Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. இன்னும் ஒரு கால் அல்லது அரைநூற்றாண்டின்பின் முள்ளிவாய்க்காலிலே நின்ற ஒரு அதிகாரியோ அல்லது கீழ்நிலை அதிகாரியோ உயர்பதவி பெற்று ஓய்வுபெறும்போது றோவின் தமிழின அழிப்புக்கு உதவிய தில்லாலங்கடி வேலைகளையும், கொலைகளையும் மற்றும் எந்தெந்த நாடுகள் களத்திலே நின்றன என்பதையும் எழுதக்கூடும்.அப்போது நான் உயிருடன் இருக்கப்போவதில்லை. ஆனால் எமது தலைமுறை கற்பதற்கு ஒரு வாய்ப்பாகும் என்று நம்புகின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. நீங்கள் கூறுவதுபோல் நன்றியுரை புல்லரிப்பதுபோல் உள்ளது. ஆனால் அரசியல் சட்டமாக்கப்பட்டுள்ள பௌத்திற்கான முன்னுரிமை, பிராந்திய அரசியல், அனைத்துலக அரசியல், பொருளாதார நெருக்கடி, மதவாத பௌத்த பீடங்கள் என்பவற்றைக் கடந்து இனவாதத்தைக் களைந்து சமாதானத்தை உருவாக்கி ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவாரா? கட்டியெழுப்புவார் என்று நம்புகின்றீர்களா? தேர்தல் ஆணையாளர் முடிவுகளை அறித்து வெற்றிக்கான ஆவணத்தைக் கையளிக்குமுன் கட்சியரசியலுக்கப்பாலான அனைத்து இலங்கையருக்குமான சனாதிபதியாக இருக்கு வாழ்த்துகின்றேன் என்று கூறிவிட்டே கையளித்தார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி மேற்குறித்த வார்த்தைகளில் பொதிந்துள்ள கருத்துகள் அவதானிப்பிற்குரியனவாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. சிங்களம் தமிழரின் சகவாழ்வு குறித்துச் சிந்திக்கும் என இத்தனை அழிவுகள் அதன் பின்வந்த 15 ஆண்டுகால சிங்களத்தின் நகர்வுகள், அதற்குச் சான்றாகத் தமிழர் தெருக்கள் தோறும் பௌத்த அடையாளங்களை நிறுவுதல் என்று சிஙகள அரசு செய்துவருகின்றது. இதனை எதிர்த்து ம.வி.மு எங்காவது ஒருவார்த்தை கூறியுள்ளதா? இந்த (அவ)லட்சணத்தில் அநுரா வந்தால் தேனும் பாலும் தெற்கிலிருந்து வட-கிழக்கு நோக்கிப்பாயப்போகுதாம் என்று நம்புவோரை நினைத்து... நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. சிந்திக்க வேண்டிய விடயம். சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. இதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே அச்சமுள்ளது. றம் செய்யலாமென்றால் ஏன் ரணில், ரணிலுக்குச் சார்பான அரசுகள் மற்றும் படைகள் செய்ய முடியாதா? யே.ஆர் ஆட்சியில் நடாத்திமுடிக்கப்பட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலையிருந்து பார்த்து வளர்ந்துள்ள ரணிலின் சுயமுகம் இந்தத் தேர்தற் தோல்வியோடு பிரதிபலிக்குமாயின் நன்மையே.தன்னை ஒரு தாளாவாதியாகக் காட்டியவாறு பொளத்த சிங்கள மேலாதிக்கத்தை பேணிவரும் இரண்டு ஆண்டு ஆட்சியில் சிங்களவரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களையோ, வழிபாட்டிடங்களையோ விடுவிக்கமுடியாத சர்வ அதிகாரங்களும் கொண்ட அரசுத்தலைவர் ரணில். பொறுத்திருந்து பார்ப்போம்! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. நாமல் சொல்வதுபோல் நேர்மையோடு, ஊழல் செய்யாத அரசியல் செய்திருந்தால் ஏன் ஓடவேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்யக் கட்டாயம் பதவி தேவையா? பதவியில்லாது பொறுப்போடு மக்களுக்குத் தொண்டு செய்பவனே ''தொண்டன்''. இவர்கள் தண்டலுக்கல்லவா பதவியைத் தேடுவோர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது. நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும். இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. நல்லது. இது பற்றி ஏலவே யாழில் அலசப்பட்டுள்ளது. தேடிப்பாருங்கள்! . அல்லது உங்கள் வினாவுக்குத் தனியான ஒரு திரியைத் திறந்து கேட்டால் அறிந்தவர்கள் எழுதுவார்கள். நன்றி! இந்த சும் என்ற நரியினது தமிழினச் சீரழிவு அரசியலை முன்னெடுப்பதை கோடிட்டுக்காட்டவே கதிர்காமர். நன்றியுடன் நொச்சி.
