Everything posted by vasee
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மனிக்கட்டினால் போடும்போது திரும்பாத ஆடுகளத்திலும் திருப்பம் ஏற்படுத்தலாம், ஆனால் நான் கூறியது பிளைட் பந்துகள், பந்து நின்று வரவேண்டும் (மெதுவாக) ஆனால் மட்டில் விரைவாக பந்து மட்டைக்கு வரும் அதனால் அந்த பந்துவீச்சிற்குரிய சாதகம் குறைவாக காணப்படும். இங்கிலாந்தை அப்கானிஸ்தானை வென்றமையால் மீதமிருக்கும் அவுஸ்ரேலிய போட்டியினை அப்கானிஸ்தான் வென்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும் என கருதுகிறேன். விறு விறுப்பான போட்டியாக இருந்தது.
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
இந்த கவிதை ஓணாண்டியின் கவிதை இவை இரண்டும் பேசும் அரசியலை தள்ளிவிட்டு பார்த்தால் இரண்டும் மிக சிறந்த கவிதைகள். இரு கவிதைகளும் அனத்து பொதுவான பிரச்சினயுடனும் ஒத்து போகிறது (அதுவே ஒரு சிற்ந்த இலக்கியத்திற்கான அடையாளமாக நான் கருதுகிறேன்). அந்த கொள்கை விளக்க பகுதியினை எடுத்துவிட்டு அந்த அரசியலையும் தள்ளி வைத்துவிட்டு வாசித்து பாருங்கள் கவிதை சிறப்பாக இருப்பது போல் தோன்றும், வாசகரராக அதனையே நான் விரும்புகிறேன், ஆனால் அனைத்து வாசகர்களாலும் கவிதையினை புரிந்து கொள்ள முடியாது என்பது நியாயமே அதனால் அந்த கொள்கை விளக்க பகுதி தேவைதானோ என தற்போது கருதுகிறேன்.
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விட்டது என கருதுகிறேன், போரினால் பாதிக்கப்பட்ட உக்கிரேனை கட்டி எழுப்ப உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முன்வரவேண்டும், இதுவரை போரிற்கு உதவியளித்த நாடுகள் உக்கிரேனின் பொருளாதார வளர்ச்சியினை கட்டி எழுப்புவதற்கும் முன்வரவேண்டும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுழல் பந்து வீச்சாளருக்கு மட்டில் போடுவது மிக கடினம் அதனோடு ஒப்பீடு செய்யும் போது வேக பந்து வீச்சாளருக்குத்தான் மட் சாதகமானது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுழல் பந்துவீச்சிற்கு காய்ந்து போன ஆடுகளம் மிக சிறப்பாக இருக்கும், மட்டில் சுழல் பந்திற்கு பிடிமானம் குறைவு அதனால் அதிகமாக திரும்பாது. எனக்கு பெரிதாகா அனுபவம் உங்களை போல இல்லை, மிக சொற்பமான காலமே விளையாடிய அனுபவம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மட்டினில் பந்து சறுக்கி வருவதனால் பந்து உயரம் குறைவாக வரும், ஆடுகளத்தில் பிடிமானம் கூட (Grip) அதனால் பந்து உயர்ந்து வருகிறது, மட் அளவினை விட பந்தை முன்னால் போடலாம்தானே? (வேக பந்து வீசின அனுபவமில்லை)
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவிற்கும், தென்னாபிரிக்காவிற்கும் உள்ள இடைவெளி பந்து வீச்சிலே உள்ளது. இரன்டு அணியிலும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக உள்ளது, இன்றைய போட்டியில் கிளாசன் விளையாடுவார் என கருதுகிறேன். அது மேலும் தென்னாப்ரிக்காவிற்கு வாய்ப்பாக இருக்கும். அவுஸின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உள்ள கெட்டை பற்றிய கவனம் அவருடன் விளையாடும் சோர்ட்டில்இல்லை, இவர் இந்த சூழ்நிலையிற்கு மெதுவாக தன்னை மாற்றுவது தெரிகிறது, இவர் போர்மிற்கு வந்தால் தென்னாபிரிக்காவிற்கு மிக சவாலாக இருக்கும். பந்து வீச்சில் பென்ஸர் ஜோன்சன் மிக திறமையான பந்து வீச்சாளர், அவரரால் ஏனோ (இவரைத்தான் அதிக விக்கெட் விழுத்துவார் என கணித்திருந்தேன்) சிறப்பாக செயல்படமுடியவில்லை, இன்றைய போட்டியில் அவர் தனது போர்மிற்கு வரவேண்டிய நெருக்கடியில் உள்ளார். இவற்றிற்கெல்லாம் மேலாக சிமித்தின் தலமை, சர்வதேச போட்டி அனுபவமற்ற வீரர்கள் அணியில் அதிகம் இருந்தாலும் அவர்கள் மிக திறமையான வீரர்கள், கடினமான சூழலில் அவர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தக்கூடும். இந்த போட்டி தொடர் முடிவதற்குள் இந்த அவுஸ் அணி ஒரு சம்பியன் அணியாக வளர்ந்துவிடும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எந்த தோல்வியினை பற்றியும் கவலைப்பட தேவையில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலிய அணியில் இங்கிலாந்துடனனான போட்டியில் 4 முழு அளவிலாலன பந்து வீச்சாளர்களை ஐந்தாவது பந்து வீச்சாளருக்கு பதிலாக பகுதிநேர பந்து வீச்சாளர்களையும் அவுஸ் பயன்படுத்தியிருந்தது. பென்ஸர் ஜோன்சன் வெறும் 7 ஓவர்கள் மட்டுமே வீசினான் (காயம்?) அதனையும் சேர்த்து 13 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களை அவுஸ் பயன்படுத்தியது இறுதி ஓவரை பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர் மானஸினை பயன்படுத்தி இருந்தார்கள். அடம் சம்பா போலவே மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் சங்காவும் முழுநேர