Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5416
  • Joined

  • Last visited

  • Days Won

    6

Everything posted by nochchi

  1. இவர்களது வேலையே நோகாமல் அறிக்கையிடுவது அல்லது அறிக்கைவிடுவது. 2008லே தமிழினம் கெஞ்சிக்கூவியழுதபோது மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வாகனங்களோடு சாட்சியமற்றை இனக்கொலைக்கான சூழலைச் சிங்களத்துக்கு உருப்படியாக வழங்கிவிட்டு கிளம்பியவர்களிடம் நாம் இதைவிட அதிகம் எதிர்பார்த்தால் ஏமாற்றமே.
  2. பொக்கிஷம் விக்கி,மேஜர் மதன் போன்றோரின் பாணியில் உரைத்திருக்கின்றிர்கள். ஏதோ இந்தியா உலக வல்லராசாகி, உலகமே இந்து மயமாகி, உலகம் அழியாது காக்கப்படல் வேண்டும்.
  3. கஜேந்திரகுமர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும். Posted on June 16, 2023 by தென்னவள் 58 0 தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுதொடர்பான வழக்கினை அவதானி;ப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு எழுதியுள்ள கடித்தில் புலம்பெயர் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெறும் சமீபத்தைய சம்பவங்கள் குறித்து நாங்கள் கூட்டாக எழுகின்றோம், எங்கள் கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கான பொறுத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தக்கவலைகளில் முக்கியமானது இந்துக்கோவில்கள் உட்பட தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை அழிப்பதும் அதனை தொடர்ந்து பௌத்தர்கள் யாரும் வசிக்காத பகுதிகளில் பௌத்த ஆலயங்களை அமைப்பதுமாகும் என புலம்பெயா தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கை பாதுகாப்பு படையினரின் முழுமையான ஆதரவுடனேயே இது இடம்பெறுகின்றது எனவும் புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. தமிழ்கட்சிகள் மற்றும் தமிழ் மக்களிற்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன தமிழ் அரசியல் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிராமமொன்றில் தனது கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தவேளை சீருடை அணியாத புலனாய்வு பிரிவினர் தலையிட்டனர் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவர்களின் அடையாளத்தை உறுதிசெய்யுமாறு கோரியவேளை அவர்கள் அதற்கு மறுத்தனர், அதன் பின்னர் அவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டார் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார் பெண்ணொருவர் உட்பட மேலும் இருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கான கடிதத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவை தெளிவாக தமிழ் அரசியல் தலைமை மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் தந்திரோபாயமாகும்,தமிழ்மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் அதிகாரத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களால் திட்டமிடப்படுகின்றன எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகமோசமான யுத்தகுற்றச்சாட்டுகள் போர்க்குற்றங்களிற்காக அமெரிக்க இரண்டு வருடங்களிற்கு முன்னர் அமெரிக்கா விதித்த தடையையும் அலட்சியம் செய்து சவேந்திரசில்வாவிற்கு முப்படைகளின் பதவி உயர்வு வழங்கப்பட்டது,சமீபத்தில் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தமிழர் பகுதிகளில் மிக அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி மீண்டும் தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை வழங்குவதற்கான கூடுதல் ஊக்கத்தை வழங்கியுள்ளது என புலம்பெயர் தமிழர்அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம், என தெரிவித்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இந்தநிலையை தடுப்பதற்கான முதல் நடவடிக்கையை நீங்கள் எடுக்கவேண்டும்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. கஜேந்திரகுமர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை அவதானிப்பதற்காக கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பவேண்டும் – குறியீடு (kuriyeedu.com)
  4. மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் விசாரியுங்கள் Posted on June 17, 2023 by தென்னவள் 9 0 வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்குப் பரிந்துரைத்திருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழு, அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது. இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: ‘உள்நாட்டிலும், பூகோள ரீதியிலும் மிகமோசமான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும்கூட, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது. அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இலங்கை முன்னேற்றமடைந்திருக்கின்றது. அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தமும், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தையும், நிதியியல் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தியதுடன் தேர்தல் செயன்முறையில் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தியது. ஊழல் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய வங்கிச் சட்டமூலமானது அவ்வங்கியின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன், நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தின் நிலைபேறானதன்மையினை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கின்றது’ என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதேவேளை இம்மீளாய்வின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் 106 பேர் உரையாற்றியதுடன் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், மாலைதீவு, நேபாளம், ரஷ்யா உள்ளடங்கலாக 101 நாடுகள் பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. இலங்கைப் பாராளுமன்றத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீதான திருத்தங்கள், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்புடைய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை தயாரிக்கும் செயன்முறையை நோக்கிய இடைக்கால நடவடிக்கையாக அமைந்தது. அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் சட்டத்தைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. மேலும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட பிரிவொன்று ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவானது வடமாகாண அபிவிருத்தி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழு ஆகியவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அடுத்ததாக காணாமல்போனோர் குறித்த பெரும்பாலான முறைப்பாடுகள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், அவைகுறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருகின்றது. அத்தோடு இழப்பீட்டுக்கான அலுவலகமானது இதுவரையில் 4610 சம்பவங்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தமாக 277.9 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்கியிருக்கின்றது. அச்சம்பவங்களில் பெரும்பான்மையானவை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் பதிவானவையாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 294 பரிந்துரைகளையும் இம்மீளாய்வுக்குழு அதன் அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. அவை ஏனைய நாடுகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் தொகுப்பாகும். அவற்றில் முக்கிய பரிந்துரைகள் வருமாறு: சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற ஏனைய நடத்தைகள் மற்றும் தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் தெரிவுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச பொருத்தனைகளின் தேர்வுக்குரிய செயன்முறையை ஏற்றுக்கொள்ளுதலும் நடைமுறைப்படுத்தலும், மரணதண்டனையை இல்லாதொழிப்பதை இலக்காகக்கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் இரண்டாவது தேர்வுக்குரிய செயன்முறையை அங்கீகரித்தல், சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தல், பொருளாதார மற்றும் நிதியியல் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதுடன் அதன் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான வளங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்தல், நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடியவாறு விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையிலான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், உலகளாவிய காலாந்தர மீளாய்வின் பின்னரான பரிந்துரைகளின் அமுலாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான உள்ளகப்பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப்பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சுக்களைத் தடுத்தல், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டித்தல், இன, மத, சாதி, பால் மற்றும் வேறு எந்தவொரு அடிப்படைகளிலுமான அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், அனைத்து வடிவங்களிலுமான சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிசெய்தல், அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுத்தல், அனைத்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளல் ஆகிய பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் விசாரியுங்கள் – குறியீடு (kuriyeedu.com)
  5. தமிழர் தாயகத்தை தொடர்ந்தும் பதட்ட நிலைக்குள் வைத்திருப்பதனை சிங்களம் மட்டுமல்ல, ஏனைய தரப்புகளும் விரும்புவதாகவே நோக்கவேண்டியுள்ளது. தொடர்ந்தும் அச்சுறுத்துவது, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது, போதைப்பாவனையை ஊக்குவிப்பது, வாள்வெட்டுக்குழுக்களை வைத்து வன்முறையை ஏற்படுத்துவது ஒருபுறமும் நிலஆக்கிரமிப்பு, புத்தரை நடுதல், ஆலயங்களை ஆக்கிரமித்தல் என மறுபுறமும் தமிழர் அமைதியற்றவர்கள் என்ற தோற்றப்பாட்டைத் தொடர்ந்து பேணுவதூடாகச் சிங்களம் தனது தேவைகளை அடைகின்றது. சட்டத்தின் ஆட்சி தமிழர் பகுதிகளில் இல்லையென்றாகிவிட்டதால் அடாவடிகள் தொடரவே செய்யும். ஏனென்றால் தமிழரிடம் ஆயுதபலமும் இல்லை. அரசியற் பலமும் இல்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மக்கள் பிரச்சினைகள் குறித்த கரிசனையும் இல்லை.
  6. சிங்களத்தோடு கைகோர்த்துபேச்சுவார்த்தைக்கு இழுத்துவந்து, இழுத்தடித்து தமிழீழ நிழரசை அழித்ததோடு தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் தொடர்வதை அமைதியாக அனுமதித்தவாறு ' நிலைபேறான அபிவிருத்தி,அமைதி, நீதி' என்ற அலங்கார வார்த்தைகளால் தமிழரை ஏய்த்து அழித்து சிங்கள மயமாக்கலுக்கு ஒத்துழைப்பதை வெவ்வேறு பெயர்களூடாக அழைத்துத் தமிழினத்தை அழிக்கத் துணைபோவதையே இன்று மேற்கும் கிழக்கும் அயலகமும் செய்கின்றன. நோர்வே ஒரு நடுநிலை நாடல்ல என்பதை பலஸ்தீன அழிவுகளும் பறைசாற்றுகின்றன. முதுகெலும்பற்ற நாடுகளா அல்லது தமிழின அழிவில் ஏதாவது எலும்புகளாவது சிங்களம்போடுமென்ற சிந்தனையா?
