Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. நன்றி, உண்மையில் தற்போது சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். எப்போது கவி அருணாசலம் அவர்கள் எழுதிய சிரியர்களோடு தொடர்புடைய சம்பவமொன்றைப் படித்தேனோ, அப்போதிருந்து சற்று விலத்தியே இருந்துவருகின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. உண்மை, ஆனால் நாமென்ன செய்ய முடியும். வேலை செய்யும் தொழிலகத்தில் படிப்படியாகச் சிரியச் சோனகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பயமாக உள்ளது. அவர்களோடு எட்டிநின்றே பழகவேண்டியுள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. இலங்கையின் குற்றிவியல் சட்டங்களைப் படித்தார்களேயன்றி, அரசறிவியலைப் படித்திருப்பார்களா? அதனால்தான் சிங்களத்திடம் தொடர் ஏமாற்றம். சிங்களத்தின் ஒவ்வொரு அரச தூதுவர் முதல் அரச அதிகாரிகள் வரை எப்படி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள். யுத்த காலத்திற் கடும்போக்காளரான மகிந்த குடும்பத்திற்கும், அவர்கள் நாட்டைப் பொருண்மிய ரீதியாக வீழ்த்தியபோது அறகலயவாகத்திரண்டு துரத்தியடித்தமை, இன்று யே.வி.பியோடு என்று காலத்தைக் கணித்துத் தமது தலைமையைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், தமிழர்களில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான அற்பர்கள் கொழும்பு மற்றும் இந்தியா என வசதியான வசிப்பிடங்களை வைத்துக்கொண்டு, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே பலிகொடுத்து வருகிறார்கள். இவர்களது முகாமைத்துவம் இருக்கும்வரை தமிழினத்தால் சுழியத்திலிருந்து மீளமுடியாது. இன்றொரு காணொளி பார்த்தேன் இலங்கையில் தொடருந்து உல்லாசப் பயணம் பற்றிய விவரணமாக டீ.டபிள்யூ(DW) ஒளிபரப்பியது. அதில் கண்டியின் கடைசி மன்னன் சிங்களவனென்றும், தேயிலை உற்பத்தியைக் காட்டும்போது இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர் என்றும் போகிறது. எப்படிக் கனகச்சிதமாக வரலாற்றுத் திரிபு நடக்கிறது. ஆனால் எமது வரலாற்றாய்வாளர்களோ, சட்டவாளர்களோ மற்றும் அறிவுலகத்தினரோ(ஒரு சிலரைத் தவிர) எதிர்வினையாற்ற முடியாத மௌனிகளாக இருப்பதும் ஒருவகையில் அழிவுக்கு உதவுதலேயாகும். கண்டியின் கடைசிமன்னன் சிறீ வேங்கடப்பெருமாள் சிறீ சுப்பம்மாவின் மகனான சிறீ விக்கிரம ராஜசிங்கன் எனத் தகவல்கள் இணைய உலகில் உள்ளபோதும் சிங்களம் எப்படித் தமக்கேற்றவாறு பரப்புரை செய்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. உண்மைதான், ஆனால் சஜித் தெற்கு மக்களின் ஆதரவோடு வென்றிருந்தால்கூட சும் மற்றும் சிறிலங்கா தேசியவாதிகளால் உங்களது *** மும் உருவப்பட்டிருக்கும். நல்லவேளை சஜித்தின் தோல்வியால் தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. உண்மை, கார்ல் மார்க்ஸை பின்பற்றுவதாகப் படம்காட்டும் தென்னமெரிக்க மற்றும் ஆசிய நாடுகள்தான் ஐ.நா.மனித உரிமைச் சபையிலே தமிழின அழிப்பு எதிரான போர்க்குற்ற விசாரைணையை நிராகரித்துவருவதோடு, வெளிநாட்டு விசாரணைகள் தேவையில்லை என்று கூறிவரும் நாடுகளாகும். இதுதான் இவர்களது கார்ல் மார்க்ஸைப் பின்பற்றும் தன்மை. இதில் தீவிர இந்திய எதிர்ப்பாளராக, சீன ஆதரவாளராக, பௌத்த சாசனத்தை மீறாதவராக ஒரு புதிய இலங்கையைக் கட்டமைக்கப்(?) போகிறார் புதிய சனாதிபதி என எப்படி நாம் ஒரு வெள்ளாந்தித் தனமாக நம்புகின்றோம்?????????????? நட்பார்ந்த நன்றியுடன்
  6. உண்மைதான், ஆனால் இந்தியக் கைக்கூலிகள் உட்படச் சிங்களத்துக்குச் செம்பு தூக்கும் இவர்களைக் களைவது இலகுவல்ல. இவர்களது படிப்பே எப்படி ஏழை மக்களை ஏமாற்றித் தம்மைத் தக்க வைப்பதென்பதே. இல்லையென்றால் சும் சிங்களக் காவல்துறைப் பாதுகாப்போடு வடமராட்சியில் சுற்றித்திரிந்தவிட்டுச் சஜித்துக்கும் வாக்குக் கேட்க முடிந்திருக்கிறதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. ஒவ்வொரு நாளும் இலங்கையர்கள் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளதாக தகவல் September 24, 2024 இலங்கையர்கள் நாளாந்தம் 6.5 பில்லியன் ரூபாய் கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். கடந்த 26 மாதங்களில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் நாட்டு மக்கள் நாளாந்தம் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக புதிய பொருளாதார