Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இந்த அமெரிக்க உலக ஒழுங்கு இன்னமும் முடியவில்லை இந்த அமெரிக்க ஒழுங்கு கால கட்டத்தில் நிகழ்ந்த பனிப்போர் முடிவுற்றுவிட்டது, தற்போது நிகழும் போர் சில தவறான கொள்கை பின்பற்றல்கள், இந்தியாவின் புலிகள் மீதான தடை மாதிரித்தான். அமெரிக்கா தனது மேலாதிக்கத்தினை நிலை நிறுத்த பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்த என மத்திய கிழக்கில் தனது நடவடிக்கையினை ஆரம்பித்து அதன் பின் விளைவுகளை பயங்கரவாதம் என நிறுவி ( அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆக்கிரமிப்பினை உலக பயங்கரவாததிற்கெதிரான போர் என அறிவிக்கும் ஆனால் இரஸ்சியாவின் ஆக்கிரமிப்பினை அதன் உண்மையான பெயரிலேயே அழைக்கும், இதனை இலங்கை போன்ற கிரிமினல் நாடுகள் தமது மக்களை கொல்வதற்கும் இந்த அமெரிக்காவின் பயங்கரவாத உத்தியினை பயன்படுத்தி அமெரிக்க ஆதரவுடன் தேசிய போராட்டங்களை நசுக்குகின்றன). அமெரிக்காவின் உண்மையான எதிரி இரஸ்யா இல்லை ஐரோப்பா அதற்கு காரணம் அமெரிக்க நாணயத்திற்கு சரியான மாற்றீடு யூரோ இது எனது நிலைப்பாடு தவறாக இருக்கலாம். இரஸியாவினை அமெரிக்கா தனது துருப்புசீட்டாக பயன்படுத்துகிறது.
  2. இந்த மாற்றம் வரவேண்டும் என பலரும் விரும்பிகிறார்கள், ஆனால் மதத்தின் பெயரால் சில விசமிகள் வரலாற்றில் செய்த தவறுகளை இன்றும் தொடரும் நிலை காணப்படுகிறது.
  3. ஆடுகளத்தின் ஈரப்பதன் (மைதானத்தின் ஈரப்பதன் அல்ல) சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், முதலாவதாக பந்து விசிய தென்னாபிரிக்க சுழல் பந்து வீச்சாளர்கள் அதனை சரியாக பயன்படுத்தினார்கள், அந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக மேலெழுந்து வந்ததால் மகாராஜ் பந்து வீசும் போது அளவு குரைந்த பந்தினை துல்லியமாக இறுக்கமான பகுதியில் தொடர்ந்து வீசினார் ஆனால் சம்சி மற்றும் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டினை எடுப்பதற்காக அளவு கூடிய பந்தினை வீசினார்கள். இந்தியணியினர் பந்து வீசும் போது மைதான ஈரலிப்பு குறைந்து பந்து சுழல்பந்துவீச்சிற்கு ஒப்பீட்டளவில் குறைவான தாக்கத்தினை செலுத்தினாலும் விக்கெட் எடுப்பதற்காக அளவு கூடிய (தூக்கி போடும்) பந்ட் கினை வீசினார்கல் தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களை இலக்கு வைத்து தாக்க தொடங்கிய போது அளவு குறைந்த் பந்துகளை வீசினாலும் கிளாசன் அதனை அனாயசமாக தூக்கி அடித்தார். இவ்வாறு மேலெழும் ஆடுகளத்தில் துடுப்பாட்டக்காரர்கள் இறங்கி வந்தடிக்கும் தவறினை செய்யமாட்டார்கள், குல்தீபின் பந்து வீச்சில் குவின்டன் இறங்கி வந்தாட முயற்சித்து ஆட்டமிழக்காமல் தப்பிவிட்டார் அதனை ரிசாப் பண்ட் குறிப்பிட்டு காட்டுவார், கிளாசன் அந்த தவறினை செய்யவில்லை. தென்னாபிரிக்காவின் வெற்றி வாய்ப்பினை குறைந்தளவிலேயே எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தென்னாபிரிக்க அணி இவ்வளவு சிறப்பாக ஆடும் என நினைக்கவில்லை, ஆனால் அழுத்தம் நிறைந்த போட்டியினை சமாளிக்கும் நிலைக்கு தென்னாபிரிக்க அணி இல்லை என்பதால் தமது வெற்றியினை இந்தியாவிற்கு தூக்கி கொடுத்துவிட்டார்கள்.
