Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. பந்து வீச்சினை சரியாக பயன்படுத்துவது மற்றும் களத்தடுப்பு என்பவற்றிலும் ரியான் பராக் (ஆர்வமில்லாமல் இருந்தது போல காணப்பட்டது) சொதப்பினார், அனுபவமின்மையும் காரணமாக இருக்கலாம். இந்த அணி அனைத்து போட்டிகளிலும் தோற்கும் அணியாக தெரிகிறது.
  2. பெரிதாக பள்ளிக்கூடத்தில் கனகாலம் குப்பை கொட்டாததால் (இடைநிலை கல்வியோடு முடிந்து விட்டது) இந்த ராங்குகளில் ஏனோ ஆர்வம் ஏற்படவில்லை. நான் எப்போதும் இறுதியாகவே வருவேன் அது தொடர்பில் எந்த வித உணர்வும் ஏதோ இருப்பதில்லை.🤣 ஆனால் சுவாரசியத்திற்காக எழுதுவதுண்டு நிங்களும் அவ்வாறே சுவாரசியத்திற்காக கூறுகிறீர்கள், ஆனால் பையன் இறுதியாக நடந்த சாம்பியன் கிண்ண சாம்பியன், அவரை இறுதியாக வந்த என்னுடன் இணைத்து விட்டீர்களே இது நியாயமா?🤣 செம்பாட்டான், எப்பொதும் தமிழன், கந்தப்பு, கோசான் என பலர் எங்களை விட விபரம் புரிந்தவர்கள் இருக்க எங்களை மட்டும் நீங்கள் குறிப்பிட்டுள்ளதனை உன்னிப்பாக கவனிக்கின்றோம்.🤣 ஆனால் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட பின் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தொடங்கியுள்ளேன்.
  3. இங்கும் மைதானங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக உள்ளது ஆனால் எல்லைகள் பெரிதாக இருக்கும் என கருதுகிறேன்.
  4. பெரும்பாலும் மைதான ஈரலிப்பினை பொறுத்தே முதலாவதாக பந்து வீசுவதா இல்லையா என தெரிவு செய்கிறார்கள், ஆனாலும் வேறு பல காரணிகள் அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இரட்டை தன்மை கொண்ட ஆடுகளங்களில் கூட ஆரம்ப ஓவர்களில் பந்து புதிதாக இருக்கும் போது பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும், அதனால் பந்து புதிதாக இருக்கும் போது அடித்தாடுவது வசதியாக இருக்கும் ஆனால் உய்ரிப்பான ஆடுகளங்களில் நிலமை நேர்மாறாக இருக்கும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் பந்தில் தரையில் படும் போது அதிகமான மாற்றங்களை துடுப்பாட்டக்காரர்கள் முகம் கொடுக்க வேண்டும். இந்த ஆடுகளம் fresh pitch ஆக இருந்தது (புற்கள் காணப்பட்டது), இதுவும் ஒரு காரணம், அத்துடன் மைதான ஈரலிப்பினை எதிர்பார்த்தார்கள் (ஆனால் பெரிதாக மைதான ஈரலிப்பு காணப்படவில்லை), அது பந்தினை பிடிப்பது கடினமாக இருக்கும் இரண்டாவது பந்து வீசும் அணிக்கு அத்துடன் ஆடுகளத்தில் பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும். ஆனால் மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் மைதானம் மேலும் மெதுவாகி விடும் (பொதுவாக 10 ஓட்டங்கள் குறைவாகி விடும்). ஆனால் இன்றைய போட்டியில் நாணய சுழல்ற்சி எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என கருதுகிறேன்.
  5. நீங்கள் கூறுவது சரி எனவே கருதுகிறேன், இரட்டை தன்மை கொண்ட மெதுவான ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது over spin வீச வேண்டும் இதனை கொல்கத்தா அணியினர் சரியாக செய்தார்கள், பந்து மேலெழுந்து வரும், குயின்டன் வனிந்து கசரங்கவின் கூக்கிளி பந்தினை சுழலுக்கு எதிராக ஒரு 6 அடிப்பார். ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அளவுகளை மாற்றி வீச வேண்டும், ஆடுகளம் மெதுவாக உள்ள நிலையில் அளவு குறைந்த பந்துகளை வீசும் சுழல் பந்து வீச்சாளர்களை அடித்தாடுவது இலகு. ராயஸ்தன் அணியின் அணிதலமையும் மோசமாக இருந்தது, இதுவரை காணப்படும் நிலைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு இந்த அணி மோசமான அணியாக உள்ளது.
