Everything posted by புலவர்
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
வீதியைத் திறக்க வேண்டியது அரசின் கடமை. அதைத் தேர்தல் நேரத்தில் திறந்ததது வாக்கு வேட்டைக்காக என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.இது போன்று மேலும் தேர்தல்கள் வரும். தமழிமக்கள மீது போடப்பட்டுள்ள அழுத்தங்களை அவை குறைக்கும். இதில் அரசியல்வாதிகள் குளிர்காய நினைப்பதை என்னவென்பது?
-
மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?
https://www.facebook.com/share/p/EXy8p3crXdkGhfqC/ விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இந்தப்பம் பிடிக்காது. அதனால்தான் தீயேட்ரில் படம் நன்றாக ஓடவில்லை. இந்தப்படத்திற்கு சி0ல விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டு.
-
மெய்யழகன்: அரவிந்த்சாமி - கார்த்தி கூட்டணியில் இன்னொரு ‘அன்பே சிவம்’?
படம் பார்க்கப் போவோம் என்று மகள் கேட்டாள். எனக்குக் கார்த்தியின் படங்கள் பொதுவாகப் பிடிப்பதில்லை. படத்துக்ப் போனபின் அதற்குள் நான் முழ்கி விட்டேன். படம் மெதுவாகப் போனாலும்.நாம் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியது.தஞ்சைப் பெரிய கோயிலைப் படம்பிடித்துக்காட்டியது.ஆசை தீரத் தரிசித்தேன்.திடீரென்று எமது ஈழப் போராட்டத்தையும் மிக உணர்ச்சி மயமாக கவனமாக கத்தரி போடாத வகையில் தொட்டுச் சென்றது. அதை இயக்குநர் வேண்டுமானால் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதை வேண்டுமென்றே புகுத்தி இருக்கிறார்.ஜ அதேபோல் ஜல்லிக்கட்டு பல இடங்களில் சீமானின் பேச்சுகளின் தாக்கம் தெரிகிறது. பெயரை சீமான் பெயரை எழுதியதற்காகப் பார்க்காமல் விடாதீர்கள். நாம் வாழ்ந் வாழ்க்கை தெரியும் 50 பிளஸ் வயதானவர்களுக்கு மிக நெருக்கமான படம்.படம் தியேட்டரில் வந்த போது பெரிதாக விமர்சனங்கள் வரவில்லை. ஓடிடியில் வந்த பிறகு பல நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. https://www.facebook.com/share/p/3h3dNHnFyhJ51hde/ https://www.facebook.com/share/p/TzHwfyA4y375QnFw/
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!மேலும் வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துகள்!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திராவிடதேசியத்துக்கு தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கிக்றன. 50 ஆண்டுகால அரசியல் அதிகாரத்தையும் வைத்திருக்கின்றன். அவர்கள் பெயரில் திராவிடம் என்று வாக்குகளைைைக் கவர்வதற்காக வைத்திருந்தாலும் தமிழ்தமிழ் என்றே பேசி நடித்து தொடர்ந்து தமிழ்நாட்டின் தமிழ்மக்களின் வாக்குககைளக் குறிவைத்து அரசியல் நடத்திவருகிறார்கள். விஜய் தன்னால் தனித்து ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிந்து கூட்டணிக்கு அழைக்கிறார். திராவிடத்தேசியம் தன்னுடைய கொள்கைக்கு ஒத்து வராது என்று சீமான் முதல் ஆளாக கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார். சீமானைக்கழித்துப்பார்த்தால் 2 சீற்றுக்கு அதிமுக திமுக என்று தாவும் கம்னிஞ+ஸட்டுகளும் திருமா>வைகோ.காங்கிரஸ் தான் மிச்சம். விஸை பாஜகவோடு சேரமாட்hர் என்று பேசினாலும். திமுகவே பாஜகவோடு கூட்டுச் சேர்ந்து பாஜக எம்எல்லேக்களைப் பெறவும் பாஜக அரசில் பங்கெடுத்த வரலாறும் எல்லோரும் அறிந்ததே.