Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11187
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. முதல் தடவை கோர்ட்டு போயிருந்தேன் மேலே இருந்தவர் .."ஆடர் ஆடர் " என்று சொன்னார். நான் எழுந்து இரண்டு சிக்கன் பிறை, நண்டு சூப், பிரைட் ரைஸ் என்று சொன்னேன்....இரண்டு போலீஸ்கரர் என்னை வெளியே கூடிப்போகிறார்கள் எந்த ரெஸ்டாரண்ட் என்றுசொல்லவில்லை.😄😄
  2. "எல்லாச்செல்வங்களைப்பெற்று வளமோடும் நலமோடும் வாழ்க " என்று வாழ்த்தும் எனது வாழ்த்து உங்களைச்சேரட்டும்.
  3. இரவுச்சாப்பாடு என்றால் கொஞ்சம் மன்னிக்கலாம்...அதுவும் மீன் வாங்கினாரா ? இது எப்ப நடந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பா ? 😃
  4. அண்ணே இந்த நிறப்பிரச்சினை இன்று நேற்று அல்ல எல்லா நாட்டிலையும் காலம் காலமாக இருக்கிறது. இதை தூக்கிப்படிப்பவர்கள் பகிடியை பகிடியாய் எடுத்தால் எல்லாம் சுபம். எந்த நிறத்தவனுக்கும் ரத்தம் என்னவோ சிவப்பு தான்.
  5. இது பிறந்த "மண் வாசனை" ..வெளிநாட்டுக்கு வந்தாலும் இருக்கும்.
  6. ஆண் பேய்க்கு கால் இல்லை பெண்பேய்க்கு இருக்கும் போல என்று பேய்க்காட்டுவார்கள். 😄😄
  7. நாலுபோத்தல் அடிச்சா இப்படித்தான் இருக்கும்.😄
  8. சுவாரசியமாய் எழுதுகிறீர்கள் தொடருங்கோ ...நன்றி
  9. இணையத்தளத்தில் பார்த்து சிரித்தவை. இப்படியும் பாடம் எடுக்கிறார்கள்.
  10. புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர். Japan ஜா பனே Brazil ப்ரா சிலி Canada சீ அனாட philippine பிலி ...பீபியனே
  11. தனி ஒருவராக செயலில் இறங்குவது கஷ்டம். அவர்கள் பணமும் ஆட்பலமும் மிக்கவர்கள் . வீண் அவப்பெயர் வரப்போகிறது.
  12. CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால்.... நான் நினைக்கிறேன் கொரியன் காரன் தான் புகுந்து விளையாடியிருக்கிறான். ருசியனும் சப்பை மூக்கரும் கொரியனும் என்று மூவரும் கூட்டுச்சேரக்கியே நினைத்தனான். 😄😄
  13. ஏற்கனவே தின்று கொழுத்த பன்றிகள் நடுவே தனியாக ஒரு பசு சமாளிப்பது கஷ்டம். பண பலமும் பதவி பலமும் அதிகம்.
  14. நாங்களப்படி நினைக்கமாட்டம் அதுதான் படம் போட்டுக் காட்டியாச்சே😄 மற்றவை ரெண்டுபேருக்கும் தலைக்கு வேளியே ஒன்றுமில்லையாம். குத்தியருக்கு வெளியேயும் நிறைய உள்ளேயும் நிறைய விஷயம் இருக்கு என்று. ஆள் வலு விண்ணன் போல .
  15. பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன்.............. இதை வாசித்து நான் சிரி சிரி ....என்று சிரிக்க வீட்டுக் காரன் கேட்க்கிறார் என்னப்பா கனவு கண்டு சிரிக்கிறாயா என ? கண்ணூறுபடப்போகுது...கொஞ்ச நாளாக இந்த பென்சனியர்களின் சேட்டை சொல்லி வேலையில்லை ...யாழ்கள ஜாம்பவான்களின் பகிடிகளில், இருக்கு மட்டும் சிரித்து சந்தோஷமாயிருப்போம். ( யாரும் யாரையும் கோவிக்காமல் பகிடியாய் எடுத்து நடபு பாராட்டுவது யாழ்களம் தந்த சிறப்பு )
  16. என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.😄 எனக்கும் தான் புரியவில்லை கோவாவில் குழம்பா ? என் நண்பி ஒருவர், இரண்டு ஆண்மக்கள் தோளுக்கு மேலே வளர்ந்து விடடார்கள் . நான் பெட்டிக்குள் போனாலும் " அப்பனும் மக்களும் சமைத்து வைத்துவிட்டு போ " என்று தான் சொல்வார்கள் என்று சலித்து கொள்வார்
  17. எங்கேயோ இதன் சாயலில் வாசித்ததாக ஞாபகம். இருப்பினும் தொடருங்கள். 😄
  18. அறியாத தெரியாத இடங்களுக்கு போகும் போது ஒரு விழிப்புணர்வு alert இருக்க வேண்டியது கடடாயம் தானே . நல்ல சேவை கிடைக்கும்போது அமையறியாமலே கொடுக்கும் உணர்வு வரும். சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)... Kavi arunasalam ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ தொகுப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.