  6. மைதான ஈரப்பதன் இல்லாவிட்டால் ஆடுகளம் மெதுவாகிவிடும் ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை எடுக்காவிட்டால் நிலமை மோசமாகலாம் ஆனால் மைதான ஈரலிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி ஆடுகளம் மெல்லிய பழுப்பு நிறத்தில் உள்ளது அதில் சிகப்பினை விட கறுப்பு நிறம் அதிகம் இருப்பதும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் மைதான ஈரலிப்பினை காட்டுவதால் ஆடுகளம் இரட்டை தன்மையாக உள்ளது, இதில் 150 மோசமான ஓட்டம் இல்லை.
  7. எனக்கும் இன்று காலைதான் தெரியும், ஆடுகளம் தொடர்பாக இணையத்தில் உள்ளது, இந்த மைதானத்தில் சிகப்பு மற்றும் கறுப்பு நிற ஆடுகளங்கள் உள்ளது அதில் சிகப்பில் ஆடப்போகிறார்கள் என கூறப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கலந்து கொள்வது, எனக்கு வேறு ஆர்வம் பெரிதாக இருப்பதில்லை ஆனால் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது, எனது உறவினர்கள் கூட கூறுவார்கள் (எனது சகோதரர்களின் குடும்பத்தினர்) எமது குடும்பத்தில் ஒரு வித்தியாசமான மனிதர் என அது மட்டுமல்ல மற்றவர்களும் கூறுவதாக அறிந்துள்ளேன் (கிறுக்கு பிடித்தவன் எனும் அர்த்தத்தில்🤣). சிகப்பு நிற மண் வேக பந்து வீச்சிற்கு ஏற்றது பந்து உயர்ந்து வரும் அத்துடன் விரைவாக காய்ந்துவிடும்,ஆடுகளம் வேகமாக உடைந்து விடும் ,மறுவளமாக கறுப்பு நிற ஆடுகளம் ஈரலிப்பினை தேக்கி வைக்கும் இரட்டைத்தன்மை ஆடுகளம் சென்னை போன்ற ஆடுகளம், விளையாடுவது கடினம் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், இரண்டும் கலந்த ஆடுகளங்கள் ஒரு சரியான சமச்சீரான ஆடுகளமாக காணப்படும்.
  8. அங்கதான் இருக்கு விளையாட்டு, சும்மா சுவாரசியத்திற்காக பில் டப் செய்கிறேன் தேவையில்லாமல் யோசித்து கவலைப்படாதீர்கள், பிறகு ரசோதரன் முதலுதவிதான் தேவைப்படும்.🤣
  9. இன்றைய போட்டியில் குயராத்தின் சொந்த மைதானமான நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது, இந்த மைதான ஆடுகளம் சிகப்பு மண் கொண்ட ஆடுகளம். புதிய பந்து வேகப்பந்திற்கு மிக சாதகமாக காணப்படும், நாணைய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட அணிகள் விரும்பும், இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணிக்கு மைதானம் மெதுவானால் ஓட்டங்கள் எடுப்பது ஒப்பீட்டளவில் சிரமமாக இருக்கும், ஆனால் மைதான ஈரலிப்பு காணப்பட்டால் இரண்டாவதாக துடுப்பாடும் அணிக்கு சாதகமாக இருக்கும். மட்டையாளருக்கு சாதகமான ஆடுகளம் ஆனால் ஆரம்ப ஓவர்களில் விக்கெட் அதிகம் இழப்பு ஏற்பட்டால் 200 ஓட்டங்களை எட்டுவது கடினமாக இருக்கும், இந்த மைதானத்தில் SRH 159, 162 ஓட்ட்ங்களை வைத்து எதிரணியினை மட்டுப்படுத்தியதாக கிரிகின்போ கூறுகிறது, பஞ்சாப் அணி அவுஸ்ரேலிய அணி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அவுஸ்ரேலிய அணியாக உள்ளது. இந்த பஞ்சாப் அணியே இது வரையான மிக சிறந்த அணியென ரிக்கி பொண்டிங் கூறியதாக கூறப்படுகிறது. இரண்டு அணிகளும் எதிர்கொண்ட 5 போட்டிகளில் குயராத் அணியே அதிக வெற்றியினை ஈட்டி உள்ளது (3). CPR🤣 செம்பாட்டான் இன்றைய போட்டி முடிவில் உங்களுக்கு முதலுதவி வழங்க தயாராகவுள்ளோம்.🤣
  10. https://www.facebook.com/Cricketcom/videos/what-is-sidespin-what-is-overspin-we-tell-you-in-this-cricketdotcom-explainerscr/2754349758061487/ Side spin vs over spin வருணின் பந்து வீச்சு தொடர்பான ஆய்வு https://www.youtube.com/watch?v=GIpRpbSxJNc
  11. இது ஒரு முக்கியமான விடயம்தான் நீங்கள் கூறுவது மிக சரி என்றே கருதுகிறேன், ஆனால் வருணின் பந்து வீச்சு முறைமைக்கு அது தேவையாக இருக்கிறது என கருதுகிறேன் இந்த சிறிய மைதானத்தில் குறிப்பாக சுழல் பந்து வீச்சிற்கு பந்தின் வேகம் குறைவாக இருப்பது சிற்ப்பு. துடுப்பாட்ட வீரர்கள் இறங்கி வந்து விளையாடுவதனை தவிர்ப்பது மற்றும் பந்து வீச்சை கணிக்க முடியாமல் இருப்பதற்கும் அவ்வாறு வீசுகிறார் ஆனால் நீங்கள் கூறுவது போல பந்தின் வேக மாற்றம் செய்வது முக்கியம், போட்டியினை பார்க்கவில்லை எனவே எவ்வாறு பந்து வீசினார் என தெரியவில்லை.
