-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார் கோப்புப்படம் ரோம்: கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பு தெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் 31 வயதான சத்னம் சிங் என்ற இந்திய தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சாலையில் விட்டு சென்றனர் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தின் உரிமையாளர்கள். அதன் பின்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இத்தாலியில் கொத்தடிமை தொழிலாளர்கள் மீதான அத்துமீறல் கவனம் பெற்றது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த தோட்டத்தின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சூழலில் தெற்கு இத்தாலி பகுதியில் கொத்தடிமைகள் போல பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்த விவகாரம் கவனம் பெற்றது. இதன் பின்னணியில் இந்தியர்கள் சிலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இத்தாலியில் இந்தியர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து இத்தாலி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தான் அங்குள்ள பண்ணைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 33 இந்தியர்களை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். மேலும், அவர்களை இதில் ஈடுபடுத்திய இருவரிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். அங்குள்ள பண்ணைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வாரத்தில் 7 நாட்கள், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.360 கூலியாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் செலுத்தினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலம் அமைத்து தருவதாக கூறி இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த தொகையை முழுவதுமாக செலுத்தும் வரை இத்தாலியில் பணியாற்றும் அவர்களுக்கு சம்பளம் ஏதும் வழங்கப்படாது என்றும் தகவல். அவர்கள் சீசனல் வொர்க் பர்மிட்டில் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதோடு கூடுதலாக ரூ.13 லட்சம் செலுத்தினால் நிரந்தர வொர்க் பர்மிட் வழங்கப்படும் என்றும் இந்திய தொழிலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் சட்டப்பூர்வமான குடியிருப்பு சான்று கிடைப்பதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மற்ற ஐரோப்பிய நாடுகளை போலவே இத்தாலியிலும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதன் காரணமாக அங்கு சட்டத்துக்கு புறம்பாக அரசின் அனுமதி இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும். அவர்களின் பங்கு விவசாய பணியில் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார் | Italian police free 33 Indian farm workers slavery - hindutamil.in
-
ஆயுதபலத்தோடு தமது நிலத்தைக் காத்துத் சுயமாக வாழத் தமிழர்கள் நகர்ந்தபோது தேடிவந்து கூடித் தமிழ்க்குடியை அழித்த கூட்டுகள். கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழினத்தின் குருதியிலே தமது நலன்களை அடையக் கீழ்த்தனமாக ஓடித்திரிகின்றன.தமது நரித்தந்திர செயற்பாட்டிற்கு புதிய புதிய பெயர்களைச் சூட்டியவாறு அலைகிறார்கள். ஆனால், தமிழின அழிப்பையோ, ஆக்கிரமிப்பையோ இன்றுவரை நிறுத்தமுடியவில்லை.இந்தக் கேவலமான இன அழிப்பு ஆக்கிரமிப்பு அரசியலுக்கு உலக ஒழுங்கு அது இது என்று ஊளையிட்டுச் சுரண்டிவாழ்தல் அல்லது கொள்ளையடித்து வாழ்தலே கொள்கையாகக்கொண்டு, அதற்குத் தடையாக இருக்கும் இனங்களையும் அரசுகளையும் பயங்கரவாதிகள், பயங்கரவாத அரசுகள் என்று பெயர்சூட்டி அழித்தவர்களிடம் மற்றும் அழிப்பவர்களிடம் உதவியை எதிர்பார்க்க முடியுமா? உலக இனங்களை சுயநிர்ணய உரிமையோடு வாழவிட்டாலே மனித அழிவைக் குறைத்துவிடலாம். ஆனால் ஏகபோகத்துக்காக அலையும் உலகு அதனை அனுமதிக்காது என்பதை முள்ளிவாய்காலில் இருந்து காஸா மற்றும் உக்ரேன் வரை உணர்த்திநிற்கிறது. தமிழினம் தமது பொருளாதார மனிதவள மேப்பாட்டை அடைவதன் மூலமே தனது இருப்பைத் தக்கவைக்க முடியும் என்பதையே கடந்தகாலங்கள் உணர்த்திநிற்பதைத் தமிழினம் உணர்ந்தும் உணராதிருப்பது மாறும்வரை மாற்றங்கள் நிகழாது. மடைமாற்றுவோரும் ஓயார்.
