எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் சமர் காலத்தில் தொடர்ச்சியான தும்மல் இருந்தது ...ஆனால் கடந்த இரு வருடங்களாய் இல்லை ...அதற்கு பதிலாய் ஒரு பக்க கன்னம் ,பல் சாப்பிடேலாமல் நோகும்[பல் வருத்தம் இல்லை என்று நினைக்கிறேன் ...பல் வருத்தமாயிருந்தால் தொடர்ந்தும் இருக்க வேண்டும் அல்லவா?]... இவை சமர் முடிய போய் விடும்..
அத்தோடு கடந்த இரு வருடங்களாய் ஒரு பக்க காதும் அடைத்து விட்டது[முந்தி வந்து வந்து வந்து போனது இப்ப ஒரேடியாய் காதுக்குள் உர் என்ற சத்தம் கேட்டுக் கொண்டு இருக்குது.] ...சளி போய் காதை அடைக்குமா ?...உடம்பு சூட்டுக்கும்,இதுக்கும் சம்மந்தம் இருக்குமா?...என்னுடைய உடம்பு சூட்டுடம்பு என்று நினைக்கிறேன் ...காது அடைத்து கேட்க்காமல் விட்டுடும் என்று பயமாயிருக்கு.
தும்மல் இருந்த காலத்தில் இரவில் தான் அதிகமாய் இருந்தது ...காலையில் எழுந்ததும் ஒன்றும் இருக்காது ...தற்போது தும்மல் இல்லை ...ஆனால் குரல் சில நேரம் தடிமனாய் இருக்கும் ...ஆனால் தடிமனோ ,தலையிடியோ,தொண்டை அரிப்போ ஒன்றுமே இல்லை .
சும்மாவே ஆஸ்பத்திரிக்கு போக விருப்பமில்லை ,அத்தோடு பயம் ....எல்லோரும் பேசினம்.. போய்க் காதைக் காட்டு இல்லாட்டில் காத்து கேட்காமல் போய் விடும் என்று பயம் காட்டினம்...எனக்கொரு தீர்வு சொல்லுங்கோ....நேரம் எடுத்து பதில் எழுதுவதற்கு மிக்க நன்றிகள்