Everything posted by ரதி
-
ஈழத்தமிழர் அரசியல்
நான் முதலே எழுத நினைத்தது மறந்து விட்டது ...தமிழ் இளைஞ்ர்கள் முதலில் போராடியிருக்க வேண்டியது தமிழ் அரசியற் கட்சிகளுக்கு எதிராய் ...அவர்கள் உருப்படாதவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் அந்த கட்சியில் சேர்ந்து அல்லது ஒரு புதிய கட்சி தொடங்கி தமிழ் மக்களுக்காய் சேவை செய்திருக்க வேண்டும்
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
தமிழருக்கு எதிராய் கலவரங்கள் அதிகம் நடக்க காரணம் அவர்கள் திருப்பி அடித்தது தான் ...முஸ்லீம்கள், மலையக தமிழர் இந்த விடயத்தினை சுமுகமாய் கையாண்டனர் ..அதனால் அவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறைவு
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
1. அந்த காலத்தில் போராட போனதற்கு காரணம் அந்த காலங்களில் போராடப் போனவர்கள் ஹீரோவாக பார்க்கப்படடார்கள் ..தாங்களும் ஹீரோவாக பலர் ஆசைப்பட்ட்னர். வறுமை ஏதொருவகையில் வாழ்க்கையில் விரக்தி ,காதல் தோல்வி போன்ற ஏமாற்றங்கள் உண்மையிலேயே மண்ணுக்காய் போராட போனவர்கள் தலைவரோட சேர்த்து 10% வராது . 2.. கலவரங்கள் இது பற்றி எனக்கு தெளிவு இல்லை ....ஆரம்பத்தில் தமிழர்கள் தங்கட பாட்டில் இருந்த போதும் சிங்களவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் செய்தார்களா ?....ஒரு காரணமுமின்றி சிங்களவர்கள் , தமிழர்கள் மீது தாக்குதல் செய்தார்களா ? தெளிவு படுத்துங்கள் 3. இது பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன் ...அந்த காலத்திலேயே தமிழர்களும் அனுராதபுரம்,பொலநறுவை அடங்கலாய் சிலாபம் ,புத்தளம் ஏன் கொழும்பிலே இருந்தார்கள் தானே !...தமிழர்களிடம் கடுமையான உழைப்பும் ,வசதியும் இருந்தது விரும்பிய இடங்களில் குடியேறினார்கள் ...சிங்களவர்களிடம் அந்த நேரம் வசதி இல்லை ஆகவே அடார்த்தாய் குடியேற முயன்றார்கள் என நினைக்கிறன். 4. இது விளங்கவில்லை எனக்கு தமிழர் பகுதிகளில் தமிழில் தானே தொழில் செய்கிறார்கள் 5. அப்ப அந்த காலம் தொட்டு கொழும்பில் தமிழர்கள் வியாபாரம் செய்யவில்லையா?...என்னுடைய அப்பா போன்ற பல அரச சேவையில் இருந்த அப்பாமார் சிங்கள பகுதிகளிலே வேலை செய்தார்கள்....என் அம்மப்பா உட்பட நிறைய தமிழர்கள் அந்த காலத்திலேயே அரச வேலையில் சிங்கள பகுதியில் வேலை செய்தார்கள். 6. ஆங்கிலேயர்கள் ஏன் நாட்டை சிங்களவர்களிடம் கொடுத்திட்டு போனார்கள் ? தலைவர் போன்றவர்கள் மற்றவர்களுக்கு அநியாயம் நடந்தால் அதை தட்டிக் கேட்க்கும் மனநிலை கொண்டவர்கள்...அவர்களிடம் எமக்கு அநியாயம் நடக்கிறது தட்டிக் கேட்க்க விட்டால் அழிந்து போய் விடுவோம் என திரும்ப திரும்ப சொல்லப்பட தூண்டப்பட்ட அவர்கள் போராட்டத்தினை ஆரம்பித்தார்கள் ..பிறகு அதில் இருந்து அவர்களால் விடுபட முடியவில்லை . நான் மு.வாய்க்காலை ஏன் சர்வதேசம் வேடிக்கை பார்த்தது என்று கேட்க நினைத்தேன் ...நீங்கள் பதில் எழுதி விட்டீர்கள் ..கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் சரியாய் பயன்படுத்தவில்லை என்பதால் ஏதாவது ஒரு முடிவு வரட்டும் என்று சர்வதேசம் வேடிக்கை பார்த்திருக்கும் . உங்கள் கடைசி வரிகளில் உங்களோடு முற்றாய் ஒத்து போகிறேன் ....எமக்கானதை பெற்றுக் கொள்ள வளைந்து கொள்ள வேண்டிய நேரத்தில் வளைந்து கொள்ள தான் வேண்டும்
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