  9. இந்த சும்மை நோக்கி கம்பவாரிதி ஜெயராஜ் ஒரு வேண்கோளொன்றை 30.11.2018இல் முன்வைத்துத் தெளிவாக எழுதப்பட்ட கடிதமென்றை எதேச்சையாகப் படித்தேன். உண்மையில் அதை இவன்போன்றோர் படித்துப் பார்க்க வேண்டும். மற்றுமொரு கதிர்காமர் தயார். அடுத்த வெளிநாட்டமைச்சர் தயார்.
  10. தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆரம்பம் September 15, 2024ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் காவல்துறை நேற்று முன் தினம் (13.09.2024) வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் மன்று கட்டளையிட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 5 அம்சக்கோரிக்கை….. 1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார். https://www.ilakku.org/தியாக-தீபம்-திலீபனின்-37-ஆம/
  11. மக்களை அன்றாடப் பிரச்சினைகளுள் சிக்கவைத்துள்ளதன் வாயிலாக அரசியலையும், அது தமிழ் மக்களை எப்படி நசுக்கிச் செல்கிறது என்பதையும் ஆழமாகச் சிந்திக்கமுடியாதவாறு தமிழினத்தை அன்றாடங்காச்சிகளாக்கிக் கையேந்து நிலையில் வைத்திருப்பதன் ஊடாகச் சிங்களமும் அதன் அடிவருத்தமிழ்த் தலைமைகளும் தத்தமது சுயநல அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இன்றும் கூட ஒரு தண்ணீர் தொட்டிக்கான உதவிகோரிய தகவலை புலனக்குழுவொன்றில் காண நேர்ந்தது. இப்படி எதற்கும் கையேந்தும் நிலையிற் தமிழினத்தை வைத்திருப்பதும் ஒருவகை நயவஞ்சக அரசியலே. புலத்திலும் படிப்படியாகச் செயற்பாட்டாளர்களும் பலியாகிவருவதன் அண்மைய சாட்சியாகச் சுவிஸில் நடைபெற்ற வீதிச் சண்டைகளை நோக்கலாம். குரலற்றவர்களின் குரலாக இருக்குவேண்டிய புலம்பெயர் தளமும் புலனாய்வுச் சதிகளுள் திணறுகிறதுபோல் தோன்றுகிறது. இவ்வேளையில் தமிழினத்தைப் பலபக்கமாகத் துகள்களாகச் சிதைத்துவிட இந்தத் தேர்தல்களத்தை சிங்களம் பயன்படுத்துகிறது. பலியாகாது தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வகையிற் தமிழினம் சிந்திக்குமாயின் நன்மையுண்டாகும். ஏற்கனவே தனக்கு அச்சுறுத்தல் என்று தனது நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பாவித்து இளையோரை உள்ளே தள்ளிய சும் போன்றோரைத் துரத்துதல் எப்படி? மக்களின் வாக்குகளாற் தோற்கடிக்கப்பட்டபோதும் பின்கதவால் நுளைந்துவிடும் தந்திரசாலிகள் அல்லவா? பின்கதவு சாத்தியமில்லாதுபோனால் அவர்கள் தமிழரது வீட்டை உடைத்து நொருக்கியதற்குக் காணிக்கையாகச் சிங்களத்திடம் பதவியைப் பெற்று மற்றுமொரு நீலனாகவோ, கதிர்காமராகவோ வலம் வருவர். தமிழினம் சரியான தலைமையோ வழிகாட்டலோ அற்ற இருள்வெளியினுள் அகப்பட்டு நிற்கும் அவலச் சூழலைக் கடந்துநிமிருமா? அல்லது தந்தை செல்வா அவர்களின் 'தமிழினத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்,, என்ற கூற்றானது இன்றும் பொருந்திப் போகிறதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. தமிழ் வேட்பாளர் முதல்தெரிவு. அனுர இரண்டாவது தெரிவு என்பதன் ஊடாக சிங்களத்தலைமையை ஏற்கின்ற வேளையில் முதல் தெரிவான பொதுவேட்பாளர் என்ற சிந்தனை வீழ்த்தப்படவே வாய்ப்புள்ளது. தமிழருக்கு எந்த உரிமையையும் தரமாட்டேன், கோத்தா கேட்டதுபோல் சிங்கள வாக்குகளில் வெல்வேன் என்று கூறி வென்றதுபோல் நாமல் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ள அதேவேளை ஏனைய ரணில், அனுர, சஜித் போன்றோர் எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்காது கடந்து செல்கின்றனர். தமிழரது உரிமைகள் தொடர்பாக உறுதியளிக்கப்போய் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதென்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். அனுர, சஜித், ரணில் மற்றும் நாமல் ஆகியோரில் எவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள் இல்லையென்பதே தெளிவாகத் தெரிகிறது. அனுர வட- கிழக்கைப் பிரித்த ம.வி.