-
சம்பந்தன் காலமானார் ! 01 JUL, 2024 | 12:02 AM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் சற்று முன்னர் இயற்கை எய்தினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது அவருகு்கு 91வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தோற்கடிக்கவல்லவாம், எப்படியும் சமஸ்டியை(வெறும் சட்டியைக்கூடக் காட்டமாட்டார்கள் என்பது வேறுவிடயம்)அடைவதற்கான இராசதந்திர நகர்வாம். சிங்களம் பிரிக்கமுதல் சட்டாம்பிள்ளையளும் வாத்திமாரும் கட்சித்தலைமைப்போட்டியிலை நீதிமன்ற வாசல்ல நிற்கினமே. இதிலை சிங்களம் என்னத்தைப் பிரித்தாள இருக்கு. அவர்கள் இதைப்பார்த்து சிரித்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்.
-
சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! Posted on June 17, 2024 by தென்னவள் 13 0 பதின்மூன்றாம் திருத்தம் ஒப்பமிடப்பட்டபோது அதனை ஆதரித்த ரணில் இப்போது காவற்துறை அதிகாரம் கிடையாது என்கிறார். பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த அன்றைய பிரதமர் பிரேமதாசவின் மகன் சஜித் முழு அதிகாரங்களையும் தருவேன் என்கிறார். ஒப்பந்தத்தை அன்று எதிர்த்து இனவெறியாட்டம் புரிந்த ஜே.வி.வி.யின் வேட்பாளர் அநுர புதிய அரசியல் அமைப்பே தீர்வு தரும் என்கிறார். யாரைத்தான் நம்புவது? இவ்வருடம் இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இதற்கு முன்னையவற்றைவிட வேறுபட்டதாகவும், ஒருவகையில் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாகவும் நோக்கப்படுகிறது. தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், தேர்தல் களத்தில் சூடு ஆரம்பித்துள்ளது. பிரதான வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசநாயக்க ஆகியோர் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர். மகிந்தவின் பொதுஜன பெரமுன போட்டியிடுவதுபற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் கடந்த ஒரு மாதத்துக்குள் வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு முதலாம் கட்ட பரப்புரையை முடித்துள்ளனர். இதனால் வடக்கில் அரசியல் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி என்ற பதவி வழியாக அரசின் சில நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவு செய்பவர் என்ற போர்வையில் ரணில் தமது பயணத்தை மேற்கொண்டார். அவ்வேளை சில பொறிகளையும் புதைத்துவிட்டுச் சென்றார். அரசியல் தீர்வா, அபிவிருத்தியா இன்றைய தேவை என்ற கேள்வியை எழுப்பி தாமே பதிலையும் கூறினார். நாற்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பொருளாதார நன்மைகளையே வேண்டுவதாகவும் அரசியல் நன்மைகளை கேட்கவில்லை என்றும் இவர் கூறியது தமிழரின் அரசியல் தீர்வுக் கோரிக்கையை திசை திருப்பும் இலக்குக் கொண்டது. பாடசாலைகளில் திறன் வகுப்புகளை உருவாக்குவதற்கான தமது அன்பளிப்புகளை எடுத்துச் சென்று விநியோகித்த சஜித் பிரேமதாச அவை தமது சொந்த நிதியிலானது என்று தெரிவித்தது முக்கியமானது. இவரது தந்தையார் ரணசிங்க பிரேமதாச மாவட்டங்கள் தோறும் மாதிரிக் கிராமங்களை நிர்மாணித்தார். மகன் சஜித் முன்மாதிரி பாடசாலைகளை உருவாக்கி தமிழர்களின் அரசியல் தீர்வை இரண்டாம் மட்டத்துக்கு கொண்டுசெல்ல முனைந்துள்ளார். ஜே.வி.பி. என அறிமுகமான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசநாயக்க வடக்கு விஜயத்தின்போது அரசியல் மட்டுமே பேசினார். பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறையிலுள்ளவாறு செயற்படுத்துவேன் என்று கூறியிருந்தாலும் புதிய அரசியல் அமைப்பின் மூலமே இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமென தங்கள் நிலைப்பாட்டை சென்ற இடமெங்கும் வெளிப்படுத்தினார். 