கொஞ்சம் சிக்கலான ஆடுகளத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தூரம் அதிகமில்லை, அரோகரா..........
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனால் நல்ல எதிர்பாரா விருவிருப்பான முடிவு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் பதிவு மறந்தாலும் பரவாயில்லை எனது தவறான பதிலுக்கு மதிப்பெண்குடுத்தது மன்னிக்க முடியாதது.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடைசியாக KKR இனை முடிச்சுவிட்டார்கள், பஞ்சாப் அணியினை மைக்மோகன் என கூறியதை மீளப்பெற்றுக்கொள்கிறேன்.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Pitch and conditions Both games played in Mullanpur this season have seen 200-plus scores batting first. Each time, the team batting first went on to successfully defend it. Don't rule out a big total on Tuesday, when temperatures are expected to slide to 27 degrees Celsius in the evening after rising to 38 degrees in the morning. இன்றைய போடியில் 200 ஓட்டங்கள் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது இந்த கிரிகின்போ தள கணிப்பின் மூலம் தெரிகிறது, அத்துடன் மைதான பனிப்பொழிவு அதிகம் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பது அவர்களது அறிக்கையில் மறைமுகமாக கூறப்படுவதாக கருதுகிறேன். சில அணிகள் ஆரம்பத்தில் மைக் மோகன் மாதிரி இருந்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள், இந்த வருடம் பஞ்சாப் அணியின் நிலை அப்படி வரும் போல இருக்கிறது. KKR ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியினை முடித்துவிடுவார்கள் போல் இருக்கிறது, பஞ்சாப் அணி இங்கிலிஸினை அணியில் இணைக்கவேண்டும் என பரவலான கருத்து நிலவுகிறது, மக்ஸ்வெல்லின் நிலை பரிதாபமாக இருக்கிறது, ஸ்ரோனிஸ் கூட இந்த போட்டியில் சிரமப்படுவார் எனவே தோன்றுகிறது. கடந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணியின் 219 ஓட்டங்களை துரத்த முயன்று 201 ஓட்டங்களை எடுத்தது இந்த மைதானத்தில்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை அணிக்கு தோனி மாதிரி யாழ்கள விளையாட்டு திரிக்கு நிங்கள் இருக்கிறீர்கள், இரண்டு பேரும் சரியான நேரத்தில் மீள வந்ததால் இந்த போட்டி சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன். அஸ்வினுக்கு தற்போது கொடுத்துள்ள இடைவேளை அவர் மீண்டும் சிறப்பாக சென்னை ஆடுகளத்தில் மீண்டும் ஆட வழிவகுக்கலாம், அவரை சென்னை போட்டியில் பயன்படுத்துவார்கள், ஆனால் அடுத்த போட்டி மும்பாயில் நடைபெறும் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள் என நம்புகிறேன். நூர் அகமட், குல்டீப் இருவரும் இடதுகை மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர்கள், இவர்களின் தாக்கம் 20 ஓவர் போட்டிகளில் அதிகமாக காணப்படும். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு, நான் தெரிவு செய்த அணிகள் கூட நினைவிருப்பதில்லை, கிருபன் போடும் அந்தந்த நாளுக்குரிய தெரிவுகளை பார்க்கும் போதுதான் தெரியும் எனது தெரிவுகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தல மட்டுமல்ல அஸ்வினும் காரணம், வழமையாக பவர் பிளேயில் 20 ஓட்டங்களையாவது விட்டுக்கொடுப்பார். இனிமேல் ஆறுமுகத்திற்கு ஏறுமுகம்தான்.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் கூறுவது போல பந்தினை அவர் சரியாக கணிக்கவில்லை, சான்ட்னரின் அவுட்டாகும் முதல் பந்து போலவே பந்து அதிகமாக வெளியே திரும்பும் என எதிர்பார்த்தார். அதுவரை பந்திற்கு ஏற்ப விளையாடியவர் பின்னர் எதிர்பார்ப்புடன் விளையாடினார் என கருதுகிறேன், அப்போது இருந்த களத்தடுப்பு ரிவர்ஸ் சுவீப், சுவீப் அடிக்க முடியாமல் அமைக்கப்பட்டிருந்தது, இரண்டு பெரிய இடைவெளி ஓப் சைடில் டீப் பொயின்ற்கும் லோங் ஓன்னிற்கும்டையேயும், லெக் சைடில் டீப் வக்வேர்ட் ஸ்குயார் லெக்கிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்குமிடையே இருந்தது அதனால் அவருக்கு பின் காலில் சென்று தூக்கி அடிக்கும் ஒரு தெரிவினை உருவாக்கியிருந்தார்கள். 