சீர்திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள கோரிக்கை விடுத்துள்ளார். “ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்கள் 196 பில்லியன் ரூபா கடனாளிகளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் நாம் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளோம். அதே நேரத்தில் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டின் பணவீக்கம், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 106 வீதம் அதிகரித்துள்ளது. அத்துடன், உணவு மற்றும் சேவைகளின் விலைகள் 138 வீதம் அதிகரித்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/sri-lankans-are-reported-to-be-6-5-billion-rupees-in-debt-every-day/
  8. மனித அழிவுகளைக் கணக்கிடும் அமைப்புகளாகவும், அறிக்கையிடுவோராகவும் மட்டுமே உள்ளனர். ஆனால் போரை விவாக்கம் செய்துவரும் இஸ்ரேலைக் கட்டுபடுத்தவோ தடுக்கவோ முடியவில்லையே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. இலங்கையில் மட்டுமா அல்லது வேறுநாடுகளிலும் இப்படி... இந்தப் பெரிய ஊழல்வாதிகளைக்கொண்ட இந்தியாவில்கூட இப்படி யாரும் ஓடுவதில்லையே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. வரலாற்று மூலத்தைத் தொட்டு யதார்த்தத்தைக் கதையாக்கிய விதம் சிறப்பு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. நன்றி, தமிழரைச் சமத்துவமான பங்காளிகளாக ஏற்க மறுத்தவாறு, ஒருமைப்பாடு, இறையாண்மை என்று கூவியபடி சிங்களம் நாட்டைப் பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இலங்கைத்தீவை விற்றாகிவிட்டது. எவர் அரசுத்தலைவரானாலும், இந்த கூட்டுச் சங்கிலியில் இருந்து வெளியில் வரமுடியாதெனபதே யதார்த்தம். முதலில் பொருண்மியத்தைத் தற்போதுள்ள நிலையில் வைத்திருக்கவே போராடவேண்டியிருக்கும். அ.நா.நிதியத்தையோ, கடன் வழங்கிய நாடுகளையோ இலகுவில் கடந்துவிட முடியாது. எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், சில வழிகள் உண்டு அவை கடுமையானவையாகவும், ஏதிர்ப்பலையை உருவாக்கக் கூடியவையுமாகும். 1.மகிந்த சக சகோததர்களினால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிதியை மீளக்கொண்டுவருதல். 2.உள்ளக மட்டத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் வருமானத்துக்கு மேலான சொத்துகளை அரசுடைமையாக்கல். 3. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தலும், ஏற்றுமதிகளை இனங்கானலும். இதில் விவசாயப் பொருட்களுக்கு உற்பத்திக் காலம் தேவை. உடனடியாகக் கடல் வளங்களைப் பயன்படுத்தலாம். 4. தமிழரையும் ஒரு சமத்துமான பங்காளராக ஏற்று உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் வழங்குவதன் ஊடாகக் கணிசமான புலம்பெயர் முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல் போன்றவற்றை செய்தல் போன்றன சில சாதகமான மாற்றங்களைப் பொருளாதாரத்தில் கொண்டுவரலாம். 75ஆண்டு காலத்தில், தமிழினத்தை அழிக்கவெனப் படைத்துறைப் பெருக்கத்தோடு நஞ்சுக்குண்டுகளையும், ஆயுதங்களையும் 30ஆண்டுகளாகக் கொள்வனவு செய்தமையின் விளைவே இந்த ஊதிப்பெருத்துள்ள பொருண்மிய நெருக்கடியென்பதை உண்மையான மாக்ஸிஸவாதியாயின் புரிந்துகொண்டிருப்பார். அரசுத் தலைவர் மாறியுள்ளபோதும், மாற்றங்கள் இலகுவானவையல்ல. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. உண்மை, பழைய பல்லவியோடு தெற்கு மக்கள் இல்லையென்ற விழிப்புநிலை தோன்றுவதுபோன்ற சிறுகீற்றுத் தென்படும் வேளையில், வட-கிழக்குத் தனது விருப்பை ஒன்றிணைந்து தெரிவிக்காதுவிடினும் பிரிந்து நின்றாவது புலப்படுத்தியிருப்பதை ஒன்றுசேர்ந்து கரைசேர்க்க நீங்கள் சுட்டுவதுபோல் புதிய சிந்தனைகொண்டு எழுவார்களாயின் தமிழினம் துலங்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. எண்ணைவளமுள்ள வெனிசுவேலாவையும், உள்ளூர் உற்பத்தியில் தங்கியிருக்கும் கியூபாவையும் ஒப்பிடுதல் பொருத்தமாக இல்லையென்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. நான் நினைக்கிறேன் த.தே.கூ தனது ராசதந்திரத்தைப் பாவிக்கும் நேரம் நெருங்கியுள்ளது. 3ஜே.வி.பி ஆசனங்களுடன் 10த.தே.கூ ஆசனங்களையும் சேர்த்து மேலும் ஏனைய கட்சிகளில் விரும்புவோரை இணைத்து ஒரு காபந்து அரசை நிறுவிவிட்டு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதே தற்போதைய சனாதிபதி மெதித்துமாவுக்கு ஆட்சியைத் தொடர வாய்ப்பாக இருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. தங்களுக்கு நன்றி, ஒருகுழுமத்தின் தமிழ்தேசியத்துக்கான முயற்சி உங்களுக்குச் செத்தவீடாகத் தெரிகிறது. ஆனால் வேறு சிலருக்கு விவாதிக்கவும், ஆராயவும் வேண்டியதாக இருக்கிறது.