1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், ராஜிவ் காந்தியும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் உருவான 13வது திருத்தம் – மாகாண சபை முறைமைகள் பற்றியே இவர்கள் மூவரும் கவனம் செலுத்தினர் என்பதை காணக்கூடியதாக இருந்தது. தமிழர் தரப்பு கேட்டு வரும் சமஷ்டி முறை நிர்வாகம் பற்றி எதுவும் கூறாது இயலுமானவரை தவிர்த்துக் கொண்டனர். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசில் அமைச்சராகவிருந்து முழுமையாக ஆதரவு வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க. தமது பெரிய தந்தையார் முறையான ஜே.ஆரின் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டவர் இவர். பதின்மூன்றாம் திருத்தத்திலுள்ள காவற்துறை அதிகாரத்தை தர முடியாதென்றும் காணி நிர்வாகத்தை மட்டுமே மாகாண சபைக்கு வழங்க முடியுமென்றும் இப்போது கூறுகிறார். இலங்கை – இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது அதனை முழுமையாக நிராகரித்து, ராஜிவ் காந்தியை சந்திக்கவே மறுத்த அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவே 1990ல் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபையை கலைத்த பெருமைக்குரியவர். இவரது மகனான சஜித் பிரேமதாச காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபையை மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து தம்மால் வழங்க முடியுமென்று தமிழ் தலைவர்களிடம் உறுதி கூறியுள்ளார். 1987 ஒப்பந்த வேளையில் ஜே.வி.பி. என்ன செய்தது என்று சொல்லத் தேவையில்லை. தெற்கில் இரத்த ஆறு ஓடவைத்து தமிழரின் வணிக நிலையங்களை எரித்தும் கொள்ளையடித்தும் படுகொலைகளையும் புரிந்தவர்கள் இவர்கள். மாகாண சபை முறைமையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதால் தங்கள் கட்சியும் அதனை ஏற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், புதிய அரசியலமைப்பின் மூலமே அரசியல் தீர்வு காண முடியுமென்பது இவர்களது நிலைப்பாடு. மொத்தத்தில் இவர்கள் மூவரும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவதில்கூட நிலையான முடிவை இவர்களால் கூற முடியவில்லை. ஏதோ பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்திவிட்டால்(?) தமிழரை ஏமாற்றிவிடலாமென எண்ணுகிறார்கள் போல் தெரிகிறது. நல்லாட்சிக் காலத்தில் வடக்கில் ஆயிரம் விகாரைகள் அமைப்பேன் என்று பகிரங்கமாகக் கூறியவர் சஜித் பிரேமதாச. வெடுக்குநாறிமலை போன்ற தமிழரின் வழிபாட்டுத் தலங்களை சிங்கள பௌத்த ஏகாதிபத்தியம் தடை செய்து நிர்மூலமாக்கியபோது அமைதி காத்தவர் இவர். மாகாண சபைகளுக்கு கருமாதி செய்தவர் இவரது தந்தை. ஆனால் இவர் மாகாண சபைகளுக்கு முழு அதிகாரங்களையும் தரப்போவதாகச் சொல்கிறார். சஜித் பிரேமதாச இவ்வாறு உறுதி வழங்குவதற்கான வஞ்சக வலையை விரித்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின்போது தம்மைச் சந்தித்த தமிழ் தலைவர்களிடம், காவற்துறை அதிகாரத்தையும் தருவதாக சஜித் தெரிவித்தாரா என்பதை அவரிடமே நேரடியாகக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் என முடிச்சுப் போட்டவர் ரணில்தான். தேர்தலில் வாக்குகளைப் பெறும் நோக்குடன் சகல அதிகாரங்களையும் தரப்போவதாக கூறிய சஜித்துக்கு அவரது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுதான் ரணில் எதிர்பார்த்தது. சஜித் கூறிய காவற்துறை என்பது சமூக பொலிஸ், சுற்றாடல் பொலிஸ் என்று விளக்கம் கொடுத்துள்ளார் அவரது கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.