திமுகவை ஊழல் கட்சி என்று மறைமுகமாகச் சாடும் விஜய் அந்த ஊழல்கட்சிகளைத் தாங்கிப்பிடித்த ஊழலுக்குத் துணைபோன அதற்கு வெள்ளையடித்த கட்சிகளைத்தான் கூட்டணிக்கு அழைக்கிறார். இவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?முதலில் மாநாட்டுக்கு வந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கதிரைகளை உடைக்காமல் போகச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும். இலருந்தாலும் தம்நாட்டுத்திரை உலகின் தலைமகன் ஈழத்தின் மருமகன் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். திராவிட வாக்குகள் சிதறட்டும்.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
அப்படியா? ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லையே. காங்கிரசுக்கு தூண்டில் போடுறவர் எப்படி ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவார்?திரவிடததையும் பெரியாரையும் கொள்கையாய் வைத்தது தமிழரல்லாதோர் வாக்குகளைக்கவரவும் அரசியல் பிழைத்தால் முpண்டும் சினிமாவுக்குப் போகவும்தான். எழுதிக் கொடுத்துப்பாடமாக்கி ஒத்திகை பார்த்ததை அவரது வாய்மொழி சொல்லாவிட்டாலும் உடல்மொழி சொல்கிறது.கிட்டத்தட்ட விஜயகாந் திரைப்படத்தன் கிளைமாக்ஸ் காட்சிபோல இருக்கிறது அவது பேச:ச. இது சினிமா இல்லை. இறங்கி வேலை செய்யணும். மக்களோட மக்களா நிற்கணும். பவுன்சர்களை சுற்ற வர வைத:தக் கொண்மு மக்களை எப்படி நெருங்குவது?கூடும் கூட்டம் இல்லாம் வாக்குகளாக மாறாது. திமுக மேடையில் வடிவேலுக்கு கூடிய கூட்டம் தேர்தல் முடிய உச்சத்தில் இ ருந்த வடிவேலுவை மீண்டும் எழும்ப முடியாத நிலைக்கத் தள்ளிவிட்ட வரலாறுகளை நாம் பார்த்திருக்கிறோம். விஜய் தேர்தலில் நின்று தனக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் உள்ளதென்று நிரூபிக்க வேண்டும். 10-15 வரை வரலாம்.இப்போது நாம் தீர்மானிக்க முடியாது.இருந்தாலும் விஸய் அரசியலுக்கு வருவதை நான் மனதார வரவேற்கிறேன். மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
நடிகர் விஜய் அவர்களே...! "திராவிடமும் தமிழ்த் தேசியமும் இருகண்கள்.." என்று நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன? நீங்கள் அரசியலை இன்னும் தெளிவுற கற்கவில்லையா? அல்லது அரசியல் அறிவியலில் நீங்கள் இன்னும் ஒரு குழந்தை என்பதாகவே இதைப் பார்ப்பதா? அல்லது உங்களின் திட்டமிட்ட சதியா? 'சாதி, மதம் கடந்த அரசியல்..' என்பது உலகளாவிய நடைமுறை. அதிலொன்றும் பேசுவதற்கு இல்லை. அதேசயத்தில் 'இனம் கடந்து, மொழி கடந்து..' என்று உங்கள் வாய்க்கு வருவதை எல்லாம் பேசினால் அது அரசியல் பிழையாகும். இதன் மூலமாக நீங்களும் தமிழினத்திற்கு துரோகத்தை மட்டுமே வழங்குவீர்கள் என்ற அச்சம்தான் உண்டாகிறது. அதற்கான காரணங்களை உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன். உலகம் முழுவதும் உருவாகிய தனி நாடுகளில் 99% இனத்தின் வழியாக மட்டுமே உருவானவை. எனவே இனம் சார்ந்த அரசியலை போகின்ற போக்கில் நீங்கள் தட்டிவிட்டு செல்வது பிற்போக்குதனமானது. மேலும், நீங்கள் ஓர் அரசியல் தெளிவற்ற குழப்பவாதி என்பதையே உங்கள் முதல் மாநாட்டு மேடை பேச்சு வெளிச்சம் போட்டு அறிவிக்கிறது. ஒருவேளை நீங்கள் இனிமேல் தான் மேடைப் பேச்சைக் கற்றுக் கொள்வீர்கள் எனில் தலைசிறந்த அறிவாளிகளை உங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், தொடர்ந்து இதே பாணியில் உங்கள் மேடை பேச்சு அமையும் எனில் நீங்கள் வீழ்வது உறுதி. ஈவேரா படம் வேண்டும், ஆனால் அவரது கடவுள் மறுப்பு