அது அவரரவர் நோக்குநிலை சார்ந்தது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  16. பொதுவேட்பாளர் தேவையற்ற ஆணி என்ற எவராவது எங்கே அந்த ஆணியைக்குத்துவது என்று கூறினார்களா?அல்லது புலம்பெயர்ஸ்ஸைக் கைகாட்டும் யாராவது போட்டியிட்ட சிங்கள முன்னணித் தலைகளோடு ஏதாவது ஒப்பந்தகள் செய்திருப்பின் அதை வெளிப்படுத்தி இன்னாரை ஆதரியுங்கள் என்று ஏன் கூறவில்லை. தமிரசுக்கட்சி அணிபிரிந்து நின்று கூவியதை இங்கு கவனத்திலெடுக்க வேண்டிய தேவையில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. உங்களைப் போன்ற கலைஞர்களின் வழியே தொடர்ந்தும் விடுதலை வித்துகள் கடத்தப்பட்டு உரியவர்களைச் சேரட்டும். பாராட்டுகள் உரித்தாகுக. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. பல்கலைத் தோழனுக்கே தமிழனென்பதற்காக என்ன வரவேற்பென அறிந்தால், எமது நிலை எப்படியென்று அறியலாமென்ற யோசனைபோல் உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. கூகிளை நம்பி அவசரமாகச் செய்தியாக்குவதில் வந்தவினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  20. தங்கள் நேரத்துக்கும் மிகத் தீர்க்கமான தெளிவான வினவுதலுக்கும் மிக்க நன்றி, நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. மிக்க நன்றி, நிச்சயமாக எங்காவது கண்டால் இணைத்துவிடுகிறேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்போலும். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பொறுத்திருந்து இந்தக் கட்சியின் ஆட்டத்தையும் காண்போம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி 2004ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர்நாள் உரையிலிருந்து...... இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது. பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது. தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின. அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது. சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. ஒரு புலனக்குழுமத்தில் படித்ததைத் திரியோடு தொடர்புடையது என்பதால் பகிர்ந்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. இன்று சிறிலங்கா ஆதரவுத் தேசியவாதிகளுக்குத் தேவைப்படுவது தமிழ்த் தேசியம் அடக்கப்படுவதன் ஊடாக மீண்டும் யாழ் மையவாத உயர்குடி மைந்தர்களின் கைகளில் ஆட்சியும், அவர்களிடம் கைகட்டி சேவகம் செய்யும் நிலையும் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்பதே. அதற்காகவே சிறிலங்காத் தேசியம் தேவைப்படுகிறது. புலிகளை திட்டித் தீர்த்து முடிந்து இப்போது தமிழ்தேசியத்தை, அதற்காக உழைப்போரை நக்கல், நையாண்டி செய்வதிலிருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது அது மட்டுமே. இங்கே தமிழ் மக்களால் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறும், கூவும், கீறும் இவர்கள் சிறிலங்காவுக்குப் போய் மக்களாதரவைத் திரட்டித் தலைமையேற்று சிறிலங்காவிலிருந்து தமிழருக்கு சகவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கலாமே. இதிலென்ன வேடிக்கையென்றால் புலிகள் உயிர்போடிருந்த காலத்தில் முன்னணியிலே நின்று செயற்பட்டவர்களது நளினங்களைப் பார்க்கிறபோது புலிகள் வீழ்த்தப்பட்டது தனியே எதிரிகாளாலும், துரோகிளாலும் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் நீண்டு செல்கிறதோ அந்த வட்டம் என்று எண்ணத் தோன்றுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  24. இந்தியா இலங்கைச் சிங்களவருக்கு முதலிடத்தை அளித்துள்ளது என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். என்றுதானே வரவேண்டும். ஏனென்றால் அதைத்தானே செய்கிறீர்கள். புத்தர்சிலை வழங்குதல், பௌத்த பீடங்களுக்கு நிதியுதவி என்று செய்தவாறு எப்படி இலங்கை என்று கூறுவது பொருந்தும். இலங்கை இருமொழிபேசும் பல் மதங்களைப் பின்பற்றும் நாடு.
  25. நான் தங்கள் கருத்தை பார்த்தவுடன் யோசித்தேன், சிறிலங்கா தேசியவாதிகள் வினா எழுப்புவர் என்று...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.