Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. தமிழினவிடுதலைக்கும், விடுதலை உணர்வுக்கும் மற்றும் தனிமனித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இடையேயான ஊடாட்டம் என்பது சம்பவச்சூழலை மையங்கொண்டே நகரும். கூட்டுச்சேர்ந்து அழிகப்படுகின்றோம், கொல்லப்படுகின்றோம், கொடுமைகளுகுள்ளாக்கப்படுகின்றோம் என்ற சிந்தனையோடு வீதியால் செல்லும் ஒருவரது கண்ணிலே, தனது இனத்திற்கு எதிரான அவதூறாளனைக் காணும்போது உணர்சிமேலீட்டினால் இயல்பாக எழுகின்ற கொந்தளிப்பு வன்முறை எதிர்ப்பாக வடிவம் பெறுகிறது. மனித நடமாட்டப் பகுதிகளில் அது சில மணித்துளிகளில் குழுச் செயற்பாடாகப் பரணிமிக்கிறது. சிலர் இதனை ஏன் மிதிப்பான் எனக் கடந்துவிட சிலரோ அகற்றிவிட முனைந்து அதன்மேல் வீழ்தல் நிகழ்கிறது. தமிழர்களுள்ளே பண்டாரவன்னியன் காலம் முதல் தொடர்கதைதானே. இதுபோன்ற பிழைப்புவாதிகள் இருக்கவே செய்வர். சமகாலத்திலே சட்டாம்பிள்ளை; சும் செய்யததை, செய்வதை நாம் கடந்து செல்வதுபோல் இதுபோன்ற தரங்கெட்டோரைக் கடந்துவிட வேண்டும். ஈடுபட்டவரால் கடந்துவிட முடியவில்லை. கைக்கூலிகளை நாம் இனங்காணவேண்டும். வெளிப்படுத்த வேண்டும் என்ற அளவிலே இருப்பதற்கான கருத்தாடல்கள் வலுப்பெற வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. உண்மை, தமிழகத்திரைத்துறை ஆடம்பரங்களுக்கு அளிக்கும் முன்னுரிமையை ஆக்கங்களுக்குக்கொடுப்பதில்லை என்பது தொடர்ந்துவரும் நிலை. விஜய் அல்லது அஜித் போன்றவர்கள் நடித்திருந்தால் ஆகா ஓகோ என்று பேசப்பட்டிருக்கலாம். இன்று இயற்கையைகாக்க அரசுகளும் ஆர்வலர்களும் படும்பட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் 'காடு' . சுவியவர்களுக்கு நன்றி
  3. விமர்சனத்தை படித்துக் கருத்தையும், விருப்பையும் பதிவுசெய்து உற்சாகமூட்டும் சுவியவர்களுக்கும், ஈழப்பிரியனவ்ர்களுக்கும் மற்றும் வாசித்த உறவுகளுக்கும் நட்பார்ந்த நன்றி.
  4. வணக்கம், காடு திரைவிமர்சனம் வண்ணத்திரை பகுதியிற் பதிந்துள்ளேன். அகவை26க்கான பகுதியில் மாற்றி இணைத்துவிட முடியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்களின் தொகுப்பாக நகர்ந்தாலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதைப் பேசப்படும் சொல்லியங்களூடாகவும் எளிமையாக வாழும் மக்களின் வாழ்வியல் ஊடாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. காடும் காடுசார்ந்த கிராமமுமாகக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே இளையோடும் காதல், காதலன் கைதானபோது ஏற்படும் தவிப்பு, நண்பனை அப்பாவியாக நம்பும் நண்பனான கதாநாயகன், காட்டைப் பாதுகாக்க நினைத்துக் ஏமாறும் காட்டு அதிகாரி எனப் பாத்திரங்களின் இயல்பான நடிப்பெனப் பார்க்கக்கூடிய படமாக உள்ளது. கதாநாயகன் சிறைப்படுத்தப்படுவதும் அந்தச் சிறைக்கு நந்தாவாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் காட்சிகளும் வலுவானவை. சிறையிலே கூத்துக் கலைஞராக வரும் நடிகரின் இயல்பான நடிப்பெனப் பல்வேறு சம்பவங்களையும் சொல்லி நகர்கிறது. சிறைக் கலவரத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கத் தானே சாவை ஏற்கும் நந்தாவின் துணிவும் மனிதாபிமானமும் ஒருவகை. அது சேகுவேரா அவர்கள் சாவை எதிர்கொண்டதை நினைவுபடுத்துவதாய் உள்ளது.