  12. ஆசிய ஆடுகளங்கள் திரும்ப கூடிய ஆனால் பந்து தாழ்வாக வரக்கூடிய ஆடுகளங்கள், வருண் தனது பந்து வீச்சு முறைமையில் மாற்றம் செய்ததாக கருதுகிறேன். பந்தின் கட்டு 45 பாகை கோணத்தில் இவ்வாறு வீசும் போது பந்து அதிகமாக எழும் ஆடுகளத்தில் மிக சாதகமாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளங்கள் பெரிதளவில் திரும்ப்பது என்பதால் இந்த ஆடுகளங்களில் இது வாய்ப்பாக இருக்காது என கருதுகிறேன். அத்துடன் இது சிறிய மைதான எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் பந்து திரும்பாமல் தாழ்வாக வரும் பந்தை நேரான மட்டையால் எதிர்கொள்வது இலகு தவறான கணிப்பு கூட 6 ஓட்டங்களை சிறிய மைதான எல்லைகளால் கிடைக்கும். இந்திய ஆடுகளங்களில் வழ்மையான முறையில் பந்தின் கட்டு கிடையாக (90 பாகை) வீசினால் பந்து அதிகமாக திரும்பும் அத்துடன் பந்து அதிகமாக drift ஆகும், அதனால் பந்தின் line and length கணிப்பது கடினமாக இருக்கும் என கருதுகிறேன். ஆனால் வருணின் புதிய பந்து வீச்சு முறை அவரரது பந்தினை கணிப்பது கடினமாக இருக்கும் என்பதால் இந்த மைதானத்திற்கு ஒவ்வாத முறையில் பந்து வீசுகிறாரோ என கருதுகிறேன். சிறிய எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் வருண் சாதாரணமான சுழல் பந்து வீச்சினை தொடரலாம் என கருதுகிறேன். சாதாரணமான சுழல் பந்து (side spin) 45 பாகை கோணத்தில் பந்து (over spin) இந்திய ஆடுகளங்கள் (ஆசிய ஆடுகளங்கள் அதிகமாக திரும்பும் ஆனால் பந்து தாழ்வாக வரும்), மற்ற ஆடுகளங்கள் பந்து அதிகமாக திரும்பாது ஆனால் பந்து உயர்ந்து வரும், ஆசிய ஆடுகளங்களில் side spin வீசுவது நல்லது ஆனால் அவுஸ்ரேலியா போன்ற ஆடுகளங்களில் over spin வீசுவது நல்லது என கருதுகிறேன்.
  13. பெங்களூரு அணி இவருக்கு முதலாவது போட்டியிலேயே வாய்ப்பளித்துள்ளது, ஆனால் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார், ஆனால் தொடர்ந்தும் இவருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே தோன்றுகிறது, பெங்களூரு அணி தனது மத்திய ஓவர்களில் (12 ஓவர்கள்) சுழலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த உள்ளது போல தெரிகிறது (10/12), சுயாஸிற்கும் குருணலுக்கும் முழுமையான பந்து வீச்சினையும் லிவிங்ஸ்டனுக்கு 2 ஓவர்களையும் வழங்கியுள்ளது, பெங்களூரு அணிமுழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களிலும் துடுப்பாட்டக்காரர்களிலும் தங்கியுள்ளது போல தெரிகிறது.