  4. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதை நீங்கள் சீரியசாக எடுத்துவிட்டீர்கள்😁, இலங்கை ஒரு சிறந்த நாடு என்பது இலங்கையில் பிறந்து வளர்ந்த எனக்கு தெரியாதா?
  5. இவர்களை விட முக்கிய காரணியான தென்னாபிரிக்காவினை மறந்துவிட்டார்கள். இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகமான ஆடுகளம் என கூறுகிறார்கள், புதிய பந்து வேகபந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக இருக்கும் என கூறுகிறார்கள் இவ்வாறான பந்து நகர்வுகளை கணித்தாடுவதில் (சீம்) கோலி, ரோகித் சர்மா பெரிதும் கடந்த காலங்களில் சிரமப்படுவதுண்டு ஆரம்பத்திலேயே விக்கெட்டினை பறி கொடுத்துவிடுவதுண்டு, அத்துடன் ஆடுகளம் பந்து நஙு மேலெழுந்து வரும் என்பது இந்தியணிக்கு சிரமம் கொடுக்கலாம் அத்துடன் இந்தியணியின் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சுழல் பந்துவீச்சிற்கு பெரிதும் சாதகம் அற்ற மைதானம என கூறப்படுகிறது, இந்தியணியுடன் ஒப்பிடும் போது பலவீனமான தென்னாபிர்க்க அணியில் ஒப்பீட்டளவில் அதிக சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள அணியாக இருப்பதால் இரு அணியும் ஓரளவு சமனிலையில் இப்போட்டியில் உள்ளதாக கருதுகிறேன், அதிக ஓட்டங்களை (200 இற்கு அதிகமாக) வழ்ங்கும் மைதானமாக இந்த மைதானம் கருதப்படுகிறது, இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றாலும் ஆச்சரியமில்லை. இந்த திரியில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த ஆடுகளம் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமற்றது என குறிப்பிட்டிருந்தேன்.
  6. ஊடக சுதந்திரத்தில் அமெரிக்கா 55 ஆவது இடத்தில் உள்ளதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு கூறுகிறது. https://rsf.org/en/index
  7. இவரை சந்திக்க இந்தியா விரும்புகிறது இவர் சீனாவினை சந்திப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.😁
  8. நான் நினைக்கிறேன் அவர்கள் மிகவும் மோசமான இனவாதிகளினை இலங்கையில் எதிர்கொண்டததால் அவர்களுக்கு இவர்களது இனவாதம் என்பதே தெரியவில்லை போல் இருக்கிறது😁. மேற்கு நாடுகளில் பெரும்பாலும் சில ஊடகங்கள் இந்த வலது சாரிகளை வளர்த்துவிடுவதில் முனைப்பாக இருப்பார்கள்.