மரிக்கார். சஜித்தின் கூற்றுத் தொடர்பாக வட்ட மேசை மாநாடு வேண்டுமென கோரியுள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய. பொதுஜன பெரமுனவின் றோகித அபேகுணவர்த்தனவும், இனவாதத்தின் அடையாளமாக விளங்கும் உதய கம்மன்பிலவும் சஜித்தின் கருத்தை வன்மையாக எதிர்த்துள்ளனர். சஜித்துக்கு எதிராக அவரது அலுவலகத்தின் முன்னால் எதிர்ப்புப் பேரணி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ரணில் போட்ட விதை சஜித்தின் வளவுக்குள் நன்றாக வளரும்போல் தெரிகிறது. சஜித் வடக்கில் வழங்கிய உறுதிமொழியில் – மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து – என்று கூறியதற்கும், அநுர குமார திசநாயக்க வடக்கில் தெரிவித்த கருத்தில் – தற்போது நடைமுறையிலுள்ளவாறு – மாகாண சபைகளை செயற்படுத்துவேன் என்று கூறியதற்கும் என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொண்டால் யாரும் மண்டையை உடைக்க வேண்டிய தேவையில்லை. மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து என்பது சிங்கள மக்களின் சம்மதத்தைப் பெற்று என்பதாகும். தற்போது நடைமுறையிலுள்ள என்று அநுர குமார தெரிவித்தது வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபை முறைமையை என்பதாகும். ஆக, இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு எதையும் மேன்மையானதாகக் கொடுப்பதாக எதுவும் தெரிவிக்கவில்லை. சிங்களத் தலைவர்களின் அரசியல்போக்கு தொடர்ந்து சுத்துமாத்தாக இருக்க தமிழர் தரப்பினரின் பம்மாத்துகள் அதற்கு இணையாக அரங்கேறுகின்றன. ஈழவர் அரசியலில் தனிஒட்டகமாக கூடாரத்துள் நுழைந்தவரின் செயல்கள் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டை நிர்மூலமாக்கி தமிழ் தேசியத்தை துடைத்தழிக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னரே தமிழரசு கட்சி தனது முடிவை எடுக்குமென அதிகாரபூர்வமாக அதன் தலைமை அறிவித்திருக்கையில், இவர் ஒருவர் மட்டும் தமிழர் தரப்பின் பொதுவேட்பாளரை தோற்கடித்தே தீருவேன் என வீரசபதம் எடுத்து சூளுரைத்துள்ளார். ஏற்க முடியாத இவரது செயற்பாடுகளால் இவரை இடைத்தரகர் என்று இப்போது பலரும் அழைக்க ஆரம்பித்துள்ளனர். பொதுவாழ்வில் இவ்வாறானவர்களை மாமாக்கள் என்று அழைப்பதுண்டு. பொதுவேட்பாளர் தொடர்பாகவும் இடைத்தரகர் தொடர்பாகவும் திபாகரன் என்னும் அரசியல் கட்டுரையாளர் அண்மையில் எழுதி தமிழ் இணையம் ஒன்றில் வெளியான நீண்ட கட்டுரையின் இரு பந்திகள் கீழே: ‘தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களை ஜனநாயக ரீதியில் வலுவற்றவர்களாக தோற்கடிப்பது, சிங்களத் தலைவர்களின் வெற்றியை மலினப்படுத்துவது, சிங்களத் தலைவர்களின் வெற்றியை சவாலுக்கு உட்படுத்துவது அல்லது அர்த்தமற்றதாக்குவது ஆகியவற்றை செய்துகாட்ட முடியும். இவ்வாறு ஒரு தமிழ் பொதுவேட்பாளரின் மூலம் பெறக்கூடிய நன்மைக்கு எதிராக பொதுவேட்பாளரை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, யாரெல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கவில்லையோ அவர்கள் யார்? உண்மையில் அவர்கள் சிங்கள தேசத்தின் சேவகர்கள், சிங்களத்தின் கையாட்கள், தமிழ் தேசியத்தின் மீது சிங்கள தேசத்தால் செருகப்பட்ட ஆப்புகள்தான் இவர்கள் என்பதையும் இனங்காட்டி தமிழ் மக்களிடையே ஊடுருவி இருக்கின்ற இந்தப் புல்லுருவிகளையும், வேடதாரிகளையும் துரத்தி அடிக்க முடியும். தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதில் சிக்கலை உருவாக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொதுவேட்பாளருக்கு மட்டும் தமது வாக்கை அளிப்பதன் மூலம் தமிழ் மக்களின் வாக்கை ஒன்று குவித்து பலப்படுத்துவோம். தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்துவோம். தமிழ் தேசியத்தை பலப்படுத்துவோம்”. இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது? பனங்காட்டான் சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! – குறியீடு (kuriyeedu.com)
-
தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்!-விக்னேஸ்வரன் Posted on June 17, 2024 by தென்னவள் 10 0 மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13ஆவது சீர்திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கி.பி. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே சிங்கள மொழி தோன்றியதாகவும் அதற்கு முன் சிங்கள இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா கூறுவது போல துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் இல்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில் சிங்களம் என்ற ஒரு மொழியே இல்லை. துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் எனக் கூறும் மெர்வின் சில்வா இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாளி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளின் கலவையிலேயே சிங்கள மொழி உருவாக்கப்பட்டது. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு பாளி மொழியும் கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழ் மொழியே இலங்கை தீவின் ஆதி மொழி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்!-விக்னேஸ்வரன் – குறியீடு (kuriyeedu.com)
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
nochchi replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ஐயா, எங்கிருந்து சேகரிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படி பொய்யை எவளவுகாலத்துக்குச் சொல்லமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை Posted on June 17, 2024 by சமர்வீரன் 23 0 கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின் Bodø நகரில் நடைபெற்றது.சப்மி நாட்டு அணியினை எதிர்த்து தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி மோதியது.மிகவும் பலம் பொருந்தியதும் 2022 ஆம் ஆண்டின் உலககிண்ண வெற்றியாளருமாகிய சப்மி அணியினரை எதிர்த்து ஏழு நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 89 வீராங்கனைகளில் 22 பேரை நோர்வேயின் ஒஸ்லோவில் ஒன்றிணைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கி அணிக்கான பிணைப்பினை ஏற்படுத்தி எமது போராட்டம், தேசியத்தலைவர்,மாவீரர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வீராங்கனைகளுக்கு உணர்வூட்டப்பட்டு அணியினை தயார்ப்படுத்தி Bodø வில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. பிற்பகல் 14.00 மணிக்கு ஆட்டம் கொடிவணக்கத்துடன் ஆரம்பமானது.ஆட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொனீபாவின் அனுமதியுடன் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புக்கு உள்ளன அனைவரையும் நினைவுகூர்ந்து ஆட்டத்தினை ஆரம்பித்தனர். தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி எதிரணிக்கு அச்சத்தினை ஏற்படுத்தினர்.எதிரணியினால் அடிக்கப்பட்ட பந்துகளை தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் பந்துகாப்பாளர் சாரா தடுத்தாடினாள்.எமது வீராங்கனைகள் வேகம்,மதிநுட்பமான ஆட்டத்தினூடாக 13 வது நிமிடத்தில் பிறீத்தி கொடுத்த அழகான பந்தினை டிலக்ஷிகா. சப்மி பந்து காப்பாளரின் தலைக்கு மேலால் வலைக்குள் அனுப்பினார்.இதன் மூலம் 1:0 என்னும் 75 வது நிமிடம்வரை முன்னணியில் நின்ற அணி நடுவரின் தவறான முடிவினால் தண்டனை உதை மூலம் ஒரு இலக்கினை எதிரணி பெற்று சமநிலையில் நின்றது.பின்னர் ஆட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது கிடைத்த மூலை உதையினைப் பயன்படுத்தி சப்மி அணி இன்னொரு இலக்கினை அடித்து வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கிக்கொண்டது. தாம் பங்கேற்ற முதல் உலகக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகி உலகத்தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடத்தினைப்பெற்று தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி இரண்டாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி கலந்து கொண்ட முதலாவது உலகக்கிண்ணப் போட்டியில் இறுதியாட்டத்திற்கு தெரிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது. சிறப்பாக