Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். Digital News Team அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று(05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தெற்கு அரசியலில் மாற்றம் என்பது தற்போது கவர்ச்சி அரசியலாகி மக்கள் மயப்படுத்தபட்டு வருகின்றது. இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அது மேலும் கவர்ச்சியாகலாம். இந்த அரசியல் கலாச்சாரத்திற்குள் வடகிழக்கின் புத்தி ஜீவிகளாகவும், கல்வியாளர்களாகவும் கருதப்படுவோரும் இழுத்துச் செல்லப்படும் அபாயமும் நிலவுகின்றது. அதேபோல் தாயகத்தில் பாரம்பரிய கட்சிகளாகவும், ஈழப் போராட்டத்தில் முனைப்போடு செயற்பட்டவர்களாகவும் (காட்டிக் கொடுத்தவர்கள்) வீர வசனம் பேசுபவரும் வாக்கு கொள்ளைக்காக கூட்டு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர் .இவர்கள் தமிழர் தேசியத்தை முள் வேலிக்குள் தள்ளி கொலை செய்ய எடுக்கும் முயற்சியை வருடந்தோறும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்ற ஒழுங்குகள் செய்வோரும், சுடர் ஏற்றுவோரும் தகர்த்தெறிய வேண்டும். தற்போதைய நாட்டின் ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை தமதாக்க இறுதியாக யாழ்ப்பாணம் வந்தபோது மாற்றத்தை தேடும் தென்பகுதி மக்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்றே அழைப்பு விடுத்து வாக்கு கேட்டார். வடகிழக்கு தமிழர்கள் தேசத்தில் அவர்கள் நடத்திய யுத்தம்,அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தினர், தொல்லியல் திணைக்கத்தினர், சிங்கள பௌத்த துறவிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான மக்கள் எதிர்பார்க்கும் நீதி, அரசியல் பிரச்சனைக்கான தீர்வு எதையும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி அவர்களின் மாற்றம் என்பது தமிழர்கள் வாழ்வோடு தொடர்பு பட்டதல்ல. அது முழுக்க முழுக்க தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்துவதற்கான அரசியல் என்பதனை நாம் ஆழமாக சிந்திப்போம். இதற்குள் சிக்கிவிட வேண்டாம் என தமிழர் தாயக மக்களை கேட்டுக் கொள்கின்றோம். இடதுசாரி சிந்தனை உடைய மக்கள் விடுதலை முன்னணியினர் வடகிழக்கு மக்கள், மலையக மக்கள் என்போர் அரச அதிகார தரப்பாலும் அரச இயந்திரத்தினராலும் பொருளாதார, சமூக அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் போது அவர்களை தங்கள் வர்க்கமாக ஏற்று அவர்களோடு சேர்ந்து பயணிக்கவில்லை. தமது அரசியலின் எதிரியாகவே அவர்களைப் பார்த்தார்கள். ஆட்சியாளர் சேர்ந்து ஒடுக்குமுறைக்கும் இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நின்றது அவர்கள் வரலாறு. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் அவருடைய மேடையில் தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழ் அச்சு ஊடகம் ஒன்று தற்போதைய பிரதமர் வழங்கி உள்ள செவ்வியில்”என்ன பிரச்சனைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்டம் உருவாக்குதல் ஊடாக தீர்வு காணலாம் என்று கருதுகிறார்கள் அதுவல்ல அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்”என்று கூறியவர் “தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவம்படுகிறது என்பதை உணர வேண்டும். அவ்வாறான வகையில் அரசாங்கம் செயப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இனப் பிரச்சனைக்கான தீர்வு யாப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் அது மக்கள் தீர்ப்புக்கு விடப்படும் என்றும் கூறியுள்ளார்.