  9. ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள பேரரசுகளின் வீழ்ச்சியின் விழைவாக பேரழிவு ஏற்படுவதே உலக வரலாற்றின் பக்கங்களாக இருக்கின்றது உரோம பேரரசின் வீழ்ச்சி ஐரோப்பாவின் இருண்டகாலம் என கூறுகிறார்கள், மொங்கோலிய பேரசின் வீழ்ச்சி, ஒட்டமன் பேரரசின் வீழ்ச்சி என நீண்டு செல்கிறது இதில் இரண்டு உலகப்போர்களை பேரரசின் வீழ்ச்சி உருவாக்கி விட்டது அடுத்து அமெரிக்காவின் வீழ்ச்சி தற்போது 3ஆம் உலகப்போரினை உருவாக்கி உலக அழிவிற்கு வழிவகுக்க உள்ளதாக கருதுகிறேன். பனிப்போர் காலத்தில் உலகில் ஒரு பல சமச்சீர் நிலை காணப்பட்டது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி அமெரிக்காவினை ஏகாதிபத்தியத்தின் அடித்தளமிட அமெரிக்கா பொருளாதாரம், அரசியல் என்பவற்றில் பல தவறான முடிவுகள் எடுத்து தற்போதுள்ள பலவீனமான் அமெரிக்காவினை உருவாக்கி விட்டது. அமெரிக்க உலக ஒழுங்கு ஒரு அணுகுண்டு தாக்குதலுடன் அமெரிக்காவினால் தொடங்கி வைக்கப்பட்டதனை போலவே அதனது முடிவு காலமும் அணுகுண்டு போரிடன் முடிவடையலாம் என கருதுகிறேன். பனிப்போர் காலம் தொடர்ந்திருந்தால் அமெரிக்கா இவ்வாறு பலவீனமாகியிருக்கும் என நான் கருதவில்லை.
  10. ஊழல் முகவர்கள்தான் காரணம், கேரளாவில் ஒரு வைத்தியசாலை கட்டுமானத்தில் (கூலித்தொழிலாளியாக) வேலை செய்திருந்தேன் அந்த கட்ட ஒப்பந்தகாரர் மிக மோசமான தரக்குறைவான கட்டத்தினை கட்டியிருந்தார், ஆனால் அங்கு பணியாற்றிய புதிதாக படிப்பினை முடித்து விட்டு வந்திருந்த பொறியிலாளர் மிகவும் சிரமப்பட்டு கண்காணித்தார் அவரது கண்களூக்கு மண்ணை தூவி தனது காரியத்தினை சாதித்துவிட்டார் அந்த கட்டட ஒப்பந்த காரர்.
  11. இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகமான ஆடுகளம் என கூறுகிறார்கள், புதிய பந்து வேகபந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக இருக்கும் என கூறுகிறார்கள் இவ்வாறான பந்து நகர்வுகளை கணித்தாடுவதில் (சீம்) கோலி, ரோகித் சர்மா பெரிதும் கடந்த காலங்களில் சிரமப்படுவதுண்டு ஆரம்பத்திலேயே விக்கெட்டினை பறி கொடுத்துவிடுவதுண்டு, அத்துடன் ஆடுகளம் பந்து நஙு மேலெழுந்து வரும் என்பது இந்தியணிக்கு சிரமம் கொடுக்கலாம் அத்துடன் இந்தியணியின் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சுழல் பந்துவீச்சிற்கு பெரிதும் சாதகம் அற்ற மைதானம என கூறப்படுகிறது, இந்தியணியுடன் ஒப்பிடும் போது பலவீனமான தென்னாபிர்க்க அணியில் ஒப்பீட்டளவில் அதிக சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள அணியாக இருப்பதால் இரு அணியும் ஓரளவு சமனிலையில் இப்போட்டியில் உள்ளதாக கருதுகிறேன், அதிக ஓட்டங்களை (200 இற்கு அதிகமாக) வழ்ங்கும் மைதானமாக இந்த மைதானம் கருதப்படுகிறது, இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றாலும் ஆச்சரியமில்லை.
  12. இந்த் விடயத்தில் நன்மையுமுண்டு தீமையுமுண்டு, ஆனால் பெரும்பாலும் இந்த சிறார்கள் உளவியலாக மோசமாக பாதிக்கப்படுவாகள், எந்த கவலையுமில்லாமல் சந்தோசமாக விளையாடி திரிந்த எமது காலம் ஒரு பொற்காலம் என கருதுகிறேன்.
  13. இது உணமை, ஆனால் இனி யாராலும் அமெரிக்காவினை காப்பாற்ற முடியாது, ஏனென்றால் அவர்களை வேறு யாரும் அழிப்பதில்லை, அவர்களது எதிரிகள் வேறு யாருமல்ல அவர்களேதான்.