  14. உங்களுக்கு ஏன் என் மீது இப்படி ஒரு வன்மம்?🤣 நான் KKR தெரிவு செய்தேன் ஏனென்றால் போட்டி கொல்கொத்தாவில் நடப்பதன் அடிப்படையில், இப்போது புரிகிறது ஈழப்பிரியன், நீங்கள் ஓடிப்போன கோட்டா ரணிலை பதவியில் உக்கார வைத்த மாதிரி என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள்.🤣 இந்த ஆடுகளத்தில் 262 ஓட்டங்களை SRH எடுத்துள்ளது என கருதுகிறேன், அதிக ஓட்டங்களை வாரி வழங்கும் மைதானம், சிறிய எல்லைகள் என குறிப்பிட்டுள்ளார்கள்.
  15. பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்குமிடையேயான இன்றைய போட்டி மழையினால் பாதிப்புள்ளாகும் என கூறப்படுகிறது. ஈடன் கார்டனில் இந்த போட்டி நடைபெறவுள்ளது இந்த மைதானம் குறுகிய எல்லைகள் கொண்ட அதிக ஓட்டங்களை எடுக்க கூடிய மைதானம், பெங்களூரு அணியின் முதல் இரு போட்டிகளும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் இடம் பெறவுள்ளது ஆனால் பெங்களூரு அணியில் குருணல் பாண்டியாவும் பகுதி நேர பந்து வீச்சாளரான லிவிங்ஸ்டனும் சுழல் பந்து வீசும் நிலை காணப்படுகிறது. பெங்களூருவின் இரண்டாவது போட்டி சென்னையில் இடம் பெறுகிறது. பெங்களூரு அணியில் சுயாஸ் எனும் ஒரு இளம் மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர் உள்ளார் என கூறப்படுகிறது, அவருக்கு பெங்களூரு அணி போட்டிகளில் வாய்ப்பளிக்குமா என தெரியவில்லை. பொதுவாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து வீச்சின் ஆதிக்கம் அதிகளவில் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர் போட்டிகளில் காணப்படுகின்ற நிலையில் பெங்களூரு அணி சுழல் பந்து வீச்சில் பின் தங்கிய நிலையில் காணப்படுவது அதன் அரையிறுதி போட்டிகளின் தகுதிகாண் போட்டிகளில் மேலதிக அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். மறுவளமாக கொல்கத்தா அணி மிக சமனிலை கொண்ட அணியாக காணப்படுகிறது, இந்த போட்டி பெங்களூரு அணி எவ்வாறு மத்திய ஓவர்களில் சுழல் பந்து வீச்சினை பயன்படுத்துகிறது என்பதனை பொறுத்தி சென்னை அணியினுடனான தனது அணித்தெரிவில் கவனம் செலுத்தக்கூடும், ஆனால் முக்கிய மத்திய ஓவர்களில் சரியான சுழல் பந்து வீச்சில்லாமல் இந்த தொடரை பெங்களூரு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. மற்றைய அணிகளை விட பெங்களூரு அணி 20 ஓட்டங்களை அதிகம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன்.
  16. இந்த ஐ பி எல் போட்டியில் உமிழ்நீரினை பயன்படுத்தி பந்தினை தயார்படுத்துவதற்கு கோவிட் காலத்தில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது ஆனால் 20 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ரிவர்ஸ் சுவிங்கினை எதிர்பார்க்க முடியாது அதனால் எந்த மாற்றமும் இருக்க பொவதில்லை, ஆனால் இரண்டாவது பந்து பாவிக்க உள்ளார்களாம், மைதான ஈரப்பதன் அடிப்படையில் 11 ஆவது ஓவரில் இரண்டாவது பந்து பாவிக்கலாம் என முடிவு எட்டப்பட்டதால் இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு சாதகம் ஏற்படலாம். இது தவிர 12 வீரரர் பயன்பாடு, அதிக காலம் எடுத்து பந்து வீசுவதால் வழங்கப்படும் தண்டைனைகள் உள்ளடங்கலாக 5 விடய்ங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  17. 13 கோடி செலவழித்து பத்திரனவை வாங்கியுள்ளார்கள், ஆனால் அவரது பந்து வீச்சு இம்முறை சிறப்பாக இருக்காது என கூறுகிறார்கள், அண்மையில் அவரது வலைப்பயிற்சி தொடர்பில் இக்கருத்து வெளியாகியுள்ளது.
  18. ரசோதரன் உங்களது பதிலுக்காக பலர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.🤣
  19. பத்திரனவிற்கு பதிலாக நாதன் எலிஸை களமிறக்கினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.
  20. நானும் உங்களைப்போலவே நம்புகிறேன், எனது தெரிவும் சென்னைதான்.