இதனை சிங்கள பௌத்தர்களிடம் அரசியல் தீர்வினை விட்டு விடுவோம் என்பதாகவே நாம் பொருள் கொள்ளல் வேண்டும். அது மட்டுமல்ல அமைச்சரவை தீர்மானங்களை அமைச்சர் விஜித்த ஹோரத் அவர்கள் அறிவித்த போது “அரசியல் கைதிகள் நாட்டின் சட்டம் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள்” எனக்கூறினார். இதுவரை காலமும் அவ்வாறே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்களுடைய சட்டம் காரணமாக பலர் 25 வருட காலமாக சிறை கம்பிகளுக்குள் அடைப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் தான் தீர்வு காண்போம் என்பதன் மூலம் அரசியல் தீர்மானம் எடுத்து அவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுவதாகவே உள்ளது. அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். அதற்கு இவர்கள் எள்ளளவும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். இந்நிலையில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சி தலைமைகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது ஆதரவு கரத்தை நீட்டுவதாக அடையாளம் காட்டி சந்திப்புகளை செய்துள்ளனர். மேலும் சிலர் தமிழர் தேசியத்தின் முகம் காட்டி ஆட்சி கதிரைகளை தமதாக்கியும் ஆதரவு கொடுக்க முயல்கின்றனர். இன்னும் சிலர் மேற்கூறியர்கள் எல்லாம் தோற்கடித்து நேரடியாகவே பேசிய மக்கள் சக்திக்கு ஆதரவினை கொடுக்க துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தமிழர்களை சிதைக்க சுயேட்சையாகவும் களமிறங்கவும் ஆயத்தமாய் உள்ளனர். இவர்கள் வீட்டில் பூச்சிகள் மட்டுமல்ல. இவர்கள் இனப்படுகொலையாளர்கள். தனது அரசியல் நலன் கருதி இந்தியாவும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. இவர்களுடைய நோக்கம் தமிழர் தேசியத்தையும் அது தொடர்பாக தெளிவோடு விட்டுக் கொடுக்காது பேசுகின்றவர்களையும் அரசியல் சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே.இதற்கும் இடமளிக்க கூடாது. அரசியல் பன்முகம் கொண்ட இராவண கூட்டம் தமிழர் தேசியத்தை சிதைத்தழிக்க அணிவகுத்து நிற்கையில் விட்டில் பூச்சிகளாக தமிழர்கள் அதில் விழுந்து விடக்கூடாது. தேசிய அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம். இல்லையேல் இனமாக எழ முடியாத சூழல் ஏற்படுவதே பலரது நோக்கம். அதனை தோல்வியுறச் செய்வோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் நாம் எழுந்தோம். என்பதையே நினைவில் கொள்வோம். அதுவே எமது சக்தி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310314
  2. மன்னார் தேர்தல் தொகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம். Digital News Team இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த தெரிவுகள் யாவையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றை தினம் (4) மன்னார் வருகை தந்து வேட்பாளர்களை இறுதி நிலைப் படுத்தியதாக தெரிய வருகிறது. மன்னார் கட்சி அலுவலகம் வருகை தந்த எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் இரண்டு மணி நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இதன்போது தேர்தலுக்கான செலவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளார். அதனடிப்படையில், மன்னார் மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன், மன்னாரின் இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகிய மூவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் தொகுதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று தெரிய வருகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இத் தேர்தலில் இருந்து நான் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310302