  14. 90 களில் புல்மோட்டை கடற்பரப்பில் வெளிநாட்டு கப்பல்கள் அங்குள்ள வளங்களை எடுப்பதற்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்கியதாக கேள்விப்பட்டுள்ளேன், தற்போது கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை உதவுகின்ற நிலை நல்லவிடயம், ஆனால் இந்த தமிழக மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள் இவர்களது முதலாளிகள் அரசியல்வாதிகள் என கூறுகிறார்கள். முதலாளிகளுக்கு பணத்தினை தவிர எந்த கொள்கையும் இல்லை ஆனால் மீனவர்களின் நிலை அப்படி இல்லை, ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த கடல் வள அழிப்பிற்கு துணை போகிறார்கள், கடல் வளம் அழிந்து மீன் வளம் குறைந்து நட்டம் ஏற்பட்டால் முதலாளிகள் வேறு தொழில் தொடங்கிவிடுவார்கள் ஆனால் அவர்களிற்கு உடந்தையாக உள்ள மீனவர்களின் நிலைதான் மோசமாகும். உலகின் பலவீனமானவர்களின் வழங்கள் சூறையாடப்படுவதொன்றும் புதில்லை கடல் வளம் அதிகமுள்ள சோமாலியாவில் உலக நாடுகள் அதன் வளங்களை சூறையாட காரணமாக 1991 இல் அதன் அரசு உடைவு காரணமாக இருந்தது, அதனை படுத்தி பலர் அவர்களது வழங்களை சுரண்டியதால் தோற்ற்ம பெற்றதே சோமாலியா கடற்கொள்ளையர் ஆனால் உலகம் அவர்களுக்கு இழைத்த அநீதியினை மறிஅத்து அவர்களை கடற்கொள்ளையர்களாகப்பார்க்கின்றது. இன்று எம்து மக்களின் நிலமைக்கு காரணமானவர்களே இந்த கடற்படையினரும்தான், இதில் இலங்கை கடற்படையினர் தவிர்த்து இரண்டு நாட்டு மீனவர்களும் பேசி தீர்வுகாண்பதுதான் பொருத்தம், ஆனால் இரண்டு தரப்பிலும் சிந்தித்து செயற்பட யாரும் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம். இந்த ரோலர்களின் வருகையாலே மீன் வளம் அருகி சாதாரண மீன்வர்களால் ஆளம் குறைந்த பகுதிகளில் தமது வளங்களை கொண்டு தொழில் செய்ய முடியாமலே இந்த முதலாளிகளுக்கு வேலை செய்கிறார்கள், அவர்களுக்கும் குடும்பம் உள்ளது அவர்கள் வேலைக்கு சென்றால்தான் அவர்கள் குடும்பமும் வாழும், இரண்டு தரப்பும் பேசி தீர்வு காணவேண்டிய விடயம். எமது பிரச்சினையினை நாம்தான் தீர்க்க முடியும்.
  15. உங்கள் கருத்திற்கு நன்றி, இந்த காணொளியில் உடல் மொழி எனும் கருத்தாய்வினை இங்கு இணைத்தபோது யாராவது கிளி யோசியம் பற்றி கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்😁. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் உலகில் போர் பதற்றம் உள்நாட்டு பிரச்சினைகள் குறைவடையும் என எதிர்பார்க்க அதனை விட மோசமாக சூழ்நிலை உருவாகி இப்போது அணுவாயுத போர் ஆரம்பிக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள், இதனைவிட பனிப்போர்காலத்தில் ஓரளவு உலகம் பாதுகாப்பாக இருந்தது.
