Everything posted by vasee
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் எனது உறவினர்களின் அனுபவத்தினையே இங்கு கருத்தாக பதிவிட்டுள்ளேன் என. இல்லை ஒரே குடும்ப உறுபினர்களுக்குள் மாற்றமுடியாது. எனவே கேள்விப்பட்டேன் அதனாலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருந்தது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனது கருத்துகளால் இறந்தவர்களுக்கு இழுக்கு ஏற்படக்கூடாது என விரும்புவதுபோலவே மற்றவர்கள் கருத்துகளாலும் அவ்வாறான இழுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சில கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்துள்ளேன்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நில உச்ச வரம்பாக வெறும் 50 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டதாக நினைவுள்ளது, தென்பகுதியில் உள்ள தமிழர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை வட கிழக்கிலும் அந்த சட்டம் அமுலில் இருந்தது, எனது உறவினர் ஒருவர் பளையில் தென்னந்தோப்பு வைத்திருந்தார் அந்த சட்டத்திலிருந்து தப்ப சட்டத்தரணியினை நாடினார், சட்டத்தரணி அந்த குறிப்பிட்ட நில உச்சவரம்பிற்கு மேலான பகுதியினை தானே சுருட்டிவிட்டார், இந்த இருவரும் எனது உறவினர்கள். அத்துடன் நான் அறிந்தவரை அனைத்து நிலங்களும் விளைச்சலில் உள்ள நிலங்களாக இருந்தது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உங்கள் கருத்திற்கும் நன்றி, ஆனால் நீங்கள் நினைத்ததுபோல் நான் இல்லை, ஆனால் எனது கருத்துகளை அனுபவத்தினடிப்படையிலும் (உதாரணமாக curve fitting தொடர்பான கருத்து), அனுபவப்பட்டவர்களின் கருத்தினூடாகவும் (உதாரணமாக நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான கருத்து) மட்டுமே கருத்து கூறுவதுண்டு. அனைத்து திட்டங்களும் வெளியே நல்ல பெயர்களிலேயே அறிமுகப்படுதப்படுகிறது உதாரணமாக மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சிங்கள குடியேற்றம் போல், இதனை நீங்கள் இணையத்தில் தேடினால் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். எது சரி, பிழை என்பது ஒவ்வொருவரது சுய முடிவில் தாங்கியுள்ளது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஜஸ்ரின், ஐலன்ட், கப்பித்தான் உங்கள் கருத்திற்கு நன்றி.
-
இலங்கைக்குள் நுழையும் இந்திய வங்கிகளும் ரூபாக்களும்
மிக சிறப்பாக கருத்து தெரிவித்துள்ளார், ஆனால் அது எந்த அளவில் சாதாரண மக்களால் உள்வாங்கப்படுகிறது எனும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது, இந்த காணொளியில் இலங்கையின் மோசமான பணவீக்கம், மிக குறுகிய காலத்தில் கிட்ட தட்ட இரட்டிப்பாகும் வரி என்பவை சாதாரண மக்கள் எதிர்வரும் காலத்தில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட போகிறார்கள் என கோடிட்டு காட்டுகிறது. இலங்கையின் எதிர்காலம் உவப்பானதாக இருக்க போவதில்லை என்பதனை மக்கள் உணரவில்லையெனவே கருதுகிறேன். இந்திய வங்கி வருகைகள் தற்போது எந்த தாக்கத்தினையும் (பாதகமான) ஏற்படுத்தாது என நம்புகிறேன். இலங்கையின் பொருளாதாரம் வெறும் 90 பில்லியன் பொருளாதாரம், இந்திய வங்கிகள் இலங்கை பண கொள்கைகளில் (Monetary policy) விரும்பினால் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம், அத்துடன் திடீர் பொருளாதார பிரளயத்தினையும் விரும்பினால் உருவாகலாம், சிறிய நடுத்தர முதலீடுகளை சிதைக்கலாம், நாணய மாற்று வீதத்தில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக பொருளாதார ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம், இவை அனைத்தும் எதிர்மறையான விடயங்கள் ஆனாலும் வழமையான பல சாதகங்கள் உண்டு என்பதனை ஏற்க வேண்டும்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Curve