  7. வளர்முகம் நோக்கிய பலரது கருத்துகள் அவதானிப்புக்குரிய அதேவேளை, யஸ்ரின் அவர்களின் அவதானிப்பும் சுட்டுதல்களும் சரியானதே. நன்றி, கற்றலில் இருந்து வாழ்வை வளமாக்குதல்வரையான செயற்பாடுகள் ஒரு தொடர் சங்கிலியாக நடைபெறுவன என்பதை குமுகாய ஆர்வலர் முதல் ஆசிரியர்கள்,புலம்பெயர் நன்கொடையாளர்கள், கல்விசார் மாகாண, மாவட்ட, பிரதேச, கொத்தனி வலயங்களின் அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு கூட்டு முயற்சியில் இறங்குவதோடு, வட-கிழக்குக்கான ஒரு பொதுக் கல்வி அபிவிருத்திக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதனூடாகக் களஆய்வு, நிதிமேலாண்மை என்பவற்றைத் திட்டமிடுதலும் செயற்படுத்தலும் வேண்டும். அதேவேளை வளவாளர்களையும்,உளவியலாளர்களையும் கொண்ட குழுக்களையும் உருவாக்கி கற்றலுக்கப்பாலான வாரஇறுதிநாள் கலந்துரையாடல்களை மேற்கோண்டு மாணவர்களின் உளவளத்தைப் பேணும் செயற்திட்டத்தையும் போட்டி,பொறாமை என்பவற்றைத் தூரவைத்துவிட்டு மேற்கொண்டால் மாற்றத்தைக் காணலாம் என்று நினைக்கின்றேன். அதேவேளை அரசியற் தலையீடுகளற்ற ஒரு பொதுத்தளமாக இருப்பதும் அவசியமாகும் நன்றி
  8. ‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்! Posted on June 2, 2023 by தென்னவள் 18 0 நாட்டின் இறுதிக்கட்ட போரில் செய்யப்பட்ட இனப் படுகொலைகளையும், போரில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் பல நிகழ்வுகளை கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில், குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் இடம்பெற்றது. யுத்தம் முற்றுப்பெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், போர் முரசு கொட்டப்படுவதற்கு முதற்புள்ளி இடப்பட்டது எப்போது, யாரால் என்பதை அறியாத தரப்பினருக்கே இந்த பதிவு. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவே 1987 மே 26 அன்று முதல் முதலாக யுத்தத்தை ஆரம்பித்தார். யாழ். குடாநாட்டை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக அவர் புலிகளுக்கு எதிராக வடமராட்சியில் போரிட முன்னின்றார். அதன் பின்னர், இந்தியாவின் தலையீட்டால் அந்த போர்க்கொதிப்பு தற்காலிகமாக தணிந்தது. அன்று ‍ஜே.ஆர். ஆரம்பித்த யுத்தத்தை 2009 மே 18ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முடித்துவைத்தார். “1987 மே, ஜூன் மாதங்களில் விடுதலைப் புலிகளை (Liberation Tigers) ஒழிப்பதற்காக இராணுவத்தினரால் ‘லிபரேஷன் ஒபரேஷன்’ (Liberation Operation) – ‘விடுதலை நடவடிக்கை’ என பெயரிடப்பட்டது. வடமராட்சிக்கு பின்பு குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்போம். புலிகள் ஏனைய தமிழ் இயக்கங்களை தடை செய்து, தனித்து இயங்கியதால் அவர்களை அழிப்பது சுலபமானது” என அன்றைய அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருந்தார். “பிரபாகரனும் மூத்த தலைவர்களும் அவர்களோடு ஏராளமான ஆயுதங்களும் வல்வெட்டித்துறையில் இருப்பதாக எமது புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களே லிபரேஷன் ஒபரேஷனை முன்னெடுப்பதற்கான முக்கிய காரணம்” என கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க எழுதிய ‘Adventurous Journey : From Peace to War, Insurgency to Terrorism’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “விடுதலைப் புலிகளுக்கு இந்திய உளவுப் பிரிவு ‘றோ’ (RAW) ஆயுதங்களை வழங்குவது எமக்கு தெரியவந்தது. எனினும், இந்திய அரசும் றோவும் இதனை மறுத்தன. புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை படையினரை இந்தியா அனுமதிக்காது. காயமடைந்த புலிகள் சிகிச்சைக்காக கடல் வழியாக தமிழ்நாட்டுக்குச் செல்வதையும் நாம் அறிவோம். கூட்டுப்படை தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருக்கு ஒபரேஷனை விளக்கும் படம். 