  3. புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் | யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் written by பூங்குன்றன் October 5, 2024 6 minutes read 0 FacebookTwitterPinterest புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் ! சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு என்பன கனிசமானளவு தமிழ் மக்களை அணி திரட்டுவதில் முன்நகர்ந்துள்ளமை தமிழ் அரசியற்பரப்பில் புதிய திருப்பம். கடும்போக்கு சிங்கள – பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தி தெற்கில் வெல்லக் கூடியவராக கணிக்கப்படும் பேரினவாதத்தின் முகவர் வென்றுவிடக் கூடாதென்ற அச்ச நிலையானது பிறிதொரு பேரினவாதத்தின் முகவரிற்கு வாக்களிப்பதற்கு மக்களை வழிநடத்தியிருப்பதும் வெள்ளிடைமலை. சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியத்தை மக்களின் இருப்புக்கானதாக மாற்றியமைப்பதற்கு உளச்சுத்தியோடு முனைந்து விடாத தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் தமிழ்த் தேசியத்தை மக்களின் வாழ்வியலில் இருந்து அகற்றி, கட்சிகளின் தேர்தல் கால கோசங்களாக மாற்றியமைத்துள்ளன. தேர்தலில் போட்டியிடுவதையே இலக்காகக் கொண்ட இவர்களின் இயலாமைகள், தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையினை தகர்த்தெறிவதிலும் மக்களின் உயிர்வாழ்தலுக்கு அவசியமற்றதொன்றாக தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்பதிலும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் புலனாய்வுத்துறை உள்ளிட்ட சிறிலங்கா அரச இயந்திரத்திற்கு பெருமளவு துணைபுரிந்துள்ளன. புதியவற்றை உள்ளீர்த்து முற்போக்குக் கருத்தியலாய்ப் பரிணமிக்கட்டும் தமிழ்த் தேசியம் ! தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகும். தமிழ் அரசியலானது முன்நகர முடியாமைக்கு அகவயமான முற்போக்கு மாற்றங்களை காலத்திற்குக் காலம் மேற்கொள்ளத் தவறியமையும், எம்மிடையே நிலவும் சில போதாமைகளுமே காரணம். அவ்வாறிருக்கையில் மக்கள் மத்தியில் நிலவும் சில முன்மொழிவுகளை தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை நோக்கி முன்வைக்கின்றோம். 1. சமூக, பொருண்மிய, அரசியல், கல்வி, பண்பாடு, சூழலியல் தளங்களிலிருந்து தமிழ்த் தேசியத்தில் முற்போக்கான, ஆழமான, பரந்த பார்வை கொண்ட செயற்பாட்டாளர்களை, துறைசார் வல்லுனர்களை வேட்பாளர்களாக முன்நிறுத்த முன்வர வேண்டும். 2. இதுவரை காலமும் இரண்டு தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றவர்கள் தேர்தல் அரசியலிற்கு ஓய்வு கொடுத்து மக்கள் அரசியற் தளத்தில் செயற்பட வேண்டும். 3. 40 – 50 சதவீதத்திற்குக் குறையாமல் இளைவர்களிற்கு வாய்ப்பளிக்க வேண்டும். 4. தமிழ்த் தேசியம் முற்போக்கானதாக நிலைமாற்றம் கொள்வதற்கு பெண்கள், சிறுவர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் உள்ளிட்டோரை பிரதிநிதித்துவம் செய்யக் கூடியவர்களுக்கு வாய்ப்பளித்தல் கட்டாயக் கடமையாகும். 5. வேட்பாளர் தெரிவின் போது உணர்ச்சி நிலையிலிருந்து மட்டும் அணுகுபவர்கள் தவிர்க்கப்பட்டு, தமிழ்த் தேசியத்தை உணர்வுடன் கூடிய அறிவுசார் தளத்தில் முன்னெடுக்க கூடியவர்களிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். 6. தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் தேர்தலில் தோற்றவர்களிற்கு வாய்ப்பளித்தல் மக்களாணைக்கு எதிரானதாகும். மேலும் கட்சி உறுப்பினர்கள் என்று பாராமல், கற்றறிந்த செயற்பாட்டாளர்களிற்கு வாய்ப்பளிப்பதற்கு முன்வர வேண்டும். தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளை அகவயமான முற்போக்கு மாற்றங்களை நோக்கித் தூண்டுவதும், அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதிலுமே உண்மையான மாற்றம் தமிழ்த் தேசியப் பரப்பில் தங்கியுள்ளது. இளையோருக்கான பிரதிநிதித்துவம் வழங்குவதில் தனியே வாக்குகளைத் திரட்டக் கூடியவர், கவர்ச்சிகர – பிரமுகர் அரசியல் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்குதல் அல்லது கற்றறிந்தவர் என்று தமிழ்த் தேசிய விடுதலைக்கு அப்பால் சிந்திக்க கூடிய கொழும்பு மைய மேட்டுக்குடி அரசியற் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டவர்களை முன்னிறுத்துதல் என்பவவும் பழைய குருடி கதவைத் திற என்பதற்குச் சமனானது. கிழக்கில் தமிழர் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் காத்திடுவோம் ! தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஏற்கனவே இல்லாமற் போய்விட்ட அம்பாறை மற்றும் இல்லாமற் போகக் கூடிய திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழ்த் தேசியக் கட்சிகள் கட்சி வேறுபாடுகள் கடந்து போட்டித் தவிர்ப்பு, விட்டுக் கொடுத்தல் அல்லது இணைந்து போட்டியிடக் கூடிய பொருத்தமான பொறிமுறைகளின் ஊடாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தையாவது காத்திட முன்வர வேண்டுகின்றோம். வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பதென்பது தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது. இதுபோன்ற நகர்வுகள் தமிழ்த் தேசிய இறைமை அரசியலை அடையாள அரசியலிற்குள் சுருக்கும் முயற்சிகளாகும் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். இது தாயகத்தில் நிலவும் உரிமைசார் போராட்டங்கள் ஒவ்வொன்றினையும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலிற்குட்பட்டு ஒரு நாடு – ஒரு தேசம் நீரோட்டத்தினுள் வலிந்து இழுத்துச் செல்லும் நுண் அரசியலாகும். வடக்கு – கிழக்கிற்கு வெளியில் போட்டியிடத் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் முயல்வதென்பது தாயக நில ஒருமைப்பாட்டிற்கு அப்பாலானது என்பதோடு, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்காகவேயன்றி வெறெதற்குமல்ல. இந்த முயற்சி தாயகத்திற்கு வெளியிலுள்ள ஈழத்தமிழர்களின் உரிமைசார் நட்பு சக்திகளை நாம் இழப்பதற்கு வழிகோலும் என்பதனையும் எச்சரிக்கையுடன் பதிவு செய்கின்றோம். தமிழ்த் தேசியப் போலிகளை தமிழ் மக்கள் இனங்கண்டு புறமொதுக்க வேண்டும் ! தமிழ் மக்களை அணி திரட்டும் நோக்கில் குடிமக்கள் அமைப்புக்கள் (Civil Society) மற்றும் சில அரசியல் கட்சிகளால் கூட்டாக இணைந்து நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுதல், கடந்த கால வரலாற்றுத் தவறுகளை மீள மேற்கொள்வதைத் தவிர்த்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டே நிறுத்தப்பட்டார். தமிழ்ப் பொது வேட்பாளரிற்கு அவரை முன்நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கு அப்பால் பல குடிமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியற் கட்சிகள் தேசத்திரட்சிக்காக பணியாற்றின என்பதோடு, மக்களும் தமிழர் தேசம் என்ற அடிப்படையிலே தங்கள் வாக்குகளை அளித்தார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது. பொது வேட்பாளரிற்காக வழங்கப்படும் கட்சிச் சின்னம் அடுத்து வரும் சில தேர்தல்களிற்கு பயன்படுத்தக் கூடாது