fitting என்பது தரவு புள்ளிகளை எழுந்தமானமாக நாம் விரும்பியவாறு இணைப்பதன் மூலம் நாம் விரும்பும் காட்சியினை உருவாக்கலாம். ஆனால் உண்மையாக அவை இருக்கமாட்டாது, ஆனால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என நினைத்து எம்மை நாமே ஏமாற்றுவதில் முடிவடையும். இலங்கையில் தமிழ் மக்கள் செழிபாக இருந்த போது அவர்களை அழிக்கும் எண்ணத்துடன் பொருளாதார ரீதியாக நிலசுவாந்தர்களாக இருந்த தமிழ் மக்களை குறிவைத்து 1972 இல் நில உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டு குறித்த அளவிற்கு அதிகமான நிலத்தினை அரசு கைப்பற்றி அதனை சிங்கள மக்களிடம் பகிர்ந்தழிக்கப்பட்டது. பெருந்தோட்டங்கள் பற்றிய அறிவற்ற சிங்களவர்கள் சோம்பேறித்தனமான போக்குடன் செயற்பட்டு உற்பத்தி வீழ்ச்சியினை ஏற்படுத்தினார்கள் ( இவர்கள் சாரம் சேட்டிற்கு மேல் கோட்டினை அணிந்து கையில் குடையுடன் வலம் வந்தார்களாம்). அத்துடன் பெருந்தோட்டங்கள் பெருந்தோட்டமாகவே பராமரித்தாலேயே இலாபம் ஈட்ட முடியும், இவ்வாறுதான் சிங்கள அரசுகள் நாட்டிற்கு பேரழிவினை ஏற்படுத்தினார்கள், செல்வந்த வணிகர்களான தமிழ் வணிகங்களை இலக்கு வைத்து நடாத்திய இனக்கலவரங்கள் அவர்கள் விரும்பிய அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தினாலும் நீண்ட காலத்தில் தற்போது இலங்கை ஆபிரிக்க நாடுகளின் நிலமையினை நோக்கி செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது. தமிழர்களின் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் பறித்து அவர்களை ஏதிலிகளாக்கியவர்கள், இன்று உலகத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு, அவர்களே சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு எப்படி இந்த சின்ன நாட்டை இரண்டாக பிரிப்பது என அப்பாவியாக கேட்பார்கள், தமிழ் மக்கள் மீண்டும் பழைய நிலை வர விரும்பாத இந்த சிங்கள அரசுகளிற்கு உடந்தையாக இருந்து தமது சுயநலனுக்காக தமது இன மக்களுக்கே தீமை செய்யும் நபர்களும் அதனை நியாயப்படுத்துவர்களும் தமிழ் இனத்தில் மட்டுமே இருக்கமுடியுமா என எண்ணத்தோன்றுகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த பங்கினை வாங்கியுள்ளீர்களா?
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவுள்ள முன்னாள் நியுசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மக்கலத்தின் ஆடுமுறை உத்தி, வழமையான 5 தின போட்டிகளில் ஆடும் பாதுகாப்பு முறையுடன் கூடிய 5 நாளிற்குரிய நேர்த்தியான ஆட்டம் போலில்லாமல் வழமைக்குமாறான ஆட்டமுறைமை, இது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது குறிப்பாக கை மாற்றி ஆடுவது, நிலை மாற்றி ஆடுவது என. இதே போலவே மக்கலம் ஆக்கிரோசமாக இந்த மைதானத்திலே 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார் என கருதுகிறேன், இவரது பாணியினை இங்கிலாந்து அணிக்கு கடத்தியுள்ளார், இந்த வெற்றிகளின் பின்னே சத்தமின்றி இருந்த வீரராக மககலத்தினை கருதுகிறேன். https://en.wikipedia.org/wiki/Bazball
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சென்னை விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் அல்லது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண மக்கள் என்ற அடிப்படை அறிவில்லாத செயல்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
