Everything posted by vasee
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அவுஸ்ரேலியாவிலும் இந்த காட்டுத்தீ ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது, முன் ஆயத்த நடவடிக்கையாக தீ அபாயம் உள்ள பகுதிகளை குளிர்காலத்தில் அவர்களாகவே தீ பரவாமல் தகுந்த பாதுகாப்புடன் எரிப்பார்கள், இந்த முன்னேற்பாடுகள் மற்றும் அவசர பாதுகாப்பு ஊழியர்கள் இவற்றுக்கென நிதி ஒதுக்கி வைத்திருப்பார்கள். 2019 இல் அப்போதிருந்த அரசு அந்த நிதியத்தினை குறைத்திருந்தது, அபோது ஏற்பட்ட தீ விபத்தில் 34 மக்கள் பலியானார்கள் பல இலட்சக்கணக்கான உயிர்னங்கள் கொல்லப்பட்டன பல மில்லியன் கெக்டெயர் நிலங்கள் தீக்கு இரையாயின. தீ பரவும் போது தொடர்ச்சியற்று காற்றின் உதவியினால் தீ தாவி பரவியது, அப்போது வெப்பம் 40 களில் இருந்தத்டு என நினக்கிறேன். அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு தீ பரவல் தொடர்பான தெளிவு இருந்தும் சிலர் அந்த தீயில் சிக்கி கொண்டார்கள். தீ ஏற்பட்ட போது அப்போதிருந்த அவுஸ்ரேலிய பிரதமர் தனது விடுமுறியினை களிப்பதற்கு வெளிநாடு சென்றுவிட்டார், திரும்பி வந்து ஊடகங்களிடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மாட்டிக்கொண்டார்.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அதே இந்திய நண்பர் இலங்கையினை சீனாதான் கடன் கொடுத்து சீரழித்தது என்பார், ஆரம்பத்தில் இலங்கை கடன் வாங்கினார்கள் அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினாலும் விடுவதாக இல்லை ஒரு நாள் சீனா இலங்கையினை நாசமாக்கவில்லை உங்கள் இந்தியாதான் இலங்கையின் தற்போதய நிலைக்கு காரணம் என கடந்தகால வரலாற்றினை கூறினேன் அதற்கு எதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டிருந்தார் (அவருக்கே உண்மை தெரியும் போல இருக்கிறது அவர் 60 களில் உள்ளவர் என நினைக்கிறேன்). அனால் அதன் பின்னர் கூட சந்தர்ப்பம் ஏற்படும்போது மீண்டும் சீனாதான் இலங்கையின் சீரழிவிற்கு காரணம் என்பார்😁.
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இந்தியாவிற்கும் அமெரிகாவிற்குமிடையே தற்போது நிகழும் இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு இந்திய நண்பர் கூறிய காரணம், அமெரிக்காவின் அப்கானிஸ்தான் விலகலின் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் போதைவஸ்து உற்பத்தி செய்யப்பட்ட விளைநிலங்களில் 95% மீண்டும் உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் விளைநிலங்களாக மாறிவிட்டமையால் மீண்டும் அமெரிக்க போதை பொருள் நடவடிக்கைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் CIA இயின் முன்னய போதை பொருள் கடத்தல் நாடான பர்மாவிலிருந்து இந்திய எல்லை பகுதியினூடாக போதை பொருள் கடத்தலுக்கு (மிசோராம், மணிப்பூர் என நினைவுள்ளது) இந்தியரசு தனது சோதனையினை அதிகரித்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் அமெரிக்காவின் தென்னாசியாவில் மேற்கொள்ள விரும்ம்பும் செயற்பாட்டுகளுக்கான நிதி வழங்கலை இந்தியா கட்டுப்படுத்துவதனை விரும்பாதமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறினார். நீங்கள் கூறும் அமெரிக்க வெள்ளை மா அதுவாக இருக்குமோ😁?
-
77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
சுதந்திர தினவிழாவில் பாற்சோறு வழங்வார்களா? தற்போது அரிசி தட்டுப்பாடு நிலவுவதால் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கிறார்களா?😁
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஏதாவது சுவாரசியமான தகவல்களை அறியலாம் என்பதற்காக கேட்டேன்😁. இன்னுமொரு கேள்வி அன்னபூரணி அமெரிக்கா போனதா அல்லது கோதுமை மா முதலில் இலங்கைக்கு வந்ததா? எது முதலில் இடம்பெற்றது?
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
யார் இந்த அன்னபூரணி?