  16. தவறுகளை ஏற்று அதனை எதிர்காலத்தில் தவிர்க்க முயற்சி எடுக்கும் மன நிலை கூட இலங்கையினாலும் முடியவில்லை, அந்த மனநிலைக்கு மக்களும் தயாராகவில்லை ஏனென்றால் அவர்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது நேரடி பங்காளர்களாகவும் அதனை வரவேற்ற நிலையில் இருந்தவர்களுமே பெரும்பான்மையானவர்களாக இருந்துள்ளாகள். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இது நிகழ்கிறது பச்சிளம் குழந்தைக்லள கொதிக்கும் தாரில் போடுவதும் அடுப்பில்லிருந்த சூடான தோசை கல்லில் போட்ட பெளத்த தர்மத்தினை பின்வற்றுபவகளாக அதே நேரம் எங்கோ காசாவில் நிகழும் படுகொலைகளுக்காக கவலைப்படும் மிக மனித நேய சமூகமாக பாசாங்க் காட்டும் அதே வேளை மிகவும் மோசமான மிருகத்தனமாக தனது பிராந்தியத்தில் ஒரு பிரிவு மக்களின் மேல் நடந்து கொண்ட மிருகங்கள் வெளிநாடுகளில் நடக்கும் மனித உரிமைகளுக்காக முக்ட்லை கண்ணீர் வடிக்கும் போலி மனிதர்கள் நிறைந்த தேசமாக இந்த காட்டுமிராண்டி தேசம் உள்ளது. இலங்கையினை பொறுத்தவரை இவை சாதாரண நிகழ்வுகள் எனும் மன நிலையில் இருக்கும் இவர்களால் எவ்வாறு காசாவிற்காகவும் உக்கிரேனிற்காகவும் தாய்வானிற்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்க முடிகிறது, முதலில் மனிதர்களாக நடிப்பதையாவது குறைந்த பட்சம் நிறுத்தவேண்டும்.
  17. நியாயமான கேள்வி, இதே கேள்வி எனது மனதிலும் எழுந்தது ஆனால் பினர் அந்த நிறுவனம் அமைக்கும் நில அளவு 46 ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆகையால் இது மிக பெரிய நிறுவனம் அதனால் அதன் அடிப்படை கட்டுமான செலவும் அதிகமாக இருக்கலாம், முன்னர் கூறிய சிறிய நிறுவனத்தின் வருவாய் 20 மில்லியன், அடிப்படை கட்டுமான நில அளவின்படி பார்த்தால், இந்த நில அளவில் இந்த பெரிய நிறுவனம் அமைக்க இந்திய பணப்பெறுமதியில் 60 கோடி தொடக்கம் 120 கோடி வரை செலவாகலாம், ஆனால் மிகுதிப்பணம் என்னவாகிறது என்பது நீங்கள் கூறுவது போல ஒரு சுவாரசியமான கேள்வியாக இருக்கிறது, இந்த விடயத்தில் எதையும் நாங்களாக ஊகித்து கருத்து வைப்பது சரியாக இருக்காது . (அத்துடன் எனக்கு இந்த விடயத்தில் பெரிதாக எதுவும் தெரியாது அத்துடன் இந்த கணிப்பு முன்பு செய்யப்பட்ட ஒரு சிறிய நிறுவனத்தின் கணிப்பினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது, எனது கருத்து தவறாக இருக்கலாம்). மன்னிக்கவும் வார இறுதி வேலை இருந்ததால் நேரமின்ன்மையால் பதிலிட முடியவில்லை, ஆய்வு (research & Development), சந்தைப்படுத்தல் (Marketing) என்பவற்றினால் குறிப்பிடப்பட்டுள்ளது, உங்களுக்கு இதில் முன்னனுபவம் அல்லது துறைசார் புலமை உள்ளது என புரிகிறது, உங்கள் அனுபங்களை பகிர்ந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்வு நடைபெற்று நீண்ட காலமாகிவிட்டது, அதனுடைய நுணுக்கங்கள் நினைவில்லை, ஆனால் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதிற்கான செலவு காலப்போக்கில் அதிகரிக்கும் என்பதாகவும், உறபத்தி செலவு குறைப்பு, புதிய சந்தை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு அலகு உற்பத்திக்கான செலவு அதிகரிப்பு தொடர்பான எதிர்வுகூறல்கள் செய்யப்பட்டதாக நினைவுள்ளது.