கைதிகளிடையேயான கூட்டு வாசிப்பு இன்றைய நவீன உலகில் அருகிவரும் வாசிப்புக்கலை குறித்த பதிவாகக்கருதலாம். கருணா என்ற பெயர்தாங்கி வில்லனாக வரும் பாத்திரம் எம் தேசத்தையும் நிiவுபடுத்தி நகர்கிறது. மரங்கள் குறித்தும் காடு குறித்தும் கதாநாயகன் பேசும் சொல்லியங்கள் நோக்குதற்குரியவை.எட்டுத் திக்கும் எங்கள் பக்கம் என்று தொடங்கும் பாடல் எழுச்சிப்பாடல்கள் போன்று உள்ளது. விதார்த்(வேலு)சம்ஸ்கிருதி செனாய் (பூங்கொடி) முத்துக்குமார்(கருணா) நந்தா (சமுத்திரக்கனி) என பெரும் ஆரவாரமில்லாத நடிகர்களை வைத்து நல்லதொரு கருவைப் படமாக்கியுள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இயற்கையை மீட்டெடுக்க முனைவோருக்கு காடு திரைக்கதை ஆதரவாக நிற்கிறது. ஸ்ராலின் இராமலிங்கம் அவர்கள் எழுதி இயக்க, கே என்பவர் இசையமைக்க நேருநகர் நந்து என்பவர் தயாரித்துள்ளார். குறிப்பு: இதனை எழுதத் தூண்டியவர் வீரப்பனவர்கள். யாழிலே உள்ள திரியிலே அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதான செய்தியைப் படித்தபோது இதனை எழுதத் தோன்றியது. நானொரு திரைப்பட விமர்சகனல்ல. ஒரு பார்வையாளனாக எழுதியுள்ளேன் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. சிலவற்றை மாற்றமுடியாது. மாற்றமடையாதது குயிலின் குரலோசை.ஆண்மயிலின் நடனம். யானையின் பிளிறல்.புலியின் உறுமல், சிங்கத்தின் கர்சனை, எனப் பல உள்ளன. ஆனால் முன்னவர் செய்த அரசியல் பிழையென்றால் அதிலே தொங்குவதை விடுத்து பின்னவர் நல்லதைச் செய்யலாம் அல்லவா? நன்றி
  7. என்னுடன் சிரியாவைச் சேர்ந்த குர்திஸ் இனத்து முசுலிம் ஒருவர் வேலை செய்கிறார். அவர் ஒரு குர்திஸ் என்னோடு உரையாடுவார். கடந்த வியாழன் உரையாடும்போது தனது மகனதும் மகளினதும் பிந்தநாளை ஒரு சிலநண்பர்களோடு கொண்டாட உள்ளதாகக் கூறினார். அப்போ நான் மண்டபத்திலா என்று கேட்க, இல்லை வீட்டிலே என்றார். வீடு காணுமா என்றேன் மெய்பாட்டினூடாகச் சமாளிக்கலாம் என்றவர். தனது நண்பனுக்கு எட்டுப் பிள்ளைகள் என்றார்.நான்கு சிரியாவிலும் நான்கு துருக்கியிலும் பிறந்ததாகக் கூறினார். அப்போ நான் இங்கு என்றேன். இங்கு இல்லை என்றார். இங்கும் நாலென்றால்.... யேர்மனியில் ஒரு சிறிய முசுலிம் கிராமம் உதயமாகிவிடும். இதுதான் யதார்த்தம். நாமோ இருவராக வந்து ஒருவரோடு அல்லது இருவரோடு மட்டுப்படுத்தி நிற்க அவர்கள் சுயமாக விட்டுள்ளார்கள். மற்றவரைக் குறைகூறி யாது பயன். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா... என்ற கணியன் பூங்குன்றானாரவர்களது வரிகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி
  8. இதனை எப்படித் தமிழினம் கடந்து செல்லவேணடும் என்பதற்கான எந்த அறிவூட்டலோ தெளிவூட்டலோ இல்லை. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளோ தமக்குள் குத்திமுறிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களோ அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் அவலநிலை. இதில் எப்படியொரு நிலைபேறான அரசியல் முனையைத் திறப்பதெனச் சிந்திக்காதவரை மாற்றங்கள் வராது. குறைந்த பட்சம் யாழ். இந்துவில் நடந்த கருத்தாடலையாவது செவிமடுப்பார்களா? நன்றி
  9. தமிழ்த் தேசிய அரசிலின் மௌனத்தைக் கலைக்க முயலும் வளரிளம் தலைமுறையே தலைவணங்குகின்றேன். நன்றி