எனும் குடிமக்கள் அமைப்புக்களின் அறம் சார் நிபந்தனைகளை அரசியற்கட்சிகள் எவையும் ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் சுயேட்சையாக வேட்பாளர் களமிறக்கப்பட்டார் என்பது அறியக்கூடியதாகவுள்ளது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு உடன்பட்ட தரப்புக்களில் குடிமக்கள் சமூகங்களினதும் (Civil Society) ஏனைய கட்சிகளினதும் உடன்பாடுகள் ஏதுமின்றி தங்களிற்கிருந்த அறம்சார் கடப்பாட்டினை மீறி மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் கூட்டணியொன்று தேர்தல் ஆணைக்குழுவில் பொது வேட்பாளரின் சின்னத்தினைக் கோரிப் பெற்றுள்ளது. குடிமக்கள் சமூகங்களின் கூட்டிணைவிற்குள் (ஊiஎடை ளுழஉநைவல) செயற்படும் சிலர் தங்கள் சிந்தனைகளோடு குடிமக்கள் சமூகத்தினரை நகர்த்திச் செல்ல முயற்சிப்பது வருந்தத்தக்கது. தொடர்ந்தும் மக்களை மடையர்கள் என்றெண்ணிச் செயலாற்றும் இதுபோன்ற அறம் பிழைத்தவர்களை மக்கள் நாங்கள் தோலுரித்தல் அவசியமாகும். தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதிலும் ஒரு சில அரசியற் கட்சிகளினதும் குடிமக்கள் அமைப்புக்களினதும் உழைப்பினால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட சின்னத்தினைக் கைப்பற்றுவதன் ஊடாக மக்களின் இந்தத் தேசத்திரட்சியைக் கேலிக்குரியதொன்றாக்கியுள்ளதோடு, தொடர்ந்தும் மக்களையும் உழைத்த தரப்புக்களையும் ஏமாற்ற முயலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியப் போலிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். இது போன்ற தமிழ்த் தேசியப் போலிகள் மக்களிடையே தமிழர் தேசத்திரட்சியின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதோடு, கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தையும் தகர்த்தெறிந்து தென்னிலங்கைக் கட்சிகளை நோக்கி மக்களை நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியத்தின் பெயரால் முயன்று கொண்டிருக்கின்றன. சில தமிழ்த் தேசியப் போலிகள் அரச தலைவர் தேர்தலில் ஒரு பக்கம் தென்னிலங்கைக் கட்சிகளுடன் இருட்டு ஒப்பந்தமும், மறுபக்கம் தமிழ் மக்களின் வாக்குகளிற்காக பொது வேட்பாளர் தரப்புடன் இணைந்து கொண்டிருந்தமையினையும் யாரும் அறியாமலில்லை. அதற்காக உழைக்காத தரப்புக்கள் அரசியல் சூழ்ச்சிகளினால் இன்று பொது வேட்பாளரின் சின்னத்தைக் கைப்பற்றுவதனூடாக நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாணை பெற பகற்கனவு காணுகின்றன. பொது வேட்பாளரின் சின்னம் தற்பொழுது அவரை நிறுத்திய தரப்புக்களுடையதல்ல, வேறு கட்சிகளினுடையது என்பதனை அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். புதிய அரசியற் பண்பாட்டினால் மேலேழட்டும் தமிழர் தேசம் ! தமிழ் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் மயப்படுத்தப்படாமையும் தேசமாய் அணி திரட்டப்படாமையுமே அனைத்துத் தளங்களிலும் பலவீனப்பட்ட மக்களாய்ப் போகக் காரணம். தமிழ் மக்களின் அரசியல் தனியே அடையாளத்திற்கானதன்று ; அது இறைமைக்கானது. தமிழ்த் தேசியம் என்பது வாழ்க்கை முறை, அதனை தேர்தல்க் கால வெற்றுக் கோசமாக மாற்றியமைத்தது சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலிற்கு துணை போன தமிழ் அரசியற் கட்சிகளே! நாங்கள் எமது தாயகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் பொருண்மிய வளங்களை ஒன்று திரட்டி தற்சார்புப் பொருளாதாரத்தை முன்னெடுக்காமையும், ஆதிக்க சக்திகளையும் பகை முரண்களையும் கையாள்வதில் உரிய தந்திரோபாயங்களை வகுக்காமையுமே அவர்களிடமே சரணாகதியடைந்த