வேண்டாம். அண்ணாதுரையின் திராவிடம் வேண்டும், ஆனால் திராவிடம் என்ற பெயர் கட்சிக்கு வேண்டாம். தமிழ்த் தேசியம் வேண்டும், ஆனால் தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் வேண்டாம். பாஜகவின் கடவுள் ஏற்புக் கொள்கை உண்டு, ஆனால் அந்த கடவுளின் பெயரால் உருவான ஏற்றத்தாழ்வை ஏற்கமாட்டோம். அடேங்கப்பா... எப்படிப்பட்ட ஒரு குழப்பவாதி நீங்கள்..? விஜய் அவர்களே.. நீங்கள் குழப்பவாதியா..? அல்லது உங்களுக்கு இந்த வசனங்களை எழுதிக் கொடுத்தவன் குழப்பவாதியா..? உங்களைப் பின்னின்று நகர்த்தும் உளவு அமைப்புகளின் திட்டமிட்ட சதியா? 'தேசியம்' என்றால் என்னவென்று உங்களுக்கு முதலில் தெரியுமா? இந்திய தேசிய கட்சிகள் இந்தியா என்ற நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் வேலை செய்பவை. திராவிட தேசிய கட்சிகள் திராவிட நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் வேலை செய்பவை. இந்தியா ஒரு நாடாக என்றுமே இருந்தது இல்லை. திராவிட நாடு ஒரு கற்பனா வாதம். ஆனாலும் அக்கட்சிகள் சரியோ தவறோ தங்களுக்கு என்று ஒரு கொள்கை, ஒரு நில எல்லையை தீர்மானித்து வேலை செய்தன. தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களின் விடுதலை கோட்பாடு. தமிழர்களுக்கு என்று நில எல்லை உண்டு. அதன் உரிமையை வெல்வதே தமிழ்த் தேசியம். எனில் இதில் நீங்கள் எந்த புரிதலின் படி திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்று மேடையில் வாந்தி எடுத்து வைத்தீர்கள்? இந்தியா என்ற நாட்டை நாங்கள் ஏற்க முடியாது என்பது திராவிட வாதம். இந்தியா என்பதும் பொய், திராவிடம் என்பதும் பொய், தமிழர் நாடு என்பதே மெய் என்று தேசிய அரசியலின் இறுதி வடிவத்தை வலிவுறுதுவது தான் தமிழ்த் தேசிய கோட்பாடு. எனில், இந்த கோட்பாட்டு வரையறைகளில் நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பது தானே அரசியலின் முதல் கேள்வியாக இருக்க முடியும். அந்த முதல் கேள்விக்கே நீங்கள், ' திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள் ' என்ற மிகவும் மட்டமான ஒரு பதிலை சொல்லி இருப்பது எப்படி ஏற்புடையது ஆகும்? கேள்வித்தாளில் A அல்லது B இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால், இரண்டையும் தேர்வு செய்வது முட்டாள்தனம் இல்லையா? உங்களின் இந்த குழப்பவாத பேச்சுக்கு பின்பாக, ஒருவேளை நீங்களும் உங்கள் அரசியல் ஆலோசகர்கள் குழுவும் எழுந்து வரும் தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கலாமோ? அல்லது இந்தியாவின் கொள்கை வடிவமைப்பாளர்கள் எம் ஜி யார் , வைகோ , விஜய காந்த் போன்றவர்கள் மூலமாக தமிழ்த் தேசிய எழுச்சி வராமல் தடுக்க அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தியது போல, அடுத்து உங்களையும் பயன்படுத்த முனைகிறார்களோ? என்ற கேள்விகளும் எழுகிறது. திராவிட நாடு கோரிக்கையை அண்ணாதுரை கைவிட்ட பொழுது, ஒருத் தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் தொய்வடைந்தனர். அண்ணாதுரையின் மறைவுக்கு பின், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தமிழ்த் தேசியர்கள் இயக்கம் கட்டி, மெல்ல மெல்ல தமிழ்த் தேசிய அரசியலை பேசிக்கொண்டு இருந்த பொழுது, எம் ஜி ஆர் என்ற நடிக கோமாளி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்து "இந்திய = திராவிடம்" என்று கொள்கை சமரசம் செய்த பொழுது, அதன் பின்புலம் என்னவென யோசிக்க கூட