4 அடித்த பந்து பின் காலில் சென்று லோங் ஒனிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்கும் இடையே அடித்தார், அடுத்த பந்து பின் காலில் சென்றால் பந்தினை தவறவிடுமாதிரி வீசப்பட்டது (வேகமாக பந்து கீழிறிங்குவதால்), பெரும் பாலும் LBW எடுப்பதே இதன் நோக்கமாகும். கருன் இந்த பந்தை டீப் வக்வேர்ட் ஸ்குயார் லெக்கிற்கும் டீப் மிட் விக்கெட்டிற்குமிடையே தூக்கி அடிக்க முயன்றார், பந்து அதிகமாக திரும்பாமல் உயர்ந்து வந்து காலிற்கும் துடுப்பிற்குமிடையே நுழைந்து விக்கெட்டில் பட்டது. ராகுலுக்கும் அதே ஓவரில் முதல் பந்தில் அவ்வாறே வீசினார் ஆனால் அது ஒரு மெதுவான பந்து ஆனால் கருணிற்கான பந்து வேகமான பந்து.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வழமையான விரல் ஸ்பின்னின் நடுவிரல் கட்டிற்கு கீழே நடுவிரலிலின் பிடி, இந்த பந்தில் நடுவிரல் கட்டிற்கு மறுபுறம் இருக்கும், பந்தை விடும் போது side spin ஆக வரும் அதனால் அதிக ஸ்பின்னுடன் drift உடன் இருக்கும். undercutter போல இருந்தாலும் பந்தின் கட்டு wobble seam ஆக வரும் மட்டைக்கு உள்ளே வரும் என எதிர்பார்க பந்து சட்டென மட்டைக்கு வெளியே திரும்பும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை musical chair மாதிரி வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றிக்கொண்டுள்ளது, அதற்கு இரசிக்ர்களும் ஒரு காரணம். அனைத்து அணிகளின் திட்டமிடல் அதன் ஐ பி எல் ஏலத்தில் ஆரம்பித்து அதனடிபடையில் திட்டமிடலுடன் போட்டியில் இறங்கியுள்ளன, ஒரு அணி வெல்லும் போது அவர்களது திட்டம் கேள்விக்குள்ளாக்கப்படாது, ஆனால் தோற்கும் போதே இரசிகர்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும். ஐ பி எல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த சென்னை அணியினரே அரையிறுதிக்கு போவதற்குரிய வாய்ப்பு அற்ற அணியாக உள்ளனர் என அணியினை அடிப்படையாக வைத்து எனது அபிப்பிராயத்தினை குறிப்பிட்டிருந்தேன். போட்டியின் பெறுபேறுகளினடிப்படையில் (result) திட்டங்களை மாற்றுவது பேரழிவாகும், சரியான திட்டமில்லாமல் சில வேளை அதிர்ஸ்ட வெற்றி கிடைக்கலாம் அதே போல் நல்ல திட்டமிருந்து கூட தோல்வி ஏற்படலாம் ஆனால் போட்டியினை நெறிப்படுத்தலில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது(Follow the process). மேலே சும்மா நகைசுவையாக குறிப்பிட்டது போல குறிப்பிட்டிருந்தாலும் சென்னை தற்போது அடி மட்டத்தில் உள்ளது, இதற்கு கீழ் இறங்க முடியாது சில வேளைகளில் இந்த புள்ளியில் இருந்து ஒரு யு டேர்ன் ஏற்படலாம், மேலும் 8 போட்டிகள் உள்ளன இன்னமும் வாய்ப்பு உள்ளது, ஆனால் திட்டங்களை நம்பி அதனை செயல்படுத்தவேண்டும். இறுதியாக இது ஒரு விளையாட்டு என்பதனை இரசிகர்கள் உணர வேண்டும், வெற்றியோ தோல்வியோ நல்ல போட்டியினை அணிகள் வழங்க வேண்டும். அணியின் வெற்றி தோல்வியினை தனிப்பட எடுப்பதனால் எந்த இலாபமும் இல்லை. சில வேளைகளில் இந்த திரியில் கூட இது ஒரு விளையாட்டு திரியாக இல்லாமல் இருப்பது போல உணருகிறேன். விளையாட்டு மட்டுமல்ல வாழ்க்கையிலும் உங்களால் கட்டுப்படுத்தக்கூடியவற்றை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆறு போட்டிகளில் விளையாடிய சென்னை ஆறுமுகத்திற்கு இனிமேல் ஏறுமுகம்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ருத்துராஜ் தொடக்க நிலை ஆட்டக்காரர் அவரது இடத்திற்கு ஒரு தொடக்க நிலை ஆட்டக்காரரான திருப்பாதிரியினைத்தான் மாற்றீடு செய்யமுடியும், அந்த இடத்தில் இடைநிலை ஆட்டக்காரரையோ அல்லது சகலதுறை ஆட்டக்காரரை இறக்க முடியாது. பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும்,அணிக்கூட்டணியினை (Team compination)விரும்பியவாறு மாற்றமுடியாது. ஒவ்வொரு நில்லைக்கும் ஒரு மாற்றுவீரர் எனும் நிலையில், ஏதாவது காயம் ஏற்பட்டாலோ வீரர் சுயவீருப்பில் விலகினாலோ பயன்படுத்துவதற்காக உள்ள மாற்று வீரர்களை அந்த இடத்திற்கு மாற்ற முடியும். முதல்தர திட்டமிட்ட அணியில் பெரிதாக மாற்றம் செய்யமாட்டார்கள், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதை வாங்கத்தான் வேண்டும்.🤣
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
88% வரி அல்ல, நிகர ஏற்றுமதி (ஏற்றுமதி - இறக்குமதி) ஆனது அமெரிக்காவின் இலங்கை மொத்த இறக்குமதியின் விகிதம் ஆகும், மேலே கணிப்பு உள்ளது அந்த விகிதத்தில் அரைப்பங்கு வரியாக இல்ங்கை பொருள்களுக்கு விதிக்கப்படுகிறது. 44%. இது அமெரிக்காவின் இறக்குமதி வரி.