-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
nochchi replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
யாயினி அவர்களுக்கு எனக்கான வினவுதலுக்கான பதிலை கொடுத்துள்ளேன். நீங்கள் கேட்டுக்கொண்ட விடயத்தை நானும் சுட்டியுள்ளேன். ஜஸ்ரின் அவர்களுக்கு நன்றி, நானிங்கே பத்து விடயங்களைச் சுட்டியுள்ளேன். அதில் ஒரு விடயமாக ஒருபாலினச் சேர்க்கையை எப்படி இந்த உலகு ஏற்புநிலையைப் பெற்றது என்பதையும், பிறப்புவிகிதம் தேய்வடையும் சூழலொன்றை உலகு எதிர்கொள்ளும் என்பதையும் சுட்டியுள்ளேனேயன்றி, நான் ஒருபாலினத் திருமணங்களைக் கண்டிக்கவில்லை. ஒருவரது விருப்பத் தேர்வுக்குரியதான பாலியல் தேடலை கட்டுப்படுத்தும் உரிமையை யாரும் கையகப்படுத்த முடியுமா? அதற்குச் சட்டங்கள்தான் அனுமதிக்குமா? அதேவேளை நானறிந்தவரையில் எம்மவர்கள் வலதுசாரிகளோடு இணைந்து எதிர்ப்பதைக் கேள்விப்பவும் இல்லை. உடனுக்குடன் பதில் தருபவாராக இருக்கும் நெடுக்கருக்கு சார்புநிலையாக எழுதும் தேவை இல்லையென்றே நினைக்கின்றேன். குழுநிலைச் செயற்பாடுகள் குறித்த பார்வைகள் உண்டு. அதேவேளை பரந்துபட்ட தளத்தினுள் குழுநிலைவாதமானது எந்தவொரு விடயத்திற்கும் பொருத்தமானதாக அல்லது முன்னேற்றமானதாகவோ நான் நோக்கவில்லை. 35நாடுகளில் சில நாடுகளில் மட்டும் குடியேற நீங்கள் கூறியுள்ளவைகள் கரணியமாகவும் உள்ளன. நோகாமல் நொங்கு சாப்பிட விரும்பாத மனிதர் உலகில் இல்லைத்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
nochchi replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
அகதியாகப் புலம்பெயர்ந்த பெற்றோர், தமது பண்பாட்டு வாழ்வியலை இழந்த சூழலிற் பிள்ளைகளை ஆளாக்கி எடுக்கப்படும்பாடு புலத்திலே வாழும் அனைவரும் அறிந்ததே. மனித வாழ்வில் காதல் ஒரு அர்த்தமுள்ளதாகவும், அன்பின் வழிப்பட்டதாகவும் இருந்தகாலம் ஒன்று இருந்தது. இன்று அந்தநிலை இருப்பதாகத் தெரியவில்லை. காதலிக்கும்போதே, அன்பு ஒரு கட்டத்தில் அடக்குமுறையாக மாறுகிறது. சில காதல் திருமணம்வரை போய்ப் பின்னர் அது மணமுறிவில் போய் நிற்கிறது.(தற்கொiயாளி) அவர் முன்பே சில காதல் முறிவுகளுக்குட்பட்டவர் என்பதாற் கொல்லப்பட்டவர் விரும்பாது கூறிவிட்டு விலத்தி நடந்துள்ளார். அதனை ஏற்காது தொடர்சியாகப் பின்தொடர, அது காவற்றுறைவரை சென்று தண்டனையும் பெற்றிருக்கிறார் என அறியமுடிகிறது. இங்கே காதலால், காதல் முறிவால் நடந்திருப்பது ஒரு கொலையும், தற்கொலையுமாகும். (பெண்ணின்) கொலையுண்டவரின் முறைப்பாட்டாற் தற்கொலை செய்துகொண்டவர் நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளார். தற்கொலையாளி வெளியே வந்தகாலத்தில் ராகவி வீட்டில் குடும்ப நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அவ்வேளை தொடர்புகொண்டு இதுதான் உனது கடைசிக்கொண்டாட்டம் என்றும் எச்சரித்துள்ளார். காதல் முறிவை ஏற்காத மனநிலையில், அது பழிவாங்கும் மனநிலையாக மாறிக் கொலையிலும்,தற்கொலையிலும் போய்முடிந்திருக்கிறது. இரண்டு குடும்பங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன என்பது எவளவு துயரமானது என்பதை மனங்கொள்ள வேண்டியது அவசியமாகும். குமுகாய நோக்கு நிலையில் இது ஒரு பெரும் அவலமான சூழல். புலத்திலே தமிழர் நிறுவனங்கள் விடுதலை மற்றும் தமிழ் கற்பித்தலுக்கப்பால் குமுகாயம் தொடர்பான ஊடாட்டமின்மையும் இந்தத் தேய்வுநிலைக்குக் கரணியமாகும். ஒருபுறம் திருமணத்தில் ஆர்வமின்மை மறுபுறம் மாற்றுபால் திருமண வளர்ச்சி வீத அதிகரிப்பு. அத்தோடு, அதன் மீதான ஒருவகைப் புதுமைக் கவர்ச்சியும் உள்ளமை நோக்குதற்குரியதாகும். மனித வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் உலகை இன்று பல்வேறு வகைமைகளுள் நகர்த்திவருகின்ற சூழல் அது இயற்கையா, செயற்கையா என்பதற்கப்பால் தவிர்க்க முடியாத நிலையை உலகம் எட்டிவிட்டது. இதிலே ஒருபால் விருப்போ, இருபால் விருப்போ, முப்பால் விருப்போ நாடுகளும்; மக்களும் படிபடிப்படியாக மாற்றம் பெற்று வருகின்றனர். மேலைநாடுகளில் மட்டுமல்ல, பண்பாட்டில் மேலோங்கிய நாடெனப்படும் இந்தியாவிலும்(மறைமுகமாக)குழுநிலைப் பாலியல் செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. நாளை இதுகூடச் சட்டமாகலாம். பின் வெளியே போன கணவனோ, மனைவியோ வரும்வரை காத்திருக்கும் நிலை தோன்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. சட்டங்களுக்குள் உடல் கட்டுப்படுகின்ற நிலையில் இல்லைத்தானே. ஆனால், அவர்களது வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகளின் வழியாகவும், அரசுகள் மற்றும் அரச நிறுவனங்கள் சட்டமெனும் சட்டகங்கள் வழியே வழிநடாத்தப்படுதல் வழியாக மனிதர்கள் கட்டுப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஒருபாலினச் சேர்க்கையை உலகம் நாடுகளெதும் தாமாக முன்வந்து அறிமுகப்படுத்திய பொறிமுறையல்ல. மக்களிடையே ஆங்காங்கே மறைவாக நடைபெற்ற விடயத்தைத் தடுத்தபோது எழுந்த கொந்தளிப்புகளே பின்னாளில், அங்கீகாரமாகிச் சட்டமாக்கி அதற்கொரு குமுகாய ஏற்புநிலையைப் பெறவைக்கப்பட்டது. ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193இற்கு மேற்பட்ட நாடுகளைக் கொண்ட உலகில், 35நாடுகள் மட்டுமே ஒருபாலினச் சேர்க்கையை அங்கீகரித்துள்ளன. எனவே இது உலகம் தானாக முன்வந்து கொண்டு வந்த பொறிமுறையென்றோ அல்லது உலகம் தோன்றியது முதல் உள்ளதாகவோ கருதமுடியாது. குமுகாய நோக்கு நிலையிற் பார்த்தால் ஓருபாற் திருமணங்கள் இனத்துவ அழிவுக்கும், மனிதர்களின் சுயவிருப்பின் நிறைவுக்கும்(உலகினது தனிமனித சுதந்திரத்தை அனுபவித்தல்) பாலியற் துணைப்பொருள் உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியலாம். இந்த நிறுவனங்களே ஊக்குவிக்கும் நிலையும் உள்ளது. இரு தமிழ்க் குடும்பங்களின் அவலமான சூழலை, அதனது அர்த்தபரிமாணத்தில் நோக்குதலே பொருத்தமானது. காதல் ஏற்பும் மறுப்பும் உயிரிழப்புகளில் முடிந்கிறது என்பது நோர்வே போன்ற வளர்ந்த நாட்டின் கல்விப்புலத்திலே பயின்றவர்களில் ஒருவர் கொலைவரை சென்றிருப்பது எப்படி? குழந்தைகளைக் கண்டித்தாலே வந்து காவிச்சென்றுவிடும் நோர்வே அரச நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுக்கவும் முயல வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
nochchi replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
தத்தமது பிள்ளைகளை இழந்துவாடும் பெற்றோரோடும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன். -
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சீச்சீ நீங்கள்அப்படிக் கூறக்கூடாது. சிறிலங்காத் தமிழ் ஜனநாயகக் காவலர்களுக்குக் கோபம் வரப்போகிறது. சிங்களத்துக்கு எதிராகக் காத்திரமாக நின்று உண்மையாகப் போராடும் இவர்களை ஒருவித பதற்றத்தோடு பார்க்கிறது. சிங்களம். இவர்களையோ, இவர்களது கோரிக்கையையோ தொடர்ந்து தட்டிக்கழிக்க முடியாது. பதில் கொடுக்கவேண்டும்.அந்த பதிலே சிங்களத்துக்கு ஆப்பாகவும் மாறலாம். அதனால் காலத்தைக்கடத்துகிறது. -
வெள்ளவத்தைப் படங்களும் வருகின்ற விவரிப்புகளும் 35ஆணடுகள் இந்தியப்படைக்காலத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. அனுபவப்பகிர்வுக்கு நன்றி. ஆற்றிலை போட்டாலும் அளந்து போடுவதைப் பின்பற்றும் மனிதர்.