அறிவற்ற தமிழ் இளைஞர்கள் கூட்டம் அன்று எம் ஜி ஆரை நம்பி வீணாய் போனார்கள். மீண்டும் ஒரு தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் தொய்வடைந்தனர். இந்திய அமைதிப் படை ஈழ நிலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படையுடன் மோதி தோல்வி அடைந்து நாடு திரும்பிய பின், மெல்ல மெல்ல துளிர்விட்டு எழுந்த தமிழ்த் தேசிய உணர்வை வைகோ என்ற ரா ஏஜண்டை கொண்டு ஒரு கட்சித் தொடங்கி, மீண்டும் ஒருத் தலைமுறை தமிழ் இளைஞர்களை திசைதிருப்பி ஏமாற்றியது இந்தியாவும் அதன் கொள்கை வகுப்பாளர்களும். வைகோவின் காட்டிக் கொடுப்புக்கு பலனாக அவர் தொடர்ந்து இந்திய நாடாளுமன்றம் செல்ல வழிவகுத்தது இந்தியாவும் அதன் கூட்டுக் களவாணியான திராவிடமும். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று விஜய் காந்த் கொஞ்ச காலம் உருட்டியதும், தமிழ்த் தேசியம் என்ற கொள்கை பக்கம் தமிழ் இளைஞர் கூட்டம் வரக் கூடாது என்பதற்காக மட்டுமே. அதன் தொடர்ச்சி தான் இன்று நீங்கள்.? ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு பின், தமிழ்நாட்டில் நடந்த தமிழ்த் தேசியப் பெருவெடிப்பு பல லட்சம் தமிழ் இளைஞர்களின் உயிர் கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை ஏற்க வைத்தது. இன்று அதை மீண்டும் ஒருமுறை அழிக்க கோடம்பாக்கத்தில் இருந்து மீண்டும் ஒரு ஆளாக நீங்கள் வந்து இருப்பதை உணர முடிகிறது விஜய் அவர்களே...! எம் ஜி ஆர்.. 'இந்தியா = திராவிடம்' என்று தேசிய இன அரசியல் கொள்கையை நீர்த்துப் போக வைத்தது போல, நீங்கள் 'திராவிடம் = தமிழ்த் தேசியம்' என்று சொல்வதன் மூலமாக மீண்டும் எங்கள் நிலத்தில் எழுந்துள்ள இன அரசியலை நீர்த்துப் போக துடிப்பீர்கள் எனில்... ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வோம்... இது எம் ஜி ஆர் காலமும் இல்லை... நீங்கள் எம் ஜி ஆர்ரும் இல்லை... இயல்பாகவே நீங்கள் தோற்றுபோக பல நூறு அரசியல் காரணங்கள் இன்று உள்ளது. அவற்றை எல்லாம் உங்களுக்கு இப்பொழுது விளக்க விரும்பவில்லை. ஆனால், உறுதியாக ஒன்றை சொல்கிறோம்... தமிழ்த் தேசிய அரசியலை உங்களின் மசாலா அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்கள் போதைக்கு எங்கள் உயிர் அரசியலை ஊறுகாய்யாக பயன்படுத்த விரும்பாதீர்கள்... ஒரு குத்துப் பாட்டு, ஒரு காதல் பாட்டு, ஒரு சண்டை, ஒரு கொலை, ஒரு கொள்ளை, ஒரு நகைச்சுவை என்று கலவையாக மசாலா படம் நடித்து நீங்கள் பெரிய நடிகனாக வந்ததில் பிரச்சனை இல்லை. அதே பாணியில் கொஞ்சம் இந்தியம், கொஞ்சம் திராவிடம், கொஞ்சம் தலித்தியம், கொஞ்சம் தமிழ்த் தேசியம் என்று மசாலா அரசியல் செய்ய நினைப்பது கேவலமானது. அன்று எம்ஜிஆர் செய்த பித்தலாட்ட அரசியல் அவரது ரசிக தொண்டர்களுக்கு புரியவில்லை. வைகோவின், விஜயகாந்தின் பித்தலாட்ட அரசியல் அன்றைய தமிழ் இளைஞர் கூட்டம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், இன்று நீங்கள் ஆட நினைக்கும் இந்த ' இந்திய - திராவிட - தமிழ் தேசிய கூட்டாச்சோறு எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்களும் உங்களை பின் நின்று நகர்த்தும் சதிகார கூட்டமும் என்ன ஆட்டம் ஆடினாலும், இனி தமிழ்த் தேசியத்தை எவனாலும் வீழ்த்த முடியாது என்று அறிந்து கொண்டு களமாடுங்கள் விஜய் அவர்களே...! நீங்கள் என்ன நோக்கத்தோடு வந்துள்ளீர்கள் என்று நாங்கள் அறிவோம்... ஆனால் உங்களின் அப்பாவி ரசிக தொண்டர்கள் அறிய