-
வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் போது இலங்கை திரும்ப விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்களை பார்க்கும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உண்மையாகிறது.
-
மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையில் இருப்பதாக அவர்கள் இலங்கைக்கு தவறாக வந்ததையிட்டு நினைக்க கூடும், அதனால் முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் போக விரும்பும் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி (பங்களாதேசம் அல்லது இந்தியா போக விரும்பகூடும்)அந்தந்த நாடுகள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும், சிலர் தற்காலிகமாக வேன்டுமென்றால் இலங்கையில் தங்க விரும்பகூடும் ஆனால் அவர்கள் குடியுரிமையினை விரும்பமாட்டார்கள் என கருதுகிறேன், தற்காலிக வதிவிடயுரிமையினை விரும்புவர்களை அவர்களுக்குத்தேவையான உதவிகளை செய்வது அரசிற்கு ஒரு பெரிய விடயமாக இருக்க போவதில்லை. மொழி அவர்கள் போகும் பாடசாலையினை பொறுத்தது.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அமெரிக்கா என்னதான் உலகை ஆட்டைய போட்டாலும் அவர்களையே ஆட்டையப்போடுபவர்கள் இந்தியர்கள், 2022 இல் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியர்கள் இந்தியாவில் இருந்தவாறே ஏமாற்றியுள்ளார்கள் என கூறுகிறார்கள். வல்லவனுக்கு வல்லவன்,மோடிஜி இன் டியிட்டல் இந்தியா😁 .
-
இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
இது ஒரு நல்ல திட்டம்தான்.
-
மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
இந்த மக்கள் இயல்பு வாழ்க்கையினை மீளப்பெறுவதென்பது மிகவும் சவாலான விடயம் (ஏற்கனவே இலங்கை ஒரு பொருளாதார பாதிப்பிற்குள்ளான நாடு), ஆனாலும் உள்ளூர் மக்கள்தான் முதலில் உதவியுள்ளார்கள் என்பது ஒரு ஆறுதலான விடயம் (முல்லை தீவு மீனவ சங்கத்தின் உதவி), அகதி வாழ்கை வாழ்ந்த எம்மால் ஒரு அகதி வாழ்க்கையின் நடைமுறை அனுபவத்தினூடாக அந்த வலிகளை புரிந்தமையால் அதிலிருந்து இந்த மக்களுக்கான உதவிகளை செய்வதனூடக அவர்களை விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும், அத்துடன் நில்லாது அரசு அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கும் சொந்த இருப்பிட வசதிகளை உருவாக்கி வாழ்வதற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
உக்கிரேனின் ஊழல் பற்றி குறிப்பிடும்போது (30 - 40 நிமிடங்கள் என நினைக்கிறேன்) தமது தரப்பில் அதற்கு எதிரான நடவடிக்கையினை எடுப்பதாக கூறியுள்ளார், ஆனால் அதே வேளை வழங்கல் பாதையில் உள்ள ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதன் மூலம் அவர் மறைமுகமாக ஒரு விடயத்தினை தெளிவுபடுத்துகிறார். இந்த போரில் அவர்கள்தான் இரத்தம் சிந்துகிறார்கள், அப்படியாயின் தமக்கெதிராக தாமே ஏன் செயற்படவேண்டும் என கேட்டு சில விடயங்களை புரிந்து கொள்ளுமாறு பார்வையாளரிடமே விட்டு விடுகிறார்.
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
இந்த காணொளியில்னை முழுமையாக பார்க்கவும். உக்கிரேன் அவசரகாலநிலை அதிபர் செலன்ஸ்கியின் மனம் திறந்த பேட்டி.
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
இது வருத்தமான விடயம், இலங்கை மட்டுமல்ல உலகில் பல நாடுகள் இந்த பாதையிலேயே பயணிக்கின்றன, பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் பிரச்சினை, ஆட்சிக்கு வருகின்ற ஆரசுகள் சரியான ஒரு அரசியல் அமைப்பினையோ சட்டவாக்கத்தினையோ செய்வதில்லை ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைத்தும் வாக்குறுதியில் இருக்கும்.