நான் உங்கள் இந்த கருத்தோடு முரண்படுகிறேன் ...முடிந்தால் தெளிவு படுத்துங்கள் ...சிங்களவருக்கெதிரான எமது போராடடம் முற்று ,முழுதாய் உணர்ச்சி வேகத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இயங்கியது ..ஆரம்ப காலங்களில் சிங்களவர்கள் அநியாயம் செய்து இருந்தாலும் அதை தமிழர் தரப்பு சுமுகமாய் கையாண்டு இருக்கலாம் . எமது போராட்டம் நியாயமாய் இருந்திருந்தால், ஏன் சர்வதேசத்தை ஈர்க்கவில்லை[சர்வதேசம் தமது நலன் சார்ந்து தான் செயற்படும் என்றாலும் , திரும்பியே பார்க்காத அளவிற்கு இருந்ததற்கு என்ன காரணம் ?] அல்லது நாங்கள் தான் சர்வதேசம் கொடுத்த சான்சை தவற விட்டுட்டோமா? எனக்கு நினைவு இருக்குது நான் யாழில் இணைந்த புதிசில் "நாம் ஏன் தமிழீழம் கேக்கிறோம்£ என்று ஒரு திரி ஆரம்பித்தேன் ...எல்லோரும் திட்டித் தீத்தார்கள்...அதையே நான் உங்களிடம் கேட்க்கிறேன். நான் புலிகளை மட்டும் குறை சொல்லவில்லை ..போராட்டம் என்ற ஒன்று ஆரம்பித்ததே பிழை என்பது தான் என் கருத்து ...அதற்காய் சிங்களவர்களுக்கு அடங்கி இருக்க சொல்லவில்லை ...முஸ்லீம் தரப்பு கையாளுகின்ற மாதிரி தமிழரும் கையாண்டு இருக்கலாம் என்பது தான் எனது ஆதங்கம்
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
ஓமோம் தலைவரோடு கூட இருந்தவர் சொல்றார் கேளுங்கோ...அடுத்தவனை நோக்கி கையை நீட்டும் முன் உங்கட முதுகில் என்ன இருக்குது என்று பாருங்கோ . உங்களை போன்றவர்களுக்கு இதை விட என்னால் எழுதேழும் ஆனால் இந்த திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
புலிகள் , கூட்டமைப்பில் எல்லா இயக்கங்களையும் இணைத்திருந்தார்கள் தான் ...அது எல்லாரையும் ஒரு குடைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்கான அரசியல் மாற்றம் தான் .ஒத்துக் கொள்கிறேன்...ஆனால் தாங்களே நீதிபதியாக இருக்க வேண்டும் . மற்றவர்கள் தங்கள் கட்டளையின் கீழ் இயங்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள் ...எல்லாரும் இணைந்த தமிழ் மக்களுக்கான பொதுக் கூட்டு என்றால் எல்லோரும் தான் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும் புலிகள் உட்பட . அதை விட நான் சொல்ல வருவது சாதாரண பொது மக்களை பற்றியது ..போராட்டங்கள் தொடங்கிய போது எத்தனை பேர் தங்கட பிள்ளைகளை இயக்கங்களுக்கு போக சொல்லி அனுப்பினார்கள்? படித்த ,நடுத்தர , வசதியானவர்கள் செய்தது முதலில் போராட்டத்தினை சாட்டி வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது தான் ....என்னுடைய கேள்வி இது தான் உண்மையிலேயே இவர்கள் சிங்களத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தால் இவர்கள் அல்லவா போராட போயிருக்க வேண்டும்... அல்லது இப்படியும் சொல்லலாம் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் அல்லது புலிகளது போராட்டம் சரி என்று நினைத்திருந்தால் கடைசி வரை நாட்டை விட்டு போயிருக்க மாட்டார்கள். அடுத்தது அங்கேயிருக்கின்ற பொது மக்கள் , அவர்கள் புலிகளுக்கு பயந்து தான் ஆதரவு கொடுத்தார்கள்...மு.வாய்க்கால் சண்டையின் போது ஆட் பற்றாக்குறையால் தவிர்த்த போதும் கூட தங்கட பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் ...அவர்களை பிழை சொல்லவில்லை . உண்மையிலேயே உணர்ந்து இயக்கத்திற்கு போனவர்கள் 5% கூட இருக்க மாட்டார்கள் ..அதுவும் போராட்டத்தின் தோல்விக்கு ஒரு காரணம் . அடுத்தது இது கொஞ்ச ஹாஸ்ஆ இருக்கும் அதுக்காக எழுதாமல் இருக்க முடியாது அல்ல்லவா...தலைவரால் தனது இயக்கத்து உறுப்பினர்களையே ஒரு குடைக்குள் ஒன்றிணைக்க முடியவில்லை.. உண்மையான போராட்டமாயிருந்தால் தோத்து இருக்க மாட்டோம்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எவ்வளவு காலமாய் யாழில் இருக்கிறீர்கள்🥲 24 மணி நேரத்திற்கு பின் எடிட் பண்ண முடியாது என்று தெரியாதோ ..ஏன் என்னை திட்டுவதற்கு🥰 எதுவும் பாக்கி இருக்கா
-
ஈழத்தமிழர் அரசியல்