  19. ரசோதரன் உங்கள் குறுங்கதைகள் மிகவும் அருமை.மீண்டும் தாயக இளமைக் கால நினைவுகளை இரைமீட்பதுபோல இருக்கின்றன. இவவளவு காலமும் இந்த நகைச்சுவைப்பட எழுதும் திறமை எங்கே ஒளிந்திருந்தன என எண்ணுவதுண்டு. ஒரு பாரபட்ஷம் என்னவெனில் பெண் குட்டிகளுக்கு பத்து வயதுக்கு முன்பு என்றாலும் நீச்சல் பகற்கனவு. சில வன்னிப்பகுதிகளில் பெண்கள் கூட்டமாக சென்று வாய்க் கால் ஓடும் நீரில் நீந்தி இருக்கிறார்கள்.தொடரட்டும் குறுங்கதைகள் பாராட்டுக்கள்.
  20. நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  21. உலகில் மானிடராய் பிறந்த எல்லோரும் இறப்பது நியதி . தலைமைத்துவ பதவியில் இருந்த ஒருவர் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது .அரசியல் அனுபவமும் கல்வி அறிவும் நிறையவே கொண்டவர், என்ன நோக்கத்துக்காக பாராளுமன்றம் அனுப்பிவைக்க பட்டாரோ காலம் கடத்த பட்டதே தவிர அது நிறைவேறாத போது இறந்த பின்பும் ஆதங்கத்தை கள உறவுகள் வார்த்தைகளால் வெளிப் படுத்து கிறார்கள் அவ்வளவே . "இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
  22. விளையாட்டுப் போட்டி என்றாலே முன்னின்று நடத்தி வேலைப்பளு மத்தியில் நேரம் ஒதுக்கி தரப்படுத்தி சிறப்பாக பதிவேற்றும் கிருபனுக்கு யாழ் களம் சார்பாக என் பாராட்டுக்களும் நன்றிகளும். போட்டிக் களத்தை உற்சாகமாக நேரலை வர்ணனை போல் தகவல் தரும் வீரப்பையன், பிரியன் ...ரசோதரன் ...குறும்பு கதை சொல்லும்குமார் சாமியார் ..மற்றும் கூட்டாளிகளுக்கு என் நனறிகளும் பாராட்டுக்களும் . வீரப்பையனின்..ஆடுகளத்தை சிறப்பிக்க அழைப்பு விடுவதும் கிருபனுக்கு அடுத்ததாக கவனமெடுப்பதும் சிறப்பானது. இனி வரும் காலங்களிலும் யாழ் களத்துக்கு போட்டிப் பதிவுகள் மூலம் உயிர்ப்பாக வைக்க வேணுமென பங்குபற்றியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். முதலிடத்தில் நிற்கும் USA பிரபாவுக்கு என் பாராட்டுக்கள். .
  23. இங்கு நாய்க்கு என்று ஸ்பெஷல் சாப்பாடு சீரியல் மாதிரி உண்டு ( ஒவ்வொரு வயதுக்குஒவ்வொரு மாதிரி) ...அதை விட காய்ந்த ஈரல் ஸ்நாக் என்று வித விதமாய் உண்டு . அவையெல்லாம். வாங்கி கொடுப்பான் என் மகன் . தகப்பனுக்கு விருப்பமில்லை கெஞ்சி கூத்தாடிதான் குட்டியாக கொண்டுவந்தான். இப்பொது அவர் ஒரு நாள் பார்க்கவிடாலும் கவலைப்பட்டு போய்விடுவார் பார்க்க .மகனுக்கு தெரியாம இறைச்சி துண்டை கழுவிப்போட்டு கொடுப்பார். இவர் சாப்பிட போனால் பக்கத்தில் வந்து இருக்கும். மகனின் கட்டிலுக்கு பக்கத்தில் மெத்தை போன்ற ஸ்பெஷல்படுக்கையில் தான் உறக்கம். மகன் இருந்தால் எங்களைத் தேடாது அவன் காலடியிலேயே . வாழ்க்கையின்பாதி மகிழ்ச்சியை இழந்துவிடீர்கள். எவ்வ்ளவு சோர்ந்து வேலையால் வந்தாலும் அதை கட்டி தழுவ களைப்பெல்லாம் போய் விடும். சாமத்தில் வேலையால் வர விழித்திருந்து வாசலில் வாலாட்டி வரவேற்கும். மன இறுக்கம் குறையும். பந்தை தூக்கிப்போட கவ்வும் லாவகமே தனி மகிழ்ச்சி. இங்கு வெள்ளைக்களின் குழந்தைகளுக்கு காவல். ஒருத்தரும் அண்ட விடாது. பக்கத்திலே இருக்கும். பழக்குவதில் இருக்கிறது பண்பு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.