முன்னணியின் பாசறையில் வளர்ந்தவர். சஜித்தின் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகத்திலே மேற்கொள்ளப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலைகள் உட்பட்ட படுகொலைகள் குறித்து மன்னிப்புக் கோரக்கூடியவரா? ரணில் தமிழரை தந்திரமாக ஏமாற்றிப் புன்னகைத்தவாறு அழித்துவரும் யே.ஆரால் வளர்க்கப்பட்ட பழுத்த இனவாதி நாமல் கூறிவிட்டார் தனது நிலையை... தமிழர் தேசமானது காலத்துக்கேற்ப மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தபோதும் சிங்களத் தலைமைகளிடம் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? எனவே மாறாத சிங்களத் தலைமைகளை வாக்களிப்பின் ஊடாகவும் அல்லது வாக்களிக்காமலும் நிராகரித்துவிடுவதன் ஊடாகத் தமிழர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதே அவதானிப்பிற்குரியதாகும். 2ஆம், 3ஆம் வாக்கை யாராவது சிங்களத் தலைமைக்கு என்ற கருத்தானது மீண்டும் தம்தலையில் தாமே மண்ணள்ளிப் போடுவதற்கு ஒப்பானது. கடந்த பல ஆண்டுகளாக 13 அமுல்படுத்துங்கள்... ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழருக்குச் சுயாட்சியைத் தாருங்கள்... என்று கோரியபோதும் எதையுமே சிங்களம் வழங்கத் தயாரில்லை. நாமல் போன்றோரின் அறிக்கையானது சிங்கள இளம் தலைவர்களையும் நம்பத் தேவையில்லை என்பதை பறைசாற்றி நிற்கிறது. சனநாயகம் என்ற போர்வையுள் தமிழருக்கு எதிரான சட்டங்களை இயற்றி நிறைவேற்றிவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அதிபரும் தமிழருக்குத் தீர்வைத் தரமாட்டார்கள் என்பது நிதர்சமானபோது தமிழர் வாக்களித்துத்தான் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டுமா? வாக்களிக்காமலும் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம் என்ற சிந்தனை சரியாகவே தோன்றுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. பகிர்வுக்கு நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. நன்றி, தமிழினத்தின் மறதிநோயை எல்லோரும் பயன்படுத்தகிறார்கள், தமிழின அழிவில் தமது நலன்தேடும் நாடுகளை விட நாசகாரிகளாக நம்மிடையே வலம்வரும் தமிழின அழிப்புக்குத் துணைபோகும், இந்தியத்துக்குக் கழுவித்திரியும் தமிழ்த்தலைமைகள் என்று கூறும் கயவர் கூட்டத்தைத் தமிழினம் களையெடுத்துத் துரத்தும்ரை தமிழின அழிவு தொடர்வதைத் தடுக்கவும் முடியாது. காணாமற்போனோர் போராட்டத்தையே நீர்த்துபோகச் செய்த கூட்டமிருக்கும்வரை உரிமைகளுக்காகப் போராடும் களத்தைத் திறக்கவும் முடியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. தலைமைத்துவ ஒழுக்கத்தை முதலிற் 'தலைமைகள்' கடைப்பிடித்தனவா அல்லது கடைப்பிடிக்கின்றனவா என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தால் ஒரு நடுநிலமையாக இருந்திருக்கும். இது தமிழரசுக்கட்சிக்கு வக்காளத்து வாங்கியெழுதியிருக்கும் காப்புரைபோலல்லவா உள்ளது. 2009 இல் சீவனாகிவிட்ட தலையுட்பட எல்லோரும் இந்தியாவின் கட்டளைக்குக் கீழ்பணிந்து இந்தியாவில் பதுங்கியோரே. அதன் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பைச் சிதைத்தழித்துப் புலிநீக்கம் செய்து தலைமையைக் கைப்பற்ற சம் - சும் கோஸ்டி ஆடிய தகிடுதித்தங்கள் உலகறிந்தது. ஆடிய தகிடுதித்தங்கள் இன்று தமிழரசுக்கட்சியென்று ஒன்று உண்டா என்று தமிழர்கள் கேட்குமளவில் உள்ள வேளையில் பா.