-
சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா
சீனா அடிக்கடி இப்படி இந்தியாவின் டெம்ரேட்ஜர் பார்ப்பது ஒன்றும் புதிததல்ல😁, சீனாவிற்குத்தெரியும் இந்தியா இனி அடக்கித்தான் வாசிக்க வேண்டும் அது சீனாவாக இருந்தாலும் சரி இலங்கை, நேபாளம், பங்களாதேசமாக இருந்தாலும் இந்தியா இனி கூழை கும்பிடு போட்டே ஆகவேண்டும், எல்லா மாடுகளும் ஓடுகிறது என சோனியாவின் சோத்தி மாடு ஓடியதனை போல நானும் ரவுடிதான் என செயல்பட்டு தற்போது அவமானப்பட்டு நிற்கிறார்கள்.
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
இவ்வாறான செய்திகளை வாசிக்கும் போதே பொறுப்பற்ற நிர்வாகத்துறையினரின் மேல் கோபம் ஏற்படுகிறது, எவ்வாறு இலங்கை மக்கள் இதனை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள்? இலங்கையினை ஆபிரிக்க நாடு மாதிரி மாற்றாமல் ஓயமாட்டார்கள் இலங்கை அரசியல்வாதிகள்.
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
அவுஸ்ரேலியர்களிடையே இவர் கொஞ்சம் பிரபலமானவர்.
-
பதியம்
மேற்கூறியது போல ரோசா மரத்தில் பதியம் வைக்கப்பட்டது 14 நாள்களுக்கு மேல் இருக்கும் இந்த பதியம் வைத்து, பொதுவாக 4 வாரங்களின் பின்னர் அகற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும், ஆனால் முன்னதாக வெட்டி பூந்தொட்டியில் வைத்துள்ளேன், அதே போல் மாமரத்திலும் ஒரு பதியம் வைத்துள்ளேன் 3 மாதத்தின் பின் தாய் மரத்திலிருந்து பிரித்து எடுக்கவுள்ளேன். அத்துடன் குளிர்காலமும் ஆரம்பிக்கும் சிட்னியில்.
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
ஒரு தேவையற்ற போரினால் உயிரிழக்கும் இளையோர். இப்படியான போரினை ஆதரிப்பவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்காக மற்றவர்களின் உயிரோடு விளையாடுகிறார்கள், புதிய அமெரிக்க தலைமையால் போர் முடிவிற்கு வந்தால் நன்று.
-
பதியம்
வளர்ச்சியினை தூண்டும் பொடி தேவையில்லை, மரத்தில் இருக்கும் ஒரு கொப்பில் ஒரு அங்குலத்திற்கு மோதிரம் போல பட்டையினை நீக்கும் போது மரத்திலிருந்து குறித்த கொப்பிற்கு தேவையான நீர் மற்றும் சத்துக்கள் செல்லாது ( கீழ் மரத்திற்கும் கொப்பிற்குமிடையே பட்டை மூலமான தொடர்பற்ற நிலையில் கொப்பிற்குத்தேவையான நீர் மற்றும் சத்துக்களை பெறுவதற்காக வேர்கள் உருவாகும்). 3 மாத காலத்தில் மரத்திற்கு தேவையான அளவில் வேர்கள் அந்த மண் பையினுள் உருவாகிவிடும், வளவனின் காணொளியில் உள்ளது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
அவுஸ்ரேலிய அணி இலகுவாக நிர்ணயிக்கப்பட்ட 162 ஓடங்களை வெறும் 4 விக்கெட் இழப்புடன் பெற்று வெற்றியீட்டியுள்ளது, அவுஸ்ரேலிய அணியின் அற்புதமான பந்துவிச்சு போலில்லாமல் இந்தியணியின் சாதாரண பந்து வீச்சு இந்த இனிங்ஸில் காணப்பட்டது, பும்ரா இந்த இனிங்ஸில் பந்து வீசவில்லை, பும்ரா பந்து வீசியிருந்தால் சிறிது சுவாரசியமாக போட்டி இருந்திருக்கலாம் ஆனால் முடிவில் மாற்றம் இருந்திருக்காது.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இன்று வெப்பம் அதிகமாக உள்ளது, வெப்ப அதிகரிப்பினால் பிட்சில் எவ்வாறான மாற்றம் ஏற்படும் என யாராலும் எதிர்வு கூற முடியவில்லை, சாதாரணமாக பிட்ச் காயும் போது 2, 3 ஆம் நாள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக காணப்படும் ஆனால் இந்த பிட்சில் ஆரம்ப நாளிலேயே ஈரப்பதன் அதிகமாக காணப்பட்டதாக முன்னர் பதிவிட்டேன் அதனை உறுதி செய்வது போல இரண்டாம் பிட்ச் ஆடுவதற்கு கடினமாக மாறியது, அதேநிலை நீடித்தால் இன்றைய நாள் நேற்றை விட மோசமாகலாம், அவ்வாறில்லாமல் அதிக வெப்பம் ஆடுகளம் துடுப்பாடத்திற்கு சாதகமானால் அவுஸ்ரேலியாவிற்கு வெற்றி கிடைக்கும், ஆனால் அப்படி நிகழ்வதற்கான சாத்திய கூறு மிக மிக சொற்பமாகும், இந்தியாவிற்கே ஆடுகளம் தற்போது அதிகளவில் சாதகமாக உள்ளது.