1987 ஜூன் 4ஆம் திகதி இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களை யாழ். குடாநாட்டில் போட்டதால், வடமராட்சி போரை நிறுத்துமாறு ஜனாதிபதி ஜெயவர்தன எனக்கு உத்தரவிட்டபோது நான் மறுத்தேன். இதனால் கோபமடைந்த அவர், ‘இந்தியாவுடன் நாம் போர் புரியமுடியாது’ என்றார். போர்க்களத்தில் இத்தகவலை படையினருக்கு கூறி, போரை நிறுத்துமாறு அறிவித்தபோது அவர்களின் முகத்தில் ஏமாற்றத்தை கண்டேன். படையினர் ‘இந்தியா எப்படி இதனை செய்யலாம்’ எனவும் கேட்டனர். அத்தோடு, ‘லிபரேஷன் ஒபரேஷன்’ நிறுத்தப்பட்டது” எனவும் ஜெனரல் ரணதுங்க அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். 1987 மே 26 காலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், அதனால் மக்களை ஆலயங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வானொலியில் அறிவிக்கப்பட்டதுடன், ஹெலிகொப்டர்களில் இருந்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. அதனையடுத்து, மக்கள் பாடசாலைகள், ஆலயங்களில் தஞ்சமடைந்தனர். யாழ். குடாநாட்டில் முதல் முதலாக மக்களின் இடம்பெயர்வு வடமராட்சியிலேயே இடம்பெற்றது. மாட்டு வண்டில்கள், லாண்ட்ரமாஸ்ரர், உழவு இயந்திரங்கள், சைக்கிள்களில் தமது பொருட்களுடன் அதிகாலையில் இருந்து தென்மராட்சி, வடமராட்சி கிழக்கு நோக்கி சென்றனர். அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்தின் மீது 1987 மே 29 நடத்தப்பட்ட எறிகணை வீச்சால் அங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலரின் உடல்கள் உருக்குலைந்தன. பலர் காயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு செல்லமுடியாத நிலையில் காணப்பட்டனர். அப்போரில் சுமார் 8000 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். எறிகணைகள், விமானக் குண்டுவீச்சுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் குடாநாடே அதிர்ந்தது. இராணுவப் படையினர் வருவதைத் தடுக்க விடுதலைப் புலிகளும் போராடினர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் போதிய ஆட்பலம் இருக்கவில்லை. தொண்டமானாறு முதல் பல திசைகளிலும் இராணுவத்தினர் முன்னே விரைந்து சென்றனர். மணற்காடு, மண்டான், முள்ளி பகுதிகளில் ஹெலிகொப்டர்கள், கடற்படை படகுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தனர். அந்த தாக்குதல் நடவடிக்கையின் பின்னர் வடமராட்சி பகுதி 1987 ஜூன் 1ஆம் திகதி இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பல இடங்களில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன. சுமார் 5000 இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, கப்பல் மூலம் காலி பூசா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். சில இளைஞர்கள் ஓடவிட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்போது நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பெருமளவினர் காயமடைந்தனர். இந்நிலையில், வடமராட்சியில் இருந்து ஏனைய இடங்களுக்கு செல்வதற்கு கொடிகாமம் வீதியை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு, முள்ளி சந்தியில் சோதனை நிலையமும் அமைக்கப்பட்டது. அத்தோடு, வல்லை வீதியும் மூடப்பட்டது. நடந்த போர் நடவடிக்கையில் இந்தியா தலையிடாமல் இருந்திருந்தால், வெளிநாடுகளின் உதவியுடன் யுத்தத்தையும் முடித்து விடுதலைப் புலிகளையும் ஒழித்திருப்பேன் என ஜனாதிபதி ஜெயவர்தன அப்போது இந்திய ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். “புலிகளுடன் நாம் யுத்தம் புரியும்போது தடுத்தீர்கள்; இன்று உங்களுக்கு வீண் செலவுகளும் பாரிய அழிவுகளுமே எஞ்சியுள்ளது” என 1987 ஒக்டோபர் 10ஆம் திகதி விடுதலைப் புலிகள் – இந்திய படை மோதல் ஆரம்பமான போது ஜனாதிபதி ஜே.ஆர். அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.டிக்சிற்றிடம் கூறினார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் கொழும்பில் ஜனாதிபதி ஜே.