பந்து வீச்சாளர், ஆனால் அவரை போட்டியில் இறக்கவில்லை. அவுஸை விட தென்னாபிரிக்கா பலமான அணி. இந்த போட்டியிலும் அதே அணியுடன் அவுஸ் களமிறங்க வாய்புள்ளது, அனைத்து அணிகளும் பெரும்பாலும் இவ்வாறான கொளைகையினையே பின் பற்றுகின்றன. இந்தியா அணியிற்கு இந்தநிலை இல்லை. தென்னாபிரிக்க அணிதான் பலமான அணி, ஆனால் அவுஸ் அழுத்தமில்லாமல் விளையாடகூடிய அணி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன். எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன். எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள். தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன்! சும்மா விளையாட்டிற்காக பதியும் கருத்துக்களை சீரியசாக எடுக்கதீர்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சூதாடுவதும் தப்பு, சூதாட தூண்டுவதும் தப்பு (ரஜனிகாந்த மொடுயுலேசனில் - சும்மா உங்கலை கலாய்ப்பதற்காக கூறினேன்), அதோட நான் சரியான கஞ்சனும் கூட இதனை எனது பெற்றோர்களே உறுதிப்படுத்தியுள்ளார்கள் ( பொக்கட் மணியாக கொடுக்கும் காசினை சேர்த்து வைத்து பின்னர் அம்மாவிடமே கொடுத்துவிடுவதனால்)
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதில என்னை யாராலும் வெல்லமுடியாது.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் சூதாடுவதில்லை , அத்துடன் தான தர்மமும் செய்வதில்லை.😁 தோல்வியினை ஏற்றுக்கொள்ளாமல் சொல்லுகின்ற சாக்கு போக்குகளை நானும் விளையாட்டுக்காக சொல்லி பார்த்தேன், நீங்களும் அதை சீரியசா எடுத்துக்கொண்டு.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பகல் கனவு. நியுசிலாந்துடனனான போட்டியிலேயே சாயம் வெளுத்து விடும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்த கொடுமையை வேற பார்க்க வேணுமா என நித்திரை கொள்ள சென்றுவிட்டேன் (11 ஆவது ஓவரில் கரிஸ் ராபின் பந்தில் கில்லின் கட்சை விட்டவுடன்), ஆனால் இந்தியணி மிகவும் பலவீனமான அணியாகவே எனக்கு தெரிகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆம் பவர் பிளேயில் பந்து நன்றாக திஉம்பும் இதற்குள் 2- 3 விக்கெட் எடுத்தால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பிருக்கலாம் இல்லாவிட்டால் பங்களாதேசை முடிச்ச மாதிரி 45 ஒவரில் முடித்து விடுவார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆடுகலம் இரட்டை தன்மை கொண்டதாக உள்ளது அத்துடன் பந்து வேறு திரும்புகிறது, பாகிஸ்தான் பந்துவீச்சில் இந்தியணி இதனை திரத்துவது இன்னமும் கடினமான இலக்குதான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் 35 ஓட்டங்கள் குறைவு, இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியனியில் மாற்றமில்லை, அனி விபரம் அறிவித்துவிட்டார்கள், பாகிஸ்தான் துடுபெடுதாடுகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பார்க சமனுக்கு பதிலாக (காயம்) இமாம் உல் கக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என கூறப்படுகிறது. உண்மைதான், அடிக்கடி ஆட்டக்காரர்களை மாற்றுவது அணியின் பலவீனமாக கருதப்படும், தற்போதுள்ள அணிகளில் ஒரு செட்டில் ஆகாத அணியாக இந்தியாவே காணப்படுகிறது, எத்தனை சுழல் பந்து வீச்சாளர் தேவை, யார் யார் தேவை என குழப்பமான அணியாக.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா இறுதி நேரத்தில்தான் விளையாடும் அணியினை அறிவிப்பார்கள், ஜடேஜாவினை கம்பீர் கட்டியணைத்தார் என்பதனடிப்படையில் இந்த வதந்தி உலாவுகிறது (அதாவது ஜடேயா விளையாட முடியாதென).😁 பாகிஸ்தானிய பயிற்சியாளரை இந்தியணி 4 சுழல்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது என பத்திரிகையாளர் கேட்டதற்கு, அணிகள் ஒரு முழுநேர சுழல்பந்து வீச்சாளர்கலுடன் களமிற்ங்குகின்றன என சுட்டிக்காட்டினார். உண்மையில் இந்தியா எதற்கு இப்படி சுழல் பந்துவீச்சாளர்கள் வேண்டும் என விரும்புகிறார்கள் என தெரியவில்லைதான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்திய கிரிக்கெட் நிபுணர்களா அல்லது இந்த ஐவர் கூட்டணியா சரி என இன்று தெரிந்துவிடும். ஆனால் பாகிஸ்தானுக்கெதிராக இஅயற்கையும் சதி செய்கிறது போல இருக்கிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ராவல் பின்டியில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேச போட்டி மழையினால் தடை ஏற்படும் என எதிர்பார்க்கிறார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கோலி மற்ற வீரர்களை விட 1 மணித்தியாலம் முன்னதாகவே துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டாராம், இந்திய கிரிக்கட் நிபுனர்கள் இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை இலகுவாக ஊதி தள்ளிவிடும் என கணித்துள்ளார்கள்.