  21. கெர்க்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேன் பெரியளவில் ஆயுத ஆளணி இழப்புக்களை சந்திக்கவில்லை, ஆனால் ஒரு பேரழிவினை உக்கிரேன் வெற்றிகரமாக தவிர்த்துள்ளது, இது அடிப்படையில் உக்கிரேனுக்கு ஒரு வெற்றியாக கருதுகிறேன். ஆனால் இரஸ்சியா போரினை தீவிரப்படுத்த போவதாக கூறுகிறார்கள், இது அமைதி உடன்படிக்கைக்கு முன்னதாக அதனை எட்ட இரஸ்ஸியா விரும்பக்கூடும், அதன் ஒரு கட்டமாக ஒடிசாவினை நோக்கிய படை நகர்வு இருக்கலாம் என கருதுகிறேன். உக்கிரேன் ஆளணி பிரச்சினையினை களைவதற்கு மேற்கு ஏதாவது ஒரு மாற்று வழியினை சிந்தித்தாக வேண்டும், போரை நிறுத்துவதற்கு உக்கிரேன் கூட ஆர்வமற்ற நிலை காணப்படுகிறது, அதற்கு காரணமாக உக்கிரேன் அதிகார வர்க்கம் தனது ஆட்சியினை தக்க வைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம், ஆனால் போரினை தொடரும் நிலையில் உக்கிரேனின் மனித வளம் இல்லை என கருதுகிறேன். கெர்க்ஸ் பிராந்தியத்தில் இருந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிசக்க்தி வழங்கல் மையத்தினை உக்கிரேன் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது இது உக்கிரேனின் மீறல் என இரஸ்சியா குற்றம் சாட்டுகிறது, மறுபுறம் உக்கிரேனின் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான தாக்குதலாகவும் இது கூறப்படுகிறது, ஜேர்மனி இரஸ்சியாவிற்கு சொந்தமானதென கருதப்படும் தென்னமரிக்க நாட்டு எரிபொருள் வழங்கல் கப்பலை தடுத்து வைத்துள்ளதாகக்கூறப்படுகிறது. சமாதான முயற்சியில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் ஆர்வம் காட்டவில்லை, அத்துடன் மற்ற தரப்புகளும் போரை தொடரவே விரும்புவது போல் தெரிகிறது.
  22. இரஸ்சிய ஏங்கில்ஸ் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இணையத்தில் உலாவருகின்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், குறித்த விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள அதே அளவு ஆயுதங்களுடன் மேலதிகமாக அதே அளவு ஆயுதம் வந்து சேர்ந்த போதே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இரஸ்சியா ஒரு பெரும் தாக்குதலை திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறையினூடாக குறித்த உளவுத்தகவல் உக்கிரேனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரஸ்சிய உக்கிரேன் போர்க்களம் உக்கிரேன் தரப்பில் சடுதியாக ஏற்படுகின்ற பின்னடைவை தடுத்து நிறுத்தி உக்கிரேன் தரப்பிற்கு ஒரு குறைந்த பட்ச நியாயமான தீர்வினை எட்ட மேற்கின் உதவிகள் அவசியமாக உள்ளது, ஆனால் ஆளணியில் பின்னடைவை சந்தித்துள்ள உக்கிரேன் தரப்பிற்கு தேவைப்படும் வீரர்களை திரட்டுவதில் உக்கிரேன் தரப்பு தன்னால் இயன்றளவில் வன்முறைகளை கூட பயன்படுத்துவதாக கடந்த காலத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆளணி பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உக்கிரேனால் கோடைகால தாக்குதலை எதிர்கொள்ளமுடியாது என கூறப்படுகிறது, அதற்குள்ளாக ஒரு தீர்வு எட்டப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உலகுள்ளது. இந்த போரின் முடிவில் போரிடும் இரு தரப்பிற்கும் இலாபம் இருக்க போவதில்லை, ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பதே உறுதி.
  23. எலோன் மஸ்கிற்கு SEC கீச்சகம் வாங்கிய விவகாரத்தினை முறையாக கையாளாமைக்காக குற்றப்பத்திரிகை அனுப்பியுள்ளது, 5% அதிகமான பங்குகளை வாங்கினால் அது தொடர்பான அறிவிப்பினை 10 நாள்களில் வெளியிட வேண்டும் எனும் சட்டத்தினை மீறியமைக்கான குற்றச்சாட்டில் நீதிமன்றில் SEC வழக்கு தொடர்ந்துள்ளது. https://www.reuters.com/world/us/elon-musk-issued-summons-sec-case-over-twitter-stake-disclosure-2025-03-20/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.