ஆரை சந்தித்து புலிகளுக்கு எதிராக இந்திய படையினர் யுத்தத்தை ஆரம்பிக்க அனுமதி கேட்டபோதும், “நானும் இதனையே செய்தபோது கண்டித்தீர்கள்! எனது படையினரின் போரை உங்கள் படையினர் இப்போது முன்னெடுக்கின்றனர்” என்றே கூறினார். ஆக, வடமராட்சி போருக்குப் பின்னர், ஜூன் 4ஆம் திகதி அச்சுவேலி ஊடாக படை நகர்வை ஆரம்பித்து, யாழ். குடாநாட்டை முழுமையாக அரச கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசு முடிவு எடுத்தது. ஜூன் 4 – இந்திய விமானம் மூலம் உணவுப்பொருட்கள் குடாநாட்டில் போடப்பட்டதால் போர் நிறுத்தப்பட்டது. சுதந்திரமடைந்த பின்னர், நாட்டில் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கை லிபரேஷன் ஒபரேஷனே ஆகும். 1971 ஏப்ரலில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஆயுதப் போராட்டத்தை ஒழிக்க விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றதில்லை. சிங்கள மக்களும் அகதிகளாக இடம்பெயர்ந்ததில்லை. 1971 – சிறிமாவோ ஆட்சியில் ஜே.வி.பி. சிங்கள இளைஞர்கள் கைதாகி விசேட நீதிமன்றத்தால் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 1977 – பதவிக்கு வந்த ஜே.ஆர். அந்த சிங்கள இளைஞர்களுக்கு மன்னிப்பளித்தார். ஆனால், தமிழ் இளைஞர்களை தடுத்துவைக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை 1979இல் அமுல்படுத்தினார். இறுதிப்போர் 2009 மே 18 முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் நான்கு ஜனாதிபதிகள் ஆட்சியில் அந்த போரை நிறுத்த முடியாமல் போனதற்கான காரணங்களை ஆராய்ந்தோம். படையினர் எண்ணிக்கையை அதிகரித்தோம். பல திட்டங்களை வகுத்தோம். வெற்றி பெற்றோம்” என குறிப்பிட்டிருந்தார். எனவே, போரின் ஆரம்பகட்டத்தில் இராணுவத்தினர் எடுத்த நடவடிக்கைகள், சதித் திட்டங்களையும் கூட இனப் படுகொலை நினைவேந்தல்கள் நினைவில் நிறுத்துகின்றன. ‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்! – குறியீடு (kuriyeedu.com)
  9. 'அங்கீகாரம்' தேய்ந்து செல்லும் மனிதவள மேப்பாட்டுநிலையான மனித உறவுகளும், குடும்ப உறவுகளும் பிளவுண்டு சிதைவுண்டு செல்லும் சூழலில் திருமண இணையர்களிடையேயும், திருமணம் என்பதை வெறுக்கும் இளையோரிடையேயும் ஆரோக்கியமற்ற குமுகாய நிலை வளர்முகமாகிச் செல்கின்றது. இதுபோன்ற விளையாட்டுபோட்டிகள் சிலநேரம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஒரு பரப்புரையாகவும் அமையலாம்.
  10. டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 Posted on June 4, 2023 by சமர்வீரன் 26 0 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங், கிரண்ஸ்ரட், கோசன்ஸ், வைல, மிடில்பாட், ஓப்பன்றோ, நிபோ, கொல்பெக், கெல்சிங்கோ மற்றும் கெல்சிங்போ ஆகிய 13 மய்யங்களில் இத்தேர்வு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் சுவீடன் நாட்டின் கெல்சிங்போக் என்னும் நகரத்தில் மாலதி தமிழ்க் கலைக்கூடம் புதிதாகத் தொடக்கப்பட்டது. இக்கலைக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்களும் இம்முறை ஆண்டிறுதித் தேர்விலும் புலன்மொழி வளத்தேர்விலும் மகிழ்வுடன் பங்குபற்றினார்கள். “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு” எனும் வள்ளுவரின் கூற்றிற்கு அமைய, பங்கு பற்றிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் மாலதி தமிழ்க் கலைக்கூடம் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளை எழுத்துத் தேர்வை சிறப்பாக நடாத்துவதற்கு மேற்பார்வையாளராக கடமையாற்றியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 – குறியீடு (kuriyeedu.com)
  11. உங்களுக்குப் புரியுதையா,!ஆனால் எங்கடை மேதாவியள் கிந்தியன்ரை *** த்துக்கைதானே தொங்குகினம். தமிழரின் தலைவிதி.
  12. திரயோடு தொடர்புடைய விடயங்களும் உரையாடப்படுவதால் இணைத்துள்ளேன்.
  13. இந்த ஆங்கிலமூல விவரிப்பையும்(H.Res.427)தமிழில் மொழிபெயர்த்துப்போட்டால் பல அரசியல் குமுகாயச் செயற்பாட்டாளர்கள் தெளிவாக அறிவதோடு, தத்தமது நாடுகளிலும் இதுபோன்ற அணுகல்களைச் செய்யச் சிந்திகக்கூடும். இப்படிக் கண்மூடித்தனமாக நம்பலாமா?
  14. இந்தக் காணி தனியாருக்குப்போன விடயத்தில் அரசியல்வாதிகள்,அரசஅதிகாரிகளென அனைவருக்கும் தொடர்பிருக்கலாம். காணி உரிமையாளர் புலம்பெயர் பிரமுகராகவும் இருக்கலாம்.