-
யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!
nochchi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அதுதானே..! சும்மாச்சும்மா... திருந்தவிடமாட்டீங்களா தமிழ்மக்களே ... -
யாழ் வைத்தியசாலையில் எனது அம்மாவை அவமதித்து விரட்டிய ஊழியர் 😡😡 | Jaffna Hospital Security Problem மக்களது அவலத்தைப் பேசுகின்ற காணொளியாக உள்ளது. தன்னிலை சார்ந்த பதிவாக இருந்தபோதும் அனைத்துலகிலும் இருந்து யாழ் களத்தை பார்ப்பதாலும் பயன்படுத்துவதாலும் இணைத்துள்ளேன். தமிழருக்குத் தமிழரே அவலத்தை கொடுத்தல் சரியானதா? நன்றி - யூரூப்
-
தூக்கு மேடையில் சதாம் உசேன் என்ன பேசினார்? கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?
nochchi replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
உலகின் பெரும் இனப்படுகொலையாளர்கள் கண்ணாடி மாளிகையிற் காவலர்கள் புடைசூழ மக்களது வரிப்பணத்தில் ஒய்யார வாழ்வோடு இருக்கிறார்கள்.அமெரிக்காவும் அனைத்துலகும் இவர்களை எப்போது தூக்கிலிடுவார்களாம் என்று பிபிசி அறிந்து தெளிவுபடுத்தலாமே. உலகில் இனஅழிப்பை மேற்கொண்ட, மேற்கொண்டுவருவோரென மகிந்த, கோத்தா, சவேந்திரசில்வ, நெதன்யாகு...... இப்படிப் பெரும் பட்டியல் உள்ளதே.- 1 reply
-
- 2
-
சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதில் தமிழர்களும் அக்கறைகாட்டுவது ஒன்றும் புதிதல்ல. இனப்படுகொலை தொடங்கியகாலம் முதல் உள்நாட்டிலே சிங்களத்தைக் காத்த தமிழ்த் தரப்புகள் இருந்தன. அதே இனஅழிப்பைக் கரணியமாக முன்வைத்து புலம்பெயர்ந்த தரப்பிலும் சிறிலங்கா இனப்படுகொலையரசையும், அதனை நிகழ்த்தி முடித்த இனக் கொலைஞர்களையும் காப்பதற்கெனவும் தமிழர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானது அல்லவே. இந்தந் திரியிலே தலைப்புத் தொடர்பாகத் தொடங்கிப்பின் 'துறையப்பாவின் பேரன் யார்,, என நீண்டு விரிந்து துரோகியா, துரோகியில்லையா நாளைக்கு இன்னும் பலருக்குப்பட்டம் கொடுப்பீர்களா, அந்த விழாவுக்கு நாமும் வரலாமா என நீண்டு செல்கிறது. அதிற் தவறேதும் இல்லைத்தான். களமென்றால் கருத்தாடவும் குளமென்றால் நீந்தவும் வேண்டும்தானே. ஆனால், இங்கே நீந்துவதோடு சிறிலங்காவுக்குத் தங்கமுலாம் பூசலும் நடக்கிறது. துறையப்பா யார்? அவர்தொடர்பான வரலாற்றுத் தகவல் என்ன? தமிழருக் எதிராக என்ன செய்தார், என்பவற்றையும் தேடலாம் அல்லவா? நியாயப்படுத்துவதற்கான தேடலைப்போல், அவரது அநியாயங்களையும் தேடுவது நன்று என்பதே பொதுநிலைப் பண்பாக இருக்கமுடியும். சிறிலங்காவினது பிரதமாராக இருந்த சிறிமாவோவால் தமிழரது பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ் மண்ணிலே தமிழ் ஆராய்ச்சி மாநாடானது, உலகத் தமிழ் அறிஞர் பெருமக்களது பங்களிப்போடும், வருகையோடும் ஷஷஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,, நடைபெறுவதா(?) என்ற இனவன்மத்துடனான தடைகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்றதைப் பொறுக்காது சிங்களப் காவற்றுறையெனும் காடையரைப் பயன்படுத்தித் தமிழர்களை கொன்றதைத் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்களின் நினைவாலயம் இன்றும் இருக்கிறது. (தெரியாதவர்கள் யாழ்ப்பாணம் சென்றால் பார்க்கலாம்.) ஆனால், கொலைஞர்கள் இன்னும் தண்டிக்கப்படவுமில்லை. சிங்களம் ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்ததும் இல்லை. இடங்களைக் கொடுக்க மறுத்து மாநாட்டைக் குழப்பியடித்து சிறிமாவோ அரசின் தமிழினக் கொலைக்கு உடந்தையாக இருந்த துறையப்பாவின் வம்சத்துக்கான நன்றிக்கடனோடு, தமக்கான வெள்ளையடிப்பையும் சிறிலங்காக் காட்டுமிராண்டிக் காவல்துறை மேலிடம் செய்கிறது. அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியிலே விசாரணைக்கென அழைத்துச் சென்று காவாலித்துறைக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி யாழிலும் இடம்பெற்றதாக நினைவு. ஒருவேளை இந்தக் படுகொலைகளை அறியாதவர்களுக்காக, ஏனென்றால் யாழ்பாணத்தில் அப்படியொரு படுகொலை நடந்ததா என்ற வினா எழும்பினாலும் ஆச்சரியப்படமுடியாதுபோல் தெரிகிறது. 1974.01.10 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைசெய்யப்பட்டோர்: 01) வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்) 02) பரம்சோதி சரவணபவன் (வயது 26) 03) வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32) 04) ஜோன்பிடலிஸ் சிக்மறிலிங்கம் (வயது 52 – ஆசிரியர்) 05) புலேந்திரன் அருளப்பு (வயது 53) 06) இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்) 08) இராஜன் தேவரட்ணம் (வயது 26) 09) சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்) 10) சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்) ஆகியோர் உள்ளடங்கலாகப் பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. படுகொலைக்குத் தலைமைதாங்கிய சிங்கள அதிகாரி, மேலதிகாரியாக அப்போதைய பிரதமாரான சிறீமாவோவால்(சிறிலங்கா சுதந்திரக் கட்சி) பதவி உயர்த்தப்பட்டார் போன்ற சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டதே சிறிலங்கா அரசும் அதன் காவல்துறையும் என்பதைத் தமிழினம் அறிந்ததே. இன்னுமொரு உண்மை தெரிந்தாகணும், அதாவது இவரது குடும்பத்தினர் 1974இல் ஏன் கொழும்பில் இருந்து அகதியாப் போனது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இஸ்ரேலின் உத்தியை உக்ரைனில் பயன்படுத்திய ரஸ்யா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு | ILC திரியோடு தொடர்புடைய விடயங்கள் உரையாடப்படுவதால் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி - யூரூப்
-
வாழிய வாழிய வாழியவே! --------------------------------------- யாழை நாம் மீட்டுவோம் யாவையும் தேடுவோம் காவியம் படைத்துக் கவிதையும் பாடுவோம் கதைகளும் எழுதுவோம் கருத்துப் படங்களும் வரைந்துமே கருத்துடன் மோதுவோம் புத்தியைத் தீட்டுவோம் கத்தியை ஏந்திடோம் சத்திய வேள்வியில் சரித்திரமானவர் நினைவொடு வருகின்ற ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று மகிழ்வோமே! களத்திலே இணைந்த நாம் முகங்களைப் பார்க்காது நலன்களைத் தேடிடும் நட்புகள் ஆகினோம் நாளையும் தொடருவோம்! மோகனத் திருமகன் செதுக்கிய யாழிலே நிழலொடு நியாயினி நுணாவிலாரொடு பலருமாய் இழுக்கின்ற தேரென யாழ்க் களமது யுகங்களைக் கடந்துமே வாழிய வாழிய வாழியவே! பிறக்கின்ற ஆண்டிலே கள உறவுகள் யாவர்க்கும் உளமொடு உடல் நலன் சிறப்புடன் மிளிர்ந்திட வாழ்த்துகின்றேன் வாழிய வாழிய வாழியவே!