வாய்ப்பில்லை... கொஞ்ச காலத்தில் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்... உங்கள் அரசியல் வருகையால் ஒரேவொரு நன்மை நடந்துள்ளது... அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்... பல லட்ச கணக்கான உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் உங்கள் வாய் வழியாகவே 'தமிழ்த் தேசியம்' என்ற வார்த்தையை கடத்தி உள்ளீர்கள்... உங்களுக்கு ஒருவேளை அந்த வார்த்தையின் அர்த்தமும் ஆழமும் புரியாமல் போகலாம், உங்களின் ஒரேவொரு தொண்டன் அதன் ஆதியையும் அந்தத்தையும் தேடினால் போதும்... மற்றது தானாக நடக்கும்... அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்... நன்றி.. -பேராசிரியர் ஆ. அருள் இனியன் தலைவர் தமிழர் நாட்டுக் கட்சி
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
https://fb.watch/vv0KZ-RwpH/
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திராவிடமும் தமிழ்த்தேசியமும் எப்படி ஓன்றாக முடியும்.2 தோணியில் கால்வைக்கிறார். கொள்கைத் தெளிவு இல்லை. கொள்கைக்குழப்பம்.இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறட்டும்.- கிளிநொச்சி அக்கராயன் காட்டுக்குள் எறியப்பட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான விதைப்பந்துகள்!
மிகவும் பாராட்டத்தக்க செயல். இது எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கட்டும்.- நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?
முதற்கோணல் முற்றிலும் கோணல்.- தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
நெறியாளர் பார்த்துப் பல்லுப்படாமல் கேட்கும் கேள்விகளுக்கு சுமத்திரன் தனது சட்டத்தனமான பதில்களைக் கொடுத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ஆனால் இநதக் காணொளியின் கீழே உள்ள பின்னூட்டங்கள் எதுவும சுமத்திரனுக்குத் சாதகமாக இல்லை.- அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம்.
சிறியர் சங்குச்சின்னத்திலா தேர்தலில் நிற்கிறார்.- திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ....- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
https://fb.watch/vp4sx7qEsh/ வைத்தியர் அர்ச்சுனாவால் அவமானப்படுத்தப்பட்டேன்- ‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
இது திருத்தம் இல்லை .கருணாநிதி தன் தெலுங்குப் பாசத்தால் அந்த வரிகளைத்தவிர்த்தார். ஆரிய எதிர்ப்பே கொள்கையாக வகுத்த கருஒhநிதியியின் திராவிடக்கும்பல் இந்த வரிகளைச் சேர்த்திருக்க வேண்டும். பாடலின் பொருள் கண்ணடம் தெலுங்கு மலையாளம்>துளு போன்ற பல மொழிகளைப் பெற்றெடுத்த தாயான தமிழ்த்தாயே இவ்வளவு பிள்ளைகளைப் பெற்ற பின்பும் ஆரியம மொழியான சமஸ்கிருதம் அழந்தது பொலன்றி இன்னும் மிக இளமையதக இருக்கின்ற தன்மையை வியந்து வாழ்த்துகிறோமே என்பதாகும் . ஆரியத்தை தாழத்தி தமிழை உயர்த்திய அந்த வரிகளை கருணாநிதி ஏன் நீக்கினார் என்றால் தெலுங்கு தமிழில்இருந்து பிறந்தது என்று பாடலில் வருவதாலாகும்.திராவிட நாடு என்று எழுதியது கால்டுவல் என்ற வரலாற்சிரியர் பிழையாக எழுதிய திராவிட்தின் தாக்கத்தினாலாக இருக்கலாம். கருணாநிதிக்கு 4 வரிகளை நுpக்க உரிமை இருந்தால் சீமானுக்கு 2 சொற்களைத் திருத்துவதற்கும் உரிமை இருக்கிறது. சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தமிழர்நல் திருநாடும் நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"- இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