நீங்கள் தேவையில்லாமல் குழம்புகிறீர்கள். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவம், நியூசிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லும் இவர் மாறுபட்ட சாலை விதிகளால் நகரத்தில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தும் நிலையினை தவிர்த்திருப்பார், அதற்கு மாறுபட்ட வீதி ஒழுங்கினை குற்றம் சாட்டுவார் அதாவது அமெரிக்காவில் வலது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும் நியுசிலாந்தில் இடது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும், அதற்கு அவருடன் கூட இருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாகனம் ஓட்டலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மத்திய பகுதியில் இருக்கவேண்டும் என்பார். இந்த தத்துவம் போலவே நாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம் அவர்கள் போல் பேசலாம் ஆனால் அடிப்படை மாறாது.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
2002 இல் அமெரிக்க ஆதரவுடன் தமது படையினரை இலங்கை வலுப்படுத்தியுள்ளது. https://en.wikipedia.org/wiki/Sri_Lanka–United_States_relations அமெரிகா இலங்கை படையினருக்கு கொத்துகுண்டுகளை பயன்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவித்ததாக மேலே உள்ள இணைப்பில் கூறப்படுகிறது, ஆனால் இலங்கை அதனை முன்னரே பயன்படுத்தியிருந்தது. கவுதிகளினுடன் நேரடியாக போராட வேண்டியதேவை இலங்கை கடற்படைக்கு இல்லை, கவுதிகள் புலிகள் போல குறைந்த வளங்கலை மட்டும் வைத்து கொண்டே நேரடியாக மோதும் அமைப்பு அல்ல, அவர்கள் ஏவுகணைத்தாக்குதல் செய்வதுதான் கவுதிகளின் போர் முறை, இலங்கை கடற்படையிடம் ஏவுகணை எதிர்ப்பு தொழில்னுட்பம் இல்லை என்பதால் அந்த எல்லையினை விட்டு வெளியே ( இலங்கையில் துறைமுகத்தில் கட்டி வைப்பதை போல ஒரு நிலைதான்) பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையே உள்ள ஒப்பந்தினை இலங்கை அரசு மதிப்பதாக தெரிகிறது அதனாலேயெ இலங்கை தனது கடற்படையினையும் அங்கு அனுப்புகிறது (இலங்கைகு கடற்படை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத போதும்), ஒரு காலத்தில் இலங்கைக்கு உதவிய அமெரிக்க, மேற்கு கூட்டணிக்கு தற்போது இலங்கை தனது நன்றி கடனை செலுத்துகிறது. அதுவும் ஒரு அரசியல்தான், இலங்கையில் தற்போதுள்ள அரச தலைவர் வலதுசாரி பின்புலம் கொண்டவர் (யு என் பி) அதனால் அமெரிக்க, மேற்கு மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நிலைதான் உண்மையான நிலைப்பாடு.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள், அந்த பதிவும் இன்னுமொரு யாழ்கள முக்கிய பதிவாக வருவதற்கு வாய்ப்புள்ளது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்த றோ அதிகாரியினை தேன் பொறி (Honey Trap) எனும்முறையில் தம்பக்கம் அமெரிக்கா ஈர்த்திருந்ததாக கூறப்பட்டது, இந்திய இலங்கை ஒப்பந்தம் நிக்ழ்ந்த 3ம்ணித்தியாலத்திற்குள் அமெரிக்க அரசு அதனை வரவேற்றதன் பிண்ணனியிலேயே அவரினை இந்தியா அடையாளம் கண்டு கொண்டதாக பத்திரிகைகளில் வாசித்தாக நினைக்கிறேன். அவ்வாறாயின் இலஙகை அரசிற்கும் இந்த ஒப்பந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது, இலங்கை அரசு இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு ஆவணம் (Documentary) ஒன்றினை வெளியிட்டிருந்தது அதன் தலைப்பு அக்கோடிங் அன்ட் வித்டோரவல் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை, ஒப்பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நிகழும் எனும் தொனியிலான ஒரு ஆவணம்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
இறுதி யுத்த காலத்தில் இலங்கை கடற்படை, இலங்கை விமான படை ஆதரவுடன் சர்வதேச கடற்பரப்பில் புலிகளின் கப்பல்களை தாக்கி அழித்தது, அதனை இலங்கை கடற்படை தாம் ஒரு நீலக்கடல் கடற்படை என்பதாக குறிப்பிட்டது (blue water navy). மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல் தொழினுட்பம் கொண்ட எதிரியுடன் போரிட்ட இலங்கை கடற்படை, மத்திய கிழக்கு நடவடிக்கையில் ஒரு சிறு துரும்பையும் எடுக்காது, இது ஒரு இலங்கை அரசின் அரசியல் சதுரங்க நடவடிக்கை போலவே தென்படுகிறது.
-
துவாரகா உரையாற்றியதாக...