  18. கிட்டதட்ட 6 மில்லியன் பெறுமதியில் ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்)
  19. நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. இது ஒரு நகைசுவை கேள்வி இல்லைதானே, நான் நினைக்கிறேன் உங்களுக்கு இது தொடர்பான முன்னனுபவம் உள்ளதென, இருந்தாலும் கூற்கிறேன், அது ஒரு நிசெ சந்தையைக்கொண்டது முதலில் மொத்த சந்தை, அதன் வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டு அதிலந்த பொருளுக்கான சந்தை அளவு தீர்மானிக்கப்பட்டட்டது, அதற்கு சந்தை அடிபடையான உற்பத்தி எதிர்வு கூறல் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் உற்பத்திக்கான அடிப்படை கட்டுமானம், இயந்திரம், ஒரு ஆண்டிற்கான நடைமுறைச்செலவு கணிக்கப்பட்டது, மேலதிகமாக ஆய்வு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான செலவுகள் என்பவற்றினை கணித்தார்கள், சுவாரசியமான விடயம் ஒரு முடிவுப்பொர்ளின் உற்பத்திச்செலவு விற்பனை விலையில் 1:2 என்ற விகிதத்தில் இருந்தது, ஆனால் நிறுவனத்தினை மிக சிறப்பாக நடத்தினால் 20% இலாபமும் சராசரியாக நடத்தினால் 10% இலாபமும் நிறுவனத்திற்கு கிடைக்கும் வரிவிதிப்புகளுக்கு முன்ந்தாக.
  20. எனக்கு உண்மையாகவே பினாமி என எழுத சங்கடமாகவே இருந்த்து, ஆனால் நடைமுறையில் சாத்தியப்பாடான விடயத்தினை கூற முயன்றேன், ஆனால் அதனை தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்க எழுதவில்லை. இந்த குளிர்பான பொருள் உற்பத்தி தொடர்பாக புதிய பொருளை அறிமுகப்படுத்தும் ஆய்வுக்குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளது, இரண்டு பெரிய நிறுவங்கள் 1. கொக்க கோலா 2. புருக்கர்ஸ் (பெப்சி) என நினைவுள்ளது.
  21. பொதுவாக தமது பணத்தினை யாரும் முதலிடுவதில்லை, வங்கியில் கடன் பெற்றால் அதன் கடன் வட்டி வரி விலக்கழிக்கப்படும் என்பதால் தமது சொந்த பணத்தினை முதலிடுவது அவர்களுக்கு நட்டம் ஏற்படும். எப்பவுமே OPM (Other People Money) தெரிவு. வங்கிக்கடனுக்கு சொத்துக்களை பிணை வைத்தாலும் வியாபாரதிட்ட்டம் சிறப்பாக இல்லாவிட்டால் வங்கி பணம் கொடுக்காது அதனைவிட தனியார் முதலீட்டாளர்களை பெறுவது கல்லில் நார் உரிப்பது போல, பிரபலம் என்பதற்காக யாரும் தமது காசை எடுத்து சும்மா கொடுத்துவிடுவார்களா? 1400 கோடியில் ஆரம்ப கட்டுமானம், இயந்திரங்கள், ஒரு வருட நடை முறை செலவு என்பன கிட்டதட்ட 1200 கோடிகளை எட்டும் மிகுதிப்பணமாய்வு மற்றும் சந்தைப்படுத்த்லுக்கு செலவாகும்.
  22. 1400 கோடியினை முரளி கிரிக்கெட்டில் உழைத்திருக்கமுடியாது, பெரும்பாலான இவரது விளையாட்டு காலகட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடியவர் இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் விளம்பர பணம் என்பவற்றில் இவர் இவ்வளவு பணத்தினை பெற்றிருக்கமுடியாது, அத்துடன் இவர் ஐ பி எல் போன்ற போட்டிகளில் மிக குறுகிய காலங்கள் மட்டுமே விளையாடி இருந்தார், நான் நினைக்கிறேன் இவர் யாராவது உழல் அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
  23. ஒரு நாட்டின் தீவிரவாதத்தினை கனடா கண்டித்துள்ளது வரவேற்கதக்கது, இந்திய அரசும் இலங்கை அரசு போல முட்டாள்தனமாகவாகா நடக்கவேண்டும்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.