தமிழ் அரசியலினால் இதுவரைகாலமும் விளைந்ததொன்று. அகவயமாக முற்போக்கு அம்சங்களைக் கொண்ட புதிய மாறுதல்களிற்குத் தமிழ்த் தேசிய அரசியல் தயாராக வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கூட்டு முகவராண்மையைச் சிதைப்பதற்கு தமிழ்த் தேசிய போலிகள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாங்கள் அனைவரும் தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டினை அறிவுபூர்வமாக விழிப்புடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அனைவரையும் சமூகப் பொறுப்புடன் வேண்டி நிற்கின்றோம். நன்றி (ஊடக அறிக்கையின் முழு வடிவம் (PDF) இந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளது.) — ஊடக மற்றும் வெகுசனத் தொடர்புப் பிரிவு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். https://vanakkamlondon.com/world/srilanka/2024/10/221868/
  4. ரஞ்சித் அவர்களே வணக்கம், நீங்கள் தேடியெடுத்துப் பதிவிடும் இந்தத் தொடர் ஊடகத் தரவுகளை சேமித்து வைப்பீர்கள் என நம்புகிறேன். இவை தமிழர்கள் அறியவேண்டிய விடயங்கள். திரிக்குத் தடையேதும் ஏற்பட்டாலும் உங்களிடம் இருந்தால் சிங்கள இனவாதக்கட்சிகளின் சுய முகம் என்று ஒரு தொகுப்பாகவேணும் வைத்திருப்பது பிற்காலத்திலும் தேவையானது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. சிங்களப் பெரும்பான்மைகளிடம் ஊறிப்போன இனவாத மரபு அது அனைத்து உயரடுக்கு அதிகாரிகள் முதல் அனைவரிமும் புரையோடியுள்ளதன் விளைவே தமிழர் பகுதி அபிவிருத்தியை நிராகரிக்கும் போக்கு. ஆனால், துறiமுக அபிவிருத்தியானது இந்தியாவின் போர்க்கப்பல்களை நிறுத்துதல் அல்லது அடிக்கடி வந்துபோதல் மூலோபாயத்துக்கான முதலீடாகவே தென்படுகிறது. காணொளி இணைப்புக்கு நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. திரியோடு தொடர்புடைய காணொளியென்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அரசியல் திருடர்களின் கூட்டு எப்போதும் தொடரும் என்பதற்குப் பிந்திய எடுத்துக்காட்டு சும்-சிம் கூட்டு. இவங்கள் திருந்துவாங்களா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. டக்கியோடும், மண்டையனோடும், சித்தார்த்தனோடும் இருந்தவர்களுக்கே வெளிசசம். எனக்குத் தெரியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. கவிதைக்குப் பொய்யழகு என்று சுட்டுகிறது இலக்கியம். இந்தப்பாடலில் அதியுச்சமாக பனைமட்டையிலுள்ள கருக்கை சீவிவிடும்போது நீர்வடிவதைப் பால்வடியும் என உவமைப்படுத்தியுள்ள பாங்கு கவிதைக்கே உரியது. படம்பார்த்த சுவியவர்களின் ஒப்பீடும் கவனத்திறகுரியது. கருக்குமட்டையை விட பச்சைமட்டை ஒருகாலத்தில் பல சேட்டைகளைக் குறைத்து வைத்திருந்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. 13ஆவது திருத்தமெனப்படும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ள தமது நலன்களை, தமது முதலாளிகளுக்கான முதலீடு மற்றும் முதலீடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் என்பவற்றைப் பேசிவிட்டு, வெளியில செய்திக்கு மாத்தி ஏதோ தமிழரது உரிமைபற்றிப் பேசியதாகக் காட்டுகிறார்கள். இவர்களிடம் பயிற்சி எடுத்த எங்கட அரசியல்வாதியளும் சிங்களத் தலைமையை சந்தித்து தமது சாராயக்கடை அனுமதி, மண் அள்ளுற அனுமதியளைப் பெற்றுக்கொண்டு 13 தீர்வல்ல. தீர்வுக்கான அடிப்படை என்று பேசியதாகக் கதைவிடுவினம். இது கடந்த 37ஆண்டுகளாக இப்பிடித்தானே போகுது. ஆனால் சிங்களம் தொடர்ந்து தமிழர் தாயகத்தை அழித்தே வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. பாவம் புலவரையா பொல்லைக் கொடுத்தவிட்டார். சிறிலங்காத் தேசியர்களை கோபமூட்டப்போகிறது. யே.