  15. இணைப்புக்கு நன்றி. மனதில் சிறு புத்துணர்வைத்தரும் செய்தி. கண்மூடித்தனமான நம்பிக்கைகளோடு இறங்காது எதையும் ஏற்போம் என்ற பலரது ஆரோக்கியமான உழைப்புக்கு ஒரு படியேறியிருப்பது நன்மையே. யஸ்ரினவர்கள் சுட்டியதுபோல் இது அடுத்தலைமுறைக்கான படியாகவும் அமையலாம். ஆனாலும் தொடர்ந்து முயற்சிப்பதைத் தவிர வேறுதிசையில்லைத்தானே. இதற்காக உழைத்த உறவுகள் அனைவருக்கும் பாராட்டுகள்.
  16. ஹிட்லரின் வீட்டில் மனித உரிமைகள் பயிற்சி வளாகம் – வெளியான அறிவிப்பு! Posted on May 29, 2023 by தென்னவள் 19 0 அடோல்ஃப் ஹிட்லர் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி மையமாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஆஸ்த்ரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவுக்கு புனித தளமாக மாறுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வியென்னாவில் இருந்து 284 கிலோமீட்டர்கள் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் வடமேற்கு ஆஸ்த்ரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் அடோல்ஃப் ஹிட்லர் பிறநதார். ஹிட்லரின் மூன்றாவது வயது வரை அவர் அங்கு வசித்து வந்தார். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் கெர்லிண்ட் பொம்மர். ஹிட்லர் பிறக்கும் முன் அந்த கட்டிடத்தை இந்த குடும்பம் தான் வைத்திருந்தது. 2016 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த கட்டிடத்தை கையகப்படுத்தியது. 2019 ஆண்டு இந்த கட்டிடம் காவல் நிலையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், அறிவிப்பின் படி இந்த கட்டிடம் காவல் நிலையமாக மாற்றப்படவில்லை. அந்த வகையில் தான் ஹிட்லரின் வீடு ஆஸ்த்ரியாவின் மிகப்பெரும் மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் மற்றும் பயிற்சி மையமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஹிட்லரின் வீட்டில் மனித உரிமைகள் பயிற்சி வளாகம் – வெளியான அறிவிப்பு! – குறியீடு (kuriyeedu.com)
  17. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம் Posted on May 25, 2023 by தென்னவள் 29 0 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய சட்டமன்றத்தின் அலுவலக உறுப்பினர் சோனா லகோயன் ஒலிவியர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரின் முடிவில் 70,000 இற்கு மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்ட முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழின அழிப்பை நினைவுகூரும் நாளாக மே 18 ஆம் திகதியை கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு அங்கீகரித்துள்ளது. 14 ஆவது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாளில், இந்த நாளை நினைவு கூர்வதே அத்தகைய அவலம் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு தான். இந்த மனிதாபிமானமற்ற செயல்கள், மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த இந்த அட்டூழியங்கள், ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும். அன்பான தமிழ் சமூகமே, எங்கள் கியூபெக் சமுதாயத்திற்கு நீங்கள் செய்த பங்கிற்கு நன்றி, சோமேடியில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! எனவும் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம் – குறியீடு (kuriyeedu.com)
  18. பொது நினைவுத் தூபியை ஏற்றுக் கொள்ள முடியாது ! Posted on May 28, 2023 by தென்னவள் 35 0 அரசாங்கம் முன்மொழிந்துள்ள அனைத்து நபர்களையும் நினைவு கூருவதற்கான பொது நினைவுத்தூபி அமைக்கும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், பொதுநினைவுத்தூபி என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதிக்கும் செயற்பாடு என்பதோடு போரை மேற்கொண்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே இடத்தில் நினைவு கூர முனைவதானது முரண்நகையாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அலுவலர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூறுவதற்கான நினைவகத்தை நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாக கொழும்பு நகரில் பொருத்தமன இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போதே தமிழ்த் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். சம்பந்தன் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், முதலில் தென்னிலங்கைத் தலைவர்கள் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்களாயின் இவ்விதமான மரணங்கள் ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆகவே மோசமான முறையில் நடத்தப்பட்ட போரினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டியது