இதை மறந்து இந்தியா தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் ஏமாளித்தமிழர்களை என்னவென்று சொல்வது.- "நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
ஆனால் இப்பொழுது உலகத்திற்கே மனிதநேயம்பற்றிப் பாடமெடுப்பார்கள்.அவுஜ்திலேலியாவின் பூர்வகுடிகளை பாரியளவில் இனப்படுகொலைசெய்து அவர்களைச் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக்கி வெள்ளையர்கள் இப்பொழுது பெரும்பான்மையினராகி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஹிட்லர் செய்ததுதான் இனப்படுகொலை அவர்கள் செய்தலெல்லாம் ஒன்றுமேயில்லை.அவர்களால் எத்தனை நாடுகள் இன்று வரை அடிமையாகி பொருளாதாரத்தில் நலிவடைந்து இருக்கிறார்கள்.தமிழர்களின் இன்றைய நிலமைக்கும் அவர்களே காரணம்.அமெரிக்கா>கனடாஈஅவுஜதிரேலியா ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெள்ளையர்களின் நாடல்ல. இன்று அகதிகள் இங்குவருவதைப்பற்றிக் கூச்சல் போடும் பத்திரிகைகளளும் ஊடகங்களும் அந்த அகதிகளின் நாடுகளைக் கொண்ளையடித்து சுடுகாடாக்கியதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
https://www.facebook.com/reel/1054390516165110 சொந்க் காசில் சூனியம்வைச்ச அர்ச்சுனா அவரது முகப்புத்தக நேரடி ஒளிபரப்பிலேயே உனக்கு லூசு என்று ஒரு மான்கட்சி வேட்பாளர் சொல்லிவிட்டார்.- மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
பிரச்சாரத்திற்குப் போகமல் இருக்க நல்ல வழி.தனக்குப் பிடிக்காதவர்களுக்கு வாக்குக் கேட்பதை விடஆஸ்பத்திரியில் படுத்திருப்பது நல்லது- இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய அநுர அரசாங்கத்தின் கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தல்
தமிழர்கள் மீதான போர்க்குற்றம் தொடர்பான ஐநா பீரேரணையில் தமிழ்,தமிழர் என்றே சொல்லே இல்லை. அதுபோலவே அனுராவின் பேச்சிலே தமிழ்மக்கள் பற்றியும் இந்த நாட்டில் பல ஆண்டுகளாகப் புரையோடியிருக்கும் இனப்பரிச்சினை பற்றி எதுவே இல்லை. தமிழர்களைப் பொறுத்த மட்டில் இதுவரை இருந்த அரசாங்ககளுக்கும் ஜேவிபி அமைக்க விருப்பதாகச் சொல்லும் அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் யெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. தமிழர்களின் பிர்சினைகளை விங்கிக் கொள்ளாத வரை அதனை சிங்கள மக்களுக்கும் புரிய வைத்து எமது சுயநிர்ணய உரிமை யை ஏற்றுக் கொள்ளாதவரை இநத நாடு ஒரு அடிகூட முன்னேற முடியாது. இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கின்றது என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் அதனைத் துpர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்காதவர்கள். ஆனால் ஜேவியியினர். இந்த நாட்டில் தமிழர்கள் என்றொரு தனியான தேசிய இனம் இருப்பதாகவே கருதவில்லை. எல்லோரும் இலங்யைர் என்ற மாயைக்குள் அமுக்கப் போகிறார்கள். இனி விகாரைகள் எல்லா இடத்திலும் முளைக்கும். ஆகவே ஜேவிபியை நம்பி தமிழ்கள் மோசம் போக வேண்டாம்.- ‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்தமுறை முடிவுகள் மிகச் சிக்கலானதாக இருக்கும்.கலந்து கொள்வேன்.- ‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!" - தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
Important Information
By using this site, you agree to our Terms of Use.