  10. ஏன் தமிழ்த்தேசிய சார்பு நிலை வாக்குகள் ஈ.ம.ஜ.க வைநோக்கிச் செல்கின்றன என்பதற்கான ஒரு சிறந்த பார்வை. இனியாவது தமிழ்த் தேசியம் பேசும்(பேசும்) கட்சிகள் சிந்திக்க வேண்டும். சும் மைப்பற்றிய பார்வையை பல யாழ்க்கள உறவுகளே பல ஆண்டுகளின் புட்டுபுட்டு வைத்துவிட்டார்கள். அவற்றினது தொகுப்பாகவே இந்தக் கட்டுரை அமைத்துள்ளபோன்று உள்ளது. நன்றி
  11. தமிழினம் சுழியத்தில் இருந்தே எல்லாவற்றையும் தொடரவேண்டிய நிலை. தமிழினத்தின் ஈகங்களை ஈடுவைத்து வாழும் தமிழரின் தலைமைகள் என்றுகூறும் ஈன அரசியற் கூட்டம் அழிந்தொழிந்து புதியதொரு தலைமை முன்வரும்வரை இதுபோன்ற ******* மாறிமாறிப் பிதற்றுவது தொடரும். நாமும் பெருமூச்சோடு கடந்துவிடுவதைத்தவிர எதைத்தான் செய்யப்போகின்றோம். நன்றி
  12. குமுகாயத்தின் சாரளங்களாக விரியும் இலக்கியப் பரப்பிலே சிறுகதை, குறுநாவல் என்பன விரைந்து வாசிக்கவும், இன்றைய அவசர உலகுக்குமான ஒரு படைப்பலகாகத் திகழ்கின்றது. அந்த அலகுக்கூடாக மயிலம்மாவை அழகோடு நகர்த்தியது அருமை. காதல், காமம் என்று அல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியலில் இளையோடும் நுட்பமான தவறுகளையும் யதார்த்தமான பார்வையுள் வாசகனிடம் கொண்டுவருதல் சிறப்பு. வாமனின் பயிலரங்கு சற்று நெருடலானபோதும், அதனை அனுமதித்த மயிலம்மாவின் தாகமும் கரணியமாகிறது. இலக்கிய நயத்தோடும், இளமைத்துள்ளலோடும் படைத்துள்ளமை சிறப்பு. உங்கள் குறுநாவலூடாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிராமத்துக்குச் சென்றுவர வைத்துவிட்டீர்கள். யாழ்க் களத்தின் "கதைவாரிதி,, என்றே தங்களை அழைக்கலாம் என்பது எனது பார்வை. சுவியவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்தாக்கப்பணி. யாழ்க்கள ஓவியரின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஓவியங்கள் குறுநாவலுக்கு மற்றொரு சிறப்பு. இப்படிப் பல படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் யாழுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் மற்றும் இலக்கியக் கடலிலே யாழெனும் படகின் சுக்கானைப் பிடித்து நகர்த்திவரும் மோகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
  13. ஆழந்த இரங்கல். மனித உயிர்களை அழிப்பதற்கான கருவிகளின் தொழிற்றுறைக்கு நல்லவாய்ப்பு. அதில் ரஸ்யாவுக்கும் பங்குண்டு. ஆனால், உலகெங்கும் சிறிய இனங்களை,தேசங்களை அழித்துச் சுரண்டிப்பெருக்கும் சக்திகளுக்கு பெரும் சவாலாக இஸ்லாமிய மதத்தூய்மைவாதமானது மாறியுள்ளது. அது படிப்படியாக உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளது. யேர்மனிய உள்த்துறை அமைச்சர் நான்ஸி ஃபேஸர் அவர்கள், யேர்மனியும் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்துள் உள்ளதாக ரஸ்யாவில் நடைபெற்ற தாக்குதலின் பின் கூறியுள்ளார். இன்று உலகில் எங்குமே பாதுகாப்பென்பது கேள்விக்குறியே. உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. அவரவர் தமது தேசஎல்லைகளுள் சுதந்திரமாக வாழவிடும்போதுமட்டுமே உலக அமைதி தோன்றும். இல்லையேல் இவை தொடர்கதையே. நன்றி
  14. நேற்றும் அழித்தனர் எழுந்தோம் இன்றும் அழிக்கிறார்கள் எழுகின்றோம் நாளையும் எழுவோம் தலைவா நின் நாமமே அடிநாதமாய் நிமிரும் காலத்தேரேறி வரும் மக்கள்படை தமிழீழத் தேரிழுத்துத் தம் கடன் நிறைப்பர்! நன்னிச்சோழனவர்களே தொடரட்டும் உங்கள் பணி.