என்னை பொறுத்த வரை போராட்டம் என்பது தமிழ் அரசியற் கட்சிகளின் உசுப்பேத்தலினால் தான் ஆரம்பிக்கப்பட்டது ...அவர்கள் தம்மை ,தங்கள் கட்சியை வளர்த்து கொள்ள இவர்களை பலி கடாவாக்கினார்கள் .... இது இந்தளவிற்கு வரும் என்று அவர்களே எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்...ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் பேச்சை கேட்டதால் வந்த வினை. இதற்காக அந்த காலத்தில் அநியாயமே செய்யவில்லை என்று சொல்லவில்லை ...அவர்கள் பெரும்பான்மை. அதைக் காட்டுவதற்கு ,தமிழர்கள் எந்த விதத்திலும் தம்மை விட முன்னேறி விட கூடாது என்பதற்காய் அநியாயம் செய்தார்கள் ...சிங்கள அரசியற் கட்சிகளும்,பிக்குகளும் தூபம் போட்டனர். தமிழ் அரசியற் கட்சிகள் நினைத்திருந்தால் இதை சமூகமாய் கையாண்டு இருக்கலாம் . முஸ்லீம் கட்சிகளால் முடியும் போது ஏன் தமிழ் கட்சிக்கலால் முடியாமற் போனது தமிழர்களுக்கு பொதுக் கூட்டு தேவை தற்போது அது இல்லை என்று எழுதியுள்ளீர்கள்...முந்தி இருந்ததா? புலிகளால் முழு தமிழரையும் ஒன்றிணைக்க முடிந்ததா? முஸ்லிம்களை தவிர்த்து பார்த்தால் கூட புலிகளால் தமிழரை ஒன்றிணைக்க முடியவில்லை . அப்படி ஒன்றிணைந்தால் மு.வாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
மொழி வாரியான தரப்படுத்தல் அறிமுகப்படுத்தனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்...அதற்கு எதிராய் ஆயுதம் தூக்கினார்கள் . சரி ....பிறகு பிரதேச அதாவது மாவட்ட ரீதியான தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது ...இதனால் பின் தங்கிய பிரதேசத்தை [வன்னி , மட்டு ] போன்ற இடங்களில் இருந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு வசதியாய் இருந்தது ...அப்படி இருக்கும் போது தரப்படுத்தல் போராட்டத்திற்கு ஒரு காரணமாய் சொல்லப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?
- 147 replies
-
-
-
- 2
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதற்குத் தான் பார்க்கிறேன் ஒரு திரியும் சிக்குதில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ர திண்ணையைக் காணேல்ல🙂 [கேட்டால் தான் திரும்பி கிடைக்குமோ😉 ] ...பச்சையும் குத்த முடியாமல் இருக்கு😐....யார் பச்சை குத்துகிறார்கள் என்டு பார்க்க முடியாமல் இருக்கு
-
அன்புள்ள அம்மா....
நல்ல பெற்றோர்கள் கிடைத்தால் தானே நல்ல பிள்ளை உருவாகும்
-
அன்புள்ள அம்மா....
நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்
-
பயணம்???
இங்கே கண பேர் உறவுகள் உயிரோடு இருக்கும் போது கணக்கெடுப்பதில்லை ....இறந்த பின் ஓலமிட்டு செத்த வீட்டை பெரிசாய் செய்வீனம் ...தொடருங்கள் விசுகு அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும்,நுணாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அவர் புத்தன் என்ற ஐடியை தான் பாவிப்பதில்லை ...மற்ற ஜடிகள் வேலை செய்யுது 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மை தான் ...ஆனால் ஒப்பீட்டளவில் எமது சமூகத்தில் பெண்கள் அடிப்பது குறைவு
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடி வாங்கியிருந்தாலோ🤣 அடி கொடுத்திருந்தாலோ😂 இப்படி சொல்ல மாட்டீங்கள் அண்ணா😆
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பெண் மீது ஆண் கையோங்குவதே ஆணாதிக்கம் தான் இல்லையா அண்ணா 😠
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுவொரு ஆணாதிக்க கருத்து
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவவின் குரலை விட எப்படி சிரித்த முகத்தோடு படுகிறார் இவவின் பேபோமன்ஸ் சுப்பர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிக்கின்ற கரும்புக்கு பிறந்த நாள் என்று சாட் காட்டுது ...யாழுக்கு வேறு பெயரில் வாறாரோ தெரியவில்லை ...எங்கிருந்தாலும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரும்பு 🎂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாலி ...வாழ்க வளமுடன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்னி...வாழ்க வளமுடன்