Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மல்லிகை வாசம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. சுவியண்ணா, இதை இங்கே பகிரலாமோ தெரியவில்லை. இரு வர்ணப் பழைய பாடற் காட்சி; ஆனால் பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது! மீண்டும் வேறு யாரோ குரலில் பாடியதை இணைத்திருக்கிறார்கள். 😊
  2. வணக்கம் நிர்வாகம், வழமை போல நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு உள்நுளைந்ததால் என்னால் கருத்துக்கள் பதிய இயலவில்லை. தயவுசெய்து இக்குறையை நிவர்த்தி செய்வீர்களா? நன்றி 😊 பி.கு: யாழ் மூடப்படவிருந்த செய்தியை இன்று தான் படித்து அறிந்தேன்/ அதிர்ந்தேன். தொடர்ந்து இயங்கும் என அறிந்ததில் மிகுந்த மனநிறைவாக இருக்கிறது. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகம். 🙏
  3. விருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடோணும். கொஞ்ச நாள் தங்கிப் பார்த்தால் உபசாரமும், மரியாதையும் குறைஞ்சிடும். அப்படியா அண்ணை! 😀
  4. அதுவும் சரி தான் அண்ணை. 😊 தொடர்ந்து யாழில் இருக்க விருப்பம் தான். ஆனால் மற்றவர்கள் குறிப்பிட்டது போல வேலைப் பழு தான் தடையாக உள்ளது.
  5. வணக்கம் நிர்வாகம், தானியங்கி மீண்டும் என் இயக்கத்தை மட்டுப்படுத்துது! 😀 தயவுசெய்து அதைச் சரி செய்வீர்களா? நன்றி 😊
  6. சரி செய்யப்பட்டுள்ளது நன்றி மோகன் அண்ணா. மீண்டும் இதே நிலை. பல நாட்களாக எதுவும் பதிவிடாததால் வந்த வினை!😀 தயவுசெய்து நிவர்த்தி செய்வீர்களா?🙂
  7. மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம். நன்றி
  8. சிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன. அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.
  9. இக்காலத்து நிதர்சனங்களைப் பதிவுகளாகத் தொடரும் குமாரசாமி அண்ணருக்கு மிக்க நன்றி. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அன்னைக்கு நிகரான சொந்தம் எதுவுமில்லை.
  10. தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன! விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.
  11. நன்றி அக்கா. வித்தியாசமான நல்ல படங்களை இங்கு இணைக்கிறீர்கள். மேலே மாங்காய்க்குத் தான் பகிடியாய் ஏதோ எழுதினேன். உங்களுக்கல்ல. தவறாக நினைக்க வேண்டாம் அக்கா. ஆனாலும் அதன் வளர்ந்து முன்னேற வேணும் என்ற துடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு!
  12. பிஞ்சில பழுத்தது என்பார்கள். விதையாய் மண்ணில் விழு முன் அப்படி என்ன அவசரம் முளைவிட! தாய் மரத்தின்ர உயரத்தை எட்டிப்பிடிக்க இந்தக் குறுக்குவழி எல்லாம் கூடாது பாருங்கோ! எப்படியோ கீழ விழுந்து தான் மறுபடி வளர வேணும். வாழ்த்துக்கள்! 😀 (இது நீங்கள் எடுத்த படமா ஜெகதா அக்கா? நல்லாயிருக்கு. இருந்தும் யாரோ photoshop பண்ணின போலயும் இருக்கு!)
  13. கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.