யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,066
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி
 2. வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் நன்றி
 3. இயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வா ரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. அன்று சனிக்கிழமை விடுமுறை என்று காலையில் ஆறுதலாக பரபரப பில்லாமல் .. எழுந்தாள் மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து வெளியே இயற்கையை ரசித்தவாறு பருகிக் கொண்டு இருந்தார்கள். வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன் மாலைநேரங்களில் கவனித்து வளர்த்த பூங்கன்றுகள். வெளிநாடுவந்து இருபத்தைந்துவருடங்கள் ...மேனன் ஐந்து வயதும் மிதுனன் மூன்று வயதுமாக இருந்தார்கள் , புலம் பெயர்ந்து கனடாவுக்கு வந்த போது ... ஆரம்பம் மிகவும் கஷ்டமாக தான் இருந்தது ...சிறுவர் பள்ளி கல்லூரி என்று என்று படிப்பித்து ஆளாக்கி விடடார்கள். தற்போது மூத்தவருக்கு முப்பதுவயது ...நின்று ஒருகேள்விக்கு பதில் பெறமுடியாது . வயது வந்துவிட்ட்து .கலியாணம் பற்றி ..பேச்சு வந்தது . தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார். தாமாக விரும்பி இருந்தால் செய்து வைப்பதற்கும் பெற்றவர் தயார். ஆ னால் அவரோ ஒரு முடிவும் சொல்வதாயில்லை . ஆனால் கணவரோ அவர்கள் வீட்டை விட்டு போக எண்ணம் வரும் போது போகட்டும் நாமாக அனுப்புவதுபோல் ஆகிவிடாதா? ...இல்லை அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது மனைவியின் வாதம். விடுமுறையில் இருவரும் வாக்குவாதப்படுவதே வேலையாகி விட்ட்து. தற்கால இளையோருடைய மன நிலையை எப்படி புரிந்துகொள்ள லாம் ? சில இளையோர் தாமாகவே துணையை தேடி ... பள்ளிக் கடன் கட்டி ...சேமித்து ஒரு இல்லிடத்தை தேட விழைகின்றனர் ..சிலர் அப்படித் தேடி வாடகைக்கு விட்டு பின் தங்களுக்கு தேவை வரும்போது ..பயன் படுத்துகின்றனர் . சிலர் காதலித்துக் கொண்டே நாட்களைக் கடத்துகின்றனர் . திருமணம் செய்ய காசு சேமிக்கிறார்களாம். சிலர் விரைவில் ஏன் இல்லற பந்தத்தை அவசரப்பட்டுக் தேடிக் கொள்வான் இன்னமும் காலம் இருக்கிறது என வாழ்கிறார்கள். சடங்கு சம்பிரதாயம் என்பன எல்லாம் அர்த்தமற்ற தாகி போய் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு . திருமணம் ஆகினாலும் குழந்தை தேவை இல்லை என்ற மனப்பாங்கும் இருக்கிறது .. மிகவும் வசதியான வீட்டுப்பெண் மூன்று பெண்களில் மூத்தவர் .. காதலித்தார் ..பையன் இந்து, பெண் கிறிஸ்டியன் சமய துறவியின் முன்னிலையில் நிச்சயாத்தம் நடந்தது . மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் . அடுத்த வருடம் தாலிகட்டிக் கலியாணம் என்ற நிலையில் ..பெண்ணுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம். சிங்க பூருக்கு வா நகை வாங்க ..என்றார் தந்தை . பையனும் இந்துமதப்படி தாலிகட்டிடலாம் என்கிறார். ஆனால் மணப்பெண்ணோ எனக்கு மினுங்கும் நகை தேவையில்லை .. ( தாலி உட்பட ) தற்போதும் போடுவதில்லை. இனியும் போடப் போவதில்லை. நாங்களும் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறோம் . மண்டபம் எடுத்து ஆடம்பரம் தேவையில்லை. தருவதை தாருங்கள் ஒரு கொண்டோ ( தொடர்மாடிக் கட்டிடம் ) வில் எங்கள் வாழ்வை ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். உற்றார் உறவினர் சூழ மாலையும் கழுத்துமாய் மகிழ்வாய் நடத்தி வைக்க ஆசைப்படும் பெற்றோர் விருப்பம் என்னாவது ? ... எங்கள் இளையோருடைய வாழ்வு எங்கே போகிறது ...? .உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கலாம் ஒரு பெற்றோராக இப்படியான பிரச்சினைகளை எப்ப டிக் கையாளலாம் ? தற்போதுள்ள அசுர வளர்ச்சியில் ...தொலைபேசி முக்கிய இடத்தி வகிக்கிறது ..வளர்ச்சியிலும் முன்னேறி கெட்டு சீரழிவதிலும் முக்கிய இடம் வகிக்கிறது ...பெற்றோர் பிள்ளைகளின் ... உரையாடல் கூட .. mom what is for dinner ...பிட்டும் ..சிக்கன் கறியும் ...வேண்டுமென்றால் மூடடை பொரி த்து தருகிறேன். .. no mom I am not hungry .. Ill eat ..bread and sausage curry .. or Ill go out for dinner... என்று மெசேஜ் சொல்கிறது..... உறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை தூர எறி ந்து விடுங்கள்... எட்டு மாதக் குழந்தைக்கு உணவூட்ட் தொலைபேசியில் பாட்டு வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த செல்போன் தேவையாய் இருக்கிறது . கால ஓட்ட்த்தில் .இப்படியே இடைவெளிகள் நீண்டு சென்றால் சந்த திகளின் எதிர் காலம் என்னாகும்...