கட்டாயமானதாகின்றது. அனைத்து மரணங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. படையில் உள்ள இராணுவ வீரர் போரில் மரணிப்பதற்கும், தாய் ஒருவர் படையினரிடத்தில் தனது மகனை ஒப்படைத்து விட்டதன் பின்னர் மரணிப்பதும், வலிந்து காணாமலாக்கப்படுவதும் முற்றிலும் மாறுபட்ட விடயங்களாகும். போரின் இறுதியில் படையினரின் அறிவிப்புக்கு அமைவாக இளைஞர் யுவதிகள் சரணடைந்துள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அதேநேரம் இந்த விடயத்தில் மரணங்கள் பொதுவானது என்று கூறினாலும், தமிழ் மக்கள் முகங்கொடுத்துள்ள மரணங்களும், இழப்புக்களும் அதிகமானவை. அவர்கள் மிகவும் அனுதாப நிலைமையில் உள்ளார்கள். ஆகவே, அவ்விதமான பாரிய இழப்புக்களைச் சந்தித்த மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி நினைவேந்தலைச் செய்வதற்குரிய சுதந்திரம் காணப்பட வேண்டும். அதனை கட்டுப்படுத்த முடியாது. நினைவேந்தலைச் செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை உள்ளது. அது மதிக்கப்பட வேண்டும். அவர்கள் தாம் விரும்புகின்ற பகுதியில் ஒன்று கூடி நினைவேந்தலைச் செய்வதற்கு முழுமையான உரித்துடையவர்கள். ஆகவே அதனைத் தடுத்து நிறுத்தி பொதுத்தூபி அமைப்பதானது சட்டத்தின் பிரகாரம் தவறானது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மேலும் பாதிப்படையச்செய்யும் செயற்பாடாகவே கருதுகின்றோம். அந்த வகையில் பொதுத்தூபி அமைக்கப்படுவதையும், அங்கு தான் தமிழ் மக்கள் நினைவேந்தலைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த முனைவதையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றார். சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வன் தெரிவிக்கையில், என்னைப்பொறுத்தவரையில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே பார்க்கின்றேன். இத்தனை ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்மறையாகச் சிந்தித்தவர்கள் தற்போது மாறுபட்டுச் சிந்திக்கின்றர்கள். இந்தச் சிந்தனையானது இதயசுத்தியுனானதாக இருக்க வேண்டும். என்றார். கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், பொதுநினைவுத்தூபியை அமைத்து அராசாங்கம் சர்வதேசத்திற்கு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று காண்பிப்பதற்கே முனைகின்றது. அதேநேரம், இனப்படுகொலை புரிந்த படையினருக்கும், விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இனத்திலிருந்து மடிந்தவர்களுக்கும் ஒரே இடத்தில் நினைவேந்தலைச் செய்ய முடியாது. அது இயற்கைக்கும் முரணானது. ஏற்கனவே, தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து அதற்கு பொறுப்புக்கூறலில் இருந்து விலகியிருக்கும் அரசாங்கம் தற்போது தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுன்றி நிலைiமாறுகால நீதிப்பொறிமுறையை மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமுலாக்க முனைவதாக அறிவித்த போதும் அதனைக் கூட நடைமுறைப்படுத்தாது காலத்தினை இழுத்தடித்து வருகின்றது. தற்போது இழப்பீட்டு பணியகம், உண்மை மற்றுமு; நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை நிறுவி சர்வதேசத்தினை ஏமாற்றுதற்கு முனைகின்றது. அதன் தொடர்ச்சியாகவே நினைவுத்தூபி விடயத்தினை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றது. ஈற்றில் தமிழ் மக்களை அடக்குமுறையால் ஒற்றையாட்சிக்குள் நிர்வகிப்பதற்கு முனைகின்றது. ஆகவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது மக்களுக்கான நினைவுத்தூபி கொழும்பில் அமைய முடியாது. அதுவொரு பொதுத்தூபியாக இருக்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லை. எமது மக்களுக்கான நினைவேந்தல் தூபியானது முள்ளிவாய்க்காலில் தான் நிறுவப்பட வேண்டும் என்றார். சித்தார்த்தன் புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவிக்கையில், படையினரையும், அவர்களால் கொல்லப்பட்ட பொதுமக்களையும் ஒரே இடத்தில் நினைவு கூருவதற்கு முயல்வதானது கேலிக்கூத்தான செயற்படாகும். இந்த முயற்சியானது, உள்நோக்கம் கொண்டது என்பதோடு பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நோகச் செய்யும் செயற்பாடாகும். இந்த செயற்பாட்டால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுவதானது வேடிக்கையானது. குறித்த செயற்பாடானது இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை மேலும் வலுப்படுத்தி முறுகலையே தோற்றுவிக்கச் செய்யும் முயற்சியாகும். ஆகவே இவ்விதமான ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என்றார். செல்வம் அடைக்கலநாதன் ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், அரசாங்கம் பொதுநினைவுத்தூபியை அமைப்பதன் ஊடாக பொதுமக்கள் தமது உறவுகளுக்காக தத்தமது பிரதேசங்களில் நினைவு கூரல் செயற்பாடுகளை முன்னெடுப்பதை தடுத்து நிறுத்துவதை பின்னணியில் கொண்ட கபடத்தனமான செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட எமது மக்கள் கொழும்பு வரை பயணித்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதும், தமது இழப்புக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய படையினருக்கும் அதே இடத்திலேயே நினைவு கூரலைச் செய்ய வேண்டும் என்பதும் வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சும் செயற்படாகும்.இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், அடக்குமுறைக்கு உள்ளாகிய இனமொன்று அடக்குமுறையிலிருந்து விடுதலையை அடைவதற்காக போராடியது. அந்தப்போராட்டத்தில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்துள்ளது. ஆவ்விதமான தமிழினம், எவ்வாறு அடக்குமுறையை மிகமோசமான உரிமை மீறல்களைச் செய்வர்களுடன் இணைந்து தமது உறவுகளை நினைவு கூர முடியும். அதுமட்டமல்ல, தமிழினம் என்ன காரணங்களுக்காக விடுதலை கோரி போராடியதோ அந்தக் காரணங்கள் இன்னமும் முடிவுக்கு கொண்டுவரவில்லை. அவை நாளுக்கு நாள் தீவிரமடைகின்றன. அவ்விதமானதொரு சூழலில் பொதுநினைவுத்தூபி நினைவுகூரல் என்பது சூட்சுமங்கள் நிறைந்ததொரு நகர்வாகவே பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன், படையினர் தமக்கான நினைவுத்தூபிகளை அமைத்து அங்கு நினைவு கூரல்களைச் செய்கின்றார்கள். வெற்றி விழாக்களை நடத்துகின்றார்கள். அவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். அந்த தரப்புடன் எவ்வாறு தமிழ் மக்கள் ஒன்றிணைய முடியும் என்றார். பொது நினைவுத் தூபியை ஏற்றுக் கொள்ள முடியாது ! – குறியீடு (kuriyeedu.com)
  19. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் உத்தேசம் இப்போது இல்லை Posted on May 28, 2023 by தென்னவள் 35 0 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தற்போது இந்தியாவுக்கு அரசியல் ரீதியான விஜயத்தை மேற்கொள்ளும் உத்தேசம் இல்லை என்றும் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் கூட்டமைப்பு மீண்டும் இந்தியாவின் ஆதரவை நாடுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுவந்த பின்னணியிலேயே கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் அதனை முற்றாக மறுத்திருக்கும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, தற்போது இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் உத்தேசம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இந்திய விஜயம் குறித்த திட்டம் எதுவுமில்லை என்றார். அதேவேளை இதுபற்றி ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோது, அவரும் அதனை மறுத்தார். மேலும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு புதுடில்லியில் இருந்து உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்த திட்டம் எதுவும் இல்லை என்றார். அத்தோடு ஏற்கனவே புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிளவுபட முன்னரான தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்திருந்த போதிலும், அதற்கு கட்சியின் தலைவர் சம்பந்தன் ‘வரவில்லை’ எனக் கூறிவிட்டார் என்று சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், தற்போது இவ்விடயத்தில் இந்தியா பெருமளவுக்கு அக்கறை காண்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது புதுடில்லி விஜயம் குறித்துப் பேசியிருந்தாலும், அதுகுறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் உத்தேசம் இப்போது இல்லை – குறியீடு (kuriyeedu.com)
  20. நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி,நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி,நற்கடைப்பிடி, நற்தியானம் என் புத்தரால் போதிக்கப்பட்ட எந்தவொரு நன்னெறிமுறைகளையும் பின்தொடராத அரசுக்கோ அதன் பொத்தமத பரிவாரங்களுக்கோ இவரைக் குற்றம்சாட்டும் தகமை இருக்கிறதா? நன்றி
  21. உலகெங்கும் ஏதிலியாகப் புலம்பெயர்ந்த தமிழரது வாழ்வுநிலையில் தாய்த்தமிழகம் என்று மார்தட்டும் தமிழகத்திலே வாழும் உறவுகளே மிகக் கடைநிலைத்துன்ப வாழ்வை வாழ்கிறார்கள். சும்மா எட்டுகோடித் தமிழரென்று என்னபயன். எடும்தூரமானபோதும் எமது சகோதரர்கள் அழிக்கப்படுகிறார்களே எனத் தமிழகம் எப்போது கட்சியரசியலைக் கடந்து தமிழினமாகச் சிந்திக்கும்.
  22. இவற்றை முறியயடிக்கும் பரப்புரைகளோ தகவல் நிரல்களோ எம்மிடமோ அல்லது எமது அரசியல் வியாதிகளிடமோ இல்லாதபோது உலகு தனது நலனைமுன்னிறுத்தித் தொடர்ந்து பாதையிடும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.