அரியனேந்திரன் ஏதோ கட்சியை அழித்ததுபோல் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள இந்த பத்தி எழுத்தாளரை என்ன சொல்வது. ஒருவேளை புனைபெயரில் சும்மோ என்று யோசிக்க வைக்கிறது. உண்மையோடும் இதய சுத்தியோடும் சுயவிமர்சனத்தை முன்வைத்து இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டும். இல்லையேல் இன்னுமினும் பிளப்புகள் தொடரும் தமிழின இழப்புகளும் தொடரும் என்பதே விதியா அல்லது இன்னும் சிலர் சீவனடைந்தால் தமிழினத்துக்கு விமோசனமீட்சி வரலாம் என்பது விதியா? யாரறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  16. புலத்திலே ஆலயங்களில் ஏற்பட்டுவரும் மடைமாற்றத்தை உரையாடலாகப் பதிவுசெய்துள்ளமை சிறப்பு. நானும் அண்மையில் ஒரு ஆலயத்துக்கு நெய்விளக்கேற்றுவமென்று போனா அம்பாள் ஆலயம் 'தேவஸ்தானம்' ஆக மாறி ஐயப்பர் வரை குடியேறியுள்ளார். திருத்தவேலைக்காக எல்லாத் தெய்வங்களையும் வரிசையாக வைத்துள்ளார்கள். திருத்திமுடிய என்பெயரிலை வருமென்று பார்ப்பம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. சத்துருக்கொண்டானில் சிங்களப் படைகள், ஊர்காவல்படைகளாற் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகள் உட்பட எம்தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து அகமேந்தி வணங்குகின்றேன்.
  18. விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு. Posted on August 31, 2024 by சமர்வீரன் 159 0 30.8.2024 விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியற் சித்தாந்தங்களையும் ஏற்று, தமிழின அழிப்பிற்கான நீதித்தேடலில் உறுதியோடு பணியாற்றிவந்த விராஜ் மென்டிஸ் அவர்கள், கடந்த 16.08.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தெளிவான நிலைப்பாட்டினை ஆழமாக உள்வாங்கி, தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பிற்கு, அனைத்துலக நீதிவேண்டிய போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி, புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும் புலம்பெயர்ந்த மக்களது அறவழிப் போராட்டக்களங்களையும் உணர்வுபூர்வமாக ஏற்று, அறவழியில் பயணித்த மனித உரிமைச் செயற்பாட்டாளராவார். இவர், சிங்கள இனத்தவராக இருந்து, தனது மக்களுக்காகக் குரல்கொடுத்தபோது அவ்வினத்தின் அதிகாரவர்க்கங்களால் நசுக்கப்பட்டு, நாடற்றவராக்கப்பட்டு, தான் பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவத்திற்கூடாகவே, தமிழ்த்தேசிய இனத்தின் மீது சிறிலங்காப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து வந்ததோடு தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளைத் தர்க்கரீதியாகவும் அரசியல்விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் வெளிப்படுத்திநின்ற மானிடத்தின் உரிமைக்குரலாவார். தமிழ்மக்களது கலாச்சாரத்திலும் குமூகவாழ்விலும் பொருளாதார வழிமுறைகளிலும் தன்னிறைவும் தாராள நிலையும் பெறவேண்டுமென்ற பெருவிருப்பும் அதில் தமிழர்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தெளிந்த கருத்தாய்வுகளை முன்மொழிந்ததோடு, தமிழினத்தின் விடுதலையினைத் தன் ஆழ்மனதில் இருத்தி, இறுதிவரை செயற்பட்டவராவர். இனவழிப்பிற்கு உள்ளான மக்களின் அனைத்துலக நீதி சார்ந்த சட்டமுன்னெடுப்புக்களை ஆய்வுசெய்து, அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு மனித உரிமைசார்ந்த கட்டமைப்புகளின் தொடர்புகளைப் பேணி, தமிழின அழிப்பினை உலகறியச்செய்து, அனைத்துலக நீதியினைவேண்;டி அறவழியில் பயணித்துத் தன் வாழ்நாளை இறுதிவரை அர்ப்பணித்த அற்புதமனிதரை நாம் இழந்துநிற்கிறோம். இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், விராஜ் மென்டிஸ் அவர்களின் தமிழினப்பற்றிற்காகவும் தமிழினத்திற்காற்றிய பணிக்காகவும் “மானிட உரிமைக்குரல்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.kuriyeedu.com/?p=620147
  19. தன் குடும்பவிடயங்களை எப்படிப்பொறுப்போடு நோக்கிப் பேணுதல்போல், பொதுத்துறைகளில் வேலைசெய்வோர் சிந்தித்தாலே சமூகமாற்றம் தானாக நிகழும். உண்மையில் சில மருத்துவர்களின் சேவைநோக்குப் போற்றுதற்குரிவை. அப்படியான அனுபவங்களின் ஊடாக உணர்ந்துதான் பார்க்க முடியும். சுயநல நோக்குடைய மருத்துவர்களால், நன் நோக்கோடு செயற்படும் மருத்துவர்களையும் ஒரே தராசிற் போட்டுவிட முடியாது
  20. ஒவ்வொரு நாளும் புடுங்கிப்பார்த்தா வேரே வராதே ஐயா பிறகெப்படியாம் மரவள்ளியிலை கிழங்குவரும்