வி.பி வேறாம் என்.பி.பி வேறாம். அதனால் முடிச்சுபோடாதையுங்கோ. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. எந்தச் சிந்தாந்தமாயினும் கட்சியரசியல் என்பது சாக்கடை போன்றது. வளரும் நாடுகளில் மிகமிக மோசமானது. சிறிலங்கா சனாதிபதியின் அதிகாரமானது, கட்டற்ற அதிகாரத்துவம் மிக்கது. அதற்குக் கொலைகள் கைவந்தகலை. அதற்காகத் தனித் படைப்பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டது. பிரேமதாச காலத்தில் முழுவீச்சில் செயற்பட்டு பெருவாரியான சிங்கள இளையோரையும் பலயெடுத்த வரலாற்றைக் கொண்டது. இதில் ஊடக ஆய்வுகளை மேற்கொள்வோர் மற்றும் உண்மையை வெளிக்கொணர்வோருக்கு ஒன்றும் பட்டயம் வழங்கிப் பாராட்டும் நாடல்ல படுகொலை செய்து அழித்துவிடும் நாடு எமது நாடெனபது செய்திகளை உற்றுநோக்குவோர் அறிந்தது. சிங்களவராக இருந்தும் 51வயதிலே படகோலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவே சாட்சியாக இருக்கிறார். உண்மைகளைக் கூறுவோரை விட்டுவைக்காத அரசக் கலாசாரம் மிக்க நாட்டிலே தற்போது யாருமில்லை என்றே நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. தமிழருக்கு எதிராகத் தமிழரே செயற்படும் வேளையில் பரவாயில்லையே தமிழரது உரிமை தொடர்பாக சிங்களப் பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியிருப்பதைப் பதிவிட்டமைக்கும், தங்கள் தேடலுக்கும் நன்றி. இந்தப் படத்தில் இருப்பவர்தானே தற்போதைய சானாதிபதி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. பனங்கருக்கும்.... என்பது பனைமட்டையிலே உள்ள ''கருக்கு'' என்று அழைக்கும் கூர்மையான பகுதியாகும். காயங்களை ஏற்படுத்த வல்லது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. தமிழ்த் தேசியத்தை நிராகரிப்போர், சிறிலங்கா தேசியர், சிறிலங்கா தேசிய விசுவாசிகள் மற்றும் புலியெதிர்ப்பாளர்கள் என்போருக்கு அனுரவின் தேசியம் பிடித்திருக்கிறது. 30 ஆண்டுகளில் சில காணாமற்போதல்கள், தமிழ்த் தேசியத்தை நேசித்தோரை கொலை செய்தல் என நகர்ந்த யாழ் குடாநாட்டு இளையோரது மனநிலை வேறாகவே இருக்கும். இவற்றுக்கூடாகச் சிங்களத் தேசியமானது அசுர பலம் பெறப்போகிறது. அதன்பின்னரே அநுர திஸ்ஸவின் நிஜ(உண்மை)முகம் தெரியவரும். அதுவரை சிறு தேன்நிலவோட்டமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்வரை அரசியல் ஓடப்போகிறது நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. உண்மை. ஆனால், ஊடகங்கள் தங்களது பிழைப்புக்காக எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மதிப்பு மிக்க உறவுமுறைப் பெயரான 'அம்மான்' இப்படிப்போய்விட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  16. இருவரையும் உங்கள் பிரச்சினையை நீங்களே பாருங்கள் என்று உலகு ஒதுங்கினாலும், அமெரிக்கா விடவேணுமே. இஸ்ரேல் தொழில் நுட்ப முன்றேன்றம் இனங்களை அழிப்பதனற்கானதாயின் அது ஒரு முன்னேற்றமா? தமிழினத்தையும் அழிக்கக் கொடுத்த ஆலோசனைகள் தற்போதுவரை அமுல்படுத்தப்படுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. மனித வாழ்வின் இயல்பே நிறைந்துள்ள நினைவுகளும் அதனை அசைபோடுவதும் மட்டுமே. தன்னந்தனியே அமைதியாக சாளரம் வழியே பார்க்கும்போது எம்மைத் தொடர்வதும் நினைவுகளே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. படித்தோருக்கும் , விருப்புப் புள்ளியை வழங்கிய யாயினி அவர்களுக்கும் நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. இந்தியாவினுடைய முகவர்கள் இந்தியாவை அனுசரிக்காது எப்படி இலங்கையில் அரசியல் செய்வது. சுகபோகமாக வாழ்வது.முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் குருதி வழிந்தோடியவேளை இந்தியாவில் இருந்து மௌனம்காத்தவர்களை இன்னுமா நம்புகிறீங்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இவர்கள் எங்கே ஒன்றாக, ஒரே கட்சியாக நின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிப் பின்னர் காயந்த இலைகளாக உதிர்ந்து துகள்காளகப் போயுள்ளனவே. த.தே.கூட்டமைப்பின் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனத் தொடங்கி தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பாகி நிற்கிறது. தனித் தனி மனிதர்களே கட்சிகளாக நிற்கின்ற நிலை . எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்ற ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புகள் அருகியே வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி திருத்தம்
  20. பா.அரியனேந்திரனவர்களையே வறுத்தெடுத்தவர்கள் இளையோரை விடுவார்களா? இந்து முதலைகளை அமுக்கி முன்னோக்கிப் பாயும் பலம் உள்ளதா? தமிழரசியல்வாதிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாதுவைத்திருப்பதே தமக்கெதிராக யாரும் எழுந்தவிடக் கூடாது என்ற நன்னோக்கிலேயானபின்னர் மக்களை அணிதிரட்டி .... அல்லது துணிவோடு தற்போது ஒரு இளையோர் அணி வட-கிழக்கெங்கும் களமிறங்கிப் போட்டியிட்டு அதைவைத்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகள் மக்களுக்குத் தெளிவுபடுத்திச் சாதிக்க முயலவேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  21. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மக்களை அரசியல் மயப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் செய்யாது வெறும் வாக்கரசியல் செய்ததன் விளைவே இந்தநிலை. எந்தக்கட்சியிடமாவது தெளிந்த ஒரு அரசியற் திட்டம் உள்ளதா? ஒன்று தோற்றால் அடுத்து என்ன என்ற தெளிவு இருக்கிறதா? மக்களை வெறும் புள்ளடியிடும் ஒரு கருவியாகப் பார்த்தார்களேயன்றி வேறென்ன செய்தார்கள். தேர்தல்வரும்போது தொகுதிக்குப் போவது. மற்றும் வேளைகளில் வெளிநாட்டுப் பயணமும் நாடாளுமன்றத் தேனீர்க் கடையுமாய் இருந்தவர்களால் வந்தவினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக அவதாரம் எடுக்குமபோதுதான் தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையருடனான உரையாடலெனும் கோதாவில், தெற்கு யேர்மனியில் முன்னாள் சமாதானத் தூதுவரான எ.சொல்கைம் ஏற்பாடு செய்த நிகழ்வின் இலங்கையராக வாழ்வதே சிறப்பென்று போதித்தாராம். அவர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  24. அதுமட்டுமே இந்த யூருப் பிறதேர்ஸ் அனுர மாகாத்தையா விட்ட போனம். நினைக்கமுடியவில்லை. நிற்க முடியவில்லை..... என்று ஒரே அளப்பறையாமே. எனது நண்பர் பார்க்கச்சொன்னார். ஒரு இனத்தை கூட்டுச் சேர்ந்து அழக்கத் துணைபோனதோடு, படையினர்கான ஆளணி வலுவாக்கற் செய்பாடுகளுக்குப் பரப்புரை செய்த மாகாத்தையாவைத் தேர்தல் முடிய 113சீற் கிடைத்தபின் நன்றாகப் புரியவைப்பார். எதுக்கும் அடி வளவுக்கை இப்பவே பத்துப் பதினைஞ்சு மரவள்ளிக்கட்டையை ஊன்றிவிட்டால் உதவும். அதோடை பனங்கொட்டையளையும் ஒன்றையும் விரயமாக்காமல் பாத்தியைப்போட்டால் நல்லது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. ரஞ்சித் அவர்களே நன்றி, வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில் நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.