கூறவேண்டுமெனில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகைதந்த வீராங்கனைகளை ஒரு வார காலத்திற்குள் உலகக்கிண்ண போட்டிக்கு தயார்ப்படுத்திய பயிற்சியாளர்திரு தீபன் ,உதவிப்பயிற்சியாளர்கள் திரு எழில்,திரு சுஜன் அணி மேலாளர் திருமதி சங்கரி,உதவி அணி மேலாளர் அஜனி , அணி மருத்துவ மேலாளர் அபிராமி, மகளிர் அணி மீடியா மேலாளர் சௌம்யா அணியின் வெற்றியினை தங்கள் ஒவ்வொருவரின் வெற்றியாக எண்ணி உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். விளையாட்டின் மூலம் பலமான அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தலாம் என்பதற்கு கடந்த காலங்களிலும் பல முன்னுதாரணங்கள் இருந்திருக்கின்றன 1968 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் ஆபிரிக்க அமெரிக்க வீரர்களான தொமி சுமித்,ஜோன் கார்லோஸ் ஆகியோர் “Black power Salute” மூலம் அமெரிக்காவில் இருந்த இனத்துவேசத்துக்கு தமது பலமான எதிர்ப்பை உலக அரங்கில் வெளிப்படுத்தினர். அது போல உலகக் கிண்ண போட்டி ஒன்றில் தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்படும் போது தமிழீழ தேசியக்கொடியை ஏந்தியவாறு வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவதைப் பார்க்கின்ற உலகத்தமிழ் மக்களின் மனங்களில் தமிழீழ தேசம் மீதான பற்றுறுதி மேலும் வலுப்பெறும். அதுபோல உலகெல்லாம் வாழும்,ஏனைய விளையாட்டுக்களில் ஆர்வமும் திறமையும் கொண்ட தமிழீழ வீரர்களுக்கும் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணி முன்னோடியாக இருக்கும். கலை,கலாச்சாரம்,விளையாட்டு போன்றவை ஒரு தேசத்தின் ஆத்மாவை வெளிப்படுத்தும்,வளப்படுத்தும் விடயங்கள் ஆகும் . அந்த வகையில் விளையாட்டின் மூலம் தமிழீழத்தின் ஆத்மாவை உலக அளவில் வெளிப்படுத்த கொனீபா மிகப்பெரிய இடத்தை தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிக்கு வழங்கியிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் உலகமெல்லாம் பரவி வாழும் எம் தமிழ் உறவுகள் உங்களால் முடிந்த பொருளாதார பலத்தினை வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறோம் எமது அணியின் சீருடைகளை வாங்கவும் எமது அணிக்கு உங்கள் அன்பளிப்புகளை வழங்கவும் https://tamileelamfa.net/donate/ என்ற எமது இணையதளத்தினை பார்வையிடவும். ஊடகப்பிரிவு தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம். 2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை – குறியீடு (kuriyeedu.com)
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
nochchi replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
1.நான் இங்கே யாரையும் எந்தவொரு இடத்திலும் மேற்கினது ஊடகங்களை நம்புமாறு கோரவில்லை. யேர்மனியச் செய்தி நிறுவனத்திற் கேட்ட செய்தியின் அடிப்படையில் எழுதியுள்ளேன். 2. மேலே வசியவர்களால் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நிராஜ் டேவிட் அவர்களது கூற்றுகள் அனைத்தும் பொய்யா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
nochchi replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
nochchi replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
உக்ரேனுக்கான உதவிக்கான தனிக் கட்டளைப்பீடம் யேர்மனியிலுள்ள விஸ்பாடன் நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யேர்மனியச் செய்திகள் கூறுகின்றன. மேலே வசியவர்கள் இணைத்துள்ள காணொளியில் கூறப்படும் விடயங்களும் நிலமை மிக மோசமாகி வருவதோடு புதினின் போர்ப்புயல் மூலோபாயம் தலைகீழாகிவிடும்போல் தெரிகிறது. -
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
-
தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். Posted on June 15, 2024 by சமர்வீரன் 55 0 தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று லிவர்குசன் தமிழாலயம்,கால்ஸ்றூவ தமிழாலயம் மற்றும் லூடன்சயிட் தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்றதின் ஒருசில ஒளிப்படங்கள். தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். – குறியீடு (kuriyeedu.com)