  21. தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 12:24 PM தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். “வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று திங்கட்கிழமை (26) கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக மாற்று முறைமையை செயற்படுத்தும். அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015 -2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகளை முடிவுறுத்தி, அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம். அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமை மாற்றம் பெற வேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம். பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது. பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம் என அநுரகுமார திஸாநாக்க மேலும் தெரிவித்தார். தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார | Virakesari.lk
  22. யாழில் கணவனால் தீயிட்டு மனைவி வைத்தியசாலையில் அனுமதி Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 12:45 PM யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை அடிக்கடி இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளானவராவார். காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் கணவனால் தீயிட்டு மனைவி வைத்தியசாலையில் அனுமதி | Virakesari.lk
  23. மூன்று பிரதான வேட்பாளர்களையும் சமதூரத்தில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் Posted on August 25, 2024 by தென்னவள் 6 0 பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது தற்போது ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. இதில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை (24) மாலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர். பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஏன் ஆதரவளிப்போம் என கூறிய போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம். அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம் மக்கள் மத்தியில் தெளிவாக காரணங்களுடன் அறிவிப்போம். மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன். எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கே அவர்களாகவே புரியக்கூடியவகையில் அறிவிக்க கூடிய நிலை இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன் அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார். மூன்று பிரதான வேட்பாளர்களையும் சமதூரத்தில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் – குறியீடு (kuriyeedu.com)
  24. சுவி ஐயா, இலங்கை நேசர்கள் கண்டால் உங்கள் தலையை உருட்டப்போகிறார்கள். ஒருவேளை அப்படியொன்று நிகழுமானால் தமிழினத்திற்கான விடியலும் இணைந்துவரும் வகையில் எமது தலைமைகள் இராசதந்திரமாகக் காய் நகர்த்துவார்களாயின் நன்று. ஆனால்,சிறிலங்காவைப் பிணையெடுக்கும் மெத்தப்படித்த மேதாவிக் கூட்டம் கடந்து 15ஆண்டுகளாகக் கிடைத்த சூழலை மதிப்பீடுசெய்து ஒரு ஆணியையும் புடுங்கமுடியவில்லை.ஆணியைப் புடுங்குவதற்குப் பதிலாக ஐ.நா. வரைபோய் தமிழினத்தைச் சவப்பெட்டியுள் வைத்து ஆணி அடித்ததுதான் நாம் கண்டது. பாருங்கள் நாமொரு இனமாகத் திரளவேண்டிய சூழலிற்கூட தமிழ்த் தரப்பினரிடையேயே மூன்று பக்கமாக இழுக்கப்படும் நிலையெனும்போது இவர்களது இராசதந்திரை என்னவென்று சொல்லமுடியும். ஒரு பயமும் உள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் அப்படிப் போரொன்று வந்தால் அங்கும், இப்போது களத்திலே ரஸ்யா - உக்ரேன் என்று நிற்பதுபோல் நிற்பார்களாயின் நிலைமை யோசித்துப்பாருங்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.