  15. ஆழ்ந்த இரங்கல், மெதுவாகக் கொன்றுவிட்டார்கள். ராஜீவுக்காக ஒரு இனத்தையே அழித்த மாபாதக அரசு. இந்த அரசிடம் நீதியை எதிர்பார்ப்பது எவளவு மடமை என்பதை சாந்தன் தனது உயிரீகத்தூடாக மீண்டும் நிறுவியுள்ளார்.
  16. அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா நன்றி - யூரூப்
  17. சனங்களை நாய்களாக என்னும் சனநாயக நாடாம் அமேரிக்கா. மரணதண்டனையைக்கூடச் சரியாக நிறைவேற்றத்தெரியாமல் சித்ததிரவதை செய்துகொல்லுதல், எவளவு அநியாயமனது.
  18. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நெருக்கடியான சூழலில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவருக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. அனைவரையும் இணைத்துப் பயணிக்கத் துணிய வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த தலைமையாக இருக்க முடியும். தமிழ்த் தேசிய அரசியலில் உதிரிகளாக நின்று எதையும் அடையமுடியாது என்பதைப் புரிந்து கொண்டு புதிய தலைவர் செயற்பட்டால் மட்டுமே தமிழருக்கு நன்மை.
  19. தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. – குறியீடு (kuriyeedu.com)
  20. இணைப்புக்கு நன்றி, வெயில் காலத்தில் ஏற்படும் தொண்டைக் கரகரப்பு ஏற்படும்போது பாவித்தால் கரகரப்புக் குறையும். அன்னம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து வருகிறது. பனம்பொருள் உற்பத்திச் சபை இதுபோன்ற தொழில் முயற்சிகளை ஊக்குவித்தால் அன்னியச் செலாவணியை ஈட்டலாம். இன்று நவீன கருவிகளை தேவைக்கேற்றவாறு தயாரித்துப் பெறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. மூலப்பொருளைத் திரட்டுவதற்கான பொறிமுறைகளை இலகுவாக்கி இலாபமீட்டும் தொழிலாக மாற்றலாம். பொலிகண்டியில் 50ஆண்டுகளின் முன் இருந்த தொழிலை மீண்டும் ஏன் கொண்டுவரக்கூடாது. நன்றி
  21. உதயன் யாழிலிருந்து பனஞ்சீனியின் உற்பத்தி விளத்தம் சிறப்போ சிறப்பு. கரும்பிலிருந்து செய்வதால் கரும்புச் சீனியென்றல்லவா அழைக்கப்படுகிறது. அல்லது உதயன்காரர் பெயரை மாற்றிவிட்டார்களா?
  22. தமிழ் சிறி அவர்களே, உங்கள் பாராட்டுகள் தன்னலம்கருதாது அறப்பணியாற்றும் தமிழாலயங்களின் ஆசியருக்கும், இணைந்து பயணிக்கும் பெற்றோருக்கும் உரித்தாகுக. கருத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக.
  23. என்ன நடந்தது என்பதை அறியத்தூண்டும் வகையில் சிறப்பான எழுத்துநடை.துளையிடுவதும் எண்களைக் கூறுவதும்,...என்ன கொடுமை. சட்டத்தைக் கையிலே எடுக்கும்நிலை. பயமாக இருக்கிறது. முடிவில் உள்ளதுபோன்று அவர்கள் தமது சொந்தநாட்டில் செழிப்பான வாழ்வுக்கான அத்திவாரமோ யாரறிவார்... உண்மைச் சம்பவமானபோதும் அதனை வாசகன் சுவைக்கும் வகையில் அழகுற நகர்த்திச் செல்வதென நன்றாக உள்ளது. பாராட்டுகள். (அண்மையில் ஒரு செய்தியில் நொயிஸ் நகரில் உள்ள பாடசாலை உயர்வகுப்பு இஸ்லாமிய மாணவரிடைய நடந்த கருத்தாடலில் "சரியா பொலிஸ்,, தேவையென்று கூறியதாகப் படித்தேன்.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.