நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,071
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. ஈழப்பிரியனுக்கு இதயம் கனிந்த... இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப.சோமசுந்தரம் அண்ணா
 3. வெளுத்த ஆளுக்கு கறுத்த தலைப்பாகை, அது என்ன? தீக் குச்சி
 4. ஒரு சிற்பி சும்மா கிடந்த கல்லைச் செதுக்குகிறான் . உளி விழ விழ கல்லும் சிற்பம் ஆகிறது முன்பு கல்லு என்றுசொன்னவர்கள் இப்பொது சிற்பம் என்று சொல்வார்கள் கல்லின் தோல்வி ( சிற்பியால் .) உளி விழுவது வலி என நினைத்தால் கல்லும் சிற்பம் ஆகாது .
 5. இரவல் பானைகள் கவனமாய்த்தானே இருக்கவேண்டும் இல்லாவிடடால் உடைந்துவிடும்
 6. இப்ப கொலிடே சீசன் கண்டியளோ ...ரூபாயில் போடடால். வெளிநாட்டுக்கு காரர் வந்து ....டொலர் யூரோ பவுன்ஸ் என்று காசு மாலை விழும் ...வித்தியாசமாய் செய்வதில் வெளிநாட்டுக்காரரை மிஞ்ச ஏலாது ...
 7. முதலில் கரித்துண்டை ஆர்வ கோளினால் பற்றிக் கொள்வார்கள் சில காலம் செல்ல அது உங்களை பற்றிக் கொள்ளும் விடாது ..பின் விளைவுகள் ஏராளம். அது ஓர் வகை போதை .
 8. ஆறுவயது சிறுவனை எண்ணிக் கவலையாக உள்ளது . உறவினர் அன்பும் ஆதரவும் கொடுத்து வளர்ப்பார்களென எண்ணுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.
 9. அவர்கள் வாழட்டும் கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள் மூன்று ஆண் குழந்தைகள். புலப்பெயர்ந்து ஜேர்மனி சென்ற இவர்கள் படட கஷ்டங்கள் ஏராளம் குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன் இரண்டு வேலை செய்து பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார். உறவினர்கள் லண்டனில் வாழ்ந்ததால் இவர்களும் அங்கு சென்று குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள். இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை. மொழிமாற்றம் என குழந்தைகள் கஷ்ட படவே ஒரு வாத்தியாரை ஓழுங்கு செய்து ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய ஆன மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை . பிள்ளை கள் வளர தேவைகள் அதிகரிக்க வே வீட்டு வேலையுடன் சிறார்களை பராமரிக்கும் பகுதி நேர முயற்சியிலும் மனைவி ஈடு பட்டு வாழ்க்கைச் செலவைப் பகிர்ந்து கொண்டாள் குழந்தைகளும் கல் வியில்சிறந்து வளர்ந்து மூத்தவன் இன்ஜினியராகவும். இரண்டாவது பையன் சத்திர சிகிச்சை உதவியாளராகவும் மூன்றாவது கட்டிடநிர்மாணிப்பாளர்களாவும் ஆயினர். காலப்போக்கில் ..பருவத்துக்குரிய ஆசை கள் வரவே மூத்தவன் ஒரு இந்துப்பெண்ணை காதலித்தார் . இப்போது அவர்கள் வீட்டில் புயல் வீசத்தொடங்கியது ...தாயின் வளர்ப்பு என தந்தையும் தாயும் மோதிக் கொண்டு ஆளை ஆள் குறை கூறிக் கொண்டு இருந்தனர். பாக்கிய ராஜுக்கு கால ஓட்ட்த்தின் வேகம் நடைமுறை விளங்க வில்லை...மனைவி எவ்வளவோ எடுத்துசொல்லிப் பார்த்தார். மக்கள் மூவரும் தாயின் மீது மிகவும் நேசமும் கரிசனையும் உள்ளவர்கள். பிள்ளைகள் நண்பர்களை அழை த்து வந்தால் அவர்களுக்கு சலிக்காது உபசரிப்பார். கணவனின் போக்கு மாறத்தொடங்கியது. குடியில் ஆரம்பித்து ...இவர்களை ப்பிரியும் நிலை ஆகியது ...மனைவியோ யாரைக் க ட்டினாலும் என் பிள்ளைகள் சந்தோஷமாய் வாழட்டும் என்னும் நிலையில் இருந்தாள். தந்தை யோ ..குல ம் கோத்திரம் சாதி சம்பிரதாயம் என் இன்னும் மாறாத மனம் உள்ளவராயிருந்தார். ஒரு கோடை விடுமுறையில் கணவன் தாயகம் சென்று ..தனது பழைய காணிகளை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். .. மூத்தவனோ தாயுடனும் வருங்கால மனைவியின் பெற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்து ...திருமண நாள் குறித்து விட்டு அதற்கான ஆயத்தங்களை செய்து தாயின் ஒன்றுவிட்ட் அண்ணரின் துணையுடன் திருமணம் நடக்க இருக்கிறது .. திருமண நாளுக்கு சற்று முன்பாக தந்தைக்கு அறிவிக்க இருக்கிறார்கள். திருமணம் சுபமே நடக்க நீங்களும் நாங்களும் வாழ்த்துவோம். தந்தை வருவாரா ...கலகம் நடக்குமா பொறுத்து இருந்து பார்க்கலாம் . வருங்கால இளையோரின் வாழ்வு அவர்கள் முடிவுப்படியே நடக்கும் நாம் வெறும் பார்வையாளர் ...எங்கள் காலத்தில் நடைபெற்றது போல ஊர் கூட்டி ...உறவுகள் கூடி பெற்ற்வரின் எண்ணப்படி நடக்கும் என எண்ண முடியாது .கால ஒடடத்துக்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டும். இது உங்கள் வீட்டின் கதையாகவும் இருக்கலாம். .இது என் நண்பியின் வீட்டுக் கதை ...உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...?