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
குமாரசாமி ஐயா நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால் ஒரு சில டமிழ் அரசியல்வாதிகள் எங்கே தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்றல்லவா ஏலவே அரங்கமைத்து அச்சுறுத்தல் பாணியில் அறைகூவல் விடுகிறார்கள். 1.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதே தப்பு. 2.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டவே கூடாது. 3.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளருக்கு எதிராக முழுமூச்சோடு செயற்படுவேன். 4.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் அரைஞாண்கொடியையும் கழற்றிவிடுவர். 5.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் சஸ்டிக்கு ஆபத்து. இப்படியான தமிழர் தரப்புகளின் கோதாவில் இவரது நகர்வை எப்படியாவது ஒழித்துக்கட்டவே முயற்சிப்பர். அதனை சிங்களவரோ அல்லது சிங்கள அரசோ செய்யத்தேவையுமில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.கணவனையும் பறிகொடுத்துவிட்டு இனத்துக்காக் குரல்கொடுப்பவரை வரவேற்காதுவிடினும் வசைபாடாதாவது இருக்கலாம்.ஆனால், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு. ஐநாவுக்கும் அனந்தி சசிதரன் அவர்கள் சேலையணிந்துதானே வருகிறவர் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களுக்கு வீரவணக்கம்.
-
இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் -ரஸ்ய இராணுவமே அவர்களை இணைத்துக்கொண்டது - மோர்னிங் Published By: RAJEEBAN 03 JUN, 2024 | 04:10 PM ரஸ்ய அதிகாரிகளி;ற்கும் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் இராஜதந்திரிகள் சிலருக்கும் இடையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது ரஸ்;யாவில் இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் என்ற விடயம் தெரியவந்துள்ளதாக விடயம் குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்;கையின் முன்னாள் படைவீரர்களை ரஸ்ய இராணுவமே தனது படையணிகளில் இணைத்துக்கொண்டுள்ளது வாக்னர் குழுக்கள் போன்றவை அவர்களை சேர்க்கவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது எனவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தங்கள் படையணிகளில் முன்னாள் இலங்கை படைவீரர்கள் உள்ளதையும் அவர்கள் போரில் ஈடுபட்டுள்ளதையும் ரஸ்ய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஸ்ய இராணுவத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் அதனை பின்பற்றவேண்டும் இதன்காரணமாக முன்னாள் படைவீரர்கள் தாங்கள் நினைத்தநேரத்தில் அங்கிருந்து வெளியேற முடியாது ரஸ்யாவின் இராணுவத்தின் கட்டளை பீடங்களே அதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூரிய இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய படைப்பிரிவின் ஒருபகுதியாக செயற்படுகின்றனரா என்பதை அறிவதற்காகவே மொஸ்கோ சந்திப்பை இலங்கை பயன்படுத்தும் என தெரிவித்திருந்தார். அவர்களை போர் முன்னரங்கிலிருந்து அகற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்காகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அறிவதற்காகவும் காயமடைந்தவர்களை மீள இலங்கைக்கு அழைக்க முடியுமா என ஆராயவும் இந்த சந்திப்பை இலங்கை பயன்படுத்தவுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் ரஸ்ய இராணுவத்தின் ஒரு பகுதியாகவே போரிடுகின்றனர் -ரஸ்ய இராணுவமே அவர்களை இணைத்துக்கொண்டது - மோர்னிங் | Virakesari.lk
-
இணைப்புக்கு நன்றி. இதயமற்றவர்களின் உலகில் ஒப்பாரிகளைவிட சிரிப்புக்கே மதிப்பதிகம்.