-
பதியம்
வளவன் இணைத்துள்ள இந்த காணொளியில் உள்ளதனை போல செய்து பாருங்கள் வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட 90 % மேல் உள்ளது, இவ்வாறு முன்பு பல தாவரங்களை பதியம் செய்துள்ளேன், ஊரில் நான் வெறும் லக்ஸ்பிறே பையினை பயன்படுத்தியதாக நினிவுள்ளது எந்த பையாக இருந்தாலும் பயன்படுத்தலாம், அத்துடன் மண்ணும் அந்த மண்ணை தொடர்ச்சியாக ஈரப்பதனில் வைத்திருப்பதற்காக பிளாஸ்ரிக் போத்தலில் ஊசி துளையிட்டு தண்ணீர் மிக மெதுவாக சொட்டும் வண்ணம் பதியத்தின் மேல் இணைத்திருந்தேன். ஒரு மாதங்களின் பின்னர் உங்களால் ஆதன் வேர்களை பார்க்கலாம் (3 மாதத்தின் பின்னர் பதியத்தினை மரத்திலிருந்து வெட்டி வேறாக்கலாம்) 1 மீட்டர் உயரமான தாவரங்களைக்கூட இதனால் உருவாக்கலாம், சில வேளை வேர்கள் பூரணமாகாவிடில் அல்லது தாவரம் (பதியம்) பெரிதாக இருந்து அதன் இலைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அந்த வேர்களினால் வளங்க முடியாமல் தாவரம் சோர்ந்து போகுமாயின் தாவரத்தினை நேரடி சூரிய ஒளி பரவுவதை தடுத்தல், இலைகளை குறைத்தல் செய்யலாம் (சிறிய தாவரமானால் பெரிய பொலிதீன் பையினால் அதனை மூடிநீர் இழப்பினை தவிர்க்கலாம்). ரசோதரன் இணைத்த இணைப்பில் 3 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றுவதன் நோக்கம் பங்கஸ் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு, ஒட்டுத்தாவரத்தினை பொலித்தீனால் மூடும் போது ஒட்டு பகுதியில் அந்த பங்கஸ் தாக்கம் ஏற்படலாம் (காயம் உள்ள பகுதி). தாவரங்களை ஒட்டும் போது ஒட்டப்படும் தாவரத்திற்கும் ஒட்டும் தாவரத்தின் வளர்ச்சி திசுக்களின் தொடுகை இருந்தாலே அந்த ஒட்டு வெற்றி அடையும், தாவரத்தின் பட்டையினை அடுத்து உள்ள பகுதியில் இந்த வளர்ச்சி திசுக்கள் உண்டு, பொதுவாக இரண்டு தண்டுகளும் ஒரே அளவில் இருப்பது இரண்டு வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை அதிகரிக்கும், எனது இந்த கத்தரி ஒட்டில் கத்தரியின் தண்டு சுண்டைங்க்காய் மரத்தின் தண்டினை விட பெரியதாக இருந்தது அதனால் 'V' வடிவ வெட்டினை செய்து அதிக வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை ஏற்படுத்த முயன்றேன். இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை இடைநிலை பாடசாலை விஞ்ஞான புத்தகத்தில் உள்லதாக நினைவுள்ளது, இணையத்திலும் இது தொடர்பான விபரங்கள் இருக்கும் என கருதுகிறேன்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
"If we have somebody that comes up and says I can fight you, as a team we want to tell them we are here and you can't take us for granted. We are all here, 11 of us versus you. If you can be as aggressive, that's fine." இந்திய வேகப்பந்து வீச்சாளாரான பிரசித் கிருஸ்னாவின், சாம் கொன்ஸ்டாஸ் பற்றி இரண்டாம் நாள் சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னர் கூறிய வாசகம் இது. இந்தியணி வீரர்கள் ஓய்வறையில் உள்வீட்டு பிரச்சினைகள் உள்ளதாக கருத்து நிலவி வருகின்ற நிலையில் இந்தியணி வீரரின் கூற்று இவ்வாறு அமைந்துள்ள்து, அதில் இந்தியணி வீரர்கள் குழுவாக