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
www.treasurydirect.gov/instit/annceresult/press/preanre/2023/R_20231212_2.pdf மேலே உள்ள கோப்பில் இந்த மாதம் 12 ஆம் திகதி வெளியான 15 மார்கழி 2023 இற்கான 30 வருட பணமுறி (2053) விற்பனை ஒப்பந்த விபரம் உள்ளது. 4.75% ஆண்டு வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளுக்கான கடன் பத்திர விற்பனை இடம்பெற்றது, ஏறத்தாழ 51 பில்லியன் கடன் பெறும் பத்திரம் வெறும் ஏறத்தாழ 21 பில்லியன் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் முதலீட்டாளர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்களா? 2024 இல் அமெரிக்க பணவீக்கம் 2.4% விகிதமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவ்வாறாயின் வட்டி விகிதம் குறைவடையும் அத்துடன் ஒப்பிடும் போது தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு 4.75% வட்டி வழங்கும் பணமுறி ஒரு சிறந்த முதலீடாகும், அவ்வாறிருக்க ஏன் முதலீட்டாளர்கள் ஏன் பணமுறியில் முதலிட தயக்கம் காட்டுகிறார்கள்? இதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் அமெரிக்காவினது நம்பத்தன்மை முதலீட்டாளர்களின் மட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த பணமுறியினை அதிக வட்டி வழங்குவதன் மூலம் விற்பனை செய்யலாம் (இரஸ்யா செய்ததனை போல) அல்லது பணத்தினை அச்சிடலாம் இந்த இரு நடவடிக்கையும் பணவீக்கத்தில் இரு வேறு விதமான தாக்கத்தினை செய்யலாம். குறுங்கால பணமுறியினை அமெரிக்கா வெளியிட முன்வருமாயின் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டக்கூடும், ஆனால் தற்போதய அமெரிக்க பொருளாதாரம் தொடர்பாக முதலீட்டாளர்களின் ஐயப்பாட்டின் வெளிப்பாடக அது அமையும். ஒரு காலத்தில் உலகின் காவலாளி எனும் நிலையில் இருந்து கீழிறங்கிவிட்டதற்கான உதாரணமாகவே தொடர்ந்து செல்லும் உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய போர் உணர்த்துகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா மட்டுமல்ல உலக பொருளாதாரமும் உறுதியாக இல்லை, ஆனால் அமெரிக்க மேலாதிக்க நிலையினை பேண அது முதலில் பொருளாதார ரீதியில் தன்னை தற்காத்து கொள்ள வேண்டு, முன்னர் அமெரிக்க கருவூல காரியதரிசியின் செவ்வியினை இஸ்ரேல் அழிவு யுத்த திரியில் இணைத்திருந்தேன் அதில் அவர் கூறியிருந்தார் அமெரிக்க பொருளாதாரத்திற்கு உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய யுத்தத்தினை நடத்துவதற்கான பலம் உள்ளதாக கூறியிருந்தார், அந்த கூற்று எந்தளவிற்கு உண்மையாகும் என்பதனை காலம் உணர்த்தும்.- துவாரகா உரையாற்றியதாக...
- துவாரகா உரையாற்றியதாக...
- துவாரகா உரையாற்றியதாக...
- துவாரகா உரையாற்றியதாக...
- துவாரகா உரையாற்றியதாக...
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
டெலோ இயக்கத்திலிருந்து இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட போராளி (செட்டி) ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டதாக அவரை இலங்கை தொலைக்காட்சியில் நேர்முகம் கண்டிருந்தார்கள் அதில் அமிருக்கும் போராளி குழுக்களுக்கும் தொடர்புள்ளது என்பதனை நிறுவவே இலங்கையரசு முயன்றது. ஐரிஸ் போராளி அமைப்பு கொண்டிருந்த இராணுவம் அமைப்பு தனிப்பட இயங்கியிருக்க அரசியல் அமைப்பு எந்த வித தொடர்புமில்லாமல் இயங்கியதனை போல ஒரு நிலை உருவாகாமல் அமிரின் அரசியல் கட்சியினையும் பயங்கரவாத தடைசட்டத்தினூடே எதிர்கொள்ளும் ஒரு முயற்சி என கருதவைக்கிறது. அல்லது தனது அரசியல் எதிரிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியா என தெரியவில்லை ( சிறிமாவின் குடியுருமையினை பறித்தது போல ஒரு செயல்).- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தமிழ்சிறி பல நல்ல கருத்து படங்களை இணைத்துள்ளீர்கள், நன்றி! ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், இதனை புரிந்து கொண்டால் சண்டையிடும் தரப்புகளுக்கு தேவையில்லா இழப்புகளும் இல்லை வலிகளும் இல்லை.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இது வரை 3% Risk பயன்படுத்தி வந்தேன் கடந்த வார இறுதியில் 50% Risk இனால் எனது கணக்கின் இலாபத்தினை இழந்ததுடன், எனது கணக்கில் 22% வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. - ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.