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழர்களின் நாடிபிடித்தறியும் பயணம்.ஆனால் எங்கடசனமும் எப்பிடியும் பச்சைத்தொப்பியோடை வரவேற்கும். யே.ஆரின் இனஅழிப்பையும், அதன் தொடர்ச்சியாக ரணில் என்ற குட்டி நரி செயற்படுவதையும் தமிழ்மக்கள் உணர்ந்து வருகையை கண்டகொள்ளாதிருப்பதே நன்று. -
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
nochchi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சிங்களம் இருபக்கமும் மேவி வளர்கிறது. தமிழ் தலைமைகள் இந்திய அரசின் செல்ல நாய்க்குட்டிகளாகத் தம் வயிற்றைக் கழுவுகின்றன. -
பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கைகழுவி விட்டு உங்கள் தந்தையாரையும் கண்டியுங்கள். சமாதான தேவதை வேடம்போட்டுத் தமிழின அழிப்பை மேற்கொண்ட உங்கள் பேச்சு சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது.
-
இஸ்ரவேல் தன்னைப் பாதுகாக்கும் உரித்துடையது என்று ஒருதலைப்பட்சமாகக் கொத்தளிப்பான சூழலில் கொடுத்த ஆதரவின் விளைவு. அப்போதே மனிதாபிமான அவலங்களைச் சீர்தூக்கிப் பார்க்காது ஆயுதங்களைக் கட்டற்று அள்ளி வழங்கியதன் பயனை இஸ்ரவேல் அனுபவிக்க, அதனால் ஏற்படும் அனைத்துல அழுத்த வலியைப் பங்காளராக அமெரிக்கா அனுபவிக்கிறது. நடப்பவற்றைப் பார்த்தால் பலஸ்தீத்தின் அழிவில் போர் நிறைவுறும்போலவே தெரிகிறது. அப்படியொரு நிலைதோன்றும்போது யுத்தம் மத்திய கிழக்குப் பிராந்தியத்தைக் கடந்திருக்கும். கடக்காமற் தணிக்கவே போலித்தனமான போர்நிறுத்த உச்சாடனம். அமெரிக்காவின் தொட்டிலையும் ஆட்டும் உத்தி தோல்விகண்டு வருகிறது.
-
தகவலுக்கு நன்றி ஆழ்ந்த இரங்கல்கள்!
-
மிகச்சரியான உண்மை. யாழ்பாணனது மண்ணிருந்து ஒரு இளைஞி உதயமாவது நல்லவிடயம்.கலைத்துறையில் பல மேதைகளைக் கண்டமண் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதனது பிரதிபலிப்பே இது.
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
nochchi replied to நிழலி's topic in தமிழகச் செய்திகள்
''சட்டம் ஒரு இருட்டறை'' அந்தக்காலத்தில் சிறிய தொலைக்காட்சிப் பெட்டியில் படமோடும்போது மணற்றரையிலேயிருந்து பார்த்தபடம். என்னோடு படம் பார்த்தவர்கள் பலரில்லை. பல்வேறு விடுதலைத் திசைகள் தேடிப்பறந்தனர். பின்னர் உரு சிலரை மட்டுமே சந்தித்துள்ளேன். சிலர் படகோடு கடலோடு கலந்த துயரமும் நடந்தது. காலங்கள் மாறினாலும் இன்றும் இந்தக் கதைதொடுக்கும் வினாக்களுக்கான பதில் நிறைவாகவில்லையல்லவா? சட்டத்தைத் தமக்குச் சாதகமாக வளைப்பது தொடர்கிறது. நன்றி நன்றி - யூரூப் உரு - ஒரு