 4. சு வியரின் கஞ்சா காஞ்சனா ...நீர் வீழ்ச்சி மாதிரி ...வேகமாய் இருக்கிறது . தொடருங்கோ
 5. தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன்
 6. உங்கள் புதையலைத்தேடி ... நாங்களும் ஆர்வமுடன் ... தொடருங்கள்.
 7. கவிதை எழுத் வெளிக்கிட்டு .. மூளையைக் கசக்கி யோசித்து இருக்கிறீர் களே ....நல்ல குசும்பு தான் இது தான் நம்ம சுவி யர்
 8. அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 9. இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சிறீ ...மக்களின் மக்களைக்கண்டு நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
 10. மயக்கும் மழலைகள் கவிபாட வைத்துள்ளார்கள். அழகோ அழகு அவர்களின் சிரிப்பு
 11. சுவி அன்னாரின் எம்மதமும் சம்மதம். வரவேற்க தக்கது .. பயணத்த தொடர் சுவாரசியமானது தொடரட்டும்
 12. படங்கள் அத்தனையும் அழகு .......மீண்டும் கேமராவுடன் காண்பதில் மகிழ்ச்சி தொடருங்கள்.
 13. இந்திய படை வீரர்களின் குரூப் படம் கிடைக்க தட்டுப் பாடு போலும். ஒருவர் பாவித்த படத்தையே ( கட்டவுட் ) எல்லோரும் காப்பியடிக்கிறார்கள் இதை தான் சொல்வது ஆட்டு மந்தைக்கு கூடடம்
 14. தமிழ் மக்களின் வாழ்கை வானொலியோடு இணைந்த வாழ்வாக இருந்தது ஒரு காலம். அதிலும் வீட்டில் இருந்த பெண்களின் வாழ்வு தைக்கும்போதும் சமைக்கும் போதும் ஒன்று கூடி நாடகம் கேட்கவும் போதும் உடனுக்குடன் செய்திகள் கேட்க்கும் போதும் வேறு சில நிகழ்வின் போதும் முக்கிய பொழுதுபோக்கு ... அந்த நிகழ்வு நடக்கும் நேரம் வீட்டில் இருக்க வேண்டும் எனும் ஆவலும் இருந்தது. இனிய வாழ்வை எண்ணிப்பார்க்க தான் முடிகிறது இக்காலத்தில்.
 15. இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலான் அகஸ்தியன் ஆகியோருக்கு மகிழ்வான பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக
 16. தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்.............. வெளி நாடு வந்த பின் வாழ்கை மாற்றங்களும் தேவை தான்...தனிமையில் மனம் தவிப்பதை தவிர்க்க இத்தகைய மாற்றம் தேவை . ஆ னால் சமுதாயத்தின் ...கேள்விக ளுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.
 17. ஜெகதா துரை விஜயகுமார் . இருவருக்கும் நல் வரவு
 18. தொடர்ந்து பதியுங்கள். ...ஆவலுடன் வாசிக்கிறேன்.
 19. ஆமாம் நானும் தான் எதோ கோவில் பற்றிய கட்டுரை போலும் என்று எண்ணிவிடடேன். தொடருங்கள் . .. அடுத்து என்ன என்ற ஆவலுடன் வா சிக்கிறேன்.
 20. தொழில் நுட்ப வசதி ...வேகமான காதல் அவசர திருமணம் .. சகிப்பு பொறுமை அற்ற தால் விவாக ரத்து இனி வருங்காலம் இப்படியாக தான் இருக்க போகிறது
 21. 21 வது அகவை காணும் யாழுக்கு வாழ்த்துக்கள். என்னைத்தமிழ் எழுத வைத்து யாழ் தான். எனக்குள் இருந் ஆர்வத்தை வெளிக்கொணர வைத்தும் யாழ் தான் ..முன்பு போல எழுத முடியவில்லை ஆனால் தினமும் வாசிக்க வருவேன். எழுத . நேரமின்மை ..சற்று சோம்பலும் தான் இருப்பினும் ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்.
 22. விவாக ரத்துக்கு காரணம் விவாகம் .... தான் விவாகம் இல்லாவிடடால் ரத்தே இல்லை