செயற்படுவதனை இக்கருத்தின் மூலம் உணரலாம், நேற்றைய போட்டி முடிவு நேரத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலிப்பாக இன்றுகாலை சாம் கொன்ஸ்டாஸின் மீது இந்தியணி வீரர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர், முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்கள் ஒரு இளைஞனுடன் தீவிர வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். மைதானத்தில் ஒரு ஒற்றுமையான குழுவாக தோன்றும் விதமாக தமது பொது எதிரியாக ஒருவரை சித்தரித்து அதற்கெதிராக தாம் ஒரு குழுவாக ஒற்றுமையாக செயற்படுவதாக எண்ணுகிறார்கள். இந்தியணியின் பிரச்சினையாக அணியின் அதன் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் கால இடைவெளி பிரச்சினை (tranfermaion period) என கூறும் நிலையில் இந்தியணி ஒரு உள்வீட்டு பிரச்சினைக்குள் சிக்கித்தவிப்பது போல காணப்படுகிறது. அணியில் உள்ள மூத்த வீரர்கள் அணிக்கு பாரமாக உள்ள வேளையில் ரோகித் சர்மா தான் தொடர்ந்து விளையாட உள்ளதாக கோடி காட்டியுள்ளார், செயற்பாடற்ற வீரர்களை கொண்ட இந்தியணியினால் போட்டிகளை வெல்ல முடியாத நிலையில் இந்தியணியின் முகாமைத்துவம் மீது இரசிகர்களின் வெறுப்பு திரும்புகின்றது. பல் மில்லியன் ஆதரவாளர்களை கொண்ட செயற்பாடற்ற மூத்த வீரர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத கோழைகளாக இந்தியணி முகாமைத்துவம் உள்ளது. இதனால் இந்தியணி தனது நாட்டிலேயே தொடரினை இழந்து தற்போது போடர் கவாஸ்கர் தொடரை காப்பாற்ற போராடுகிறது. இதுவரை காலமும் ICC போட்டிகளில் மட்டும் நத்தை போல ஓட்டுக்குள் சுருளும் இந்தியணி தற்போது புதிதாக சிறிய வருமானம் குறைந்த கிரிக்கட் நிர்வாகத்தினை கொண்ட நாடுகளிடமும் மண்டியிட தொடங்கியுள்ளது, இதற்கு தீர்வுதான் என்ன? இந்தியணி இன்னுமொரு பாகிஸ்தான் அணி போல மாறுமா?
-
பதியம்
சுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி உள்ளேன், இது 10 நாள்களுக்கு முன்னர் செய்யப்பட்டது, இந்த இலை அரும்பு நிலையில் 1 CM அளவில் இருந்தது, தற்போது 4-5 CM வரை வளர்ந்துள்ளது, இரவு நேரத்தில் இலேசாக வாடுகிறது (ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆரம்ப நிலையில் இன்னமும் பூரணமாக குணமாகத நிலையில் உள்ளது) 2 அல்லது 3 வாரத்தில் சரியாகிவிடும் என கருதுகிறேன், தற்போது சிட்னியில் கோடைகாலம். கத்தரியினை சுண்டங்காய் மரத்தில் ஒட்டினால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் 3 - 5 வருடங்கள் வரை கத்தரி பலன் தரும். முன்னர் 45 பாகையில் ஒரு வெட்டு கத்தரியிலும் அதே போல் சுண்டைங்காய் மரத்திலும் அதற்கேற்ப வெட்டி இணைத்திருந்ததாக நினைவுள்ளது, தற்போது 'V' வெட்டு மூலம் பொருத்தியுள்ளேன், ஒட்டும் பகுதியினை துணியினால் முன்னர் சுற்றிய நினைவுள்ளது தற்போது காற்று புகாத cling wrap (cling wrap தான்) போன்ற ஒட்டுக்குரிய நாடா பாவித்துள்ளேன். நேரடியான சூரிய வெளிச்சத்தினை இம்முறை தவிர்த்துள்ளேன், மற்றும் முன்னர் பிளாஸ்ரிக் இனால் மூடி கட்டியிருந்தேன் தற்போது வலவன் இணைத்த காணொளிகளில் குறிப்பிடும் கொக்க கோலா போத்தில் பாவித்துள்ளேன்.